January 24, 2011

நாகரிகம் இன்னும் நமக்கு பத்தலையோ??!!




நாகரிகம்..!!ம்ம்..நான் சொல்வது உடை சம்பந்தப்பட்டது இல்லை..உணர்வு சம்பந்தப்பட்டது..!! நாகரிகமற்ற,லஜ்ஜையில்லாத சில மொழி அசைவுகள் ஏனோ எனக்கு பிடிப்பதில்லை...


பள்ளி முடிந்து காரில் ஏறும் ஒரு 10 வயசு பொடியன்,வயதான கார் டிரைவர் ஐ பார்த்து அதட்டும், " ஏய்..தொரசாமி! காரை எடு.."



தன் வயிற்று பிழைப்புக்காய் வீட்டு வேலை செய்யும் ,நன்றாய் வாழ்ந்து கெட்ட வயதான அம்மாவை பார்த்து அதட்டும் சிறு வயது எஜமானியின்  "ஏண்டி...!ஒனக்கு அறிவில்ல "



இது மாதிரி கூனி குறுகி போகும் தோட்டகார அந்தோணி தாத்தா,கழிவுகளை அகற்றும் பள்ளிகூட மரகதம் அம்மா,கார் துடைக்கும் வேலு அண்ணன்.....இப்படி நிறையவே நம்மை சுற்றி....!!




நம்ம ஊரில்  உயர் நிலை,தாழ் நிலை ன்னு தகுதி வாரியாய் தரப்படும் மதிப்பு,நாகரிகம்(?) எல்லாம் இன்னும் நம்மை "குரங்கு" மனிதர்களாகவே தொடரச் செய்யுதான்னு தெரியல...



அழகான சில விஷயங்கள் பார்க்கும்போது, மொழி எதுவும் தேவைபடாமல் அதை உணரும்போது நாகரிகம் இன்னும் கொஞ்சம் உயிரோட இருக்குனு நினைச்சிருக்கேன்...பார்த்த பல  சம்பவங்களில் வெளிநாட்டு காரர்களாய் இருப்பது என் துரதிர்ஷ்டம்..:(

ஒரு முறை..

ஆட்டோக்கள் பெருகி விட்ட இந்த காலத்தில் என்னவோ
இப்போ எல்லாம் சைக்கிள் ரிக்ஷாக்களை அவ்வளவாய் பார்ப்பதே இல்லை...அரிதாய் அன்று மதுரை தெற்கு மாசி வீதியில் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் செம வேர்வையோடு ஒரு 50 வயசு மதிக்க தக்க நம்ம ஊருக்காரர் ரிக்ஸா மிதிக்க மூணு வெளிநாட்டு காரர்கள் உட்கார்ந்து போய்கிட்டு இருந்தாங்க...கொஞ்ச நேரத்தில் சரியான வெயில். பழச்சாறு குடிக்க ஒரு கடையில் காத்திருந்தோம்..மீண்டும் அதே ரிக்ஸா..இந்த முறை ரிக்ஸா மிதித்தது அந்த மூணு பேரில் உள்ள  ஒரு வெள்ளைக்காரர்..மீதி ரெண்டு வெளிநாட்டு காரர்கள் நம்ம ஊரு மனிதர் மேலே தோளில் கைபோட்டு வர கொஞ்சம் நெர்வசாய் நடுவில்  உட்கார்ந்து இருந்தார் நம்ம ஊரு காரர்..


பார்த்தவுடனே சட்டுன்னு சந்தோஷமாய்..பரவசமாய்   இருந்தது.



"ரிக்ஸா மிதித்து மிதித்து

காச்சு போன -அம்மனிதன் 
கரும்பாதம்
அன்று  ஒரு நாள் மட்டும்
மென்மையானது -
அந்த வெள்ளைக்காரன்
மனசுப்போலே...!! "

நம்மில் எத்தனை பேரு ஒரு ரிக்ஸா ஊழியருக்கு இந்த அளவுக்கு பரிவு காட்டி இருப்போம்னு தெரியலை..???




இன்னொரு சம்பவம்....


ஓசூர் நோக்கிய எங்கள் அதிகாலை பயணத்தில்,சரியான பசியில் சேலம் பை பாஸில்,ஒரு ஹோட்டல் லில் காலை உணவுக்காக எங்களுடன்,சில ஐயப்ப சாமி, முருக பக்தர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு காரரும் வெயிட்டிங்..அதிகாலையில் குறைவான ஊழியர்களே அங்கே இருந்ததால் ஆர்டர் பண்ணிய ஐட்டங்கள் ஒவ்வென்றும் வர தாமதம்..எங்கள் முகச்சுழிப்புகளை மிக அழகாய், தன் புன்சிரிப்பாலும், மன்னிப்பாலும் எங்களை சரி செய்த அந்த ஹோட்டல் சர்வர் பார்த்து ஒரு புறம் எனக்கு ஆச்சர்யம் என்றால், என்னை போலவே கவனித்து...சாப்பிட்டு விட்டு கிளம்ப தயாரான போது, தான் அன்பாய் கொடுத்த பணத்தை மறுத்த அந்த புன் சிரிப்பு சர்வருக்கு  கை கொடுத்து,லேசாய் கட்டி பிடித்து பாராட்டிய வெளிநாட்டு காரரின் செய்கை பார்த்து எனக்கு பல மடங்கு ஆச்சர்யம்...

"அந்த  சின்ன புன்முறுவலில் -என்

சினம் யாவும் போயாச்சு!!"
 
நம்மில் பலர் பல நேரத்தில் புன்சிரிப்பு,நாகரிக உரையாடல், பாராட்டுதலை மறந்து விடுகிறோம்...ஆமாம் தான் இல்லையா?:))   

நாகரிகம் இன்னும் நமக்கு பத்தலையோ??!!!!

January 19, 2011

திரும்பி பார்ப்பதில் ஏனோ பெரிய விருப்பம் இல்லை..:))


பெரும்பாலும் பல நேரங்களில் திரும்பி பார்ப்பதை என்னவோ விரும்புவதில்லை..அனுபவித்த கசப்பான விஷயங்களை ரீவைண்ட் பண்ணி பார்ப்பதிலும் ஏனோ பெரிய விருப்பமும் இல்லை...ஒரு வேளை அது மேலும் என்னை சோர்வாக்கும் பயமான்னு தெரியல..:)) 


சந்தோஷ விஷயங்களை லேசாக புரட்டி பார்த்துட்டு தீவிரமா யோசிக்கவும் கொஞ்சம் பயம்...அட போன வருஷம் அப்டி..இந்த வருஷம் உருப்படலையே னு ஒரு ஒப்பீடு லேசா கூட மனதின் ஓரத்தில் வரும்போது அதுவும் சில நேரங்களில் சோர்வாக்கும் அபாயமும் ஏற்படுது எனக்கு...:)))


சுவாரஸ்யம் அடிபட்டு போகும் சில தொடர்பதிவுகளில் எழுத எனக்கு அதிக யோசனை தான். எனக்கு பிடித்த பத்து பாட்டுக்கள் விரவி போயி பத்து பேருக்கு எப்படியும் பிடிக்குது. இதில் நானும் என் பங்குக்கு எழுதி அரைத்த மாவை அரைக்க இஷ்டமில்லாமல் விலகியே இருந்தும் இருக்கிறேன்..:))



"uniqueness" அடிபட்டு போகும் ஒரே மாதிரி கிளிஷே தொடர் பதிவுகளில் படிப்பதற்கு பெரிய சுவாரஸ்யங்களும் இருக்க போவதில்லை என்பது என் எண்ணம்...


"திரும்பி பார்க்கிறேன் " தொடர் பதிவில் இல் நிச்சயமாக அவரவர் தனி பிம்பங்கள்..உணர்வுகள் மட்டுமே இருக்கும் உள்ளடக்கம் னு யோசிச்சு ஒரு வழியாக என் அருமை இணைய சகோதரர்கள் கணேஷ் மற்றும் பாலாஜி சரவணன் அழைப்பினை ஏற்று இந்த பதிவு :)


என் காலடி தடம் பதிந்த  சில கடந்து வந்த பாதைகள்...


வலையுலகை தவிர்த்து என் ஒரே செல்ல மகனுக்கு கற்று கொடுக்க ரோபோடிக்ஸ் முதல் அல்காரிதம் வரை மீண்டும் தெரிந்து கொண்டு என் மூளையை  புதிப்பித்து கொண்ட தருணங்கள் ...



என் பையன் அவனுக்கு கிடைத்த பாராட்டுகள் மூலமாய் எனக்கு தேடி தந்த பெருமை மிகுந்த தாய்மை உணர்ந்த நிமிடங்கள் ...



சில அற்புத சுயதேடல் நூல்கள் தேடி படித்த தருணங்கள் ..பரிச்சயம் இல்லாத மனிதர்களின் ஒரு நொடி புன்னகைகள்...



சில வெளியூர் பயணங்கள்...பிரயாணங்களில் சந்தித்த சில குட்டி குட்டி சுவாரஸ்யங்கள்...முறுக்கி கொண்டு இருந்த சில உறவுகளின் நெகிழ்வான பாச தருணங்கள்..



போலித்தனமான சில உறவுகளை அடையாளம் கண்டுவிட்ட நிம்மதி தருணங்கள்...



இதை தவிர்த்து எல்லாமே வழக்கம்போல...வழக்கம் போல...:))



இணையம் எனக்கு புதுசு இல்லைனாலும் நாலு வருஷமாய் இணையத்தை சுத்தமாய் விட்டு விலகி இருந்த என்னை மீண்டும் இழுத்துட்டு வந்தது என் நண்பன்/வழிகாட்டி ரமேஷ்@ராசுகுட்டி..



ஆகஸ்டில் விளையாட்டாய் ப்லாக் தொடங்கி,விளையாட்டாய்(!) போய்கிட்டு இருக்கு ..எந்த இலக்கும் இல்லாமல் மனசுக்கு தோணிய மாதிரி பதிவுங்கிற(?) பெயரில் கிறுக்கிட்டு இருக்கேன்...:))


கற்று கொண்ட..உணர்ந்து கொண்ட பல விஷயங்கள் இணையத்தில் இருந்தாலும் சில சமயங்களில் இணையம் என் அரிய,பொக்கிஷ நேரங்களை "கொல்லும்"போது மீண்டும் வணக்கம் சொல்லிட்டு போயிரலாமான்னு தோணிகிட்டே இருக்கு...ஆனால் சில நெகிழ்வான,ஆத்மார்த்தமான பின்னூட்டங்களிலும்,சில அற்புதமான,பாசமான,கனிவான இணைய நட்புக்களாலும் ..



தற்காலிகமாய் 
மனம் மாறி
விடுகிறேன்.................... .....:)

January 13, 2011

இதுக்கு பேரு பக்தியா....??!!!



என்னை அதிகமாய் குழப்பிய,யோசிக்க வைத்த,சில நேரம் வாதம் பண்ண.பல நேரம் விதண்டாவாதம் பண்ண,விளங்கி கொள்ள,புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயம் "பக்தி"..

பக்தி ங்கிற பெயரில் கோவிலில் மற்றும் பொது இடங்களில் கூத்தடிக்கும் பக்தியாளர்கள்(?!) பார்த்தாலே....ம்ம்...என்னத்தை சொல்ல...


யார் வீட்டு பூக்களையோ அவசரமாய் திருடிட்டு  போயி கடவுளுக்கு படைக்கும்  சில படித்த மேதாவிகள்...நான்  அதிகமாய் எரிச்சலைடையும் பக்தி(?) சார்ந்த விஷயத்தில் இதுவும் ஒன்று...


எப்போ இருந்து பக்திக்கான  அவஸ்தையான/குழப்பமான விடை கண்டுபிடிக்கும்(?!) எண்ணம் வந்துச்சுன்னு சரியா தெரியல..ஆனால் என் வாழ்வில் நான் கடந்து போகும் சம்பவங்களில் கூட சில மைக்ரோ கணங்களில் அது தான் பக்தி னு உணர்ந்திருக்கேன்...


அந்த சில கணங்கள்.....


கோவில் போகும்போதெல்லாம் கிட்டத்தட்ட அல்லது கட்டாயமாய் அந்த கூன் தாத்தாவை பார்த்திடுவேன்..அங்கெங்கே கிழிந்த பழைய சுத்தமான கதர்வேட்டி..தோளில் சுத்திய குற்றால துண்டு,உடம்பெல்லாம் விபூதியுடன் ,தன் நடுங்கி போன கைகளுடன் தினமும் கோவிலுக்கு ஆஜர்.அவர் கொடுக்கும் சொற்ப சில்லறைக்கு தகுந்த, மிகவும் சொற்ப உதிரிப்பூக்களை கோவில் பூக்காரம்மா கொடுப்பதை வாங்கிட்டு கடவுளுக்கு அதை படைச்சுட்டு கொஞ்சநேரம் நின்னுட்டு தன் செருப்பில்லாத கால்களுடன் மெதுவாய் போயிருவார்..


இரக்கப்பட்டு யாராவது உதவவோ ,பூ வாங்கியோ  தந்தால்கூட நாசுக்காய் மறுத்து அந்த சொற்ப பூக்களோடு கடவுளை சந்திக்க சென்ற அந்த கணத்தில்....


நீ படைத்த

சொற்ப பூக்களில்
தினம் தினம்
சொர்க்கம் கண்டாய்!
என் அழகு கூன் தாத்தா..!
கண்டேன் பக்தியை...
உன் தன்மான உருவிலும்...!!!!

அப்புறம்...


குடும்பத்தோடு மீனாக்ஷி அம்மன் கோவில் போயிட்டு பூஜைகள் முடிஞ்சு வெளியே வந்தோம்..."மூணு பத்து ரூவா" னு கூவிகிட்டே கைக்குட்டைகள் கைமுழுவதும் அடுக்கி விற்பனை செய்த வாலிபன் எங்களை பின்தொடர.. கையில் வச்சிருந்த பிரசாதங்களில்  கொஞ்சம் எடுத்து என் பாட்டியம்மா அந்த பையன்கிட்டே கொடுத்தாங்க ..அவன் ஒரு நொடி தயங்கிட்டு,செருப்பை ஓரமா கழட்டி போட்டுட்டு..பயபக்தியா வாங்கிட்டான்..அப்போ தான் அவனை கவனிச்ச பாட்டிம்மா "தம்பி நீ முஸ்லிம் ஆ பா...மன்னிச்சுக்கோ ப்பா" னு பதற...அவன் சிரிச்சிட்டே "ஆமாம் பாட்டி..எதுக்கு மன்னிப்பு எல்லாம்...பாசமா நீங்க கொடுத்திங்க..இதுல எதுக்கு சாமி எல்லாம் பார்க்கணும்...னு" சொல்லிட்டே போன அந்த கணத்தில்....


நீ  விற்கும்

கைக்குட்டையை விட
உன் மனம்..
உன் குணம்..
உலகளவு பெருசு..
அற்புத மனிதனே...
கண்டேன் பக்தியை..
மதத்தை விட
மனதை மதித்த
உன் உருவிலும்....!!!!

அப்புறம்...


பாட்டியின் தீவிர கடவுள் நம்பிக்கையின் படி பூஜை,புனஷ்காரங்கள் ஒரு புறம் நடந்தாலும், மறந்தும் கோவில் பக்கம் போகாத,கடவுள் எதிர்ப்பு கொள்கையில் தீவிரமான,சுயமரியாதை விரும்பி என் தாத்தா..என் ஏழாவது வயதில்,உடம்பில் ஒரு இன்ச் விடாமல்(நாக்கு உள்பட) கொப்புளங்களுடன் கடுமையான அம்மை நோய் பிடியில் சிக்கிட்டேன்..இயற்கை உபாதை கழிக்க கூட உயிர்போகும் அளவு கத்துவேன்(அந்த இடங்களிலும்  கொப்புளங்கள் )தனியார் மருத்துவமனை ஜீ ஹெச் கொண்டு போங்கனு சொன்ன தருணத்தில்..வீடே கண்ணீரோடு..


அப்போ தாத்தா செஞ்சது நான் சாகும் என் கடைசி நொடி வரை என்னாலே மறக்க முடியாத ஒரு செயல்...கிட்டத்தட்ட எலும்பும்,தோலும்..தோலை முழுவதும் போர்த்திய கொப்புளங்களுமாய் இருந்த என்னை மெல்லிய வேஷ்டியில் சுற்றி,அப்படியே தூக்கிட்டு சாமி அறையின் வாசலில் கிடத்தினார்..உள்ளே இருக்கும் சாமி சிலைகளை பார்த்து சத்தமாய் "இந்த பிஞ்சு பிள்ளைக்கு ஏதாவது ஆச்சு...." ன்னு கத்திட்டே என்னை அவர் நெஞ்சில் போட்டுகிட்டு அழுத அந்த கணத்தில்......


இன்னும்...

என்னில்
மிச்சமிருக்கும்
அந்த ஒன்றிரண்டு
அம்மை தழும்புகளை
தினம்தோறும்
ஆசையாய் 

தொட்டு பார்க்கிறேன்!!!
மண்ணில் மறைந்து விட்ட
என் செல்ல  தாத்தாவின்
நேசத்தை அனுபவித்த
"பக்தி" யோடு...!!!!

January 8, 2011

மக்கு,டுபுக்கு ஆடிட்டர்கள் அரசுக்கு உடனடி தேவை..:))



நம்ம மத்திய அமைச்சர் கபில் சிபல் ஜீ இன்னைக்கு டக்கரு விஷயத்தை சொல்லிருக்கார்...


"2G ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் 1.25 லட்சம் கோடி அரசுக்கு இழப்பே இல்லை..அது முழுக்க முழுக்க வருமான அறிக்கை கணக்கீட்டாளர்களின் கவன குறைவே காரணம் "

 

இதை கேட்ட நம்ம பொது ஜனத்துக்கு செம டவுட்டு...ஸோ, சில கேள்விகள் சிபல்ஜி யிடம் ...



அப்பாவி பொதுஜனம்: சிபல் ஜீ ! அப்போ என்ன தான் சொல்ல வரிங்க?



சிபல் ஜீ:  ஜனம் ஜீ! ஸ்பெக்ட்ரம் கணக்கு ஆடிட் பண்ணிய
பசங்க ஜீ யை டோடல் ஆ செக் பண்ணிட்டோம் ஜீ! அவங்க  எட்டாப்பு பெயில் ஜீ, ஒண்ணா நம்பர் பிராடு ஜீ! அவங்க போலி சர்டிபிகேட்ஸ் விவகாரம் சி பி ஐ கிட்டே கொடுத்துருக்கோம் ஜீ...


அ.பொ: அப்போ நீரா?



சிபல் ஜீ: மீரா ஜீ?? அழகான நடிகை ஜீ! கருணாநிதி ஜீ படத்துல வருவாங்க ஜீ...



அ.பொ : ஐயோ..நீரா ராடியா? அந்த கேசட் ??



சிபல் ஜீ: ஓ! நீரா ஜீ பாவம் ஜீ! ஆக்சுவலா ஜீ..நீரா ஜீ ஒரு சிங்கர் ஜீ..."பெண் சிங்கம்" பாட்டுகளை பாடி பார்த்துட்டு இருந்ததை ஒருத்தன் கேசெட் போட்டு வெளிய விட்டுட்டான் ஜீ...நீங்க அதை தானே கேட்கிறிங்க ஜீ??



அ.பொ: இல்ல..உளவு துறையின் டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம்????



சிபல் ஜீ: ஓ! அதையேன் கேட்கிறிங்க ஜீ...உளவு துறையிலும் சம் பீப்பில் பிராடு ஜீ...சம் மிமிக்க்ரி ஆர்டிஸ்ட் போலி சான்றிதல் கொடுத்துட்டு அங்கயும் வேலைக்கு வந்துட்டாங்க ஜீ...வீ  வில் இன்பார்ம் டு சி பி ஐ...



அ.பொ : அப்போ ராஜா?



சிபல் ஜீ: இருங்க...கருணாநிதி ஜீ சொல்லுவார்...



கருணாநிதி: கழக கண்மணிகளே! அன்பின் உடன் பிறப்புகளே...! விடிவெள்ளி மீண்டும் பூத்தது...களங்கம் தீர்ந்தது...நிதி குடும்பத்தின் நீதி உலகுக்கு தெரிந்தது
...வரும் தேர்தலில் எள்ளியவர்களை ஓரம் கட்டி...உதய சூரியன் சின்னத்தில் .....


அ.பொ: (இடை மறித்து) மொதல்வர் ஐயா! ஸ்பெக்ட்ரம் ராஜா??



கருணாநிதி: குற்றமற்ற என் கழக கண்மணி என் செல்லம் ராஜாவை ஆறுதல் படுத்த கனிமொழி தலைமையில்
கழக மகளிர் அணி குழு விரைகிறது...:))


அ.பொ: சுடுகாட்டு கூரை ஊழலில் உங்க கட்சியில் சேர்ந்த மாஜி மந்திரி விடுதலையாமே?



கருணாநிதி: ஆமாங்க கண்மணி! அவருக்கு எதிராய் கேசில் வாதாடிய வக்கீல் போலி வக்கீல் என்றும்,ரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்து போலி சான்றிதல் பெற்று........................
......
(கண்மணி எங்க ஓடுறிங்க....????? )


பொதுஜனம் தெறித்து வெளியே ஓடி வந்து கீழ்பாக்கம் வண்டியை பிடிக்கிறார்...:)))

January 4, 2011

ஆண்களே! இது உங்களுக்கான பதிவு..:)))



என்னடா..ஆண்களுக்கான பதிவுன்னால் "குண்டக்க..மண்டக்க"(?!?!%#%) இருக்குமோனு என்னை மாதிரியே யோசிக்காமல்..பெண்களே தைரியமா நீங்களும் படிக்கலாம்:)))


சரி விஷயத்துக்கு வரேன்..



"ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடி ஒரு பெண் இருப்பாள் " அப்படின்னு நம்ம எள்ளு தாத்தாவோட கொள்ளு தாத்தா வரைக்கும் எல்லாரும் சொன்ன  விஷயம்...இன்னும் சொல்ற  விஷயம்..! ஸோ,அதை பேசினால் மாமூல்..இப்ப கொஞ்சம் உல்ட்டாவான விஷயம் சொல்ல போறேன்  :))



"ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னாடி ஒரு ஆண் இருப்பான்" ன்னு அவ்வளவு உறுதியாக..பரவலாக..நிச்சயமாக..

சத்தியமாக :)))) எல்லாரும் சொல்றாங்களா?? :)) நோ தானே...:))


ஆனால் அப்படி கொஞ்சூண்டு :)) உறுதியாய் சொல்றமாதிரி சில சம்பவங்களும் அங்க இங்கனு நடக்குது...


ஏன் இவ்வளவு பில்டப் ன்னால் இப்போ லேட்டஸ்ட் ஆ ஒரு அழகான செய்தி படிச்சேன்...அதான் இந்த பதிவையே எழுத தூண்டுச்சு...


அம்பிகா,10 ம் வகுப்பில்,திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடம்,ஆனால் குடும்பத்தில் வறுமையும் முதலிடம். படிக்க வழியில்லாமல் உறவு பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க..அவள் கணவர் மனைவியின்
திறமை தெரிஞ்சு படிக்க வச்சிருக்கார்...இப்போ அந்த பொண்ணு ,
அம்பிகா I.P.S.,
 w/o திருப்பதி சாமி (போலீஸ் கான்ஸ்டபிள்)



அப்புறம் சில பயோக்ராபிஸ் படிக்கும்போது நான் வியந்த, மேலும் சில நிஜங்கள் இதோ...

முதலில் குழந்தைகளை பார்த்துக்கிற கேர் டேக்கர் வேலை பார்த்துட்டு இருந்த புத்திசாலி போலந்து பொண்ணு தான் மரியா ..தன் கூடவே ஆராய்ச்சி செய்ய வச்சு அருமையா ஊக்கபடுத்தியது அவங்க கணவர் தான். மரியா  கதிரியக்கங்களை பற்றி ஆராய்ச்சி பண்ணி..நோபல் பரிசு எல்லாம் கூட வாங்கினாங்க..ரெண்டு வாட்டி..! வெறும் மரியா னால் புரியாது உங்களுக்கு. .இப்ப தெரியுதான்னு பாருங்க..
Dr. மேரி க்யுரி ,
w/o Dr. பியரி க்யூரி (வேதியல் நிபுணர்) 


பஞ்சாப் ல படிச்ச கல்பனா  ங்கிற பொண்ணு எக்கச்சக்க கனவோட விண்வெளி இயல் எல்லாம் படிக்க அமெரிக்கா வந்துச்சு.அந்த பொண்ணை ஊக்கபடுத்தி விமான பயிற்சி சொல்லி கொடுத்தது கூட கல்பனாவின் கணவர் தான்..இந்த பயிற்சி எல்லாம் கல்பனாவுக்கு பின்னாளில் NASA வில் ரொம்ப உபயோகமா இருந்தது...இது யாருன்னு புரிஞ்சிருப்பிங்க...
கல்பனா சாவ்லா,
w/o ஹாரிசன் (விமான பயிற்சியாளர்)

 

கேட்டது...படிச்சது தானே சொல்ற...கண்ணால ஏதாவது பார்த்திருக்கியானு மாற்று கருத்து:)) கேட்க போறிங்களா?..ம்ம்..இதையும் தொடர்ந்து படிங்க...




வலிப்பு நோயின் காரணமாய் ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மையில் மனத்தால் இறுகிபோய் வீட்டை விட்டே வெளியே வராத ஒரு பெண்ணை அவள் கணவர்,அவள் போடும் அழகு கோலங்களை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி, அவள் திறமையை முதலில் அவளுக்கு உணர்த்தினார். இன்னைக்கு அந்த பெண் எம்பிராய்டரி, ஹன்டி கிராப்ட்ஸ் சொல்லி கொடுக்கும் பிஸி ஆசிரியை...அவங்க,

தேவகி அக்கா,
w/o செழியன் அண்ணா (பழைய பேப்பர் வியாபாரி) 


என் உதாரணங்கள் கூட அங்க இங்கனு கூட்டி கழிச்சு விரல் வச்சே எண்ணி விடுகிற நிலைமை தான் இல்லையா? இந்த எண்ணிக்கைகள் எண்ணவே முடியாத infinitive  ஆ போக கூடிய நிலைமைக்கு வரணுங்கிறது தான் என் பிக் பிக்.. வெரி வெறி ஆசை..:))


ஒரு பக்குவபட்ட ஆண் நினைத்தால் அவன் மனைவியை சிற்பமாய் செதுக்க முடியும். மாமூலான விஷயங்கள் தவிர்த்து ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏதோ ஒரு சிறப்பு டேலேன்ட் உறுதியாய் இருக்கும். அதை கொஞ்சம் தூசி தட்டி விட்டாலே போதும்...அவள் பிரகாசிப்பாள்..ஜொலி ஜொலிப்பாள்..



ஸோ...

கல்யாணம் ஆன ஆண்களே...தீர்மானிங்க! :))
கல்யாணம் ஆகாத ஆண்களே...யோசிங்க..! :))



டிஸ்கி.."போம்மா..நீ வேற..எங்க வீட்டம்மா கிட்ட தெனமும் கும்மாங்குத்து:)) வாங்கி..வாங்கி இப்ப பேச முடியாம வாய் கூட வீங்கி கெடக்கு " ன்னு புலம்பும் பச்ச புள்ள ஆண்களுக்கான டிப்ஸ் : " ஏன் நீங்க அவங்களை ஊக்க படுத்தி ஒரு கராத்தே மாஸ்டர் ஆகவோ..ஒரு குங்-பூ வீராங்கனையாவோ ஆக்க கூடாது."..:)))ஆண்களே இதையும் கொஞ்சம் யோசிங்க...:))))))