January 24, 2011

நாகரிகம் இன்னும் நமக்கு பத்தலையோ??!!




நாகரிகம்..!!ம்ம்..நான் சொல்வது உடை சம்பந்தப்பட்டது இல்லை..உணர்வு சம்பந்தப்பட்டது..!! நாகரிகமற்ற,லஜ்ஜையில்லாத சில மொழி அசைவுகள் ஏனோ எனக்கு பிடிப்பதில்லை...


பள்ளி முடிந்து காரில் ஏறும் ஒரு 10 வயசு பொடியன்,வயதான கார் டிரைவர் ஐ பார்த்து அதட்டும், " ஏய்..தொரசாமி! காரை எடு.."



தன் வயிற்று பிழைப்புக்காய் வீட்டு வேலை செய்யும் ,நன்றாய் வாழ்ந்து கெட்ட வயதான அம்மாவை பார்த்து அதட்டும் சிறு வயது எஜமானியின்  "ஏண்டி...!ஒனக்கு அறிவில்ல "



இது மாதிரி கூனி குறுகி போகும் தோட்டகார அந்தோணி தாத்தா,கழிவுகளை அகற்றும் பள்ளிகூட மரகதம் அம்மா,கார் துடைக்கும் வேலு அண்ணன்.....இப்படி நிறையவே நம்மை சுற்றி....!!




நம்ம ஊரில்  உயர் நிலை,தாழ் நிலை ன்னு தகுதி வாரியாய் தரப்படும் மதிப்பு,நாகரிகம்(?) எல்லாம் இன்னும் நம்மை "குரங்கு" மனிதர்களாகவே தொடரச் செய்யுதான்னு தெரியல...



அழகான சில விஷயங்கள் பார்க்கும்போது, மொழி எதுவும் தேவைபடாமல் அதை உணரும்போது நாகரிகம் இன்னும் கொஞ்சம் உயிரோட இருக்குனு நினைச்சிருக்கேன்...பார்த்த பல  சம்பவங்களில் வெளிநாட்டு காரர்களாய் இருப்பது என் துரதிர்ஷ்டம்..:(

ஒரு முறை..

ஆட்டோக்கள் பெருகி விட்ட இந்த காலத்தில் என்னவோ
இப்போ எல்லாம் சைக்கிள் ரிக்ஷாக்களை அவ்வளவாய் பார்ப்பதே இல்லை...அரிதாய் அன்று மதுரை தெற்கு மாசி வீதியில் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் செம வேர்வையோடு ஒரு 50 வயசு மதிக்க தக்க நம்ம ஊருக்காரர் ரிக்ஸா மிதிக்க மூணு வெளிநாட்டு காரர்கள் உட்கார்ந்து போய்கிட்டு இருந்தாங்க...கொஞ்ச நேரத்தில் சரியான வெயில். பழச்சாறு குடிக்க ஒரு கடையில் காத்திருந்தோம்..மீண்டும் அதே ரிக்ஸா..இந்த முறை ரிக்ஸா மிதித்தது அந்த மூணு பேரில் உள்ள  ஒரு வெள்ளைக்காரர்..மீதி ரெண்டு வெளிநாட்டு காரர்கள் நம்ம ஊரு மனிதர் மேலே தோளில் கைபோட்டு வர கொஞ்சம் நெர்வசாய் நடுவில்  உட்கார்ந்து இருந்தார் நம்ம ஊரு காரர்..


பார்த்தவுடனே சட்டுன்னு சந்தோஷமாய்..பரவசமாய்   இருந்தது.



"ரிக்ஸா மிதித்து மிதித்து

காச்சு போன -அம்மனிதன் 
கரும்பாதம்
அன்று  ஒரு நாள் மட்டும்
மென்மையானது -
அந்த வெள்ளைக்காரன்
மனசுப்போலே...!! "

நம்மில் எத்தனை பேரு ஒரு ரிக்ஸா ஊழியருக்கு இந்த அளவுக்கு பரிவு காட்டி இருப்போம்னு தெரியலை..???




இன்னொரு சம்பவம்....


ஓசூர் நோக்கிய எங்கள் அதிகாலை பயணத்தில்,சரியான பசியில் சேலம் பை பாஸில்,ஒரு ஹோட்டல் லில் காலை உணவுக்காக எங்களுடன்,சில ஐயப்ப சாமி, முருக பக்தர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு காரரும் வெயிட்டிங்..அதிகாலையில் குறைவான ஊழியர்களே அங்கே இருந்ததால் ஆர்டர் பண்ணிய ஐட்டங்கள் ஒவ்வென்றும் வர தாமதம்..எங்கள் முகச்சுழிப்புகளை மிக அழகாய், தன் புன்சிரிப்பாலும், மன்னிப்பாலும் எங்களை சரி செய்த அந்த ஹோட்டல் சர்வர் பார்த்து ஒரு புறம் எனக்கு ஆச்சர்யம் என்றால், என்னை போலவே கவனித்து...சாப்பிட்டு விட்டு கிளம்ப தயாரான போது, தான் அன்பாய் கொடுத்த பணத்தை மறுத்த அந்த புன் சிரிப்பு சர்வருக்கு  கை கொடுத்து,லேசாய் கட்டி பிடித்து பாராட்டிய வெளிநாட்டு காரரின் செய்கை பார்த்து எனக்கு பல மடங்கு ஆச்சர்யம்...

"அந்த  சின்ன புன்முறுவலில் -என்

சினம் யாவும் போயாச்சு!!"
 
நம்மில் பலர் பல நேரத்தில் புன்சிரிப்பு,நாகரிக உரையாடல், பாராட்டுதலை மறந்து விடுகிறோம்...ஆமாம் தான் இல்லையா?:))   

நாகரிகம் இன்னும் நமக்கு பத்தலையோ??!!!!

67 comments:

MANO நாஞ்சில் மனோ said...

vadai...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாறிவரும் உலகில் மாற்றத்திற்க்கேற்ப மனிதர்களும் மாறுகிறார்கள்... மனிதமும் காணாமல் போகிறது.. வீட்டில் அம்மா அப்பாவையே மரியாதையில்லாமல் அழைக்கும் குழந்தைகளிடம் எப்படி வெளியாட்களுக்கு மரியாதை கொடுக்க தெரியும்... இதற்கு பெற்றோர்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறார்கள்..


அதே சமயம் மனிதம் சாகாமலும் இருக்கிறது பல உள்ளங்களில்...

MANO நாஞ்சில் மனோ said...

//அன்பாய் கொடுத்த பணத்தை மறுத்த அந்த புன் சிரிப்பு சர்வருக்கு கை கொடுத்து,லேசாய் கட்டி பிடித்து பாராட்டிய வெளிநாட்டு காரரின் செய்கை பார்த்து எனக்கு பல மடங்கு ஆச்சர்யம்...///


உண்மையான அன்பு பண்பு.....................
சூப்பர் பதிவு[கவிதை]

Unknown said...

மனிதம் மனிதனிடம் மலிங்கிகொண்டே வருவது என்னவோ உண்மைதான் சகோ

அந்த 'வெளைக்காரர் கவிதை அருமை '

எல் கே said...

இது நம்ம சமுதாயத்தின் சாபக் கேடோ ?? இதைக் கிட்ட தட்ட இரண்டு வாரங்களுக்கு முன் நானும் வேறு ஒரு மூத்தப் பதிவரும் , புத்தக கண்காட்சியில் சந்தித்த பொழுது விவாதித்துக் கொண்டிருந்தோம். இதே போன்றுதான் அலுவலகத்திலும் நடக்கிறது. அலுவலக பியூன் வயதானவராக இருந்தால் பலர் மரியாதை தருவது இல்லை. :(

ஹோட்டல், எங்க ஊர் சம்பவம். மனம் மகிழ்கிறது

test said...

தொழில், பணம் சார்ந்தே மற்றவர்களை மதிப்பது நமது (தமிழர்?) அரும்பெரும் குணங்களில் ஒன்று!
மனிதர்களை மனிதர்களாகவே பார்ப்பது கற்றுக் கொடுக்கப்படுவதில்லை!
யாரும் தாமாகக் கற்றுக்கொள்ள விரும்புவதுமில்லை!

Anonymous said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க சகோ! நாகரிகம் கூட வேண்டாம் கொஞ்சம் மனிதம் இருந்தாலே போதும்! பாராட்டு கூட வேண்டாம் ஒரு சின்ன புன்னகை போதுமே!
Well said! சகோ :)

Sathish Kumar said...

கொஞ்சம் அயல் நாட்டவரின் நட்பு உள்ளதால், அவர்களை உற்று கவனித்ததால் சொல்கிறேன், நமக்கு நாகரீகம் போதவில்லை என்றே தோன்றுகிறது...! இது எனது தனிப்பட்ட அனுபவத்தின் வாயிலாக நான் உரைத்தது. பிறரிரடமிருந்து வேறுபட்டால் மன்னிக்கவும்.

ரெண்டு சம்பவங்களும் நாம் அதிகம் கடந்து வந்தவைகள் தான். சிதறாமல் உரு கொடுத்ததற்கு பாராட்டுக்கள்..!

மாணவன் said...

//நம்மில் பலர் பல நேரத்தில் புன்சிரிப்பு,நாகரிக உரையாடல், பாராட்டுதலை மறந்து விடுகிறோம்...ஆமாம் தான் இல்லையா?:))
நாகரிகம் இன்னும் நமக்கு பத்தலையோ??!!!!//

நிச்சயமாக நாகரிகம் பத்தலைதான் சகோ...
மாறிவரும் உலகில் எல்லாமே மாறிகொண்டிருக்கிறது (அன்பு, பிறரை மதிக்கும் பண்பாடு, மனித நேயம் உட்பட)

மாணவன் said...

சரியான நேரத்தில் சுட்டிக்காட்டி உணர்வுகளுடன் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி சகோ....

சி.பி.செந்தில்குமார் said...

....
நாகரிகம் இன்னும் நமக்கு பத்தலையோ??!!!!


S S ... GOOD THINKING AANANDHI

சௌந்தர் said...

அன்பு தான் தேவை பணம் இல்லை....

அதான் கட்டிபிடி வைத்தியம்

Unknown said...

பொன் நகையை விட புன்னகையே சிறந்தது என்று சும்மாவா சொல்லி இருக்கிறார்கள், என்ன செய்ய, சில நிகழ்வுகளை பார்க்கும் போது வேதனை பட மட்டும்தான் நம்மால் முடியும்...

karthikkumar said...

நல்ல பதிவு.... :) நல்லா எழுதி இருக்கீங்க....

சக்தி கல்வி மையம் said...

இன்று தான் முதன்முதலாய் உங்கள் தளத்திற்கு வருகிறேன்.

நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்..

பை த பை ' வேடந்தாங்கள் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்! மறக்காம ஓட்டும் போடுங்க...

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_24.html

இனி தினமும் சந்திப்போம்.

Madurai pandi said...

அடடா!!! கவிதையோட கலந்து கட்டி அடிக்கிறீங்க !!!

இதே!! நம்மாளுங்க தான் வெள்ளையனே வெளியேருன்னு சொன்னாங்க !!! இருந்தா அவங்க கிட்ட இருந்து நாம நெறைய கத்துக்குவோம்னு நெனைச்சுருப்பாங்க போல..

Harini Resh said...

சூப்பர் பதிவு ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க சகோ
Balaji sonnadhu pola

நாகரிகம் கூட வேண்டாம் கொஞ்சம் மனிதம் இருந்தாலே போதும்! பாராட்டு கூட வேண்டாம் ஒரு சின்ன புன்னகை போதுமே!

Yaathoramani.blogspot.com said...

இரண்டு நல்ல உதாரணங்களும் நம்மவர்மூலம் இல்லை எனப்படிக்க
வருத்தமாக இருந்தாலும் உண்மை அப்படித்தானே இருக்கிறது
நல்ல பதிவு..
வாழ்த்துக்களுடன்....

தமிழ் உதயம் said...

மனிதன் என்று சொல்வதால் மட்டும் நாம் மனிதன் ஆகி விட முடியாது. சில அடிப்படை பண்பு இல்லாத வரை. நல்ல பதிவு.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அருமை சகோதரி அருமை! உண்மையில் மிகவும் உண்மையான விஷயம் ஒன்றைச் சொல்லி உள்ளீர்கள்! இங்கு வெளிநாட்டில் நாம் காணும் மதிப்பையும், மரியாதையையும் எண்ணிப்பார்க்கும் போது, நாமெல்லாம் எங்கே போகிறோம் என்று வெட்கித் தலைகுனிகிறேன்! உங்களுடைய மிகவும் பெறுமதி வாய்ந்த பதிவுகளில் இதுவும் ஒன்று! வாழ்த்துக்கள் சகோதரி!!

Unknown said...

கண்டிப்பா நமக்கு நாகரீகம் பத்தலைதான். மனித உழைப்புக்கு மதிப்பும் இல்லாமல் போச்சு.

வெளிநாடுகளில், வெள்ளை மற்றும் மஞ்சள்களைப் பார்த்தவுடன் பல்லை இளிக்கும் நம்மவர்கள், நம்மவர்களைப் பார்த்தால் ஏதோ ஆம்வேகார(ரியைப்)னைப் பார்ப்பதுபோல் செய்வதும் நிறையப் பார்த்து இருக்கிறேன்.

வெளிநாட்டவரிடமிருந்து, திங்கிறது, குடிக்கிறது, கெழட்டறது தவிர கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.

vanathy said...

பெரியவர்களைப் பார்த்து சின்னவர்களும் கற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் மற்றவர்களை மரியாதையாக நடத்தினால் குட்டிகளும் பழகுவார்கள்.
வெள்ளைக்காரர்களிடம் நாம் கற்றுக் கொள்ளலாம் இந்தப் பண்புகளை. நல்ல பதிவு.

Prabu M said...

அக்கா... மறுபடியும் ஓர் அற்புதமான பதிவு :)

நமக்கு நாகரிகம் சத்தியமா பத்தாதுதான்....
இது நாகரிகம் என்பதைவிட மிக மிக அடிப்படையான மனிதத்தன்மை....
அடுத்த மனிதனை மதிக்காதனால்தான் மொத்தத்தில் சுயமரியாதையும் குறைந்த சமூகமாக நாம் இன்னும் இருக்கிறோம்னு நான் யோசிச்சிருக்கேன்.... உதாரணத்துக்கு வேலையிழந்துட்டாலோ ஏன் சம்பளத்தில் அடுத்தவன் கொஞ்சம் ஓவர்டேக் செஞ்சிட்டாலோ படு அநியாயத்துக்கு சுயமரியாதை இழந்து சோர்ந்து போயிடுற பல பேரைப் பார்த்திருக்கேன்.. அதுவே கொஞ்சம் நல்ல நிலைக்கு வந்திட்டா கீழே இருக்குறவங்களைக் கேவலமா ட்ரீட் பண்ணுறது..... என்ன ஒரு கேவலம்...

அக்கறையான ஒரு விஷயத்தை அழகா கொடுத்திருக்கீங்க சகோ .... வாழ்த்துக்கள் சகோ... சூப்பர்ப்!!!

Chitra said...

"ரிக்ஸா மிதித்து மிதித்து
காச்சு போன -அம்மனிதன்
கரும்பாதம்
அன்று ஒரு நாள் மட்டும்
மென்மையானது -
அந்த வெள்ளைக்காரன்
மனசுப்போலே...!! "


..... very nice....

Chitra said...

கண்ணம்மா, உண்மையில் நான் ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் என்னை பாதிக்கும் விஷயங்களில் - இதுவும் ஒன்று. மனிதர்களை மனிதத்தன்மையுடன் மதிக்காமல், அவர்களது status க்காக மதிப்பது எனக்கு வருத்தமாக இருக்கும். ரொம்ப அருமையாக நிலைமையை படம் பிடித்து கவித்துவமாக காட்டி இருக்கிறீர்கள்.

NSK said...

நல்ல பதிவு, கெட்டதை மட்டும் சொல்லிகாட்டுறோம், நல்லதை பாராட்ட தவறி விடுகிறோம்.
மனிதம் செத்துபோயிருச்சி, அதை சொல்லி கொடுக்க வேண்டிய கல்வி கோமாவில் படுத்து கெடக்குது
தட்டி கேட்க வேண்டிய மக்கள், வருசையில் காத்து கிடக்கிறார்கள் தங்களது குழந்தையின் படிப்பிற்காக ஒரு கல்வி விற்பனையாளரிடம்.
எவனாவது வந்து எல்லாத்தையும் மாத்திடுவான்னு, எல்லாரும் எதிர்பாத்திட்டு இருந்தா... எப்படி நடக்கும்!

கணேஷ் said...

நல்ல பதிவு அக்கா..எல்லோரும் சக மனிதர்கள் என்ற நினைப்பு இருந்தாலே போதும் இந்த மாதிரி பிரச்சினைகள வராது..

இயல்பான உங்களின் எதார்த்த கவிதையும் நல்லா இருக்கு))))

Ram said...

ம்ம்.. ஸ்டேடஸ் ஸ்டேடஸ் என்று எல்லாரும் புலம்புறீங்களே முதல்ல அரசியல்காரங்கள இட ஒதுக்கீடை எடுக்க சொல்லுங்க... வெளிநாட்டுகாரனுக்கு இது ஒரு புது அனுபவம்.. அதனால அவன் இத எல்லாம் ரசிக்கிறான்.. கருப்பர்கள ஒதுக்குற நாட்டுக்கு போனா நாமலும் கருப்பர்களோட ஒருத்தரா இருக்கமாட்டோமா என்ன.??? வீணா மத்த நாட்டு ஆளுங்களோட கம்பேர் பண்ணாதீங்க.. அங்கிருந்த வந்த நாலு நல்லவங்கள பாத்திருக்கலாம்.. ஆனா அங்க இன்னும் நாப்பதாயிரம் நம்மல போல இருப்பாங்க.. அதேபோல நம்ம நாட்லயும் இருக்காங்க.. நான் என்னைக்குமே யாரையும் பாராட்டவோ, இல்ல ஸ்டேடஸ் பாத்ததோ இல்ல.. இப்படி மாறுங்கன்னு நீங்க சொல்லலாம்.. ஆனா அவங்க இப்படி இருக்காங்களேன்னு நீங்க சொல்லகூடாதுங்கறது என்னோட கருத்து.. சடார்னு வேற ஏதோ டென்ஷனா இருந்ததால இப்படி பேசிட்டன்.. ஸாரி.. டென்ஷன்ல வந்த வார்த்தைய தெரிஞ்சிக்கணும்ல நீங்க

Ram said...

அப்பரம் கவிதை.. இதுல உங்க ரசனை துளி கொஞ்சம் கம்மியா இருக்கிறாப்புல இருக்கு.. ஆனந்திகிட்ட இருக்குற உணர்வு மிஸ்ஸிங்..

குறையொன்றுமில்லை. said...

உண்மைதான் ஆனந்தி, நம்மவர்களுக்கு மனிதம் போதாதுதான். அழகாக சொல்லி யிருக்கீங்க.

ஆனந்தி.. said...

@தம்பி கூர்மதியன்

//அப்பரம் கவிதை.. இதுல உங்க ரசனை துளி கொஞ்சம் கம்மியா இருக்கிறாப்புல இருக்கு.. ஆனந்திகிட்ட இருக்குற உணர்வு மிஸ்ஸிங்..//

s..தம்பி கூர்மதி...எனக்கும் அப்படி பீல் ஆச்சு...ஜஸ்ட் ஒரு 10 நிமிஷத்தில் சட்டுன்னு தோணி போட்ட போஸ்ட் இது...கவிதை (?) லாம் இல்ல அது...அது கவிதை மாதிரி தான்..:))) ...preview பார்த்தவரை அது இல்லை..ரொம்ப ஏதோ மிஸ் ஆச்சு...ஸோ..சட்டுன்னு தோணி சேர்த்தேன்...ஆனால் publish பண்ண பிறகு இன்னும் கொஞ்சம் நல்லா அந்த கவிதை(?) யோசிசிருக்கலம் தோணிச்சு...நிஜமாய் நீங்க சொன்னதை ஒத்துகிறேன் அதை மட்டும்...:))

ஆனந்தி.. said...

@நன்றி மனோ...

@வெறும்பய...//ம் மாறுகிறார்கள்... மனிதமும் காணாமல் போகிறது.. வீட்டில் அம்மா அப்பாவையே மரியாதையில்லாமல் அழைக்கும் குழந்தைகளிடம் எப்படி வெளியாட்களுக்கு மரியாதை கொடுக்க தெரியும்... இதற்கு பெற்றோர்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறார்கள்..//

உண்மை ஜெயந்த்...முழுக்க முழுக்க உண்மை...

@மணிவண்ணன்../
அந்த 'வெளைக்காரர் கவிதை அருமை '/
ஹாய் சகோ..உங்களுக்கு பிடிச்சிருக்கா அது...? உன்னொரு சகோக்கு பிடிக்கலைன்னு கம்ப்ளைன் பண்ணிருக்காரு பாருங்க...:))

@LK ..உண்மை கார்த்திக்...உங்கள் ஊரு சேலம் ஆ...சூப்பர் ஊருங்க...சாப்பாடு சூப்பர்...நல்ல vast ஊரு..நன்றி கார்த்திக்...

@ஜீ..ஹாய் ஜீ...நிறைய புலம்பாத...:))

@பாலாஜி சரவணா...ஹாய் பால்ஸ்..தேங்க்ஸ்..போஸ்ட் போட்டாச்சு ஓகே வா...:))

@சதீஷ்...ஹாய் சதீஷ்:)) எப்படி இருக்கீங்க? உங்கள் கூற்றில் யாரும் தவறாய் நினைக்க மாட்டங்க...நீங்கள் கூறும் உண்மைகள்..உண்மைகள் தான்...தேங்க்ஸ் சதீஷ் :-))
@மாணவன்...நன்றி நன்றி சகோதரா...

@சி.பி....Thank you c.p sir..

@சௌந்தர்...அட..சுருக்கமா அழகா சொல்லிட்டாடா அன்பு தம்பி...

@இரவு வானம்...ஆமாம் இரவு வானம்...வேதனை தான் விடை...:(

@கார்த்திக் குமார்...நன்றி கார்த்திக்...என்ன புது போஸ்ட் காணோம்...:)

@கருண்...நீங்க ஏற்கனவே வந்து இருக்கீங்க...ஆனால் தப்பா யாருக்கோ போடும் கம்மென்ட் ஐ போட்டிங்க னு நினைக்கிறேன்..இல்லாட்டி இன்னைக்கு தான் உருப்படியா போஸ்ட் படிச்சிருக்கிங்க..அல்லது படிக்கல...:)) சரியா சகோதரா...??:))

@மதுரை பாண்டி...ஹாய் பாண்டி...எப்டி இருக்கீங்க?? அதுக்கு பேரு கவிதையா..ஓகே ஓகே..பாலை வார்த்தைங்க சகோதரா..ரொம்ப நன்றி...:))))

@ஹரிணி...ஹாய் ஹரிணி...ரொம்ப நன்றி...:)

@ரமணி...நன்றி ரமணி சார்...உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்..

@தமிழ் உதயம்...நன்றி ரமேஷ்...உங்கள் ஆதங்கம் மிக்க சரி...

@மாத்தி யோசி...ஹாய் ராஜீவ்...ரொம்ப ரொம்ப நன்றி...:))

@தஞ்சாவூரான்...உண்மை சகோ...உங்களுக்கு வரும் ஆத்திரம் எனக்குள்ளும் இருக்கு நிறைய...

@வானதி...நன்றி வாணி...உங்கள் கருத்துக்களை அப்டியே ஏற்று கொள்கிறேன்..நாம் தான் வழிகாட்டி...

@பிரபு.எம்...ஹாய் செல்ல தம்பி ..நோ தேங்க்ஸ்...:))

@சித்ரா...அம்மு....நன்றி டா...

@NSK ...நன்றி சார்...உங்கள் கருத்துகளும் யோசிக்க வைக்கிறது..

@கணேஷ்...ஹாய் என் அன்பு தம்பி...:))) சூப்பர் ஆ இருக்கேன்...தேங்க்ஸ் டா...

@லக்ஷ்மி...தேங்க்ஸ் ஆன்ட்டி...

@தம்பி கூர்மதி....நன்றி கூர்மதி...

ஆயிஷா said...

கவிதையோட கலந்த பதிவு.

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க.

செங்கோவி said...

உங்கள் கவலை சரிதான்..இனிவரும் தலைமுறை கொஞ்சம் பெட்டராய் வரும் என நம்புகிறேன்..

Thekkikattan|தெகா said...

நல்ல அவதானிப்பு! இதெல்லாம் கூட்டம் அதிகமாக ஆக மனிதம் இறப்பதனை கண் கூடாவே காண முடியும். நாம் பார்த்து, பொழங்கி பழகி விட்டோம். இது போன்ற out of box சிந்தனைகள் கூட கொஞ்சம் வித்தியாசப் பட்டதுதான்.

வெள்ளையர்கள் தாங்கள் பார்த்து, பொழங்கும் ஊர்களில் இந்தளவிற்கு மனித வன்கொடுமைகளை நேருக்கு நேர் காண்பது அரிது. அதுவே இது போன்ற நிகழ்வுகளை கண்டதும் அதன் வலிகளை உணர்ந்து கொள்கிறார்கள். தனி மனித நிலையில் என்று கருதுகிறேன்; நாம் மரத்த நிலையில் தொடர்ந்து இயங்குகிறோம். ஏனெனில் தினசரி காட்சி... புலன்களை கொன்று விடுகிறது...

நல்ல பதிவு!

பி.கு: நாம் கண்ணுற்ற ஈழச் சாவுகள் இப்பொழுது கண்ணுரும் மீனவர்களின் சாவுகள் கூட நம் பிறரின் வலிகளை சாதாரணமாக கடந்து போக பழகிக் கொண்டோம் என்பதற்கு சான்று சொல்லியே நிற்கிறது... :((

உங்களுள் ஒருவன் said...

நானும் சில ஆங்கில படங்கள் பார்த்து நிங்கள் கூரிய அதே எண்ணம் எனக்கும் தோன்றியது உண்டு.........
ஒரு படத்தில்...... இரு கார்கள் ஒன்றாக மோதி கொள்ளும்........ ஹீரோ வெளிய வந்து ஒன்றும் ஆபத்து இல்லையா என்று வாஞ்சனயுடன் கேட்பார்.... அதே நம்மவர் கலகா இருந்தால்.......... கத்தி ஆர்பாட்டம் பண்ணி இருபோம்........
பல ஆங்கில படம் பார்க்கும் பொழுது என்னகும் இந்த என்னணம் உண்டாகும்...........

எல் கே said...

/.உங்கள் ஊரு சேலம் ஆ...சூப்பர் ஊருங்க...சாப்பாடு சூப்பர்...நல்ல vast ஊரு..நன்றி கார்த்திக்...//

@ஆனந்தி
ஊர் பெருமைக்காக சொல்லவில்லை. அருமையான சாப்பாடு கிடைக்கும். மதுரை போல் இருபத்து நாங்க மணிநேரமும் உறங்காத ஊர் அது

ஆனந்தி.. said...

@எல் கே

ஓ...அப்டியா கார்த்திக்..முதல் முறையா சேலம் ..வரும்போதும் பழைய பஸ் ஸ்டாண்ட் வழியா சேலம் டவுன் வந்தோம்...அடையார் ஆனந்த பவன் இல் சாப்டோம்..எங்க ஊரை விட நல்லா நீட் ஆ இருந்தது ...

ஆனந்தி.. said...

நன்றி ஆயிஷா...
மிக்க நன்றி செங்கோவி...நானும் நம்புகிறேன் மாற்றங்கள் வரும்னு...
நன்றி தெகா சார்..உங்கள் கூற்றுகளில் நிறைய வலி இருக்கிறது..ஒத்து கொள்கிறேன்...
நன்றி உங்களுள் ஒருவன் சகோதரா...நான் அந்த அளவுக்கு ஆங்கில படங்களை கவனிச்சதில்லை...நீங்க சொல்றது புதுசா இருக்கு..இனி அதையும் கவனிச்சு பார்க்கிறேன் சகோதரா...

suneel krishnan said...

நம்ம ஊரு மக்களுக்கு இருக்குற பிரச்சனை -என் பார்வையில் யார் அந்த முதல் அடியை எடுத்து வைப்பதுங்க்றது தான் -இம்மாரி சில விஷயங்களை பார்க்கும் பொழுது -எனக்கும் பல உணர்வுகள் வரும் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணுவேன் -ஆனால் ஏதோ ஒரு தயக்கம் ,கூச்சம் ,என்னை தடுக்கும் ,பின்பு அன்று ஒரு நாள் முழுவது நாம் அதை செய்து இருக்கலாம் என்று ஒரு குற்ற உணர்வு மனசுல இருக்கும் ..என்ன சொல்ல -ஊரோட ஒத்து போ அப்டினே பல பேரு இப்படி இருக்குரானாக் ,இது நம்ம வேலை இல்ல ,இதை வேற யாரவது செய்வாங்கன்னு நாம சுலபமா நமக்கு சாக்கு சொல்லி தப்பிக்கிறோம் ,ரோட்டில் அவளவு பெரிய கல் கிடக்கும் -அதா அத்தன பெரும் கடந்து செல்லுவாங்க தவிர யாரும் அதா எடுத்து அப்புற படுத்த மாட்டாங்க .அது அரசோட வேலைன்னு அதுக்காக அரசை சாடுவாங்க ..நமக்கு நாகரீகம் நிச்சயம் பத்தலை

suneel krishnan said...

நம்ம ஊரு மக்களுக்கு இருக்குற பிரச்சனை -என் பார்வையில் யார் அந்த முதல் அடியை எடுத்து வைப்பதுங்க்றது தான் -இம்மாரி சில விஷயங்களை பார்க்கும் பொழுது -எனக்கும் பல உணர்வுகள் வரும் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணுவேன் -ஆனால் ஏதோ ஒரு தயக்கம் ,கூச்சம் ,என்னை தடுக்கும் ,பின்பு அன்று ஒரு நாள் முழுவது நாம் அதை செய்து இருக்கலாம் என்று ஒரு குற்ற உணர்வு மனசுல இருக்கும் ..என்ன சொல்ல -ஊரோட ஒத்து போ அப்டினே பல பேரு இப்படி இருக்குரானாக் ,இது நம்ம வேலை இல்ல ,இதை வேற யாரவது செய்வாங்கன்னு நாம சுலபமா நமக்கு சாக்கு சொல்லி தப்பிக்கிறோம் ,ரோட்டில் அவளவு பெரிய கல் கிடக்கும் -அதா அத்தன பெரும் கடந்து செல்லுவாங்க தவிர யாரும் அதா எடுத்து அப்புற படுத்த மாட்டாங்க .அது அரசோட வேலைன்னு அதுக்காக அரசை சாடுவாங்க ..நமக்கு நாகரீகம் நிச்சயம் பத்தலை

எண்ணங்கள் 13189034291840215795 said...

அடுத்தவனை மதித்தாலே நம் மரியாதை இழப்போமோ என்ற அற்ப பயம் .

அதிகாரத்தில் மட்டுமே ஆழுமை என்ற குணம்..

நல்ல பதிவு..

ஆனந்தி.. said...

@sunil ...
எனக்கு நீங்க சொல்ல வருவது நல்லா புரியுது சுனில்...


ஹாய் சாந்திக்கா..தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

abdul said...

nice........

எல் கே said...

@ஆனந்தி

ஒரு குட்டி விளம்பரம்., அடுத்த முறை சேலம் சென்றால், நேரம் இருந்தால், சேலம் செவ்வாய் பேட்டை சென்று எங்களது கடையில் சாப்பிட்டுப் பாருங்கள்

ஆனந்தி.. said...

@எல் கே

அப்டியா கார்த்திக்...என்ன ஹோட்டல்..சொல்லுங்க..அடுத்த முறை வாய்ப்பு கிடைச்சால் கட்டாயம் போயிட்டு வரோம்...குகை ரோடு இல் தான் ரொம்ப நேரம் சுத்திட்டு இருந்தோம்...:))

கோலா பூரி. said...

ஆனந்தி ஒவ்வொரு பதிவும் வித்யாசமான விஷயங்கள் பத்தி எழுதரீங்க. ரொம்பவே சுவாரசியமா இருக்கு.

தக்குடு said...

ரசித்தேன்! நல்ல கருத்து கோர்வை, மனிதனை மனிதனாய் பார்க்காமல் இருக்கும் வரை நாம் படித்த காட்டுவாசிகளே! வாழ்த்துக்கள்!

ஆர்வா said...

அந்த ரிக்ஷாகாரருக்கு காட்டப்பட்ட பரிவு.. நெகிழ்ச்சியடைய வைத்தது. அருமையான பதிவு


முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

Anonymous said...

நல்ல பதிவு

ரேவா said...

அந்த சின்ன புன்முறுவலில் -என் சினம் யாவும் போயாச்சு!!"
நம்மில் பலர் பல நேரத்தில் புன்சிரிப்பு,நாகரிக உரையாடல், பாராட்டுதலை மறந்து விடுகிறோம்...ஆமாம் தான் இல்லையா?:))
நாகரிகம் இன்னும் நமக்கு பத்தலையோ??!!!!superbbbbbbbbb

அந்நியன் 2 said...

அடடா..அருமையான கருத்தை சொல்லி இருக்கின்றிகள்.

வேலையின் பழுவின் காரணமாக வலைப் பூக்களுக்கு போக முடியவில்லை இன்றுதான் கொஞ்சம் பிரியாக இருக்கின்றேன்,அருமையாக நல்ல உணர்வுகளோடு ரிக்ஸா தொழிலாளியைப் பற்றி எழுதி இருக்கின்றிகள் வாழ்த்துக்கள்.

இது போன்ற பதிவுகளை பத்து தடவைப் படித்தாலும் போரடிக்காது

Prabu Krishna said...

உண்மையில் நாம் முகம் தெரியாத நபர்களுடன் நெருக்கமாக பழகுவது இல்லை.

அயல்நாட்டவர்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள்,
நாம் அதற்காக ஓடுகிறோம், வாழவில்லை.

தாராபுரத்தான் said...

சிலர் உணவகத்தில் போடும் அதட்டல்...

நிரூபன் said...

வணக்கம் சகோதரி, இன்று தான் உங்கள் வலை நோக்கி முதல் வருகை. பல்வேறு விதமான மனித மனங்களை வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். நாகரிகம் அடைந்த உலகில் நாம் மட்டும் முடங்கிப் போயுள்ளோமா என்று எண்ணத் தோன்றுகிறது.

Rajesh kumar said...

அன்புள்ள ஆனந்திக்கா.. பதிவு ரொம்ப நல்லா இருந்திச்சு. பொதுவா ஒரு பண்பாடு சார்ந்த விழுமியம் அல்லது நடைமுறைகள் உருவாகுறது நீண்ட கால அளவு எடுத்துக் கொள்ளும் ஒரு விஷயம். (continuously evolving process depends on the time or particular era). அதற்கு பங்களிக்கும் வெளிக்கூறுகள் அல்லது காரணிகள் (External Factors) நிறைய இருக்கு.உதாரணம் தட்ப வெப்பம், நில அமைப்பு, விளையும் உணவுப் பொருட்கள், பெய்யும் மழை, வெயில் ,காற்று இதெல்லாம் சேர்ந்துதான் ஒரு நாட்டினுடைய பண்பாட்டுக் கூறுகளை உருவாக்குது. உதாரணம் பாத்தீங்கன்னா நாம யாராவது நண்பர்களையோ உறவினர்களையோ பார்த்தால் சாப்டாச்சா னு கேட்போம் . ஏன்னா ஒருகாலத்துல சுமார் 100 வருஷம் முந்தி நமக்கு சாப்பாடு பெரிய விஷயமா இருந்துச்சு. பஞ்சம் வறுமை இருந்துச்சு.அதனால மூணு வேளை சாப்புடுறவன் வளமா இருப்பாங்குறது ஒரு நம்பிக்கை. ஆனா ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால யானை கட்டி போரடிச்சு நெல்லு விளைவிச்சிருக்கோம். அப்போ இருந்த காலநிலை மழை போன்ற காரணிகள் சமீப காலமாக இல்லை. அந்தகாலத்துல நம்ம வீடுகள்ல திண்ணை இருந்துச்சு . வழிபோக்கர்களும் நடந்து பயணம் செய்யிறவங்களும் இரவு தங்கிட்டு போவாங்க. இப்போ வாகனப் போக்குவரத்து அதிகம்.திண்ணைகள் தேவை இல்லாம போச்சு.

Rajesh kumar said...

வெளிநாடுகள்ல பாத்தீங்கன்னா வளம் அதிகம் , குளிர் அதிகம். தட்ப வெட்பம் ரொம்ப சீக்கிரமே மாறும் ( Dramatic climate changes) . அதனால ஒருத்தன் இன்னொருத்தன பார்த்தான்னா " weather is so nice , how about there ?" னு கேட்பான். அவனுக்கு உணவு பற்றின கவலை இல்ல. அவனுடைய பார்வைல ஒருத்தன் வளமா இருக்காங்குறது அவன் வச்சிருக்கிற கார் அல்லது வீடு அது மூலமாத்தான் தெரிஞ்சிக்குவான்.
ஒரு 100 200 வருஷங்கள் முன்னாடி அங்க வேட்டை மனப்பான்மை அதிக இருந்திச்சு. ஆஸ்திரேலியாவுல பழங்குடிகளை வேட்டையாட அரசாங்கமே அனுமதி கொடுத்திருந்திச்சு ( Licence to kill people as a hobby or sport). இவ்ளோ ஏன் 70 வருஷங்களுக்கு முந்தி ஜெர்மனி காரங்க பண்ணின கொடுமைகள்லாம் உலக மக்கள் மறக்கணும்னு அவங்க வெளிநாட்டுக் காரங்க கிட்ட ரொம்ப அன்பா பழகுவாங்களாம்.

அதனால "பெரியோரை வியத்தலும் இலமே , சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"
வெள்ளைக்காரன் அப்படி இருக்கான்னோ நம்மாளு இப்படி இருக்கான்னோ வருத்தப் படத் தேவை இல்லேன்னு நினைக்கிறேன்.
இன்னும் 20 வருஷத்துல இப்போ நாம கடைபிடிக்கிற கொஞ்ச நஞ்ச நல்லா விஷயங்களையும் இழந்திரக் கூடும்.
இல்ல ஏதாவது புதிய நல்ல பழக்கங்கள் வரலாம்.

என்னதான் நான் இப்படி சப்ப கட்டு கட்டினாலும் நம்ம குணாதிசயம் ரொம்பவே மாறியிருக்கு. அத மறுக்கவே முடியாது. குறிப்பா நான் பார்த்தவரைக்கும் தமிழ்நாடு கொஞ்சம் மோசமாத்தான் இருக்கு.

ஹேமா said...

முகத்திலடிக்கிறமாதிரி நல்லதொரு பதிவு ஆனந்தி.வெளிநாட்டைப் பொருத்தவரை வெள்ளைக்காரனிடம் தேவையற்றதெல்லாம் பழகிக்கொள்ளும் நம்மவர்கள் நல்ல விஷயங்களைப் பழகமாட்டார்கள்.
வெள்ளைக்காரனிடனிடம் இருக்கும் உயர்ந்த பண்புகளில் இருதுவும் ஒன்று !

ஆனந்தி.. said...

@Rajesh kumar

ஹாய் என் அன்பு தம்பி ராஜேஷ்...:)) நல்லா கவனிச்சு பார்த்தால் வெளிநாட்டில் இந்த பொருளாதார ஏற்ற தாழ்வுகளை வச்சு பெருசா ஒரு மனிதனின் சுயமரியாதையை குலைக்க மாட்டாங்கன்னு தான் தோணுது...நம்ம ஊரில் சாதி ல இருந்து...வேலை பார்க்கும் பணியின் தரம் வரை பார்த்து தானே அவனுக்கு குடுக்கும் அந்தஸ்தை முடிவு பண்ணும் நிலைமை இங்கே...அதை பார்த்து தான் வருத்த படுறேன் ராஜேஷ்..அவங்க கலாச்சாரம் வேற...கலாச்சாரம் பத்தியே நான் யோசிக்கலை..நான் சொல்வது மனிதம் என்ற ஒரு உன்னத விஷயத்துக்கு நம்ம நாட்டில் பெரிய consideration இல்லை என்ற ஆதங்கம் மட்டுமே...விருந்தோம்பல்..பணிவு...இரக்கம் எல்லாம் நம்ம ஊரில் நிறைய குறைஞ்சுருச்சு ராஜேஷ்...சென்னையில் புதுசா போகும் ஆள் அட்ரஸ் கேட்டால் கூட பொறுமையா யாரும் சொல்லும் மனநிலை இல்லை...அந்த அளவுக்கு ஏதோ ஆளுமையில் சிக்கிட்டு தவிக்கிறோம்...அது தான் என் கவலை...:((( உதவி செய்ய போலாம்னு எண்ணம் வந்தால் கூட யாரவது செய்யட்டும் முதலில், அப்புறம் போகலாம் அப்டிங்கிற ஒரு தயக்கம்...இது தான் இப்போ உள்ள கால கட்டம் னு தோணுது ராஜேஷ்...:((( மனசார பாராட்ட கூட ஏதோ ஒன்னு நம்மை தடுத்துட்டு தான் இருக்கு...

ஆனந்தி.. said...

@ஹேமா
உண்மை ஹேமா...இங்கே கம்மென்ட் டில் ஒரு சகோதரர் சொன்னது போலே வெளிநாட்டு காரனை பார்த்து உடை..உணவுகளை மட்டுமே காப்பி அடிக்கிறோம்...மத்த விஷயங்கள்...:((((

ஆனந்தி.. said...

@<a
நன்றி நிருபன்..
நன்றி பலே பிரபு..
நன்றி தாரபுரத்தான் ஐயா...
நன்றி அந்நியன் 2
நன்றி கவிதை காதலன்
நன்றி தக்குடு
நன்றி கோம்ஸ்..
நன்றி abdur
நன்றி ரேவா..

R.Gopi said...

இது மாதிரி சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது ஆனந்தி....

மனித நேயம் குறைந்து வருகிறதோ அல்லது மறைந்து வருகிறதோ என்ற ஐயம் வருகிறது...

உலகம் மாறி வருவதற்கேற்ப மனிதனின் குணமும் மாறி வருகிறது...

அடுத்தவரை மதித்து, நாமும் மரியாதை பெற வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்து கொள்ள வேண்டும்...

அருமையான பதிவு...

சிவகுமாரன் said...

அருமையான பகிர்வு.
என் சித்தப்பா ஒரு கம்யூனிஸ்ட், கவிஞர். ஒருமுறை கழிவறை சுத்தம் செய்ய ஒருவரை சொல்லியிருந்தார்.என் தம்பிஇடம் (அவரின் மகன்) குறவன் வந்தானா எனக் கேட்டார். ஐந்தே வயதான அவரின் மகன் குறவர் வந்தாரா ன்னு கேளுங்கப்பான்னு சொன்னான். அதிர்ந்து போனார். என் சித்தப்பா . பின்னாளில் தான் பேசும் மேடைகளில் எல்லாம் இதை சொல்வார்.
குழந்தைகளுக்கு நாம் தான் கற்றுக் கொடுக்க வேண்டும்.

Unknown said...

Sir/Madam..!!Please avoid template comments ..I need only worthy and useful comments..Thank you..:)))///\

ok...:)

Unknown said...

ம் நல்ல பகிர்வு
குறைகூட
நேர்த்தியாய்
சொல்லி இருக்கீங்க
அந்த புண் சிரிப்பில்

வாழ்க வளமுடன்

Vijay Periasamy said...

மனசு விட்டு பாராட்ட பெரிய மனசு வேணும் .
நம்ம மக்களுக்கு பொறாமையும் , அலட்சியமும் ரொம்பவே ஜாஸ்தி .
நல்ல விஷயங்கள் சொன்னா, ஏத்துக்கறத விட்டுட்டு , நீ யாரு எனக்கு
புத்தி சொல்ல என்று தான் எகிறுவார்கள் ...

Kevin said...

அன்பு தான் தேவை பணம் இல்லை.... அதான் கட்டிபிடி வைத்தியம்