இது ஒரு இரங்கற்பா..யாருக்குன்னு நீங்க தெரிஞ்சுக்க விரும்புரிங்கனால் தொடர்ந்து படிங்க..
நான் வலைப்பூ ஆரம்பிக்கலாம்னு ஜஸ்ட் முடிவு பண்ணியபோது ரண்டம் ஆ டெம்ப்ளட் டிசைன் பார்க்க ப்ளாக்ஸ் பார்த்துட்டே வந்தேன் ஒரு ரெண்டுமாசம் முன்னாடி..அப்போ யதேச்சையா பட்டது தான் பாச்டிவ் அந்தோணி முத்து அண்ணாவின் ப்ளாக்..
அவரோட அறிமுகம் படிச்சேன்..
http://positiveanthonytamil.blogspot.com/p/positive-anthony-ve-anthony.html
ஏதாவது பின்னூட்டம் போடணும்னு அப்புறமா னு யோசிச்சுட்டு அப்படியே மறந்துட்டேன்..அப்புறம் ஒரு வழியா போன மாசம் ப்ளாக் ஆரம்பிச்சுட்டேன்..அந்த பெயர் நினைப்பில் இருந்தது..உடனே என் favourite இல் அண்ணாவின் ப்ளாக் சேர்த்து கொண்டேன்..அப்புறமாய் போயி பார்க்கலாம்னு விட்டுட்டேன்..போனவாரம் யதேச்சையாய் அண்ணா ப்ளாக் போயி பார்த்தேன்..ரொம்ப அதிர்ச்சி..அண்ணா இறந்துட்டர்னு படிச்சேன்..ரொம்பவே வருத்தம்..ரொம்ப நேரமா அண்ணா ப்ளாக் ஆய் பார்த்துட்டே இருந்தேன்..அல்மோஸ்ட் எல்லா பதிவுகளையும் அன்னைக்கு படிச்சேன்..நிறைய வேதனைகள்,துயரங்கள்,போராட்டங்கள்,ஆசைகள்,ரசனைகள் க்கு நடுவில் கழிச்ச அவர் போராட்டங்கள் ஒவ்வெரு பதிவுலயும் பார்த்தேன்..நிஜமாய் அது நமக்கு ஊக்கமாய் கூட இருக்கும் நினைச்சேன்..
பதிவுலகில் அந்தோனிமுத்து அண்ணாவை தெரிஞ்சவங்க நிறைய பேரு இருக்கலாம் நினைக்கிறேன்..சீனா அண்ணா வின் வலைசரம் போயி பார்க்கும்போது dr .ப்ரூனே,அப்துல் அவர்கள் எல்லாம் உதவி இருக்காங்கனு தெரிஞ்சது..பரவால பதிவுலகத்தில் இந்த நட்புகளும்,அக்கறையும்,உதவிகளும் பரஸ்பரம் இருப்பது சந்தோஷமாகவும் இருந்தது..
சகோதரர் அந்தோணி இறந்து நேற்றை யோடு ஒரு மாதம் ஆகிறது..
சகோதரர் அந்தோணி முத்துக்கு இந்த தங்கையின் சிறிய சிறிய இரங்கற்பா..
"உடல்நோவு நித்தம்-உன்னை
உருக்குலைத்தும்
உயர்ந்து நின்றாய்-வாழ்வில்
மறைந்தும் சென்றாய்-நிகழ்வில்!!
அண்ணா..
"விண்ணில் உனக்காய்
தேவர்கள் சாமரம்
வீச தயாராம்..
உன் பாதங்கள்
ஓடுவதை ரசிக்க
அழகிய பூந்தோட்டம்
காத்திருக்கிறதாம்..
உன் தனிமை போக்க
தேவதைகள்
கதை சொல்ல தயாராம்..
அமூதூட்ட அன்னை
காத்திருக்கிராலாம்!!"
மேலும்..
நீ பாசிடிவ் அந்தோணி..
நீ இப்பொழுது கூட இப்படி தான் சொல்வாய்..
இணையத்தில் படித்த இந்த வரிகளையும் உனக்காய் அனுப்புகிறேன்..
Don't weep at my grave,
For I am not there,
I've a date with a butterfly
To dance in the air.
I'll be singing in the sunshine,
Wild and free,
Playing tag with the wind,
While I'm waiting for thee.
Dear brother!Goodbye!!
beloved sister,
ananthi..
(இது என் ஆத்ம திருப்திக்காக மட்டுமே வெளியிட்ட பதிவு)
4 comments:
அன்பின் ஆனந்தி
அருமையான இரங்கற்பா
அந்தோணி - அருமை நண்பன் - அப்பா அப்பா என அழைப்பான். இயன்ற வரை உதவினோம். உதவுதற்கு இறைவன் அருகிலேயே அழைத்துக் கொண்டான். என்ன செய்வது. அவனது கர்ணனிப் பற்றிய இடுகை எல்லோராலும் படிக்கப் பட வேண்டிய ஒன்று.
நன்றி ஆனந்தி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அவருக்கு எனது அஞ்சலி.உங்களுக்கு என் வாழ்த்து.
கண்ணில் நீர் மல்க வைத்து விட்டீர்கள்.
என்ன சொல்வதென தெரியவில்லை,.. அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்,..
Post a Comment