ஹாய் மக்காஸ்!! வோட்டு போட ரெடி ஆகிட்டிங்களா? எனக்கு இன்னும் பூத் ஸ்லிப் வரல :( ஆனால்,வோட்டர் ஐ.டி கார்டை கண்ணில் படுற மாதிரி எடுத்து வச்சிருக்கேன்.:) என்ன,என் சின்ஸியர் பார்த்து புல்லரிக்குமே??:)) எனக்கு வோட்டு போடுவதில் (ப்லாக் பதிவுகளுக்கும் சேர்த்து தான்:)) ) மிகுந்த ஆர்வம் உண்டு...:)))
சின்னஞ்சிறு சிறுமியாய் , பசை மாதிரி என் தாத்தா கூடவே ஒட்டிக்கொண்டு, கைபிடித்து நான் சென்ற இடங்களில் வாக்கு சாவடியும் ஒன்று. தேர்தல் நாள் அன்று, தாத்தா காலையில் நீராகரம் குடித்து விட்டு, அநேகமாய் முதல் ஆளாய் (பூத் வீட்டிக்கு மிக அருகில்) ஓட்டு போட போகும்போது, கூடவே நானும்,நானும்..:)) எனக்கும் விரலில் மை வைக்கனும்னு அழுது அடம்பிடிச்ச நேரங்களில், தாத்தா எனக்கு இட்டு விடும் bril கருப்பு ink மட்டுமே அந்த நொடி சந்தோஷ நிறைவு...:))))
தாத்தா வீட்டு முன் அறையில், ஓரமாய் ஒரு ஸ்டீல் ஸ்டூலில் ஆச்சி(பாட்டி) கொண்டு வந்து வைத்து விட்டு போகும் இஞ்சி,மிளகாய்,மாங்காய் கலந்த பிரெஷ் வாசனை மோர் வீற்றிருக்க :)) அந்த அறையை சுற்றி, என் தாத்தா மற்றும்,என் தாத்தா வயதை ஒட்டிய இன்னும் நிறைய தாத்தாக்களின் மடியில் குட்டி பாப்பாவாய் உட்கார்ந்து,உட்கார்ந்து, புரியாமல் நான் கேட்ட டாஸ் கேபிடல்,ரஷ்ய புரட்சி,லெனின் மார்க்சிசம்,திராவிட கழங்களின் பாரம்பர்யம் :)) பற்றிய விவாதங்கள் னு எல்லாமே அப்பவும்,இப்பவும்..இந்த நொடியிலும் எனக்கு சிறிதும் புரியாத வெறும் சத்தங்கள் தான் :)))
ஓட்டு போடும் வயது எனக்கு வந்து,தேர்தலில் வோட்டு போட முதல் ஆளாய் செல்ல எத்தனித்தபோது,செல்ல பேத்தியாய் ,கை தாங்கலாய் வோட்டு சாவடிக்கு நான் அழைத்து கூட்டி போக, அப்போது என் அருமை தாத்தா உயிருடன் இல்லை...
வாக்கு பதியும் ஆர்வம் மிகுதியாக இருந்தாலும்,எந்த சரியான வேட்பாளருக்கு போட வேண்டும் என்பதில் குழப்பம் தான் எனக்கு ஆரம்ப நாட்களில். குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலும் வித விதமான அரசியல் எண்ணங்களை கொண்டு இருந்தாலும்,இவங்களுக்கு மட்டுமே வாக்கிடு-ன்னு எந்த அறிவுறுத்தலும்,திணிப்புகளும் எனக்கு வழங்கபடாமல்..முழுக்க முழுக்க என் சுய எண்ணங்களுக்கு கொடுத்த சுதந்திரம் இன்னும் குழப்பத்தை கூட்டியது என்பதும் உண்மை...:))))))
பிறிது வந்த நாட்களில், அரசியலை பற்றிய கண்ணோட்டங்களை சிறிது கூர்ந்து கவனிக்க(?!)..எல்லாருமே அயோக்கியர்கள்,எதுக்கு இவங்களுக்கு வோட்டு போடணும் ங்கிற குழப்பம் வேற வந்து வேற மாதிரியாய் திசை திரும்பியது...:))
இப்ப ஒரு மாதிரி குழப்பம் போயிருச்சு...நான் தீர்மானிச்சுட்டேன்..யாருக்கு என் வாக்குன்னு...எப்படி ன்னு இந்த உரையாடலை படிச்சால் தெரிஞ்சுப்பீங்க...:)))
(மொட்டை மாடியில் உலா போன மாலை நேரத்தில்,எதிர் வீட்டு மாடி ஆன்ட்டியுடன் சிறிது உரையாடல் ..)
ஆன்ட்டி : ஆனந்தி! எலெக்சன் ஜுரம் வந்திருச்சா?
நான் : கட்சிக்காரங்க கிட்டே கேக்குற கொஸ்டின என்கிட்டே மாத்தி கேட்டிங்களே ஆன்ட்டி....! :))
ஆன்ட்டி : சரி!சரி! கவர் பணம் டிஸ்ட்ரீபூட் பண்றாங்களா என்ன....எனி தகவல் ???
நான் : என் கைக்கு பணம் வரல...ஸோ, தெரியல....:))
ஆன்ட்டி : அச்சோ...அப்போ கொடுத்தால் வாங்கிப்பியா ?
நான் : எஸ்...:))
ஆன்ட்டி : ஆனந்தி..!! ஆர் யூ எஜுகேடட்? நீயே இப்படி பண்ணலாமா?
நான் : ஹீ..ஹீ...! எஜுகேடட் இல்ல...எச்சிக்கல னு வச்சுக்கோங்க...:))) !! ஆன்ட்டி...அது போகட்டும்! அப்போ பணம் கொடுத்தால் நீங்க வாங்க மாட்டேங்களா ? உங்க வீட்ல ஆறு வோட்டு ஆச்சே......3,000 ரூபா ல...அப்போ வேணாமா....?
ஆன்ட்டி (பதறி போய்) : எதுக்கு,எதுக்குங்குறேன்...அவங்
நான் : ஹ...ஹ...ஹா.....
ஆன்ட்டி : யாருக்கு வோட்டு போட போற?
நான்: நான் எலியா இருக்கிறத விட புலியா இருக்க ஆசை ....:))
ஆன்ட்டி(புரியாமல்) : .....?!!!
நான்(நக்கலாய் ): எப்படியும் பிரபல கட்சி வேட்பாளர்களுக்கு லட்சகணக்கில் வோட்டு விழுகும். அதோடு நான் போடும் அந்த ஒரு வோட்டு பெருசாய் தெரியாமல் போய்டும்...ஸோ அப்போ நான் எலியா தானே தெரிவேன்...
ஆன்ட்டி(கடுப்பாகி): ஆமாம்..அதுக்கு என்ன இப்போ....
ஆன்ட்டி : ம்ம்..
நான் : ஸோ, எனது வாக்கு பானை அல்லது குடை அல்லது எவர்சில்வர் குடம் அல்லது ராக்கெட் ..இந்த மாதிரி சின்னங்கள் இருந்தால் தான் ஒரே குத்து...:))))
ஆன்ட்டி(தலையில் அடித்து கொண்டு) : அடி பாவி...பாவி...ஜனநாயக துரோகி...
நான்: இட் ஸ் மீ?? ஓகே...தேங்க்ஸ் ஆன்ட்டி...:)))
(டிஸ்கி : சிறிது நேரம் முன்னர் எங்கள் ஊரின் பிரபலமான ரவுடி அவர்கள், ('அட்டாக்' என்று முதலில் தொடங்கும் அவர் பெயர்(முழு பேரை சொல்லிட்டு வீட்டுக்கு ஆட்டோ வரவா என்ன ..அஸ்க்கு புஸ்க்கு ..:)) ) சுயேட்சையாக போட்டி இடுவதால்...மீண்டும் யாருக்கு வோட்டு என்ற விஷயத்தில் எனக்கு குழப்பம் ஏற்பட்டு...குழப்பத்தோடு முடிக்கிறேன்...:))))))
125 comments:
முதல் வாக்கு?
>> எனக்கு வோட்டு போடுவதில் (ப்லாக் பதிவுகளுக்கும் சேர்த்து தான்:)) ) மிகுந்த ஆர்வம் உண்டு...:)))
ஹா ஹா ஆனந்திக்கு எப்பவும் விளம்பரமே பிடிக்காது.... முத தடவையா ஸ்லிப் ஆகிட்டாங்க.. ஹா ஹா
@சி.பி.செந்தில்குமார்
ஹ ஹ...சிபி...இது வேறயா...அது விளம்பரம் இல்லை ...விழிப்புணர்வு...:)))
இதுவும் நல்ல ஐடியாதான்.. திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடுவதை விட அந்த அந்த தொகுதிகளுல் உள்ள நல்ல சுயேட்சை வேட்பாளருக்கு ஓட்டு போடலாம்..
என்னையும் குழப்பிவிட்டீர்கள் சகோதரி !
உண்மைவிரும்பி .
மும்பை
@சி.பி.செந்தில்குமார்
அது தான் என் தேர்வும் கடந்த காலங்களில்..ஆனால் இப்போது சுயேட்சைகளும் சில திராவிட கழகங்களால் வேணும்னே நிறுத்தபடுறதா கேள்வி...ம்ம்...பார்ப்போம்...:))
எல்லாருமே அயோக்கியர்கள்,எதுக்கு இவங்களுக்கு வோட்டு போடணும் ங்கிற குழப்பம் வேற வந்து வேற மாதிரியாய் திசை திரும்பியது...:))
அதே அதே ஆனந்தி
எனக்கும் பூத் ஸ்லிப் வரல...இந்த தடவை அரசியல் கட்சி காரங்க தரமாட்டாங்க...தேர்தல்கமிஷன் ஆட்கள் தான் தருவாங்களாம்....
தேர்தல் முடிவதற்குள் பூத் ஸ்லிப் வருமா..????
எனக்கு வோட்டு போடுவதில் (ப்லாக் பதிவுகளுக்கும் சேர்த்து தான்:)) ) மிகுந்த ஆர்வம் உண்டு...:)))////
என்ன ஒரு சின்ஸியர்....
ஸோ, எனது வாக்கு பானை அல்லது குடை அல்லது எவர்சில்வர் குடம் அல்லது ராக்கெட் ..இந்த மாதிரி சின்னங்கள் இருந்தால் தான் ஒரே குத்து...:)))) ////
இதையெல்லாம் வைச்சு குத்தினா மிஷின் ஒடைஞ்சிடும் பாத்து...
எனக்கு ஓட்டுலிஸ்ட் பேரு வந்து 3 தேர்தல் வந்துருச்சி இன்னும் ஓட்டு போடலை..!!!
ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க வாங்க வாங்க, ஒட்டு யாருக்கு வேண்ணா போடுங்க, ஆனா பணத்த மட்டும் என்கிட்ட கொடுத்துடுங்க :-) ஏண்ணா கொங்குமண்டலத்துல கண்டிப்பா பணம் கொடுக்க மாட்டாங்க :-)))))))))))
முதலில் லீவு முடிஞ்சு முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்..
//சின்னஞ்சிறு சிறுமியாய் , பசை மாதிரி என் தாத்தா கூடவே ஒட்டிக்கொண்டு, //
இங்கேயும் தாத்தாவா.? அவரை அடிக்கடி ஞாபகபடுத்தி மனதை நோக செய்கிறீர்கள்..
@சௌந்தர்
/எனக்கும் பூத் ஸ்லிப் வரல...இந்த தடவை அரசியல் கட்சி காரங்க தரமாட்டாங்க...தேர்தல்கமிஷன் ஆட்கள் தான் தருவாங்களாம்....//
சௌ..இப்போ கட்சி காரங்களும் தரலாம் னு சொல்லிட்டாங்க தேர்தல் கம்மிஷன்...ஆனால் எந்த கட்சியின் எந்த அடையாளங்களும் ஸ்லிப் இல் இருக்க கூடாதாம்..இந்த பதிவு எழுதிய வேளை இப்போ ஸ்லிப் என் கைக்கு கிடைச்சிருச்சு...:))
//இஞ்சி,மிளகாய்,மாங்காய் கலந்த பிரெஷ் வாசனை மோர் வீற்றிருக்க :))//
#வயித்தெரிச்சல்..
//இந்த நொடியிலும் எனக்கு சிறிதும் புரியாத வெறும் சத்தங்கள் தான் :))//
அட உங்களுக்கா புரியாது.. புடிக்காதுன்னு சொல்லுங்க..
@சௌந்தர்
//ஸோ, எனது வாக்கு பானை அல்லது குடை அல்லது எவர்சில்வர் குடம் அல்லது ராக்கெட் ..இந்த மாதிரி சின்னங்கள் இருந்தால் தான் ஒரே குத்து...:)))) ////
இதையெல்லாம் வைச்சு குத்தினா மிஷின் ஒடைஞ்சிடும் பாத்து...//
இதோ..டா...தலிவரு கண்டுபிடிச்சுட்டாரு:))))
///நான் : கட்சிக்காரங்க கிட்டே கேக்குற கொஸ்டின என்கிட்டே மாத்தி கேட்டிங்களே ஆன்ட்டி....! :))///
///நான் : எஸ்...:))///
///40,50 வோட்டுகளில் என் ஒரு வோட்டு பெருசாய் தெரியும் போது நான் புலி தானே...:)))///
///நான்: இட் ஸ் மீ?? ஓகே...தேங்க்ஸ் ஆன்ட்டி...:))) ///
யார்கூடயாவது நேர்ல பேசினாலும் ஸ்மைலியோடதான் பேசுவீங்களா .......:))
//அப்போது என் அருமை தாத்தா உயிருடன் இல்லை... //
வருந்துகிறேன்.. எங்க தாத்தாவே ஓட்டு போட போறதில்ல.. என்னைய எங்கிருந்து கூட்டி போவாரு..??
@சௌந்தர்
//எனக்கு ஓட்டுலிஸ்ட் பேரு வந்து 3 தேர்தல் வந்துருச்சி இன்னும் ஓட்டு போடலை..!!!//
சௌ..இந்த வாட்டி..உன் அண்ணாஸ் கூட போயி ..ஜன நாயக கடமையை கொஞ்சம் ஆத்திட்டு..சை ஆற்றி விட்டு வா...:))))
//குழப்பம் தான் எனக்கு ஆரம்ப நாட்களில். //
உங்களுக்கு மட்டும் தானா.?
//முழுக்க முழுக்க என் சுய எண்ணங்களுக்கு கொடுத்த சுதந்திரம் இன்னும் குழப்பத்தை கூட்டியது என்பதும் உண்மை...:))))))//
எங்க வீட்ல கொஞ்சம் different ஆ டீல் பண்ணுவாங்க.. யாருக்கு வேணா ஓட்டு போடு.. ஆனா கலைஞருக்கு ஓட்டு போடாம இருந்திடாதே.. அப்படினு சொல்லுவாங்க.. ஸோ பேட்.. அதுக்கு கேட்டா ஜெ., இல்ல கலைஞர் தான் வர போறாங்க.. வர்றவங்கள்ல யாரு கம்மியா கொள்ளை அடிப்பாங்கன்னா அது கலைஞராம்..
@karthikkumar
//யார்கூடயாவது நேர்ல பேசினாலும் ஸ்மைலியோடதான் பேசுவீங்களா .......:)) //
கார்த்தி...கேட்டிங்க பாருங்க செம கேள்வி...ஆனால் இதுக்கும் என் பதில் = :)))))
//சிறிது கூர்ந்து கவனிக்க(?!)..//
என்னைமாதிரியே கூர்ந்து கவனிச்சீங்க போல..
//எப்படி ன்னு இந்த உரையாடலை படிச்சால் தெரிஞ்சுப்பீங்க...:)))//
படிப்போம்..
//என் கைக்கு பணம் வரல...ஸோ, தெரியல....:))//
வந்தா எனக்கு கொஞ்சம் தள்ளுறது.!!
//அச்சோ...அப்போ கொடுத்தால் வாங்கிப்பியா ?//
ஹி ஹி.. இதுக்கெல்லாம் ஷாக் ஆகலாமா ஆன்ட்டி.. காமெடி பண்ணாதீங்க ஆன்ட்டி..
@தம்பி கூர்மதியன்
ஹாய் கூர்...வணக்கம்...:)))))) எப்படி இருக்கீங்க?? இதோ ஒரு காபி குடிச்சுட்டு வந்து ரிப்ளை பண்றேன்...:)))
//ஆனந்தி..!! ஆர் யூ எஜுகேடட்? நீயே இப்படி பண்ணலாமா?//
//என்ன தப்பு..ம்ம்...வாங்கிக்கணும் ஒருவேளை கொடுத்தால்....!!!//
ஹி ஹி.. ஆன்ட்டி 5ம் க்ளாஸ் பெயிலோ.?
//நான் எலியா இருக்கிறத விட புலியா இருக்க ஆசை ..//
பாருடா.. எலி புலிக்கெல்லாம் வோட்டு உண்டா.?
//ஸோ அப்போ நான் எலியா தானே தெரிவேன்...//
எனக்கு தெரியாம யார் யார் யாருக்கு ஓட்டு போடுறாங்கன்னு கண்டுபிடிக்கிற மிஷின் வந்துடுச்சா.?
யாருக்கு ஓட்டு போட்டாலும் நீங்க யாருக்கு போட்டீங்கன்னு தெரியவா போகுது.?
(உடனே எனக்கு நான் யாருக்கு ஓட்டு போட்டன்னு தெரியும்.. அப்போ எனக்கு நான் புலியா தெரிவேன்னு சொல்லுவீங்க..)
யப்பா.. அடுத்த பத்திக்கு போவோம்..
//உங்க வீட்ல ஆறு வோட்டு ஆச்சே......3,000 ரூபா ல...அப்போ வேணாமா....?//
அய்யய்யே.! அண்ணன் அழகிரி இவ்வளவோ கேவலமா போயிட்டாரு.?
இங்கல்லாம் ஒரு வீட்டுக்கு 10000 கொடுக்கிறதா பேசிக்கிறாங்க..
How are u Madam?:)
//உங்க வீட்ல ஆறு வோட்டு ஆச்சே......3,000 ரூபா ல...அப்போ வேணாமா....?//
எல்லோரையும் எங்கள் தானே தலைவர் பாரி வேந்தருக்கு ஓட்டளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்..
அதாங்க மோதிரம் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க..
இத மறந்துட்டீங்களே ஆனந்தி...
//அடி பாவி...பாவி...ஜனநாயக துரோகி...//
பாருடா.. ரொம்ப துடிக்கிறாங்க.. அவங்க கிட்ட சொல்லுங்க ஆனந்தி.. போய் திமுகவுக்கு ஓட்டு போட்டு.. சகல இன்பத்தையும் வாங்கிக்க சொல்லுங்க..
அட்டாக் பாண்டி எட்றா அந்த வீச்சருவாளை உட்ரா ஆட்டோவை ஆனந்தி வூட்டுக்கு....
//மீண்டும் யாருக்கு வோட்டு என்ற விஷயத்தில் எனக்கு குழப்பம் ஏற்பட்டு...குழப்பத்தோடு முடிக்கிறேன்...:))))))//
அதாங்க அனைவரும் வாக்களிப்பீர்..மோதிரம் மோதிரம் மோதிரம்..
மதுரை இப்ப செம ஹாட்டாம்ல?
இப்பிடியெல்லாம் நீங்க யோசிப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான்கூட மனு தாக்கல் பண்ணிருப்பேனே? வடை போச்சே!
ஹாய் அக்கா! பாத்து ரொம்ப நாளாச்சு! என்னமோ பாத்து பணத்த சூதானமா வாங்கிட்டு குத்துங்க!
Hotel Rwanda பாக்கனும்னா நம்ம பக்கம் வாங்க! :-)
இப்ப மொத்த பதிவுக்கு வருவோம்.. காமெடியா உங்க எண்ணத்தை சொல்லியிருக்கீங்க.. நன்றி.. இது உண்மையில் உங்க மனசிலிருந்து தான் வந்ததா.?(இல்ல கையில இருந்து.!)
நமக்கு பிடிக்கலைனா ஏதோ ஒரு சின்னதுக்கு வாக்களிக்கலாமா.?(அய்யோ மொக்க போட போறான் போல..)
49o விதி ஞாபகம் இல்லையா(அதான் அந்த form கொடுக்க மாட்டேங்குறாங்களே!..)
உங்க ஓட்டு தரமானதா இருக்க வேணாமா.?(ISO சான்றிதழ் வாங்கிட்டு வர்றட்டா.!!)
இப்படியெல்லாம் கேப்பேன்னு தயவுசெஞ்சு நினைச்சிடாதீங்க..
எப்ப முதல் முதல்ல ஓட்டு போட்டேனோ அது சுயேட்சைக்கு தான்.. அப்ப நான் ஓட்டு போட்ட ஆளு 230வாக்கு பெற்றது என் மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது(உருப்புடும்..)இவ்வளவு வாக்கு பெற்றும் அவர் தோற்றது வருத்தம் அளித்தது..
அப்பரமா எதுக்கு நம்ம ஓட்டை ஏதோ ஒரு லூசுக்கு(தோத்துடுவோம்னு தெரிஞ்சும் நின்னா லூசு தானே) போடணும்னு 49o பிடிச்சுகிட்டேன்..
பாப்போம் form தர்றானுங்களா.. இல்ல பூத்ல என்ன கலாய்கிறாங்களானு..
சாரி ஆனந்தி மறந்துட்டன்..
உங்க இன்றைய பதிவில் போட்டிருக்கும் போட்டா மகா மட்டம்.!!
பதிவுக்கேற்ப திறம்பட போட்டாக்களை தேர்வு செய்யும் ஆனந்தி எங்கே ஒளிந்திருக்கிறார்.. நீங்க போயிட்டு அவுங்கள வர சொல்லுங்க..
@தம்பி கூர்மதியன்
கூர்..எனக்கும் படம் கொஞ்சம் சரியா இல்லையோனு ஒரு நினைப்பு இருந்தது..ஆனால் கொஞ்சம் வித்யாசமாய் பண்றேன்னு சொதப்பிட்டேன்...இது ஓகே வான்னு பாருங்க...
எப்படியோ,ஓட்டு மறக்காம போட்டுடுங்க..
//இது ஓகே வான்னு பாருங்க... //
ஓட்டளிக்க தொலைநோக்கு பார்வையோடு பார்த்த ஆனந்திக்கு ஏற்பது போல தான் உள்ளது..
கண்ணாடி லேசாக கீழிரக்கி மேல் வழியாக பார்க்கும் கண்கள்.. வாயில் தெரியும் நக்கல் சிரிப்பு.. எல்லாம் பதிவுக்கு ஏற்றார் போல..
அந்த தலையில் கேப்.. என்னதான் புத்திசாலித்தனமா யோசிச்சாலும் உங்க தலையில குல்லா தான்னு சொல்லுது..(எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா.!!)
இந்த படம் எனக்கு புடிச்சிருக்கு..
@தம்பி கூர்மதியன்
யாருக்கு ஓட்டு போட்டாலும் நீங்க யாருக்கு போட்டீங்கன்னு தெரியவா போகுது.?
(உடனே எனக்கு நான் யாருக்கு ஓட்டு போட்டன்னு தெரியும்.. அப்போ எனக்கு நான் புலியா தெரிவேன்னு சொல்லுவீங்க..)//
கூர்...இது ஒரு சின்ன சைகாலஜி கணக்கு...லட்சம் பேரில் காணாமல் போகுறதுக்கு...ஒரு அம்பது பேரில் நம் வருகை பெருமை தானே...ஹ ஹ....நான் என் அப்பாவிடம் சொல்லும்போது கூட..என் வோட்டு தோக்கும் கட்சிக்கு தான்...ஆனால் அந்த 50 வோட்டு வாங்கும் ஆளு..அட நம்மளுக்கும் ஒரு வோட்டு விழுந்திருக்கேன் னு ஆச்சர்ய படுவாங்க இல்லையான்னு சொல்வேன்..(அப்பா தலையில் அடிச்சுப்பார் ..அது வேற விஷயம்...:))) )
மேடம் ///எல்லாருமே அயோக்கியர்கள்// அயோக்கியர்களில் சிறந்த அயோக்கியனாக பார்த்து வோட்டு போடுங்கள் இது நல்லவர்களை செலக்ட் செய்யும் தேர்வு அல்ல அயோக்கியர்களை தேர்வு செய்யும் தேர்வு என்பதை மனதில் கொண்டு ஒட்டு போடுங்கள்.//
என் வோட்டுக்கும் உங்க தாத்தா வோட்டுக்கும் சேர்த்து பணத்தை வாங்கி விட்டீர்களா?
எப்படியோ உங்க ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்க.. ;-))
//ஸோ,பிரபலமில்லாத அப்பிராணி சுயேட்சைகள் வாங்கும் அந்த அரிய(??!!) 40,50 வோட்டுகளில் என் ஒரு வோட்டு பெருசாய் தெரியும் போது நான் புலி தானே...:))) //
ஹா ஹா.. இப்படி ஒரு அறிய விளக்கத்த கேள்விப்பட்டதில்லை சகோ! என்னா ஒரு அறிவு!! ;)
//அட நம்மளுக்கும் ஒரு வோட்டு விழுந்திருக்கேன் னு ஆச்சர்ய படுவாங்க இல்லையான்னு//
அட இத நினச்சு தாங்க போன தேர்தல்ல நான் சுயேட்சைக்கு போட்டேன்.. என்ன மாதிரியே யோசிக்கிறீங்களே.!
ஆமாம்.. தாத்தா அந்த காலத்தில யாருக்கு ஓட்டு போடுவார்.?
@தம்பி கூர்மதியன்
////அட நம்மளுக்கும் ஒரு வோட்டு விழுந்திருக்கேன் னு ஆச்சர்ய படுவாங்க இல்லையான்னு//
அட இத நினச்சு தாங்க போன தேர்தல்ல நான் சுயேட்சைக்கு போட்டேன்.. என்ன மாதிரியே யோசிக்கிறீங்களே.!
ஆமாம்.. தாத்தா அந்த காலத்தில யாருக்கு ஓட்டு போடுவார்.? //
இதுவரை சுயேச்சை தான் கூர் என் வாக்கு...பாவமாய் இருக்கும்...:))) நேத்து கூட என் சகோ போன் இல் கிண்டல் பண்ணினான்..."மன்சூர் அலிகான் தூத்துக்குடி பக்கம் சுயேச்சையாய் நிக்குறான்...நீ தான் சுயேச்சை விரும்பியாசே...போயி வோட்டு போட்டு ஹெல்ப் பண்ணுனு..." ஹ ஹ....
அரசாங்க ஊழியர்கள் எல்லாம் அநேகமாய் தி.மு.க தான் கூர்..என் தாத்தா அண்ணா விரும்பி...கலைஞர் ரின் தமிழ் புலமைக்கு விசிறி..ஸோ..எப்பவும் தி மு க தான்...தந்தை ஆசிரியர்..obviously dmk...:))))
உங்க பாலிசி அருமையான பாலிசி. நானும் அப்படி போட்டிருக்கேன். ஆனா இந்த முறை அப்படி போடுறதா இல்ல.
@தம்பி கூர்மதியன்
//49o விதி ஞாபகம் இல்லையா(அதான் அந்த form கொடுக்க மாட்டேங்குறாங்களே!..)
உங்க ஓட்டு தரமானதா இருக்க வேணாமா.?(ISO சான்றிதழ் வாங்கிட்டு வர்றட்டா.!!)//
கூர்...இந்த 49 ஓ பற்றி எல்லாம் கூட போன எம் பி தேர்தலில் ஞானி யால் விழிப்புணர்வு புகுத்தும்போது நான் யோசிச்சது தான்...ஆனால் எனக்கு தான் சுயேட்சைக்கு வோட்டு போட பிடிக்குமே...ஸோ அது அவசியமா படலை...இந்த முறையும் சுயேட்சைக்கு தான்...எந்த தொரை நிக்குராங்கனு பார்த்துட்டு என் வாக்கினை குத்திட்டு வந்துற வேண்டியது தான்....:))))
@எனது கவிதைகள்...
வணக்கம் "எனது கவிதைகள்"!!...தங்கள் முதல் வருகைக்கு நன்றி..குழம்புறது நல்லது பாஸ்..அப்போ தான் நிறைய தெளிவு கிடைக்கும்...(இது நான் கண்டுபிடிச்சது...) :)))
@sakthi
ஹாய் ஷக்தி...நீங்களும் அதே தானா..ஓகே..ரைட் ட்டு..:)))
@இரவு வானம்
//ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க வாங்க வாங்க, ஒட்டு யாருக்கு வேண்ணா போடுங்க, ஆனா பணத்த மட்டும் என்கிட்ட கொடுத்துடுங்க :-) ஏண்ணா கொங்குமண்டலத்துல கண்டிப்பா பணம் கொடுக்க மாட்டாங்க :-)))))))))))//
ஹாய் சுரேஷ்..எப்படி இருக்கீங்க?? அட வந்ததும் குண்டை தூக்கி போடுறீங்க...நீங்கலாம் கண்ணு வச்சு தான்..ரொம்ப ரொம்ப நல்ல கலெக்டர் இப்ப எங்க ஊருக்கு வந்து பணம் எங்க கைக்கு கிடைக்க விடாத மாதிரி பண்ணிட்டாரு...:))) எல்லாருக்கும் பணம் கிடைக்க போராட்டம்,உண்ணா விரதம்னு குதிக்கணும் போலே...:)))
@தம்பி கூர்மதியன்
//முதலில் லீவு முடிஞ்சு முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்..
//சின்னஞ்சிறு சிறுமியாய் , பசை மாதிரி என் தாத்தா கூடவே ஒட்டிக்கொண்டு, //
இங்கேயும் தாத்தாவா.? அவரை அடிக்கடி ஞாபகபடுத்தி மனதை நோக செய்கிறீர்கள்.//
ம்ம்...கூர்மதி என் சிறுவயது முழுதும் என் தாத்தாவின் அன்பிலேயே கரைந்தது..ஸோ...நினைவுகளை தவிர்க்கவே முடியலை..மன்னிக்கவும் .....
@தம்பி கூர்மதியன்
////உங்க வீட்ல ஆறு வோட்டு ஆச்சே......3,000 ரூபா ல...அப்போ வேணாமா....?//
அய்யய்யே.! அண்ணன் அழகிரி இவ்வளவோ கேவலமா போயிட்டாரு.?
இங்கல்லாம் ஒரு வீட்டுக்கு 10000 கொடுக்கிறதா பேசிக்கிறாங்க.. //
அட நீங்க வேற கூர்..இப்படியே உசுப்பேத்தி தான் ஒத்த ரூபா கூட கைக்கு கிடைக்காமல் போச்சு...:))) சகாயம் தான் பின்னுறார் ல இங்க...எந்த கட்சியும் எந்த ஆணியும் பிடுங்க முடியல...:)))
@சமுத்ரா
Very very fine samudra...:))
@வைகை
//மதுரை இப்ப செம ஹாட்டாம்ல?// இப்பிடியெல்லாம் நீங்க யோசிப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான்கூட மனு தாக்கல் பண்ணிருப்பேனே? வடை போச்சே!//
ஹாய் என் அன்பு சகோ வைகை..எப்படி இருக்கீங்க?? ஆமாம் வைகை..மதுரை வெயில் உச்சி மண்டையை பொளக்குது...பட் வெயிலில் சுத்தும் வேட்பாளர்களை பார்த்து கொஞ்சம் ஜாலி ஆ இருக்கு...தேங்க்ஸ் வெயில்...:))) கவலை படாதிங்க..அடுத்த வாட்டி சுயேட்சையா நில்லுங்க..என் வோட்டு என் சகோதரனுக்கு தான்...:)))
@ஜீ...
//ஹாய் அக்கா! பாத்து ரொம்ப நாளாச்சு! என்னமோ பாத்து பணத்த சூதானமா வாங்கிட்டு குத்துங்க!
Hotel Rwanda பாக்கனும்னா நம்ம பக்கம் வாங்க! :-) //
ஹாய் தம்பி...எஸ்..நாளாச்சு..நீ ஓகே தானே...கட்டாயம் அப்புறம் வரேன் ஜீ....
@தம்பி கூர்மதியன்
//எப்ப முதல் முதல்ல ஓட்டு போட்டேனோ அது சுயேட்சைக்கு தான்.. அப்ப நான் ஓட்டு போட்ட ஆளு 230வாக்கு பெற்றது என் மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது(உருப்புடும்..)இவ்வளவு வாக்கு பெற்றும் அவர் தோற்றது வருத்தம் அளித்தது..//
அட..கூர்...நீங்களுமா...same pinch :))))
இவங்களுக்கு மட்டுமே வாக்கிடு-ன்னு எந்த அறிவுறுத்தலும்,திணிப்புகளும் எனக்கு வழங்கபடாமல்..முழுக்க முழுக்க என் சுய எண்ணங்களுக்கு கொடுத்த சுதந்திரம் இன்னும் குழப்பத்தை கூட்டியது என்பதும் உண்மை...:))))))
........அடுத்த election ல, நீங்களே வேட்பாளர் ஆக நின்னுருங்க.... எந்த பிரச்சனையும் இருக்காது.... உங்கள் வோட்டு உங்களுக்கே! ஹி,ஹி,ஹி,ஹி,ஹி...
@ஆர்.கே.சதீஷ்குமார்
//எப்படியோ,ஓட்டு மறக்காம போட்டுடுங்க..//
வாங்க சதீஷ்..கட்டாயம் அதல்லாம் கலக்கி புடுவோம்..:)))
@Avargal Unmaigal
//என் வோட்டுக்கும் உங்க தாத்தா வோட்டுக்கும் சேர்த்து பணத்தை வாங்கி விட்டீர்களா?//
வாங்க அவர்கள் உண்மைகள்..!!எப்படி இருக்கீங்க?? அட நீங்க வேற என் வோட்டுக்கே இன்னும் பணம் வரலை...இதுல நீங்க வேற கடுப்படிக்கிறீங்க..:)))
@RVS
//எப்படியோ உங்க ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்க.. ;-)) //
அதெல்லாம் சூடு ஆறும் வரை ஆத்திட மாட்டோம் பின்ன...:)))
@Balaji saravana
//ஹா ஹா.. இப்படி ஒரு அறிய விளக்கத்த கேள்விப்பட்டதில்லை சகோ! என்னா ஒரு அறிவு!! ;) //
ஹாய் பால்ஸ்..:))) நன்றி சகோ...ஆயிரம் இருந்தாலும் நீங்க என் சகோ பாருங்க..விட்டு கொடுக்காமல் புகழ்றீங்க...ரொம்ப நண்ணி பால்ஸ்...ஹ ஹ...
@தமிழ் உதயம்
//உங்க பாலிசி அருமையான பாலிசி. நானும் அப்படி போட்டிருக்கேன். ஆனா இந்த முறை அப்படி போடுறதா இல்ல. //
அப்படியா !! தேர்தல் முடிஞ்சபிறகு ரகசியத்தை சொல்லிடுங்க ரமேஷ் அண்ணா...:)))
ஹாய் மை டியர் புலி அக்கா.... :-)
செம சேட்டையான பதிவு..
கான்செப்ட் ரொம்ப கரெக்ட்.. ஒரு வாக்காளருடைய ஜனநாயக ரீதியான எதிர்ப்பைக் காட்டுற விஷயம்தான்...
என்ன பிரச்னைன்னா புலியாக நிறைய பேர் ஆசைபட்டுட்டா ஏதாவது ஓர் எலி அது பங்குக்கு புலியாகிடும்!! ஹிஹிஹி...
தாத்தா பற்றி சொன்னது அழகு.....
தாத்தா உங்க விரல்களில் வெச்சுவிட்ட ப்ரில் இங்க்.... அழகான கவிதை...
சூப்பர்ப் அக்கா.... அகைன் ஓர் அழகான பதிவு..... ஸோ ஸ்வீட்....
வெல்கம் பேக் புலி!! :-)))
@Chitra
//........அடுத்த election ல, நீங்களே வேட்பாளர் ஆக நின்னுருங்க.... எந்த பிரச்சனையும் இருக்காது.... உங்கள் வோட்டு உங்களுக்கே! ஹி,ஹி,ஹி,ஹி,ஹி...//
அப்போ...இந்த தம்பட்டம் தாயம்மா எனக்கு வோட்டு போடாது போலே...:)))
@பிரபு எம்
ஹாய் புலியோட தம்பி...:)) நன்றி புலித்தம்பி..(நாம புலி புலின்னு பேசி நம்மளையும் உள்ள வச்சிர போறாங்க பிரபு...நீ வேற...வம்புல மாட்டி விடுற மாதிரி தெரியுதே..) ஆனால் ஒன்னு...எலி தான் திருடி தின்னும் ...ஸோ புலி ..புலியாவே இருந்துட்டு போகட்டும்...:)))
@FOOD
//விடுமுறைக்கு பின் வரும் விறுவிறுப்பான பதிவு.வில்லங்கங்களை விலாசி தள்ளியுள்ளீர்கள்.கவனம் சகோ. //
ஹாய் அண்ணா...எப்படி இருக்கீங்க..அப்புறம் உங்க போஸ்ட் படிக்கிறேன் அண்ணா...அட வில்லங்கமா..இதிலா...ஹேய் ஜாலி...எனக்கும் வில்லங்கமா எழுத தெரியுதா...நன்றி அண்ணா...(உங்கள் அக்கறைக்கு மிகவும் நன்றி அண்ணா...))
@MANO நாஞ்சில் மனோ
//அட்டாக் பாண்டி எட்றா அந்த வீச்சருவாளை உட்ரா ஆட்டோவை ஆனந்தி வூட்டுக்கு...//
தல...you are very very dangerous....:))))))))))))))))).
நல்ல விஷயம்தான்.... இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் உங்களுக்குப் பிடித்த சின்னத்தில் ( டி.வி.மிக்சி, கிரைண்டர், மெழுகு வர்த்தி ,,இப்படி எது வேண்டுமானாலும் ) வாக்களித்து மகிழலாம். ஜன நாயகக் கடமையை நிறைவேற்றிய திருப்தியும் கிடைக்கும். மல்லிகை மணக்கும் மதுரை தந்திட்ட சுயேச்சை வேட்பாளர்களின் குல தெய்வமே வாழ்க !
அந்த குட்டி பொண்ணு படம் அழகா இருக்கு)))
அப்படியே என்னைய மாதிரி )))
நீங்க வேற சகோ எங்க தொகுதில காங்கிரஸ் நிக்குது அதுனால காசே இன்னும் வரல ,காலைல வந்து வோட்டு சிலிப்பு குடுத்துட்டு போனாங்க
ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க வாங்க என் ஆசையக்கா... வாங்க உங்களை வரவேற்பதபில் மிக்க மகிழ்ச்சி...
சத்தியமா நான் ஓட்டுபோட்டுட்டன் உங்களுக்கு இன்ட்லில....அக்கா வந்தாலே ஒரு சந்தோஷமே...
பேசமா நீங்களே தேர்தலில் நில்லுங்களேன் .. எப்படி என் ஐடியா >>
புலி ஆனந்தி....வாழ்த்துகள்.உங்களை மாதிரி இருக்கணும் தைரியமா !
//ஸோ,பிரபலமில்லாத அப்பிராணி சுயேட்சைகள் வாங்கும் அந்த அரிய(??!!) 40,50 வோட்டுகளில் என் ஒரு வோட்டு பெருசாய் தெரியும் போது நான் புலி தானே...:)))//
இந்த தேர்தலைப் பொறுத்த வரை தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் இதுதான் சரியான தீர்வு.
தபால் மூலம் ஓட்டு போடற வசதி இப்ப அங்கே வந்திருச்சா .அப்பத்தான் நான் இங்கிருந்தே ஓட்டு போட முடியும்.
இப்ப உங்களுக்கு ஓட்டு போட்டுட்டேன் .
இத படிச்ச உடனே..எனக்கும் குழப்பம் வந்துருச்சி ஆனந்தி,"பேசாம நான் போடுற தபால் ஓட்ட என் வீட்டு போஸ்ட் பாக்ஸ்லையே போட்டுகிறவா?"
ஆஹா..சிங்கம் களமிறங்கிடுச்சு டோய்..அக்கா திரும்பி வந்துட்டாங்க..!!..எனக்கும் யாருக்கு ஓட்டுப்போடன்னு ஒரே குழப்பமா இருந்துச்சு. இப்போ வோட்டர் லிஸ்ட்ல என் பேரை நீக்கி, தேர்தல் கமிசன் எனக்குப் பெரிய உதவி செஞ்சிடுச்சு.குழப்பம் தீர்ந்திடுச்சு!
சத்தியமாய் வோட்டு போடுவேன் மக்களே!!ஆனால்...!//
வணக்கம் சகோதரம், நலமா? பதிவின் தலைப்பைப் பார்க்கும் போதே புரிகிறது. ஒரு விவகாரமான விடயம் உள்ளடகத்திற்குள் இருக்கும் என்று. படிக்கத் தொடங்குகிறேன்.
ஹாய் மக்காஸ்!! வோட்டு போட ரெடி ஆகிட்டிங்களா? எனக்கு இன்னும் பூத் ஸ்லிப் வரல :( ஆனால்,வோட்டர் ஐ.டி கார்டை கண்ணில் படுற மாதிரி எடுத்து வச்சிருக்கேன்.:) என்ன,என் சின்ஸியர் பார்த்து புல்லரிக்குமே??:)) எனக்கு வோட்டு போடுவதில் (ப்லாக் பதிவுகளுக்கும் சேர்த்து தான்:)) ) மிகுந்த ஆர்வம் உண்டு...:))//
உங்களின் நேர்மையினைப் பாராட்டுகிறேன் சகோ.
சின்னஞ்சிறு சிறுமியாய் , பசை மாதிரி என் தாத்தா கூடவே ஒட்டிக்கொண்டு, கைபிடித்து நான் சென்ற இடங்களில் வாக்கு சாவடியும் ஒன்று. தேர்தல் நாள் அன்று, தாத்தா காலையில் நீராகரம் குடித்து விட்டு, அநேகமாய் முதல் ஆளாய் (பூத் வீட்டிக்கு மிக அருகில்) ஓட்டு போட போகும்போது, கூடவே நானும்,நானும்..:)) எனக்கும் விரலில் மை வைக்கனும்னு அழுது அடம்பிடிச்ச நேரங்களில், தாத்தா எனக்கு இட்டு விடும் bril கருப்பு ink மட்டுமே அந்த நொடி சந்தோஷ நிறைவு...:))))//
ஆஹா.. ஆரம்பமே இலக்கிய நடையுடன் சிறு வயது நினைவுகளை மீட்டியபடி செல்கிறது.
ஓட்டு போடும் வயது எனக்கு வந்து,தேர்தலில் வோட்டு போட முதல் ஆளாய் செல்ல எத்தனித்தபோது,செல்ல பேத்தியாய் ,கை தாங்கலாய் வோட்டு சாவடிக்கு நான் அழைத்து கூட்டி போக, அப்போது என் அருமை தாத்தா உயிருடன் இல்லை... //
காலம் மனிதர்களை விட வேகமாகப் பயணிக்கிறது என்பதன் வெளிப்பாடு இது தானோ?
பிறிது வந்த நாட்களில், அரசியலை பற்றிய கண்ணோட்டங்களை சிறிது கூர்ந்து கவனிக்க(?!)..எல்லாருமே அயோக்கியர்கள்,எதுக்கு இவங்களுக்கு வோட்டு போடணும் ங்கிற குழப்பம் வேற வந்து வேற மாதிரியாய் திசை திரும்பியது...:))//
உண்மையை உள்ள படி சொல்லும் உங்களின் ஊடகச் சுதந்திரத்தை ரசிக்கிறேன். பாராட்டுக்கள்.
ஆன்ட்டி : சரி!சரி! கவர் பணம் டிஸ்ட்ரீபூட் பண்றாங்களா என்ன....எனி தகவல் ???
நான் : என் கைக்கு பணம் வரல...ஸோ, தெரியல....:)//
அவ்.........நம்மாளுங்க ஓசியிலை ஒட்டகத்துமேலை ஏறிச் சவாரி செய்யிறதிலையே குறியா இருக்காங்கள்...
ஸோ,பிரபலமில்லாத அப்பிராணி சுயேட்சைகள் வாங்கும் அந்த அரிய(??!!) 40,50 வோட்டுகளில் என் ஒரு வோட்டு பெருசாய் தெரியும் போது நான் புலி தானே...:))//
இது நல்லா இருக்கே... இலவசமா எது கொடுத்தாலும் வாங்கிப் போட்டு, எல்லா மக்களும் சுயேச்சைகளுக்கு வாக்குப் போட்டா நம்ம ஐயா, அம்மா நிலமை எப்பூடியிருக்கும்?
வணக்கம் சகோ, சம காலத் தேர்தலில் மக்கள் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும், தேர்தல் பற்றிய பெண்களின் நிலைப்பாடு என்ன என்பதனை உங்களின் மண்வாசனையுடன் கலந்த உரையாடற் பதிவாய்த் தொகுத்துத் தந்துள்ளீர்கள். நன்றிகள்.
ஓட்டுக்கு பணம்குடுத்தா பேரம் பேசி வாங்கிட்டு, எங்களுக்கு விருந்து வச்சிருங்க அம்மனி.
தோழி ஆனந்தி..
நம்ம வரி பணம் திருப்பி வாங்க இப்படி ஒரு நல்ல யோசனை சொன்னதுக்கு நன்றி.. பணம் வாங்கிட்டு உங்களுக்கு பிடிச்ச வேட்பாளருக்கு ஒட்டு போடறது எனக்கு பிடிச்சுருக்கு...
எங்க விட்டுல 2 ஒட்டு ... நாங்க ஊரில் இல்லாததால்... எப்படி இருந்தாலும் யாராவது ஒரு கடமை தவறாத கட்சி காரன் எங்க ஓட்டையும் போட்டுருவான்.. வாழ்க ஜனநாயகம்.. வாழ்க பாரதம்..
நீங்க மட்டும் தேர்தல்'ல நின்னா எங்க ஒட்டு உங்கள்ளுக்கு தான்..
அன்புடன்,
ராசு
வணக்கம் ஆனந்தி அக்கா படித்துவிட்டு மீண்டும் வாறேன்.
உங்கள் ஒட்டு புலியாக ஒரு சுயட்சை க்கு போவதற்கு பதில் தோற்கடிக்க பட வேண்டிய ஒரு பெரிய கட்சி க்கு எதிராக நிற்கும் பெரிய கட்சி க்கு ஒட்டு போடுவது நல்லது என்று நான் நெனைக்கிறேன், எனக்கும் அந்த எதிர் கட்சி க்கு ஒட்டு போட விருப்பம் இல்லை, அனால் அந்த பிரதான கட்சி ஐ விழ்த்த வேறு வழி இல்லை சகோ.....
யாருக்கு ஒட்டு போடுறதுன்னு நீங்களாச்சும் தெளிவா சொல்லுவீங்க னு பார்த்தா கடைசியில கன்பியூஸ் பண்ணிட்டிங்களே சிஸ்டர்!!
உங்கள் ஒட்டு புலியாக ஒரு சுயட்சை க்கு போவதற்கு பதில் தோற்கடிக்க பட வேண்டிய ஒரு பெரிய கட்சி க்கு எதிராக நிற்கும் பெரிய கட்சி க்கு ஒட்டு போடுவது நல்லது என்று நான் நெனைக்கிறேன், எனக்கும் அந்த எதிர் கட்சி க்கு ஒட்டு போட விருப்பம் இல்லை, அனால் அந்த பிரதான கட்சி ஐ விழ்த்த வேறு வழி இல்லை .....
@போளூர் தயாநிதிஏன் இப்படி..... என் comment ah அப்படி கோப்பி பண்ணி போட்டு இருக்கீங்க????
@உங்களுள் ஒருவன்
சகோ ..விடுங்க..விடுங்க...அவரும் உங்களை மாதிரியே விருப்பபடலாம்..:)))
அக்கா சொன்ன சரிதான்.......
@நிஷாந்தன்
//மல்லிகை மணக்கும் மதுரை தந்திட்ட சுயேச்சை வேட்பாளர்களின் குல தெய்வமே வாழ்க ! //
வாங்க நிஷாந்தன்...தங்கள் முதல் வருகைக்கு நன்றி..இப்படி நீங்க குலதெய்வம் னு எல்லாம் புகழ்றதை பார்த்து எங்க ஊரு வெயிலுக்கு ..சும்மா சில்லுன்னு இருக்கு...:)) மிக்க நன்றி...
@கணேஷ்
//அந்த குட்டி பொண்ணு படம் அழகா இருக்கு)))
அப்படியே என்னைய மாதிரி ))) //
யப்பா சாமி..இது வேறயா...கணேஷு நான் நீ போட்ட கம்மென்ட்டை படிக்கவே இல்லை என்று உறுதியாக,நிச்சயமாக,தெளிவாக..நம்பிக்கையாக சொல்கிறேன்:))(...ஜோடா ப்ளீஸ் ) :)))
@நா.மணிவண்ணன்
//நீங்க வேற சகோ எங்க தொகுதில காங்கிரஸ் நிக்குது அதுனால காசே இன்னும் வரல ,காலைல வந்து வோட்டு சிலிப்பு குடுத்துட்டு போனாங்க //
ஹை..ஜாலி...எங்க ஏரியா தி மு க நிக்கிறாங்களே...மணி நாங்க மேற்கு தொகுதி...பட் வயித்தெரிச்சல் படாதிங்க..கையில் அஞ்சு பைசா இன்னும் வரல...:((((
@தோழி பிரஷா
//ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க வாங்க என் ஆசையக்கா... வாங்க உங்களை வரவேற்பதபில் மிக்க மகிழ்ச்சி...
...அக்கா வந்தாலே ஒரு சந்தோஷமே...//
தங்கோச்சி:)) உன் கம்மென்ட் கூட கவிதை மாதிரி இருக்கே...எப்புடி..:)) ரொம்ப மகிழ்ச்சி பிரஷா நீ வச்சிருக்கும் அன்பிற்கு...
@எல் கே
//பேசமா நீங்களே தேர்தலில் நில்லுங்களேன் .. எப்படி என் ஐடியா >> //
கார்த்திக்...என் மேலே ஏதாவது கோவம்னால் நல்லா திட்டிருங்க..அதுக்காக தேர்தலில் நான் நின்னு எங்க அண்ணா விஜயகாந்த் கிட்டே கும்மாகுத்து எல்லாம் வாங்க முடியாது...:))))))
@ஹேமா
//புலி ஆனந்தி....வாழ்த்துகள்.உங்களை மாதிரி இருக்கணும் தைரியமா !//
ஹேம்ஸ் ...நீங்க என்னை கலாய்க்கிற மாதிரியே இருக்கே...:)))
@ராஜ நடராஜன்
//இந்த தேர்தலைப் பொறுத்த வரை தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் இதுதான் சரியான தீர்வு.//
அட சூப்பர் ரூ..நம்ம ஐடியா வும் சரியான தீர்வு ன்னு ஏத்துகொள்ளப்படுது...ஓகே...அப்போ ஏதாவது கட்சி ஆரம்பிக்கணும்...அதுக்கு முன்னாடி ரவுடி ஆகணுமே...ம்ம்...எப்போ நான் சொர்ணாக்கா மாதிரி ரவுடி ஆகி....தலைவி ஆகி...கட்சி ஆரம்பிச்சு...மொதல்வர் ஆகுறது...ம்ம்...:)))
@angelin
////angelin said...
தபால் மூலம் ஓட்டு போடற வசதி இப்ப அங்கே வந்திருச்சா .அப்பத்தான் நான் இங்கிருந்தே ஓட்டு போட முடியும்.//
//ஆனந்தி.. asked...
அண்ணா...என் பதிவில் வெளிநாட்டில் (லண்டன்) வாழும் நம் தமிழ் சகோதரி ஒரு கேள்வி கேட்டு இருந்தாங்க...அவங்க அங்கே இருந்து இங்கே தபால் வோட்டு போட முடியுமான்னு...??? விளக்கம் சொல்லுங்க அண்ணா>.//
1.அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்காது.
2.தேர்தல் பணியில் இருப்பவர்கள் மட்டும், தபால் ஓட்டு போடலாம்.
3.ராணுவத்தில் பணி புரிபவர்கள், அதற்குறிய சான்று பெற்று, மாற்று நபர் மூலம் வாக்களிக்கலாம்.
4.சாரி,வெளி நாட்டில் வசிப்பவர்,தபால் மூலம் வாக்களிக்க வழி இல்லை.//
angel ...இது சங்கரலிங்கம் அண்ணா உங்களுக்காக விளக்கமா சொல்லிட்டு போனது...
@ஜெரி ஈசானந்தன்.
//இத படிச்ச உடனே..எனக்கும் குழப்பம் வந்துருச்சி ஆனந்தி,"பேசாம நான் போடுற தபால் ஓட்ட என் வீட்டு போஸ்ட் பாக்ஸ்லையே போட்டுகிறவா?"//
ஓகே...அது உங்க இஷ்டம்...அதையும் ஆட்டைய போடும் கும்பல்ஸ் இருக்காங்க...ஸோ நோ ப்ராப்ளம்..:))
@செங்கோவி
//இப்போ வோட்டர் லிஸ்ட்ல என் பேரை நீக்கி, தேர்தல் கமிசன் எனக்குப் பெரிய உதவி செஞ்சிடுச்சு.குழப்பம் தீர்ந்திடுச்சு! //
ரொம்ப நல்ல காரியம் செஞ்சது தேர்தல் கமிஷன்...:))) எப்படியும் பேரு இருந்தாலும் வாக்கு இயந்திரத்தில் நமீதா படம் தெரியாது..ஸோ நீங்க வோட்டு போட போகும் வாய்ப்பும் குறைவு தானே சகோதரா...:))))) தேங்க்ஸ் டு எலெக்ஷன் கமிஷன் :)))))
@நிரூபன்
//வணக்கம் சகோதரம், நலமா? பதிவின் தலைப்பைப் பார்க்கும் போதே புரிகிறது. ஒரு விவகாரமான விடயம் உள்ளடகத்திற்குள் இருக்கும் என்று. //
மிக்க நலம் நிருபன்...அட விவகாரம் எல்லாம் இல்லை ..நீங்க வேற...உலகத்திற்கு தேவையான எவளவு அருமையான மெசேஜ் சொல்லிருக்கேன் தெரியுமா...ஹ ஹ...
This comment has been removed by the author.
@FOOD
அண்ணா..மிக்க நன்றி...
@Jana
ok jana...:)))
@உங்களுள் ஒருவன்
//உங்கள் ஒட்டு புலியாக ஒரு சுயட்சை க்கு போவதற்கு பதில் தோற்கடிக்க பட வேண்டிய ஒரு பெரிய கட்சி க்கு எதிராக நிற்கும் பெரிய கட்சி க்கு ஒட்டு போடுவது நல்லது என்று நான் நெனைக்கிறேன், எனக்கும் அந்த எதிர் கட்சி க்கு ஒட்டு போட விருப்பம் இல்லை, அனால் அந்த பிரதான கட்சி ஐ விழ்த்த வேறு வழி இல்லை சகோ.....//
சகோ....உங்க கம்மென்ட் டை நிறைய வாட்டி படிச்சு பார்த்து ரசித்தேன்...அது எப்படி இவ்வளவு அழகாய் உருவாக்கினிங்க இதை ?:))) நீங்க சொன்ன எதிர்க்கட்சி யின் ரவுசு தான் அதுக்கு முந்தைய காலங்களில் பட்டு வெறுத்து போன மனசு இன்னும் ஆரலை சகோ...அதுவும் நீங்க சொன்னஆளும் பெரிய கட்சியையும் திருப்பி கொண்டு வர சத்தியமா பிடிக்கல...பட்...எனக்கு என்ன எரிச்சல் னால்...மாற்றம் கொண்டு வரும் மாற்று கட்சி கூட இந்த ரெண்டு உருபடாத திராவிட கட்சிகள் தானே மாத்தி மாத்தி வராங்கங்கிறது தான்...ஊழலிலோ,நம்பிக்கை துரோகத்திலோ ரெண்டு திராவிட கட்சிகளும் ஒன்றை ஒன்று சளைத்தவர்களே இல்லையே சகோ...
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
//யாருக்கு ஒட்டு போடுறதுன்னு நீங்களாச்சும் தெளிவா சொல்லுவீங்க னு பார்த்தா கடைசியில கன்பியூஸ் பண்ணிட்டிங்களே சிஸ்டர்!! //
என் அருமையான சகோதரன் மாத்தி யோசி ப்லாக் புகழ் ஓட்ட வட நாராயணன் என்ற ராஜிவன் அவர்களின் குல தெய்வங்களான நமீதா,ரம்பா இப்படி யாரவது தேர்தலில் நின்னால் ரெண்டு மூணு கள்ள வோட்டுகளை கூட போட்டு இருப்பேன் என் சகோதரனுக்காக ...இந்த குழப்பமும் வந்திருக்காது...:)))
@போளூர் தயாநிதி
நன்றி போளூர் தயாநிதி
@Jey
@Jey
//ஓட்டுக்கு பணம்குடுத்தா பேரம் பேசி வாங்கிட்டு, எங்களுக்கு விருந்து வச்சிருங்க அம்மனி.//
கடுப்படிக்காதிங்க jey ....மதுரை தொகுதி ஸ்டார் தொகுதி..:)))) இப்போ வரை அஞ்சு பைசா கண்ணில் காட்டலை கட்சி காரங்க...பயங்கர கோவத்தில் இருக்கோம் மதுரை மக்கள்...:)) பணம் தரா விட்டால் தேர்தலை புறக்கணிப்போம் னு ஏதாவது நாங்களும் எங்க பங்குக்கு வை கோ மாதிரி காமடி பண்ணலாமான்னு யோசிச்சுட்டு இருக்கோம்...:)))
@Ramesh Natarajan
/நீங்க மட்டும் தேர்தல்'ல நின்னா எங்க ஒட்டு உங்கள்ளுக்கு தான்..//
ஹ ஹ...அது சரி...அப்போ நான் மட்டுமே நிக்கனும்னால் ...போட்டியிடும் மற்ற வேட்பாளர்களுக்கு " பாலிடாயில் ட்ரீட்மென்ட்" நீங்க பண்றேன்னு சொல்றீங்களா ராசுகுட்டி...?? ஹ ஹா...உங்க ஒரு வோட்டு மட்டும் எனக்கு கிடைச்சு..."ஒத்தை வோட்டு வாங்கிய அமரசிகாமணி" னு பட்டம் கிடைச்சு பாபுலர் ஆக வேணும்னால் சான்ஸ் இருக்கு..:))).இருந்தாலும் ரொம்ப நம்பிக்கை ராசு என் மேலே உங்களுக்கு...ஹ ஹ...
@ஆனந்தி..விஜயகாந்தோ, வைகோ வது தனித்து நின்று இருந்தால் அவர்களக்கு ஆதரவு தெரிவித்து கொண்டு இருப்பேன்...... அனால் இரண்டு பிசாசுகளில் மஞ்சள் துண்டு போடவர்க்கா அல்லது பச்சை ஆடை அணிதவர்க்கா என்று தான நமக்கு இபொழுது கேள்வி..... சீமான் வழி இல் சிந்திப்போம், இப்பொழுது முன்றாம் எதிரியை வைத்து முதல் மற்றும் இரண்டாம் எதிரியை தோற்கடிப்போம், முன்றாவது எதிரியை நாமே தோற்கடிப்போம்..... அது இந்த தேர்தலில் அல்ல.... அடுத்த தேர்தலில்.....
@உங்களுள் ஒருவன்
சகோ..அதிகபட்சமாய் இப்போ எல்லாம் அரசியல் வாதிகள் எல்லாமே கொள்ளிவாய் பிசாசு மாதிரி தான் தெரியிறாங்க..எனக்கு பிசாசு என்றால் பயம்...:))பிசாசுகளை நான் வோட்டு போட்டு ஊக்கபடுத்துவதில்லை சகோ...:))
@ஆனந்தி..அனால் நீங்கள் சுயட்சை கு போடும் வோட்டு செல்லா காசாக்க தான் போகும், சரி வோட்ட போட வேண்டாம், நமக்கு என் வம்பு ன்னு நீங்க இருந்தாலும், நம்ம கள்ள ஒட்டு.... கண்ணாயிரம் போட்டு விடுவான்....... என் என்னோட செத்து போனே தாத்தாக்கு அவன் தான் வோட்டு போட்டனா பார்த்து கொங்க.....
@ஆனந்தி..
சகோ...நான் கட்டாயம் வோட்டு போடுவேன்...அங்கே போயி உதயசூரியன்,ரெட்டளை, தவிர சுயேட்சைகள் சின்னத்தில் பிங்கி பாங்கி போட்டு ஏதாவது ஒன்னில் குத்திட்டு வர வேண்டியது தான்..ஹ ஹ...
//நான் : ஸோ, எனது வாக்கு பானை அல்லது குடை அல்லது எவர்சில்வர் குடம் அல்லது ராக்கெட் ..இந்த மாதிரி சின்னங்கள் இருந்தால் தான் ஒரே குத்து...:))))//
லாஜிக்ல பின்றீங்க போங்க...! சத்தியமா சொல்றேன், ஹா...ஹா...இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன்...!! உங்க குசும்புக்கு அளவே இல்லாம போச்சு...! :-))
எனக்கும் அதே குழப்பம் தான்.
நான் ஒரு முடிவு எடுத்துருக்கேன்.
நம்ம வலைப்பக்கம் வாங்க
@Sathish Kumar
சதீஷ்...இதுக்கே இப்படி சொல்றிங்க...மம்மி வைகோ மாமாவை கழட்டி விட்டது முதல் எங்க ஊரு கேப்டன் அண்ணாவின் ஆப் அடிச்ச ஆக்ஷன் த்ரில் சம்பவங்களை பார்த்து சிரிச்சு சிரிச்சு குடல் வெளிய வர ஸ்டேஜ் இல் இருக்கேன்....இப்போ நடிகர் கார்த்திக் வேற அவருக்கு வர வெற்றி வாய்ப்பை தகர்க்க சதி நடக்குது ன்னு தேர்தல் கமிஷன் இல் புகார் கொடுத்திருக்காராம்...ஹ ஹ..இதில் என்ன காமடி னால் கார்த்திக் கட்சியில் டோட்டலாவே பத்து பேருக்கு மேலே இல்லன்னு பட்சி சொல்லுது...ஹ ஹ....:))))
@சிவகுமாரன்
//எனக்கும் அதே குழப்பம் தான்.
நான் ஒரு முடிவு எடுத்துருக்கேன்.
நம்ம வலைப்பக்கம் வாங்க //
சிவா..கட்டாயம் வந்து பார்க்கிறேன்...
dear ananthi plz consider 49 o coz it will lead to an analysis for the next step...there is no need of a separate form for that...we can record it through white paper itself...
நல்ல யோசிப்புதான் தோழி.
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பதிவு... கருத்து கந்தசாமி பட்டம் ரெடி ஆகுதாம் உங்களுக்கு... ஜஸ்ட் கிட்டிங்... நல்ல போஸ்ட்...:))
எங்கள் ஓட்டு ஆனந்திக்கே
-ஆஷிக்
நன்றாக இருந்தது வாசிப்பதற்கு .வாழ்த்துக்கள் !
Post a Comment