January 19, 2011

திரும்பி பார்ப்பதில் ஏனோ பெரிய விருப்பம் இல்லை..:))


பெரும்பாலும் பல நேரங்களில் திரும்பி பார்ப்பதை என்னவோ விரும்புவதில்லை..அனுபவித்த கசப்பான விஷயங்களை ரீவைண்ட் பண்ணி பார்ப்பதிலும் ஏனோ பெரிய விருப்பமும் இல்லை...ஒரு வேளை அது மேலும் என்னை சோர்வாக்கும் பயமான்னு தெரியல..:)) 


சந்தோஷ விஷயங்களை லேசாக புரட்டி பார்த்துட்டு தீவிரமா யோசிக்கவும் கொஞ்சம் பயம்...அட போன வருஷம் அப்டி..இந்த வருஷம் உருப்படலையே னு ஒரு ஒப்பீடு லேசா கூட மனதின் ஓரத்தில் வரும்போது அதுவும் சில நேரங்களில் சோர்வாக்கும் அபாயமும் ஏற்படுது எனக்கு...:)))


சுவாரஸ்யம் அடிபட்டு போகும் சில தொடர்பதிவுகளில் எழுத எனக்கு அதிக யோசனை தான். எனக்கு பிடித்த பத்து பாட்டுக்கள் விரவி போயி பத்து பேருக்கு எப்படியும் பிடிக்குது. இதில் நானும் என் பங்குக்கு எழுதி அரைத்த மாவை அரைக்க இஷ்டமில்லாமல் விலகியே இருந்தும் இருக்கிறேன்..:))"uniqueness" அடிபட்டு போகும் ஒரே மாதிரி கிளிஷே தொடர் பதிவுகளில் படிப்பதற்கு பெரிய சுவாரஸ்யங்களும் இருக்க போவதில்லை என்பது என் எண்ணம்...


"திரும்பி பார்க்கிறேன் " தொடர் பதிவில் இல் நிச்சயமாக அவரவர் தனி பிம்பங்கள்..உணர்வுகள் மட்டுமே இருக்கும் உள்ளடக்கம் னு யோசிச்சு ஒரு வழியாக என் அருமை இணைய சகோதரர்கள் கணேஷ் மற்றும் பாலாஜி சரவணன் அழைப்பினை ஏற்று இந்த பதிவு :)


என் காலடி தடம் பதிந்த  சில கடந்து வந்த பாதைகள்...


வலையுலகை தவிர்த்து என் ஒரே செல்ல மகனுக்கு கற்று கொடுக்க ரோபோடிக்ஸ் முதல் அல்காரிதம் வரை மீண்டும் தெரிந்து கொண்டு என் மூளையை  புதிப்பித்து கொண்ட தருணங்கள் ...என் பையன் அவனுக்கு கிடைத்த பாராட்டுகள் மூலமாய் எனக்கு தேடி தந்த பெருமை மிகுந்த தாய்மை உணர்ந்த நிமிடங்கள் ...சில அற்புத சுயதேடல் நூல்கள் தேடி படித்த தருணங்கள் ..பரிச்சயம் இல்லாத மனிதர்களின் ஒரு நொடி புன்னகைகள்...சில வெளியூர் பயணங்கள்...பிரயாணங்களில் சந்தித்த சில குட்டி குட்டி சுவாரஸ்யங்கள்...முறுக்கி கொண்டு இருந்த சில உறவுகளின் நெகிழ்வான பாச தருணங்கள்..போலித்தனமான சில உறவுகளை அடையாளம் கண்டுவிட்ட நிம்மதி தருணங்கள்...இதை தவிர்த்து எல்லாமே வழக்கம்போல...வழக்கம் போல...:))இணையம் எனக்கு புதுசு இல்லைனாலும் நாலு வருஷமாய் இணையத்தை சுத்தமாய் விட்டு விலகி இருந்த என்னை மீண்டும் இழுத்துட்டு வந்தது என் நண்பன்/வழிகாட்டி ரமேஷ்@ராசுகுட்டி..ஆகஸ்டில் விளையாட்டாய் ப்லாக் தொடங்கி,விளையாட்டாய்(!) போய்கிட்டு இருக்கு ..எந்த இலக்கும் இல்லாமல் மனசுக்கு தோணிய மாதிரி பதிவுங்கிற(?) பெயரில் கிறுக்கிட்டு இருக்கேன்...:))


கற்று கொண்ட..உணர்ந்து கொண்ட பல விஷயங்கள் இணையத்தில் இருந்தாலும் சில சமயங்களில் இணையம் என் அரிய,பொக்கிஷ நேரங்களை "கொல்லும்"போது மீண்டும் வணக்கம் சொல்லிட்டு போயிரலாமான்னு தோணிகிட்டே இருக்கு...ஆனால் சில நெகிழ்வான,ஆத்மார்த்தமான பின்னூட்டங்களிலும்,சில அற்புதமான,பாசமான,கனிவான இணைய நட்புக்களாலும் ..தற்காலிகமாய் 
மனம் மாறி
விடுகிறேன்.................... .....:)

62 comments:

பாரத்... பாரதி... said...

//போலித்தனமான சில உறவுகளை அடையாளம் கண்டுவிட்ட நிம்மதி தருணங்கள்..//
முக்கியத்துவம் வாய்ந்த தருணங்கள்...

sakthistudycentre-கருன் said...

Nice

பாரத்... பாரதி... said...

இது தொடர் பதிவு என்றாலும் கூட, நீங்கள் சொன்னது வித்தியாசமாக, புதிதாகவே இருக்கிறது.

இரவு வானம் said...

உணர்வுபூர்வமாக திரும்பி பார்த்து உள்ளீர்கள், இவற்றில் பெரும்பாலானவை எனக்கும் நடந்துள்ளது.

தமிழ் உதயம் said...

பல நேரங்களில் திரும்பி பார்த்தலே, நம்மை சொல்ல தெரியாத மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

கவிதை காதலன் said...

ஆரம்பத்துல சொல்லி இருந்த எல்லா விஷயத்துலேயும் உடன்படுகிறேன். உங்களோட திரும்பிபார்த்தல் வித்தியாசமாவே இருக்கு

விரல்களுக்கும் இதழ்களுக்கும் சண்டை

Madurai pandi said...

//திரும்பி பார்ப்பதில் ஏனோ பெரிய விருப்பம் இல்லை..:)

எனக்கும் தான்.. சும்மா சும்மா திரும்பி பார்த்தால் எனக்கும் கழுத்து வலிக்கும் ல!!!

"பெரிய விருப்பம்" இல்லனா சிறிய விருப்பம் இருக்கா?

//இணையத்தை "சுத்தமாய் விட்டு" விலகி இருந்த என்னை மீண்டும் இழுத்துட்டு வந்தது.

அதுக்கு முன்னாடி அழுக்கா இருந்துச்சா ?


இப்ப சீரியஸ்!!! உங்க பையன் என்ன படிக்கிறான் சகோ!! ?


--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

ஜீ... said...

பல நேரங்களில், பல விஷயங்களில் திரும்பிப்பார்க்காமல் இருக்க முடிவது ஒரு கொடுப்பினை! அது உங்களுக்கு வாய்க்கப் பெற்றது மகிழ்ச்சி! மிக லேசாகத்தான் திரும்பிப் பார்த்திருக்கிறீர்கள்! :-)

சௌந்தர் said...

சில சமயங்களில் இணையம் என் அரிய,பொக்கிஷ நேரங்களை "கொல்லும்"போது மீண்டும் வணக்கம் சொல்லிட்டு போயிரலாமான்னு தோணிகிட்டே இருக்கு...///

இந்த நினைவு மீண்டும் வர கூடாது...இந்த வருடம் சிறப்பாக அமைய வேண்டும்

மாணவன் said...

சுருக்கமாக அமைந்தாலும் சொல்ல வந்ததை நச்சுன்னு சொல்லீட்டீங்க அருமை...

MANO நாஞ்சில் மனோ said...

நல்லா இருக்குங்க.............

ஆயிஷா said...

நல்லா இருக்கு.

அமைதிச்சாரல் said...

நல்லா திரும்பி பார்த்திருக்கீங்க :-))

பிரபு எம் said...

ஹேய்ய்ய் சகோ....

அபௌட் டர்ன் அடிக்கப் பிடிக்காதா உங்களுக்கு??!! ஹ்ம்ம்ம்ம்....குட் குட் அப்டீன்னா இன்னும் உங்களுக்கு வயசாகலன்னு அர்த்தம்!! ஹி ஹி.. அப்டீன்னு உங்க இளையராஜா ஒரு பேட்டியில் சொல்லியிருக்காரு ரொம்ப‌ நாள் முன்னாடி!!

தொட‌ர்ப‌திவு ப‌ற்றி எழுதிய‌தை யாவ‌ரும் ஏற்றுக்கொள்வார்க‌ள்... சொன்ன‌வித‌ம் அத்த‌னை பாந்த‌ம்!! :-)

உங்க‌ள் கால‌டித்த‌ட‌ம் ப‌திந்த‌ பாதைக‌ள்..... ஒரு பெண்ணாக, தாயாக, நீங்களாக என‌ எல்லாமே அழ‌கான‌ அனுப‌வ‌ங்க‌ள்.... எங்க‌ளிட‌ம் ப‌கிர்ந்தத‌ற்கு ந‌ன்றி!! :)

எப்ப‌வுமே உங்க‌ப் ப‌திவைப் ப‌டிக்கும்போது அதில் சிரிக்கும் குழ‌ந்தைப் ப‌ட‌த்துல‌ இருந்து டெம்ப்ளேட்டில் உதிரும் ரோஜாப் பூக்க‌ளிலிருந்து ஒவ்வொரு வ‌ரியும் ஒவ்வொரு ஸ்மைலியும் மனசுக்கு ச‌ந்தோஷ‌த்தைத் த‌ரும்.... 100% பாஸிடிவாக எழுதும் "பாஸிட்டிவ் ப்ளாக்கர்" ஆன‌ந்தி ச‌கோ "வ‌ணக்க‌ம்" போட்டுட்டுப் போற‌தாவ‌து??? போனா விட்ருவோமா!! விட‌மாட்டோம்ல‌!!

இன்னும் ரொம்ப‌ தூர‌ம் இருக்குங்க‌ ச‌கோ ப‌ய‌ண‌ம் அவ்ளோ ஈசியா எல்லாம் எஸ்கேப் ஆக‌முடியாது.... ;-)

கணேஷ் said...

என்னக்கா சின்னதா எழுதியிறுக்கிங்க...நல்லா இருக்கு..

மீண்டும் வணக்கம் சொல்லிட்டு போயிரலாமான்னு தோணிகிட்டே இருக்கு...???///

என்னது இது..அப்ப உங்க ரசிகர்கள் என்ன செய்வாங்க அக்கா)))

மாத்தி யோசி said...

i'll comment later.

மாத்தி யோசி said...

@ work

நா.மணிவண்ணன் said...

ஐயையோ சகோ திரும்பி பார்க்கிறேன்னு சொல்லிட்டு திரும்பி போய்டுவேன்னு சொல்றீங்க

ராம்ஜி_யாஹூ said...

nice

Vijay said...

///சில சமயங்களில் இணையம் என் அரிய,பொக்கிஷ நேரங்களை "கொல்லும்"போது மீண்டும் வணக்கம் சொல்லிட்டு போயிரலாமான்னு தோணிகிட்டே இருக்கு///

என் மனதின் பிம்பமும் இதுவே ..

பித்தனின் வாக்கு said...

nice, now i am in office. later i will put some tamil comments. ok.

Chitra said...

.பரிச்சயம் இல்லாத மனிதர்களின் ஒரு நொடி புன்னகைகள்...


சில வெளியூர் பயணங்கள்...பிரயாணங்களில் சந்தித்த சில குட்டி குட்டி சுவாரஸ்யங்கள்...முறுக்கி கொண்டு இருந்த சில உறவுகளின் நெகிழ்வான பாச தருணங்கள்........ Cho Chweet!!!!!!! Seeing the good things in every situation. :-)

பார்வையாளன் said...

நல்ல பதிவு . புத்தகங்கள் பற்றி சொன்ன நீங்கள் என்ன புத்தகம் என்றும் சொல்லியிருக்கலாம்

THOPPITHOPPI said...

//ஐயையோ சகோ திரும்பி பார்க்கிறேன்னு சொல்லிட்டு திரும்பி போய்டுவேன்னு சொல்றீங்க //

hahaha........

ஏதோ கோபம் போல

Gopi Ramamoorthy said...

அப்பப்போ திரும்பிப் பாக்குறதில் தப்பு இல்லை. கடைசியா எந்த மைல் கல் வந்தது என்று நினைவில் வைத்துக்கொள்ளுதல் பயணத்தில் முக்கியம்

komu said...

ஆனந்தி, அருமையா தொடர்பதிவில் திரும்பி பாத்திருக்கீங்க.

Lakshmi said...

ஆனந்தி எழ்த்துத்திறமை சூப்பரா இருக்கும்போது ஏன் திரும்பிப் போவதைப்பற்றி யோசிக்கிரீங்க?

இம்சைஅரசன் பாபு.. said...

என்னை பொறுத்த வரையில் இணையம் பல சொகாமான தருணத்தை மறக்க வைத்துள்ளது ...நன்றாக திரும்பி பார்த்து இருக்குறீர்கள்

சிவகுமாரன் said...

திரும்பி பார்த்தலைப் பற்றிய ஒரு வித்தியாசமான சிந்தனை.

Ramesh Natarajan said...

அன்புள்ள ஆனந்திக்கு...

மனதில் உள்ளதை உள்ளபடியே எழுதும் உனது அனைத்து பதிவுகளும் அருமை.. எப்போவாவது திரும்பி பார்ப்பதில் தவறு இல்லை.. கடந்த காலத்தையோ எதிர் காலத்தையோ அதிகமா எண்ணி நிகழ் காலத்தை வீணடிப்பது தவறு தான்.. ஆனல்.. நாம் கடந்து வந்த பாதையையோ.. எட்ட போகும் இலக்கையோ அசை போடுவதில் எந்த தவறும் இல்லை..

உன் மனம் விரும்புவதை நீ செய்.. இந்த வலையுலகில் உன் பதிவுகளையும் கருத்துகளையும் பகிர்வதில் உனக்கு கிடைக்கும் சந்தோஷத்தை தொடறேன்... தினமும் பதிவு இடவோ அனைத்து கருத்துகளும் நன்றி சொல்லவோ நேரம் கிடைக்காவிட்டால் அது போகட்டும்.. உன் தனிமை, உன் உறவுகள் .. உன் தலையாய கடமைகள் கழிந்து கிடைக்கும் சொற்ப நேரத்தில்... பதிவு செய்.. அது போதும்...

இது உனக்கு ஒரு சுமை அல்ல... சுகமாக இருக்கட்டும் என்றும்..

தொடர்ந்து செல்ல நீண்ட பாதையும்.. உன் பதிவை தொடர நிறைய நெஞ்சங்களும் எப்போதும் உள்ளதை மறவாதே..

அன்புடன்,
ராசு

தம்பி கூர்மதியன் said...

//தற்காலிகமாய்
மனம் மாறி
விடுகிறேன்...//

அடுத்த ரஜினியோ.? தற்காலிகமென சொல்வது என்றாவது கண்டிப்பாக ப்ளாக்குக்கு பை பைன்னு சொல்லுவீங்கன்னு சொல்றீங்க.. சரி சரி.. சனியன எட்டி உதைச்சாலும் சலைக்காம கிட்டக்கவரும்.. அது போல தான் இந்த ப்ளாக்கும் உங்கள சத்தியமா விடாது..

திரும்பி பாக்குறதுல விருப்பம் இல்லையாம்.. ஹி ஹீ ஹு ஹூ..

Rajesh kumar said...

ம்ம்ம் .. மனிதன் மனது சிலசமயங்களில் கடந்தகால துயர சம்பவங்களை நினைத்து தான் அழிவதாக எண்ணி இன்பம் காண்பதை மிகவும் விரும்பும்.. ஒருவிதமான சுயவதைக் கனவுகள் அவை. அது அளிக்கும் இன்பம் அலாதியானது, நானும் சில காலங்கள் அதில் மூழ்கித் திளைத்திருந்திருக்கிறேன். காலப்போக்கில் அது மெல்ல வலுவிழந்து போகும். அது மாதிரியான சம்பவங்களைத் திரும்பிப் பார்ப்பது பலனில்லாதது.மற்றபடி பள்ளிக்காலங்கள், கல்லூரிக் காலங்கள் போன்றவை மிக்க உவகை அளிப்பவையே. இன்றும் நண்பர்கள் சேர்ந்தால் அவை குறித்து பேசி மகிழ்வோம். நல்ல பதிவு ஆனந்திக்கா.. இப்போ கொஞ்சம் வேலை அதிகம்.. அதனால் கமெண்ட்ஸ் போட முடில... சீக்கிரம் வர்றேன் .. இப்போதைக்கு டாட்டா ..

vanathy said...

நல்லாஇருக்கு பதிவு. எங்கள் குடும்பத்திலும் சில போலிகள் இருக்கு. நான் அதுகளை கண்டு கொள்வதே இல்லை.

Avargal Unmaigal said...

நல்ல பதிவு....மனதை தொட்டு நன்றாக யோசிக்க வைக்கிறது இந்த பதிவு...//////போலித்தனமான சில உறவுகளை அடையாளம் கண்டுவிட்ட நிம்மதி தருணங்கள்////// அற்புதமான வரிகள்............தொடர்ந்து இதைப் போல எழுதுங்கள்.... வாழ்க வளமுடன்

தவமணி said...

சகோதரி,
உங்களின் மனதின் எண்ணச் சிதறல்கள் ஏகாந்தமான் அமைதியை நோக்கி உங்களி பார்வை செல்கிறது என்பதை காட்டுகிறது.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கூட நமது சமுதாயம் நம்மை கட்டி இழுத்து அதன் போக்கில் சென்று சென்று கொண்டிருக்கிறது. அது கணவனாகவும், மனைவியாகவும், அப்பா,அம்மாவாகவும்,நம் குழந்தைகளாகவும், நன்பர்களாகவும், தற்போது இணையமாகவும் அவதாரம் எடுத்து நம்மை இயக்குகிறது.
இதில் இருந்து மீள்வது என்பது அவ்வளவு சுலபமா... எனக்கு தெரியவில்லை...

மாத்தி யோசி said...

அருமையாக இருக்கிறது உங்கள் சுருக்கமான மீள் பார்வை! இணையத்தை விட்டெல்லாம் போவதைப் பற்றி எதுக்கு சிந்திக்கிறீர்கள்? தொடர்ந்து எழுதுங்கள் எங்கள் ஆதரவு என்றைக்குமே இருக்கும்!! உங்கள் செல்ல மகனின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்!!

மாத்தி யோசி said...

சந்தோஷ விஷயங்களை லேசாக புரட்டி பார்த்துட்டு தீவிரமா யோசிக்கவும் கொஞ்சம் பயம்...அட போன வருஷம் அப்டி..இந்த வருஷம் உருப்படலையே னு ஒரு ஒப்பீடு லேசா கூட மனதின் ஓரத்தில் வரும்போது அதுவும் சில நேரங்களில் சோர்வாக்கும் அபாயமும் ஏற்படுது எனக்கு...:)))


இப்படியெல்லாம் யோசிக்காதீங்க சகோ.....! இந்த வருஷம் மாத்தி யோசியுங்க எல்லாமே நல்லதாவே நடக்கும்! ஏதாவது மனசுக்கு கஷ்டம்னா ஏங்க கூட பகிர்ந்துக்குங்க, ஐடியாக்கள் தந்து, உங்களை காப்பாத்தி விடுவோம்ல!!

ஆமினா said...

என்ன இப்படி திரும்ப போய்டுறேன்னு குண்ட தூக்கி போட்டுட்டீங்க???

அந்நியன் 2 said...

//கற்று கொண்ட..உணர்ந்து கொண்ட பல விஷயங்கள் இணையத்தில் இருந்தாலும் சில சமயங்களில் இணையம் என் அரிய,பொக்கிஷ நேரங்களை "கொல்லும்"போது மீண்டும் வணக்கம் சொல்லிட்டு போயிரலாமான்னு தோணிகிட்டே இருக்கு...ஆனால் சில நெகிழ்வான,ஆத்மார்த்தமான பின்னூட்டங்களிலும்,சில அற்புதமான,பாசமான,கனிவான இணைய நட்புக்களாலும் ..//

உங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்லிவிட்டிர்கள் நூற்றுக்கு நூறு உண்மைதான்,ஒரு பதிவர் சுயமா சிந்தித்து எழுதுவதற்கு தோரன்யமாக ஒரு நாள் வேண்டும் சில பேர்கள் காப்பி பேஸ்ட் செய்து எழிமையாக ப்ளாக் நடத்துகிறார்கள் அவர்களுக்கு பின்னூட்டத்தைப் பற்றி கவலை இருக்காது காரணம் எவனோ எழுதியது என்ற மனப் பான்மைதான்,இருந்த போதிலும் வணக்கம் சொல்லிவிட்டு போகிற அளவிற்கு உங்கள் தளம் ஒன்னும் தகுதியற்ற செய்திகளை மக்கள்களுக்கு தரவில்லை மாறாக ஒரு நல்ல பாட சாலையாக இருப்பது பாராட்டக் கூடியது.

சினிமாக்களையும்,அரசியலையும் பற்றி எழுதிப் பாருங்கள் பின்னூட்டத்திற்கு இடம் போதாது சகோ.. ஒரு பேச்சுக்கு அசினுக்கு திருமணமா !!! என்று மூன்று ஆச்சர்ய குறியைப் போட்டுப்பாருங்கள் சிறுஷ்லே இருந்து பெருசுவரை பல்லே இளிச்சுக்கிட்டு வரும்.

வாழ்த்துக்கள்

ஆனந்தி.. said...

பின்னூட்டம் இட்ட என் இனிய சகோதர சகோதரிகளுக்கு என் நன்றிகள்..உங்கள் அக்கறைக்கும்,அன்புக்கும் மிக்க நன்றி...தவமணி அண்ணா உங்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்..மற்றும் ராஜீவ்(ரொம்ப தேங்க்ஸ்) ,கணேஷ்,இம்சை அரசன் பாபு,தம்பி கூர்மதி,ஆமி,மணி,மதுரை பாண்டி,தமிழ் உதயம்,வாணி,ஆயிஷா,அமைதி சாரல்,பித்தன் வாக்கு,விஜய்,கருண்,இரவு வானம்,அவர்கள் உண்மைகள்,பாரத் பாரதி,கவிதை காதலன்,ஜீ,சௌந்தர்,மாணவன்,மனோ நாஞ்சில் மனோ,சித்ரா,தொப்பி தொப்பி அனைவருக்கும் நன்றிகள்...

பார்வையாளன்-- நான் தேடி படித்த புத்தகங்கள் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சொற்பொழிவு கதைகள்( ஓராயிரம் சொல்லும் நம் சுய தேடல்களை)

தம்பிகூர்மதி- உங்கள் சிரிப்பு சூப்பர்...:)))))))

ரமேஷ்- உன் வார்த்தைகள் எப்பவும் ஆயிரம் நல்ல விஷயங்களை எனக்கு தந்திருக்கு..இப்பவும் நீ சொல்வதை கேட்டு கொண்டேன்..நன்றி சொல்லி உன்னை பிரித்து காட்ட விரும்ப வில்லை...

பிரபு.எம்- ஹாய் கழுத :)))))

ஆனந்தி.. said...

அந்நியன்...பின்னூட்டங்களின் எண்ணிக்கையை பத்தி நான் பெருசாய் அலட்டிக்கவும் இல்லை ...எனக்கு வந்த சில பின்னூட்டங்கள் மனசை நெகிழ் செய்கின்றன..இப்போ உங்கள் பின்னூட்டம் கூட ஆத்மார்த்தமாய் போட்டு இருக்கீங்க...இந்த மாதிரி தருணங்களில் தான் நான் பிரேக் போட்டு நின்னு விடுகிறேன்..உண்மையில் என் பர்சனல் வேலைகள் சிலவற்றை தள்ளி போடுவது மாதிரி ப்லோக்கிங் சில நேரங்களில் எனக்கு ஆய்டுதோனு சில சின்ன உறுத்தல்கள்..அது மட்டுமே..மத்தபடி...வேறு ஒன்றும் இல்லை நண்பரே...உங்கள் கனிவையும்..அக்கறையும் மனதை நெகிழ செய்கிறது...நல்ல கருத்துகளை முடியும்போதெல்லாம் நான் என் ப்ளாக் கில் தர முயற்சி செய்கிறேன்...மீண்டும் நன்றி சகோதரா..

ஆனந்தி.. said...

ஐயோ...ராஜேஷ் உன்னை மறந்துட்டேன்..மன்னிச்சுக்கோ...ஓவர் ஆணி தான் போலே..:)))

ஜெரி ஈசானந்தன். said...

Nice Blogging.

ஆனந்தி.. said...

கோமு மற்றும் லட்சுமி ஆன்ட்டி உங்கள் இருவரின் அன்பிலும் நெகிழ்கிறேன்...

Balaji saravana said...

அன்புச் சகோ ஆனந்தி ஒரு தெளிவான பார்வையோடு எதையும் அணுகும் உங்களின் அறிவுக்கு என் வணக்கங்கள் முதலில்.
திரும்பிப் பாராமல் முன்னோக்கி மட்டும் செல்வது என்பது எல்லோருக்குமே விருப்பம் தான் எனினும் சில கடந்த கால நிகழ்வுகளில் கிடைக்கப் பெற்ற பாடங்களை நினைவு கூர்வதில் தவறில்லையென நினைக்கிறேன் சகோ! செல்லும் பாதைக்கு அவை வழித்துணையாக வரும்.
கடந்த ஆண்டின் சில நினைவுகளை சிறப்பாக சொல்லியிருக்கீங்க சகோ!
உங்களின் நேரம் தின்றாலும் இணையத்தின் வழியான நட்புகளை மனதில் வைத்து ( மீ பாவம் )வணக்கம் சொல்லிப் போவதை மறந்து விடுங்கள் சகோ. :)

பாரத்... பாரதி... said...

//உங்களின் மனதின் எண்ணச் சிதறல்கள் ஏகாந்தமான் அமைதியை நோக்கி உங்களி பார்வை செல்கிறது என்பதை காட்டுகிறது//

ஏன் இப்படி சொல்கிறார்கள். உற்சாகமாக இருங்கள்

ஆனந்தி.. said...

ஹ ஹ...அதெல்லாம் ஒண்ணுமில்லை பாரத்..பாரதி...!! நாம கொஞ்சம் டைம் கான்ஷியஸ் பார்ட்டி :)) சில நேரங்களில் இணையத்தால் இன்னும் மனசுக்கு பிடிச்ச சில விஷயங்களை மிஸ் பண்ற மாதிரி ஒரு பீல் ..அதான் அப்படி சொன்னேன்...மத்தபடி நோ மோர் சீரியஸ்:)...ரொம்ப கேசுவல் ஆ அப்போ மனசுக்கு பட்டதை சொன்னேன்..பட் வந்த பின்னூட்டங்கலில் தெரிந்த அன்பை பார்த்து மலைச்சுட்டேன்...நிஜமாய் நெகிழ்ந்தும் விட்டேன்...இனி கரெக்ட் ஆ align பண்ணிக்கிறேன் என் இணைய ஷெட்யூல்களை...:)) என் கொடுமையான பதிவுகள் தொடரும்...:)))

அப்புறம் சிவக்குமரன் தங்களுக்கும் நன்றி...பால்ஸ்...மேலே சொன்னதை படிச்சிங்களா? :))))

தோழி பிரஷா said...

//போலித்தனமான சில உறவுகளை அடையாளம் கண்டுவிட்ட நிம்மதி தருணங்கள்..//

நிச்சயமாக முக்கியமான தருணங்கள் அக்கா.. எனக்கும் இப்படி நடந்திச்சு.. ஆனால் நிம்மதி அடையாளம் கண்டு கொண்ட நிம்மதி கடைத்தாலும் அதனால் ஏற்படும் மனவலியிலிருந்து மீ்ழ்வது கடினம் அக்கா...

கே.ரவிஷங்கர் said...

ஆனந்தி,

நான் ராஜாவின் வீணைகளைப் பற்றிய பதிவு 15-01-11 அன்று போட்டேன். மிஸ் செய்து விட்டீர்களோ?நீங்கள் தீவிர ராஜாவின் ரசிகை என்பதால் இதை ஞாபகப்படுத்துகிறேன்.

நன்றி.

கே.ரவிஷங்கர் said...

இதன் லிங்க் கொடுக்க மறந்துவிட்டேன்.

http://raviaditya.blogspot.com/2011/01/king-of-vibrating-veenai.html

ஆனந்தி.. said...

@கே.ரவிஷங்கர்

ஐயோ...ஆமாம் ரவி...மிஸ் பண்ணிட்டேன்.....இதோஎன் இசை தேவனின் இசை வெள்ளத்தில் லயிக்க வருகிறேன்...மிக்க நன்றி ரவி...

ஆனந்தி.. said...

@கே.ரவிஷங்கர்

ரவி..வீணையின் நாதங்களில் மெய் மறந்தேன்...அதுவும் காதல் ஓவியம் பாடலில் அந்த fusion கேட்டு கண்ணெல்லாம் தண்ணிர்..லயிப்பு கட்டாயம் இளையராஜாவால் மட்டுமே கொண்டு வரமுடியும் என்பது மீண்டும் மீண்டும் மீண்டும் ஒரு முறை உணர்ந்தேன்..நன்றி ரவி...இனி follow பண்றேன் மிஸ் பண்ணாமல்...

பாரத்... பாரதி... said...

//நாம கொஞ்சம் டைம் கான்ஷியஸ் பார்ட்டி :))//

தப்பே இல்லை தொடருங்கள்... டைம் கிடைக்கும் போது வாங்க...
காத்திருக்கிறோம்...

asiya omar said...

கற்று கொண்ட..உணர்ந்து கொண்ட பல விஷயங்கள் இணையத்தில் இருந்தாலும் சில சமயங்களில் இணையம் என் அரிய,பொக்கிஷ நேரங்களை "கொல்லும்"போது மீண்டும் வணக்கம் சொல்லிட்டு போயிரலாமான்னு தோணிகிட்டே இருக்கு...ஆனால் சில நெகிழ்வான,ஆத்மார்த்தமான பின்னூட்டங்களிலும்,சில அற்புதமான,பாசமான,கனிவான இணைய நட்புக்களாலும் ..


தற்காலிகமாய்
மனம் மாறி
விடுகிறேன்.................... .....:)

நல்ல பகிர்வு.இதுக்கு தான நானும் நீடித்து கொண்டிருக்கிறேன்.

Anonymous said...

சூப்பர் பதிவு

பலே பிரபு said...

இணையம் தான் நம்மை இணைத்துள்ள ஒரே இடம். தொடர்ந்து எழுதுங்கள்.

தமிழ்வாசி - Prakash said...

ரொம்ப நல்லாயிருக்கு.

ஹேமா said...

திரும்பிப் பார்த்தல் மிகவும் அவசியம் ஆனந்தி.படித்த படிப்பினைகள் வழிநடத்தும் நிச்சயம் !

Philosophy Prabhakaran said...

Free Flash banners குறித்த பதிவு எங்கே...?

ஆனந்தி.. said...

மீண்டும் நன்றி பாரத்..பாரதி.., நன்றி ஆசியா ஓமர்..நன்றி ஹேமா..நன்றி ஜெர்ரி..நன்றி பலேப்ரபு..நன்றி அனானி..நன்றி தமிழ்வாசி..

@பிரபா..அது நான் பதிவாய் போடல..பிளாஷ் banners trial அண்ட் error method இல் ஜஸ்ட் compile பண்ணிட்டு இருந்தேன்...wrong ஆ போஸ்ட் டில் வந்து உட்கார்ந்திருச்சு..உடனே காலி பண்ணிட்டேன்...:))

Nehatsbj said...

இது தொடர் பதிவு என்றாலும் கூட, நீங்கள் சொன்னது வித்தியாசமாக, புதிதாகவே இருக்கிறது.

Johnsonexfn said...

இது தொடர் பதிவு என்றாலும் கூட, நீங்கள் சொன்னது வித்தியாசமாக, புதிதாகவே இருக்கிறது.