September 7, 2010

"இட் வாஸ் எ குட் இன்டெர்வியூ"






போன வாரம் நான் ரொம்பவே ரசித்த ஒரு தொலைகாட்சி பேட்டி..செய்தி சேனல் ஒன்றில் ரொம்பவே ருசிகர இன்டெர்வியூ. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேட்ச் பிக்ஸ் விஷயத்தில் கடுமையாய் பரபரப்பு நடந்தபோது ..பாகிஸ்தான் அணியின்வீரர் முஹம்மது ஆசிப்பின் காதலி வீணா மாலிக்கின் அதிரடி பேட்டி. எடுத்தவர் "டைம்ஸ் நவ்" முதன்மை பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி.மனுஷன் இந்த பக்கம் சளைக்காமல் கேள்வி கேட்க..அதை வீணா மாலிக் கொஞ்சமும் அசராமல் புன்சிரிப்போடு பதில் சொன்ன பாங்கு,எந்த வித டென்ஷன் நும் இல்லாமல் சமாளித்த அழகு..ஆஹா..கோஸ்வாமி கேட்கிறார்.."வீணா..ப்ரூப் ஐ எங்க கிட்டே முதலில் காமிங்க.. சும்மாங்காட்டியும் நீங்க விவகாரம் கிளப்பலாம் இல்லையா?" அதுக்கு வீணா உடனே எந்த கோவமும் காமிக்காமல் சிரித்து கொண்டே சளைக்காமல் சொன்னது.."நான் எதுக்கு உங்ககிட்டே கொடுக்கணும்..கொடுக்கிற இடத்தில் கொடுத்தாச்சு.." எந்த வித சிம்பதியை வீணா உருவாக்கவே இல்லை..மாறாக அதன் தைரியம் தான் அசத்தல்..கோஸ்வாமி போட்டு வாங்கிட்டு இருந்தார்..பாகிஸ்தானில் பெண்களுக்கு நிறைய சுதந்திரம் மறுக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில்..தப்போ..சரியோ..வீணா வின் தைரியம்,எதிர்கொண்ட தன்மை..பேச்சு மற்றும்..கோஸ்வாமி யின் பதட்டம் இல்லாத,தெளிவான,கேள்வி கணைகள்...எல்லாமே ரொம்பவே அந்த பேட்டியில் அற்புதம்..ரஜினி காந்த் படம் பார்த்தமாதிரி இருந்தது..
மொத்தத்தில் முதல்வன் படத்தில் க்ளைமாக்ஸ் இல் ரகுவரன் சொன்னது போலே.."இட் வாஸ் எ குட் இன்டெர்வியூ"

8 comments:

kavisiva said...

நான் பார்க்கலியே :(. நம்ப ஊர் தமிழ் செய்து தொ(ல்)லைகாட்சிகள் எப்போ அரசியல் குடுமிப்பிடிச் சண்டையை முடிச்சு இப்படீல்லாம் செய்வாங்களோ :(

ஆனந்தி.. said...

அதான் கவி..எனக்கும் ஆச்சர்யம்..

LK said...

ippalam news channel paarkarathu illa aananthi. vetti pecchu pasanga..

ஆனந்தி.. said...

இல்லை lk..சில பேட்டிகளில் சுவாரஷ்யம் இருக்கலாம்..அதனாலே அப்படியெல்லாம் சொல்லப்படாது..

சௌந்தர் said...

இவர் எடுக்கும் பேட்டி எல்லாம் நல்ல இருக்கும்

ஆனந்தி.. said...

வாங்க தம்பி சௌந்தர்..இந்த பக்கமெல்லாம் காலடி எடுத்து வட்சுருக்கிங்க..நன்றி சௌந்தர்..

cheena (சீனா) said...

அன்பின் ஆனந்தி

நல்லதொரு இடுகை
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

ஆனந்தி.. said...

@cheena (சீனா)
அன்பின் சீனா...
வருகைக்கு நன்றி...