March 14, 2011

A Short Commercial Break...:))


(முஸ்கி :என்னை தேடும் அன்பு உள்ளங்களுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு...:) தேடாத அன்பு உள்ளங்கள் படிக்க வேண்டாம்...:))

அன்பு மக்காஸ்....:))

ஒரே அன்பு மகன் முழு ஆண்டு தேர்வு ஆயத்தம் ஆவதற்கு ,கூடஇருந்து
உதவி புரிதல் னு:) கடந்த சில நாட்களாய் நானு ஒரே ஒலக பிஸி..:)) இடையில் சிறிது சிறிது இணையம் எட்டி பார்த்தாலும் அதுக்கும் ஆப்பு...நேற்று விருந்தினர்கள் ஆஜர் ...:) ஸோ, அடுப்படி...மற்றும் மகனுடன் நானும் சேர்ந்து படிப்பு( ஹீ...ஹீ...அதானே இந்த கால பெற்றோர் நிலைமை...) ன்னு சுனாமி வேக பிஸி இல் இருக்கிறேன்...(நூலத்தில் அருமையான புத்தங்கள் வாங்கி இன்னும் தொட்டு பார்க்க கூட நேரம் கிடைக்கலை...மாலை நேர மொட்டை மாடி காற்றினை மிஸ் பண்றேன் கொஞ்ச நாளாய் :) ஸோ  ரொம்ப பிடிச்ச விஷயங்களை கொஞ்ச நாளா கோட்டை விடுறேன்..:(( )

அவனுக்கு படிப்பில் உதவி புரிகிறேனோ இல்லையோ..ஆனால் அவன் தேர்வுக்கு படிக்கும்போது நான் கணினியில் கவனத்தை செலுத்த வேணாம்னு பார்க்கிறேன்...:)

so....

மக்காஸ்...என் கடமைகளை:)) சரிவர முடிச்சுட்டு இணையம் பக்கம் விரைவில் வருகிறேன்...

இந்த அறிவிப்பு கூட போடுவதற்கு முன் கண்ணா பின்னான்னு :)) யோசிச்சேன்..ஆனால் போன பதிவுக்கு முன்னாடி பதிவர் ரமணி அண்ணா "ஏன்மா ..புது பதிவு எதுவும் போடலை" னு அன்பாய் கேட்டு இருந்தாங்க..." அட நம்மையும் தேட கூட உடன்பிறப்புகள் இருக்காங்களேன்னு கொஞ்சம் சந்தோஷம்...ஸோ...என்னை தேடும் அன்புள்ளங்களுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு...:))


மக்காஸ்...விரைவில்
சந்திப்போம்...

Takecare and Njoy..:)))


அன்புடன் ..

ஆனந்தி...:)

March 7, 2011

(சில) ஆண்களே! (சீக்கிரம்) திருந்துங்கப்பா!! :))சில நேரம்....சில எரிச்சல்...சில பெண்கள்... இந்த பதிவிலேயே , சில ஆண்களின் மேலயும்  கடும் எரிச்சல் இருக்குனு குறிப்பிட்டு இருந்தேன். ஓகே..அதுக்கான சுபமுஹூர்த்தநாள் டுடே ஒன்லி..:-)


ஆண் உரிமை பாதுகாப்பு (?):) காவலர்கள் யாராவது இருந்தால்...:) நோ...நோ...அருவாளை கீழே போடுங்க...கூல்..கூல்...!! :))


சிறப்பு குணாதிசியங்களை கொண்ட கடுப்படிக்கும் (சில)ஆண்கள் பற்றிய புல்லரிக்கும்:) சம்பவங்களே இந்த பதிவு...:))


கடுப்பு :1
(இந்த வகை ஆண்கள், தன் துணை மேல் அதீத பிரியம்/அவ நம்பிக்கையில் எல்லா வேலைகளையும் தன் தலையில் ஏற்றி கொள்ளும் பக்கா  perfectionist :)) )


என் திருமணத்திற்கு முன் நடந்த சம்பவம் இது..
எங்கம்மா வீட்டருகில் இருந்த ஒரு மாமியை விடிகாலையில் கோலம் போடும்போது மட்டுமே பார்க்க முடியும். அதுக்குபிறகு அவங்க வீட்டுக்குள்ளே போயிட்டால், வெளியே வரவே மாட்டாங்க..அவங்க கணவர் அந்த மாமா கிட்டே கேட்டால்.."மாமி அசடு, ஒண்ணுமே தெரியாதுன்னு " சொல்வார். காய்கறி வாங்குவது முதல் இஸ்திரி போட்டு வாங்கிட்டு வருவது வரை எல்லாமே "ஆல் இன் ஆல் அழகு ராஜா " நம்ம மாம்ஸ் தான்...வங்கி பணியாளரான மாமாக்கு திடீர் என்று ப்ரோமோஷன் கிடைக்க திருவனந்தபுரத்திற்கு  மாற்றலாகி  கிளம்பி விட, அவர்கள் குழந்தைகளின் கல்வி சிக்கல்களுக்காக மாமி மட்டும் மதுரையில்.


அதற்கு பிறகு தான் ட்விஸ்ட். வாசல்படி தாண்டி பழகாத மாமிக்கு காய்கறி வாங்குவது முதல் வங்கி கணக்குகள், வெளி இடங்களுக்கு சென்று சில அவசிய விஷயங்களை செய்தல்,EB யில் பில் கட்டி வருதல்...இப்படி அன்றாட அத்யாவாசிய விஷயங்கள் எதுவும் செய்ய அவ்வளவு சிரமப்பட்டு மூச்சு திணறித்தான் போனாங்க..காரணம் மாமா,மாமியை  அப்பாவியாகவே ஒரு ஓரத்தில் உட்கார வச்சது தான்..


இப்படிப்பட்ட க்வாலிடி உடைய ஆண்கள், ஏதோ ஒரு கட்டத்தில் பயங்கரமாய் அவங்க துணை கஷ்டபடுவாங்கனு யோசிக்க மறந்துடுறாங்க....(எனக்கு இன்னும் அந்த மாம்ஸ் மேலே எரிச்சல் இருக்கு...)


கடுப்பு-2
(இந்த வகை ஆண்கள், ஆளை விட்டால் போதும் சாமி என எந்த வீட்டு பொறுப்புகளையும் தட்டி கழிக்கும் எந்த சிறு  வேலையையும்,சிறிதும் தன் தலையில் ஏத்திக்காத செம அசால்ட் ஜாலி பேர்வழிகள் :) )


ஒருமுறை, என் பையனுக்கு கடுமையான ஜலதோஷம். மருத்துவர் ரத்த,மல பரிசோதனை செய்ய சொன்னவுடன், பரிசோதனைக்கு கொடுத்து விட்டு ,நாங்கள் லேப் பில் வெயிட்டிங் .அப்போ ஒரு பொண்ணு ரெண்டு சின்ன குழந்தைகளை கூட்டிகிட்டு தன் கணவரோட வந்தாங்க. அதுக்கு பிறகு அவங்களுக்குள் நடந்த உரையாடல் பின்வருமாறு..


பெண்ணின் கணவர்: "கிளம்புறேண்டி. நீ டெஸ்ட் பார்த்து முடிச்சுட்டு போன் பண்ணு. பிக் அப் பண்ண வரேன்.."


 பெண் : "கொஞ்சநேரம் தான் இருங்களேன். பெரியவன் பாடா படுத்துவாங்க "


பெ.கணவர்: "அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது...அது உன் வேல ...எனக்கு ஏகப்பட்ட வேல இருக்கு நான் கெளம்புறேன்..."


பெண் : "ம்ம்...சரிங்க...வீட்டுக்கு போயி எதுவும் தூங்கிராதிங்க...அப்புறம் போன் பண்ணினால் முழிக்க மாட்டிங்க "


பெ.கணவர்: "இல்ல..இல்ல...! போயி டிவி தான் பார்க்க போறேன்..."


அப்புறம் கிளம்பிட்டார் அந்த தியாக வள்ளல்..அதுக்கு பிறகு அந்த குட்டீஸை சமாளிக்க முடியாமல் அந்த பொண்ணு பட்ட பாடு இருக்கே...அவங்களோட பெரிய வாண்டு @ இன்டர்நேஷனல் வாலு , இரத்த பரிசோதனை எடுத்த நர்ஸ் கையை கோவத்தில் நல்லா கடிச்சு வைக்க :) அந்த பொண்ணு கையில் வச்சிருக்கும் குட்டி பாப்பாவும் பசிக்கு அழுக ...ஐயோ..பரிதாபமாய் இருந்தது...அந்த இடமே ரணகளமாய் இருந்தது கொஞ்சநேரம்...அவங்க பையனை யாராலும் சமாளிக்க முடியலை.


அவங்க கணவர் கூட இருந்து உதவி செஞ்சு இருந்தால் எவ்வளவு நல்லா இருந்து இருக்கும் அந்த பெண்ணுக்கு...அந்த பெண்ணின் கணவரை நினைச்சாலே செம எரிச்சலா இருந்தது அப்போ ...
கடுப்பு-3
(இந்த வகை ஆண்கள், தன் துணையிடம் நல்லது/கெட்டது எதையுமே பகிர்ந்து கொள்வதோ, உரையாடுவதோ பெரிய பாவம்னு யோசிக்கும் ஈகோ மக்காஸ்...)


இதை எரிச்சல் னு சொல்வதா,வருத்தம்னு சொல்லவான்னு தெரியலை...


தற்போது, என் தந்தை ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்.அவர் பணியில் இருந்தபோது நடந்த ஒரு வருத்தமான விஷயம் இது..


அப்பாவுடன் வேலை பார்த்த ஒரு ஆசிரியர்,  இலட்சக்கணக்கில் பட்டுவாடா செய்யும் "ஏலச்சீட்டு " தொழிலையும் சைடு பிசினெஸாக செய்து வந்தார்.புல்லட் வண்டியில் சட சட்னு வரும் துறு துறு ஆசிரியர், ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைய...அதற்கு பிறகு தான் பெரிய பிரச்சனைகள்.


அவர் தன் தொழில் சார்ந்த எந்த விஷயங்களையும், தன் மனைவியிடம் சின்ன அளவில் கூட சொன்னதில்லை போலே. பாவம்! அந்த அம்மாவிடம் ,சீட்டு போட்ட மக்கள் டிமாண்ட் பண்ண, அடுத்து யாரு, யாருக்கு பண பட்டுவாடா பண்ணனும், வாங்கணும் னு எதுவும் தெரியாமல் அந்த அம்மா நிலை குழைஞ்சு போக...


அப்புறம் அப்பாவோடு,  சில ஆசிரியைகள், சில ஆசிரியர்கள்  சேர்ந்து,காப்பீடு பத்திரங்கள் எல்லாம் வீட்டில் தேடி(அதுவும் அந்தம்மாக்கு தெரியலை ) பணம் பெற்று தந்து சுமாராய் பிரச்சனைகளை முடிச்சாங்க....


ஒரு பக்கம் அந்த ஆசிரியர் மறைவு பெரிய வருத்தம் என்றாலும்...அவர் இப்படி அவர் மனைவியை பற்றி யோசிக்காமல் இருந்த (ஆசிரியராய் இருந்தும் கூட) க்வாலிட்டி கொஞ்சம் வருத்தத்தை மீறி எரிச்சலும் எட்டி பார்த்தது எனக்கு என்பது உண்மை...


அந்த அனுபவம் எங்கள் அனைவருக்கும் பெரிய பாடமாவே தான் நினைச்சுகிட்டோம்...சாவு என்னைக்கு வந்து நமக்கு கை காட்டும்னு தெரியாது...ஆனால் நம் இறுதி பயணத்திற்கு  பின்பு நம்மை மட்டுமே நம்பி இருந்த உறவுகளை திக்கு தெரியாமல் அலைய விடுவது துயரத்திலும் துயரம்...கஷ்டமோ/நஷ்டமோ, துக்கமோ/மகிழ்ச்சியோ துணையிடம் ஷேர் பண்ணினால் என்ன குறைஞ்சுட போகுது???


என் அப்பா, என் அம்மாவிடம் அவர் காலத்திற்கு பின்பு அம்மாவுக்கு கிடைக்கும் பாதுகாப்பு தகவல்களை (பென்ஷன் விவரம் உள்பட) மிகவும் ப்ராக்டிக்களாய் விளக்கியும்,அறிவிருத்தியும் இருக்கிறார்( பிள்ளைகள் நாங்கள் இருந்தும் கூட) கொஞ்சம் நாங்கள் சென்டிமென்டலாய் பீல் பண்ணினாலும், எங்கள் தந்தை சொன்னது..."இதெல்லாம் சுடும் நிஜங்கள் தான்" !!


ஓகே...மக்காஸ்...நீங்க யாராவ்து இருக்கிங்களா அந்த கடுப்படிக்கும் க்வாலிட்டியில் ??:)))