January 4, 2011

ஆண்களே! இது உங்களுக்கான பதிவு..:)))என்னடா..ஆண்களுக்கான பதிவுன்னால் "குண்டக்க..மண்டக்க"(?!?!%#%) இருக்குமோனு என்னை மாதிரியே யோசிக்காமல்..பெண்களே தைரியமா நீங்களும் படிக்கலாம்:)))


சரி விஷயத்துக்கு வரேன்.."ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடி ஒரு பெண் இருப்பாள் " அப்படின்னு நம்ம எள்ளு தாத்தாவோட கொள்ளு தாத்தா வரைக்கும் எல்லாரும் சொன்ன  விஷயம்...இன்னும் சொல்ற  விஷயம்..! ஸோ,அதை பேசினால் மாமூல்..இப்ப கொஞ்சம் உல்ட்டாவான விஷயம் சொல்ல போறேன்  :))"ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னாடி ஒரு ஆண் இருப்பான்" ன்னு அவ்வளவு உறுதியாக..பரவலாக..நிச்சயமாக..

சத்தியமாக :)))) எல்லாரும் சொல்றாங்களா?? :)) நோ தானே...:))


ஆனால் அப்படி கொஞ்சூண்டு :)) உறுதியாய் சொல்றமாதிரி சில சம்பவங்களும் அங்க இங்கனு நடக்குது...


ஏன் இவ்வளவு பில்டப் ன்னால் இப்போ லேட்டஸ்ட் ஆ ஒரு அழகான செய்தி படிச்சேன்...அதான் இந்த பதிவையே எழுத தூண்டுச்சு...


அம்பிகா,10 ம் வகுப்பில்,திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடம்,ஆனால் குடும்பத்தில் வறுமையும் முதலிடம். படிக்க வழியில்லாமல் உறவு பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க..அவள் கணவர் மனைவியின்
திறமை தெரிஞ்சு படிக்க வச்சிருக்கார்...இப்போ அந்த பொண்ணு ,
அம்பிகா I.P.S.,
 w/o திருப்பதி சாமி (போலீஸ் கான்ஸ்டபிள்)அப்புறம் சில பயோக்ராபிஸ் படிக்கும்போது நான் வியந்த, மேலும் சில நிஜங்கள் இதோ...

முதலில் குழந்தைகளை பார்த்துக்கிற கேர் டேக்கர் வேலை பார்த்துட்டு இருந்த புத்திசாலி போலந்து பொண்ணு தான் மரியா ..தன் கூடவே ஆராய்ச்சி செய்ய வச்சு அருமையா ஊக்கபடுத்தியது அவங்க கணவர் தான். மரியா  கதிரியக்கங்களை பற்றி ஆராய்ச்சி பண்ணி..நோபல் பரிசு எல்லாம் கூட வாங்கினாங்க..ரெண்டு வாட்டி..! வெறும் மரியா னால் புரியாது உங்களுக்கு. .இப்ப தெரியுதான்னு பாருங்க..
Dr. மேரி க்யுரி ,
w/o Dr. பியரி க்யூரி (வேதியல் நிபுணர்) 


பஞ்சாப் ல படிச்ச கல்பனா  ங்கிற பொண்ணு எக்கச்சக்க கனவோட விண்வெளி இயல் எல்லாம் படிக்க அமெரிக்கா வந்துச்சு.அந்த பொண்ணை ஊக்கபடுத்தி விமான பயிற்சி சொல்லி கொடுத்தது கூட கல்பனாவின் கணவர் தான்..இந்த பயிற்சி எல்லாம் கல்பனாவுக்கு பின்னாளில் NASA வில் ரொம்ப உபயோகமா இருந்தது...இது யாருன்னு புரிஞ்சிருப்பிங்க...
கல்பனா சாவ்லா,
w/o ஹாரிசன் (விமான பயிற்சியாளர்)

 

கேட்டது...படிச்சது தானே சொல்ற...கண்ணால ஏதாவது பார்த்திருக்கியானு மாற்று கருத்து:)) கேட்க போறிங்களா?..ம்ம்..இதையும் தொடர்ந்து படிங்க...
வலிப்பு நோயின் காரணமாய் ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மையில் மனத்தால் இறுகிபோய் வீட்டை விட்டே வெளியே வராத ஒரு பெண்ணை அவள் கணவர்,அவள் போடும் அழகு கோலங்களை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி, அவள் திறமையை முதலில் அவளுக்கு உணர்த்தினார். இன்னைக்கு அந்த பெண் எம்பிராய்டரி, ஹன்டி கிராப்ட்ஸ் சொல்லி கொடுக்கும் பிஸி ஆசிரியை...அவங்க,

தேவகி அக்கா,
w/o செழியன் அண்ணா (பழைய பேப்பர் வியாபாரி) 


என் உதாரணங்கள் கூட அங்க இங்கனு கூட்டி கழிச்சு விரல் வச்சே எண்ணி விடுகிற நிலைமை தான் இல்லையா? இந்த எண்ணிக்கைகள் எண்ணவே முடியாத infinitive  ஆ போக கூடிய நிலைமைக்கு வரணுங்கிறது தான் என் பிக் பிக்.. வெரி வெறி ஆசை..:))


ஒரு பக்குவபட்ட ஆண் நினைத்தால் அவன் மனைவியை சிற்பமாய் செதுக்க முடியும். மாமூலான விஷயங்கள் தவிர்த்து ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏதோ ஒரு சிறப்பு டேலேன்ட் உறுதியாய் இருக்கும். அதை கொஞ்சம் தூசி தட்டி விட்டாலே போதும்...அவள் பிரகாசிப்பாள்..ஜொலி ஜொலிப்பாள்..ஸோ...

கல்யாணம் ஆன ஆண்களே...தீர்மானிங்க! :))
கல்யாணம் ஆகாத ஆண்களே...யோசிங்க..! :))டிஸ்கி.."போம்மா..நீ வேற..எங்க வீட்டம்மா கிட்ட தெனமும் கும்மாங்குத்து:)) வாங்கி..வாங்கி இப்ப பேச முடியாம வாய் கூட வீங்கி கெடக்கு " ன்னு புலம்பும் பச்ச புள்ள ஆண்களுக்கான டிப்ஸ் : " ஏன் நீங்க அவங்களை ஊக்க படுத்தி ஒரு கராத்தே மாஸ்டர் ஆகவோ..ஒரு குங்-பூ வீராங்கனையாவோ ஆக்க கூடாது."..:)))ஆண்களே இதையும் கொஞ்சம் யோசிங்க...:)))))) 

120 comments:

சௌந்தர் said...

அட எங்களை ரொம்ப நல்லவங்க சொல்றிங்க நீங்க ரொம்ப நல்லவங்க பல பெண்கள் இதை சொல்லவேண்டும் என்றால் பல ஆண்கள் இப்படி இவர்களை போல உதவி செய்ய வேண்டும்

ஆனந்தி.. said...

@சௌந்தர்
நான் தான் சொல்றேனே...நீ நல்லவன்..நல்லவன்னு...:)))

சௌந்தர் said...

ஆனந்தி.. said... 2
@சௌந்தர்
நான் தான் சொல்றேனே...நீ நல்லவன்..நல்லவன்னு...:)))////

இங்கயுமா ..... காலையில் சொல்லும் போதே லைட்டா தெரிந்தது நல்லவன் பதிவு வரும்னு good rompa super

dineshkumar said...

கல்யாணம் ஆகாத ஆண்களே...யோசிங்க..! :))

கண்டிப்பா யோசிக்கிறேன் நல்ல பகிர்வு

நா.மணிவண்ணன் said...

///கல்யாணம் ஆகாத ஆண்களே...யோசிங்க..! :))///

யோசிக்கிறேன் .


ஆனா டிஸ்கில ஆண்கள்மேல் கொலவெறி தாக்குதல் ஏன் . கல்யாணம் ஆண்கள் பாவம்

ஆனந்தி.. said...

@சௌந்தர்
/இங்கயுமா ..... காலையில் சொல்லும் போதே லைட்டா தெரிந்தது நல்லவன் பதிவு வரும்னு good rompa super//

:))))

ஆனந்தி.. said...

@dineshkumar
//கல்யாணம் ஆகாத ஆண்களே...யோசிங்க..! :))

கண்டிப்பா யோசிக்கிறேன் நல்ல பகிர்வு//
நன்றிங்க தினேஷ்..:)

ஆனந்தி.. said...

@நா.மணிவண்ணன்
சே..சே...நோ கொல வெறி சகோ மணி...எல்லாமே ஒரு சகோதரா பாசம் தான்..:)))

சௌந்தர் said...

நா.மணிவண்ணன் said... 5
///கல்யாணம் ஆகாத ஆண்களே...யோசிங்க..! :))///

யோசிக்கிறேன் .


ஆனா டிஸ்கில ஆண்கள்மேல் கொலவெறி தாக்குதல் ஏன் . கல்யாணம் ஆண்கள் பாவம்///

விடுங்க விடுங்க நேத்து வீட்டுலே திட்டு வாங்கி இருப்பாங்க

ஆனந்தி.. said...

@சௌந்தர்

சௌந்தர் ..நீ ரொம்ப ஜீனியஸ் டா...:))))

ஆமினா said...

கலக்கல் பதிவு ஆனந்தி...

கண்டிப்பா பெண்களின் வெற்றிக்கு பின்னும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

பிரபு எம் said...

//கல்யாணம் ஆகாத ஆண்களே...யோசிங்க..! :))//

சரி நான் யோசிக்கிறேன்...
நான் யோசிக்குற டைம்ல எனக்கு நீங்களே.. நல்லா படிக்கவெச்சா ஐபிஎஸ் அல்லது ஐஏஎஸ் ஆகுறமாதிரி ஒரு பொண்ணு பாருங்க.... நானும் விக்ரமன் படத்துல வர்ற மாதிரி ஒரே பாட்டுல வொய்ஃபை ட்ரெயின்ல அனுப்பிவெச்சு கலெக்டர் ஆக்கிடுறேன்..... நானும் சைடுல ஒரு தொழிலதிபராகிட்டேன்னா லைஃப்ல‌ செட்டில் ஆகிட‌லாம் பாருங்க‌!!! நீங்க‌வேற‌ இந்த‌ ச‌கோவைப் பாராட்டி ஒரு ப‌திவு போட்ருவீங்க‌.... :)))
ந‌ல்லா இருக்கே இந்த‌ விஷ‌ய‌ம்..... ந‌ட்ச‌த்திர‌ ஜ‌ன்ன‌லில் வான‌ம் எட்டிப்பாக்குது...லால‌லால‌லாலா....!! :)))

ஆனந்தி.. said...

@ஆமினா

ஆமாண்டா ஆமி கண்ணா..ஆனால் நிறைய இல்ல..:)) புளுக்கூண்டு..:))

ஆனந்தி.. said...

@பிரபு எம்

//சரி நான் யோசிக்கிறேன்...
நான் யோசிக்குற டைம்ல எனக்கு நீங்களே.. நல்லா படிக்கவெச்சா ஐபிஎஸ் அல்லது ஐஏஎஸ் ஆகுறமாதிரி ஒரு பொண்ணு பாருங்க.... நானும் விக்ரமன் படத்துல வர்ற மாதிரி ஒரே பாட்டுல வொய்ஃபை ட்ரெயின்ல அனுப்பிவெச்சு கலெக்டர் ஆக்கிடுறேன்..... நானும் சைடுல ஒரு தொழிலதிபராகிட்டேன்னா லைஃப்ல‌ செட்டில் ஆகிட‌லாம் பாருங்க‌!!! நீங்க‌வேற‌ இந்த‌ ச‌கோவைப் பாராட்டி ஒரு ப‌திவு போட்ருவீங்க‌.... :)))
ந‌ல்லா இருக்கே இந்த‌ விஷ‌ய‌ம்..... ந‌ட்ச‌த்திர‌ ஜ‌ன்ன‌லில் வான‌ம் எட்டிப்பாக்குது...லால‌லால‌லாலா....!! :))//

நாசமா போச்சு..இந்த கொடுமை வேறயா..:)) சயனைடுக்கும் சரிப்பட மாட்டிங்க போல...ம்ம்...விருதகிரி டிவிடி இப்போ என் கையில...மும்பைக்கு அனுப்பிறவா...?!! எஸ் ஆ ...சரியா..??? :))))))

சி. கருணாகரசு said...

நல்ல பகிர்வுங்க.... அந்த அளவுக்கு இல்லைன்னாலும்... நான் நல்ல கணவன இருக்கிறேன்.....
சிஎதிக்க வைக்கும் பதிவுதான் பாராட்டுக்கள்....

வைகை said...

அவங்கல்லாம் நல்லதுக்கு பின்னாடி நின்னாங்க...இங்க பாருங்க லஞ்சம் வாங்க கத்து கொடுத்து பின்னாடி நிக்கிறத! நீங்க அந்த டேப்ப கேக்கலியா?!

பிரபு எம் said...

வெல்...ஜோக்ஸ் அப்பார்ட்...

அழ‌கான‌ ப‌திவு ச‌கோ (வ‌ழ‌க்க‌ம்போல‌!)

//ஒரு பக்குவபட்ட ஆண் நினைத்தால் அவன் மனைவியை சிற்பமாய் செதுக்க முடியும். மாமூலான விஷயங்கள் தவிர்த்து ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏதோ ஒரு சிறப்பு டேலேன்ட் உறுதியாய் இருக்கும். அதை கொஞ்சம் தூசி தட்டி விட்டாலே போதும்...அவள் பிரகாசிப்பாள்..ஜொலி ஜொலிப்பாள்..//

இதுல‌ ஆண் பெண்னு நான் யோசிக்க‌ல‌ ச‌கோ..... வெற்றிக‌ர‌மான‌ ஆணுக்குப் பின்னாடி பெண்ணும்... பெண்ணுக்குப் பின்னாடி ஆணும் இருக்கிறார்க‌ள்னு சொல்லுற‌த‌ விட‌ இருக்க‌ணும்...!! அதுக்குத்தானே க‌ல்யாண‌ம்!! :)

இங்கே ச‌ம‌ச்சுப் போடுற‌துக்காக‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணுற‌ ஆட்க‌ளையெல்லாம் பாத்து இருக்கேன்... எதிர்பார்த்த மாதிரியே அவ‌ங்க‌ சாப்பாடு க‌ஷ்ட‌ம் தீந்திடிச்சு ஐ மீன் டு ஸே ந‌ல்லா ச‌மைய‌ல் க‌த்துக்கிட்டு அவ‌ங்க‌ வொய்ஃபுக்கும் சேர்த்து டிஃப‌ன் பாக்ஸ் பேக் ப‌ண்ணுறாங்க‌!! :))))

"ஏய்.. என்ன‌டி காஃபி போட்டிருக்க‌"ன்னு ச‌த்த‌மா ச‌வுண்டு விட்டுக்கிட்டே காஃபி போடுற‌ என் கூட‌ வேல‌ பாக்குற‌ ஒருத்த‌ன் இருக்கான் தெரியுமா!! :) "பாருடி நீ துவைச்ச‌ ல‌ட்ச‌ண‌ம்.."னு ச‌வுண்டு வ‌ந்தா த‌லைவ‌ர் வாஷிங் மெஷின்ல பிஸியா இருக்காருன்னு அர்த்த‌ம்.... கேட்டா இமேஜ் ரொம்ப‌ முக்கிய‌மாம்...ஹ‌ஹ‌ஹ‌ஹா...

ந‌ல்ல‌ கான்செப்ட் ச‌கோ... சில‌பேருக்கு அவ‌ங்க‌ திற‌மையை நோக்கிய‌ ப‌ய‌ண‌த்துக்கு வீட்டுல‌ அப்பா அம்மாவே த‌டையாகிடுறாங்க‌ அவ‌ங்க‌ளுக்கு நீங்க‌ சொல்லுற‌ மாதிரி ப‌க்குவ‌மான‌ வாழ்க்கைத்துணை அமையும்போது அற்புத‌மா ஆகிடுது!! நைஸ் ச‌கோ... க‌ல‌க்குங்க‌ க‌ல‌க்குங்க‌!!! :)

மாணவன் said...

//கல்யாணம் ஆகாத ஆண்களே...யோசிங்க..! :))//

எப்படி கல்யாணமே வேண்டான்னா?

ஹிஹிஹி

மாணவன் said...

//ஒரு பக்குவபட்ட ஆண் நினைத்தால் அவன் மனைவியை சிற்பமாய் செதுக்க முடியும். மாமூலான விஷயங்கள் தவிர்த்து ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏதோ ஒரு சிறப்பு டேலேன்ட் உறுதியாய் இருக்கும். அதை கொஞ்சம் தூசி தட்டி விட்டாலே போதும்...அவள் பிரகாசிப்பாள்..ஜொலி ஜொலிப்பாள்.//

யா.. பொன்னுங்க எப்பவுமே so Cleverயா...

நல்ல பதிவு தொடர்ந்து இதுபோன்ற நல்ல தகவல்களை வழங்குங்கள்.......

Gopi Ramamoorthy said...

:)

முடிந்தவரை ஊக்கு, பின் எல்லாம் வித்துத்தான் எல்லாம் பண்றோம். வீட்டுல உள்ளவங்க சோம்பேறியா இருந்தா என்ன பண்ணலாம் சொல்லுங்க:))

மாணவன் said...

//ஆனந்தி.. said... 13
@ஆமினா

ஆமாண்டா ஆமி கண்ணா..ஆனால் நிறைய இல்ல..:)) புளுக்கூண்டு..:))//

என்னா ஒரு வில்லத்தனம்... ஏங்க நாங்க என்ன உங்களுக்கு பா........

தோழி பிரஷா said...

கலக்கல் பதிவு ஆனந்தி அக்கா..
'என் வளர்ச்சிக்கு காரணம் என் ஆத்துக்காரர் தான் அக்கா.

karthikkumar said...

பிரபு எம் said...12
//கல்யாணம் ஆகாத ஆண்களே...யோசிங்க..! :))//

சரி நான் யோசிக்கிறேன்...
நான் யோசிக்குற டைம்ல எனக்கு நீங்களே.. நல்லா படிக்கவெச்சா ஐபிஎஸ் அல்லது ஐஏஎஸ் ஆகுறமாதிரி ஒரு பொண்ணு பாருங்க.... நானும் விக்ரமன் படத்துல வர்ற மாதிரி ஒரே பாட்டுல வொய்ஃபை ட்ரெயின்ல அனுப்பிவெச்சு கலெக்டர் ஆக்கிடுறேன்..... நானும் சைடுல ஒரு தொழிலதிபராகிட்டேன்னா லைஃப்ல‌ செட்டில் ஆகிட‌லாம் பாருங்க‌!!! நீங்க‌வேற‌ இந்த‌ ச‌கோவைப் பாராட்டி ஒரு ப‌திவு போட்ருவீங்க‌.... :)))
ந‌ல்லா இருக்கே இந்த‌ விஷ‌ய‌ம்..... ந‌ட்ச‌த்திர‌ ஜ‌ன்ன‌லில் வான‌ம் எட்டிப்பாக்குது...லால‌லால‌லாலா....!! :)))///
தப்பு தப்பு நட்சத்திர ஜன்னல் வரிகள் மட்டும்தான் நீங்க பாடனும்.. லால‌லால‌லாலா வந்து சின்ன பிரபு (அதாவது உங்க மகன் ) வந்துதான் பாடனும்..:)

karthikkumar said...

நல்ல விஷயம் சொல்லிருகீங்க...
எனக்கு ஒரு டவுட்டு உங்கள இந்த மாதிரி ப்ளாக் எழுத சொல்லி (எங்கள கொல்ல சொல்லி) உங்க கணவர்தான் ஊக்குவித்தாரா...:)

Rajeevan said...

i will write detaily later.

Harini Nathan said...

கண்டிப்பா பெண்களின் வெற்றிக்கு பின்னும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் :)
supper பதிவு ஆனந்தி... :)

சிவகுமாரன் said...

ரொம்ப பெருமையா இருக்குங்க.என் மனைவியை படிக்கச் சொல்லணும், கொஞ்சம் அந்த டிஸ்கியை எடுத்துருங்களேன்.

Lakshmi said...

amaa aananthi naanum unside thaan.

அந்நியன் 2 said...

ரொம்பத்தான் யோசிக்க வச்சிட்டியே ஆனந்தி.....penkalin vetrikku பின்னால் ivvalavu aankal iruppadhu santhosamaaka இருக்கின்றது நல்ல padhivu vaazhththukkal.

அப்பாவி தங்கமணி said...

super ananthi... kalakkal post... very well said... this count should be infinitive... lastla sonna matter superooo super...neraya karathe masters varuvaangannu edhirpaarppom...ha ha ha...just kidding... nice post honestly

Philosophy Prabhakaran said...

// கல்யாணம் ஆகாத ஆண்களே...யோசிங்க..! //

ஆமாமா இப்பவே யோசிச்சாதான் உண்டு... கல்யாணம் முடிஞ்சப்புறம் யோசிக்க முடியாது... யோசிச்சாலும் பலனில்லை...

சி.பி.செந்தில்குமார் said...

ஏதோ திட்டித்தான் எழுதி இருக்கீங்களோன்னு டைட்டிலை பார்த்ததும் நினைச்சேன். ஆனா மேட்டரு உல்டாவா நல்லாருக்கு

உங்களுள் ஒருவன் said...

நல்ல பதிவு......

ஆண்களே யோசிங்க....... உங்களுக்கு முன் ஒரு பொண்ணு இருக்க வேண்டுமா இல்ல பின்னல் ஒரு பொண்ணு இருக்க வேண்டுமான்னு.........

vanathy said...

மேடம் மேர் க்யூரி இறுதி நாட்களில் புற்று நோய் வந்து மிகவும் கஷ்டப்பட்டதாக புத்தகத்தில் படித்த ஞாபகம்.

இப்படிபட்ட கணவர் அமைந்தால் வாழ்க்கையே சொர்க்கம் தான்.

இறுதி டிஸ்கி தான் கொஞ்சம் ஆண்களுக்கு ஆப்பு வைப்பதாக இருக்கு. கராத்தே, குங்பூ எல்லாம் கற்று வந்தால் இன்னும் நிறைய அடி வாங்க வேண்டி இருக்குமே.

ம.தி.சுதா said...

தலைப்பை படிச்சதுமே ஓடி வந்துட்டேனே...


அருமையாக இருக்கிறது..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel

பார்வையாளன் said...

இடுகையை விட டிஸ்கிதான் பல உண்மைகளை பளிச் என எடுத்துகாட்டியது

Balaji saravana said...

//ஒரு பக்குவபட்ட ஆண் நினைத்தால் அவன் மனைவியை சிற்பமாய் செதுக்க முடியும். மாமூலான விஷயங்கள் தவிர்த்து ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏதோ ஒரு சிறப்பு டேலேன்ட் உறுதியாய் இருக்கும். அதை கொஞ்சம் தூசி தட்டி விட்டாலே போதும்...அவள் பிரகாசிப்பாள்..ஜொலி ஜொலிப்பாள்.//
மிகச் சரி ஆனந்தி!சிறப்பான கட்டுரை சகோ!

//ஏன் நீங்க அவங்களை ஊக்க படுத்தி ஒரு கராத்தே மாஸ்டர் ஆகவோ..//

ரைட்டு! இப்போ தான் தெரியுது நீங்க ஏன் கராத்தே க்ளாஸ் போறீங்கன்னு ;)

ஆனந்தி.. said...

@சி. கருணாகரசு

மிக்க நன்றி அன்பின் கருணாகரசு!

ஆனந்தி.. said...

@வைகை

ஹாய் வைகை...நான் எல்லாரையுமே சொல்லலை...குப்பைக்குள் கிடக்கும் மாணிக்கங்கள் பத்தி மட்டும் தான் குறிப்பிட்டேன்...:)))

ஆனந்தி.. said...

@பிரபு எம்

//இதுல‌ ஆண் பெண்னு நான் யோசிக்க‌ல‌ ச‌கோ..... வெற்றிக‌ர‌மான‌ ஆணுக்குப் பின்னாடி பெண்ணும்... பெண்ணுக்குப் பின்னாடி ஆணும் இருக்கிறார்க‌ள்னு சொல்லுற‌த‌ விட‌ இருக்க‌ணும்...!! அதுக்குத்தானே க‌ல்யாண‌ம்!! :)//

ஹாய் சகோ...:)))) கட்டாயம் நீங்க சொல்றது தான் நாம எல்லாருமே நினைக்கிறது..:)) ஆனால் இந்த balanced ஆ இல்லைங்கிறது தான் இந்த பதிவின் நோக்கம்...:)))

ஆனந்தி.. said...

@பிரபு எம்

//ந‌ல்ல‌ கான்செப்ட் ச‌கோ... சில‌பேருக்கு அவ‌ங்க‌ திற‌மையை நோக்கிய‌ ப‌ய‌ண‌த்துக்கு வீட்டுல‌ அப்பா அம்மாவே த‌டையாகிடுறாங்க‌ அவ‌ங்க‌ளுக்கு நீங்க‌ சொல்லுற‌ மாதிரி ப‌க்குவ‌மான‌ வாழ்க்கைத்துணை அமையும்போது அற்புத‌மா ஆகிடுது!!//
உண்மை பிரபு...நிறைய பெண்கள் பிறந்த வீட்டில் சாதிக்காததை புகுந்த வீட்டில் கணவரின் சப்போர்ட் இல் ஜெயிச்சு காமிப்பாங்க..ஆனால் நிறைய பெண்கள் புகுந்த வீடு போயி ஒன்னுமில்லாமல் போய்டுறாங்க...

ஆனந்தி.. said...

@பிரபு எம்

//இங்கே ச‌ம‌ச்சுப் போடுற‌துக்காக‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணுற‌ ஆட்க‌ளையெல்லாம் பாத்து இருக்கேன்... எதிர்பார்த்த மாதிரியே அவ‌ங்க‌ சாப்பாடு க‌ஷ்ட‌ம் தீந்திடிச்சு ஐ மீன் டு ஸே ந‌ல்லா ச‌மைய‌ல் க‌த்துக்கிட்டு அவ‌ங்க‌ வொய்ஃபுக்கும் சேர்த்து டிஃப‌ன் பாக்ஸ் பேக் ப‌ண்ணுறாங்க‌!! :))))

"ஏய்.. என்ன‌டி காஃபி போட்டிருக்க‌"ன்னு ச‌த்த‌மா ச‌வுண்டு விட்டுக்கிட்டே காஃபி போடுற‌ என் கூட‌ வேல‌ பாக்குற‌ ஒருத்த‌ன் இருக்கான் தெரியுமா!! :) "பாருடி நீ துவைச்ச‌ ல‌ட்ச‌ண‌ம்.."னு ச‌வுண்டு வ‌ந்தா த‌லைவ‌ர் வாஷிங் மெஷின்ல பிஸியா இருக்காருன்னு அர்த்த‌ம்.... கேட்டா இமேஜ் ரொம்ப‌ முக்கிய‌மாம்...ஹ‌ஹ‌ஹ‌ஹா...//

தங்கமே...இப்ப என்ன தான் சொல்ல வரிங்க.??? ஹ ஹ...ஹ ஹ...அவங்கல்லாம் கும்மாங்குத்து பீஸு சகோ...:)))

ஆனந்தி.. said...

@மாணவன்

////கல்யாணம் ஆகாத ஆண்களே...யோசிங்க..! :))//

எப்படி கல்யாணமே வேண்டான்னா?

ஹிஹிஹி//

ஆஹா சகோ ...நாங்க சொல்லிட்டாலும் நீங்க ஏதோ விவேகானந்தா ரேஞ்சுக்கு மாறிடுற மாதிரி பில்டப் வேற...:))) நித்யானந்தாவா மாறாமல் இருந்தால் சரி...:)))))

ஆனந்தி.. said...

@மாணவன்
//யா.. பொன்னுங்க எப்பவுமே so Cleverயா...//

ஓகே ஓகே......:))))

ஆனந்தி.. said...

@Gopi Ramamoorthy


//முடிந்தவரை ஊக்கு, பின் எல்லாம் வித்துத்தான் எல்லாம் பண்றோம். வீட்டுல உள்ளவங்க சோம்பேறியா இருந்தா என்ன பண்ணலாம் சொல்லுங்க:))//

கோபி...இந்த மாதிரி ஒரு பின்னூட்டம் வரணும்னு தான் ரொம்ப எதிர்பார்த்தேன்..நன்றி கோபி...நான் இந்த பதிவு போடும்போதே அதன் இன்னொரு பக்கமும் யோசிச்சு வச்சுட்டேன்..நீங்க சொன்ன கருத்துக்களை நான் வெகுவா யோசிச்சிருக்கேன்...அதை பத்தி தனியா ஒரு பதிவு போட போறேன்..

ஆனந்தி.. said...

@மாணவன்
மாணவன் said... 21

//ஆனந்தி.. said... 13
@ஆமினா

ஆமாண்டா ஆமி கண்ணா..ஆனால் நிறைய இல்ல..:)) புளுக்கூண்டு..:))//

என்னா ஒரு வில்லத்தனம்... ஏங்க நாங்க என்ன உங்களுக்கு பா........///

யா.. பொன்னுங்க எப்பவுமே so Cleverயா...:))))))))))))ha ha...

ஆனந்தி.. said...

@தோழி பிரஷா
//'என் வளர்ச்சிக்கு காரணம் என் ஆத்துக்காரர் தான் அக்கா. //
அப்டியாங்க கலக்கல் தங்கச்சி...ரொம்ப சந்தோஷம் டா..:))))

ஆனந்தி.. said...

@karthikkumar

//தப்பு தப்பு நட்சத்திர ஜன்னல் வரிகள் மட்டும்தான் நீங்க பாடனும்.. லால‌லால‌லாலா வந்து சின்ன பிரபு (அதாவது உங்க மகன் ) வந்துதான் பாடனும்..:)//

இந்த பஞ்சாயத்து வேறயா...:))))))))

ஆனந்தி.. said...

@Rajeevan

ok..rajiv..take ur own time..:))

ஆனந்தி.. said...

@Harini Nathan
நன்றி ஹரிணி:)))

ஆனந்தி.. said...

@சிவகுமாரன்

//ரொம்ப பெருமையா இருக்குங்க.என் மனைவியை படிக்கச் சொல்லணும்,//

நன்றி சிவா...ரொம்ப சந்தோஷம்...அப்புறம் அந்த டிஸ்கி யை ஒட்டியும் நிறைய பின்னூட்டங்கள் வருது..இன்னும் ரெண்டு சகோ அது பற்றி மாற்று கருத்து சொன்னால் கூட கட்டாயம் தூக்கிடுறேன் சிவா..:)))

ஆனந்தி.. said...

@Lakshmi

thank you aunty:))

ஆனந்தி.. said...

@அந்நியன் 2
ரொம்ப நன்றி சகோ அந்நியன் :))) அதென்ன பாதி தமிழ்..பாதி ஆங்கிலம்..?:))))

ஆனந்தி.. said...

@அப்பாவி தங்கமணி

//lastla sonna matter superooo super...neraya karathe masters varuvaangannu edhirpaarppom...///

ஹ ஹ...நல்ல பெண்ணியவாதி:))) போலே என் தோழி தங்கமணி...ரங்கமணி நிலைமை என்னனு தெரிலையே...ஹ ஹ...:)))))

ஆனந்தி.. said...

@Philosophy Prabhakaran

//ஆமாமா இப்பவே யோசிச்சாதான் உண்டு... கல்யாணம் முடிஞ்சப்புறம் யோசிக்க முடியாது... யோசிச்சாலும் பலனில்லை..//

எதுக்கு பிரபா யோசனை??....குங்-பூ அடி வாங்கவா? ஹஹாஹ்...

ஆனந்தி.. said...

@உங்களுள் ஒருவன்
//ஆண்களே யோசிங்க....... உங்களுக்கு முன் ஒரு பொண்ணு இருக்க வேண்டுமா இல்ல பின்னல் ஒரு பொண்ணு இருக்க வேண்டுமான்னு......... //

நன்றி உங்களுள் ஒருவன்:)))

ஆனந்தி.. said...

@சி.பி.செந்தில்குமார்

//ஏதோ திட்டித்தான் எழுதி இருக்கீங்களோன்னு டைட்டிலை பார்த்ததும் நினைச்சேன். ஆனா மேட்டரு உல்டாவா நல்லாருக்கு //

ஹ ஹ...அப்டியா சிபி..இந்த பசங்க இப்படி தான் தப்பு தப்பா புரிஞ்சுக்குவாங்க பொண்ணுங்களை...:)))))

ஆனந்தி.. said...

@vanathy

//மேடம் மேர் க்யூரி இறுதி நாட்களில் புற்று நோய் வந்து மிகவும் கஷ்டப்பட்டதாக புத்தகத்தில் படித்த ஞாபகம்.//

ஆமாம் வாணி...மேரி யின் கணவர் ஒரு சாரட் வண்டி விழுந்து முடியாமல் போயி இறந்து போய்ட்டாங்க...அப்போ இருந்தே மேரி கொஞ்சம் டல்..இருந்தும் அப்புறமும் சாதிச்சங்க..அவங்களோட கண்டுபிடிப்பான கதிரியக்க பரிசோதனை வீச்சின் தாக்கம் அவங்களுக்கு புற்று நோயை கொண்டு வந்திருச்சு...:(

ஆனந்தி.. said...

@vanathy

/இறுதி டிஸ்கி தான் கொஞ்சம் ஆண்களுக்கு ஆப்பு வைப்பதாக இருக்கு. கராத்தே, குங்பூ எல்லாம் கற்று வந்தால் இன்னும் நிறைய அடி வாங்க வேண்டி இருக்குமே//

ஹ ஹ..அது ஆப்பு இல்லை வாணி..சகோதர பாசம்...:))))

ஆனந்தி.. said...

@ம.தி.சுதா
//தலைப்பை படிச்சதுமே ஓடி வந்துட்டேனே...//
தேங்க்ஸ் சகோ.மதி..:)

ஆனந்தி.. said...

@பார்வையாளன்

//இடுகையை விட டிஸ்கிதான் பல உண்மைகளை பளிச் என எடுத்துகாட்டியது//

ஹ ஹ...அப்போ செம அனுபவம் இருக்கு போலே...:))))

கணேஷ் said...

நல்ல பதிவு அக்கா..கொஞ்சம் தேடிபிடித்து கொடுத்து இருக்க்ன்றிர்கள்..

ஆனந்தி.. said...

@கணேஷ்

//நல்ல பதிவு அக்கா..கொஞ்சம் தேடிபிடித்து கொடுத்து இருக்க்ன்றிர்கள்..//

தேடிலாம் பிடிக்கல கணேஷ்...எல்லாமே நம்ம படிச்சது தான்...:)))

THOPPITHOPPI said...

யோசிக்க வேண்டிய விஷயம்தான். நல்லாதான் சொல்லி இருக்கீங்க

ஆனந்தி.. said...

@THOPPITHOPPI

ரொம்ப நன்றி அன்பின் சகோ!

கக்கு - மாணிக்கம் said...

ஆனந்தி அக்கா, ரொம்ப நல்ல பதிவக்கா. :)))

ஆனந்தி.. said...

@கக்கு - மாணிக்கம்

//ஆனந்தி அக்கா, ரொம்ப நல்ல பதிவக்கா. :)))//

நன்றி சித்தப்பா..:)))

Avargal Unmaigal said...

Mrs. Ananthi your post is very good. Madam do u know?
Behind every successful woman is a man who truly, madly, deeply loves her

ஆனந்தி.. said...

@Avargal Unmaigal

yes sir..like you:))

Chitra said...

ஒரு பக்குவபட்ட ஆண் நினைத்தால் அவன் மனைவியை சிற்பமாய் செதுக்க முடியும். மாமூலான விஷயங்கள் தவிர்த்து ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏதோ ஒரு சிறப்பு டேலேன்ட் உறுதியாய் இருக்கும். அதை கொஞ்சம் தூசி தட்டி விட்டாலே போதும்...அவள் பிரகாசிப்பாள்..ஜொலி ஜொலிப்பாள்..

......புது வருஷமும் அதுவுமா...... ஆண்களை பொங்க வச்சுட்டீங்களே...... பதிவு அதிரடிதான்.....
செம அட்வைஸ்மா.... அதை நகைச்சுவையோடு சொல்லிய விதம் - மிகவும் ரசித்தேன்..... அப்படி போடு!

ஜீ... said...

என்னென்னமோ சொல்றிங்க! வர வர ரொம்ப பயமா இருக்கு! :-)

komu said...

ஆனந்தி அப்படியா? எங்க வீட்ல எல்லாம் நேர் மாறான்னா இருக்கு.:

இரவு வானம் said...

உங்க டிஸ்கில இருக்குறத வேணா முயற்சி பண்ணி பார்க்கலாம் :-)

ஜெ.ஜெ said...

நல்ல பகிர்வு ஆனந்தி..

ஆனந்தி.. said...

@Chitra

தேங்க்ஸ் அம்மு :))

ஆனந்தி.. said...

@ஜீ...

//என்னென்னமோ சொல்றிங்க! வர வர ரொம்ப பயமா இருக்கு! :-)//

இப்பவே பயந்தால்...:))

ஆனந்தி.. said...

@komu

//ஆனந்தி அப்படியா? எங்க வீட்ல எல்லாம் நேர் மாறான்னா இருக்கு.://
அப்படினால்...நீங்க தினமும் பூரி கட்டையாலே அடி பொறிக்கிரிங்க போலே...வாழ்த்துக்கள் கோம்ஸ்..ட்ரைனிங் ப்ளீஸ்..:)))

ஆனந்தி.. said...

@இரவு வானம்

//உங்க டிஸ்கில இருக்குறத வேணா முயற்சி பண்ணி பார்க்கலாம் :-)//

நைட் ஸ்கை..நீங்க தான் மறத்தமிழன்...:))))))

ஆனந்தி.. said...

@ஜெ.ஜெ

நன்றி ஜெ.ஜெ.:))

Rajeevan said...

நல்ல பதிவு ஆனந்தி, உடனடியாக பின்னூட்டம் போடா முடியவில்லை! அனைத்து ஆண்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம் இது! என்னைப் பொறுத்த வரை நான் என்னுடைய மனைவியின் வெற்றிக்குப் பின்னால் இருக்கிறேன். இப்போது அவர் சென்னையில் உயர்கல்வி கற்றுவருகிறார்! நல்ல பதிவு! இதைப் படிக்கும்படி எனது மனைவிக்கும் லிங்க் அனுப்பியுள்ளேன்.

மதுரை பாண்டி said...

தன்னடக்கத்தோட நான் எஸ்கேப்!!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

பெண்களின் வெற்றிக்கு ஆண்களின் பங்கும் கண்டிப்பா உண்டு. நல்ல அழகா எழுதியிருக்கீங்க ஆனந்தி.. நல்ல பகிர்வு.


நான் நேற்றே கமாண்ட் போட எழுதி வைத்திருந்தேன். வேலையினால் விட்டுப்போச்சி..

பதிவுலகில் பாபு said...

பெண்களின் வெற்றிக்குப் பின்னாலும் ஆண்கள் இருக்காங்கன்னு.. முதன் முதல்ல படிக்கறேன்.. இப்படிப் பாராட்டறதுக்கு கண்டிப்பா பெரிய மனசு வேணும்.. நீங்களும்.. இவ்வாறு ஏதாவது சாதனை செய்ய வாழ்த்துக்கள்.. அட்லீஸ்ட் டிஸ்கில நீங்க சொல்லியிருக்கற மாதிரி.. :-)


பெண்களைப் பற்றி நான் எழுதியிருந்த பதிவை முடிஞ்சா படிங்க.. தப்பா இருந்தா சண்டைக்கு வரக்கூடாது ஓகேவா.. :-)

http://abdulkadher.blogspot.com/2010/12/blog-post_18.html

பட்டாபட்டி.... said...

ஹா..ஹா.. நான் ஏதாவது சொல்லப்போக, வேண்டாங்க..பய்ய்ய்ய்யம்மா இருக்கு...

ஹேமா said...

ஆன்ந்தி....இப்போ ஆண்களை முழுமையாகக் குறை சொல்ல முடியாது. 1% ஆண்கள் பரவாயில்லை என்கிற வட்டத்துக்குள் வந்திருக்கிறார்கள்.
நல்ல பதிவு தோழி !

ஆனந்தி.. said...

@Rajeevan

அப்டியா ராஜீவ்...ரொம்ப சந்தோஷம் சகோதரா )

ஆனந்தி.. said...

@மதுரை பாண்டி

//தன்னடக்கத்தோட நான் எஸ்கேப்!!!
--
மதுரை பாண்டி//
இத பாருடா...நம்ம ஊரு பையன் ல :)) ஓகே ..ஓகே..:))))

ஆனந்தி.. said...

@Starjan ( ஸ்டார்ஜன் )

/நான் நேற்றே கமாண்ட் போட எழுதி வைத்திருந்தேன். வேலையினால் விட்டுப்போச்சி..//

பரவாயில்ல அண்ணா...ரொம்ப நன்றிங்க..

ஆனந்தி.. said...

@பதிவுலகில் பாபு

/பெண்களின் வெற்றிக்குப் பின்னாலும் ஆண்கள் இருக்காங்கன்னு.. முதன் முதல்ல படிக்கறேன்.. இப்படிப் பாராட்டறதுக்கு கண்டிப்பா பெரிய மனசு வேணும்.. நீங்களும்.. இவ்வாறு ஏதாவது சாதனை செய்ய வாழ்த்துக்கள்.. அட்லீஸ்ட் டிஸ்கில நீங்க சொல்லியிருக்கற மாதிரி.. :-)/

அதான் ப்லாக் போட்டு உங்களை இம்சை பண்றேனே இதுக்கு மேலே ஏதாவது சாதனை செய்ய முடியுமா என்ன பாபு? :)))

ஆனந்தி.. said...

@பதிவுலகில் பாபு

//பெண்களைப் பற்றி நான் எழுதியிருந்த பதிவை முடிஞ்சா படிங்க.. தப்பா இருந்தா சண்டைக்கு வரக்கூடாது ஓகேவா.. :-)//
படிச்சேன் சகோ...:))))))))))

ஆனந்தி.. said...

@பட்டாபட்டி....

//ஹா..ஹா.. நான் ஏதாவது சொல்லப்போக, வேண்டாங்க..பய்ய்ய்ய்யம்மா இருக்கு... //

புரியுது...இதை கூட பயந்துட்டே டைப் பண்ணிருக்கிங்க...:)) அது போகட்டும்..உங்கள் முதல் வருகைக்கு நன்றி சகோ! :))

ஆனந்தி.. said...

@ஹேமா

//ஆன்ந்தி....இப்போ ஆண்களை முழுமையாகக் குறை சொல்ல முடியாது. 1% ஆண்கள் பரவாயில்லை என்கிற வட்டத்துக்குள் வந்திருக்கிறார்கள்.//

உண்மை ஹேமா...அந்த காலம் மாதிரி இல்லை இப்ப...எவ்ளவோ ஆண்கள் புரிஞ்சுக்க முயற்சி பண்றாங்க...நிறைகளையும் பாராட்டனும் தானே ஹேம்ஸ்..:)))

பாரத்... பாரதி... said...

//ஏன் நீங்க அவங்களை ஊக்க படுத்தி ஒரு கராத்தே மாஸ்டர் ஆகவோ..ஒரு குங்-பூ வீராங்கனையாவோ ஆக்க கூடாது."//

ரைட்டு... நடக்கட்டும்...

Rajesh kumar said...

ஆண்கள் எப்பவுமே நல்லவங்கதான் ஆனந்திக்கா.. கல்யாணம் ஆகுற வரைக்கும் எல்லா கெட்ட பழக்கங்களும் இருந்தாலும் , பயபுள்ளைங்க பொண்ணு நிச்சயம் ஆன உடனே எல்லா விஷயத்தையும் சொல்லிடுதுங்க.. அப்புறம் ஒரு பீர் அடிக்க கூட கண்ணு , செல்லம், பீர் வெறும் பார்லி தண்ணிடான்னு கொஞ்சி சமாதானம் பண்ணி அனுமதி வாங்கிட்டுதான் வருதுங்க. மொத்தத்துல ஆண்கள் சரணடையிறது ஒரு பொண்ணுகிட்டதான்.அவ சொல்றத மீற முடியாதுன்னு எதுவும் இல்ல.ஆனா ஆண்கள் மீறமாட்டாங்க (பெரும்பாலும்) ஹி ஹி ஹி.(இதெல்லாம் கேள்விப்பட்டதும் , நண்பர்கள் கிட்ட பார்த்ததும் தான், நெறைய கொடுமை பண்றவங்களும் இருக்காங்க.. ஒத்துக்குறேன்)

பலே பிரபு said...

ஆணாதிக்கம் குறைந்து உள்ளது என்பதன் உண்மைகள் இவை .நிச்சயமாக நல்ல விஷயம் தோழி !!

"ஒரு ஆண் படித்தால் குடும்பம் உயரும் பெண் படித்தால் அந்த சமூகமே உயரும்"

உயர்த்த வாருங்கள்!! இந்த உலகம் உங்களுக்கும் தான்!!

BACQRUDEEN said...

இது ஆன்களுக்கான பதிவு மாதிரி தெரியலையே..ஆன்களை காரணமா சொல்றமாதிரியே பெனகளின் சாதனையை பட்டியல் போடுற தந்திரமாவுல இருக்கு? ஆன்களுக்கான பதிவுனு சொல்லி எங்களை ஏமாத்துனா நாங்க ஏமாந்துருவோமாக்கும்.
ஏமாறாத
ஆஷீக்

பார்வையாளன் said...

"1% ஆண்கள் பரவாயில்லை என்கிற வட்டத்துக்குள் வந்திருக்கிறார்கள்"

என்னவோ ஆண்கள் கொடூரமாக இருந்தது போலவும், 1% திருந்தி விட்டது போலவும் சொல்லி இருப்பது தவறு..

இரு தரப்பிலும் நல்லதும் இருக்கிறது .கெட்டதும் இருக்கிறது..

மற்றபடி சண்டைகளை பெரிது படுத்த கூடாது..

வீடு என்றால் சண்டை வரத்தான் செய்யும்...

நம்மை மனைவி அடிக்க, மனைவி நம்மை அடிக்க, .நம்மை மனைவி அடிக்க, மனைவி நம்மை அடிக்க,.நம்மை மனைவி அடிக்க, மனைவி நம்மை அடிக்க,-

இதெல்லாம் சகஜம்தான்

( எப்போதும் அடி வாங்குவது நாம்தான்.. நாம் நல்லவர்களாக இருப்பது அதிசயம் போல சிலர் எழுதுவது காமடியாக இருக்கிறது )

:)

Balaji saravana said...

என்ன சகோ, என்னுடைய பின்னூட்டத்துக்கு பதில் போடல?! உங்க பார்வைல இருந்து தப்பிச்சிருச்சோ? ;)
சரி உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
மறுக்காமல் எழுத வேண்டுகிறேன் சகோ! :)

http://balajisaravana.blogspot.com/2011/01/2010.html

ஆனந்தி.. said...

@Balaji saravana

ஐயோ..பால்ஸ் நீங்க சொன்னப்புறம் தான் பார்த்தேன்...விட்ருக்கேன் எப்டியோ..:(( சாரி என் அன்பு சகோ...
////ஏன் நீங்க அவங்களை ஊக்க படுத்தி ஒரு கராத்தே மாஸ்டர் ஆகவோ..//

ரைட்டு! இப்போ தான் தெரியுது நீங்க ஏன் கராத்தே க்ளாஸ் போறீங்கன்னு ;) //
ஹ ஹ...நீங்க வேற நாங்க காதல் திருமணம் செஞ்சவங்க பால்ஸ்...காதலிக்கும்போது கூட லடாய் வரும்..கல்யாணம் முடிஞ்சும் லடாய் தான் :))..ஆனால் நோ அடி தடி...எனக்கும் விஜயசாந்தி..கோவை சரளா ரேஞ்சில் பறந்து பறந்து அடிக்க ஆசை தான்...ம்ம்...என்ன பண்ண!! கொடுத்து வைக்கல..எங்காளு ஓவரு உத்தமரு...:))))

ஆனந்தி.. said...

@பாரத்... பாரதி...

////ஏன் நீங்க அவங்களை ஊக்க படுத்தி ஒரு கராத்தே மாஸ்டர் ஆகவோ..ஒரு குங்-பூ வீராங்கனையாவோ ஆக்க கூடாது."//

ரைட்டு... நடக்கட்டும்...//

ஹ ஹ...எனி உள்குத்து தங்கச்சி? :))))

ஆனந்தி.. said...

@Rajesh kumar

//ஆண்கள் எப்பவுமே நல்லவங்கதான் ஆனந்திக்கா..//

ஹ ஹ...என் அன்பு தம்பியே...இப்ப யாரு இல்லன்னா...நீங்க ரொம்ப நல்லவங்க...வல்லவங்க...:))) நான் எதாவது தப்பு சொல்லிருக்கேனா பாரு இந்த பதிவில் பசங்களை பத்தி...:))))))

ஆனந்தி.. said...

@Rajesh kumar

//அப்புறம் ஒரு பீர் அடிக்க கூட கண்ணு , செல்லம், பீர் வெறும் பார்லி தண்ணிடான்னு கொஞ்சி சமாதானம் பண்ணி அனுமதி வாங்கிட்டுதான் வருதுங்க. மொத்தத்துல ஆண்கள் சரணடையிறது ஒரு பொண்ணுகிட்டதான்.அவ சொல்றத மீற முடியாதுன்னு எதுவும் இல்ல.ஆனா ஆண்கள் மீறமாட்டாங்க (பெரும்பாலும்) ஹி ஹி ஹி.(இதெல்லாம் கேள்விப்பட்டதும் , நண்பர்கள் கிட்ட பார்த்ததும் தான், நெறைய கொடுமை பண்றவங்களும் இருக்காங்க.. ஒத்துக்குறேன்)//
ஹ ஹ...காலையிலேயே நல்லா சிரிக்க வச்சுட்ட ராஜேஷ்...தேங்க்ஸ்...குட் மோர்னிங்..:)))))

ஆனந்தி.. said...

@பலே பிரபு
//"ஒரு ஆண் படித்தால் குடும்பம் உயரும் பெண் படித்தால் அந்த சமூகமே உயரும்"//

உண்மை பிரபு..

ஆனந்தி.. said...

@BACQRUDEEN

/இது ஆன்களுக்கான பதிவு மாதிரி தெரியலையே..ஆன்களை காரணமா சொல்றமாதிரியே பெனகளின் சாதனையை பட்டியல் போடுற தந்திரமாவுல இருக்கு? ஆன்களுக்கான பதிவுனு சொல்லி எங்களை ஏமாத்துனா நாங்க ஏமாந்துருவோமாக்கும்.
ஏமாறாத
ஆஷீக்//
நீ அநியாயத்துக்கு க்யூட் ஆ இருக்கியே...:))) என் நண்பேண்டா:))))))

ஆனந்தி.. said...

@பார்வையாளன்

/"1% ஆண்கள் பரவாயில்லை என்கிற வட்டத்துக்குள் வந்திருக்கிறார்கள்"//

சே..சே...அவளவு பெயில் லெவெலுக்கு போகல..நிஜமாவே இப்போலாம் பசங்க ரொம்ப ஹெல்ப் பண்றாங்க அவங்க பார்ட்னெர் க்கு...:)))

//மற்றபடி சண்டைகளை பெரிது படுத்த கூடாது..

வீடு என்றால் சண்டை வரத்தான் செய்யும்...

நம்மை மனைவி அடிக்க, மனைவி நம்மை அடிக்க, .நம்மை மனைவி அடிக்க, மனைவி நம்மை அடிக்க,.நம்மை மனைவி அடிக்க, மனைவி நம்மை அடிக்க,-

இதெல்லாம் சகஜம்தான் //

ஹ ஹ...இன்னும் சிரிச்சுட்டு இருக்கேன் பார்வையாளன்...நீங்க சொல்றதை பார்த்தால் உடம்பு பூராவும் விழுப்புண்கள் போலே...ஹ ஹ...

//( எப்போதும் அடி வாங்குவது நாம்தான்.. நாம் நல்லவர்களாக இருப்பது அதிசயம் போல சிலர் எழுதுவது காமடியாக இருக்கிறது )//

பட் பசங்க அடி குடுக்குறதும் நடக்குதா , இல்லையா...:((

ஆனந்தி.. said...

@Balaji saravana

ஹி...ஹீ..தொடர் பதிவு தானே :)...கணேஷ் னு ஒரு பதிவர் பிசாசும் :))இதே தலைப்பில் எழுத சொல்லிருக்கு..நான் இன்னும் அல்வா கொடுத்துட்டு இருக்கேன்:)....ம்ம்...முயற்சி பண்றேன் பால்ஸ்...என்னை யோசிச்சதுக்கு ஒரு பிக் கு தேங்க்ஸ்...:)))

தம்பி கூர்மதியன் said...

ஒவ்வொருவரும் பதிவ படிப்பாங்க.. நான் பதிவுக்கு முன்னாடி முதல் 5 கமெண்ட்ட படிச்சிட்டு தான் பதிவுக்கு போவன்.. அதனால் பதிவு எதபத்தினு கொஞ்சம் ஆர்வம் தணியும்.. அப்படி படிச்சதுலயே உங்க பதிவு கொஞ்சம் ஆண்களை பெருமைபடுத்துவது என்பது விளங்கிற்று..

நீங்க சொன்ன அனைத்து விசயங்களும் பெருமைபடவேண்டியது தான்.. ஆனால் இப்படி சில பெண்கள் முன்னேரினாலும் பல பெண்கள் முன்னேராமல் இருப்பதற்கு காரணம் ஆண்கள் தான்.. நீங்க இதுக்கு ரெடியா பதில் வச்சிருப்பீங்கன்னு தெரியும.. பரவால.. அதேபோல பல ஆண்கள் தங்களின் டார்கெட்ட அச்சீவ் பண்ண முடியாம போனதுக்கு காரணம் பெண்கள்(மனைவி) தான்..

தம்பி கூர்மதியன் said...

//இன்னைக்கு அந்த பெண் எம்பிராய்டரி, ஹன்டி கிராப்ட்ஸ் சொல்லி கொடுக்கும் பிஸி ஆசிரியை...//

யார் பா இவங்க.. கேள்வி படாத ஆளா இருக்காங்க.. ஏதாச்சும் மேகசீன்ல வந்திருக்காங்களா.?? எந்த இடம்..?? அவங்க நம்பர் கிடைக்குமா.??

//வெரி வெறி ஆசை..:))//

அஹம் ப்ரம்மாஸ்மி..

//கல்யாணம் ஆகாத ஆண்களே...யோசிங்க..! :))//

யோசிக்க ஒண்ணுமேயில்ல.. கல்யாணம் பண்ணிட்டா என்னுடைய மனைவி இருக்காங்களே அவங்களுக்கு மட்டுமே அதிக கவனம் செலுத்த நேரிடும்.. பின் எனது குடும்பம் என்று எனது வட்டம் சுருங்கிடும்.. திருமணம் முடிந்தபின்னும் நீங்கள் இதை செய்யலாமே என நீங்கள் கேட்கலாம்.. ஆனால் இது சாத்தியமில்லை அது கடினம்.. உங்க டிஸ்கி மாதிரி ஏதாச்சும் அமைந்தா கூட பரவாயில்லை.. சிலர் வார்த்தைகளின் வஞ்சகமிடும் கடுஞ்சொற்கள் மனதை கொடுமை கொள்கிறது.. வஞ்சகம், பேராசை, இரக்கமற்ற குணம், சோம்பேறி ஆகிய மொத்த உருவங்கள் அவர் இருந்துவிட்டால்.???
அதே தான் என் வாழ்க்கை '?'..(நோ மேரேஜ்.!!)

உங்கள பத்தி ஒரு பர்சனல் கேள்வி..
நீங்க எந்த ஆண்டு பிஜி முடிச்சீங்க எப்ப உங்களுக்கு திருமணம் நடந்தது..?(இதழியல் தான படிச்சீங்க..??)

ஆனந்தி.. said...

@தம்பி கூர்மதியன்

உங்கள பத்தி ஒரு பர்சனல் கேள்வி..
நீங்க எந்த ஆண்டு பிஜி முடிச்சீங்க எப்ப உங்களுக்கு திருமணம் நடந்தது..?(இதழியல் தான படிச்சீங்க..??)

இதழியல் படிச்சேன்னு யாரு சொன்னாங்க? :))))))))))))))))) ஐ ஆம் கைநாட்டு...பத்தாப்பு பெயில் ங்க...:)

ஆனந்தி.. said...

@தம்பி கூர்மதியன்

///வஞ்சகம், பேராசை, இரக்கமற்ற குணம், சோம்பேறி ஆகிய மொத்த உருவங்கள் அவர் இருந்துவிட்டால்.???
அதே தான் என் வாழ்க்கை '?'..(நோ மேரேஜ்.!!)//
அட சாமி...எப்படி தான் உங்களுக்கு இப்படி எல்லாம் யோசிக்க தோணுதோ...:))

தமிழ் உதயம் said...

ஆனால் அப்படி கொஞ்சூண்டு :)) உறுதியாய் சொல்றமாதிரி சில சம்பவங்களும் அங்க இங்கனு நடக்குது...///

கொஞ்சூண்டு இல்ல நிறைய சம்பவங்கள் இருக்கு இப்படி. அப்புறம் முக்கியமான ஒண்ணு. இம்மாதிரியான கணவர்களை அடைகிற மனைவிகள், அத சரியா பயன்படுத்திக்கணும்.
சொன்னதுல தவறேதும் உண்டா ஹைக்கூ ஆனந்தி.

தம்பி கூர்மதியன் said...

//அட சாமி...எப்படி தான் உங்களுக்கு இப்படி எல்லாம் யோசிக்க தோணுதோ...:))//

இல்ல ஒரு சின்ன டவுட்டு..!!!

ஆனந்தி.. said...

@தமிழ் உதயம்

//கொஞ்சூண்டு இல்ல நிறைய சம்பவங்கள் இருக்கு இப்படி. அப்புறம் முக்கியமான ஒண்ணு. இம்மாதிரியான கணவர்களை அடைகிற மனைவிகள், அத சரியா பயன்படுத்திக்கணும்.
சொன்னதுல தவறேதும் உண்டா ஹைக்கூ ஆனந்தி.//

ஐயோ...தவறே இல்லைங்க...எனக்கும் இதில் ஆதங்கம் உண்டு...:((

asiya omar said...

ஆனந்தி நீங்க பெரிய கில்லாடிங்க,பாயிண்ட்டை பிடிச்சிட்டீங்களே.பாராட்டுக்கள்.

ஆயிஷா said...

நல்ல பகிர்வு.

பாராட்டுக்கள்....

Mahi said...

நல்ல பதிவுங்க ஆனந்தி..அம்பிகா IPS பற்றி அவள் விகடன்ல படித்தேன். மனைவியின் முன்னேற்றத்திற்கு உதவும் ஆண்களின் எண்ணிக்கை குறைவான அளவிலேதான் இருக்கு.
விழிப்புணர்வூட்டும் பதிவுங்க!

R.Gopi said...

ஆண்களுக்கான ஸ்பெஷல் பதிவு சூப்பர்.

கல்யாணம் ஆகாத ஆண்களுக்கு ஓகே, அப்போ, கல்யாணம் ஆனவங்களுக்கு?

Jaleela Kamal said...

பதிவிலகில் சில பேருக்காவது இது போல் சாதனையாளர்களை உஙகள் மூலாகமாக தெரிய வந்ததே
மறந்து போய் இருந்தாலும் நல்ல நினைவூட்டல்
ஆண்களுக்கு டிப்ஸா காதூல புகை விட்டு கொண்டே படிச்சிருப்பாஙக

லெனின் said...

உங்கள் கருத்திற்கு மிகுந்த நன்றி

Anonymous said...

You reallу mаke іt seem sο easy ωith your pгesentation but I find this topic to be
really something which I think I ωould nеver underѕtanԁ.
It sееms too complicated and verу broаd for me.
I'm looking forward for your next post, I'll try to get the hang of it!


Herе іs my ωebsite :: apple laptop