September 16, 2010

அழகு அம்மிணி..அசத்துறிங்கோ!!!

தலைப்புக்கு பொருத்தமான உள்ளடக்கம் படிக்கும் முன்,சும்மாங்காட்டி இதையும் கொஞ்சம் படிச்சுட்டு தான்  போங்களேன்..ஆங்..!!
பெயர்: விமலி
பால்:    பெண்
வயது(தற்போது):    22
மணமாகி விட்டதா?- ஆம்
குழந்தைகள்:      3.8 வயது-ஆண்
                                   2.3 வயது-ஆண்
                                   7 மாதம் -பெண்
திருமணத்திருக்குமுன்-       தேசிய அளவில் பல விருது பெற்ற வாலிபால் வீராங்கனை
வைத்திருக்கும் கேடயம்,கோப்பைகள் எண்ணிக்கை ? -  மன்னிக்கவும்,அவங்க அம்மா வீட்டு பரண் மேலே கிடக்கும் ட்ரங்கு பெட்டிக்கு தான் தெரியும்.
தி.மு.எடை-48 KG
தி.பி.எடை -92 KG
படிச்சுட்டிங்களா?? ஓகே..ஓகே..வாங்க மேற்கொண்டு படிக்க போகலாம்...
பெல்ஜியம் நாட்டு டென்னிஸ் வீராங்கனை-கிம் கிளிஸ்டர்ஸ்,வயசு 27 , திருமணத்துக்கு முன் உலக சாம்பியன் நம்பர் 1 .

அதன் பிறகு கூடைப்பந்து வீரர் பிரையன் லின்சை திருமணம் செய்து கொண்டார். அழகான பெண் குழந்தையும் பெற்றெடுத்தார். கடந்த 2007- ம் ஆண்டு மே மாதம் டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார்

திருமணம் முடிஞ்சு, குழந்தை பெற்ற கையோடு மீண்டும் பிரவேசம் டென்னிஸ் உலகில்..3-வது தடவையாக அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் தற்போது. இதற்கு முன்னர் அமெரிக்க ஓபன் பட்டத்தை 2005, 2009 வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது
குழந்தை ஒருபக்கம்,உடல் பிட்நெஸ்,மனஉறுதி,உடற்பயிற்சி,இடைவிடாத டென்னிஸ் பயிற்சி..இந்த உழைப்பு,வெறி எல்லாம் அவரை மீண்டும் சாதனையாளர் ஆக்கி இருக்கிறது.
ஒரு 'இளம் தாய்' இந்த வருடத்தின் 'அமெரிக்கன் ஓபன்' டென்னிஸ் கோப்பையை கைப்பற்றி இருக்கிறார். 
வெற்றி கோப்பை வாங்கும்போது அவரின் 2 வயது மகளை ஒரு கையில் தூக்கி கொண்டே வாங்கும் போது தான் சொல்லத்தோன்றியது இப்படி, "அழகு அம்மிணி..அசத்திரிங்கோ" என்று!!
விளையாட்டுடன்,அவர் மகளையும் பார்த்துகொண்டு சாதிப்பது இன்னும் மகிழ்ச்சியையும்,சந்தோஷத்தையும் தருகிறது என்கிறார் கிளிஸ்டர்ஸ்.
சரி..அதெல்லாம் போகட்டும்..அந்த விமலி என்ன இப்ப பண்றாருன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆசை படுறவங்க மேற்கொண்டு படிக்கலாம்..மத்தவங்க பதிவை போட்டுவிட்டு,வோட்டும் போட்டு விட்டு ஓடி போயிரலாம்..
 ---------------------------------------------------------------------------------------------------------------------------------
அந்த மாஜி தேசிய சாம்பியன் திருமதி.விமலி தற்போது 92 KG  எடையுடன் நடக்க முடியாமல்,கையில் ஒன்னும்,இடுப்பில் ஒன்னும், இடுக்கிட்டு,மூத்த பையனை திருமதி.செல்வம் சீரியல் போட சொல்லி (வாய் நிறைய சீடை உருண்டைகளை அமுக்கிகிட்டு),கத்திகிட்டு இருக்காங்க.
:-))
ஹேய்!அழகு அம்மிணி..அசத்துறிங்க..!!ஹீ..ஹீ..
 

7 comments:

Chitra said...

ஒரு பெண்ணின் சாதனை ..... ஒரு பெண்ணின் வேதனை...... ம்ம்ம்.....

சௌந்தர் said...

நம்ம நாட்டு பெண்கள் சீரியல் பார்க்கும் போட்டி வைத்தால் முதல் வாருவாங்க :)

ஆனந்தி.. said...

@Chitra
உண்மை தான்..நம்ம ஊரில் நிறைய விமலிகள் இருக்காங்க..

ஆனந்தி.. said...

@சௌந்தர்
அது சரி..சத்தமா சொல்லாத சௌந்தர்..முதுகில் டின்னு கட்டிருவாங்க சீரியல் அம்மினிகள்...

பிரியமுடன் priya said...

paavam vimali

DREAMER said...

திருமணம் வரம்! சாபம்! இரண்டும் கலந்த கலவையென்றால்... விமலுக்கு சாபம் மட்டுமே போல...

-
DREAMER

cheena (சீனா) said...

அன்பின் ஆனந்தி

பலெ பலே - ஆதங்கம் புரிகிறது - தி.பி எடை குடும்ப பாரத்தினால் கூட - திறமை காணாமல் போய் விட்டது. ம்ம்ம்ம் - என்ன செய்வது. இதுதான் பெண்களின் கதை.

நல்வாழ்த்துகள் ஆனந்தி
நட்புடன் சீனா