September 28, 2010

இத..இத..இதை தான் எதிர்பார்த்தோம்..நல்ல விஷயம் னு சொல்லியாச்சு..அதை படிக்கிறதுக்கு முன்னாடி இதை படிச்சுட்டு உள்ள போலாம்..ஒரு 18 வயசு பொண்ணை அவள் கணவனே மலை உச்சியில் மண்டி போட வச்சு,அவள் மூக்கையும் காதையும் அறுத்தால் எப்படி இருக்கும்??
தலிபான்களின் தண்டனை இப்படி தான் இருக்கும்...

10 வயதில் விற்கப்பட்ட காபூலை சேர்ந்த இந்த பெண்,அவள் கணவன் குடும்பம் படுத்திய கொடுமைதாங்காமல், வீட்டை விட்டு தப்பிக்கும்போது தலிபான் போராளிகள் கொடுத்த தண்டனை தான் இது...


இதெல்லாம் எங்க...ஏன்..யாருக்குன்னு தெரியனும்னால்..கொஞ்சம்  பிளாஷ்பேக் பட்டனை அமுக்கலாம்..


வருஷம்- 1990 களில்..


இடம்-ஆப்கானிஸ்தான்


நிலவரம்- ஆப்கன் கிட்டத்தட்ட தலிபான்களின் கட்டுபாட்டில்.


பெண்களின் நிலைமை-


1 . கல்வி சுத்தமாய் மறுக்க பட்டது


2 .வெளியில் நடமாட உரிமை மறுக்கப்பட்டது.


3 .குழந்தை திருமணங்கள்


4 .வன்புணர்ச்சியில் அதிக சாவு.


5 .சைக்கிள் ஓட்டினால் கூட பெரிய தண்டனை.


6 .எழுத்து,பேச்சு சுதந்திரம் சுத்தமாய் இல்லை..


இன்னும் பல..


யோவ்..ஆப்பெரடேரு ரவி..என்ன அழுகாச்சி படம் காமிக்கிற? ரீல் ஆ மாத்து...


ஓகே..ஓகே..


வருஷம்- 2010


இடம்-அதே ஆப்கானிஸ்தான்


நிலவரம்- தாலிபான் போராளிகள் சந்து,பொந்து வழியாய் அடிக்கடி ஏழரை,எட்டரை கொடுத்தாலும் தாலிபான் கட்டுபாட்டில் ஆப்கன் இல்லை.


பெண்களின் நிலை-


1 .பெண்களுக்கு கல்வி கட்டாயமாக்கபட்டுள்ளது.


2 .ஜன்னல் திரைக்குள்ளேயே அடைஞ்சு கிடந்த பெண்கள்..தற்போது டிவி,பத்திரிகை போன்ற மீடியாக்களில் வர ஆரம்பிச்சுட்டாங்க.


3 .நிறைய பெண் எழுத்தாளர்கள்,பெண் பேச்சாளர்கள் உருவாக ஆரம்பிச்சுட்டாங்க.


போனசாய்...
4 .ஆப்கன் பெண்கள் 29 பேர் ஆப்கன் தேசிய படையிலும் சேர்க்க பட்டு இருக்காங்க. அதுவும் சாதாரண படைவீரர்களாக இல்ல..அவர்களை திறமையாய் வழி நடத்தும் உயர் பதவிக்கு தேர்ந்து எடுக்க பட்டு இருக்காங்க.

5 .முகம் முழுசும் மறைத்து திரைசீலைக்குள் வீட்டுக்குளே முடங்கி கிடந்த நிறைய திறமையான பெண்கள் ராணுவ உடையில் மிடுக்காய் இனி வலம் வர போறாங்க..
கேட்கவும்,பார்க்கவும் நல்லா தான் இருக்கு...


நல்ல விஷயம் எங்க நடந்தாலும்..சந்தோசம் தான் இல்லையா??
Follow Up:
dated 28/10/10 மேற்கண்ட போஸ்ட் டில் உள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்த மூக்கு வெட்டு பட்ட ஆயிஷா அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமாக உள்ளார்..இதை எனக்கு நினைவூட்டிய சகோதரர் ராஜேஷ், சகோதரர் அண்ணாமலைக்கு என் நன்றிகள்...தற்போதைய ஆயிஷாவின் புகைப்படத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன்...


23 comments:

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சூப்பரா தொகுத்து இருக்கீங்க கலக்குங்க ஆனந்தி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மூக்கு அறுத்தவன் எல்லாம் இப்ப என்ன பண்றானுகளாம்?

சௌந்தர் said...

அட டா என்ன கொடுமை இது மூக்கை இப்படி அறுத்து இருக்காங்க

தோழி said...

மிகவும் கொடுமை.. :(

தோழி said...

உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கின்றது தொடர்ந்து எழுதுங்க..

jothi said...

இந்தியாவிலும் இப்படி பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கிறது. பேருதான் சுதந்திரம்,..

நல்ல பதிவு ஆனந்தி

ஆனந்தி.. said...

@ஆர்.கே.சதீஷ்குமார்
நன்றி சதிஷ்குமார்..ஒவ்வொரு தடவையும் நீங்க வந்து பதிவு போட்டு ஊக்கபடுத்துரதுக்கு நன்றி..அந்த மூக்கை அறுத்தது அவள் கணவன் தான்...என்ன பண்றான்னு தெரில..இப்போ அந்த பொண்ணை அமெரிக்காவுக்கு கூட்டி போயி பிளாஸ்டிக் சர்ஜெரி பண்ண போறாங்களாம் அமெரிக்கா தொண்டு நிறுவனம்.

ஆனந்தி.. said...

@சௌந்தர்
நன்றி சௌந்தர்..உன் விமர்சனம் படிச்சுட்டு தான் பாஸ்@பாஸ்கரன் போனோம் சண்டே..உன் விமரசனமும் சூப்பர்..படமும் சூப்பர்..

ஆனந்தி.. said...

@தோழி
உண்மை தோழி...ஜோதி சொன்னதை போலே இந்தியாவிலும் ஏதோ ஒரு நகரம் அல்லது கிராமத்தில் இந்த மாதிரி ஏதாவது பெண்களுக்கு நடந்துட்டு இருக்க வாய்ப்பு இருக்கு..

ஆனந்தி.. said...

@jothi
நன்றி ஜோ...நீங்க சொன்னது உண்மை தான்..

ராஜகோபால் said...

நல்லாருக்கு ஆனா அந்த மூக்கு அருந்த படத்த பொட்டுருக்க வேண்டாம்.

ஆனந்தி.. said...

@ராஜகோபால்
நன்றி ராஜகோபால்..எனக்கும் தனிப்பட்ட முறையில் அந்த படத்தை போட விருப்பம் இல்லை தான்..ஆனால் ஒரு பெண்ணை இந்த அளவுக்கு கூட கொடுமை படுத்த முடியும் னு இந்த போட்டோ தான் உலகம் பூராவும் உணர்த்தியது..அதனால் தான் இதை இங்கு பதிவிட்டேன்..

ஆனந்தி.. said...

//உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கின்றது தொடர்ந்து எழுதுங்க..//மிக்க நன்றி தோழி..உங்கள் ஊக்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி..

kavisiva said...

ரொம்ப நல்லா தொகுத்து இருக்கீங்க ஆனந்தி. கவிதாயினிக்கு இதை சொல்லித் தரணுமா என்ன?

இந்த முன்னேற்றம் தொடரணும். பெண்களும் தங்கள் உரிமை என்னங்கறதை சரியா புரிஞ்சுக்கணும்.

ஆனந்தி.. said...

@kavisiva
கவிதாயினியா??..கவிக்குயில் கவிசிவா இது கொஞ்சம் ஓவரா இல்ல..:-))

ஆயிரத்தில் ஒருவன் said...

//முகம் முழுசும் மறைத்து திரைசீலைக்குள் வீட்டுக்குளே முடங்கி கிடந்த நிறைய திறமையான பெண்கள் ராணுவ உடையில் மிடுக்காய் இனி வலம் வர போறாங்க..//

சாதனை படைக்க வாரீர்

இது பற்றிய பதிவு இதையும் பார்க்கலாம்
ஏன் பெண் என்று பிறந்தாய்
http://aayiraththilloruvan.blogspot.com/2010/08/blog-post_12.html

ஆனந்தி.. said...

@ஆயிரத்தில் ஒருவன்
நன்றி..ஆயிரத்தில் ஒருவன்..

Rajesh kumar said...

தாலிபான்களால் காதுகள் மற்றும் மூக்கு அறுக்கப்பட ஆயிஷா பீபிக்கு அமெரிக்காவில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கும் காதுகளும் திரும்பக் கிடைத்துவிட்டதாம்.கேள்விப்பட்டீர்களா?

ஆனந்தி.. said...

@Rajesh kumar
ஆமாம்..ராஜேஷ்! நானும் நேத்து தான் படிச்சேன்...அதையும் இதோட அப்டேட் பண்ணிடுறேன் சீக்கிரம் ...ரொம்ப நன்றி ராஜேஷ்..

Annamalai said...

அந்த பெண்ணுக்கு இப்பொழுது
மூக்கும் முகமும் அறுவை சிகச்சை மூலம்
சரிசெய்யப்பட்டது(அமெரிக்காவில்)

ஆனந்தி.. said...

feedback:
dated 28/10/10 மேற்கண்ட போஸ்ட் டில் உள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்த மூக்கு வெட்டு பட்ட ஆயிஷா அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமாக உள்ளார்..இதை எனக்கு நினைவூட்டிய சகோதரர் ராஜேஷ், சகோதரர் அண்ணாமலைக்கு என் நன்றிகள்...தற்போதைய ஆயிஷாவின் புகைப்படத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன்...

komu said...

ஆனந்தி. உங்க ப்ளாக் சூப்பரா, கலர்ஃபுல்லா இருக்கு.

ஆனந்தி.. said...

@komu

நன்றி கோம்ஸ்...நீங்க சொன்னது ஒரு வருஷம் தாங்கும்..ஹ ஹ...திருப்பி..திருப்பி இப்படி லாம் வந்து சொல்லிட்டு போங்க...படிக்க நல்லா இருக்கு..(ஆமாம் கோம்ஸ் நீங்க காமடி..கீமடி பண்ணலையே...:))) ) apart from jokes...thank you goms..