September 23, 2010
இனிப்பான செய்தி..இந்தாங்க..!!
2012 இல் உலகமே அழிஞ்சுரும்..பனிமலை எல்லாம் உருகி..வழிஞ்சு உலகமே வெள்ளக்காடாய் போகும்..ஓசோன் திரை முழுசும் ஓட்டை ஆகி..சூரிய கதிர்கள் நம்மை பொசுக்கி..வெந்து கருகி போவோம்னு...மிரண்டு போயி இருக்கும் தற்போதைய நிலையில்..இதமான,இனிப்பான செய்தி சொல்லிருக்காங்க..
யாரு சொன்னாங்கலாம் ??
இயற்கையை ஆய்வு செய்யும் 300 பேர் கொண்ட அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஷோக்கான செய்தியை சொல்லிருக்காங்க..
என்னனு??
"ஓசோனில் விழுந்த ஓட்டை கொஞ்சம் கொஞ்சமாய் மறைகிறது. இந்த நூற்றாண்டின் இடையிலேயே முழுசும் மறஞ்சு சரியாய்டும்"
சரி..ஏன் என்னதான் நடந்தது ஓசோனில்??..ஏன் என்னவாச்சு..ஒரு மண்ணும் புரியலேயே??
ஓசோன் ன்னால் பூமியிளுர்ந்து 60 கிலோ மீட்டர் உயரம் பரவி உள்ள ஒரு மெல்லிய திரை..இது முழுக்க முழுக்க வாயு ..புரியிறமாதிரி சொன்னால் நமக்கு இது ஒரு கருப்பு பூனை பாதுகாப்பு படை மாதிரி..("அம்மா" வை நினைச்சுக்கோங்க)
அது சரி..இது என்னத்தை பண்ணுது நமக்கு??
சூரிய கதிரின் வெப்பம் நேரடியா நமக்கு பட்டால் சுருண்டுருவோம்..நேரடியா தோலில் படும்போது ஏகப்பட்ட வியாதி வர வாய்ப்பு இருக்கு..(டீ குடிக்கும்போது வடிகட்டி தானே குடிக்கிறோம்.).அது மாதிரி ஓசோன், வடிக்கட்டி, நமக்கு அந்த வெப்பத்தை ஜோரா அனுப்புது..
அதெல்லாம் சரி தான்..கேக்க நல்லா தான் இருக்கு..என்ன தான் ஆச்சு அதுக்கு??
அது வேலைய ஒழுங்கா செஞ்சுட்டு இருந்தது.ஆனால் சமுதாய விலங்குகள்(man is a social animal :-)) ), நாம இருக்கோமே..எந்த நல்ல விஷயத்தையும் கெடுக்கிறது தானே முதல் வேலை..அதையும் சரியா செஞ்சோம்..
இன்னாப்பா..ராங்கா சொல்ற...??
1 . மக்கியே போகமாட்டேன்னு அடம் பிடிக்கும் பிளாஸ்டிக் வில்லன்,பாலிதீன் சொர்ணாக்கா இவங்களை எல்லாம் வாங்கி வாங்கி குவிப்போம்.
2 .மரங்களை மாஞ்சு,மாஞ்சு வெட்டி போட்டு..பிளாட் போட்டு விற்ப்போம்.
3 . காடுகளை அழித்து எல்லாருக்கும் கடுக்கா கொடுப்போம்..
4 . அடுத்து வீட்டு மாமா பார்க்க போனால் கூட புகை கக்கும் வாகனத்தில் போயி நின்னு,அலப்ஸ் கொடுப்போம்..
...................
........
அதெல்லாம் தோரணை,,கண்டுக்கபடாது..இப்போ இன்னாச்சு அதுக்கு??
என்னாச்சா?? எல்லா கூத்தும் பண்ணியாச்சு. நிறைய தோல் வியாதி,கண்ணு ஓட்டையா போனது,புற்று நோய் னு வந்தது தான் மிச்சம்..
ஐயையோ..இவ்வளவு பேஜார் இருக்கா??
ஆமாம்..இப்படியே போய்கிட்டு இருந்த போது..திடீர்னு ஒரு நலல நாளில் (1987 ) சமூக ஆர்வலர்கள் முழிச்சுட்டாங்க(நாமல்லாம் அப்போ கூட தூங்கிட்டு தான் இருந்தோம்).அவங்க உலகமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு தரும் வேலையில் ஈடுபட்டாங்க..
ஓ..அப்புடியா..??என்னல்லாம் கூவுனாங்க பா??
1 . பாலிதீன் பொருள்களுக்கு தடை
2 . நிறைய பிரச்சாரங்கள்
3 .விழிப்புணர்வு முகாம்கள்
......
இது மாதிரி நிறைய.
ஓ..கலக்கலா இருக்கே..
இது ஓரளவு நல்லது பண்ணிருக்கு போலே..அது மட்டுமில்லாமல்,190 நாடுகள் சேர்ந்துகிட்டு ஒசோனை பாதுகாக்க ஒரு ஒப்பந்தமும் செஞ்சுகிட்டாங்க..
ஒப்பந்தமா...ஹீ..ஹீ..ஒப்பந்தம்னாலே சிப்பு..சிப்பா வருதுப்பா..(அணுஆயுத ஒப்பந்தத்தில் மன்மோகன் சிங் காமடி பீஸ் ஆ இருந்தது மறக்க முடில ப்பா..)சரி..சரி..அப்புறம் என்னாச்சு??
இதோ 300 பேர் கொண்ட ஆய்வு குழு ஒரு இனிப்பான செய்தி சொல்லிருக்காங்க..
அட..இனிப்பா..என்னப்பா கடலைமுட்டாய் வியாபாரம் நம்ம ஊரில் ஆரம்பிக்க போறாங்கலாமா??
ஓய்..அதை தான் கட்டுரையின் ஆரம்பத்திலே சொல்லிட்டு தானே இதெல்லாம் சொல்லிட்டு வரேன்..தூங்குறியா..??
மன்னிச்சு..மன்னிச்சு..ப்பா..நல்லா புரியுது..ஓசோன் திரை சரியாகிட்டு வருதுங்குற..உலகம் ஒளிருதுங்குற :-))
ஆமாம்..நிச்சயம் இனிப்பான விஷயம் தானே?/
அட்லீஸ்ட்,நம்ம வருங்கால சந்ததிகள் பாதுகாப்பாய் இருப்பாங்க ன்னால் சந்தோசம் தானே??
மெய்யாலுமே..சரி தான் பா..
தனிப்பட்ட என் கருத்து:
* விழிப்புணர்வு நிஜமாகவே ஓரளவு திருப்தி தான்.
*எப்.எம் ரேடியோ க்களில் நிறைய ஆக்க பூர்வ ஓசோன் பிரச்சாரங்களை பலமுறை கேட்டு இருக்கிறேன்.
*நகர்ப்புறங்களில் இன்னும் பாலிதீன் நடமாட்டம் இருக்கு.ஆனால் முன்னாடிக்கு இப்போ எவளவோ தேவலை.
*பள்ளி,கல்லூரிகளில் நிறைய இதுபற்றி கருத்து கணிப்பு,போட்டிகள் நடத்துறாங்க..பாட புத்தகங்களில் குளோபல் வார்மிங் பற்றி கட்டாயம் ஒரு பாடமாவது இருக்கு..
*மீடியா சேவையை கட்டாயம் பாராட்ட வேண்டும்
ம்ம்..ஆயிரம் சொன்னாலும்..வெளிநாட்டு மக்களை விட நம்ம நாட்டில் விழிப்புணர்வு,அக்கறை இன்னும் கம்மி தான்.
பரவால..குறைகளை இன்னும் சரி செஞ்சுட்டு..இந்த இனிய செய்தியை இன்னும் அழகூட்டுவோம்..
(இனிப்பு வாங்கிட்டிங்களா?)
(ஓகே..மறக்காமல் வோட்டு போட்டு போய்டுங்க)
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தி.
ஸ்ரீ....
(இனிப்பு வாங்கிட்டிங்களா?)
என்னது நீங்க தானே இந்த செய்தியை சொன்னது அப்போ நீங்க தான் இனிப்பு தரனும்
//ஆயிரம் சொன்னாலும்..வெளிநாட்டு மக்களை விட நம்ம நாட்டில் விழிப்புணர்வு,அக்கறை இன்னும் கம்மி தான்.//
அதான் சரியாகிட்டு வருதுன்னு சொல்லிட்டீங்க இல்ல, நம்ம ஆட்கள் பழையபடி ஆரம்பிச்சுடுவாங்க.
புற்றுநோய் மருத்துவமனையை விட்டு வேளியே வந்தவுடன் ஒரு 'தம்' பத்தவைப்பதைப்போல :)
அருமையான எழுத்து நடை,.. இதை விட எளிமையாக யாருக்கும் சொல்லமுடியாது,.. ஓட்டு போட்டாச்சு
//(ஓகே..மறக்காமல் வோட்டு போட்டு போய்டுங்க)//
ம்ம்ம் எல்லாத்துக்கும் சொல்லிட்டு நீங்க யாருக்கும் ஓட்டு போடுறதில்லை போலிருக்கு,.. மொத்தமே 14 ஓட்டுதான் போட்டுருக்கீங்க அதுல 9 உங்க பதிவு தனி,..
நடக்கட்டும் நடக்கட்டும்
நல்ல பதிவு..... நல்ல செய்தி..... மேலும் மாசு படுத்தாமல் இருக்க வேண்டியது, நமது கடமை.
உண்மைலேயே மகிழ்வான செய்திதான்
இனிப்பான செய்தியா இருக்கே நிஜம்தானா
கிள்ளி பாத்துக்கிறேன்.. :)
@ஸ்ரீ....
உண்மை தான் ஸ்ரீ..வருகைக்கு நன்றி..
@ers
நன்றி..வருகைக்கு!!
@சௌந்தர்
இனிப்பு வாங்கிட்டிங்கலானு கேட்டது..என்கிட்டே இருந்து வாங்கிட்டேங்கலானு கேட்டேன்..ஓகே ஆ சௌந்தர்?
@பரிதி நிலவன்
உண்மை தான்... நல்லதையே நம்பலாம் பரிதி..வேற என்ன பண்ண நாம்?
@jothi
நன்றி ஜோதி..நான் வலைப்பூக்கு ரொம்ப புதுசு..இப்போ தான் மத்த ப்ளாக் கும் போயி படிச்சு வோட்டு போட ஆரம்பிச்சுருக்கேன்...இனி நிறைய வோட்டு போடுவேன் நல்ல பதிவுகளுக்கெல்லாம்...அறிவுருத்தியதுக்கு நன்றி ஜோதி..
நன்றி !!சித்ரா,முத்து,lk ! வருகைக்கு நன்றி!!
அக்கா என்ன சொல்றதுன்னே தெரியல.. நேத்து தான் படிச்சேன் இதப்பத்தி.. நல்ல அழகா எல்லாருக்கும் புரியறமாதிரி எளிமையா சொல்லிருக்கீங்க..சூப்பர்.. என்னோட ஓட்டும் உங்களுக்கு உண்டு.... சேர்த்துக்கோங்க...
Good information....
@radha
நன்றி ராதா..உங்க தோழிகள் சந்திப்பு கேள்விபட்டேன்..ரொம்ப சந்தோசம் ராதா..
நிஜமா கேக்க சந்தோசமா இருக்கு..!
படிக்கும் போது இடைஇடைல சிரிப்பு வரதால பதிவின் வேகம் குறையுது.;;))
மறக்காம ஓட்டு போட்டாச்சு...!
(ம்ம்ம்.. நம்ப ஊர்ல ஓட்டு போட்டா பிரியாணி பொட்டலம் எல்லாம் கிடைக்கும்)
மிகவும் நல்ல பதிவு
http://eyesnotlies.blogspot.com
மேட்டரெல்லாம் நல்லாதான் போடறீங்க,ஆனா அந்த லே அவுட்தான் கொஞ்சம் தள்ளி தள்ளி இருக்கு ,நீங்க டீச்சரோ?
உங்க எழுத்து பாணி ரொம்ப நல்லா இருக்குங்க...
நம்ம ஊர்ல அதை பத்தியெல்லாம் யோசிக்க மாட்டாய்ங்க..இந்த தேர்தலுக்கு இலவசமா என்ன தருவாங்க ந்னுதான் அவங்க கவல...
இதை நம்புவதா என்று தெரியவில்லை .ஏனெனில் ஓசோன் படலம் சிதைவது ஒரு சுழற்சிவினை (cyclic action). நமது பள்ளிநாட்களில் படித்து மறந்திருப்போம். புற ஊதாக் கதிர்கள் CFC உடன் வினை புரிந்து கார்பன் க்ளோரின் இணைப்பை உடைத்து ஒரு தனி க்ளோரின் அணுவை உருவாக்குகின்றது.
CFCl3 + UV Light ==> CFCl2 + Cl இந்த தனி க்ளோரின் அணுவானது ஓசோன் அணுவுடன் சேர்ந்து ஓசோனை ஆக்சிஜனாகவும் O2 மற்றும் க்ளோரின் மோனாக்சைடாகவும் பிரிக்கின்றது
Cl + O3 ==> ClO + O2
இப்போது க்ளோரின் மோனாக்சைடு ஆக்சிஜனுடன் இணைந்து க்ளோரின் ஆகவும் மற்றொரு ஆக்சிஜன் ஆகவும் பிரிகிறது
ClO + O ==> Cl + O2
இப்போது தனித்த க்ளோரின் அணு ஒசோனுடன் இணைந்து திரும்பவும் ஒரு சுழல் நிகழ்வாகின்றது.
Cl + O3 ==> ClO + O2
ClO + O ==> Cl + O2
எனவே ஒருமுறை CFC ஆல் தொடங்கப்பட்ட சுழல்வினை அனைத்து ஓசோன் அணுவும் அழியாமல் நிற்காது என்று நான் படித்த ஞாபகம். விஞ்ஞானிகள் சொல்வது எனக்குப் புதிராக உள்ளது....
நல்லா எழுதியிருக்கீங்க ஆனந்தி!
பாலித்தீன் ஒழிப்பில் எங்கள் குமரி மாவட்டம் முன் மாதிரியா இருக்குன்னு சொல்றதுல பெருமைப் பட்டுக்கறேன் :).
குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் உபயோகத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை போட்டு அதில் பெருமளவு வெற்றியும் கண்டுள்ளது. மக்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கின்றனர்.
@Rajesh kumar
ராஜேஷ் உங்கள் பகிர்வுக்கு நன்றி..நீங்கள் சொன்ன வேதியல் மூலக்கூறுகள் சரியாக எனக்கு புரிபடல..ஆனால் நான் படிச்சதை இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்றேன்..
(அது இன்னும் குழப்புமானு தெரில..) ஆராய்ச்சியாளர்கள் அளித்த தொகுப்பில்.."கார்பன் கழிவுகள் பெரும்பாலும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது..ஒசோனை பாதிக்காத பொருட்களின் உபயோகம் பற்றி மக்களிடயே இருக்கும் விழிப்புணர்வினால் மட்டுமே இது சாத்தியம்.இதனால் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 10 ஜிகா டன் கார்பன் வேஸ்ட் கட்டுபடுத்தபடுகிறது..இதனால்,ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டை சுருங்கவும் ஆரம்பித்து விட்டது.1980 இல் இருந்த நிலைமைக்கு,2045 இல் இருந்து 2060 க்குள் அநேகமாக ஓட்டை மூடிவிடும் னு அவங்க ரிப்போர்ட் குடுத்து இருக்காங்களாம்..தென் துருவத்தில் மட்டும் கொஞ்சம் மெதுவாய் இந்த ப்ராசெஸ் நடக்கிறது..காரணம் அதீத பருவ நிலை மாறுபாடு...சோ,நீங்க சொன்ன கார்பன்,ஆக்சிஜென் மாலிககுல்ஸ் க்கும் இந்த கார்பன் வேஸ்ட் (கட்டாயமா அதில் கார்பன் மொனோக்சிட் எல்லாமே அடக்கம்..ஏதாவது அணுக்களில் தொடர்பு இருக்கலாமான்னு யோசிச்சு பாருங்க..எனக்கு எதுவும் மண்டையில் வொர்க் அவுட் ஆகலை..தெரிஞ்சால் எனக்கும் சொல்லுங்க...ஓகே வா..??)
@தமிழ் அமுதன்
நன்றி அமுதன்..தங்கள் வருகைக்கு நன்றி..பிரியாணி பொட்டலமா?நீங்க எந்த காலத்தில் இருக்கீங்க?இப்போ,பணம்,செல் போன்,கால் பவுன் தோடு(உபயம் திருமங்கலம் தேர்தல்),சேலை,வேஷ்டி,..இப்படி போய்கிட்டு இருக்கு நம்ம ஊரு..பிரியாணி பொட்டலமா..மதுரை காரிய இப்படி ஒரு கேள்வி கேட்ருக்க கூடாது..அஞ்சா நெஞ்சன் கிட்டே சொல்றேன் இருங்க :-))
@Sathishkumar
sathishkumar ..உங்க ப்ளாக் போயி பார்த்தேன்..செமையா இருந்தது..images எல்லாம்..அதுவும் இராக் வார் போடோஸ் பார்த்துட்டு ரொம்ப கஷ்டம் ஆய்ட்டு..வித்யாசமான ப்ளாக்..இனி அடிக்கடி உங்க ப்ளாக் பக்கம் வரணும்னு நினைசுருக்கேன்..வருகைக்கு நன்றி sathish !!
@சி.பி.செந்தில்குமார்
அட..அந்த கொடுமைய ஏன் கேக்குறிங்க சிபி..layout எல்லாம் ஒரு மண்ணும் புரிபடல..கொஞ்சம் கொஞ்சமாய் இப்பதான் டிசைன் ஐ உருட்டிட்டு இருக்கேன்(நன்றி வந்தேமாதரம் சசிகுமார்).டீச்சர் ஆ...ஹ ஹ..நீங்க வேற..அதுக்கு ஸ்பெல்லிங் கூட எனக்கு தெரியாது..
@ஆர்.கே.சதீஷ்குமார்
வருகைக்கு நன்றி சதீஷ்..நானெல்லாம் கத்துக்குட்டி..ஆனாலும் உங்களோட லேட்டஸ்ட் பதிவு கலக்கல்..
@kavisiva
அப்படியா கவி..குமரி மாவட்டம் நிறைய நல்ல விஷயங்களுக்கு முன்மாதிரி தான் பா...இதெல்லாம் individuals பொறுத்து தான் கவி..determination ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்கும் வேணும்..தனி மனித பொறுப்பு இருந்தால் மட்டும் கூட்டு நலம் வொர்க் அவுட் ஆகும்..அடிப்படையில் நமக்குள் இருக்கும் அலட்சியம் தான் எல்லாத்துக்கும் காரணம்..ஓகே..Let's think positive..நன்றி கவியரசி கவி சிவா...
@ஆனந்தி..
நானும் விஞ்ஞானி எல்லாம் ஒன்னும் இல்லீங்க. எதோ ஸ்கூல்ல படிச்சது ஞாபகம் வந்திச்சு. அந்த வேதியல் சமன்பாடு எல்லாம் திரும்பவும் கூகுள் ல பாத்துதான் எழுதினேன்.மத்தபடி நல்லது நடந்தா எனக்கும் மகிழ்ச்சிதான்.இருந்தாலும் அந்த CYCLIC ACTION அ நிறுத்த முடியுமாங்கிறதுலதான் என் சந்தேகம்.
நல்ல பகிர்வு.
தோழி ஆனந்திக்கு,
வீட்டுக்கு வெளியில நடக்கற எந்த விஷயத்துக்கும் கவலை படாத பல சுய நலம் படைத்த மக்கள் ozone லேயர்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு இருக்குற வரைக்கும் இந்த மாதிரி சமூக சிந்தனைகள் பாமர மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினம் தான்.
தங்கள் சமூக ஆர்வு பாராட்ட வேண்டிய ஒன்று. சிறு துளி பேரு வெள்ளம் என்பது போல.. தங்கள் இந்த பதிவு ஒரு சிலரிடம் விழிப்புணர்வை உண்டாக்கினால் அது ஒரு பெரிய வெற்றியே..
நகைச்சுவையுடன் ஒரு நல்ல கருத்தை சொன்னதுக்கு மிக்க நன்றி..
- ராசு
PS: Few interesting links about Ozone Layer:
http://www.elrst.com/2010/09/17/the-hole-in-the-ozone-layer-starts-diminishing/
http://en.wikipedia.org/wiki/Ozone_layer
http://news.discovery.com/earth/ozone-layer-earth.html
@மாதேவி
மாதேவி..வணக்கம்!!வருகைக்கு நன்றி..உங்க ப்ளாக் பக்கம் இப்போ போயி பார்த்துட்டு தான் இந்த பதில் போடுறேன்..செம ரசனையான ஆளா இருப்பிங்க போலே..உங்கள் பகிர்வுக்கு நன்றி மாதேவி..!!
@Rajesh kumar
இவ்வளவு பொறுப்பாய் யோசிச்சதுக்கே பலே..பலே ராஜேஷ்..நன்றி பகிர்வுக்கு!!
@surivasu
தங்கள் வருகைக்கும்,பகிர்வுக்கும் ரொம்ப நன்றி சூரிவாசு!!
@Ramesh
நன்றி ராசு அவர்களே ;-)))))))))))
//ஏதாவது அணுக்களில் தொடர்பு இருக்கலாமான்னு யோசிச்சு பாருங்க..எனக்கு எதுவும் மண்டையில் வொர்க் அவுட் ஆகலை..தெரிஞ்சால் எனக்கும் சொல்லுங்க...ஓகே வா..??)//
உங்கள் கேள்விக்களுக்கு சில விளக்கங்கள் ஒரு தனி பதிவாக என்னால அவ்வளவு பெரிய பதிவை பின்னூட்டமாய் போட இயலாது.
நேரம் கிடைத்தால் படியுங்கள்
@jothi
http://jothi-kannan.blogspot.com/2010/09/blog-post_4104.html
நன்றி சகோதரர் ஜோதி..இன்னும் ஓசோன் துளை பத்தி தெளிவாய் விளக்கியதற்கு...நன்றி சகோதரர் ராஜேஷ்.
Post a Comment