October 4, 2010

அண்ணன் 'வண்டு' முருகனும்&காந்திஜெயந்தியும்..




நாள்- அக்டோபர் 2



இடம்- மதுரை காந்தி மியுசியம் எதிரே இருக்கும் டீக்கடை..



(வண்டு முருகன் தன் அல்லக்கைஸ் உடன் கம்மிங்..)



அல்லக்கைஸ் (கோஷம்)..
"பன்னி காய்ச்சலுக்கே பல்பு கொடுத்த டாக்டர்.வண்டு முருகன் வாழ்க.."
ஆப்பிரிக்காவின் வருங்கால ஜனாதிபதி அண்ணன் வாழ்க..!"


வண்டு முருகன்- இவனுங்க இங்க கத்துவானுங்க..கூட்டம்னு வந்தா கோர்த்து விட்டு ஓடி போய்டுவானுங்க...பேட் பாய்ஸ்..



வ.மு..(அ.கைஸ் பார்த்து...)-எலேய்..என்னங்கடா..ரோட்டுல எவனையும் காணோம்..நாம வரோம்னு முன்னாடியே சுதாரிச்சுட்டானுங்கலா???



அல்லக்கை 1 -இன்னிக்கு கெவுருமெண்டு லீவு பாஸ்..



வ.மு -ஆங்...இன்னிக்கு எனக்கு பொறந்தநாளு கூட இல்லயே...அப்புறம் எப்புடி...??



அல்லக்கை 2 -அண்ணே..ஒருவேள மூத்தற சந்துல நீங்க அடிவாங்கி இன்னிக்கோட 50 நாளு ஆச்சே..அத்த கொண்டாடுரானுங்களோ???



வ.மு - அட..கொரங்கு...கொரங்கு..



(வண்டு முருகன் பலமாக அந்த காரை வித்த சொப்பன சுந்தரி யார்கிட்டே இருக்கும்னு யோசிக்கும் வேளையில்..)



எதிரே தியாகி பரமசிவம் ஐயா டீ குடிக்க வருகிறார்..



வ.மு- என்ன மேன்..தொப்பிலாம்..??



தியாகி- ஐயா!சிறிது மரியாதையாய் பேசுங்கள்!!அது தொப்பி இல்லை..காந்தி குல்லா..



வ.மு- சரி..சரி..என்ன வெள்ளையும் சொள்ளையுமா ஷோக்கா இருக்கீரு..எந்த கட்சி மிஸ்டர்.குல்லா??



தியாகி- அசட்டு மனிதா! இன்று காந்தி ஜெயந்தி! சுதந்திரத்திற்கு அஹிம்சை முறையில் பாடுபட்ட அரும்பெரும் தலைவர் காந்தியடிகளின் பிறந்த தினம்.நீவிர் அண்ணல் காந்தி பற்றி அறியீரோ??



வ.மு-அடடா..காலங்காத்தாலேயே ஆரம்பிச்சுடானுன்களா...அப்போ வட எனக்கு இல்லியா..அவ்..வ்..வ்..



தியாகி- தீண்டாமையை எதிர்த்து மனிதனாய் வாழ கற்று தந்தவர்.விலங்குகளை கொன்று,உண்டு,வாழும் ஆதிவாசி நாகரிகத்தை விரும்பாதவர்.அண்ணல் அவர்கள்....



வ.மு- ஸ்,,ஸ்டாப்பூ..நானும் இஸ்கூல ஒண்ணாப்புல படிசிருக்கேன்பூ..அதுக்கு இப்ப என்னா??



தியாகி- அந்த உன்னத மகாத்மாவை தெரிந்துமா..அசட்டையாக பேசுகிறாய்..இன்று அவர் கொள்கைகளை நினைக்க வேண்டாமா..அவர்தம் பெருமைகளில் நாம் திளைத்திட வேண்டாமா?



வ.மு- நாராயணா..இந்த கொசு தொல்ல தாங்க முடிலேயேப்பா...



தியாகி- அண்ணல் காந்தியடிகளின் வேர்வையில் தான் ஐயா..உம் சுதந்திர சுவாசம் உனக்கு உரித்தானது..அது நினைவில் இருக்கட்டும்..அவர் பிறந்தனாளிலாவது நாலு நல்ல விஷயங்களை பண்ணலாமே..??





வ.மு- பெரியவரே..! இப்ப என்னாத்துக்கு என் மேலே காண்டு..அப்ப்டிகா போயி எல்லா ஊட்டாண்டயும் போயி பாரு.எல்லாத்துக்கும் லீவு..எல்லாரும் 10 மணிக்கு எந்திரிச்சு..மொத நாலு வச்ச கறிக்குழம்ப சூடு பண்ணி சாப்டுட்டே ,டிவி ல வர பெசலு புரோகிராமு ஒன்னு விடாம பார்த்துகினு இருப்பானுங்க..சாயங்காலம் பார்க்கு,சினிமா..இல்லாட்டி பீச்சு போயி கடலை துன்னிட்டே கடல போடுவானுங்க..அப்புறம் நைட்டு பார்ட்டின்னு போயி கும்மியடிப்பானுங்க..எவன்யா இன்னைக்கு காந்திய நினைப்பானுங்கர??




தியாகி- ஐயா!அப்போ இது தான் தற்போதைய நிலையா..?காந்தி ஜெயந்தி விடுமுறை பொழுது போக்க தான் பயன்படுத்தபடுகிறதா?அவர் கொள்கை ஏதும் நினைவூட்ட இல்லையா??




வ.மு- ஷ்..ஷ்..அதானே சொல்லிட்டு இருக்கேன்..இப்பவே கண்ண கட்டுதே..ஷ்..ஷ்..




தியாகி- (மிகவும் வருத்தமாய்) நான் இப்போது என்ன செய்வேன்..சுதந்திரம் வாங்கி தந்த மனிதருக்கு அதற்குரிய கவுரவம் அளிக்க தவறிவிட்டோமே...அண்ணலே..நான் என் செய்வேன்..என் செய்வேன்..??



வ.மு- என்ன செய்வியா?ம்..ம்..எந்திரன் ஷோ போக 50 ரூபா குறையுது..குல்லா பெரியவரே ..கொஞ்சம் கைமாத்து கிடைக்குமா??



தியாகி அதை கேட்காமல் தளர்ந்த நடையுடன் நடக்க..அப்போது சில வெளிநாட்டு காரர்கள் வெள்ளை உடையுடன்,காந்தி குல்லா அணிந்து..ராட்டை,பூக்கள் எல்லாம் கையில் எடுத்து கொண்டு..பயபக்தியுடன் காந்தி மியுசியம் உள்ளே நுழைகிறார்கள்..தியாகி பெருமூச்சு விட்டவாறு அதை பார்த்து கொண்டு அவர்களுடன் உள்ளே நுழைகிறார்..



ஜெய் ஹிந்த்..!!



பாரத மாதா வாழ்க! என கோஷம் உள்ளேயே அடங்கி விடுகிறது..


----------------------------------------------------------------------------------------------------------------------------------


டிஸ்க்கி..



* நம் குழந்தைகளுக்கு சுதந்திரம்,காந்தி..அவர் பட்ட கஷ்டங்களை கதை மாதிரி அன்னைக்கு சொல்லலாம்..


* முடிந்த அளவுக்கு சைவ உணவுகளை உண்ணலாம்..


*ஏதாவது முதியோர் இல்லங்கள் போய்..ஆறுதல் வார்த்தை கூறி வரலாம்..


*ஆதரவற்றோர் இல்லங்கள் சென்று இனிப்புகள் கொடுத்து சிறிது நேரம் விளையாடலாம்..


*தானங்கள் பற்றிய விழிப்புணர்வுகளை தெரிந்து கொள்ளலாம்..


*நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாம்..


*குழந்தைகளுக்கு எளிய பழக்கங்களை அறிவுறுத்தலாம்..





(இந்த பதிவு பிடித்து இருந்தால்..தங்கள் கருத்துக்களை  இட்டு செல்லலாமே..!!)



26 comments:

தோழி said...

நகைச்சுவையாக எவ்ளோ பெரிய மேட்டர சொல்லிப்புட்டீக...

எல் கே said...

diski nalla irukku

kavisiva said...

சொல்ல வந்ததை நகைச்சுவையோடு தெளிவா சொல்லியிருக்கீங்க. ஆனால் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியவர்களுக்கே பாடம் எடுக்க வேண்டிய நிலை இன்னிக்கு :(

ஆனந்தி.. said...

@தோழி
நன்றி தோழி...முதல் ஆளாய் உங்கள் பதிவை தான் போஸ்ட் பண்ணவுடனே பார்த்தேன்..

ஆனந்தி.. said...

@LK
நன்றி LK ..

ஆனந்தி.. said...

@kavisiva
உண்மை தான் கவி..கொஞ்சம் யோசிச்சால் சரியாய்டும் பா...

ஆயிரத்தில் ஒருவன் said...

நகைசுவையோட சொல்லியிருக்கீங்க நல்லா இருக்கு

தமிழ் உதயம் said...

நல்லா இருக்கு. வட்ட செயலாளர் வண்டு முருகனை மறக்க முடியுமா.

Avargal Unmaigal said...

என்ன ஆனந்தி மேடம் உங்க உடம்புல ஏதோ ஒரு ரொம்ப வயசான ஆளோட ஆவி புகுந்துடுச்சுனு நினைக்கிறேன் இல்லைனா இப்படி எல்லாம் மறந்து போன காந்திஜி பற்றி எல்லாம் எழுத மாட்டிங்க... பரவாயில்லை நல்ல நகைச்சுவை ஆளோட ஆவிதான் புகுந்திருக்கு அந்த ஆவி உங்களைவிட்டு போவதற்கு முன்பு நிறைய எழுதவும்.மதுரைக்காரப் பொண்களுக்கு வாய்தான் நீளம் ஆனா உங்களுக்கு நல்ல வித்தியாசமாக எழுதவும் தெரிந்திருக்கிறது, ஒரு வேளை பெரிய ஆள் ஆனால் இந்த மதுரைகாரனை மறந்துவிடாதிங்க.

Avargal Unmaigal said...

எனது வலைக்கு வந்து அட்வைஸ் தந்ததிற்கு நன்றி. நன்றி. நன்றி. நன்றி. நன்றி. நன்றி. நன்றி. நன்றி. நன்றி.

ஆனந்தி.. said...

@ஆயிரத்தில் ஒருவன்
நன்றி ஆயிரத்தில் ஒருவன்!!

ஆனந்தி.. said...

@தமிழ் உதயம்
அடடா..அப்போ..காந்திய மறந்துட்டேன்னு ஒத்துக்குறிங்க..:-))

ஆனந்தி.. said...

@Avargal Unmaigal
வாங்க பாஸு..எப்புடி இருக்கீங்க..உங்க ப்ளாக் ல போயி போட்ட கமெண்ட்ஸ் எல்லாம் கிடைச்சுருச்சா..அதெல்லாம் failed னு என் மெயில் லுக்கு வந்துச்சே..ஹல்லோ..எதுக்கு இத்தனை நன்றி...மதுரைகாரிக்கு தமிழ் ல பிடிக்காத ஒரே வார்த்தை நன்றி தான்...ஹீ..ஹீ..

ஆனந்தி.. said...

@Avargal Unmaigal
வயசான நகைச்சுவை ஆவியா..ஆமாம் பாஸு..விஜயகாந்த் படம் பார்த்துட்டே இருக்கும்போது மண்டயபோட்ட கும்தலக்கடி குஜிளிக்கா குஜாம்பாள் ஆயாவின் ஆவி தான்..மதுரைக்கார பொண்ணுங்களுக்கு வாய் நீளமா..எப்படியும் நம்ம ஊரு வந்து தானே ஆகணும்..அப்போ பார்த்துக்கிறேன்..ஹ..ஹா..:-)) ரொம்பவே சந்தோஷம் தமிழ் கை(பாருங்க கேவலமா வருது தமிழில் tamilguy னு டைப்பினால்..என்ன பேரு???)):-)))))

மங்குனி அமைச்சர் said...

அப்புறம் நைட்டு பார்ட்டின்னு போயி கும்மியடிப்பானுங்க///

ஆமாங்க லீவு விட்டுறாங்க பிளாக்குல எச்ட்ரா காசுகுடுத்து வாங்க வேண்டி இருக்கு .

ஆனந்தி.. said...

@மங்குனி அமைசர்
வாங்க மங்குனி!..அமைச்சர் புலம்பலா இது..ஓகே..ஓகே..:-))

சௌந்தர் said...

நல்ல கருத்து நகைசுவை யோடு சொல்லி இருக்கீங்க

ஆனந்தி.. said...

@சௌந்தர்
தேங்க்ஸ் சௌந்தர்..

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல காமெடி.எனக்கு தமிழ் மணத்தில் ஓட்டு விழ மாட்டேங்க்குது,சோ உலவு,தமிழ் 10,இண்ட்லி ல ஓட்டு போட்டுட்டேன்.இந்த வாரம் ஜீஜிக்ஸ்ல ரூ 500 உங்களுக்கு கன்ஃபர்ம்.

ஆனந்தி.. said...

@சி.பி.செந்தில்குமார்
நன்றி சிபி..நீங்க கொடுத்த ஊக்கம் பார்த்து எனக்கு சந்தோஷம்!!

ச.சரவணன், said...

நல்லா எழுதியிருக்கீங்க..

ஆனந்தி.. said...

@ச.சரவணன்,

Thanks Saravanan!

Anonymous said...

அல்லக்கைஸ் (கோஷம்)..
"பன்னி காய்ச்சலுக்கே பல்பு கொடுத்த டாக்டர்.வண்டு முருகன் வாழ்க..//
2சூப்பர்

Anonymous said...

பதிவும் சூப்பர் டிஸ்கியும் சூப்பர்

ஆனந்தி.. said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

Thanks Sathish!!

கோலா பூரி. said...

ஆனந்தி உங்களுக்கு நல்லாஎழுதவருது.
எவ்வளவு பெரிய மேட்டரை என்ன நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கீங்க. சூப்பர்மா.