October 23, 2010

தேவதை(?!)யிடம் வசமாய் சிக்கி கொண்ட சில அழகான வரிகள்..
ஒரு காதலன், காதலி கிட்டே நாளைக்கு உலகமே இல்லாட்டி நீ என்ன பண்ணுவனு கேட்டால்...
 

காதலி என்ன சொல்லுவாள்...ம்ம்...

"உயிரே..
.என்னாலே அப்படி நினைச்சு பார்க்க முடிலன்னு சொல்லலாம்..இல்லாட்டி இன்னைக்கே சேர்ந்து செத்துரலமா னு கேட்கலாம்..இல்லாட்டி இப்பவே போயி கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்கலாம்..."

இல்லையா? ம்ம்..

இதுல இருந்து கொஞ்சம் விலகி கொஞ்சம் அழகாய் காதலன்,காதலிக்குளே நடக்கும் அழகான கவிதை பத்தி தான் சொல்ல போறேன்...
   

  "ஆயிரம் பூவில்  படுக்கையும் அமைத்து
   உனையும் அணைத்து உயிர் தரிப்பேன்."

  ஐயோ..பயபடவேணாம்...சத்தியமா நான் எழுதவே இல்லை...(அந்த அளவுக்கு அறிவெல்லாம் இல்ல நமக்கு :-))  )இப்படி ஒரு காதலன் காதலிட்ட சொல்றது எனக்கு வித்யாசமா பட்டது..

  இந்த இசை இந்த தே(வதை) கிட்டே சிக்கிருச்சு...முழுசா சொல்லிட்டு போய்டுறேன்...ஓகே வா....                                    
  ரஹ்மான் இசையில் ரொம்ப சில தான் மனசுக்குள்ளே போயி உட்கர்ந்துருக்கு..(என் இசை ஞானம் அவளவு தான்)

  சரியான,திகட்டாத இசை,பொருத்தமான பின்னணி பாடகர்கள்,அதையெல்லாம் தவிர...நெகிழ்ச்சியான,ரசனையான வைரமுத்துவின் வரிகள்(அப்படி தான் நினைக்கிறேன்)..எல்லாம் மிக்ஸ் ஆன என் ஆல் டைம் பேவரைட் சாங் லவ் பேர்ட்ஸ் படத்தில் வரும்.." நாளை உலகம்" பாட்டு..

  பொதுவாய் திரைப்படத்தில் ஒரு காதலன்,காதலியின் டூயட் பாட்டு..கண்ணு,மூக்கு வருணிச்சு..தைமாசம் முகூர்த்தம்,மானே,தேனே ரேஞ் இல் தான் பெரும்பாலும் இருக்கும்...

  ஆனால் என்னவோ இந்த பாட்டில் ரொம்பவே வித்யாசமாய் அந்த பொது விதிகள் மீறப்பட்டு உலகமே நாளைக்கு இல்லாட்டி நீ என்ன பண்ணுவ ன்னு காதலனை காதலியும்,காதலியை காதலனும் கேட்டுக்கிறாங்க..அந்த பதில்கள் கூட சுவாரஸ்யம்..அதில் எதிலுமே கண்ணே..உனக்கு மலைய கொண்டுவந்து வைப்பேன்..வைரம் கொடுப்பேன்ன்னு மிகைபடுத்துதல் (cinematic exaggeration)னு எல்லாம் டிப்லோமடிக்(diplomatic) ஆ இல்லாமல்...ரசனையான நெகிழவைக்கும் காதல் வரிகள் இந்த பாட்டில் இருந்தது ...

  இசை:ரஹ்மான்..
  பாடியவர்கள் :சித்ரா,உன்னிக்ருஷ்ணன்
  படம்: லவ் பேர்ட்ஸ் 

  அந்த முழுபாட்டின் வரிகளும் ரொம்பவே உணர்வு பூர்வமா இருந்தது..எனக்கு...
   
  அது....  காதலன்  காதலிட்ட: நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?

   
                     கண்களை திறந்து, காலங்கள் மறந்து
                     கடைசியில் வானத்தைப் பார்த்துக்கொள்வேன்.
                 
                     மண்டியிட்டமர்ந்து,முன்னகம் குனிந்து
                     கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்.

                     
                     உன் மார்பினில் விழுந்து,மைவிழி கசிந்து
                     நீ மட்டும் வாழ தொழுகை  செய்வேன்
                    
                   
  காதலி சொல்றாங்க இப்ப..
                    ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை
                    ஒருநாளில் வாழ்ந்து கொள்வேன். 
                     
                     உன் இதழ்களின் மேலே இதழ்களைச் சேர்த்து
                     இருவிழி மூடிக்கொள்வேன். 
                     
                     மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியைத் தந்து
                     மரணத்தை மரிக்க வைப்பேன்....
                           

           It is the time for காதலன்..


                         வானையும் வணங்கி,மண்ணையும் வணங்கி
                         உனை நான் தழுவிக்கொள்வேன்..
                  
                         ஆயிரம் பூவில்  படுக்கையும் அமைத்து
                          உனையும் அணைத்து உயிர் தரிப்பேன்.

                         என்னுயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும்
                         உன்னுயிர் காத்து உயிர் துறப்பேன்.  எனக்கு ரொம்பவே புடிச்ச வரிகள் எல்லாமே..இசையை விட வரிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அருமையான உணர்வு பூர்வமான பாட்டு இது ...


  (இந்த பாட்டில் எனக்கு opening,finishing prelude (keyboard cum violin harmony)கூட ரொம்ப பிடிச்சு இருந்தது...)

  (இதோட வீடியோ பார்க்கனும்னால் இந்த லிங்க் இல் பார்க்கலாம்..(என்னவோ வீடியோ அவ்வளவா எனக்கு பிடிக்கல)
  http://www.youtube.com/watch?v=S3UtV9EIra8
        
                    
                       

  27 comments:

  மதுரை சரவணன் said...

  naalaa irukkungka ....vaalththukkal.

  நா.மணிவண்ணன் said...

  அடேங்கப்பா நல்லாத்தான் இருக்கு

  சிவா said...

  நல்ல பாடல் ஆனந்தி! மேல் இசையும் அந்த வரிகளும் அடடா! ஆனால் அந்த பாடல் படமாக்கப் பட்ட விதத்தில் எனக்கு மகிழ்ச்சி இல்லை!!!

  ஆனந்தி.. said...

  @மதுரை சரவணன்
  நன்றி சரவணா சார்!

  ஆனந்தி.. said...

  @நா.மணிவண்ணன்

  வாங்க மணிவண்ணன்..நீங்களும் நம்ம ஊரு போலே..வருகைக்கு நன்றி மணி!!

  ஆனந்தி.. said...

  @சிவா
  உண்மை சிவா..அழகான வரிகள்..எனக்கும் எடுத்த காட்சி அமைப்பு சுத்தமா பிடிக்கலை..

  மோகன்ஜி said...

  ரொம்ப நல்லா இருக்கு.. ரசித்தேன்! மேலும் கலக்குங்க..

  ஆனந்தி.. said...

  @மோகன்ஜி
  வாங்க மோகன் சார்...Thank You சார்!!

  தோழி said...

  இருக்கட்டும்...இருக்கட்டும்...:)

  LK said...

  நல்லா இருக்கு

  ஆனந்தி.. said...

  @தோழி
  தோழி..இதுல எதுவும் உள்குத்து இல்லயே...:-)))

  ஆனந்தி.. said...

  @LK

  நன்றி LK !

  சௌந்தர் said...

  ஐயோ..பயபடவேணாம்...சத்தியமா நான் எழுதவே இல்லை...(அந்த அளவுக்கு அறிவெல்லாம் இல்ல நமக்கு :-)) )இப்படி ஒரு காதலன் காதலிட்ட சொல்றது எனக்கு வித்யாசமா பட்டது..///

  சரி சரி நம்பிட்டோம்

  (இதோட வீடியோ பார்க்கனும்னால் இந்த லிங்க் இல் பார்க்கலாம்..(என்னவோ வீடியோ அவ்வளவா எனக்கு பிடிக்கல///

  நல்ல இருக்குங்க இந்த பாட்டு

  Avargal Unmaigal said...

  உலகம் அழியப் போவதைப் பற்றி காதலனுக்கு கவலையில்லை தன் அருகில் தனக்காக காதலி இருக்கும் வரை.....

  ஆனந்தி.. said...

  @சௌந்தர்
  தம்பி!நீ நம்பிட்டனால் சரி தான்..!!!

  ஆனந்தி.. said...

  @Avargal Unmaigal

  ம்ம்..

  நேசமித்ரன் said...

  வாழ்த்துகள் தொடர்க !

  ஆனந்தி.. said...

  @நேசமித்ரன்
  நன்றி நேசமித்திரன்!!

  ஆர்.கே.சதீஷ்குமார் said...

  ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை
  ஒருநாளில் வாழ்ந்து கொள்வேன்.
  //
  சூப்பரான வரிகள் அனுபவிச்சி எழுதி இருக்காய்ங்க

  ஆர்.கே.சதீஷ்குமார் said...

  உங்க லே அவுட் ரசிக்கிற மாதிரி இருக்கு..பதிவுகள் ரசனையா இருக்கு

  ஆனந்தி.. said...

  @ஆர்.கே.சதீஷ்குமார்
  நன்றி சதீஷ்)))

  நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

  @ஆனந்தி..அழகான பதிவுங்க...வாழ்த்துக்கள்.

  ஆனந்தி.. said...

  @நித்திலம்-சிப்பிக்குள் முத்து

  ரொம்ப நன்றிங்க!!

  Avargal Unmaigal said...

  im reading again and again. its good picture also very good nice selection. i expect more article like this..

  ஆனந்தி.. said...

  @Avargal Unmaigal

  ம்ம்!

  ஜெரி ஈசானந்தன். said...

  Hi.you tube link doesn't work.

  ஆனந்தி.. said...

  @ஜெரி ஈசானந்தன்.

  http://www.youtube.com/watch?v=HfGrE-lJTSY

  this is new link..try it..