February 18, 2011

சிலநேரம்..சில எரிச்சல்..சில பெண்கள்..:))இந்த பதிவை படிச்சிட்டு பெண்ணுரிமை(?!) கழகங்கள் யாரும் சண்டைக்கு வராமல் இருந்தாலே "யாம் பெற்ற பேறு" :))

(இங்கே "சில பெண்களை" பற்றி மட்டுமே சொல்ல போறேன் ..."சில ஆண்கள்" பற்றி மற்றொரு பதிவில் சொன்னால் போச்சு...:)) )

சில சமயங்களில், சில பெண்களின்,சில செயல்களை பார்த்தால்.. சில எரிச்சல்கள், சில கோவங்கள், சில வருத்தங்கள் உங்களுக்கு  வரலாம்..(ஹேய்...எத்தினி  'சில" ):)


எனக்கும் அப்படி வந்திருக்கு...:(

ஒருநாள்....

(என் தோழியிடமிருந்து போன்...
)

தோழி: ஆனந்தி..பாப்பாக்கு ஸ்கூல்ல ப்ராஜெக்ட் கொடுத்து இருக்காங்க..எனக்கு ஒண்ணும சரியா தெரில..நீ ஹெல்ப் பண்றியா..??

நான்: "சொல்லு என்னனு"...

தோழி: *மதுரை கலெக்டர் பெயர்?
                *இந்தியாவில் சமீபத்தில் பிரித்த புது மாநிலங்கள்...?
                * நம் துணை  ஜனாதிபதி பெயர்?
                * MLA - விரிவாக்கம் ?
                *பட்ஜெட் எதற்கு??

இந்த அரிய(?) கேள்விகளுக்கு பதில் தெரியாத தோழியை நினைத்து ஆச்சர்யபட்டு,அவளின் பாப்பாக்கு பதில் சொல்லி விட்டு தோழியிடம் பொதுஅறிவை வளர்த்து கொள்ளுமாறு அறிவுரை கூறினேன். இடைமறித்த அவள் "அஜீத்துக்கு அதுக்குள்ளே இப்படி நரைச்சிடுச்சேனு" வருத்தப்பட்டாள் :))..சரி..யக்காவ்...நீ சீரியல் பாரு..அதுக்கு தான் நீ சரியான ஆள்..னு சொல்லிட்டு போன் ஐ வச்சுட்டேன்...இத்தனைக்கும் தோழி B.com. & P.G.D.C.A  படித்தவள் ..

ம்ம்..என்னவோ நம்மில் பலருக்கு சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களில் காட்டும் ஆர்வம் மற்ற பொது விஷயங்களை தெரிஞ்சுப்பதில் ஆர்வம் கம்மியாய்டுது தான் இல்லையா??


இன்னொரு எரிச்சல்...

ஒரு நடுத்தர வயது அம்மா பாதி நாள் கோவில் சர்வீஸ்(??!!) பண்றதிலே தான் கழிப்பாங்க...இல்லாட்டி அந்த அம்மா கோவிலில் "ஒரு கும்பல் ஆப் பெண்களிடம் "பொறணி ஸ்பீகிங் இல் இருப்பாங்க...


அன்னைக்கு பிரதோஷம்...அதிசியமாய் நானும் கோவிலுக்கு ஆஜர்..ஒரு 7 அல்லது 8 வயசு பாப்பா முடியை விரிச்சு போட்டுட்டு(நீண்ட முடி) ரிப்பன்,சீப்பு எல்லாம் கையில் வச்சுட்டு அந்த அம்மாவை இப்படி கெஞ்சிட்டு இருந்தது.."அம்மா ஸ்கூல் ல இருந்து அப்பவே வந்துட்டேன்...காப்பி போட்டு தாம்மா..ப்ளீஸ்..டியூஷன் போவனும் மா..நேரம் ஆகுதும்மா...ப்ளீஸ் தலையாவது பின்னி விடும்மா...வீட்டுக்கு வந்துட்டு போம்மா..ப்ளீஸ் ம்மா..." அந்த அம்மா என்னவோ திட்டி அந்த குட்டியை விரட்டி விட்ருச்சு...

விரட்டி விட்ட பிறகு அந்த அம்மா கூட இருந்த பொறணீஸ் கும்பல்ஸ் கிட்டே சொல்றாங்க இப்படி "நமக்குன்னு ஒரு சுதந்திரம் இல்லை...ஒரு கோவில்ல கூட நிம்மதியா சாமி கும்பிட (?) முடியல..எப்ப பார்த்தாலும் புள்ள..புருஷன்னு பாக்க வேண்டிருக்கு..ஆணாதிக்க உலகம்..."ன்னு இன்னும் என்ன என்னவோ சொல்லுச்சு...


என்னவோ அந்த அம்மா குறிப்பிட்ட "அந்த ஆதங்கம்" என்னாலே ஏத்துக்க முடியலே..உரிமை வேற...கடமை வேற.....அந்த அம்மா ரெண்டுக்கும் கொழப்புதுன்னு மட்டும் தோணிச்சு...


கடைசி எரிச்சல் ...

சில வீடுகளில் வயசான கணவனை/மனைவியை தனியா விட்டுட்டு பக்தி,விரதம் அப்டிங்கிற பெயரால் கோவில் குளம் டேரா அடிக்கும் பெண்கள்/ஆண்கள் மேலே எப்பவும் எனக்கு வருத்தம் உண்டு...

எங்கள் வீட்டுக்கருகில் இப்படி சஷ்டி விரதத்துக்காக அந்த ஆன்ட்டி திருசெந்தூர் போயி மித மிஞ்சிய பக்தியில் அங்கேயே இருந்து விட, தனியாய் இருந்த அவங்க வயதான கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு எங்கள் ஏரியா வாசிகள் மருத்துவமனையில் சேர்ப்பித்தாங்க..


விரதம் எல்லாம் முடிஞ்சு நிதானமா வந்த அந்த அம்மா கிட்டே விஷயத்தை நாங்கள் பதட்டமாய் சொல்ல..கொஞ்சமும் சலனப்படாமல் அந்த அம்மா இப்படி சொன்னாங்க.." நான் எங்கே போனாலும்,எம்பெருமான் முருகன் பார்த்துகிட்டான் தானே ...." என்னவோ இதை கேட்டு..பக்தியை மீறி எரிச்சல் தான் வந்தது எனக்கு..

ம்ம்..சில நேரங்களில் ...சில எரிச்சல்கள் ...அதில் சில பெண்களும்...!!!!! 

77 comments:

தமிழ்வாசி - Prakash said...

மொத ஆளா வந்தோம்ல! எப்புடி?

எல் கே said...

திருத்த முடியாத ஜென்மங்கள்

தமிழ்வாசி - Prakash said...

பதிவு மிக அருமை. இந்த நல்ல விசயங்களுக்காகவா பெண்ணுரிமை(?!) கழகங்கள் சண்டைக்கு வரப் போகுது?

Robin said...

நல்ல பதிவு!

கே. ஆர்.விஜயன் said...

இதெல்லாம்(பெண்கள்) அரசியலில் ரொம்ப சாதாரணமப்பா. இந்த பதிவ படிச்சதுல ஒன்னு மட்டும் புரியுது. அந்த பொண்ணுங்கமாதிரில்லாம் இல்ல நீங்க ரொம்ப நல்லவங்க போல.

மாணவன் said...

//"சிலநேரம்..சில எரிச்சல்..சில பெண்கள்..:))"//

நீங்களே சொல்லீட்டீங்க....வேற என்னத்த சொல்ல... :))

செந்தில் குமார் said...

// ஆனந்தி.. said...
congrats senthil..... //

நன்றி தோழி , இன்று முதல் நானும் உங்கள் பின் தொடர்பவன்

மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் said...

Hi sister: how are you? i read this post but couldn't write in tamil. so i come later.comedy pathivu podavum....

ஜீ... said...

விடுங்கக்கா! இவிய்ங்களைத் திருத்தவே முடியாது! எல்லாரும் உங்கள மாதிரி இருந்தா அப்புறம் உங்களுக்கு என்ன மருவாதை?

ஆமா.. அஜீத்துக்கு.....வேணாம்!! :-)

ஆனந்தி.. said...

@ஜீ...

ஓய்..நீ இப்ப என்ன தான் சொல்ல வர...எனி உள்குத்து..:))))))

ஜீ... said...

உள்குத்தா? சேச்சே! நான் உண்மையத்தான் சொன்னேன்! நானும் இப்பிடி நிறைய பக்திமாட்டிகளை(?!) (பக்திமானின் எதிர்ப்பால்?) பார்த்திருக்கிறேன்!

செங்கோவி said...

1. //மதுரை கலெக்டர் பெயர்? *இந்தியாவில் சமீபத்தில் பிரித்த புது மாநிலங்கள்...?* நம் துணை ஜனாதிபதி பெயர்?* MLA - விரிவாக்கம் ?
*பட்ஜெட் எதற்கு??// இதுக்கெல்லாம் பதில் தெரியலைன்னா, எங்கள மாதிரி கம்னு இருக்காம..

2.கோயில்ல பொறணி பேசுரதே தப்பு..அதுல பிள்ளையையும் கவனிக்கலேன்னா, பொடதியிலயே ரெண்டு போடுங்கக்கா!

3. வீட்டுக்காரரை விட்டுட்டு கோயிலுக்குப் போனது தப்பாக்கா?..கடைக்குப் போயிருக்கும்போது/பக்கத்து வீட்ல பேசிக்கிட்டிருக்கும்போது மாரடைப்பு வந்திருந்தா..ஆக்ஸிடெண்ட்/மாரடைப்பெல்லாம் எதிர்பார்க்கமுடியுமாக்கா..ஆனா,சொன்ன பதில்தான் தப்பு!

Chitra said...

ஜீ... said... 9

விடுங்கக்கா! இவிய்ங்களைத் திருத்தவே முடியாது! எல்லாரும் உங்கள மாதிரி இருந்தா அப்புறம் உங்களுக்கு என்ன மருவாதை?


.....பெண்கள் குல மாணிக்கம், ஆனந்தி வாழ்க!!!!

தமிழ் உதயம் said...

பொது அறிவை வளர்த்தல், வேறு சில ஆரோக்கியமான தேடல்கள் என்று புத்தி செல்ல ஆரம்பித்து விட்டால்- சினிமா, சீரியல் போன்ற விஷயத்தை மனம் விரும்பாது. நல்ல பதிவு.

# கவிதை வீதி # சௌந்தர் said...

பதிவு அருமை வாழ்த்துக்கள்..

ஆனந்தி.. said...

@செங்கோவி

//3. வீட்டுக்காரரை விட்டுட்டு கோயிலுக்குப் போனது தப்பாக்கா?..கடைக்குப் போயிருக்கும்போது/பக்கத்து வீட்ல பேசிக்கிட்டிருக்கும்போது மாரடைப்பு வந்திருந்தா..ஆக்ஸிடெண்ட்/மாரடை
ப்பெல்லாம் எதிர்பார்க்கமுடியுமாக்கா..ஆனா,சொன்ன பதில்தான் தப்பு!//

இல்ல..செங்கோவி..பக்கத்தில் எங்கேயாவது போனால் அது ஒண்ணும நாம பண்ண முடியாது..ஆனால் அந்த அங்கிள் கொஞ்சம் முடியாத ஆளு தான்...இந்த ஆன்ட்டி அடிக்கடி விரதம் னு ஏதாவது ஊரில் டேரா அடிச்சுட்டு தான் வருவாங்க...அவர் பாவம் ஹோட்டல் இல் வாங்கி சாப்டுட்டு இருப்பாரு...அன்னைக்கு அவருக்கு மாரடைப்பு வந்தது கூட எதிர்பாராமல் எங்கள் தெருவாசி அவங்க வீட்டுக்கு போனதினாலே அவரை ஹாஸ்பிடல் இல் சேர்க்க முடிஞ்சது.....வயதானவங்க பக்கத்தில் துணை தேவை செங்கோவி...விபத்து...எதிர்பாராததை நான் சேர்க்கவே இல்லை..ஆனால் இப்படி பொறுப்பில்லாமல் போகும் பக்திகளை நான் விரும்பவதில்லை...சரியாங்க தம்பி...:)))

தம்பி கூர்மதியன் said...

// "அஜீத்துக்கு அதுக்குள்ளே இப்படி நரைச்சிடுச்சேனு" வருத்தப்பட்டாள் :))..சரி..யக்காவ்...நீ சீரியல் பாரு..அதுக்கு தான் நீ சரியான ஆள்..//

மன்னிக்கவும்.. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.. அவர் அஜீத்தை பத்தி பேசுகையில் நீங்கள் சீரியலை போய் பாருன்னு சொல்றது அஜீத் சீரியல் நடிகர்னு சொல்றதுபோல் இருக்கு.. அஜீத் ரசிகர் மன்றங்கள் கவனிக்கவும்..

முழுசா பணிச்சிட்டு இன்னும் குறை சொல்றன்..

ஆனந்தி.. said...

@ஜீ...
//இவிய்ங்களைத் திருத்தவே முடியாது//

அட எங்க ஊரு diction ...madurai always rocks...:)))

ஆனந்தி.. said...

@தம்பி கூர்மதியன்

//மன்னிக்கவும்.. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.. அவர் அஜீத்தை பத்தி பேசுகையில் நீங்கள் சீரியலை போய் பாருன்னு சொல்றது அஜீத் சீரியல் நடிகர்னு சொல்றதுபோல் இருக்கு.. அஜீத் ரசிகர் மன்றங்கள் கவனிக்கவும்..//

ஐயையோ...இது வேற பொல்லாப்பா...விட்டா ஆட்டோ அனுப்பிருவிங்க போலே கூர்மதி..எதுக்கும் கோஷம் போட்டு வைக்கிறேன்.."தல...வாழ்க..." :)))

ஆனந்தி.. said...

@மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன்

ஹாய்..ராஜீவ் சூப்பர் ஆ இருக்கேன்...நீங்க எப்படி இருக்கீங்க? பையன் கிட்டே உங்கள் போட்டோ காமிச்சேன்...பயப்படாமல் தான் பார்த்தான்..ஸோ...கூல்...:)) புது காமடி ப்லாக் கில் நமக்கு மேலே பெரிய தலைகள் எல்லாம் இருக்காங்க..உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பாஸ் ம் இருக்காங்க..அவங்களாம் ஆரம்பிக்கட்டும்..அப்புறம் நாமளும் அவங்க வழியில் அங்கே காமடி பதிவு போடலாம்...அது மொக்கையா இருந்தாலும் சிரிக்கணும்..ஆமாம்..சொல்லி புட்டேன்..(நாங்கலாம் சிரிக்கிரோம்ல உங்க பதிவை பார்த்துட்டு..:)) ) நன்றி சகோதரா...:))

தம்பி கூர்மதியன் said...

கரண்ட் போய்ட்டு வந்துச்சு அதான் லேட்.!!

தலைப்பு சூப்பர்.. படம் அருமை.. படத்தை விளக்கமுடியுமா.???

//அதிசியமாய் நானும் கோவிலுக்கு ஆஜர்..//
//பக்தி,விரதம் அப்டிங்கிற பெயரால் கோவில் குளம் டேரா அடிக்கும் பெண்கள்/ஆண்கள் மேலே எப்பவும் எனக்கு வருத்தம் உண்டு...//
//பக்தியை மீறி எரிச்சல் தான் வந்தது எனக்கு.. //

இந்த வரிகள் போதும் ஆனந்தி ஒரு நாத்திகவாதி என்று சொல்ல.. இதனால் ஆன்மீகர்கள் இனிமே இந்த ப்ளாக் பக்கம் வரவே மாட்டேன்னு முடிவெடுக்க வேண்டாம்..

//உரிமை வேற...கடமை வேற.....//

ஆனந்தி இந்த வரியில் விஜயகாந்த் லெஃப்டுக்கா போயிட்டார், ரஜினி ரைட்டுகா போயிட்டார்.. நீங்க மட்டும் சென்ட்டர்கா மூவ் பண்றீங்க..

// கொஞ்சமும் சலனப்படாமல் அந்த அம்மா //

ரொம்ப டெரர் கேரக்ட்டரா இருப்பாங்களோ.!! ஒருவேளை எந்த சூழ்நிலையிலும் தைரியமாக இருக்கவேண்டும் என அவர் எண்ணியிருக்கலாம்.. அதற்காக உந்துகோலாக அல்லது பிடிமானமாக முருகன்(கடவுளாம்) அவரை நினைத்திருக்கலாம்.. இதை அவர் கணவரே கூட சொல்லியிருக்கலாம்.. ஒருவேளை எனக்கு என்ன ஆனாலும் நீ மனம் நோவக்கூடாதுன்னு அவர் கணவரே சொல்லியிருக்கலாம்..

இதற்காக ஒரு கொள்கையோடு இருப்பவர் யாரும் ஆனந்தியின் ப்ளாக்கை புறக்கணிக்க வேண்டாம் என அன்போடு கேட்டுகொள்கிறேன்..

யப்பா..!!! இன்னைய வேலை முடிஞ்சுது..

ஆனந்தி.. said...

@தம்பி கூர்மதியன்

ஹ ஹ..பத்த வச்சிட்டியே பரட்ட....

சி.கருணாகரசு said...

இந்த மூன்று ஆட்களையும் தூக்கி ஒன்றுமே இல்லாத தனித்தீவுல போடணும்...

செங்கோவி said...

@ஆனந்தி..: ஓ, ஏற்கனவே முடியாதவரா..நான் திடீர்னு மாரடைப்பு வந்துச்சோன்னு நினைச்சு பொங்கிட்டேன்!!...சாரிக்கா..சரிக்கா!

சௌந்தர் said...

முதல் அஜித் கிட்ட சொல்லி டை அடிக்க சொல்லணும்...!!!!

சௌந்தர் said...

ஐயையோ...இது வேற பொல்லாப்பா...விட்டா ஆட்டோ அனுப்பிருவிங்க போலே கூர்மதி..எதுக்கும் கோஷம் போட்டு வைக்கிறேன்.."தல...வாழ்க..." :)))////

அது..... எங்க அஜித்தை ஏதாவது சொன்னா சும்மா விடுவோமா...என்ன...விடுங்க அக்கா ஏதோ தெரியாம சொல்லிட்டாங்க

இரவு வானம் said...

மேடம் மதுரை கலக்டரு பேரு எனக்கும் தெரியாது :-((( கொஞ்சம் சொல்லுங்களேன்...

நிகழ்காலத்தில்... said...

உரிமை வேறு கடமை வேறுதான்..

நல்ல சிந்தனைகள். படிப்பவர்களை சிந்திக்க வைக்கும் கருத்துகள்

வாழ்த்துகள் சகோ.

வைகை said...

இதை ஒரு ஆண் எழுதினால் ஆணாதிக்கவாதி என்பார்கள்! நீங்க எழுதியதால் சும்மாயிருக்க மாட்டார்கள்.... ஒரு ஆண் பதிவர் பெண்ணின் பெயரில் எழுதுகிறார் என்பார்கள்! ஏனென்றால் நீங்கள் ஏற்க்கனவே எழுதிய பதிவும் அப்படி! ( ஆண்களே இது உங்களுக்காக) நாங்கவேனா சொல்லிக்கிறோம்..எங்களுக்காக எழுதவும் ஆள் இருக்குன்னு! :))))

ஆனந்தி.. said...

@இரவு வானம்

Mr.Kamaraj :)

ஆனந்தி.. said...

@வைகை

அட வைகை:) ..மத்தவங்க சும்மா இருந்தாலும் கொளுத்த வச்சுட்டு போற மாதிரியே இருக்கே...அப்டி எதாவது கேட்டால் "மல்டிபிள் பெர்சனாலிட்டி" அப்டி இப்டின்னு எதாவது சொல்ல யோசிக்கணும் போலே...:)))))

ஆனந்தி.. said...

@தம்பி கூர்மதியன்

///தலைப்பு சூப்பர்.. படம் அருமை.. படத்தை விளக்கமுடியுமா.???//

நன்றி கூர்!! படமா...அதாவது அந்த குட்டி பாப்பா கொஞ்சம் எரிச்சலோட இருக்காம்...அதான் யாரையும் பார்க்க பிடிக்கலையாம்...:))) (எப்புடி...??) :)

அப்பாவி தங்கமணி said...

//ஹேய்...எத்தினி 'சில//
அதானே... ஒருவேள இந்த போஸ்ட்ல எத்தனை "சில" னு சொல்றவங்களுக்கு பரிசு இருக்கோ...:))

//இடைமறித்த அவள் "அஜீத்துக்கு அதுக்குள்ளே இப்படி நரைச்சிடுச்சேனு" வருத்தப்பட்டாள் :)//
ஜூப்பர்...

//நம்மில் பலருக்கு சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களில் காட்டும் ஆர்வம் மற்ற பொது விஷயங்களை தெரிஞ்சுப்பதில் ஆர்வம் கம்மியாய்டுது தான் இல்லையா?? //
ரெம்ப சரி ஆனந்தி...

அப்பாவி தங்கமணி said...

//நமக்குன்னு ஒரு சுதந்திரம் இல்லை...ஒரு கோவில்ல கூட நிம்மதியா சாமி கும்பிட (?) முடியல..எப்ப பார்த்தாலும் புள்ள..புருஷன்னு பாக்க வேண்டிருக்கு..ஆணாதிக்க உலகம்..."//
அடக்கொடுமையே...இதான் ஆணாதிக்கமா....யாரும் என்கிட்ட சொல்லவே இல்ல... ஜோக்ஸ் அபார்ட்... அநியாயம் அந்த லேடி பேசறது... பொறுப்புன்னு ஒண்ணு இல்லையா என்ன? அதை ஏன் சுதந்திரம்னு அசிங்கபடுத்தறாங்க... ச்சே...

//என்னவோ இதை கேட்டு..பக்தியை மீறி எரிச்சல் தான் வந்தது எனக்கு.. //
குடும்பம் ஒரு கோவில் தான் என் கொள்கை...அதுக்கு அப்புறம் தான் கோவில் குளம் எல்லாம்... அவசியமான பதிவு ஆனந்தி...ரெம்ப நல்லா சொல்லி இருக்கீங்க... :)

அந்நியன் 2 said...

நீங்கள் சொல்ல வந்ததை தெளிவா சொல்லிவிட்டிர்கள்,நாங்கள் படிக்க வேண்டியதை தெளிவா படித்து விட்டோம் இதுக்கு மேலே என்ன வேணும் எங்களுக்கு ?

சாரி......சாரி பெண்களுக்கு.

பொது அறிவு இல்லாத உங்கள் தோழியை மன்னித்து விடலாம்,தன் பிள்ளைக்கு தலை வாற மறுத்த அந்த அம்மணியையும் மன்னித்து விடலாம்.

ஆனால் தள்ளாத வயதிலேயும் தன் கணவரை தத்தளிக்க வைத்து விட்டு என்னக்கென்னவென்று சாமி தரிசனம் செய்யப் போன அந்த பெண்மணியை மன்னிக்கவே முடியாது.

வாழ்த்துக்கள் மேடம்.

தொடர்ந்து எழுதுங்கள் அடுத்து "குறி" வைத்தது எங்களைத்தான் என்று வேறே சொல்லி விட்டிர்கள் கலக்குங்கள்.

தம்பி கூர்மதியன் said...

///தலைப்பு சூப்பர்.. படம் அருமை.. படத்தை விளக்கமுடியுமா.???//

நன்றி கூர்!! படமா...அதாவது அந்த குட்டி பாப்பா கொஞ்சம் எரிச்சலோட இருக்காம்...அதான் யாரையும் பார்க்க பிடிக்கலையாம்...:))) (எப்புடி...??) :)//

உலகம் என்னும் பாத்திரத்தில் பூக்களாய் இருந்த பெண்களில் சிலர் அந்த பூக்குறிய மென்மையிலிருந்து மாறுபடுவதால் அதை கண்டறிந்த குழந்தை என்னும் உயர்சக்தி பாத்திரத்தில்(உலகம்) தலைவிட்டு மென்மையிலிருந்து மாறுபட்ட பூக்களை(பெண்களை) தூக்கி வெளியெறிகிறது.. இதெப்படி.!!!

ஆனந்தி.. said...

@தம்பி கூர்மதியன்

சூப்பர் கூர்!! இதுக்கு மேலே இந்த படத்தை பிரமாதமாய் கவித்துவமாய் சொல்லி விடவே முடியாது...மிக்க நன்றி...

தம்பி கூர்மதியன் said...

//@தம்பி கூர்மதியன்

சூப்பர் கூர்!! இதுக்கு மேலே இந்த படத்தை பிரமாதமாய் கவித்துவமாய் சொல்லி விடவே முடியாது...மிக்க நன்றி...//

:):):)

கணேஷ் said...

சில எரிச்சலை எரிச்சல் பட்டு எரிச்சல் படாமல் படிக்குமாறு சொல்லியிருப்பது சொன்ன எரிச்சலை எளிதாக புரிந்து கொள்ள முடிந்ததுக்கா..)))

ஆனாலும் கவிதை போச்சே..)))

MANO நாஞ்சில் மனோ said...

சரி சரி உங்க கோபம் புரியுது மக்கா....
நம்ம பயபுள்ளங்க அப்பிடிதான். அதிலும் அஜித் தலை முடி நரைச்சத்தை பற்றி கவலை படுபவர்களை என்னத்தை சொல்ல..... அவர் டோப்பா விக்கு'ன்னாவது தெரியுமா....

ஆனந்தி.. said...

@கணேஷ்

படிச்சுட்டேன் உன் கம்மென்ட் ஐ..ஜோடா ப்ளீஸ்...:))

ஆயிஷா said...

//சிலநேரம்..சில எரிச்சல்..சில பெண்கள்.//

உண்மைதாங்க

நிரூபன் said...

உங்களின் நியாயமான கோபங்களை ரசித்தேன். திருந்தாத ஜென்மங்கள், எப்போது தான் இவர்களுக்குப் புத்தி வருமோ?

அமைதிச்சாரல் said...

இப்படித்தான் நெறையப்பேரு குழப்பிக்கிறாங்க ..

மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் said...

நான் எப்பவும் ஒரு விஷயத்தை கவனித்துக்கொண்டு வருகிறேன் நீங்கள் ஒரு விஷயம் எழுதும் பொது, ஒரே மாதிரி நடக்கும் பலவிஷயங்களை சிறுக சிறுக சேகரித்து தான் எழுதுகிறீர்கள்! ஒரு விஷயத்துக்கு நாலு வெவ்வேறு உதாரணங்கள் கொடுப்பது உங்க ஸ்டைல் சிஸ்டர்! இது உங்களது தீவிர தேடலைக் காட்டுகிறது! இப்படித்தான் இருக்கோணும்! வாழ்த்துக்கள் சிஸ்டர்!

vanathy said...

I have met women like these. Very selfish ladies. I do not know what else to say.

ஷர்புதீன் said...

:)
entry

ஜெய்லானி said...

//இத்தனைக்கும் தோழி B.com. & P.G.D.C.A படித்தவள் ..//

பாவம் , வீட்டில சமையலாவது ஒழுங்கா செஞ்சி தராங்களா இல்லையா..? அதாவது தெரியுமா..!! :-))

ஜெய்லானி said...

//என்னவோ அந்த அம்மா குறிப்பிட்ட "அந்த ஆதங்கம்" என்னாலே ஏத்துக்க முடியலே..உரிமை வேற...கடமை வேற.....அந்த அம்மா ரெண்டுக்கும் கொழப்புதுன்னு மட்டும் தோணிச்சு..//


ஆணாதிக்கம் , பெண்ணாதிகக்ம் பேசுற பலர் எதுன்னு தெரியாம இப்படிதான் குழம்பிக்குறாங்க சரியா சொன்னீங்க .!!

Jana said...

ம்ம்ம்ம்..(பெரிய மெருமூச்சு!!!)

ஜோதிஜி said...

நடுத்தர குடும்ப வாழ்க்கை பெண்கள் ஆண்கள் மட்டுமல்ல. இன்றைய சமூகத்தில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். காரணத்தை கேட்டால் இதையெல்லாம் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகின்றது என்று நழுவி போய்க் கொண்டே இருப்பார்கள். இது போன்ற நபர்கள் கேட்கும் உதவியை கட்டாயமாக மறுக்கவேண்டும். அப்பொழுதாவது திருந்துவார்கள் என்றா நினைக்கீறீங்க?

FOOD said...

நல்ல அலசல். சம்பந்தப்பட்டவர்களிடம் நேரிடையாக எடுத்து சொல்லியிருந்தால் இன்னும் நலமா இருக்குமே!

நா.மணிவண்ணன் said...

ஓகே ஓகே , பெண்களுக்கு பெண்களே எதிரிங்கிறது கரெக்ட்டாத்தான் இருக்கு ஹி ஹி ஹி

ஜெரி ஈசானந்தன். said...

என்னவோ..போங்க..[பல நேரம்...பல எரிச்சலா இருக்கு.]

ஹேமா said...

ஆனந்தி...இதில என்ன சண்டை போட இருக்கு.பெண்களிடம் உள்ள சில இயல்பான குணங்கள் பெண்கள் பெண்களிடமே எரிச்சல்பட வைக்கிற மாதிரித்தானே இருக்கு.சின்னத்திரை நாடகங்கள் எல்லாம் என்ன சொல்லுது...பொண்ணுங்களோட பொண்ணுங்களே அடிச்சுக்கிட்டு சாவுறாங்கன்னு.உண்மையும்தானே !

angelin said...

very nice.good post.

jothi said...

நானும் சின்ன வயதில் இருந்து கவனித்திருக்கிறேன்,.. இந்த பொறனியில் அப்படி என்னதான் இருக்கிறது என தெரியவில்லை,.. சாதாரணமானவர்களிடம் இருந்து பணகாரார்கள் வரை இது நீக்கமர நிறைந்து இருக்கிறது,..
நல்ல பதிவு anandi ,..

ஆயிரத்தில் ஒருவன் said...

சேம் சைடு கோல் போடுறதுக்கு ஒரு தில்லு வேனும் அது உங்களுக்கு நிறையாவே இருக்குன்னு நினைக்கிறேன்

நாஞ்சில் பிரதாப்™ said...

hehe.டெப்ளேட் கமண்ட் போடத்தான் வந்தேன்...நம்மள சார்னு சொல்லிட்டீங்க... ஏதாச்சும் எழுதியே ஆகனுமே...ம்ம்ம்..ஆங்

பெண்கள் குல திகலம், பெண்கள் குல மாணிக்கம், ஆனந்தி வாழ்க...:))

நாஞ்சில் பிரதாப்™ said...

டென்ஷனாவாதீங்க இந்த பெண்களுக்கெல்லாம் கடைசில கபீம் குபாம் தானாம்....:))

FARHAN said...

ஒரு பெண்ணாக இருந்து பெண்களின் தப்புக்களை சுட்டி கட்டியதற்கு ஆனந்தி அக்காவுக்கு ஒரு சல்யூட் ....

பார்வையாளன் said...

நடுனிலை பார்வை

Riyas said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Ramani said...

நன்றி ஆனந்தி
மதுரை மக்காஸில் இணத்தமைக்காகவும்
என்னுடைய வலைப்பின்னலில் இணந்தமைக்காகவும்....
தொடர்ந்து சந்திப்போம் வாழ்த்துக்களுடன்

சிவகுமாரன் said...

உங்க நெற்றிக்கண்ணை ஆண்கள் பக்கம் எப்ப திருப்ப போறீங்களோன்னு பயமா இருக்கு.

சிவகுமாரன் said...

ரொம்ப நன்றிங்க. மதுரை மக்காஸ் லிஸ்ட்ல இணைச்சதுக்கு. (ஆனாலும் நான் மதுரைக்கு புதுசு, மண்ணின் மைந்தர்கள் யாரும் சண்டைக்கு வரப் போறாங்க. நாங்களும் மதுரைக்காரன் தாங்கோ)

Gopi Ramamoorthy said...

நல்ல பதிவுங்க.

இது வரைக்கும் யாரும் சண்டைக்கு வரலையே:-)

ம.தி.சுதா said...

ஃஃஃஃஇன்னொரு எரிச்சல்..ஃஃஃஃஃ

ஆமால்ல எரிச்சல் தானே....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)

பிரபு எம் said...

நியாய‌மான‌ எரிச்ச‌ல்க‌ள் அக்கா....
என்ன‌ ப‌ண்ணுற‌து ஒவ்வொருத்த‌ரும் ஒவ்வொரு அலைவ‌ரிசையில் ந‌க‌ருறாங்க‌...
அவ‌ங்க‌வ‌ங்க‌ளுக்கு ஆசுவாச‌ம் கிடைக்கிற‌ விஷ‌ய‌ங்க‌ளை எதுக்காக‌வும் விட்டுக்கொடுக்காத‌ ஜென்ம‌ங்க‌ள்!
ப‌க்தியும் ஒரு போதை தானே இதுபோன்ற‌ வ‌ஸ்துக்க‌ளுக்கு!! :-(

போளூர் தயாநிதி said...

ஆரோக்கியமான தேடல்கள் என்று புத்தி செல்ல ஆரம்பித்து விட்டால்- சினிமா, சீரியல் போன்ற விஷயத்தை மனம் விரும்பாது. நல்ல பதிவு.

தோழி பிரஷா said...

உண்மைதானக்கா.. சில பெண்கள் அல்ல பலபெண்கள் அப்படி தான்...!அக்கா

மனம் திறந்து... (மதி) said...

கோவில் யானை, உத்சவர் மற்றும் பைரவர் பற்றி நன்றாக விளக்கம் தந்திருக்கிறீர்கள்! நாம் எங்கே போகிறோம்?
If you don't know where you are going, any road will take you there! This is precisely what was demonstrated by these three ladies!

சமுத்ரா said...

//எம்பெருமான் முருகன் பார்த்துகிட்டான் தானே//

இது உண்மை தான்:)

Madurai pandi said...

பொண்ணுங்களா !! ஏனம்மா இப்பிடி இருக்கேங்க? சில பொண்ணுக, வீட்ல சீரியல் பார்க்குறப்ப, சோறு கூட போட மாட்டுராங்கனு கேள்வி பட்டேன்..
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

Sathish Kumar said...

இதுல சோகமான விஷயம் என்னன்னா, இந்த மாதிரியான எரிச்சல் மனிதர்கள் எண்ணிக்கை அதிகரிச்சுகிட்டே போறது தான்.,..!

R. JAYARAMAN said...

itharkellam ttheirv liberty men associationthan start immediately

Sweety said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in