October 30, 2010

சில தேவதூதர்களும்..தெருவோர குப்பைகளும்..தீபாவளி வரபோகுது..என்ன நீங்க  எல்லாருக்கும் தீபாவளி இனாம் கொடுத்தாச்சா? தலைய சொரிஞ்சுட்டு நிக்கும் கீழ் மட்ட பிரதிநிதி முதல் மேல்மட்ட பிரதிநிதி வரை காசு கொடுத்து முடிச்சாச்சா? :))))

(போஸ்ட் மேன் க்கு 100 ரூபா கொடுத்தேன்..ஹீ..ஹீ..இனாம் இல்லையா? னு திருப்பி கேக்குறார்..அட கொடுமையே...இது என்ன பொரி சாப்பிடவா? இது தான் பா இனாம் னு சொன்னால்..இது பிசுகோத்து காசு...பிஜிலி வெடி வாங்க கூட பத்தாதுன்னு பேச்சு வேற...)

(அரசாங்க ஊழியர்களுக்கு எல்லாம் நம்ம முதல்வர் இலவச வெடி தரமாட்டாரா..??:))) )


(ஹீ..ஹீ..மே மாசம்  நம்ம மக்கள் வோட்டு டப்பாசு  "அவிய்ங்களுக்கு" நிறைய கொடுக்கபோறாங்களே...:))  )

ஒரு வாரமா இனாம் கொடுத்து நொந்து போயிருந்த நேரத்தில்,நேத்து ரெண்டு பேரு வந்தாங்க...அவங்க மாற்று திறனாளிகள்(ரெண்டுபேருக்குமே கண் பார்வை இல்லை)..கையில் ஊதுபத்தி,ப்ளீசிங் பவுடர் ருடன் என்னை கூப்பிட்டாங்க...அவங்களை பார்த்து கஷ்டம் ஆகி..."அண்ணன்..பொருளாய் எதுவும் உங்க கிட்டே நான் வாங்கலை..இந்த பணம் மட்டும் வச்சு கோங்கன்னு சொன்னேன் "...அவங்க அடுத்து சொன்னது தான் என் கன்னத்தில் அடிச்ச மாதிரி இருந்தது...

 

"ம்மா...நாங்க பார்வை இல்லாதவங்க தான்..ஆனால் பிச்சை எடுக்க வரலை...இதெல்லாம் நாங்க தயாரிச்சது...முடிஞ்சால் இதை வாங்கிட்டு இதுக்கு உரிய பணத்தை கொடுங்க...இல்லாட்டி உங்க இலவச பணம் எதுவும் வேண்டாம்..."

கொஞ்சம் வெல வெலத்துட்டேன்...மாற்று திறனாளியாக அந்த மனிதர்கள் இருந்தாலும்...அவர்கள் செயல்,பேச்சில் தெரிந்த சுயமரியாதை ரொம்பவே பிடிச்சு இருந்தது...

(அதற்கு  முதல் நாள் மண்ட சொரிஞ்சுட்டு அசட்டு சிரிப்பில் இனாம் வாங்கி போன சில 'மனிதருள் மாணிக்கங்களும்" நினைவுக்கு வந்துட்டு போனாங்க...)


சில ஆதங்கங்களும் எனக்கு இருக்கு...


 

பழனி மலைக்கு மேலே ஏறும்போது வழி எங்கும் மொய்க்கும் மாற்று திறனாளிகள் போர்வையில் சுத்தும் போலி மனிதர்களை கண்டு ஆத்திரம் பயங்கரமாய் வரும்...(எல்லாமே டூப்பு...செயற்கையாய் எதையாவது மாட்டி..ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கும் ரேஞ் இல் இருக்கும் அவர்கள் நடிப்பு ரொம்பவே சூப்பர்...)

(அப்போ தமிழ்நாட்டில் ஏகப்பட்ட "உலகநாயகர்கள்" சுத்திட்டு  இருக்காங்க போலே)


 


சமீபத்தில் திருச்சி வயலூர் போயிருந்தோம்..அங்கேயே அன்னதானமும் எங்கள் குடும்பத்தார் செஞ்சாங்க...கொடுத்த உணவுகளுக்கு பெருசாய் மதிப்பில்லை..எல்லாம் சிதறி கிடந்தன..கேட்டால் கோவிலையே அன்னதானம் செய்றாங்களே னு ஒரு நக்கல் பேச்சு வேற...நல்லது தான்..அங்கே சாப்பிட காத்திருந்தவங்களில் பலரை பார்த்தால் ஏகப்பட்ட எரிச்சல்...பீடி அடிச்சுட்டு...வெட்டியா பேசிட்டு சாப்பாடு நேரத்துக்கு ஆஜர்...சில நேரங்களில் இந்த நலத்திட்டங்களில் மேலே ஒரு மதிப்பே இல்லாமல் கூட போயிருது...

(அஞ்சா நெஞ்சன் அண்ணாகிட்டே சொன்னால் இவங்களுக்கு ஹார்லிக்ஸ் அனுப்புவாங்களோ:))  )


 


என்னுடன் வந்த பேராசிரியை சொன்னாங்க...உழைச்சு சாப்பிடும் அருமை நிறைய பேருக்கு தெரியாமல் போக போகுது...சாப்பாடு ஓசியா கொடுத்தால் சில சோம்பேறிகளை ஊக்குவிக்கவும்  சந்தர்ப்பம் இருக்குன்னாங்க..நான் கேட்டேன்..அப்போ வயசான, முடியாதவங்களுக்கு இது நல்ல திட்டம் தானே னு ...


அவங்க சிரிச்சுட்டே சொன்னாங்க..."தானம்,தரங்கெட்ட மனிதர்களை மட்டுமே ஊக்குவிக்க கூடாது "


அதுபோலே வடலூர் சத்திய சன்மார்க்க சபை  போயிருந்தபோதும் இந்த அனுபவம் இருக்கு...

அங்கேயும் மூணு வேளையும் இலவச அன்னதானம்...சாப்பிட்டு முடிச்ச ஒரு ஆள் எங்ககிட்டே வந்து காசு கொடுங்கன்னு அனத்தல்..சாப்ட முடிச்சுட்டதானே அப்புறம் என்ன காசு னு கேட்டால்..தலைய சொரியிறான்...
(பீடி,சிகரட்டுக்கு பணம் பத்தலை போலே..)

ரெண்டுநாளைக்கு முன்னாடி செய்தி தாளில் பார்த்தேன்...மதுரையில் மாற்று திறனாளி மனிதர் ஒரு திருடனை விரட்டி பிடிச்சு போலீஸ் இல் ஒப்படைச்சுருக்கார் னு...இதெல்லாம் படிக்கும்போது ரொம்ப பெருமையா கூட இருக்கு...அப்புறம் இன்னொரு விஷயம்...

குடும்ப நண்பர் குழந்தைக்கு பிறந்தநாள்...அவங்க எங்களை வரசொன்னது "மதுரை பறவை பார்வையற்றோர் பள்ளி "..அந்த சின்னஞ்சிறு  பார்வை இழந்த குழந்தைகளை பார்த்தால் கல் நெஞ்சமும் கரையும்..எல்லாரும் சாப்பாடு பரிமாறினோம்...சில குழந்தைகளுக்கு எங்கே சாப்பாடு இருக்குனு கூட சரியா கணிக்க முடியாமல் திணறினாங்க..ரொம்ப வேதனையாகி நான் ஊட்டி விட முயற்சி பண்ணும்போது...வேண்டாம்...கொஞ்
சநேரம் கஷ்டமா இருக்கும்...ஆனால் கணிச்சுருவோம்..சரியா சாப்பிட்டு விடுவோம்னு சொன்ன தன்னம்பிக்கை..இயலாமையை காமிக்காத அவர்களின் பாங்கு...ராயல் சல்யூட் குழந்தைகளே...!


 
எல்லா உறுப்புகளும் கடவுள் சரியா கொடுத்தும்  கூட உருபடாத மனிதர்(?)கள் மத்தியில் இவர்கள் சுயமரியாதை பார்க்க சந்தோஷமா கூட இருக்கு..!!


41 comments:

சசிகுமார் said...

Nice

சிவா said...

அருமையான பதிவு ஆனந்தி! நம்மை எல்லாம் விட அவர்களிடம் தன்னம்பிக்கையும் மன உறுதியும் அதிகம்!

ஆனந்தி.. said...

@சசிகுமார்

நன்றி சசி..!!

ஆனந்தி.. said...

@சிவா
நன்றி சிவா..!!நீங்கள் சொல்வது மிகவும் உண்மை!!

kavisiva said...

நல்ல பதிவு ஆனந்தி!

தகுதியற்றவர்களுக்கு உணவளிப்பது கூட பாவம். சேவை இல்லங்களுக்கு என்னென்ன தேவை என்பதை நேரில் சென்று பார்த்து பணமாக கொடுக்காமல் பொருட்களாக வாங்கிக் கொடுத்து விடுதல் நல்லது. நமக்கு கொஞ்சம் அலைச்சலும் வேலையும்தான். ஆனால் சேர வேண்டியவர்களுக்கு தேவையானவை சரியாக சென்று விடுமே!

kavisiva said...

ஃபாலோ அப்

ஆனந்தி.. said...

@kavisiva
நீங்க சொல்றதும் சரிதான்...இந்த இயந்திர உலகத்தில் அந்த அளவுக்கு பொறுமையா செய்யவும் நேரம் இருக்குமா என்ன? உதவிகள் நம்பிக்கை,மனிதாபிமானத்தின் அடிப்படையில் தானே கவி...சில ட்ரஸ்ட் கூட நம்ப முடில..தெருவெங்கும் NGO பாணியில் நடத்தும் சில டிரஸ்ட் தொல்லை அதை விட எரிச்சல் கவி!!

kavisiva said...

அதனால்தான் நேரில் சென்று விசாரித்து செய்யணும்னு நினைக்கிறேன். அங்குள்ள குழந்தைகளிடமே நேரில் பேசினால் உண்மை நிலவரம் ஓரளவு புரிந்து விடும். அப்படித்தான் செய்யவும் செய்கிறோம்.

ஆனந்தி.. said...

@kavisiva

foreign aid வச்சே கும்மி அடிக்கும் கமர்சியல் தொண்டு நிறுவனங்களும் இருக்கே..உங்க ஊரு பக்கம் அறிமனை,களியக்காவிளை பக்கம் நிறைய இந்த போலி ட்ரஸ்ட் மாட்டுச்சே கவி...

kavisiva said...

இந்த போலி நிறுவனங்களை நேரில் சென்று பேசினால் ஓரளவு அடையாளம் கண்டு கொள்ளலாம் ஆனந்தி!. நாம் போய் என்ன பொருள் வேண்டும் என்ரு கேட்டால் "உங்களுக்கு எதுக்கு கஷ்டம் பணமா கொடுத்திடுங்களேன் நாங்களே வாங்கிக்கறோம்னு" இனிக்க இனிக்க நிர்வாகிகள் பேசினால் சுதாரிப்பது நல்லது. குழந்தைகலிடம் நம்மைத் தனியாக பேச அனுமதிக்காவிட்டாலும் ஏதோ தப்பு நடக்குதுன்னு புரிஞ்சுக்கலாம். ஏமாத்தறவன் எல்லா இடத்துலயும் இருக்காங்க. நாம்தான் உஷாரா இருக்கணும்பா

ஆனந்தி.. said...

@kavisiva

செய்யும் சேவை சம்பந்தபட்டவங்களுக்கு நல்லபடியா சேர்ந்தாலே சந்தோஷம் தான் கவி..!!புண்ணியத்தை விட ஒரு ஆத்மதிருப்தி..ஆனால் எல்லாமே இப்போ ஊழலில் மலிவு ஆகிட்டு வருது...அட கவி...நீங்க தானே வழக்கமா உணர்ச்சி வசபடுவீங்க..ஆனந்திக்கு எப்படி தொத்திக்கிச்சு...:)))

ஆனந்தி.. said...

@kavisiva
உபயோகமா தான் சொல்லி இருக்கீங்க...நன்றி கவிதாயினி கவிசிவா!!

ganesh said...

ரெம்ப நல்ல பதிவு அக்கா..

ஆனந்தி.. said...

@ganesh
அட யாரது...தம்பி கணேஷா? ஐன்ஸ்டீன் கோவிச்சுக்க போறாரு அக்கா வூட்டு பக்கம் வந்ததுக்கு...ஹ ஹ...தேங்க்ஸ் டா தம்பி !!

தருமி said...

பரவையில் அந்தக் குழந்தைகள் சாப்பிடும்போது அங்கிருக்கவே கஷ்டமாயிருக்கும்.

ஆமினா said...

நல்ல பதிவு. சிந்திக்கவும் வைத்தது.

வாழ்த்துக்கள்

ஆனந்தி.. said...

@தருமி
ஆமாம் தருமி சார்...!!பயங்கரமா அழுதுட்டேன் பார்த்து..என் கணவர் மற்றும் என் அண்ணா தான் சமாதானபடுத்தினாங்க!

ஆனந்தி.. said...

@ஆமினா

நன்றி ஆமினா!!

அமைதிச்சாரல் said...

அருமையான பதிவு ஆனந்தி,..உண்மையிலேயே தேவைப்படுபவர்களுக்கு கண்டிப்பா உதவணும்.அதேசமயம், நம்மோட உதவி, இன்னொருத்தரை சோம்பேறியாக்காம இருந்தா நல்லது..

ஆனந்தி.. said...

@அமைதிச்சாரல்

நன்றி சாரல் அக்கா!!

simham said...

அன்பு ஆனந்தி,

ரொம்ப நல்லா எழுதறீங்க.

வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

ஆனந்தி.. said...

@simham

நன்றி சீத்தாமா.!! குட்டி பேரன் சுகம் அரிய ஆவல்..!!

Chitra said...

இந்த பதிவு, எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கிறது..... வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
இன்னும் நிறைய இப்படி எழுதுங்க!

தெய்வசுகந்தி said...

அருமையான பதிவு!!

ஆனந்தி.. said...

@Chitra

மிக்க நன்றி சித்ரா:)

ஆனந்தி.. said...

@தெய்வசுகந்தி

தெய்வ சுகந்தி..தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க!!

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்நாட்டில் ஏகப்பட்ட "உலகநாயகர்கள்" சுத்திட்டு இருக்காங்க போலே)

ஏப்பா கமல் ரசிகர்கள் எல்லாம் வந்து இந்த ஆனந்தியை கும்முங்க

சி.பி.செந்தில்குமார் said...

சும்மா தமாஷ்,டோண்ட் டேக் சீரியஸ்

ஆனந்தி.. said...

@சி.பி.செந்தில்குமார்

சிபி! நானும் கமல் விசிறி!! அவர் புகழை பரப்ப அப்படி சொன்னேன்...இப்ப என்ன செய்விங்க...இப்ப என்ன செய்விங்க? :))

சௌந்தர் said...

மாற்று திறனாளிகள் எபோதும் பிச்சை எடுப்பது இல்லை கை கால்கள் நல்லா இருப்பவர்கள் தான் பிச்சை எடுப்பார்கள்....நல்ல பதிவு

ஆனந்தி.. said...

@சௌந்தர்
சௌந்தர்..நீ சரியா சொன்ன...!!

ஸ்ரீராம். said...

நல்ல பதிவு... பின்னூட்டக் கருத்துகளும் அருமை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பல இடங்களில் இந்த அன்னதானங்களும் யாருக்கோ உதவினோம் என்கிற திருப்திகாக கொடுக்கிற சிறிய உதவியும் (பிச்சையாக வாங்கினாலும்) ஒருவனை திருடனாக ஆகாமல் காக்கிறது என்றால் சமூகம் என்கிற ஒரு வட்டப்பாதை துண்டாகி தாறுமாறாகாமல் போக வாய்ப்பாக அமையலாமோ என்று ஒரு கருத்து தோன்றும்.

சரியான வாழ்வு அமையாம்ல் அல்லது அமைக்கமுடியாமல் போன வாழ்வில் தோல்வி அடைந்த ஒரு தனிமனிதன் , மீதி தன் வாழ்வை இப்படி வாழ்ந்துவிட்டு இறப்பதால் அவனால் சமூகத்தில் எந்த ஒரு துன்பமும் நிகழாமல் தடுக்கப்படுகிறது தானே..

ஆனந்தி.. said...

@முத்துலெட்சுமி/muthuletchumi

அப்போ சிறு சிறு விஷயங்களுக்கும் கூட முயற்சி எடுக்காமல் ஓசியில் கிடைக்கும் சோறு போதுமே னு சுய சிந்தனை அற்ற சோம்பேறி மனிதர்களும் பெருகலாம் இல்லையா? பொத்தாம் பொதுவாய் இந்த அன்னதானம் தப்புனே சொல்ல வரலை முத்து லட்சுமி ..ஆனால் அதில் சில நெகடிவ் வும் இருக்குன்னு தான் வருதபடுறேன்..

மங்குனி அமைசர் said...

"ம்மா...நாங்க பார்வை இல்லாதவங்க தான்..ஆனால் பிச்சை எடுக்க வரலை...இதெல்லாம் நாங்க தயாரிச்சது...முடிஞ்சால் இதை வாங்கிட்டு இதுக்கு உரிய பணத்தை கொடுங்க...இல்லாட்டி உங்க இலவச பணம் எதுவும் வேண்டாம்..."////

நானும் இப்படி நிறைய பேரை சந்தித்து உள்ளேன், அவர்களுக்கு தன்மானம் அதிகம்

ஆனந்தி.. said...

@மங்குனி அமைசர்

ம்ம்...நீங்கள் சொல்வது மிகவும் உண்மை!!

அன்புடன் மலிக்கா said...

அருமையான பதிவு ஆனந்தி!
உண்மைகள் பொதிந்திருக்கிறது பதிவில்.. பாராட்டுக்கள்.. ஆனந்தி..

http://niroodai.blogspot.com/

ஆனந்தி.. said...

@ஸ்ரீராம்.
நன்றி ஸ்ரீராம்..!!

ஆனந்தி.. said...

@அன்புடன் மலிக்கா

நன்றி மலிக்கா...உங்க ப்ளாக் போயி பார்த்தேன்..அந்த "மனக்குவளைக்குள்" கவிதை நல்லா இருந்தது...தங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி மலிக்கா...

Avargal Unmaigal said...

உங்கள் பதிவுகள் அருமை. ஆமாம் நீங்கள் எல்லாம் பழைய காலத்தி இருக்கிறிர்கள். இந்த கால அன்னதானம் என்பது உணவு அல்ல. ஒரு பாட்டிலும் ஒரு பாக்கெட் சிகரெட்டும்தான். நெக்ஸ்ட் டைம் தானம் கொடுக்கும் போது இதை கொடுத்து பாருங்க்கள். உங்களை அவர்கள் வாயார வாழ்த்து வார்கள். தானம் கொடுக்கும் போது என்னை கூப்பிட மறந்து வீடாதிர்கள் ஓகே வா மதுரை ஜான்ஸி ராணி அவர்களே

ஆனந்தி.. said...

@Avargal Unmaigal

மதுரையை மறந்த மதுரைவீரன்!உங்க நாட்டில் அப்படி போலே..இன்னும் எங்க ஊரில் அந்த அளவுக்கு கேவலமா ஆகல..அப்டி ஆய்டால் முதல உங்களுக்கு தகவல் சொல்லி பந்தி போட சொல்லிடுறேன்...ஓகே வா..:))இப்படிக்கு மதுரைகாரி...