September 19, 2010

ரத்த ருசியில் மதுரை மச்சான்ஸ்..

 
ம்ம்..தலைப்பை பார்த்தவுடனே சரியா கண்டுபிடிச்சிருப்பிங்களே ?? அதே தான்...


(எங்க)மதுரை இந்தியன் கிரிக்கெட் டீம் மாதிரி..அப்போ அப்போ பார்ம் இல்லாமல் தவிக்கும்..அப்புறம் தூள் கிளப்பும்..ம்ம்..இடையில் யாரு கண்ணு பட்டதோ ..ஒரு சண்டை,சச்சரவுக்கு போகாமல்,ஒரு கொலை கூட பார்க்காமல் மொக்கையான பார்ம் இல் இருந்தது..இப்போது மதுர..குலுங்க..குலுங்க..னு...ஆரம்பிச்சுருச்சு அதோட கொலை..கொலையா முந்திரிக்காவை...ஸ்டார்ட் மக்கா னு போன மாசத்தில் இருந்து ஆரம்பிச்சு இப்போ வரை பேஷா போயிண்டிருக்கு...ஹீ..ஹீ..



போனமாசம் ஒரு அப்பாவே அவர் பொண்ணு மாரிசெல்வி க்கு விஷம் கொடுத்து கொலை பண்ணினார்...என்ன விஷயம்னு ஒரு ஓரமா உட்கார்ந்து 'ஒட்டு" கேட்டால் அவரு பொண்ணு லவ்ஸ் பண்ணிருச்சாம்..இவர் கெளரவம் போயிருச்சுன்னு "சோலிய" முடிச்சுட்டார்..நைனா இப்ப கம்பி எண்ணிட்டு இருக்கார்..

அப்புறம் அதே ஏரியா வில் ஒரு பொண்ணை பட்டபகலில் வெட்டி கொன்னுட்டு போய்ட்டானுங்க,பொழுது போகலன்னு..(டச் விட்டுற கூடாதாம்..:-))



போனமாசம் அவனியாபுரம் பக்கம்..ரம்மியில் ஜோக்கர் மாறிபோச்சுன்னு..ஜஸ்ட் ரெண்டு பேரு வெட்டி செத்து போய்ட்டானுங்க...எப்புடி..டி..டி...??




ஒரு பத்து நாலு முன்னாடி வட்டிகடை முதலாளியை பரலோகம் அனுப்பிவிட்டானுங்க....


அவருக்கு பரலோகத்தில் துணைக்கு ஆள் இல்லைன்னு முந்தாநாளு வேற ஒரு வட்டிகடை முதலாளியை நடுரோட்டில் வெட்டி கொன்னு மதுரையின் "மப்பை "தெளிவாய் உலகத்திற்கு உணர்த்தினார்கள்(ஹீ..ஹீ..நானும் மதுரை தானுங்க..ஊரு பாசம் அப்போ அப்போ தலை காமிக்கும்..கண்டுக்க படாது)..இதுல என்ன கொடுமைனா, இந்த கொலையை பார்த்துட்டானு ரோடு இல் ஓரமா 'கைப்புள்ள" கணக்கா "உச்சா" போய்க்கிட்டு இருந்த ஒரு "அல்லக்கைய" போட்டு கொன்றுக்கானுங்க...


பெரியார் பஸ் ஸ்டாண்ட் டிப்போ கிட்டே ஒரு கொலை ரெண்டு நாளைக்கு முன்னாடி!!..


என்ன விஷயமாம்?? அதுவா...பப்ளிக்கா "போட்டு தள்ளி" நாள் ஆய்டுச்சாம்...அதான்..வேற ஒண்ணுமில்ல..




ரெண்டுமாசம் முன்னாடி பிபி சாவடி பக்கம் ஒரு ஆளின் தம்பியை நடுசாமம் அவன் வீட்டு வாசலில் வெட்டி போட்டானுங்க ..அது மேட்டர் இல்லை...அப்புறம் என்னனு கேக்குறிங்களா?


அங்க தான் இருக்கு ட்விஸ்ட்டு.. வெட்டி போட்டவனை அடுத்த மாசம் அதே தேதியில் அவன் வீட்டு வாசலில் வச்சு முடிச்சுட்டானுங்க..இது ரஜினி ஸ்டைல் ஐ விட கலக்கல் தானே...;-))
இப்போ..இந்த ப்ளாக்க்காக டைப்பிட்டு இருக்கும்போது எங்க ஊரில் எவன் கதை முடிஞ்சதுன்னு தெரில...(என்ன இருந்தாலும்..இந்த நேர்மை பிடிச்சுருக்கு...சை..சை..தூ.தூ .இந்த ஸ்டைல் பிடிச்சுருக்குன்னு சொல்ல வந்தேன்..:-))




இருங்க, வெளிய ஏதோ சத்தம்...(ம்ம்..பார்த்துட்டு வந்துட்டேன்)

என்ன கொடுமைங்க..பஞ்சுமுட்டாய் விக்கிற ஆளு..இப்போ வண்டியில் எதையோ தள்ளிட்டு கத்திட்டு வந்தான்...என்னடா னு கேட்டால்..."அருவாள் வாங்கலையோ..அருவாளுங்க்ரான்"...(இந்த வியாபாரம் தான் இப்போ இங்க சூடு பிடிக்குதாம்)( என்ன கொடுமை சரவணன்???:-( )



(ம்ம்...தேங்காய் உடைக்க காலையில் நான் அருவாள் தேடின நாபகம்..அடடா...நானெல்லாம் மதுரைக்காரியா..வெட்கம்,வேதனை..:-(( )



கோஷத்தோட கோஷமா...கத்தி வைக்கிறேன்..மதுரை வாழ்க...!!வளரட்டும் உன் கொலை..சீ..உன் கலை..(வார்த்தை தடுமாறுது..கிளம்புறேனுங்க..ஹீ..ஹீ..)








இருங்க...

















இருங்க...




















இருங்க...











இருங்க...









இருங்க...









இருங்க...














இருங்க...











இருங்க...









இருங்க...


















இருங்க...












இருங்க...












இருங்க...

















இருங்க...










(ஆங்..மறக்காமல் வோட்டு போட்டு,பின்னூட்டமும் போட்டுட்டு போயிருங்க...அப்புறம்.....அருவாள்,மதுரைகாரி...நாபகம் இருக்கு தானே..ஹீ ஹீ..உங்க உடம்பை பார்த்துக்கோங்க..வரட்டா...:-)) )


26 comments:

எல் கே said...

இந்த அநியாயத்தை கேக்க ஆள் இல்லையா.. மிரட்டி ஒட்டு வாங்குது இந்தப் பொண்ணு

சௌந்தர் said...

ஹலோ அழகிரி சார் இங்க வந்து பாருங்கள் ஒரு கோவில் பட்டி வீரலட்சுமி ஒரு பதிவு போட்டு இருக்காங்க

ஆயிரத்தில் ஒருவன் said...

நானும் மதுரைகாரன் தான் பதிவை படித்ததும் எனக்கும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு

ஆயிரத்தில் ஒருவன் said...

நானும் மதுரைகாரன் தான் பதிவை படித்ததும் எனக்கும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு

ராசராசசோழன் said...

மதுரையின் தனிச் சிறப்பினில் இதுவும் ஒன்று...இது தான் வஞ்ச புகழ்ச்சி அணியா ஆனந்தி...

ஸ்ரீ.... said...

நாங்களும் மதுரதேன்! ஓவர் மெரட்டலால்ல இருக்கு!
மதுரையின் அடையாளம் வன்முறையாக மருவியிருப்பது வருத்தமான விஷயம். நமது ஊரைப் பற்றிய நல்ல செய்திகளையும் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்ரீ....

Unknown said...

போகப் போக கொன்னு... கொன்னு விளையாடுவாங்க போலிருக்கு ...

Anonymous said...

செமயா போட்டுத்தள்ளிட்டீங்க...இந்தாங்க உங்களுக்கு ஒரு அருவா பரிசு..

Ahamed irshad said...

கொலகார பதிவு..

சாந்தி மாரியப்பன் said...

அருவாளேதான் வேணுமா.. இந்த கத்தி கித்தியெல்லாம் ஆவுறதில்லையா :-)))

ஆனந்தி.. said...

@LK
எங்க ஊருனால் ஒரு ஸ்பெஷல் டச் இருக்கோனும்ல..:-)

ஆனந்தி.. said...

@சௌந்தர்
ஹீ..ஹீ..ஒண்ணும பிரச்சனை இல்லை சௌந்தர்..அண்ணன் அழகிரியை புகழ்ந்து ஒரு போஸ்டர் ஒட்டினால் போதும்..சோ,மிரட்ட முடியாது மதுர காரங்களை..:-))

ஆனந்தி.. said...

@ஆயிரத்தில் ஒருவன்
நம்ம ஊரா நீங்க..மதுரை பையன் பயப்படலாமா?அருவாள் வட்சுக்கோங்க சேப்ட்டிக்கு...:-))

ஆனந்தி.. said...

@ராசராசசோழன்
:-))

ஆனந்தி.. said...

@ஸ்ரீ....
திருப்பி பார்ம் இல்லாமல் நம்ம ஊரு தவிக்கும்போது ,நல்ல விஷயம் எழுதுறேன் ஸ்ரீ..ஓகே வா?:-))

cheena (சீனா) said...

அன்பின் ஆனந்தி

சரி சரி - மதுரயப் பத்தி எழுதறது சரி - கொஞ்சம் நல்லது நடக்கறதெயும் எழுதலாமே - இல்லையா - இங்கொண்ணும் அங்கொண்ணும் நடக்கற சில்லரை விசயங்களை வுட்டுட்டு ( எல்லா ஊர்லயும் தான் நடக்குது ) - நெரெய இருக்கு எழுதறதுக்கு .. சரியா

நல்வாழ்த்துகள் ஆனந்தி
நட்புடன் சீனா

ஆனந்தி.. said...

@கே.ஆர்.பி.செந்தில்
ஆமாம் பா..செத்து..செத்து விளையாடலாம் இங்க..:-))

ஆனந்தி.. said...

@ஆர்.கே.சதீஷ்குமார்
நன்றி பார் அரிவாள் கிவிங் டு மீ..ஹி ஹி...ஆனால் இந்த 500 ரூபா கவர் ல வச்சு தரமாட்டிங்களா?வோட்டு க்கு வாங்கி,வாங்கி பழகி போய்டுச்சு..ஹீ..ஹீ..

ஆனந்தி.. said...

@அஹமது இர்ஷாத்
ஆமாம் பா..எங்க ஊரு பெருமையா பரப்ப என்னால் ஆன கலை பதிவு..ச்சே..கொலை பதிவு..:-௦0

ஆனந்தி.. said...

@அமைதிச்சாரல்
பெட்ரோமாக்ஸ் லைட் இருந்தாலும் ஓகே..வீட்டை எரிச்சு கொலை பண்ண வசதியா இருக்கும்..ஹீ ஹீ..:-))

Unknown said...

அக்கா... நம்ம ஊரப்பத்தி நம்மளே பெருமையா சொல்லிக்கலாமா? நமக்கெல்லாம் அருவா வெட்டு குத்து சாதாரணமப்பா... ஊரத்திருத்தவே முடியாது. வெட்டு குத்து கொலை இதெல்லாம் நம்ம ஊர்ல இப்ப ஃபேஷனா போச்சு. வீரத்தைக்காட்ட எத்தனையோ வழி இருக்கு. இருந்தும் ஏன்தான் இப்படி ஒரு விபரீத விளையாட்டோ... மதுரை மீனாட்சிக்கு தான் வெளிச்சம். பாண்டிய தேச வீரத்தை இப்படி தான் காட்டனுமா...

kavisiva said...

எனக்குப் பிடித்த நகரம் மதுரை! ஆனா இப்பூடி பயமுறுத்தறீங்களே :(. இனிமே உங்க ஊருக்கு வர்றதைப் பத்தி ரொம்பவே யோசிக்கணும் :(

AshIQ said...

நல்லா இருந்துச்சு படிக்கிறதுக்கு, படிக்க திக் திக்னு இருந்தாலும் இண்ட்ரெஸ்டிங்காவும் இருந்துச்சு..சும்ம நம்மளும் ஒரு கொலை பன்னிபாக்கலாமேனு ஒரு ஆர்வமும் வந்திருக்கு. ம் யாரப்போடலாம்...யாராவது பஸ்ல பிக்பாக்கெட் அடிக்கிறவன், வழிப்பறி பன்றவன் இந்த மாதிரி லோப்ரொஃபைலோட சுத்துறவன போட்டாத்தான் சேஃப்.
அன்புடன்
ஆஷிக்

Avargal Unmaigal said...

ஹாய் மதுரைக்காரி நலமா? உங்கள் வலைப்பக்கத்தை பார்த்தேன் மதுரையை நேரில் பார்க்கும் ஒரு உணர்வு. ஒன்லி ஒன் மிஸிங் அருவாள் படம் மட்டும் இல்லை. முடிந்தால் அருவாள் படம் சேர்க்கவும் அல்லது ஒரு அருவாள் வாங்கி பரிசாக எனக்கு அனுப்பி வைக்கவும். மீண்டும் வந்து உங்கள் வலைப்பக்கத்தை வந்து பார்க்கிறேன். வேலைக்கு செல்லும் நேரம் வந்துவிட்டது. வாழ்க வளமுடன். இப்படிக்கு மதுரையை விட்டு தூரத்தில் இருக்கும் மதுரைக்காரன்

Unknown said...

meeeeeeeeee
the first....

mohana ravi said...



ஆனு!நீங்கோ 500 ரூபாயும் கொடுக்கல்லை!

பட்டு புடவையும் கொடுக்கல்லை!

ஆனா நான் ஓட்டு போட்டுட்டேனே!