February 11, 2011

கள்ளக்காதல் சில!! நொறுங்கும் இதயம் பல.!!

"காதலில் ஏது நல்ல காதல்..கள்ளக் காதல்?"
அட ...அதானே..என்ன ஒரு அற்புதமான தத்துவம்...:))
 நம்ம புர(ச்சீ ..) இயக்குனர் சாமி சொன்னது தான் இது :))

காதலை உண்மையில் தரம் பிரிக்க தான் முடியுமா? வடிவேலு காமடி ஒன்றில் தற்கொலைக்கு முயலும் 'அல்வா வாசு" சொல்லும் வசனம் "காதல்னு வந்துட்டா..இன்னொருத்தன் பொண்டாட்டியா இருந்தா என்ன, &%$@*!#@*&^ இருந்தா என்ன "? :))


கிழபோல்டு சல்மான் ருஷ்டிக்கு இளசுகள் மேலே வரும் காதலும்(?!),அமரத்துவம் வாய்ந்த அமராவதி,அம்பிகாவதி காதலும் ஒரே அலைவரிசையில் தான் பொருத்தி பார்த்து காதல்னு (?!) முடிவு பண்ணனுமா?


மதுரை லாட்ஜுகளில் மட்டும் கடந்த ரெண்டு மாதங்களில் மூணு பெண்கள் கொலை செய்யப்பட்டு இருக்காங்க.நகைக்காகவோ ,பணத்துக்காகவோ....ன்னால் அது தான் இல்லை. தன் புருஷன்,குழந்தைகளை விட்டுட்டு கள்ளகாதலனுடன் ஓடி வந்த அபலை(?!)கள்!!  இருப்பதை விட்டுட்டு,பறப்பதற்கு  ஆசைப்பட்டு வந்த இந்த காதல் தேவதைகள்
,அதே கள்ள உறவாலேயே கொல்லப்படுவதும் இன்னொரு வேதனை...

நல்லக்காதல் ....ன்னால் ...ன்னால்...னால் ...ல்.....

அட! அது பற்றி தான்  ஷேக்ஸ்பியர் ல இருந்து கவிஞர் தாமரை வரை புட்டு புட்டு வச்சுட்டாங்களே! நான் சொல்றதுக்கு எதுவும் இல்லை...

ஆனால் கள்ளக்காதல் பற்றி ,பத்தி பத்தியா சொல்ல சில விஷயங்கள் இருக்கு...

என் சித்தப்பா வீட்டின் எதிர்வீட்டில் எப்போ பார்த்தாலும் அந்த வீட்டம்மாக்கும்,அவங்க கணவருக்கும் சண்டை நடந்துட்டே இருக்கும். அவங்களுக்கு ஒரே பையன். அவனும் காதல் திருமணம் முடிச்சிட்டு வந்து அவன் புது மனைவியை அடிச்சு,தொவச்சிட்டு இருப்பான். அந்த குடும்பமே பல நேரங்களில் அப்நார்மலாவே என் கண்ணுக்கு தெரியும். சித்தி தான் ஒரு முறை சொன்னாங்க.. அந்த வீட்டம்மா தன் வயசுக்கு வந்த ரெண்டு பொண்ணுங்களையும்,கணவனையும் விட்டுட்டு இந்த ஆளு கூட ஓடி வந்து,இந்த பையனை பெத்துகிட்டதாக. 


அவங்க வீட்டில் எல்லாருமே இன்னும் ஏதோ ஒரு உறுத்தலோடவும்,அந்த பையன் ஏதோ ஒரு விதத்தில் தன் ஆத்திரத்தை தன் மனைவி மேலே காமிக்கிரதாகவும், ஒருவருக்கொருவர் ஒட்டாமலே வாழ்ராங்கலன்னு கூட பலமுறை எனக்கு தோணிருக்கு. எதுக்கு இந்த செயற்கையான பந்தம்...இந்த வாழ்க்கைக்கு தான் அந்த அம்மா ஆசைபட்டங்கலானு தெரியல..அந்த அம்மா மன அமைதிக்கு மதம் மாறி, சதா ஜெபத்தில் இப்போ எல்லாம்...!
 
(ம்ம்...கடவுள் மன்னிப்பது இருக்கட்டும். அவங்களோட ரெண்டு பொண்ணுங்களும்,கணவரும் மன்னிப்பாங்கலா னு தெரியல..)

மற்றொரு விஷயம்...

கிட்டத்தட்ட ஆறு ,ஏழு மாசம் முன்னாடி தென் தமிழகத்தில் ஒரு ஊரில் தாலுக்கா ஆபிஸ் முன்னாடி மூணு குழந்தைங்க நிக்கிறாங்க. 7 வயசு பையன் கையில் கடிதம்,அவன் அருகில் 5 வயசு தங்கச்சி பாப்பா, அவள் இடுப்பில் 1.5 வயசு இன்னொரு தங்கச்சி பாப்பா..

எதுக்கு வந்திருக்காங்க??? என்ன கடுதாசி??

கொஞ்சம் நாமும் அந்த கடிதத்தை படிக்கலாம்..

மதிப்பிற்குரிய ஐயா ,
                                     

                                         என் பெயர் அருண்குமார்(7 ),எனக்கு 2 தங்கச்சிங்க இருக்காங்க. அப்பா கூலி வேலை பார்க்கிறாங்க. ஒரு வாரமா நாங்க சரியா சாப்பிடலை. .சரியா தூங்கலை.. தங்கச்சி பாப்பா சதா அழுதுட்டே இருக்கா..அப்பாவும் அழுதுட்டே கஞ்சி காச்சி கொடுக்கிறார். அப்பா வேலைக்கு போனபிறகு நான் தான் பாப்பாவை பார்த்துக்குறேன்...பள்ளியில் நல்லா படிப்பேன்..ஆனால் இப்ப போவல...அம்மாவை ஒரு வாரமா காணோம் வீட்டில்..அம்மா பக்கத்து வீட்டு மாமா கூட போய்ட்டாங்கன்னு  அம்மாச்சி சொல்லி அழுதுச்சு.. எங்க அம்மா எங்களுக்கு வேணும்...எப்பிடியாவது அம்மாவை கண்டுபிடிச்சு கொடுங்க ஐயா "

வணக்கத்துடன்,
அருண்குமார்..

இந்த கடிதம் உடனே பரிசீலனை பண்ணப்பட்டு, தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்பார்வையில் ,மேற்கொண்டு விசாரிக்க சிறுவன் அருண்குமார் வீட்டிற்கு சென்றது...அங்கே..அங்கே..அங்கே.............................................

"பிணக்கோலத்தில்  மூன்று குழந்தைகளும், அவர்கள் தந்தையும்..."

குழந்தையின் தைரியம் தந்தையிடம் இல்லைன்னு ஊரே அழுதிருக்கு (அந்த புகைப்படம் விகடனில் வந்து இருந்தது...என்னடா மனுஷ உணர்ச்சி இது னு ரொம்ப விரக்தியா இருந்தது எனக்கு...)

என் அழகு அம்மா!!
என்னுயிர்  அம்மா!!

அப்பாக்கு தோள் சாய -
நீ அருகில் இல்லை!!

என் கன்னம் தட்டி
மிருதுவாய் கொஞ்ச-
நீ அருகில் இல்லை!!

பெரிய தங்கைக்கு
கதை சொல்லி உணவூட்ட-
நீ அருகில் இல்லை!!

சின்ன தங்கைக்கு
தாய்பால் புகட்ட-
நீ அருகில் இல்லை!!
 

என் அழகு அம்மா!
என்னுயிர் அம்மா..!!!

மகிழ்ச்சியாய்  இனியாவது இரு !!
நாங்களும் இவ்வுலகில் இல்லை.!!!!


62 comments:

இரவு வானம் said...

காலையிலேயே உருக வெக்கிறீங்க மேடம், கடைசியா அந்த கவிதை என்னவென்று சொல்ல? :-((((

Chitra said...

விளையாட்டு போல ஆரம்பித்து .... ஏதோ காமெடி என்று நினைத்து சிரிச்சிக்கிட்டே படிச்சேன் பா.. இறுதி சம்பவத்தில், மனம் கனத்து - வெறுத்து - பெருமூச்சுக்கள் சுமந்து - கண்களில் ஈரத்துடன் - முடித்து விட்டீர்களே!

Chitra said...

There is a difference between love and infatuation - Some people may not understand to know the difference. :-(

வைகை said...

முறையான புரிதல் இல்லாத தம்பதிகளில் ஒருத்தர் ஆறுதல் தேட அடுத்தவரை நாடும் போது இப்படி தடம் மாறக்கூடும்.....இப்படி புரிதல் இல்லாத தம்பதிகளை தெரிந்துகொண்டு அவர்களை தேடி தேடி ஆறுதல் சொல்லியே (இது இரு பாலிலும் உண்டு!) அவர்களை தடம் புரள வைக்கும் கூட்டமும் உண்டு....இதை தவிர்க்க அடிப்படை விசயமே தம்பதிகளின் புரிதலில்தான் இருக்கிறது! எப்படி இருந்தாலும் குழந்தைகளின் எதிர்காலத்தை தொலைத்து தன் சந்தோசத்தை தேடுபவர்களை என்ன செய்வது?

ஆனந்தி.. said...

வைகை..நீங்க சொல்ற பாயிண்ட் ரொம்ப சரி...

எல் கே said...

@ஆனந்தி
இதுல நெறைய சிக்கல் இருக்கு. மனதில் எழும் கண நேர சலனம்தான் எல்லாத்துக்கும் காரணம். இதை வைத்து ஒரு கதை எழுதும் ஐடியா இருக்கு ..

//There is a difference between love and infatuation - Some people may not understand to know the difference. :/

@சித்ரா
இதை நீங்க அப்படி ஒதுக்க முடியாது சித்ரா. you can say this as a lust but not in all cases

உங்களுள் ஒருவன் said...

கணவன் மனைவியும், மனைவி கணவனையும் புரிந்து நடத்து கொண்டால்... இது போன்ற கள்ள காதல்... முறை தவறிய காதல்கள் இருக்காது....
ஒருவனுக்கு ஒருத்தின்னு பெரியவங்க சொல்லுவாங்க...... அந்த ஒருவன் தன்னுடைய ஒருத்தியை நன்றாக புரிந்து கொண்டு..... அவளை நன்றாக பார்த்து கொண்டால்..... அந்த ஒருத்தி இன்னொருவனை தேட மாட்டாள்........ இது அவளுக்கும் பொருந்தும்..........

Balaji saravana said...

நண்பர் வைகை சொன்னது போல குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்மூலமாக்கி விட்டு தன் சுகம் பெரிதென எண்ணும் ஆண்/பெண், தம் துணையுடன் புரிதல் இல்லா நிலையாலேயே இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்கின்றன என்பது என் எண்ணம். இது போல பரிதவிக்கும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியிருக்குமென நினைக்கும் போதே மனம் கனக்கிறது சகோ! :(

மாத்தி யோசி said...

என்னங்க இப்புடி பண்ணீட்டீங்க! சித்ரா மேடம் மாதிரி நானும், ஜாலியா படிச்சுட்டு வந்தேன்! கடைசியில இப்புடி குண்டத் தூக்கிப் போடுறீங்களே! இது எல்லோருமே சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம்!! படிச்சதில இருந்து மனசுக்கு கஷ்டமா இருக்கு!! ஆமா இந்தப் பிரச்சனை எப்போது தீரும்?

Ramani said...

படிக்கிற அனைவரையும் ஒருகணம்
திடுக்கிட வைக்கிற சிந்திக்க வைக்கிற
நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள்

கணேஷ் said...

இந்த மாதிரி விஷயங்களால் ரெம்ப பாதிக்கபடுவது குழந்தைகளும் எதிர்கலமும்தான்...இவர்களின் ஆசைக்கு அவர்கள் பலியாவது கொடுமை அக்கா..மேலே நீங்க சொன்னது போல..

தானாக இதை யோசித்து திருந்தினால் ஒழிய வேறு வழியில்லை..

சுந்தர்ஜி said...

எது வரை வாழ்வோ அது வரை நீளும் என் அன்பு.எது வரை அன்போ அது வரை நீளும் என் வாழ்வு.இப்படி யோசிக்கும் இளகிய மனதுள்ளவர்கள் இது போன்ற இடுகையின் இறுதி முற்றுப்புள்ளியைக் கண்ணீரின் துணையின்றித் தொடுவது துர்லபம் ஆனந்தி.

நெருப்பை நெருப்பு என்று சொல்லித்தான் ஆக வேண்டியதிருக்கிறது.சொல்லித்தான் சிலருக்குப் புரிகிறது.

நா.மணிவண்ணன் said...

அந்த குழந்தைகள் பாவம் ,கவிதை பொட்டில் அறைகிற உண்மை

தமிழ் உதயம் said...

இரு பாலரும் கள்ள உறவால் நிகழப்போகும் அனர்த்தங்களை, அவமானங்களை உணர வேண்டும். கள்ளக்காதல் அவர்களுக்கு மட்டுமல்ல, அவரை சுற்றி உள்ளவருக்கும் இழுக்கை தருகிறது என்பதை உணர வேண்டும்.

MANO நாஞ்சில் மனோ said...

என்னடா உலகம்........

சேட்டைக்காரன் said...

இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவதைப் பார்த்தும், அறிந்தும் பலர் தொடர்ந்து அந்தப் படுகுழியில் விழுவதை புரிந்து கொள்ள முடியவில்லை. அருமையான நெகிழ்ச்சியாக முடிந்த இடுகை.பாராட்டுகள்.

பாரத்... பாரதி... said...

இந்த மாதிரியான விஷயங்கள் ஆரம்பத்தில் மட்டும் இனிக்கும்
விஷம்..
துணிச்சலான பதிவு.

கவிதையின் இறுதி வரி வலி..

Prabu said...

கவிதை உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்த மனசு வெறுமையில் உழலுது... அந்த வெறுமை பிரசவித்த மௌனம்தான் இந்தப் பதிவுக்குக் கருத்துரை சகோ..... :-((

asiya omar said...

வாசித்த பின்பு மனசு பொறுக்கலை,எப்படி இப்படில்லாம் இருப்பாங்க,ந்ம்பவே முடியலை.உங்கள் உணர்வை கவிதையில் அருமையாக வெளிப்படுத்திருக்கீங்க.

மாணவன் said...

கலங்க வைத்த பதிவு

இதுபோல தடம் மாறுபவர்கள் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தாவது திருந்துவார்களா??

மாணவன் said...

கவிதை வரிகள் வேதனை கலந்த வலிகள்...

செங்கோவி said...

அந்தக் குழந்தைகளை நினைத்தால் மிகவும் கஷ்டமாக உள்ளது..கவிதை அருமை.

சி.பி.செந்தில்குமார் said...

தைரியமான எழுத்து வீரியமான நடை ஆனந்தி

FOOD said...

இறுதி வரிகள், என்றும் சுடும்.

தம்பி கூர்மதியன் said...

இதுக்கு எதிர்கருத்து போட்டா நான் மனுசனே கிடையாது..!!!

நடுரோட்ல நிக்கவச்சு கொலை பண்ணவேண்டிய ஆளுக நிறைய பேர் இருக்காக..

@சித்ரா:இது infatuation இல்ல மேடம்.. கொழுப்பு, திமுறு, எகத்தாலம், $&%*( வெறி..

Anonymous said...

பெத்த பிள்ளைகளை விட்டு ஓடும் இவர்களுடையது எந்த காதலிலும் சேர்க்க இயலாது..காதலில் நல்ல காதல் கள்ளக் காதல் என்பது என்றுமே இல்லை..உண்மை பொய் இந்த நிலை வேண்டுமானால் காதலில் வரலாம்..இப்படி பெத்த பிள்ளைகளை விட்டு விட்டு போய் என்ன சுகத்தை காணப்போறாங்க..பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் செத்த அவன் ஒரு மனிதன்..அந்த பிஞ்சுகளுக்காக படிக்கும் போதே பதறிப் போனது மனம் கலங்கியது கண்கள்..சே..காதலா கர்மமான்னு தோனுது ஆனந்தி..

Thanglish Payan said...

மகிழ்ச்சியாய் இனியாவது இரு !!நாங்களும் இவ்வுலகில் இல்லை.!!!!


Last line touches ... really wonderful..

நிரூபன் said...

இக் கால இளைஞர்களின் வாழ்க்கையை, யதார்த்தம் கலந்து அனைவருக்கும் ஒரு பாடமாய் அமையும் வண்ணம் சம்பவங்களோடு கோர்த்து எழுதியுள்ளீர்கள். இருக்கிறதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைபடுவோர் கதைக்கு ஒப்பானது தான் இக் கள்ளக் காதலர்கள் கதை. இக் கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பது போல இவர்களுக்கும் பட்ட பின்பு தான் புத்தி வரும். காதலர் தினத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந் நாளில் உங்களின் இப் பதிவு வெளி வந்திருப்பது மகிழ்ச்சியே.

இது சமூகம் மீதான அக்கறையின் வெளிப்பாடு.

ஆயிரத்தில் ஒருவன் said...

என் அழகு அம்மா!
என்னுயிர் அம்மா..!!!

மகிழ்ச்சியாய் இனியாவது இரு !!
நாங்களும் இவ்வுலகில் இல்லை.!!!!


நெஞ்சை உருக்கும் வலி மிகுந்த கவிதை துணிச்சலான பதிவு. துரோகங்களை அனுபவித்த காயங்குளுடன் நான்....! கள்ளக்காதலுக்கென்றே ஒரு பிளாக் இதையும் படிக்கலாம். http://sivapurojakkal.blogspot.com/

thirumathi bs sridhar said...

துணிச்சலான பதிவு.வைகை அவர்கள் சொல்லியதைதான் நானும் சொல்ல விரும்புகிறேன்.

தோழி பிரஷா said...

படித்தேன் கண்ணீருடன் செல்கிறேன் அக்கா...மனம் கனத்துப்போனது... உலகில் இப்பாடியான பிரச்சனைகள் அதிகம் குழந்தைகளையும் அவர்கள் எதிர்காலங்களையும் பாதிக்கின்றது....!

Anonymous said...

//கடிதம் உடனே பரிசீலனை பண்ணப்பட்டு,//
//"பிணக்கோலத்தில் மூன்று குழந்தைகளும், அவர்கள் தந்தையும்..."//
குழந்தைகளை அனுப்பிவிட்டு விசாரிக்க சாவகாசமாக சென்றர்களா?

Anonymous said...

பொருந்தா துணையுடன் பிள்ளைகளின் எதிர்காலம், சமூக இழுக்கு கருதி எத்தனையோ பேர் நரக வாழ்வு வாழ்கின்றனர். அவர்களுக்கென்ன தியாகி பட்டமா கொடுக்கிறார்கள்..? தனிப்பட்டவரின் உளவியல் மாறிவிட்டது. சமூக சிந்தனைதான் மாறவில்லை இன்னும். முதலில் விவாகரத்து கோரும் தம்பதியரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் இந்த சமூகம். மறுமணத்தை அங்கீகரிக்க வேண்டும். கள்ளக் காதல் தானே ஒழிந்துவிடும். புரிதல், புண்ணாக்கு என்று வெற்று அறிவுரைகள், கருத்துக்கள் எல்லாம் வீண்.

தமிழ்வாசி - Prakash said...

கவிதை மனசுக்கு கனமா இருக்கு.

டக்கால்டி said...

எல்லாம் மாயா..எல்லாம் சாயா..
உடல்பசி தீரும் வரை தான் சந்தோசம் எல்லாம்...பிறகு வாயிற்று பசிக்கு வரும் வாக்குவாதம் தான் எல்லாம்...
அந்த பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் செய்தன...இவர்களுக்குப் பிறந்தது தான் பாவமா.?
அவர்களின் உயிரைப் பறிக்க அந்த தந்தைக்கு என்ன உரிமை இருக்கிறது?
இப்படி விடை தெரியாத பல கேள்விகள் மேடம்...

Sathish Kumar said...

உடற்பசி ஒரு கள்ளக்காதலின் மூலம் என்றால் அது விவாதத்திற்கே இடமற்றது. மாறாக, புரிதலில் தான் பிரச்னை என்றால்...??? புரிதல் கோளாறுகள் ஒரு அறைக்குள்ளயே தீர்க்கப்படாமல் போகையில் கவுன்சலிங், மனமாற்றம், விவாகரத்து, மறுமணம் என்று இழப்புகள் குறைவாக எஞ்சிய வாழ்க்கையை மகிழ்ச்சியாக தன்னம்பிக்கையுடன் வாழ சட்டத்தின் துணையுடன் வழி இருக்கிறது. சட்டத்தின் முன் விஷயங்கள் எடுத்து செல்லப்படுவதால் குழந்தைகளின் எதிர்காலமும் கருத்தில் கொள்ளப் படுகிறது. ஆனால் ஏதோ ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் இக்குழந்தைகள் சாதாரண தாய் தந்தையிடமிருந்து ஒரு குழந்தை அடையும் பாசத்திநை இழப்பதென்பது நிச்சயம். அந்த இழப்புக்கு தகுந்த replacement யாரிடமும் இருப்பதாக தெரியவில்லை. விஷயங்கள் சட்டத்தின் முன் வெளிப்படையாக வரும்போது, வருங்கால வாழ்க்கையில் வலிகள் குறைவாக இருக்கும் என்பது எனது எண்ணம்.


ஊர் உலகம் என்ன சொல்லுமோ, அவமானமா போச்சே, வெளியில தல காட்ட முடியாதே, இவன்லாம் ஒரு ஆம்பளையான்னு நாலு பய பேசுவானே என்ற சமூகம் சார்ந்த பய உணர்ச்சியாலயே அந்த தந்தை அப்படி ஒரு விபாரீத முடிவை எடுத்து விட்டார் என்று வேதனைப்படுகிறேன்.

மேலே "Anony" கூறியதை முற்றிலும் ஏற்க முடியவில்லை என்றாலும் அவர் கூறிய அருமையான ஒரு கருத்து "தனிப்பட்டவரின் உளவியல் சிந்தனை மாறிவிட்டது. சமூக சிந்தனைதான் மாறவில்லை இன்னும்". இது போன்ற விஷயங்களில் சமூக சிந்தனை மாற வேண்டும். அது புரிதல் கோளாறுகள் கள்ளக்காதலாக தடம் புரள்வதை தவிர்த்து விடும். புரிதல் கோளாறுடன் தவிப்பர்களை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் மாற்றம் வேண்டும். பிரிந்து தனித்தனியாக வாழ நினைப்பவர்களையும், பிரிந்து மறுமணம் செய்து வாழ நினைப்பவர்களையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். அவ்வாறு சமூகம் செய்யும் போது பாதிக்கப்பட்டவர்கள், எதை இழந்தாலும், தன்னம்பிக்கையை இழக்காமல் வாழ்ந்து காட்டுகிறேன் பார், என்று உறுதியுடன் முன் செல்வர்.

அந்தத் தந்தைக்கு நேர்ந்த அவமானமும், அதனால் அவர் எடுத்த முடிவும், அதை ஒன்றுமே அறியாத பச்சை குழந்தைகளின் மேல் திணித்த விதமும் நெஞ்சில் ரத்தம் கசிய வைக்கும் சம்பவம்.

வாழ்க்கை சிரமம் தான் ஆனால் வாழ முடியாததல்ல...!!

ஜீ... said...

//தமிழரசி said... 26
காதலில் நல்ல காதல் கள்ளக் காதல் என்பது என்றுமே இல்லை..உண்மை பொய் இந்த நிலை வேண்டுமானால் காதலில் வரலாம்//
repeat!
மனசுக்கு கஷ்டமா இருக்கு!

Anonymous said...

அருமையான,யோசிக்க வைக்கிற கட்டுரை..கணவன்,மனைவி புரிதலும்,பக்குவமின்மையே இதற்கெல்லாம் காரணம்.

சி.கருணாகரசு said...

அட்தெல்லாம் ஒரு ஜென்மன்.... ஆனா கடைசி காலத்தில் அந்த ஜென்மம் உணரும்.... உங்க பகிர்வுக்கு நன்றி.

இல்யாஸ்.மு said...

உலகம் போகிற போக்கில் இதெல்லாம் சகஜமாகிவிட்டதுங்க. கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் ஒரு பெண்ணோ அல்லது ஆணோ தவறு செய்ய துவங்கும்போதே மற்றவருக்கு தெரிந்து விடும். இப்போதோ கூட்டுக்குடும்பம் பெண்களுக்கு சாபமென தெரிகிறது. அது சாபமல்ல வரம். பாதுகாப்பு வளையம். நாகரிகத்தை வரவேற்ற நாம் இதுபோன்ற சம்பவங்களை தவறு என்கிற பட்டியலிலிருந்து நீக்கிவிடுவோம் விரைவில். மதுவை தவறு என்று முன்னோர்கள் சொன்னது இப்போது இல்லை என்பதை போல

Madurai pandi said...

படிக்கிறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ...

sakthistudycentre-கருன் said...

துணிச்சலான பதிவு....

ஆனந்தி.. said...

@எல் கே

//@ஆனந்தி
இதுல நெறைய சிக்கல் இருக்கு. மனதில் எழும் கண நேர சலனம்தான் எல்லாத்துக்கும் காரணம். இதை வைத்து ஒரு கதை எழுதும் ஐடியா இருக்கு ..//

கார்த்திக்..இது கட்டாயம் சிக்கலான விஷயம் தான்...முள்ளு மேலே விழுந்த லேசான துணி போலே...கதை எழுதிட்டு கட்டாயம் சொல்லுங்க கார்த்திக்..நாங்க படிக்கிறோம்...:)

ஆனந்தி.. said...

@எல் கே

//@சித்ரா
இதை நீங்க அப்படி ஒதுக்க முடியாது சித்ரா. you can say this as a lust but not in all cases //

mm..sometimes it may be....:)

ஆனந்தி.. said...

@Anonymous

//கடிதம் உடனே பரிசீலனை பண்ணப்பட்டு,//
//"பிணக்கோலத்தில் மூன்று குழந்தைகளும், அவர்கள் தந்தையும்..."//
குழந்தைகளை அனுப்பிவிட்டு விசாரிக்க சாவகாசமாக சென்றர்களா?//

அது தான் அனானி..நம்ம ஊரு ஸ்டைல்..என்னைக்கு ஸ்பாட் லையே ஆக்க்ஷன் எடுத்து இருக்காங்க...?? i

ஆனந்தி.. said...

@Anonymous

//பொருந்தா துணையுடன் பிள்ளைகளின் எதிர்காலம், சமூக இழுக்கு கருதி எத்தனையோ பேர் நரக வாழ்வு வாழ்கின்றனர். அவர்களுக்கென்ன தியாகி பட்டமா கொடுக்கிறார்கள்..?//

ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சுக்கணும் நாம..பிள்ளை ஏன் பெத்துக்குறோம்..விருப்பபட்டு தானே....ஸோ என்னைக்கு பெத்துகிட்டோமோ அதுக்கு உரிய கடமைகளையும் ஒழுங்கா பார்க்க வேண்டியது பெற்றோரின் கடமை...ஸோ..குழந்தைகளை நல்ல நிலைமைக்கு வளர்க்க நாம கஷ்டபட்டால் அது தியாகம் ஆகாது..அது கடமை...பிடிக்காத துணை இருந்தாலும்...குழந்தைகளின் சில நலன்களுக்காக சில கஷ்டங்களை பொறுத்து கொள்ளும் பரஸ்பர ஆணோ/பெண்ணோ தியாகி இல்லை அனானி...அவங்க தான் நல்ல அம்மா ,அப்பா னு சொல்வேன்..இங்கே நல்ல தம்பதியராய் இருப்பதை விட நம் குழந்தைக்கு அட்லீஸ்ட் நல்ல பெற்றோராய் இருக்கலாம்..கொஞ்சம் யோசிச்சு பார்த்தால் இதன் முழு அர்த்தம் புரியும்....

ஆனந்தி.. said...

@Anonymous

//தனிப்பட்டவரின் உளவியல் மாறிவிட்டது. சமூக சிந்தனைதான் மாறவில்லை இன்னும். முதலில் விவாகரத்து கோரும் தம்பதியரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் இந்த சமூகம். மறுமணத்தை அங்கீகரிக்க வேண்டும்.//

நிச்சயம் நானும் வழி மொழிகிறேன்...

ஆனந்தி.. said...

@Anonymous

//புரிதல், புண்ணாக்கு என்று வெற்று அறிவுரைகள், கருத்துக்கள் எல்லாம் வீண். //

புரிதல் அப்டிங்கிறது புண்ணாக்கு சம்பந்தப்பட்ட விஷயமில்லை அனானி..புரிதல் மட்டுமே தம்பதிகளின் அடிப்படை..எங்கே புரிதல் மிஸ் ஆக ஆரம்பிக்குதோ அங்கே தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது...புரிதல் இருக்கும் இடத்தில் சுதந்திரமாய் தங்கள் கருத்துக்களை பரிமாறி கொள்ளும் அற்புத உறவு எப்பவும் திளைத்திருக்கும்...புரிதல் உள்ள சுதந்திரமான உறவில் கள்ளத்தனம் வாய்ப்பு கம்மி அல்லது இருக்காது அனானி...

ஆனந்தி.. said...

@டக்கால்டி
//அவர்களின் உயிரைப் பறிக்க அந்த தந்தைக்கு என்ன உரிமை இருக்கிறது?//

ம்ம் சகோ...

ஆனந்தி.. said...

@Sathish Kumar
//விவாகரத்து, மறுமணம் என்று இழப்புகள் குறைவாக எஞ்சிய வாழ்க்கையை மகிழ்ச்சியாக தன்னம்பிக்கையுடன் வாழ சட்டத்தின் துணையுடன் வழி இருக்கிறது.//

//விவாகரத்து, மறுமணம் என்று இழப்புகள் குறைவாக எஞ்சிய வாழ்க்கையை மகிழ்ச்சியாக தன்னம்பிக்கையுடன் வாழ சட்டத்தின் துணையுடன் வழி இருக்கிறது.//

சதீஷ்...இந்த இடுகையில் நான் குறிப்பிட்ட ரெண்டு சம்பவங்களுமே கிராம வாழ்க்கை சார்ந்தது...நீங்க சொன்ன சட்டங்கள்..சட்டத்தின் துணை நாடுதல்..பிடிக்காத உறவுகளை சட்ட வழியில் நாடி..பிரிஞ்சு போயி குழந்தைகளுக்கு காவளிருத்தல் எல்லாமே நகர்புற அளவுக்கு தான் வளர்ச்சி பெற்று இருக்கு...இன்னும் கிராமங்களில் பஞ்சாயத்து,அறுத்து விடுறதுன்னு தான் முக்கால் வாசி நடக்குதுங்கிறது உண்மை...ஒரு கூட்டுக்குள் இருக்கும் பொது உலக பார்வை இல்லாத பெண்கள்/ஆண்களுக்கு புரிதல் இல்லாத தத்தம் பார்ட்னரிடம் கம்பெரிடிவ் வரும்போது ஆட்ட மேடிக்காய் பிளவு வந்து வேற்று ஆடவன்/பெண் னிடம் உறவு ஏற்பட்டு விடுகிறது...ஆனால் அது லஸ்ட் க்கான உறவுன்னு எல்லாத்தையுமே பொத்தம்பொதுவா சொல்ல முடியாது என்று LK சொன்னது கட்டாயம் ஒத்துக்கிறேன்...ரசனைகள் பொய்த்து போயி இயந்திர வாழ்க்கையில் போயி கொண்டிருக்கும் சில உள்ளங்களுக்கு தன் பார்ட்னர் ரிடம் கிடைக்காத உடல் சார்ந்த விஷயங்களை தவிர்த்து கூட வேற உளவியல் ரீதியாய் கவரபடலாம்...ஆனால் மேல் தட்டு மற்றும் நகர்ப்புறங்களில் இந்த கள்ளக்கதளினால் குழந்தை சாவுகள் அதிகமாய் பார்க்க முடியாது...அவர்கள் கட்டாயம் சட்ட ரீதியாய் அணுகி...வேற மாதிரி பிரச்னையை சமாளிப்பார்கள்...ஸோ..குழந்தைகளின் எதிர்காலத்திருக்கு யாரவது ஒருவரின் கேர் நிச்சயம் தங்கு தடை இல்லாமல் கிடைக்க செய்யவும் சட்டத்தின் மூலம் வழி செய்ய முயலும் விழிப்புணர்வும் நகர்ப்புறங்களில் உண்டு...ஆனால் கிராமங்களில் இன்னும் அந்த நிலைமை வரவில்லை...அது வரை எத்தனை குழந்தை சாவுகளோ..எத்தனை அவமான சாவுகளோ..கடவுளுக்கும்...(கள்ள )காதலுக்கும் தான் வெளிச்சம்...
--

ஆனந்தி.. said...

@இல்யாஸ்.மு

இலியாஸ்;;எப்படி இருக்கீங்க..உங்கள் கம்மென்ட் ஐ வெகுவாய் ரசித்தேன்...இதழோரம் புன்னகை..நக்கலோடு நிகழ்கால,எதிர்கால உண்மைகளை ஜோர் ஆ சொல்லி இருந்திங்க....

ஆனந்தி.. said...

கருத்திட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல...

Part Time Jobs said...

Nice Info Keep it up!

Home Based new online jobs 2011

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

! சிவகுமார் ! said...

காதலர் தின ஸ்பெசல்! வித்யாசமான பகிர்வு.

Jana said...

குழந்தைகள் - மனது கனக்கின்றது. கவிதை..அருமை, உணர்வு வெளிப்பாடும்கூட

Lakshmi said...

இப்படி மனம் பேதலிக்கிரவர்கள் திருமண பந்தத்தில் இணையக்கூடாது, அப்படி இணைந்து விட்டால் பிள்ளைகளை பெற்றுக்கொள்ளாமலாவது இருந்திருக்கலாம். இப்ப பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பதுபோல குழந்தைகளின் எதிர்காலம்தானே கேள்விக்குறியாகிரது

ஹேமா said...

ஆனந்தி...ஏதோ நகைச்சுவைன்னு நினைச்சுத்தான் தொடங்கினேன் வாசிக்க.மனம் கலங்கவைத்துவிட்டீர்கள்.
கவிதை அபாரம் !

அப்பாவி தங்கமணி said...

//"பிணக்கோலத்தில் மூன்று குழந்தைகளும், அவர்கள் தந்தையும்"//

ஒரு கணம் செயல்பட இயலவில்லை இதை படித்து... தாய்மை எங்கே போனது... மற்ற உணர்வுகள் தாய்மையை கூட மறக்க செய்யுமா என்ன? ச்சே...

இராஜராஜேஸ்வரி said...

கஷ்ட்டமாகத்தான் இருக்கிற்து.க்விதையிலும் உருக வத்துவிட்டீர்கள்.

U.P.Tharsan said...

ம்.... கடைசியாய் இருக்கும் கவிதையும் நல்லாயிருக்கிறது. பதிவில் பலதை உணர்த்துகிறீர்கள். மிக ந்ல பதிவு.

சசிகுமார் பாலகிருஸ்ணன் said...

ஆனந்தி ... எழுத வார்த்தைகள் இல்லை... ரொம்ப மனச காயப்படுத்திட்டீங்க .. உங்க கவிதையால...

பிறகு அழுது முடித்துட்டு விமர்சனம் எழுதுறேன்.

Sweety said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in