January 13, 2011
இதுக்கு பேரு பக்தியா....??!!!
என்னை அதிகமாய் குழப்பிய,யோசிக்க வைத்த,சில நேரம் வாதம் பண்ண.பல நேரம் விதண்டாவாதம் பண்ண,விளங்கி கொள்ள,புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயம் "பக்தி"..
பக்தி ங்கிற பெயரில் கோவிலில் மற்றும் பொது இடங்களில் கூத்தடிக்கும் பக்தியாளர்கள்(?!) பார்த்தாலே....ம்ம்...என்னத்தை சொல்ல...
யார் வீட்டு பூக்களையோ அவசரமாய் திருடிட்டு போயி கடவுளுக்கு படைக்கும் சில படித்த மேதாவிகள்...நான் அதிகமாய் எரிச்சலைடையும் பக்தி(?) சார்ந்த விஷயத்தில் இதுவும் ஒன்று...
எப்போ இருந்து பக்திக்கான அவஸ்தையான/குழப்பமான விடை கண்டுபிடிக்கும்(?!) எண்ணம் வந்துச்சுன்னு சரியா தெரியல..ஆனால் என் வாழ்வில் நான் கடந்து போகும் சம்பவங்களில் கூட சில மைக்ரோ கணங்களில் அது தான் பக்தி னு உணர்ந்திருக்கேன்...
அந்த சில கணங்கள்.....
கோவில் போகும்போதெல்லாம் கிட்டத்தட்ட அல்லது கட்டாயமாய் அந்த கூன் தாத்தாவை பார்த்திடுவேன்..அங்கெங்கே கிழிந்த பழைய சுத்தமான கதர்வேட்டி..தோளில் சுத்திய குற்றால துண்டு,உடம்பெல்லாம் விபூதியுடன் ,தன் நடுங்கி போன கைகளுடன் தினமும் கோவிலுக்கு ஆஜர்.அவர் கொடுக்கும் சொற்ப சில்லறைக்கு தகுந்த, மிகவும் சொற்ப உதிரிப்பூக்களை கோவில் பூக்காரம்மா கொடுப்பதை வாங்கிட்டு கடவுளுக்கு அதை படைச்சுட்டு கொஞ்சநேரம் நின்னுட்டு தன் செருப்பில்லாத கால்களுடன் மெதுவாய் போயிருவார்..
இரக்கப்பட்டு யாராவது உதவவோ ,பூ வாங்கியோ தந்தால்கூட நாசுக்காய் மறுத்து அந்த சொற்ப பூக்களோடு கடவுளை சந்திக்க சென்ற அந்த கணத்தில்....
நீ படைத்த
சொற்ப பூக்களில்
தினம் தினம்
சொர்க்கம் கண்டாய்!
என் அழகு கூன் தாத்தா..!
கண்டேன் பக்தியை...
உன் தன்மான உருவிலும்...!!!!
அப்புறம்...
குடும்பத்தோடு மீனாக்ஷி அம்மன் கோவில் போயிட்டு பூஜைகள் முடிஞ்சு வெளியே வந்தோம்..."மூணு பத்து ரூவா" னு கூவிகிட்டே கைக்குட்டைகள் கைமுழுவதும் அடுக்கி விற்பனை செய்த வாலிபன் எங்களை பின்தொடர.. கையில் வச்சிருந்த பிரசாதங்களில் கொஞ்சம் எடுத்து என் பாட்டியம்மா அந்த பையன்கிட்டே கொடுத்தாங்க ..அவன் ஒரு நொடி தயங்கிட்டு,செருப்பை ஓரமா கழட்டி போட்டுட்டு..பயபக்தியா வாங்கிட்டான்..அப்போ தான் அவனை கவனிச்ச பாட்டிம்மா "தம்பி நீ முஸ்லிம் ஆ பா...மன்னிச்சுக்கோ ப்பா" னு பதற...அவன் சிரிச்சிட்டே "ஆமாம் பாட்டி..எதுக்கு மன்னிப்பு எல்லாம்...பாசமா நீங்க கொடுத்திங்க..இதுல எதுக்கு சாமி எல்லாம் பார்க்கணும்...னு" சொல்லிட்டே போன அந்த கணத்தில்....
நீ விற்கும்
கைக்குட்டையை விட
உன் மனம்..
உன் குணம்..
உலகளவு பெருசு..
அற்புத மனிதனே...
கண்டேன் பக்தியை..
மதத்தை விட
மனதை மதித்த
உன் உருவிலும்....!!!!
அப்புறம்...
பாட்டியின் தீவிர கடவுள் நம்பிக்கையின் படி பூஜை,புனஷ்காரங்கள் ஒரு புறம் நடந்தாலும், மறந்தும் கோவில் பக்கம் போகாத,கடவுள் எதிர்ப்பு கொள்கையில் தீவிரமான,சுயமரியாதை விரும்பி என் தாத்தா..என் ஏழாவது வயதில்,உடம்பில் ஒரு இன்ச் விடாமல்(நாக்கு உள்பட) கொப்புளங்களுடன் கடுமையான அம்மை நோய் பிடியில் சிக்கிட்டேன்..இயற்கை உபாதை கழிக்க கூட உயிர்போகும் அளவு கத்துவேன்(அந்த இடங்களிலும் கொப்புளங்கள் )தனியார் மருத்துவமனை ஜீ ஹெச் கொண்டு போங்கனு சொன்ன தருணத்தில்..வீடே கண்ணீரோடு..
அப்போ தாத்தா செஞ்சது நான் சாகும் என் கடைசி நொடி வரை என்னாலே மறக்க முடியாத ஒரு செயல்...கிட்டத்தட்ட எலும்பும்,தோலும்..தோலை முழுவதும் போர்த்திய கொப்புளங்களுமாய் இருந்த என்னை மெல்லிய வேஷ்டியில் சுற்றி,அப்படியே தூக்கிட்டு சாமி அறையின் வாசலில் கிடத்தினார்..உள்ளே இருக்கும் சாமி சிலைகளை பார்த்து சத்தமாய் "இந்த பிஞ்சு பிள்ளைக்கு ஏதாவது ஆச்சு...." ன்னு கத்திட்டே என்னை அவர் நெஞ்சில் போட்டுகிட்டு அழுத அந்த கணத்தில்......
இன்னும்...
என்னில்
மிச்சமிருக்கும்
அந்த ஒன்றிரண்டு
அம்மை தழும்புகளை
தினம்தோறும்
ஆசையாய்
தொட்டு பார்க்கிறேன்!!!
மண்ணில் மறைந்து விட்ட
என் செல்ல தாத்தாவின்
நேசத்தை அனுபவித்த
"பக்தி" யோடு...!!!!
Subscribe to:
Post Comments (Atom)
64 comments:
தாத்தா (பக்தி ) பேத்தி
//அப்போ தாத்தா செஞ்சது நான் சாகும் என் கடைசி நொடி வரை என்னாலே மறக்க முடியாத ஒரு செயல்...கிட்டத்தட்ட எலும்பும்,தோலும்..தோலை முழுவதும் போர்த்திய கொப்புளங்களுமாய் இருந்த என்னை மெல்லிய வேஷ்டியில் சுற்றி,அப்படியே தூக்கிட்டு சாமி அறையின் வாசலில் கிடத்தினார்.//
நிஜமாகவே இது பக்திதான்..
அருமையான பதிவு....
அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
வாவ்....
என்ன சொல்றதுன்னே தெரியலிங்க, அற்புதமான படைப்பு இது, பக்தி படைப்பு.
கவிதையாக மனதை தொட்டு செல்கின்றன உங்கள் வரிகள். உங்களுக்கு கவிதைதனமான நடைதான் நன்றாக வருகிறது.
/////நீ விற்கும்
கைக்குட்டையை விட
உன் மனம்..
உன் குணம்..
உலகளவு பெருசு..
அற்புத மனிதனே...
கண்டேன் பக்தியை..
மதத்தை விட
மனதை மதித்த
உன் உருவிலும் //////
இந்த வரிகள் அருமை.....
மனம் உருகிபோகிறேன் உங்கள் வரிகளில் தோழி
மதத்தினை விட மனதை மதித்த அந்த பையனின் பிம்பம் , கவிதையை படிக்கும்போது, உருவாகிறது. இது கவிதைக்கான வெற்றி.
ரொம்ப சிறப்பா எழுதியிருக்கீங்க ஆனந்தி! வெவ்வேறு நிலை மனிதர்களின் பக்தி நிலைப்பாடு வியக்க வைக்குது! உங்க தாத்தாவின் ப்ரியம் பத்தி சொல்லி என்னோட பழைய நினைவுகளையும் கிளரி விட்டுட்டீங்க சகோ!
//இதுக்கு பேரு பக்தியா....//
இது தான் பக்தி!
பக்தி பற்றிய சரியான புரிந்துணர்வு இங்கே இல்லை என்பது தான் உண்மை. எனவே தான் போலிகளின் ஆதிக்கம் ஆன்மீகத்தில் இருக்கிறது.
நல்லா எழுதி இருக்கீங்க :)
நீ படைத்த
சொற்ப பூக்களில்
தினம் தினம்
சொர்க்கம் கண்டாய்!
என் அழகு கூன் தாத்தா..!
கண்டேன் பக்தியை...
உன் தன்மான உருவிலும்...!///
இது அருமை (இது யார் எழுதுனதுன்னு சொல்லுங்க ) கண்டிப்பா நீங்க இல்லைல :)
இந்த பதிவை படித்து விட்டு நான் தான் முதன் முதலில் கமெண்ட்ஸ் போடவேண்டும் என்று நினைத்து உங்கள் கவிதை வரிகளை மீண்டும் ஒரு முறை படித்து வந்து கமெண்ட் போட்டால் எனக்கு முன்னாள் சில பேர்கள் கமெண்ட்ஸ் போட்டுவிட்டார்கள். நோ லக். ரஜினி படத்தின் முதல் ஷோவுக்கு காத்திருப்பது போல உங்கள் பதிவுகளுக்கும் காத்திருக்க தொடங்கிவிட்டார்கள்..
சகோ அருமை கலக்கிடீங்க போங்க .
உங்கள் தாத்தாவை பற்றி சொல்லி பிறகு அந்த நீல நிறத்தில் நீங்கள் எழுதிய வரிகள்............மனதை தொட்ட வரிகள்.
அந்த பையனை பற்றி சொன்னதும் நம் தமிழ் நாட்டில் அனைவரும் ஒன்ன்றாகே இருக்கிறோம் என்ற உணர்வு வந்தது உங்கள் தாத்தாவை பற்றி சொன்னதும் கண்களில் கண்ணீர் வந்தது....
இதற்கு பதில்...????
பக்தியும் பாசமும் ஒன்றுதான் என்றால் இது பக்தி தான்.. அதை வெவ்வேறு என்று கூறினால் இது பாசம்..
இரண்டாவது சொன்ன முஸ்லிம் நபர் செருப்பை அவிழ்த்துவிட்டு விபூதியை பெற்றுகொண்டதாக சொன்னீர்கள்.. நமக்கு பரீட்சையம் இல்லாதது மேல் தான் நாம் அதிக கவனமாக இருப்போம் அல்லவா..??? அத வாங்கிட்டாலாவது நீங்க கர்சீப் வாங்கிக்குவீங்கன்னு பாத்திருப்பார் அந்த நபர்.. ஆனா கடைசி வரைக்கும் வாங்காமலே வந்துட்டீங்களே.!!!
அப்பரம்.. 7 வயசுல உங்களுக்கு நடந்த அந்த சம்பவத்துக்கு இப்ப நான் வருத்தம் தெரிவிச்சுக்கிறன்..(என்ன ஆச்சு எனக்கு.??? அரசியல் பக்கம் போகாதன்னா கேட்டாதானே)உங்க வூட்ல ஆஸ்பத்திரிக்கெல்லாம் கூட்டிட்டு போறாங்க.. எங்க வூட்ல என்ன படுக்க போட்டு வேப்பலைய சுத்தி உட்டுட்டாங்க.. அப்பவே என் கனவு, ஆசை நாசமா போயிடுச்சு.. எனக்கு வந்த அரிய வாய்ப்பு மிஸ்..
இது பக்தியா.??? அப்படினு நீங்க கேட்ட கேள்விக்கு நான் இன்னும் படிக்கல(பதிவ படிச்சுட்டன்..நான் சொன்னது வாழ்க்கைய) படிச்சிட்டு இல்ல படிக்க முடிஞ்சா நான் சாகுறதுக்குள்ள சொல்லிபுடுறன்.. வரட்டா..!!!
அருமை கலக்கிடீங்க போங்க
அம்மு...... கமென்ட் போட வார்த்தையே இல்லைமா..... உணர்வுகளின் வெளிப்பாடு கண்டு ..... மெய் சிலிர்த்து - மெய் மறந்து...... மெய்யான பக்தியின் பூரணத்துவம் கண்டு......
நல்லா இருக்குங்க
நம்பிக்கைதான் கடவுள். சரணாகதிதான் பக்தி.
இதை உங்க தாத்தா....சொல்லாமச் சொல்லிட்டார்.
அருமையான பதிவு.
எனக்கும் இந்தத் திருட்டுப்பூ எரிச்சல்தரும். சென்னையில் ..... பூத்திருடர்களிடம் நல்லா சண்டை போட்டுருக்கேன்.
சாமி பூ இல்லாமல் இருக்கமாட்டாரோ!!!!!
சகோ... எந்த வார்த்தையும் சொல்லிட முடியல....
உணர்வுப்பூர்வமா உள்வாங்க முடியுது இந்த பக்தியின் அதிர்வுகளை...
கடவுளை மனுஷனும் மனுஷனைக் கடவுளும் வாழ்க்கையில் சில நேரங்களில்தான் "தொட்டுப்"பார்க்கிறோம்...
ஆனா அந்த ஸ்பரிஸம் வாழ்க்கைமுழுதும் மறையுறதில்ல....உடலோடும் உணர்வோடும் ஒட்டிக்கும்... அதுதான் அந்த உணர்வின் அரவணைப்பு.... ஒவ்வொரு மனுஷனுக்கும் இதுல ஓர் அனுபவம் இருக்கும்... அந்த அனுபவத்தை அதே ஸ்பரிஸத்தோட உணரவைக்கிறது இந்தப் படைப்பு.... நீங்கன்னு சொல்லல சகோ... ரியலி அனுபவிச்சு சொல்றேன்.... ஆத்மார்த்தமான பதிவு... வாழ்த்துக்கள்....
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்களுடன் ஆரம்பிக்கிறேன்!
என்ன இது சகோதரி? போனவாட்டி காமெடின்னா இந்தவாட்டி பக்தியா? ரொம்ப உருக்கமா எழுதி இருக்கீங்க! உங்க தாத்தா அப்படியே கண்ணுக்குள்ள வந்து போறாரு! ம்.......... உண்மையான பக்தி எது என்பதை நீங்களும் கண்டு கொண்டீர்கள்! அதை எங்களுக்கும் உணர்த்திவிட்டீர்கள்!! நன்றி சகோதரி!
அருமை! பக்தி பற்றி இப்படியொரு பதிவு! சூப்பர்!
அருமை.
நல்ல பதிவு... மனதை தொடும் முன்னுரை.... வாழ்துக்கள்.
பக்தியா ?
பாசமா ?
உண்மையா?
உணர்வா?
தெரியாது!!
ஏதோ ஒன்று ,
உந்தி தள்ளுகிறது!!!
ஒரு நம்பிக்கை அது !!
அதன் மற்ற பெயர்
எனக்கு தேவை இல்லை!!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
இதுவரை நா படித்த உங்க பதிவுகளிலேயே இது என்னை ரெம்பவும் கவர்ந்துள்ளது. அற்புதம்.
ஆனந்தி மிக அருமையா எழுதி இருக்கீங்க...
//கண்டேன் பக்தியை..
மதத்தை விட
மனதை மதித்த
உன் உருவிலும் //
வார்த்தைகள் மிக யோசிக்க வைக்கிறது தோழி. கவிதைகள் அற்புதம்... சிலர் பக்தியை பார்க்கும் போது வெறுப்பாக இருக்குப்பா.
Fantastic .
this is my first visit .i have voted .
here after i will be a regular visiter .(i dont have tamil fonts excuse me)
ஆஹா!! ரொம்ப உணர்வுப் பூர்வமாக இருக்குங்க ஆனந்தி..
கடைசி வரிகளில் மனசு கஷ்டமாயிடுச்சு..
கவிதைகளும் மிக அருமை..
பாராட்டுக்கள் சகோ..
நெகிழ்வான பதிவு
பாராட்டுக்கள் சகோதரி
எனக்கு அம்மா போட்டுருக்கும் போதும் எங்க தாத்தா தான் அவர் வீட்டுக்கு கூடிட்டு போய் கவனிச்சுக்கிட்டார். சின்ன வயசு ஞாபகங்களை வர வச்சுட்டீங்க...
அதே சமயம் ரொம்ப உணர்வுபூர்வமாக இருந்துச்சு
வார்த்தைகள் இல்லை தோழி, வாழ்த்துக்கள் ......!
Ramu
ஓவொரு விளக்கங்களுடன் கவிதை ........வாவ் ......
அருமையான கவிதை... பக்தியின் பின்னாலிருக்கும் அந்த மனிதம் மிகவும் ரசிக்க வைத்தது
ஆனந்தி...! ரொம்ப சந்தோஷமா கருத்து போடலாம்னு வந்தா இப்படி என் தாத்தாவ ஞாபக படுத்தி வார்த்தைகள் இல்லாம பண்ணிட்டீங்களே ...! உணர்ச்சிகள் மிகச் சிலராலயே வார்த்தைகளாய் வடிவம் பெறும் ...! வார்த்தைகளாக்கிட்டீங்க ஆனந்தி...!
வழக்கமான டெம்ப்ளேட் பக்தி அல்லது பகுத்தறிவு பதிவில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. கடவுள் இருக்கிறார் இல்லை என்ற ஆராய்சியை ஒரு நிமிடத்தில் கடந்து சென்றவிட்டார் ,உங்களுக்காக கடவுளுடன் பேசிய அந்த மகத்தான மனிதர்
am in tears! especially the last one!! beautiful post!
ஆனந்தி, எவ்வளவு பேரை மலரும் நினைவுகளுக்கு இழுத்துச்சென்று விட்டிர்கள்.இதுதான் உங்க எழுத்துக்குக்
கிடைத்த வெற்றி(பக்தி)
ஆனந்தி உங்க அர்மையான எழுத்து பாக்கும்போதெல்லாம் நான் எப்பதான் இப்படிஎல்லாம் நல்ல பதிவாக எழுதப்போரேனோன்னு ஏக்கமா இருக்கும்.
வெவ்வேறு சம்பவங்களை அருமையாக கோர்த்து எழுதீயிருக்கிறீர்கள்!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!!
நெகிழ வைத்த பதிவு... தாத்தா சம்பந்தப்பட்ட வரிகள் கண் கலங்கவைத்தன...
இவர்கள்தான் மனித உருவில் கடவுள்கள்.
மனம் நெகிழ்கிறது தோழி.
very nice post, Sis.
அனைத்தும் மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள் பாராட்டுகள்
நாம பன்ற சேட்டைகளுக்கு பக்தியை குறைபட்டுக்க கூடாது :) சரியான பக்தி எல்லாமே சமூதாய சிந்தனைகள்தான். நீங்கள் சொல்வது போல் பக்தியின் பெயரில் பல அக்கிரமங்கள் எல்லா சமுதாயத்திலும் நடந்தே கொண்டு இருக்கிறது
அன்புடன்
ஆஷிக்
//நீங்கள் சொல்வது போல் பக்தியின் பெயரில் பல அக்கிரமங்கள் எல்லா சமுதாயத்திலும் நடந்தே கொண்டு இருக்கிறது//
எனக்கென்னவோ நீங்க இந்த பதிவ படிச்சிட்டு கமெண்ட் போட்டா இன்னும் நல்லாயிருக்கும்னு தோணுது.. ஆனந்தி இங்க எந்த அக்கிரமத்த பத்தியும் சொல்லலியே.! தலைப்ப மட்டும் படிச்சிட்டு கமெண்ட் போட்டுட்டீங்களோ.???
இணைய ஜனங்களே..ஆனந்தி இப்ப ஹோசூர் போயிருக்கு இல்லையா? வந்தவுடனே பாருங்க, ஹோசூர் ஒரு தாத்தாவை பாத்தேன் அவரு செருப்பு போடல..ஒட்டு வீட்டு பக்கத்துல ஒரு பையன் ஒன்னுக்கு போனான்..பாட்டி வட சுட்டுச்சு..காக்கா அத சுட்டுச்சுனு..உடனே பாட்டிக்கு நான் வடை வாங்கி கொடுத்தேன் இப்படி எதாவாது ஹோசூர்ல ப்ராக் பாத்த கதைய சொல்லி கொல்லப்போகுது அதுனால அது வர்ரதுக்குள்ள எல்லாட்ரும் ஓடி போயிருங்க..ஓடி போயிருங்க :)))
அபாய சங்கு ஊதியவர்
ஆஷிக் :))
நாத்திகத்தில் தொடங்கி ஆத்திகத்தில் முடித்து உள்ளீர்கள் அருமை. ஆனால் சில நேரங்களில் நாம் மூட நம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்கிறோம். அதை தான் தவிர்க்க வேண்டும்.
வரிகள் அருமை
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
எப்பேர்ப்பட்ட சுமரியாதைக்கரருக்கும் தான் நேசிப்பவருக்க்கு துன்பம் என்றதும் இறையிடம் நாட்டம் வந்து விடுகிறதே. உங்கள் தாத்தாவுக்கு அம்மை போட்டிருந்தால் கூட அவர் இறையை நாடி இருப்பாரா என்பது சந்தேகமே.
"நீ விற்கும்
கைக்குட்டையை விட
உன் மனம்..
உன் குணம்..
உலகளவு பெருசு..
அற்புத மனிதனே...
கண்டேன் பக்தியை..
மதத்தை விட
மனதை மதித்த
உன் உருவிலும்"""
உண்மைவரிகள்.. அருமையான படைப்பு...என் அக்காச்சி
பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டதால் பின்னூட்டம் இட முடியவில்லை...என் பதிவை படித்து பின்னூட்ட்டம் இட்ட அனைத்து தோழர்/தோழிகளுக்கும் என் நன்றிகள்...:))
வாவ்...
அற்புதமான பக்திப் படைப்பு.
நல்ல பதிவு.
அருமையான கவிதை...
நல்லா எழுதி இருக்கீங்க.
நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை...... இடை இடைய உங்கள் கவிதைகளும்...... அருமை.....
//"தம்பி நீ முஸ்லிம் ஆ பா...மன்னிச்சுக்கோ ப்பா" னு பதற...அவன் சிரிச்சிட்டே "ஆமாம் பாட்டி..எதுக்கு மன்னிப்பு எல்லாம்...பாசமா நீங்க கொடுத்திங்க..இதுல எதுக்கு சாமி எல்லாம் பார்க்கணும்.//
இப்படி எல்லோரும் நினைத்து விட்டால்.. சாதி சண்டைகளே வராது...
கடவுளே இல்லை என்று நாம் அனைவரும் மனிதர்கள் என்று நினைத்து விட்டால் அந்த சண்டையும் இருக்காது.......
நானும் பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்று இருந்தன்...... அதனால் தான் தொடருந்து பின்னோட்டம் இட முடியவில்லை.........
///தம்பி நீ முஸ்லிம் ஆ பா...மன்னிச்சுக்கோ ப்பா" னு பதற...அவன் சிரிச்சிட்டே "ஆமாம் பாட்டி..எதுக்கு மன்னிப்பு எல்லாம்...பாசமா நீங்க கொடுத்திங்க..இதுல எதுக்கு சாமி எல்லாம் பார்க்கணும்...னு///
அந்த முஸ்லிம் வாலிபனுக்கு Royal Salute !!!
கண் கலங்கி விட்டதம்மா...
You are so practical.
Our Heartiest Blessings.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
நல்லா இருக்குங்க
Post a Comment