February 22, 2011

இவனையெல்லாம் என்கவுண்டரில் போடுறத விட்டுட்டு...??!!!


அவ்வை ஷண்முகி படத்தில் மார்க்கெட் காட்சியில் மணிவண்ணன் டீம் டெல்லி கணேஷ் ஐ "தெளிய வச்சு தெளிய வச்சு "அடிப்பாங்க...அது காமடி க்கு தான் என்றாலும்...காட்சியமைப்பில் சொல்ல வருவது சம்பந்தப்பட்ட ஆளு அந்த "வலியை" தெளிவா உணரனும்னு...


நேத்து எனக்கு வந்த ஒரு நியூஸ் எஸ்.எம்.எஸ்..."kasab smiled as court upheld death sentence"

உண்மைய சொல்ல போனால் இந்த பதிவு போடுவதே இந்த எஸ் எம் எஸ் படிச்சு கடுப்பானத்தில் தான்...



கசாப்...
  அஜ்மல்
கசாப்...

இவன் பேரை சொன்னாலே....ஒவ்வொரு ஈவு இரக்கமுள்ள இந்தியனுக்கும் நெஞ்சு கொதிக்கும்,பதறும்..

 

நாட்டையே உலுக்கின ஒரு ஈவு இரக்கமற்ற ஒரு பயங்கரவாதி...கொஞ்சம் கூட மனுஷதனமே இல்லாமல் மும்பையில் நடந்த திடீர் தாக்குதலில் தாஜ் ஹோட்டல்...ரயில்வே ஸ்டேஷன் உள்பட பல இடங்களில் கும்பலுடன் பொதுமக்கள்,போலீசார் உள்பட 160 பேரை போட்டு தள்ளிய கும்பலில் இருந்த ஒரு கொலைகார குரூபி..



இவன் கும்பலில்,மற்றவர்கள் பரலோகம் போக..இவன் மட்டும் மாட்டினான்....மும்பை சம்பவம் முடிஞ்சு (26 /11 /2008 ) ...இன்னும் ....வருஷங்கள் ஓடிட்டு இருக்கு...




வாய்தா...மேல்முறையீடு...ன்னு வழக்கு ஒரு நீண்ட பயணம் போலே ஓடிட்டு தான் இருக்கு...நவம்பர் 2008 இல் பிடிபட்ட அவன்..இப்போ மார்ச் 2011 ....இப்ப வரை சிரிச்சுட்டே...பாதுகாப்போடு...
வாரம் ஒரு முறை சிக்கன் பிரியாணி சாப்டுட்டு வாழும்...சக மனிதனாய்(கைதியாய்(??), நடமாட விடும் அவலம் நம் நாட்டில் மட்டும் தான் நடக்குமோ...


கண்காணிப்பு காமெரா மூலம் சட்டத்திற்கு தேவையான அத்தனை ஆதாரம் சிக்கிய  பிறகும்...நம் இந்திய சட்டத்தில் உடனே தண்டனை வழங்க அப்படி என்ன விதிமுறைகள்..லொட்டு லொசுக்ஸ்..????????????!!!!!



என்கவுன்ட்டர் இல் போடுறவனை இன்னும் பொத்தி பொத்தி வச்சிட்டு இருக்கும் ஒரு எரிச்சல் தனமான விஷயம் சத்தியமா நம்ம நாட்டில் தான் நடக்கும்....


பின்ன...அரபு நாடுகளில் கொடுங்கோல் தண்டனை செய்பவர்களுக்கு எல்லாம் அவர்கள் கொடுக்கும் தண்டனை பார்த்து என்னடா இவனுங்க இப்படி பண்றாங்கன்னு கொஞ்சம் மிரண்டுருக்கேன் ...ஆனால் நேற்று என் முடிவை மாத்திகிட்டேன்...நம்ம நாட்டிலும் ஏன் இந்த தண்டனை நடைமுறை படுத்தகூடாது...???

ஒரு கொடூரமான கொலையாளி,விவரிக்கவே முடியாத ஒரு மகாபாவிக்கு.. இன்னும் பாதுகாப்பு கொடுத்து கிட்டத்தட்ட 16 கோடி ரூபா (அவன் பாதுக்காப்புக்காம்) ம்ம வரிப்பணத்தில் இருந்து செலவழிச்சு...(நேத்து கூட வீடியோ கான்பிரன்சிங் இல் தான் அவனுக்கு விசாரணை.).காரணம் பாதுகாப்பு...


இவனுக்காய் ஒரு இந்திய வக்கீலும் அவனுக்கு ஆதரவா ஆஜராகி...(வக்கீல் சங்கத்தில் சும்மா விட்டாங்களா அந்த வக்கீலை ???!!! )...நேத்து ஹை கோர்ட் மரண தண்டணைய ஊர்ஜிதம் பண்ணுச்சாம்...ஆனால் இன்னும் கூட அவனுக்கு சான்ஸ் கொடுத்திருக்காம்...நீ மேல் முறையீடு செஞ்சாலும் செய்யலாம் பா கண்ணு ...னு....(அடுத்து ஜனாதிபதி கருணை மனு னு ஒரு பிட் ட்டு இருக்கு...)


அதான் சொல்றேன்..லூசு தனமான சட்டங்கள் நம்ம நாட்டில் இன்னும் ஏன் வச்சிட்டு இருக்காங்க...அரபு நாட்டில் இப்படி ஒருவன் செஞ்சால் இவ்வளவு நாள் அவனை ஓவியமா வச்சிட்டு இருப்பாங்களா என்ன???


பக்கத்து நாடுகளின் தாக்குதல் தொடர்ந்து நம்ம நாட்டுக்கு அச்சுறுத்தல் வந்துட்டே இருந்தாலும்...எல்லா விஷயத்திலும் "சத்திய மேவ ஜெயதே" னு கடை பிடிச்சால் ...இது மாதிரி இளிச்ச வாயனுங்களா ஆகி  ..நமக்கு  ஓராயிரம் பாதிப்பு வருவது நிச்சயம்..உறுதி...



கசாபை  எல்லாம் நடுரோட்டில் வச்சு, பாதிக்கப்பட்ட குடும்பங்களை விட்டு கல் எரிஞ்சே கொல்ல பட வேண்டிய ஆள்..இவனுக்கு என்கவுன்ட்டர் இல் கூட  சீக்கிரமா அந்த மரணம் முடிய கூடாது....


நான் முதலில் சொன்னது போலே..தெளிய வச்சு..தெளிய வச்சு மரணம் உணர பட வேண்டும்...அப்போ சிரிக்க மாட்டான் கசாப்...எத்தனை குடும்பங்கள் இவனால் நாசமாய் போயிருக்கும்...


தீர்ப்பு ஹை கோர்ட் இல் வாசிச்சு முடிச்சதும்..கசாபால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் மனைவி கதறி அழுதுட்டே சொல்லிருக்காங்க.."சீக்கிரம் இவனை இந்த வாட்டியாவது தூக்கில் போட்ருங்கன்னு"


போட்ருவாங்காலா ...??? ம்ம்...அதையும் பார்க்க தானே போறோம்....

62 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

WOW VADA

MANO நாஞ்சில் மனோ said...

என்னத்தை சொல்ல இந்த கொடுமையை....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

SISTER DON'T WORRY.BELIEVE THE GOD.HE WILL DO EVERYTHING......

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

PUNISHMENT SHOULD MAKE EVERYONE TO BECOME GOOD.THE ENCOUNDER WON'T DO IT

Avargal Unmaigal said...

நம்ம மக்கள் கொதித்து எழுந்து இது விஷயமா கவர்மெண்டுக்கு எதிரா போராடனும் இன்னும் 10 நாள்ல அவனை தூக்குல போடல நாம செல்க்க்ட் பண்ண M.P, M.L.A களை ரோட்ல துரத்தி துரத்தி அடிகக்கணூம் அப்படி செய்யனும் அப்பதான் சட்டத்தை திருத்துவங்க.. 16 ஆயிரம் கோடி எத்தனை குடும்பங்களில் விளக்கு ஏற்றி வைக்கலாம்.. நம்ம மக்கள் இதற்க்காக் போராடுவர்களா அல்லது சினிமா டிவி பார்த்து காலத்தை வேஸ்ட் பண்ணீ வெட்டி பேச்சுதான் பேசுவார்களா

Chitra said...

நீதி ..... விழிப்போடு, விரைவில் செயல்படணும்.


உள்ளூரில் நாலு ஆளுங்க சப்போர்ட் பண்ணாமலா, இந்த அளவுக்கு பண்ணி இருப்பாங்க.... அவர்கள் எல்லோரையும் இன்னும் கண்டுபிடிக்கலையோனு தோணுது....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ANANTHI, DO NOT FEEL MUCH.A LOT OF CULPRITS WHO KILLED THOUSANDS OF PEOPLE ARE OUT OF PUNISHMENT RIGHT NOW.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I UNDERSTAND YOUR CONCERN ON THOSE WHO WERE AFFECTED IN THAT ACCIDENT.I WELCOME IT

மாணவன் said...

//போட்ருவாங்காலா ...??? ம்ம்...அதையும் பார்க்க தானே போறோம்..//

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்....

பொறுத்திருந்து பார்ப்போம்...

எல் கே said...

இன்னும் இருக்குங்க. இன்னும் அப்சல் குருவை தூக்கில் போடலை. இவரு அடுத்து சுப்ரீம் கோர்ட் போவார் அப்புறம் கருணை மனு இருக்கு

தமிழ் உதயம் said...

உங்க கோபம், நம் எல்லோரிடமும் உள்ளது. பார்க்கலாம்.

Jana said...

சட்டங்கள் பாரபட்சமின்றி நீதிவழங்கவேண்டும். விரைவான நீதிகளே சமகத்திற்கு தேவை. ஒரு தீவிரவாதத்திற்கும் மேலானதுதான், தாய்நாட்டு பணத்தை வேறு ஒரு இடத்தில் முடக்கி வைத்திருப்பதும், முதலில் என்கொவுண்டர் பாயவேண்டிய இடம் அதுதான்!

R. Gopi said...

ஆனந்தி, நம் சட்டம் \ நடைமுறை அவ்வாறு உள்ளது. இதுபோன்ற வழக்குகளுக்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் வைத்து அது சொல்வதே இறுதி முடிவு என்று இருக்க வேண்டும்.

கசாப் சார்பாக வழக்கறிஞர் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் அது வழக்கை மேலும் தாமதிக்கும். ராம் ஜெத்மலானி இது குறித்து நிறைய முறை டிவியில் சொல்லி இருக்கிறார். நம் நடைமுறை அவ்வாறு உள்ளது.

Unknown said...

சகோ ரொம்ப கோபமா இருக்கீங்க போலேயே

இன்னும் இது எவ்வளவு நாள் இழுத்த்தடுப்பாய்ங்கனு பாருங்க ,ஏன்னா இந்தியா ஒரு ஜனநாயக நாடு (அப்படின்னு சொல்றானங்க )

Ram said...

//நான் முதலில் சொன்னது போலே..தெளிய வச்சு..தெளிய வச்சு மரணம் உணர பட வேண்டும்...//

மனித உரிமை கமிஷன்..

//நம் இந்திய சட்டத்தில் உடனே தண்டனை வழங்க அப்படி என்ன விதிமுறைகள்..லொட்டு லொசுக்ஸ்..????????????!!!!! //

இந்திய சட்டமைப்பு.???

//பக்கத்து நாடுகளின் தாக்குதல் தொடர்ந்து நம்ம நாட்டுக்கு அச்சுறுத்தல் வந்துட்டே இருந்தாலும்...எல்லா விஷயத்திலும் "சத்திய மேவ ஜெயதே" னு கடை பிடிச்சால் ...இது மாதிரி இளிச்ச வாயனுங்களா ஆகி ..நமக்கு ஓராயிரம் பாதிப்பு வருவது நிச்சயம்..உறுதி... //

ஹலோ நாம அகிம்சை நாடுங்க..

இப்போ சீரியஸ்.!!

கொன்று குவிக்கும் மனிதா

நீயும் நானும் தோழமையே.!!

துன்பம் எனை தீண்ட

துணைவன் நீ துணிந்ததேனடா.???

நாடென்னும் வேலியில் எம்மை பிரிக்காது

ஓருலகம் என்று இருப்போமே.!!

தோழா என் சரீரம் உன் காலடியில்

இன்றோடு நிறுத்திகொள்.!!


மாறாய்,

கருணையென்னும் என் உயிரை

காளானுக்கு இரையாக்க நினைத்தால்

தெரிந்துகொள்..

காலடி தேடும் சரீரம்

உனை காணாமல் போக செய்திடும்

கெஞ்சிடும் கைகளுக்கு மிஞ்சிட தெரியும்

குங்குமம் இழந்த வாயின் ஒற்றை சொல் தாங்கமாட்டாய்

போன நிமிடம் வெளிவந்த சிசுவும்

உனை போகும் இடம் தெரியாமல் செய்திடும்.!!


வாரும் தோழமைகளே.!!

சிரிக்கும் வரை சிரிக்கட்டும் புண்செய்த வாய்..

எவன் சிந்தையும் அறியா ஒன்றை கிளர்ச்சியால் எழுப்பிடுவோம்..

இன்றொரு ஆனந்தியின் எழுத்து..

நாளை நமது எழுத்து..

நாட்களில் அது மக்களின் வாழ்வெழுத்து..

எழுத்துக்கள் உருவமாக

சிந்தைகள் சித்திரமாக

வார்த்தைகள் வாழ்க்கையாக ஆனந்தியின் முதல் படி

நம்மின் அடுத்தடியாய் அமையட்டும்..!!


நன்றி ஆனந்தி.!!!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

"""என்கவுன்ட்டர் இல் போடுறவனை இன்னும் பொத்தி பொத்தி வச்சிட்டு இருக்கும் ஒரு எரிச்சல் தனமான விஷயம் சத்தியமா நம்ம நாட்டில் தான் நடக்கும்..""

அக்கா உங்கள் கோவம் புரிகிறது...சின்ன மீனை போட்டு தான் பெரிய மீனை பிடிக்கலாம். இங்கே அவனை வைத்துத்தான் தேசத்திற்குள் இருக்கும் தேசதுரோகிகளை பிடிக்கலாம். குண்டு வைப்பவனை விட உதவியாக இருப்பன் தான் உண்மையான துரோகி... நமது நாட்டிற்குள் இருக்கும் தேசத்துரோகிகளை இனங்கண்டால் அயல் நாட்டவன் நம்மை சீண்ட மாட்டன்..

Unknown said...

இவன் கும்பலில்,மற்றவர்கள் பரலோகம் போக..இவன் மட்டும் மாட்டினான்....மும்பை சம்பவம் முடிஞ்சு (26 /11 /2008 ) ...இன்னும் ....வருஷங்கள் ஓடிட்டு இருக்கு...//

கூட செத்தவன் யாரும் புண்ணீயம் செய்யலியே பரலோகம் போக. நரகத்திற்குத்தான் இவனையும் அனுப்பனும்.

Jerry Eshananda said...

ஒருவேளை...இதுனால பாகிஸ்தானுக்கும்..நமக்கும் போர் வந்துடுச்சுனா....அப்புறம்..வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைத்திருக்கும்...முப்பது லட்சம் கோடி என்னா ஆகிறது.....பன்னாட்டுகம்பெனிகளின்..முதலீடு என்னாவது...போர் வந்த அடுத்த வினாடி...."அம்பானிகளும்..டாட்டாக்களும்..நடுத்தெருவுக்கு வந்துடுவாங்கன்னு .....அரசாங்கமே...இது மாதிரி..ஆயிரம் கசாப்களை காப்பாற்றும்.இதுதான்..இந்திய இறையாண்மை ஆனந்தி.

raja said...

ஆனந்தி உணர்ச்சி வசப்பட்டு எழுதியிருக்கீறிர்கள்.. உடனே நீங்கள் கசாப்புக்கு வக்காலத்து வாங்கும் நபர் என்றென்று என்னை அவசரத்தில் முடிவு கட்டிவிடாதீர்கள். கசாப்பின் வயதை யோசித்துப்பாருங்கள்.. அவன் ஒரு பழக்கபடுத்தபட்ட வெறிநாய் அவ்வளவே..ஒரு சாதாரண சமூசா விற்கும் பையனை பிடித்து ஒரு முளையில்லாத வெறிப்பிடித்தகும்பல் பழக்கபடுத்தியிருக்கிறது. முதலில் இவனது சூத்திரதாரி யார் என்று நீங்கள் யோசித்து எழுதியிருக்கலாம். மிக மிக மோசமான சூழலில் இந்த மாதிரியான ஆட்கள் வளர்த்தெடுப்படுகிறார்கள். இவனைப்போல இன்னும் பல கசாப்புகள் நம் நாட்டிலே இருக்கிறார்கள். வெவ்வேறு கோணத்தில்.. நீங்கள் மறந்துவிட்டிருப்பீர்கள்.. போலிமாத்திரை கும்பல என்ன ஆனது..? அந்த வழக்கு என்ன ஆனது.. தினகரன் ஊழியர் எரிப்பு என்ன ஆனது.. எல்லாவற்றிற்கும் காரணம் இந்த கொடூர சூத்திரதாரிகள்... அவர்களை முதலில் கண்டுபிடித்து உங்கள் எழுத்தில் முதலில் தூக்கில்போடுங்கள்... முக்கியமாக மிகத்தெளிவான விசாரணைக்குப்பின்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

அக்கா...தூக்குல போடுற மாதிரி தெரியல... இவனுக்கு என்கவுண்டர் தான் வழி...

இதையும் பாருங்க: கடி..கடி...கடி.. இது செம காமெடி...

செங்கோவி said...

செம சூடு!

நிரூபன் said...

அவன்..இப்போ மார்ச் 2011 ....இப்ப வரை சிரிச்சுட்டே...பாதுகாப்போடு... வாரம் ஒரு முறை சிக்கன் பிரியாணி சாப்டுட்டு வாழும்...சக மனிதனாய்(கைதியாய்(??), நடமாட விடும் அவலம் நம் நாட்டில் மட்டும் தான் நடக்குமோ...//

சகோதரி.இனி உள்ள போய் இருந்தால் ஜாலி தான் என்று தோன்றுது. அரசியலிலை இதெல்லாம் சகஜமுங்கோ.

Samy said...

India certainly scared of Pakistan further attacks after the kasab's execution.samy

vanathy said...

தண்டனை புரிந்தவன் சார்பில் வாதாட ஒரு வக்கீல் கட்டாயம் வேண்டும் என்பது சட்டம். அப்படி செய்யாவிட்டால் அரசாங்கம் மீது பழி வந்தாலும் வரலாம் என்பதால் இவனுக்கு வாதாட ஒரு வக்கீல். இது நான் படித்த நியூஸ்.
அஜ்மலுக்கு என்ன நடக்கும் என்பதை காலம் தான் சொல்லும்!!!

வைகை said...

ஜனநாயக நாட்டில் இதுவும் ஒரு சாபக்கேடு! ஒரு ஜனநாயக நாட்டில் ஜனங்களின் உயிருக்கு மதிப்பு இவ்வளவுதான்! நமது அரசியல் அமைப்பு சட்டம் திருதப்படவேண்டியதுதான் இதற்க்கு தீர்வாக முடியும்!

ஆச்சி ஸ்ரீதர் said...

என்னங்க இவ்ளோ பேராசைப் படுறீங்க, பேருந்து எரிப்பு சம்பவத்தில்
மூனு பொண்ணுங்க உயிர் விட்டு எரிந்து சாம்பலானதற்கு நடந்த வழக்கு முடிவதற்குள் கூட தப்பித்த பொண்ணுங்களுக்குலாம் ,திருமணமாகி குழந்தை பிறந்து பள்ளிக்கும் போய்விட்டார்கள்..

இவனால் எத்தனை பேர் உயிர் விட்ட்ருக்காங்க,தலைக்கு ஐந்து வருஷம்னாலும்?...........

Pranavam Ravikumar said...

I am waiting for the day...!

Unknown said...

செம்ம சூடாகிட்டீங்களா அக்கா? (லேட்டா வந்துட்டு கேள்வியப்பாரு?)
என்ன சொல்றது/செய்றது இதுக்கெல்லாம்?! கலிகாலம்!!

Prabu M said...

இவன் மூஞ்சி கேமராவில் பதிவான பிறகும், கையும் களவுமா பிடிபட்டபின்னும் அது நான் இல்லன்னு இவன் வாதாடுறதுக்கு சட்டத்துல இடம் இருக்கு... இவனுக்கு வாதாடுறதுக்கு இரண்டு மானங்கெட்ட இந்திய வ்க்கீல்களும் இருக்கானுங்க..... கேட்டா இந்தியா ஒரு ஜனநாயக நாடாம்.... மனிதாபிமான காட்டச்சொன்னா மிருகத்தைவிடக் கேவலமா நடந்துக்குறதும் இந்தியாதான்..... சொந்த மனிதர்களையே வேட்டையாடின மிருகத்துக்கு பிரியாணி போட்டு வாழவைக்கிறதும் இதே இந்தியாதான்.... இது ஒரு கேவலப்பட்ட சமுதாயம் அக்கா...

மனிதன் said...

எனக்கே இரத்தம் கொதிக்குது...
:-|

Anonymous said...

//பக்கத்து நாடுகளின் தாக்குதல் தொடர்ந்து நம்ம நாட்டுக்கு அச்சுறுத்தல் வந்துட்டே இருந்தாலும்...எல்லா விஷயத்திலும் "சத்திய மேவ ஜெயதே" னு கடை பிடிச்சால் ...இது மாதிரி இளிச்ச வாயனுங்களா ஆகி ..நமக்கு ஓராயிரம் பாதிப்பு வருவது நிச்சயம்..உறுதி... //
wel said sako! avana thookula podurathukkulla avan vayasakiye seththuruvaan!

Unknown said...

வாழ்க இந்திய ’ஜன’ நாயகம்..

Sathish Kumar said...

அத்து மீறி ஆயிரக் கணக்கானவர்களை கொன்று குவித்த ஒசாமாவை தேடி ஆப்கானையே சல்லடையாய் துளைத்து போட்டு கொண்டிருக்கிறது அங்கே ஒரு பொம்மை அரசை நிறுவி அமெரிக்கா...!

தன நாட்டுக்கு இப்போதல்ல எப்போதுமே அச்சுறுத்தல் தான் இந்த 'சதாம்' என்று ஒரு மாயையை, உலகமே எதிர்த்த வாதத்தை தீவிரமாய் பற்றி, அநியாயமாய் அவரை பதுங்கு குழியில் இருந்து தூக்கி வந்து தூக்கிலிட்டது, அமேரிக்கா..! ஒரு நாட்டின் அதிபரையே ஒரே வருடத்தில் கழுவிலேற்றியது.

வல்லரசு, வல்லரசு என்று ஏங்கிக் கொண்டே வாயை பிளந்து கொண்டு இளிச்ச வாய்த்தனமாய் உட்கார்ந்து இருக்கிறது நம் தேசம். பிடிபட்ட கசாபை வைத்து முற்றிலும் பாகிஸ்தானின் முகத்திரையை வேறு எந்த நாடாய் இருந்தாலும் கிழித்து சுக்கு நூறாய் ஆக்கிருக்கும். முதுகெலும்பில்லாத இந்திய அரசாங்கம் அமெரிக்காவை கெஞ்சிக்கொண்டு இருக்கிறது, பாகிஸ்தானை பணிய வைக்க.

குண்டுகள் மும்பை, டில்லி போன்ற இந்தியப் பெரு நகரங்களை துளைத்தெடுக்கும் போது அந்நகரங்களில் இருந்த என் எண்ணம் என்னவாக இருந்தது தெரியுமா...?
"தன் நாட்டு மக்களையே பாதுகாக்க திராணியில்லாத, வக்கில்லாத , துயரங்களில் இருந்து பாடங்களை கற்காத இந்த தேசத்தில் அடுத்த நொடி உயிருடன் இருப்போமா...?"

இன்று ஒரு நோய்க்கிருமியை பரவச் செய்து ஒரு தேசத்தையே அழிக்க சதித்திட்டங்கள் உலகில் தீட்டப்படும் அவலங்களை நாம் காண்கிறோம். ஆமை வேக, ஆயிரம் ஓட்டைகளை தாங்கிய சட்டங்களை சுமந்திருக்கும் நீதித்துறையை வைத்துக் கொண்டு நாம் என்ன தான் செய்ய போகிறோம் என்றே தெரிய வில்லை. இந்திய தண்டனைச் சட்டங்கள் இயற்றப்பட்ட கால கட்டத்தில் கற்பனை கூட செய்து பார்த்திட முடியாத குற்றங்கள் திணிசு தினுசாய் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. இந்தியச் தண்டனைச் சட்டங்கள் மிகக் கடுமையான, உறுதியான, திடமான, விரைவான தீர்வுகளாக மாற்றம் பெற வேண்டும்.

சட்டத் திருத்தங்கள் கொண்டு வந்து மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கி வரும் அரபு நாடுகளிலும், சிங்கபூர், மலேசியா நாடுகளிலும் என்ன மக்கள் செத்தா விட்டார்கள்.

jothi said...

கசாப் இவ்வளவு நாட்கள் வைத்திருபத்தற்கு உளவுத்துறையின் வழிகாட்டலாய் இருக்கலாம்,..

துரதிர்ஷ்ட்டமாக கசாப் இருப்பதால் பாம்பே நிகழ்வை பலர் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள்,.. இல்லையென்றால் எப்போ மறந்திருப்பார்கள்,..

கசாப்பை நடு ரோட்டில் கல்லால் அடித்துக் கொள்வதை வழி மொழிகிறேன்,.. இந்த கசாப்பின் தண்டனைக்காக அல்ல,. இது போல கசாப்புகள் இந்தியாவிற்கு வராமல் இருப்பதற்காக,..

வழக்கம் போல் நல்ல பதிவு ஆனந்தி

Angel said...

"சிரிச்சுட்டே...பாதுகாப்போடு... வாரம் ஒரு முறை சிக்கன் பிரியாணி சாப்டுட்டு வாழும்...சக மனிதனாய்(கைதியாய்(??), நடமாட விடும் அவலம் நம் நாட்டில் மட்டும் தான் நடக்குமோ..."

எனக்கு கோவம் கோவமா வருது

R.Gopi said...

இவனை என்கவுண்டரில் போடறது தான் முடியல...அட்லீஸ்ட் பிடிச்சுட்டு வந்து, விசாரணை முடித்து உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றாமல், ஒரு வருடத்திற்கு சுமார் ரூ.40 கோடிக்கும் மேல் செலவு செய்து, அவனுக்கு அளித்த தீர்ப்பை அவன் காறி உழிந்து, பின் பல மாதங்கள் மறுபடியும் விசாரணை, மரண தண்டனை தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டிற்கு அனுமதி....

அய்யோ....அய்யோ... படிச்சாலே வயிறெல்லாம் எரியுதே...

சி.பி.செந்தில்குமார் said...

சட்டம்னு ஒண்ணு இருக்கே?

இராஜராஜேஸ்வரி said...

.எல்லா விஷயத்திலும் "சத்திய மேவ ஜெயதே" னு கடை பிடிச்சால் ...இது மாதிரி இளிச்ச வாயனுங்களா ஆகி ..நமக்கு ஓராயிரம் பாதிப்பு வருவது நிச்சயம்..உறுதி... //
TRUE.....

தருமி said...

ஒரு பக்கம் பினாயக் சென் இன்னும் சிறையில். இந்த கசாபும் சிறையில். கோடிக்கணக்கில் ஊழல் செய்தவன் நாலு நாள் சிறை; நாப்பது நாள் மருத்துவ மனையில் ... என்னமோ போங்க... நம்ம நாட்டு அரசியலும், அதைவிட மோசமா நம் நீதித் துறையும் ... சோகம்தான்!

:(

Anonymous said...

சட்டம் தன் கடமை செய்யும்.அதுவரை சத்தம் செய்யாதீர். மதிப்புக்குரிய கசாப் அவர்கள் உறங்குகிறார்கள்.நீங்களும் உறங்குவதான் உங்கள் உடல்நலத்திற்கு நல்லது.இல்லெயென்றால்,டென்சனாகி "அவருக்கு" முன்னே நாம் போய் சேர்ந்து விடுவோம்.அவரை தூக்கி போடுவதும், போடாததும் நமது பேரன் காலத்து சமாச்சாரம்.இதற்காக நாம் கவலைப்பட தேவையில்லை.

ம.தி.சுதா said...

இதைப் பற்றி எதவும் சொல்ல நா எழவில்லை சகோதரம்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

jayakumar said...

vidunga ananthi...thukku poi tension aagittu...naarremedutha samugathil naaripona arasiyalil innum evlovo irukku...

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

ஆனந்தி நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். அவன் மீதான உங்களின் கோபமும் நியாயம் தான். கொஞ்சம் நிதானித்துப் பார்த்தால், நீங்கள் சொல்வது போன்ற சட்டங்களில் ஒருவருக்கு தவறாக தண்டனை அளிக்கப்படலாம். அல்லது இதுபோன்ற சட்டங்களை தவறாகக் கையாள நேர்ந்தால் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் தற்போதைய நிலைமையைவிட பயங்கரமாக இருக்கக்கூடுமல்லவா ?

அந்நியன் 2 said...

மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் உடனே அடுத்த நாள் தூக்கிலிடப்படுவதில்லை.

தண்டனையைச் செயல்படுத்த ஏனோ சில நாட்கள்,மாதங்கள்,வருடங்கள் ஆகிறது.

அமெரிக்காவில்பலவருடங்களாகின்றன அத்தனைவருடங்கள்அவர்கள்
மரணதண்டனையைஎதிர்நோக்கியவாறு சிறையிலிருப்பார்கள்.

ஒரு வரிசை இருக்கும். அதற்குப் பெயர் டெத் ரோ (death row)

மரணதண்டனை விதிக்கும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு டெத் ரோ உண்டு. மரணதண்டனைக் கைதிகள் அனைவரின் வழக்குத் தடயங்களையும் மீண்டும் பரிசீலித்துப் பார்த்து அவற்றில் மரபணுத் தடயம் இருந்தால் அந்தக் கைதிகளை மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்தி ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

நிரபராதி என்று தெளிவானால் விடுதலை செய்யலாம்.

ஆனால் கசாப் விசயத்தில் அரசின் கொள்கை சரி இல்லை என்பதே எனது கருத்து.

இதற்க்கு ஆளும் கட்ச்சியும் சரி, எதிர்க் கட்ச்சியும் சரி,பாதிக்கப் பட்டவர்களுக்காக பேசவில்லை,
அரசியல் ஆதயத்திர்க்காகவும்,சுய நலத்திற்காகவும் பேசுகிறார்களே தவிர நாட்டின் நலனை கணக்கில் கொள்ளவில்லை என்பதே அனைத்து மக்கள்களின் கருத்து.

கசாப் என்பவன் அந்நிய நாட்டை சேர்ந்த ஒரு தீவிரவாதி அவனுக்காக வக்காலாத்து வாங்குது தீவிர வாதத்தை ஊக்குவிப்பதற்கு சமம்.கசாப்பை வைத்து ஒரு பெரிய கும்பலையே பிடுச்சுட்லாம் என்று மத்திய அரசு கணக்குப் போட்டு அவனுக்கு கோடி கணக்கில் செலவு செய்தால் வர வேற்க்கலாம்,மீன் இல்லாத ஆற்றில் தூண்டிலைப் போட்டுக் காத்திருப்பது கிறுக்குத் தனமாக இருக்கின்றது.

அப்பாவி மக்கள்களை கொன்னு குவிக்கும் கசாப் நாயாக இருந்தாலும் சரி நரேந்திர மோடியாக இருந்தாலும் சரி, பொது மக்களால் அடித்து கொல்லப் பட வேண்டியவர்கள்.

நல்லதொரு அலசல் சகோ வாழ்த்துக்கள்.

Philosophy Prabhakaran said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் இடுகைகள் சிலவற்றிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_25.html

மோகன்ஜி said...

உங்கள் தார்மீகக் கோபம் நியாயமானதே.
அதுவே அனைவரின் எண்ணமும் கூட. ஒரு கொடூரனுக்கு மரணதண்டனை என்பது அனைவரும் கொண்டாட வேண்டிய ஒன்று.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சிஸ்டர் என்ன பதிவு போட்டு நாலு நாளாச்சு! கமெண்டுகளுக்கு உங்கள் பதிலைக் காணவில்லை! ரொம்ப பிசியோ?

உணவு உலகம் said...

கோபம் -நியாயம்- நானும் தான்.

குறையொன்றுமில்லை. said...

ஆனந்தி இங்ககூட எல்லாரு தனித்தனியா நீங்க சொன்னபடி ஆத்திரத்துடனேபுலம்பி இருக்காங்க. எல்லாரும் ஒன்னு சேரனும். அனியாத்தை கண்டித்து குரல் கொடுக்கனும். தனிமரம் தோப்பாகாது. சேரனும் ஒன்னுசேர்ந்து குரல் கொடுக்கனும்.

Unknown said...

50

enakkuthan vaadai..erunga padichtu vanthu comment podren..:)

Unknown said...

என்ன சொல்றது சராசரிய எழுதாம
ஒரு உணர்வோட
உங்களின் தேசப்பற்று
அனைத்துக்கும் ஒரு சல்யுட்

படிக்கும்போதே பத்திகிட்டு வருது
என்ன பண்ண
ஆழ்ந்த பெருமூச்சுகளும்
வேதனைகளும் வருகிறது

Ram said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.!!! கண்டிப்பாக எழுதணும் ஆமாம் சொல்லிபுட்டன்..

http://kooranpathivu.blogspot.com/2011/02/blog-post_28.html

ஹேமா said...

ஆனந்தி...இப்பிடியெல்லாம் கோபப்பட்டா உங்களுக்குத்தான் வருத்தம்.என்ன ஒழுங்கா நடக்குது நம்ம நாடுகளில !

pichaikaaran said...

justice delayed...is justice denied

Madurai pandi said...

பொறுத்திருந்து பார்க்கலாம்..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

I don't think things will ever change...neither our legal system nor our politicians...too bad...

Prabu Krishna said...

அரசாங்கமும் சரியில்லை, மக்களும் சரியில்லை !!

கண்டதுக்கெல்லாம் போராடும் பால் தாக்கரே இதுக்கெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டார்.

தீவிரவாதிகளை கொல்ல நேரம் இல்லை. தான் நாட்டு மக்களை தானே கொல்லும் இந்த அரசாங்கம்.

Yaathoramani.blogspot.com said...

ரொம்ப நாளாக பழைய பதிவே இருக்கு
உங்கள் பதிவின் ரசிகர்களில் நானும் ஒருவன்
உடன் பதிவை எதிபார்த்து....
வாழ்த்துக்களுடன்..

Unknown said...

பல பேரோட உயிரை தின்னவனுக்கு,சிக்கன் பிரியாணி கொடுத்து மரியாதை குடுக்குறாங்க... கேட்டா ஜனநாயக நாடாம்..

Unknown said...

//உள்ளூரில் நாலு ஆளுங்க சப்போர்ட் பண்ணாமலா, இந்த அளவுக்கு பண்ணி இருப்பாங்க....//

//அவர்கள் எல்லோரையும் இன்னும் கண்டுபிடிக்கலையோனு தோணுது....//

அவுங்கெல்லாம் அரசியல் வியாபாரிகளாக இருக்கும்...

R. Gopi said...

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html

rajasekaran duraisami said...

இவனை எல்லாம் என் கவுன்டரில் போடகூடாது உயிரோடு கை கால்களை கட்டி வைத்து எல்லா உறுப்பையும் தனி தனியாக வெட்டி தோலை உரித்து உப்பு மிளகாய் போட்டு அதுக்கு மேல கொதிக்கிற எண்ணையை ஊற்றி சாகடிக்கனும்