September 28, 2010

இத..இத..இதை தான் எதிர்பார்த்தோம்..



நல்ல விஷயம் னு சொல்லியாச்சு..அதை படிக்கிறதுக்கு முன்னாடி இதை படிச்சுட்டு உள்ள போலாம்..



ஒரு 18 வயசு பொண்ணை அவள் கணவனே மலை உச்சியில் மண்டி போட வச்சு,அவள் மூக்கையும் காதையும் அறுத்தால் எப்படி இருக்கும்??




தலிபான்களின் தண்டனை இப்படி தான் இருக்கும்...









10 வயதில் விற்கப்பட்ட காபூலை சேர்ந்த இந்த பெண்,அவள் கணவன் குடும்பம் படுத்திய கொடுமைதாங்காமல், வீட்டை விட்டு தப்பிக்கும்போது தலிபான் போராளிகள் கொடுத்த தண்டனை தான் இது...






இதெல்லாம் எங்க...ஏன்..யாருக்குன்னு தெரியனும்னால்..கொஞ்சம்  பிளாஷ்பேக் பட்டனை அமுக்கலாம்..






வருஷம்- 1990 களில்..


இடம்-ஆப்கானிஸ்தான்


நிலவரம்- ஆப்கன் கிட்டத்தட்ட தலிபான்களின் கட்டுபாட்டில்.






பெண்களின் நிலைமை-


1 . கல்வி சுத்தமாய் மறுக்க பட்டது


2 .வெளியில் நடமாட உரிமை மறுக்கப்பட்டது.


3 .குழந்தை திருமணங்கள்


4 .வன்புணர்ச்சியில் அதிக சாவு.


5 .சைக்கிள் ஓட்டினால் கூட பெரிய தண்டனை.


6 .எழுத்து,பேச்சு சுதந்திரம் சுத்தமாய் இல்லை..






இன்னும் பல..






யோவ்..ஆப்பெரடேரு ரவி..என்ன அழுகாச்சி படம் காமிக்கிற? ரீல் ஆ மாத்து...






ஓகே..ஓகே..






வருஷம்- 2010


இடம்-அதே ஆப்கானிஸ்தான்


நிலவரம்- தாலிபான் போராளிகள் சந்து,பொந்து வழியாய் அடிக்கடி ஏழரை,எட்டரை கொடுத்தாலும் தாலிபான் கட்டுபாட்டில் ஆப்கன் இல்லை.






பெண்களின் நிலை-


1 .பெண்களுக்கு கல்வி கட்டாயமாக்கபட்டுள்ளது.


2 .ஜன்னல் திரைக்குள்ளேயே அடைஞ்சு கிடந்த பெண்கள்..தற்போது டிவி,பத்திரிகை போன்ற மீடியாக்களில் வர ஆரம்பிச்சுட்டாங்க.


3 .நிறைய பெண் எழுத்தாளர்கள்,பெண் பேச்சாளர்கள் உருவாக ஆரம்பிச்சுட்டாங்க.






போனசாய்...




4 .ஆப்கன் பெண்கள் 29 பேர் ஆப்கன் தேசிய படையிலும் சேர்க்க பட்டு இருக்காங்க. அதுவும் சாதாரண படைவீரர்களாக இல்ல..அவர்களை திறமையாய் வழி நடத்தும் உயர் பதவிக்கு தேர்ந்து எடுக்க பட்டு இருக்காங்க.





5 .முகம் முழுசும் மறைத்து திரைசீலைக்குள் வீட்டுக்குளே முடங்கி கிடந்த நிறைய திறமையான பெண்கள் ராணுவ உடையில் மிடுக்காய் இனி வலம் வர போறாங்க..








கேட்கவும்,பார்க்கவும் நல்லா தான் இருக்கு...






நல்ல விஷயம் எங்க நடந்தாலும்..சந்தோசம் தான் இல்லையா??




Follow Up:
dated 28/10/10 மேற்கண்ட போஸ்ட் டில் உள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்த மூக்கு வெட்டு பட்ட ஆயிஷா அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமாக உள்ளார்..இதை எனக்கு நினைவூட்டிய சகோதரர் ராஜேஷ், சகோதரர் அண்ணாமலைக்கு என் நன்றிகள்...தற்போதைய ஆயிஷாவின் புகைப்படத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன்...


















September 25, 2010

அஞ்சலி..




இது ஒரு இரங்கற்பா..யாருக்குன்னு நீங்க தெரிஞ்சுக்க விரும்புரிங்கனால் தொடர்ந்து படிங்க..


நான் வலைப்பூ ஆரம்பிக்கலாம்னு ஜஸ்ட் முடிவு பண்ணியபோது ரண்டம் ஆ டெம்ப்ளட் டிசைன் பார்க்க ப்ளாக்ஸ் பார்த்துட்டே வந்தேன் ஒரு ரெண்டுமாசம் முன்னாடி..அப்போ யதேச்சையா பட்டது தான் பாச்டிவ் அந்தோணி முத்து அண்ணாவின் ப்ளாக்..

அவரோட அறிமுகம் படிச்சேன்..

http://positiveanthonytamil.blogspot.com/p/positive-anthony-ve-anthony.html


ஏதாவது பின்னூட்டம் போடணும்னு அப்புறமா னு யோசிச்சுட்டு அப்படியே மறந்துட்டேன்..அப்புறம் ஒரு வழியா போன மாசம் ப்ளாக் ஆரம்பிச்சுட்டேன்..அந்த பெயர் நினைப்பில் இருந்தது..உடனே என் favourite இல் அண்ணாவின் ப்ளாக் சேர்த்து கொண்டேன்..அப்புறமாய் போயி பார்க்கலாம்னு விட்டுட்டேன்..போனவாரம் யதேச்சையாய் அண்ணா ப்ளாக் போயி பார்த்தேன்..ரொம்ப அதிர்ச்சி..அண்ணா இறந்துட்டர்னு படிச்சேன்..ரொம்பவே வருத்தம்..ரொம்ப நேரமா அண்ணா ப்ளாக் ஆய் பார்த்துட்டே இருந்தேன்..அல்மோஸ்ட் எல்லா பதிவுகளையும் அன்னைக்கு படிச்சேன்..நிறைய வேதனைகள்,துயரங்கள்,போராட்டங்கள்,ஆசைகள்,ரசனைகள் க்கு நடுவில் கழிச்ச அவர் போராட்டங்கள் ஒவ்வெரு பதிவுலயும் பார்த்தேன்..நிஜமாய் அது நமக்கு ஊக்கமாய் கூட இருக்கும் நினைச்சேன்..


பதிவுலகில் அந்தோனிமுத்து அண்ணாவை தெரிஞ்சவங்க நிறைய பேரு இருக்கலாம் நினைக்கிறேன்..சீனா அண்ணா வின் வலைசரம் போயி பார்க்கும்போது dr .ப்ரூனே,அப்துல் அவர்கள் எல்லாம் உதவி இருக்காங்கனு தெரிஞ்சது..பரவால பதிவுலகத்தில் இந்த நட்புகளும்,அக்கறையும்,உதவிகளும் பரஸ்பரம் இருப்பது சந்தோஷமாகவும் இருந்தது..


சகோதரர் அந்தோணி இறந்து நேற்றை யோடு ஒரு மாதம் ஆகிறது..


சகோதரர் அந்தோணி முத்துக்கு இந்த தங்கையின் சிறிய சிறிய இரங்கற்பா..


"உடல்நோவு நித்தம்-உன்னை


உருக்குலைத்தும்


உயர்ந்து நின்றாய்-வாழ்வில்


மறைந்தும் சென்றாய்-நிகழ்வில்!!

அண்ணா..



"விண்ணில் உனக்காய்

தேவர்கள் சாமரம்

வீச தயாராம்..


உன் பாதங்கள்


ஓடுவதை ரசிக்க


அழகிய பூந்தோட்டம்

காத்திருக்கிறதாம்..


உன் தனிமை போக்க

தேவதைகள்

கதை சொல்ல தயாராம்..


அமூதூட்ட அன்னை

 காத்திருக்கிராலாம்!!"

மேலும்..

நீ பாசிடிவ் அந்தோணி..


நீ இப்பொழுது கூட இப்படி தான் சொல்வாய்..


இணையத்தில் படித்த இந்த வரிகளையும் உனக்காய் அனுப்புகிறேன்..

Don't weep at my grave,


For I am not there,


I've a date with a butterfly


To dance in the air.


I'll be singing in the sunshine,


Wild and free,


Playing tag with the wind,


While I'm waiting for thee.


Dear brother!Goodbye!!
beloved sister,
ananthi..
(இது என் ஆத்ம திருப்திக்காக மட்டுமே வெளியிட்ட பதிவு)

September 23, 2010

இனிப்பான செய்தி..இந்தாங்க..!!






2012 இல் உலகமே அழிஞ்சுரும்..பனிமலை எல்லாம் உருகி..வழிஞ்சு உலகமே வெள்ளக்காடாய் போகும்..ஓசோன் திரை முழுசும் ஓட்டை ஆகி..சூரிய கதிர்கள் நம்மை பொசுக்கி..வெந்து கருகி போவோம்னு...மிரண்டு போயி இருக்கும் தற்போதைய நிலையில்..இதமான,இனிப்பான செய்தி சொல்லிருக்காங்க..



யாரு சொன்னாங்கலாம் ??



இயற்கையை ஆய்வு செய்யும் 300 பேர் கொண்ட அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஷோக்கான செய்தியை சொல்லிருக்காங்க..




என்னனு??




"ஓசோனில் விழுந்த ஓட்டை கொஞ்சம் கொஞ்சமாய் மறைகிறது. இந்த நூற்றாண்டின் இடையிலேயே முழுசும் மறஞ்சு சரியாய்டும்"




சரி..ஏன் என்னதான் நடந்தது ஓசோனில்??..ஏன் என்னவாச்சு..ஒரு மண்ணும் புரியலேயே??




ஓசோன் ன்னால் பூமியிளுர்ந்து 60 கிலோ மீட்டர் உயரம் பரவி உள்ள ஒரு மெல்லிய திரை..இது முழுக்க முழுக்க வாயு ..புரியிறமாதிரி சொன்னால் நமக்கு இது ஒரு கருப்பு பூனை பாதுகாப்பு படை மாதிரி..("அம்மா" வை நினைச்சுக்கோங்க)




அது சரி..இது என்னத்தை பண்ணுது நமக்கு??






சூரிய கதிரின் வெப்பம் நேரடியா நமக்கு பட்டால் சுருண்டுருவோம்..நேரடியா தோலில் படும்போது ஏகப்பட்ட வியாதி வர வாய்ப்பு இருக்கு..(டீ குடிக்கும்போது வடிகட்டி தானே குடிக்கிறோம்.).அது மாதிரி ஓசோன், வடிக்கட்டி, நமக்கு அந்த வெப்பத்தை ஜோரா அனுப்புது..




அதெல்லாம் சரி தான்..கேக்க நல்லா தான் இருக்கு..என்ன தான் ஆச்சு அதுக்கு??




அது வேலைய ஒழுங்கா செஞ்சுட்டு இருந்தது.ஆனால் சமுதாய விலங்குகள்(man is a social animal :-)) ), நாம இருக்கோமே..எந்த நல்ல விஷயத்தையும் கெடுக்கிறது தானே முதல் வேலை..அதையும் சரியா செஞ்சோம்..




இன்னாப்பா..ராங்கா சொல்ற...??






1 . மக்கியே போகமாட்டேன்னு அடம் பிடிக்கும் பிளாஸ்டிக் வில்லன்,பாலிதீன் சொர்ணாக்கா இவங்களை எல்லாம் வாங்கி வாங்கி குவிப்போம்.


2 .மரங்களை மாஞ்சு,மாஞ்சு வெட்டி போட்டு..பிளாட் போட்டு விற்ப்போம்.


3 . காடுகளை அழித்து எல்லாருக்கும் கடுக்கா கொடுப்போம்..


4 . அடுத்து வீட்டு மாமா பார்க்க போனால் கூட புகை கக்கும் வாகனத்தில் போயி நின்னு,அலப்ஸ் கொடுப்போம்..


...................


........







அதெல்லாம் தோரணை,,கண்டுக்கபடாது..இப்போ இன்னாச்சு அதுக்கு??




என்னாச்சா?? எல்லா கூத்தும் பண்ணியாச்சு. நிறைய தோல் வியாதி,கண்ணு ஓட்டையா போனது,புற்று நோய் னு வந்தது தான் மிச்சம்..




ஐயையோ..இவ்வளவு பேஜார் இருக்கா??




ஆமாம்..இப்படியே போய்கிட்டு இருந்த போது..திடீர்னு ஒரு நலல நாளில் (1987 ) சமூக ஆர்வலர்கள் முழிச்சுட்டாங்க(நாமல்லாம் அப்போ கூட தூங்கிட்டு தான் இருந்தோம்).அவங்க உலகமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு தரும் வேலையில் ஈடுபட்டாங்க..






ஓ..அப்புடியா..??என்னல்லாம் கூவுனாங்க பா??






1 . பாலிதீன் பொருள்களுக்கு தடை


2 . நிறைய பிரச்சாரங்கள்


3 .விழிப்புணர்வு முகாம்கள்


......


இது மாதிரி நிறைய.






ஓ..கலக்கலா இருக்கே..






இது ஓரளவு நல்லது பண்ணிருக்கு போலே..அது மட்டுமில்லாமல்,190 நாடுகள் சேர்ந்துகிட்டு ஒசோனை பாதுகாக்க ஒரு ஒப்பந்தமும் செஞ்சுகிட்டாங்க..




ஒப்பந்தமா...ஹீ..ஹீ..ஒப்பந்தம்னாலே சிப்பு..சிப்பா வருதுப்பா..(அணுஆயுத ஒப்பந்தத்தில் மன்மோகன் சிங் காமடி பீஸ் ஆ இருந்தது மறக்க முடில ப்பா..)சரி..சரி..அப்புறம் என்னாச்சு??




இதோ 300 பேர் கொண்ட ஆய்வு குழு ஒரு இனிப்பான செய்தி சொல்லிருக்காங்க..


அட..இனிப்பா..என்னப்பா கடலைமுட்டாய் வியாபாரம் நம்ம ஊரில் ஆரம்பிக்க போறாங்கலாமா??






ஓய்..அதை தான் கட்டுரையின் ஆரம்பத்திலே சொல்லிட்டு தானே இதெல்லாம் சொல்லிட்டு வரேன்..தூங்குறியா..??






மன்னிச்சு..மன்னிச்சு..ப்பா..நல்லா புரியுது..ஓசோன் திரை சரியாகிட்டு வருதுங்குற..உலகம் ஒளிருதுங்குற :-))






ஆமாம்..நிச்சயம் இனிப்பான விஷயம் தானே?/




அட்லீஸ்ட்,நம்ம வருங்கால சந்ததிகள் பாதுகாப்பாய் இருப்பாங்க ன்னால் சந்தோசம் தானே??




மெய்யாலுமே..சரி தான் பா..







தனிப்பட்ட என் கருத்து:


* விழிப்புணர்வு நிஜமாகவே ஓரளவு திருப்தி தான்.


*எப்.எம் ரேடியோ க்களில் நிறைய ஆக்க பூர்வ ஓசோன் பிரச்சாரங்களை பலமுறை கேட்டு இருக்கிறேன்.


*நகர்ப்புறங்களில் இன்னும் பாலிதீன் நடமாட்டம் இருக்கு.ஆனால் முன்னாடிக்கு இப்போ எவளவோ தேவலை.


*பள்ளி,கல்லூரிகளில் நிறைய இதுபற்றி கருத்து கணிப்பு,போட்டிகள் நடத்துறாங்க..பாட புத்தகங்களில் குளோபல் வார்மிங் பற்றி கட்டாயம் ஒரு பாடமாவது இருக்கு..


*மீடியா சேவையை கட்டாயம் பாராட்ட வேண்டும்






ம்ம்..ஆயிரம் சொன்னாலும்..வெளிநாட்டு மக்களை விட நம்ம நாட்டில் விழிப்புணர்வு,அக்கறை இன்னும் கம்மி தான்.




பரவால..குறைகளை இன்னும் சரி செஞ்சுட்டு..இந்த இனிய செய்தியை இன்னும் அழகூட்டுவோம்..






(இனிப்பு வாங்கிட்டிங்களா?)



(ஓகே..மறக்காமல் வோட்டு போட்டு போய்டுங்க)














September 21, 2010

இப்படியும் ஒரு ஏமாற்றுவழி..!!

சமீபத்தில் செய்தி தாளில் ஒரு செய்தி படித்து அதிர்ச்சியானேன்..கொஞ்சம் வேடிக்கையான,ஆனால் வருத்தமான விஷயமும் கூட அது.


 வெளிநாடு சென்ற கணவனை,அவன் மனைவி போனில் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் கடந்த 6 வருடமாக ஒரு வினோத முறையில் அவன்,அவளை ஏமாற்றி இருக்கிறான்..






எப்புடியாம்??




அந்த அண்ணாச்சி பேரு,ராஜீவ்காந்தி,அவரு கொத்தனார் ஜாப் பார்த்துட்டு இருந்தார் பரமக்குடியில். ஆனா,நம்ம அண்ணாத்தைக்கு கொள்ளநாலா பாரின் போயி செட்டிலாகனும்னு ஆசை..சோ,ரூம் போட்டு தலைவரு யோசிசுருக்காறு...ஐடியா கிடைச்சுருக்கு,கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டாரு..அப்போ பார்த்து ஒரு இளிச்சவாய் குடும்பம் சிக்கிருக்கு,அவங்ககிட்டே நம்ம "கோலு..மாலு" பார்ட்டி நகை வேணாம்,பணமா கொடுங்கன்னு கேட்ருக்காரு..அதுங்களும் பாவம்..பொண்ணுக்கு கல்யாணம் நடந்தா சரிதான்னு,பணமா கொடுத்திருக்காங்க..நம்ம அண்ணாத்த துட்டு வாங்கிட்டு தாலி கட்டிட்டார்.எண்ணி 10 நாள் தான்..மலேஷியா போறேன்னு கிளம்பிட்டார்..இது நடந்தது 2004 இல்..






போன ஆளு போன ஆளுதான்..!!






ஆளையும் காணோம்..பேரயும் காணோம்...போனையும் காணோம்!!! நம்ம தங்கம் மனைவியை எந்த வழியிலும் தொடர்பு கொள்ளல...!






பாவம்,அந்த ஆளு பொஞ்சாதி..புருஷனுக்கு போன் போட்டுகிட்டே இருந்துருக்கு 6 வருஷமா...ஒவ்வொரு தபாவும் "இந்த எண் உபயோகத்தில் இல்லை" ன்னு யாரு,யாரோ சொல்லிருக்காங்க..!இது நொந்து போயி போனை வச்சுட்டு போயிருக்கு ..






பொண்ணு வீட்ல அப்புறம் தான் முழிச்சுருக்காங்க..உடனே மலேஷியாவில் சொந்தக்கார ஆள விட்டு தேடி,நம்ம ஹீரோ என்ன பண்றாருன்னு கவனிக்க சொல்லிருக்காங்க..






அங்க தான் தமாஷ்! பொண்டாட்டி சம்பந்தபட்டவங்க கிட்டே இருந்து, போன் வரும் போதெல்லாம் நம்ம பரமக்குடி மச்சான் பலவித வாய்ஸ் மாடுலேசன் இல் பின்னி இருக்கார். ஒரே வார்த்தை ..ஓகோனு அசத்திருக்கார் நம்ம பாஸ்,,"இந்த எண் உபயோகத்தில் இல்லை" ன்னு பலர் மாதிரி மிமிக்கிரி பண்ணி ஆறு வருஷமா எஸ்கேப் ஆய்ருக்காரு துரை.






அப்புறம் அந்த ஆளை பிடிச்சு(அடிச்சு,துவைச்சு..தொங்கபோட்டு)கேட்டால்..பணத்துக்காக தான் கட்டிகிட்டேன்,ஆனா அந்த புள்ளைய பிடிக்கல..மலேஷியா விட்டு வரமாட்டேன்னு ஒப்பாரி வச்சுருக்கான்..




இப்ப பரமக்குடியில் அவரு பொஞ்சாதி 16 வயதினிலே மயிலு மாதிரி போலீஸ் இல் புகார் கொடுத்துட்டு புருஷன் வரதுக்காக காத்துகிட்டு இருக்காம்!கண்ணீரும்,கம்பலையுமாய்..!பாவம்!!






ம்ம்..ஏமாத்துறது எப்புடின்னு..??நம்ம பயலுக ரூம் போட்டு யோசிப்பானுங்களோ???

(தனிப்பட்ட என் கருத்து...

எனக்கு என்னவோ தோணுது..இது .. முழுக்க முழுக்க அந்த ஆளோட சுயநலம்ன்னு .அவன் பணத்தேவைக்கு ஒரு பெண் பலிகாடு.எனக்கு என்ன உறுத்தல் என்றால்..அந்த பொண்ணு வீட்டில் இவ்வளவு
மாங்கா மடயனுங்கலாவா
இருப்பாங்க.??.ஆறு வருஷம் அவனை விட்டது எவ்வளவு அறியாமை..ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றி கொண்டு தான்  இருப்பாங்க..இது மொழி,இனம்,ஊரு எல்லாம் தாண்டி பொதுவான ஒரு விஷயம்...பெண்களோ,ஆண்களோ எல்லாத்துக்கும் உஷாரா இருப்பது தான் பெஸ்ட்..))




September 19, 2010

ரத்த ருசியில் மதுரை மச்சான்ஸ்..

 
ம்ம்..தலைப்பை பார்த்தவுடனே சரியா கண்டுபிடிச்சிருப்பிங்களே ?? அதே தான்...


(எங்க)மதுரை இந்தியன் கிரிக்கெட் டீம் மாதிரி..அப்போ அப்போ பார்ம் இல்லாமல் தவிக்கும்..அப்புறம் தூள் கிளப்பும்..ம்ம்..இடையில் யாரு கண்ணு பட்டதோ ..ஒரு சண்டை,சச்சரவுக்கு போகாமல்,ஒரு கொலை கூட பார்க்காமல் மொக்கையான பார்ம் இல் இருந்தது..இப்போது மதுர..குலுங்க..குலுங்க..னு...ஆரம்பிச்சுருச்சு அதோட கொலை..கொலையா முந்திரிக்காவை...ஸ்டார்ட் மக்கா னு போன மாசத்தில் இருந்து ஆரம்பிச்சு இப்போ வரை பேஷா போயிண்டிருக்கு...ஹீ..ஹீ..



போனமாசம் ஒரு அப்பாவே அவர் பொண்ணு மாரிசெல்வி க்கு விஷம் கொடுத்து கொலை பண்ணினார்...என்ன விஷயம்னு ஒரு ஓரமா உட்கார்ந்து 'ஒட்டு" கேட்டால் அவரு பொண்ணு லவ்ஸ் பண்ணிருச்சாம்..இவர் கெளரவம் போயிருச்சுன்னு "சோலிய" முடிச்சுட்டார்..நைனா இப்ப கம்பி எண்ணிட்டு இருக்கார்..

அப்புறம் அதே ஏரியா வில் ஒரு பொண்ணை பட்டபகலில் வெட்டி கொன்னுட்டு போய்ட்டானுங்க,பொழுது போகலன்னு..(டச் விட்டுற கூடாதாம்..:-))



போனமாசம் அவனியாபுரம் பக்கம்..ரம்மியில் ஜோக்கர் மாறிபோச்சுன்னு..ஜஸ்ட் ரெண்டு பேரு வெட்டி செத்து போய்ட்டானுங்க...எப்புடி..டி..டி...??




ஒரு பத்து நாலு முன்னாடி வட்டிகடை முதலாளியை பரலோகம் அனுப்பிவிட்டானுங்க....


அவருக்கு பரலோகத்தில் துணைக்கு ஆள் இல்லைன்னு முந்தாநாளு வேற ஒரு வட்டிகடை முதலாளியை நடுரோட்டில் வெட்டி கொன்னு மதுரையின் "மப்பை "தெளிவாய் உலகத்திற்கு உணர்த்தினார்கள்(ஹீ..ஹீ..நானும் மதுரை தானுங்க..ஊரு பாசம் அப்போ அப்போ தலை காமிக்கும்..கண்டுக்க படாது)..இதுல என்ன கொடுமைனா, இந்த கொலையை பார்த்துட்டானு ரோடு இல் ஓரமா 'கைப்புள்ள" கணக்கா "உச்சா" போய்க்கிட்டு இருந்த ஒரு "அல்லக்கைய" போட்டு கொன்றுக்கானுங்க...


பெரியார் பஸ் ஸ்டாண்ட் டிப்போ கிட்டே ஒரு கொலை ரெண்டு நாளைக்கு முன்னாடி!!..


என்ன விஷயமாம்?? அதுவா...பப்ளிக்கா "போட்டு தள்ளி" நாள் ஆய்டுச்சாம்...அதான்..வேற ஒண்ணுமில்ல..




ரெண்டுமாசம் முன்னாடி பிபி சாவடி பக்கம் ஒரு ஆளின் தம்பியை நடுசாமம் அவன் வீட்டு வாசலில் வெட்டி போட்டானுங்க ..அது மேட்டர் இல்லை...அப்புறம் என்னனு கேக்குறிங்களா?


அங்க தான் இருக்கு ட்விஸ்ட்டு.. வெட்டி போட்டவனை அடுத்த மாசம் அதே தேதியில் அவன் வீட்டு வாசலில் வச்சு முடிச்சுட்டானுங்க..இது ரஜினி ஸ்டைல் ஐ விட கலக்கல் தானே...;-))
இப்போ..இந்த ப்ளாக்க்காக டைப்பிட்டு இருக்கும்போது எங்க ஊரில் எவன் கதை முடிஞ்சதுன்னு தெரில...(என்ன இருந்தாலும்..இந்த நேர்மை பிடிச்சுருக்கு...சை..சை..தூ.தூ .இந்த ஸ்டைல் பிடிச்சுருக்குன்னு சொல்ல வந்தேன்..:-))




இருங்க, வெளிய ஏதோ சத்தம்...(ம்ம்..பார்த்துட்டு வந்துட்டேன்)

என்ன கொடுமைங்க..பஞ்சுமுட்டாய் விக்கிற ஆளு..இப்போ வண்டியில் எதையோ தள்ளிட்டு கத்திட்டு வந்தான்...என்னடா னு கேட்டால்..."அருவாள் வாங்கலையோ..அருவாளுங்க்ரான்"...(இந்த வியாபாரம் தான் இப்போ இங்க சூடு பிடிக்குதாம்)( என்ன கொடுமை சரவணன்???:-( )



(ம்ம்...தேங்காய் உடைக்க காலையில் நான் அருவாள் தேடின நாபகம்..அடடா...நானெல்லாம் மதுரைக்காரியா..வெட்கம்,வேதனை..:-(( )



கோஷத்தோட கோஷமா...கத்தி வைக்கிறேன்..மதுரை வாழ்க...!!வளரட்டும் உன் கொலை..சீ..உன் கலை..(வார்த்தை தடுமாறுது..கிளம்புறேனுங்க..ஹீ..ஹீ..)








இருங்க...

















இருங்க...




















இருங்க...











இருங்க...









இருங்க...









இருங்க...














இருங்க...











இருங்க...









இருங்க...


















இருங்க...












இருங்க...












இருங்க...

















இருங்க...










(ஆங்..மறக்காமல் வோட்டு போட்டு,பின்னூட்டமும் போட்டுட்டு போயிருங்க...அப்புறம்.....அருவாள்,மதுரைகாரி...நாபகம் இருக்கு தானே..ஹீ ஹீ..உங்க உடம்பை பார்த்துக்கோங்க..வரட்டா...:-)) )


September 16, 2010

அழகு அம்மிணி..அசத்துறிங்கோ!!!

தலைப்புக்கு பொருத்தமான உள்ளடக்கம் படிக்கும் முன்,சும்மாங்காட்டி இதையும் கொஞ்சம் படிச்சுட்டு தான்  போங்களேன்..ஆங்..!!
பெயர்: விமலி
பால்:    பெண்
வயது(தற்போது):    22
மணமாகி விட்டதா?- ஆம்
குழந்தைகள்:      3.8 வயது-ஆண்
                                   2.3 வயது-ஆண்
                                   7 மாதம் -பெண்
திருமணத்திருக்குமுன்-       தேசிய அளவில் பல விருது பெற்ற வாலிபால் வீராங்கனை
வைத்திருக்கும் கேடயம்,கோப்பைகள் எண்ணிக்கை ? -  மன்னிக்கவும்,அவங்க அம்மா வீட்டு பரண் மேலே கிடக்கும் ட்ரங்கு பெட்டிக்கு தான் தெரியும்.
தி.மு.எடை-48 KG
தி.பி.எடை -92 KG
படிச்சுட்டிங்களா?? ஓகே..ஓகே..வாங்க மேற்கொண்டு படிக்க போகலாம்...
பெல்ஜியம் நாட்டு டென்னிஸ் வீராங்கனை-கிம் கிளிஸ்டர்ஸ்,வயசு 27 , திருமணத்துக்கு முன் உலக சாம்பியன் நம்பர் 1 .

அதன் பிறகு கூடைப்பந்து வீரர் பிரையன் லின்சை திருமணம் செய்து கொண்டார். அழகான பெண் குழந்தையும் பெற்றெடுத்தார். கடந்த 2007- ம் ஆண்டு மே மாதம் டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார்

திருமணம் முடிஞ்சு, குழந்தை பெற்ற கையோடு மீண்டும் பிரவேசம் டென்னிஸ் உலகில்..3-வது தடவையாக அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் தற்போது. இதற்கு முன்னர் அமெரிக்க ஓபன் பட்டத்தை 2005, 2009 வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது
குழந்தை ஒருபக்கம்,உடல் பிட்நெஸ்,மனஉறுதி,உடற்பயிற்சி,இடைவிடாத டென்னிஸ் பயிற்சி..இந்த உழைப்பு,வெறி எல்லாம் அவரை மீண்டும் சாதனையாளர் ஆக்கி இருக்கிறது.
ஒரு 'இளம் தாய்' இந்த வருடத்தின் 'அமெரிக்கன் ஓபன்' டென்னிஸ் கோப்பையை கைப்பற்றி இருக்கிறார். 
வெற்றி கோப்பை வாங்கும்போது அவரின் 2 வயது மகளை ஒரு கையில் தூக்கி கொண்டே வாங்கும் போது தான் சொல்லத்தோன்றியது இப்படி, "அழகு அம்மிணி..அசத்திரிங்கோ" என்று!!
விளையாட்டுடன்,அவர் மகளையும் பார்த்துகொண்டு சாதிப்பது இன்னும் மகிழ்ச்சியையும்,சந்தோஷத்தையும் தருகிறது என்கிறார் கிளிஸ்டர்ஸ்.
சரி..அதெல்லாம் போகட்டும்..அந்த விமலி என்ன இப்ப பண்றாருன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆசை படுறவங்க மேற்கொண்டு படிக்கலாம்..மத்தவங்க பதிவை போட்டுவிட்டு,வோட்டும் போட்டு விட்டு ஓடி போயிரலாம்..
 ---------------------------------------------------------------------------------------------------------------------------------
அந்த மாஜி தேசிய சாம்பியன் திருமதி.விமலி தற்போது 92 KG  எடையுடன் நடக்க முடியாமல்,கையில் ஒன்னும்,இடுப்பில் ஒன்னும், இடுக்கிட்டு,மூத்த பையனை திருமதி.செல்வம் சீரியல் போட சொல்லி (வாய் நிறைய சீடை உருண்டைகளை அமுக்கிகிட்டு),கத்திகிட்டு இருக்காங்க.
:-))
ஹேய்!அழகு அம்மிணி..அசத்துறிங்க..!!ஹீ..ஹீ..
 

September 12, 2010

நாகரிக போர்வையில் ஒரு ஆபாசக்கூத்து

தற்போது திரை அரங்குகளில் வெற்றிகரமாய் ஓடி(??!!) கொண்டிருக்கும் புதுமை(!!??) விரும்பி,சர்ச்சை நாயகன் சாமி யின் படம் "சிந்து சமவெளி"..இதன் கதை கொஞ்சம் உன்னிப்பாய் கவனிக்கவும். ஒரு ஆர்மி ஆளு அவரு பையனுக்கு,அந்த பையனின் பள்ளி தோழியவே கல்யாணம் பண்ணி வைக்கிறார்..அப்புறம் அந்த ஆளு பையன் ஆசிரிய பயிற்சிக்கு வெளியூர் போயி தங்கிபடிக்க போயிடுறான்..ஆர்மி ஆளுக்கும்,புது மருமகளுக்கும் ஒரு மாதிரி போங்கு ஆகி..கள்ள உறவு வந்துடுது..இடையில் ஊருக்கு வருகிற அப்பாவி பையன் மனைவிக்கும்,அப்பனுக்கும் இருக்கிற கள்ள தொடர்பை கண்டுபிடிச்சு மரத்தோரமா உட்கார்ந்து மொக்கை கவிதையா எழுதுறான்..இந்த கவிதை படிச்சுட்டு,அவன் பொண்டாட்டி தற்கொலை பண்ணிக்கிறாள்.பையன் கோவமாகி அவன் அப்பனை போட்டு தள்ளுகிறான்..படம் சுபம்..எப்படி படம்..சூப்பர் ஆ இருக்கா??



இந்த கதையில் இயக்குனர் சாமி என்னத்தை சொல்ல வரார்னு தெரில..ஆனால் இளவட்டங்கள்,பெருசுகள் ரொம்பவே என்ஜாய் பண்ணுறாங்க..ஆஹா..ஆபாச படம் ஒளிந்து பார்க்காமல் நாகரிக நேர்த்தியில் பார்க்கலாம்னு போறாங்க..ஆனால் இது ஒரு விதமான ஏமாற்று படலம் தான்..




உயிர் படத்தில் இந்த இயக்குனர், அண்ணி,கொழுந்தன் மேலே படும் சபலங்களையும்,கலாப காதலன் படத்தில் மச்சினி,அக்கா புருஷன் மேலே படும் காமத்தையும் அள்ளி அள்ளி தெளித்தது மிச்சம் இருந்தது போலும்..இதோ மாமனார்,மருமகள் கள்ளதொடர்புக்கு ஒரு படம்..




நான் உண்மைய தான் எடுக்கிறேன் என்று இயக்குனரின் சமாதானமும் கூட..இது உண்மை தான் என்றால்..ஷகிலா வை வச்சு,இதுக்கென்றே வரும் "பலான "மலையாள படங்களை எடுத்து இதுக்கான தியேட்டரில் ரிலீஸ் பண்ணி காசு பார்க்கலாமே?எதுக்கு குடும்ப படங்கள் என்ற போர்வையில் இந்த சமூக அத்து மீறல் படங்கள்..




இந்த படம் மாதிரி நிறைய குடும்பங்களில் நடக்குதுன்னு இயக்குனர் மூக்கால் அழுதுருக்கிறார்..அப்படி பார்த்தால் நடக்கும் எல்லா அந்தரங்களையும் படமாய் தருகிறேன் என்றால் சமூகத்தில் தெரியாத அசிங்கங்கள் இன்னும் வெட்ட வெளிச்சமாகி,இளைய சமுதாயத்துக்கு ஒரு மோசமான தூண்டலை தான் தரும்..




ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் அசிங்கங்கள் ஒட்டு மொத்த சமூக விளிம்புகளை மீறல் மாதிரி காமிக்கும் இயக்குனரின் பரிகாசம் நல்லதல்ல..சில தமிழ் சமூக ஆர்வலர்கள் இதற்காய் கடுமையாய் எச்சரிக்கை விடுத்து இருக்கார்கள் அந்த இயக்குனருக்கு. இயக்குனர் கொஞ்சம் "டர்" ஆகி..இனி சமூக விழிப்பு (??) படங்களை விட்டு விட்டு அதிரடி படம் கொடுக்க போகிறேன்னு தமாஷ் பேட்டி கொடுத்து இருக்கிறார்..பாப்போம் அந்த அதிரடி படத்தில் என்ன விரசம் காத்திருக்குதுன்னு...:-))


_________________________________________________________________________________________________________________________________


அதோட இந்த ஆர்டிகல் முடிஞ்சுருச்சு..நீங்க வோட்டு போட்டு ஓடி போயிருங்க..இது பர்சனல்..;-)


_________________________________________________________________________________________________________________________________


((போனில்..))


எதிர் முனையில் என் தம்பி..


நான்: என்னடா சொல்லு..


தம்பி: யக்கா..ஒரு ஹெல்ப்பு..


நான்:என்னடா ?


தம்பி: மாம்ஸ் கிட்டே சொல்லி "சிந்து சமவெளி" பட டிவிடி வாங்கி வைக்க சொல்லு..இங்கே பஜார் பூரா தேடிட்டேன்..எல்லாம் வித்துருச்சாம்.மாம்ஸ் ஆபீஸ் இல் சொல்லி வச்சு வாங்கி வை..செம "ஜில் பான்சி" படமாம்..ஒகே வா..மாம்ஸ் கிட்டே சொல்லிரு...


நான்: :-((

September 7, 2010

"இட் வாஸ் எ குட் இன்டெர்வியூ"






போன வாரம் நான் ரொம்பவே ரசித்த ஒரு தொலைகாட்சி பேட்டி..செய்தி சேனல் ஒன்றில் ரொம்பவே ருசிகர இன்டெர்வியூ. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேட்ச் பிக்ஸ் விஷயத்தில் கடுமையாய் பரபரப்பு நடந்தபோது ..பாகிஸ்தான் அணியின்வீரர் முஹம்மது ஆசிப்பின் காதலி வீணா மாலிக்கின் அதிரடி பேட்டி. எடுத்தவர் "டைம்ஸ் நவ்" முதன்மை பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி.மனுஷன் இந்த பக்கம் சளைக்காமல் கேள்வி கேட்க..அதை வீணா மாலிக் கொஞ்சமும் அசராமல் புன்சிரிப்போடு பதில் சொன்ன பாங்கு,எந்த வித டென்ஷன் நும் இல்லாமல் சமாளித்த அழகு..ஆஹா..கோஸ்வாமி கேட்கிறார்.."வீணா..ப்ரூப் ஐ எங்க கிட்டே முதலில் காமிங்க.. சும்மாங்காட்டியும் நீங்க விவகாரம் கிளப்பலாம் இல்லையா?" அதுக்கு வீணா உடனே எந்த கோவமும் காமிக்காமல் சிரித்து கொண்டே சளைக்காமல் சொன்னது.."நான் எதுக்கு உங்ககிட்டே கொடுக்கணும்..கொடுக்கிற இடத்தில் கொடுத்தாச்சு.." எந்த வித சிம்பதியை வீணா உருவாக்கவே இல்லை..மாறாக அதன் தைரியம் தான் அசத்தல்..கோஸ்வாமி போட்டு வாங்கிட்டு இருந்தார்..பாகிஸ்தானில் பெண்களுக்கு நிறைய சுதந்திரம் மறுக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில்..தப்போ..சரியோ..வீணா வின் தைரியம்,எதிர்கொண்ட தன்மை..பேச்சு மற்றும்..கோஸ்வாமி யின் பதட்டம் இல்லாத,தெளிவான,கேள்வி கணைகள்...எல்லாமே ரொம்பவே அந்த பேட்டியில் அற்புதம்..ரஜினி காந்த் படம் பார்த்தமாதிரி இருந்தது..
மொத்தத்தில் முதல்வன் படத்தில் க்ளைமாக்ஸ் இல் ரகுவரன் சொன்னது போலே.."இட் வாஸ் எ குட் இன்டெர்வியூ"