August 31, 2010

யப்பா..சாமி..போதுமடா..சாமி..


இப்படி குடும்பமே அலறின விஷயம் கேள்வி பட்டிருக்கிங்களா?? நாங்க அலறிருக்கோம்..இதோ ஸ்டார்ட் மியூசிக்..

எங்க வீட்டு பொடியன் ஆங்கில திறனாய்வு தேர்வில் மதுரையில் இருந்து கலந்து கிட்டான் ஜூனியர் கேட்டகிரி இல் ..சும்மா இல்லாமல் தேசிய அளவில் ஜெயிச்சுட்டு வந்துட்டான் ..ஜெயிச்ச சந்தோசம் கொஞ்ச நேரம் கூட தாங்க முடியலை..ஆமாங்க..என் கணவர் ஆபீஸ் இல் பையனுக்கு பரிசு தரோம் னு மூணு டிக்கெட் குடுத்தாங்க..சோதனைக்குன்னு அவங்களும் சேர்ந்து வந்தாங்க..அப்போ தான் சுறா ரிலீஸ் டைம்..என் பையன் சரியான விஜய் விசிறி..போனோமா...போனோமா....போனோமா...அட என்னங்க டைப் அடிக்கவே வரமாட்டேன்கு...இம்..அப்புறம் கேளுங்க...


போயி உட்கார்ந்தோம் தியேடேர் இல் படம் ஆரம்பிச்சது..ஒபேனிங் சாங் ம் வந்தது...நிமிந்து உட்கார்ந்தோம்..அப்புறம்..விஜய் அண்ணன் ஆரம்பிச்சார் வசனம் பேச...லேசா என் பையன் என்னை பார்த்தான்..நான் ஒரு முறை முறைச்சேன்..

அப்புறம்...யாரோ வந்தாங்க..பேசினாங்க..போனாங்க..சண்டை போட்டாங்க...பக்கத்து சீட் இல் ஒரே நாய்ஸ்..படத்துக்கு இந்த சத்தமாவது நல்லா இருக்கேன்னு..திரும்பி பார்த்தால் அங்கே ஒரு ஆளு செம தூக்கம்...கொர்று..கொர்று..ற்று...விட்டுட்டு இருந்தார்..அட டா...நாமளும் செட்டில் ஆய்டலாம் போலவே னு யோசிச்சுட்டே இருந்தேன்..என் பையன் விவரமா என் மன ஓட்டம் புரிஞ்சமாதிரி என்கிட்டே இருந்து விலகி அவன் அப்பா கிட்டே போயி எஸ்கேப்..ஐயோ..எப்படா வெளிய போவோம்னு வாட்ச் பார்க்கிறேன்..அந்த ஆளு தூங்கிட்டு இருந்ததை பொறாமையா பார்க்கிறேன்..ஓ..கடவுளே..ப்ளீஸ்...காப்பாத்து..காப்பாத்து னு கதறுகிறேன்...என் பையன் விவரமா பாத்ரூம் வருதுன்னு அவன் அப்பாவை கூப்பிட்டு கொஞ்ச நேரம் படம் பார்க்காமல் மீண்டும் எஸ்கேப்..என் கணவர் அதுக்கு மேலே விவரம்..தியேடேர் கான்டீன் ல யே செட்டில் ஆய்ட்டார் உள்ளே வராமல்..வீட்டுக்கு ஓடி போயடலம்னால் கூட வந்த கும்பல் தப்பா நினைசுருவாங்கனு வேற உறுத்தல்..படமும் புரில..ஒரு எழவும் புரில..இடையில் தோழியின் குறுஞ்செய்தி.."da..where r u now??" நான் வெறுப்புடன் "shit!..in hell nowdi வெளக்கென்ன ."..னு அனுப்ப..பொறுத்து பொறுத்து பார்த்தேன்..என் கணவர் வந்தவுடனே,அப்படிக்கா தோளில் சாஞ்சு தூங்க ஆரம்பிச்சுட்டேன்..படம் முடிஞ்சுருச்சு போலே..என்னை தட்டி எழுப்பி விட..அவரின் உன்னொரு பக்கம் விஜய் ரசிகன் செம தூக்கத்தில்(அதாங்க என் பையன்)..ஒரு வழியா எல்லாரும் வெளிய வந்தோம்...பொய்யா(மனசுக்குள் "அடுத்த விஜய் படத்துக்கு உங்களை தியேட்டர் குள்ளே அனுப்பிட்டு..வெளி கதவை பூட்டி வச்சுட்டு வரல னு எல்லாம் சபதம் போட்டுகிட்டு)நன்றி..எல்லாம் சொல்லிட்டு..வீட்டுக்குள் வந்துட்டு நாங்க எல்லாரும் சொன்ன வார்த்தை தாங்க இந்த புலம்பலின் தலைப்பு...அதே தான்...அதே தான்.."யப்பா..சாமி..போதுமடா..சாமி.."

August 23, 2010

வேறொன்றும் தேவை இல்லை!!

"கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்!!

என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்
!!"

"ஏய் என்னானதோ, ஏதானதோ இல்லாமல் போச்சே தூக்கமும்
கண்ணே உன்னை காணமல் நான் இல்லை!!
என்மீதிலே உன் வாசனை எப்போதும் வீச பார்கிறேன்
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை!!!
நீ என்னை காண்பதே, வானவில் போன்றதே
தூரத்தில் உன்னை கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துதே
!!"

இந்த வரிகள் இப்போ சமீபமாய் வந்த "நான் மகான் அல்ல" படத்தில் வரும் பாடல் வரிகள்..என்னவோ இந்த வரிகள்,பாட்டின் மெட்டு எல்லாமே ரொம்பவே பிடிச்சு இருந்தது..FM இல் அதிகமாய் இந்த பாட்டு கேட்டு பிடிச்சு போய்டுச்சு..காட்சி அமைப்பு எப்படி எடுத்துருக்காங்க னு தெரியல..சில பாட்டுக்கள் கேட்க ரொம்பவே பிடிக்கும்..ஆனால் பார்க்கும்போது வெறுப்பாய் இருக்கும்..எந்திரனில் அவ்வளவாய் எந்த பாட்டும் கேட்கும்போது எனக்கு கவரலை..trailer இல் அந்த பாட்டுகள் காட்சி அமைப்பு பார்த்துட்டு அசந்துட்டேன்..உல்டாவா இப்படி மாறியும் கவரப்பட்டு இருக்கேன்..



August 21, 2010

கூவி விற்கும் கல்விச் சந்தை..


ஒரு வாரமாய் பொது நுழைவு தேர்வு செய்தியை உன்னிப்பாய் கவனித்து வருகிறேன்..இப்போ oflate news..
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளி்ல் சேர அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் என்று தெரிகிறது.
இதை பத்தி எனக்கு ரெண்டு விதமான கருத்துக்கள் இருக்கு..
1.நுழைவு தேர்வு வேணும்..
2.நுழைவு தேர்வு வேணாம்
...
என்ன படிக்கும்போது கடுப்பாகுதா..??

தேர்வு வேணும் சொல்றதுக்கு காரணம்..அரசு தயார் படுத்திய புத்தகங்கள் மட்டும் அந்த மாணவனின் ஒரிஜினல் திறமையை வெளிபடுத்தும் என்பதை என்னாலே எப்பவுமே ஏற்றுக்கொள்ள முடியாது..புத்தக அச்சினை அப்படியே வெள்ளை தாளில் வாமிட் பண்ணும் பாங்கு தான் அந்த மாணவனின் உண்மை திறமை என்றால் என்னை பொறுத்தவரை கட்டாயம் நுழைவு தேர்வு நடைமுறை வேண்டும்..

மாணவன் பொது அறிவு..உலக நடப்பு..அறிவியல் புலன் இப்படி சகலமும் அவன் அப்டேட் ஆ இருக்கும் பட்சத்தில் அவன் தொழிற் படிப்பிற்கு மிகவும் தகுதி ஆனவனாக இருக்க வாய்ப்பு இருக்கு..
இதை நம் அரசு..கிராம புற மாணவர்கள்..இட ஒதுக்கிடு ..லொட்டு லொசுக்கு னு...இதை ரத்து பண்ண துடிக்குது..
நுழைவு தேர்வு வேணாம் சொல்றதுக்கு..காரணம்...சில உண்மையிலே கஷ்டப்படும் ஏழை மாணவர்களுக்காக..
ஆனால்..அதையும் மத்திய அரசு..இட ஒதுக்கிட்டில் சமாளிப்போம் னு சொன்னாலும் செம முரண்டு பிடிப்பது..கட்டாயம் தேர்தலையும்,ஓட்டு எண்ணிக்கையை மனசில் வைத்தும் தானே..தவிர..வேற என்ன பொது அக்கறை இருக்க முடியும்..

நம்ம அரசு என்ன சொல்லுதுன்னு பாருங்க.."மாநிலங்கள் சுயாட்சி கேட்கும் குரல் ஓங்கி ஒலிக்கின்ற இந்த கால கட்டத்தில் அரசியல் சட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் "

இதுல என்ன மாநில உரிமை..தனியார் தொழிற் கல்லூரிகளில் துட்டு பிடுங்கும் உரிமை னு நாம புரிஞ்சுக்கணும்...