September 12, 2010

நாகரிக போர்வையில் ஒரு ஆபாசக்கூத்து

தற்போது திரை அரங்குகளில் வெற்றிகரமாய் ஓடி(??!!) கொண்டிருக்கும் புதுமை(!!??) விரும்பி,சர்ச்சை நாயகன் சாமி யின் படம் "சிந்து சமவெளி"..இதன் கதை கொஞ்சம் உன்னிப்பாய் கவனிக்கவும். ஒரு ஆர்மி ஆளு அவரு பையனுக்கு,அந்த பையனின் பள்ளி தோழியவே கல்யாணம் பண்ணி வைக்கிறார்..அப்புறம் அந்த ஆளு பையன் ஆசிரிய பயிற்சிக்கு வெளியூர் போயி தங்கிபடிக்க போயிடுறான்..ஆர்மி ஆளுக்கும்,புது மருமகளுக்கும் ஒரு மாதிரி போங்கு ஆகி..கள்ள உறவு வந்துடுது..இடையில் ஊருக்கு வருகிற அப்பாவி பையன் மனைவிக்கும்,அப்பனுக்கும் இருக்கிற கள்ள தொடர்பை கண்டுபிடிச்சு மரத்தோரமா உட்கார்ந்து மொக்கை கவிதையா எழுதுறான்..இந்த கவிதை படிச்சுட்டு,அவன் பொண்டாட்டி தற்கொலை பண்ணிக்கிறாள்.பையன் கோவமாகி அவன் அப்பனை போட்டு தள்ளுகிறான்..படம் சுபம்..எப்படி படம்..சூப்பர் ஆ இருக்கா??இந்த கதையில் இயக்குனர் சாமி என்னத்தை சொல்ல வரார்னு தெரில..ஆனால் இளவட்டங்கள்,பெருசுகள் ரொம்பவே என்ஜாய் பண்ணுறாங்க..ஆஹா..ஆபாச படம் ஒளிந்து பார்க்காமல் நாகரிக நேர்த்தியில் பார்க்கலாம்னு போறாங்க..ஆனால் இது ஒரு விதமான ஏமாற்று படலம் தான்..
உயிர் படத்தில் இந்த இயக்குனர், அண்ணி,கொழுந்தன் மேலே படும் சபலங்களையும்,கலாப காதலன் படத்தில் மச்சினி,அக்கா புருஷன் மேலே படும் காமத்தையும் அள்ளி அள்ளி தெளித்தது மிச்சம் இருந்தது போலும்..இதோ மாமனார்,மருமகள் கள்ளதொடர்புக்கு ஒரு படம்..
நான் உண்மைய தான் எடுக்கிறேன் என்று இயக்குனரின் சமாதானமும் கூட..இது உண்மை தான் என்றால்..ஷகிலா வை வச்சு,இதுக்கென்றே வரும் "பலான "மலையாள படங்களை எடுத்து இதுக்கான தியேட்டரில் ரிலீஸ் பண்ணி காசு பார்க்கலாமே?எதுக்கு குடும்ப படங்கள் என்ற போர்வையில் இந்த சமூக அத்து மீறல் படங்கள்..
இந்த படம் மாதிரி நிறைய குடும்பங்களில் நடக்குதுன்னு இயக்குனர் மூக்கால் அழுதுருக்கிறார்..அப்படி பார்த்தால் நடக்கும் எல்லா அந்தரங்களையும் படமாய் தருகிறேன் என்றால் சமூகத்தில் தெரியாத அசிங்கங்கள் இன்னும் வெட்ட வெளிச்சமாகி,இளைய சமுதாயத்துக்கு ஒரு மோசமான தூண்டலை தான் தரும்..
ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் அசிங்கங்கள் ஒட்டு மொத்த சமூக விளிம்புகளை மீறல் மாதிரி காமிக்கும் இயக்குனரின் பரிகாசம் நல்லதல்ல..சில தமிழ் சமூக ஆர்வலர்கள் இதற்காய் கடுமையாய் எச்சரிக்கை விடுத்து இருக்கார்கள் அந்த இயக்குனருக்கு. இயக்குனர் கொஞ்சம் "டர்" ஆகி..இனி சமூக விழிப்பு (??) படங்களை விட்டு விட்டு அதிரடி படம் கொடுக்க போகிறேன்னு தமாஷ் பேட்டி கொடுத்து இருக்கிறார்..பாப்போம் அந்த அதிரடி படத்தில் என்ன விரசம் காத்திருக்குதுன்னு...:-))


_________________________________________________________________________________________________________________________________


அதோட இந்த ஆர்டிகல் முடிஞ்சுருச்சு..நீங்க வோட்டு போட்டு ஓடி போயிருங்க..இது பர்சனல்..;-)


_________________________________________________________________________________________________________________________________


((போனில்..))


எதிர் முனையில் என் தம்பி..


நான்: என்னடா சொல்லு..


தம்பி: யக்கா..ஒரு ஹெல்ப்பு..


நான்:என்னடா ?


தம்பி: மாம்ஸ் கிட்டே சொல்லி "சிந்து சமவெளி" பட டிவிடி வாங்கி வைக்க சொல்லு..இங்கே பஜார் பூரா தேடிட்டேன்..எல்லாம் வித்துருச்சாம்.மாம்ஸ் ஆபீஸ் இல் சொல்லி வச்சு வாங்கி வை..செம "ஜில் பான்சி" படமாம்..ஒகே வா..மாம்ஸ் கிட்டே சொல்லிரு...


நான்: :-((

55 comments:

kavisiva said...

ஆனந்தி இப்போ வர்ற முக்கால்வாசிப் படங்களும் உண்மையைத்தான் சொல்றோம் அப்படீங்கற போர்வையில் வக்கிரங்களைத்தான் காட்டுறானுங்க... இவனுங்களுக்கு எதிரா நாம் பேசறதை கூட அவனுங்களுக்கான விளம்பரமா மாத்திக்கற உத்தியும் அவனுங்களுக்கு தெரியும். அதான் படம் ஓடுது.

just ignore this kind of movies

ஆனந்தி.. said...

ஆமாம் கவி..எப்படியாவது வியாபரபடுத்தனும் தான் பார்க்கிரானுங்க..ஆனால் நிச்சயம் சீரழிவு பாதை தான் இது!!

Chitra said...

இயக்குனர் கொஞ்சம் "டர்" ஆகி..இனி சமூக விழிப்பு (??) படங்களை விட்டு விட்டு அதிரடி படம் கொடுக்க போகிறேன்னு தமாஷ் பேட்டி கொடுத்து இருக்கிறார்


...... இப்படி வேற தமாஷ் பண்றாரா? சரியா போச்சு!

Dayasha said...

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இப்படியா? இப்படியும் நடக்கலாம் அல்லது நடந்து இருக்கு..... இப்படியும் நடக்கலாம் என்று மாமனார் மற்றும் மருமகள் ஏன்...... மகன் கூட முன் ஜாக்கிரதையா இருக்கலாம் இல்லையா? அதுதானே சொல்லுறாங்க பல இடத்தில்..... சலனம், சபலம்.... தனிமை.... இப்படியே போனால் இறுதி முடிவு என்ன என்று.... கெட்டதை விடுத்து நல்லதை எடுத்து நல்வாழ்வு வாழும் நல்லவர்கள் பார்த்தால் நிச்சயம் நல்ல படம் என்றுதான் சொல்லுவார்கள்...... இதை விட எவ்வளவோ குப்பை படமெல்லாம் வந்து இருக்கு அது உங்கட கண்ணுக்கு தெரியவில்லையா.....?

ராசராசசோழன் said...

நம்ம ஏதாவது சொன்ன கலாச்சார காவலர்னு கேலி செய்கிறார்கள்... சமூகத்திற்கு நல்லது செய்ய விட்டாலும் தீமை செய்யாதீர்கள் என்பதை சாமிக்கு யார் உணர்த்துவார்கள்...

ஆனந்தி.. said...

ஆமாங்க சித்ரா..ஒரே தமாசு தான்..நாமெல்லாம் காமடி பீஸ் ஆச்சே..எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் :-))

ஆனந்தி.. said...

ராஜராஜன்..நிச்சயம் நாம உணர்த்தினாலும் இவங்களுக்கெல்லாம் புரிய போறது கிடையாது..

சௌந்தர் said...

உங்க ஐடியா நல்ல இருக்கு

swarna said...

கள்ள உறவுகளால் குடும்பங்கள் கெடும் என்பது வெளிப்படையான உண்மை...சாமி அதை துகிலுரித்து காட்சிகளில் இல்லாத வக்கிரத்தை கதையில் புகுத்திவிட்டார். இந்த படத்தை பார்த்தவர்களோ...கேட்டவர்களோ சில நிமிடங்களாவது உள்ளத்தை அழுகாக்கி கொள்வதை தவிர்க்க முடியாது...

LK said...

indraiku pala kudumbangal ithanaal seeralinthu kondu ullana :(

ஆனந்தி.. said...

உண்மை LK..கலாச்சார மீறல்களை சினிமா என்ற ஊடகம் செமத்தியா 'சோலி' பார்த்திடும் பல வேளைகளில்..

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

சிறப்பான பார்வை...!
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com/

pillaival said...

///கலாச்சார மீறல்களை// மொதல்ல கலாச்சாரம்னா என்ன பண்பாடுனா என்னானு தெரிஞ்சுகிட்டு பதிவு எழுதுங்க.

அமைதிச்சாரல் said...

//நடக்கும் எல்லா அந்தரங்களையும் படமாய் தருகிறேன் என்றால் சமூகத்தில் தெரியாத அசிங்கங்கள் இன்னும் வெட்ட வெளிச்சமாகி,இளைய சமுதாயத்துக்கு ஒரு மோசமான தூண்டலை தான் தரும்.//

உண்மைதான்ப்பா.. அதுவுமில்லாம மக்கள்கிட்ட இதையெல்லாம் நியாயப்படுத்தும் குணமும் வந்துடும். 'ஊர்ல ஒலகத்துல நடக்காததா என்ன?'ன்னு ஒரே போடாப்போட்டு கேக்கிறவங்க வாயை அடைச்சுடுவாங்க :-((

சேட்டைக்காரன் said...

பலரின் ஆதங்கத்தையும், ஆத்திரத்தையும் வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள்.

ராம்ஜி_யாஹூ said...

இந்த மாதிரி கவன ஈர்ப்பு தலைப்பு வைத்து இந்தப் படம் பற்றி எழுதும் பதிவுகள் இந்த படத்திற்கு விளம்பரமாகவே மாறும்.

இந்த மாதிரி படங்களைப் பற்றி எழுதாமல் விவாதிக்காமல் ஒதுக்கி வைப்பதே, இது போன்ற படங்கள் வராமல் இருக்க உதவும்.

You could have avoided this post, even now you could delete this post.

ஆனந்தி.. said...

சௌந்தர்,எந்த ஐடியா ப்பா.??. :-0

ஆனந்தி.. said...

ஹாய்..தயாஷா..ஆஹா..உங்கள் ஆதங்கம் புரிகிறது..ஆனால் சினிமா மீடியா இஸ் வெரி பவேர்புள் நண்பா..நல்லது,கெட்டது எல்லாமே அதனால் கொடுக்க முடியும்..நீங்க சொன்ன பாசிடிவ் எத்தனை பேரு நினைப்பாங்கன்னு நினைக்கிறிங்க..அது தான் விஷயம் தயா..ஓகே வா..??

ஆனந்தி.. said...

வாங்க ஸ்வர்ணா..உண்மை நீங்க சொன்னது..

ஆனந்தி.. said...

வணக்கம் LK ..அது உண்மை தான்..

ஆனந்தி.. said...

வாங்க வெற்றி..வணக்கம்..நன்றி பா உங்கள் பின்னூட்டம்..உங்க பதிவும் போயி பார்த்தேன்..கலக்குறிங்க போங்க..!!

ஆனந்தி.. said...

வாங்க பிள்ளைவாள்..நீங்க சொன்னது சரி தான்..பண்பாடு னு தான் போட்ருகனும்..நன்றி தலைவா..!!

ஆனந்தி.. said...

வாங்க அமைதிசாரல்..உங்க கவிதைகள் எல்லாம் சூப்பர்..அந்த 'கணக்குகள் தப்பலாம்' சூப்பர் சூப்பர்..தொடர்ந்து வந்து பின்னூட்டம் கொடுங்க..

ஆனந்தி.. said...

சேட்டைக்காரன்..வாங்க தலைவா..வூட்டு பக்கம் வந்ததுக்கு தேங்க்ஸ்ஸு!

ஆனந்தி.. said...

சகோதரர் ராம்ஜி..எந்த ஒரு ஆதங்கமும்,ஆத்திரமும் விவாதிக்க படும்போது குறை,நிறைகள் ஆராய முற்படலாம்..பாசிடிவ் ஆ ஏன் யோசிக்க கூடாது நாம்? சில குறைகள்,விழிப்புணர்வா மாறும்பட்சத்தில் இந்த பதிவுக்கு ஒரு புண்ணியம் தான் இல்லையா? that'z i wanted!!

பரிதி நிலவன் said...

ஒரு திரைப்பட விழாவில் நடிகர் வடிவேலு ‘உயிர்’ படத்தை எடுத்த இயக்குனரை செருப்பால் அடிக்க வேண்டும் என்று மேடையிலேயே சொன்னார், அவர் ஏன் சொன்னது சரிதான் என்று இந்த படத்தில் அந்த இயக்குனர் நிருபித்திருக்கிறார்.

சௌந்தர் said...

ஆனந்தி.. said...
சௌந்தர்,எந்த ஐடியா ப்பா.??.///

"பலான "மலையாள படங்களை எடுத்து இதுக்கான தியேட்டரில் ரிலீஸ் பண்ணி காசு பார்க்கலாமே

இந்த ஐடியா தான் அடுத்து இந்த ஐடியாவை கேட்பார் சாமி

சே.குமார் said...

//பலரின் ஆதங்கத்தையும், ஆத்திரத்தையும் வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள்.//

Repeat Settaikkaran.

மர்மயோகி said...

சினிமா என்பதே ஆபாசக்குப்பைகள்தான்..உங்க ஆதங்கம் நியாயமானதுதான்..
ஆனாலும் நீங்களும் உங்கள் தம்பியுமாய் கடைசியாய் பேசியிருப்பதாக ஒரு துணுக்கை போட்டு இருக்கிறீர்களே..அதுதான் உறுத்தல்...

DEEN_UK said...

அப்பாடா..! எல்லோரும் சுயவிளம்பரத்துக்காக படம் ரிலீஸ் ஆகும் முன்னாலேயே எந்திரனை அடிச்சு துவைச்சு காய போட்டுட்டு இருக்காங்க..! (எந்திரன் படம் பார்த்தால் இந்தியா economic down ஆகிடுமாம்..!! நம்ம குடும்பம் எல்லாம் பிச்சை கார குடும்பமா போயிடுமாம்..!! நிறைய சமூக காவல் (blog) தெய்வங்கள் இப்படி தான் கூவிட்டு இருக்காங்க.! ) ...இவர்கள் மத்தியில் நீங்களாவது ஒரு கருத்துள்ள பதிவு வெளியிட்டுள்ளீர்கள்...வாழ்த்துக்கள்...(இவர்களுக்கு இந்த சிந்து சமவெளி பார்த்தால் இந்தியா வல்லரசாகிடுமோ? அல்லது இந்த மாதிரி படம் மட்டுமே இவர்கள் எதிர் பார்கிறார்களா?)

ஸ்ரீ.... said...

ஆனந்தி,

பெரும்பாலான படங்கள் மறைமுகமாய் ஆபாசம் தருபவை. இந்தப்படம் நேரடியாகத் தருகிறது. உங்களின் இடுகையை வரவேற்கிறேன்.

ஸ்ரீ....

jothi said...

குடும்பத்துடன் பார்க்கும் போது வரும் தர்ம சங்கடங்கள் அந்த வீட்டு பெற்றவர்களுக்குத்தான் தெரியும். அது இனி வரும் காலங்களில் சாமி முடிந்தால் இதே படத்தை குடும்பத்துடன் பார்க்கட்டும், அப்போது நம் வலி தெரியும்,..

இது போன்ற கற்பனையை ஷகிலா படங்களில் கூட பார்க்க முடியாது,..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

கருத்தொற்றுமைக்கு மிக்க நன்றி..!

arunmullai said...

ஒருவேளை அந்த மருமகள் சம்மதிக்கலைன்னா,
சாமி,பத்மபிரியாவைக் கன்னத்தில்
அறைந்ததுபோல் மாமனார் அறைந்
திருப்பாரோ என்னவோ?

Riyas said...

ம்ம்ம் சரியா சொன்னிங்க இபபோ அதிகமா வரும் சினிமாக்கள் ஆபாசத்தை தவிர வேறெதயும் சொல்வதில்லை..


http://riyasdreams.blogspot.com/2010/09/blog-post_18.html

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இது போன்ற படங்கள் ஒன்று இரண்டு போதும் தமிழ் சினிமாவை பாதாளத்தில் தள்ள...

cheena (சீனா) said...

அன்பின் ஆனந்தி

படம் விமர்சிக்கப்பட வேண்டிய ஒன்றுதான், இருப்பினும் ஒரு மறுமொழியில் உள்ள படி இது விளம்பரமாக மாறி அதிக வசூலுக்கு வழை வகுக்கவும் வாய்ப்புண்டு. ம்ம்ம் -

மர்மயோகி கூறிய மறுமொழியும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. தவிர்க்கலாமே அத்தகைய துணுக்குகளை.

நல்வாழ்த்துகள் ஆனந்தி
நட்புடன் சீனா

ஆனந்தி.. said...

@பரிதி நிலவன்
உண்மை பரிதி..ஆனால் உயிர் படத்தில் நடிச்ச பிறகு தான் உயிர் சங்கீதாவுக்கு ஏகப்பட்ட மவுசு...இங்கே எல்லாமே உல்டா.

ஆனந்தி.. said...

@சே.குமார்
உண்மை குமார்...தங்கள் வருகைக்கு நன்றி..தொடர்ந்து பார்த்து பின்னூட்டம் கொடுங்கள்..

ஆனந்தி.. said...

@மர்மயோகி
கட்டுரை ரொம்ப சீரியஸா முடியகூடாதுன்னு விளையாட்டா அப்படி சேர்த்தது மர்மயோகி..தம்பி அப்படி எல்லாம் கேட்கலை..இனி வரும் பதிவுகளில் தவிர்க்கிறேன்...உங்கள் வருகைக்கு நன்றி மர்மயோகி..

ஆனந்தி.. said...

@DEEN_UK
கூல் friend ..நாம உணர்ச்சி வசப்பட தான் முடியும்.பொழுது போக்கில் சினிமா ங்கறது தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது நமக்கு...ஒரு செட் ஆப் மக்கள் ஆபாசம்னு எதை நாம் நினைகிறோமோ அதையும் விரும்பி போயி பார்க்க தான் செய்றாங்க...எது மாஸ் ஹீரோ படமோ..கடன உடன வாங்கி கூட முதல் காட்சி பார்க்க நினைக்கிறாங்க...சமுதாயம் மாறாத வரை..சமூக பிரதிநிதிகள் (??) இப்படி தான் படம் எடுப்பாங்க...நாம எல்லாரும் புறக்கணிக்க முடியுமா?? அது தான் பிரச்சனை...ஓரமா இருந்து பார்த்து உணர்ச்சி வசபட்டுட்டு போகலாம்...நன்றி பாஸ்..வருகைக்கு!!

ஆனந்தி.. said...

@ஸ்ரீ....
நன்றி ஸ்ரீ...தங்கள் வருகைக்கு நன்றி..

ஆனந்தி.. said...

@jothi
உண்மை ஜோதி...உயிர் படம்லாம் என்ன கதைன்னு கேட்காமல் குடும்பத்தோட போய்ட்டோம்...எங்க வீட்டு சுள்ளான் படம் பார்த்து கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடில...வருகைக்கு நன்றி..

ஆனந்தி.. said...

@உண்மைத் தமிழன்(15270788164745573644)
நன்றி..தங்கள் இடுகையும் நேற்று போயி பார்த்தேன்...நிஜமாய் கருத்து ஒற்றுமை.

ஆனந்தி.. said...

@arunmullai
ஹா...ஹா...நல்ல கற்பனை தான்..வருகைக்கு நன்றி..

ஆனந்தி.. said...

@Riyas
உண்மை ரியாஸ்.தங்கள் வருகைக்கு நன்றி..உங்கள் பதிவுகளையும் பார்த்துட்டு பின்னூட்டம் போடுறேன்..

ஆனந்தி.. said...

@ஆர்.கே.சதீஷ்குமார்
சதீஷ்..இதுனால எல்லாம் பாதாளத்துக்கு போகாது ப்பா..இடையில் நல்ல நல்ல படங்கள் வந்து தூக்கி விட்றும். இந்த மாதிரி படங்களை 11 மணி காட்சிகளுக்கு மட்டுமே சென்சார் போர்டு பரிந்துரை செஞ்சுருக்கணும்..

ஆனந்தி.. said...

@cheena (சீனா)
அன்பின் சீனா...நீங்க நேத்து வந்து எல்லா பதிவுகளையும் விடாமல் படிச்சு பின்னோட்டம் போட்டு போனது..ரொம்ப சந்தோசம்..சில ஆரம்ப பதிவுகள் டெஸ்டிங் க்காக போட்டேன்..அப்போ errors எடுக்கும்போது சில பின்னூட்டங்களும் அழிஞ்சுடுச்சு சீனா..தங்கள் வருகை,தங்கள் கருத்துக்கள் எல்லாவற்றிக்கும் மிக்க நன்றி..தொடர்ந்து வாருங்கள்..(ஜெய்லானி கன்வே பண்ணிட்டாரா சீனா அண்ணா?))

Avargal Unmaigal said...

அசிங்கங்களை படம் எடுத்து காண்பித்து பிழைப்பது சில சினிமாக்காரர்களின் வேலை. இது அசிங்கம் என்று சொன்னாள் சமுதாயத்தில் நடப்பதைதான் நாங்கள் எடுக்கிறோம் என்று வியக்கானம் பேசுவார்கள். இது போல படங்களை பார்ப்பதினால் மனித மனம் கெடுமே தவிர நல்லது நடக்காது. கங்கை நதியில் ஒடும் நீரை வீட்டிற்க்குள் பிடித்து வைத்து குடிக்கலாம், குளிக்கலாம், பூஜைக்கும் உபயோகப்படுத்தலாம். ஆனால் கூவம் நதியில் ஒடும் நீரை இது போல பயன் படுத்தமுடியாது. ஆனால் டைரக்டர் சாமி கூவத்தை வீட்டிற்குள் எடுத்து வைத்திருக்கிறார்.இந்த டைரக்டருக்கு ஒரு பையன் இருந்து அவனுக்கு கல்யாணம் ஆகி ஆபிஸ் வேலையாக வேறு மாநிலத்திற்க்கோ அல்லது வெளி நாட்டிற்க்கோ சென்றால் மனைவியயும் கூட அழைத்து செல்ல வேண்டும். இல்லையென்றால் அவன் திரும்பி வந்து கவிதை எழுத தொடங்க வேண்டியதுதான். இந்த சாமி நித்தியாவின் சீடரோ??????

Avargal Unmaigal said...

////////மரத்தோரமா உட்கார்ந்து மொக்கை கவிதையா எழுதுறான்..இந்த கவிதை படிச்சுட்டு,அவன் பொண்டாட்டி தற்கொலை பண்ணிக்கிறாள்/////
எனக்கொரு சந்தேகம் அந்த பையன் அந்த அளவுக்காக கவிதையை மட்டமா எழுதியிருப்பான்? இதுக்குதான் அவன் இந்த மாதிரி மரத்தடியில் உட்கார்ந்து கவிதை எழுதி பழகுறதுக்கு பதிலாக ஒரு ப்ளாக் ஒப்பன் பண்ணி அதில கவிதை எழுதி டிரைப் பண்ணி இருக்கலாம். பாவம் அந்த பெண்.....

சில பேர் ப்ளாக் ஒப்பன் பண்ணி ஏதேதோ எழுதி கவிதைனு பப்ளிஷ் பண்ணி கொல்லாம கொல்லுராங்கப்பா..

ஆனந்தி.. said...

@Avargal Unmaigal

ஆனந்தி.. said...

:)))

chezhiyan said...

வணக்கம்
,தங்கள் வலைப் பதிவு அருமை
என்னுடைய புதிய வலை பதிவு(blog) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்

chezhiyan said...

வணக்கம்
,தங்கள் வலைப் பதிவு அருமை
என்னுடைய புதிய வலை பதிவு(blog) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in