சரி விஷயத்துக்கு வரேன்..
"ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாடி ஒரு பெண் இருப்பாள் " அப்படின்னு நம்ம எள்ளு தாத்தாவோட கொள்ளு தாத்தா வரைக்கும் எல்லாரும் சொன்ன விஷயம்...இன்னும் சொல்ற விஷயம்..! ஸோ,அதை பேசினால் மாமூல்..இப்ப கொஞ்சம் உல்ட்டாவான விஷயம் சொல்ல போறேன் :))
"ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னாடி ஒரு ஆண் இருப்பான்" ன்னு அவ்வளவு உறுதியாக..பரவலாக..நிச்சயமாக..
ஆனால் அப்படி கொஞ்சூண்டு :)) உறுதியாய் சொல்றமாதிரி சில சம்பவங்களும் அங்க இங்கனு நடக்குது...
அம்பிகா,10 ம் வகுப்பில்,திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடம்,ஆனால் குடும்பத்தில் வறுமையும் முதலிடம். படிக்க வழியில்லாமல் உறவு பையனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க..அவள் கணவர் மனைவியின் திறமை தெரிஞ்சு படிக்க வச்சிருக்கார்...இப்போ அந்த பொண்ணு ,
அம்பிகா I.P.S.,
w/o திருப்பதி சாமி (போலீஸ் கான்ஸ்டபிள்)
அப்புறம் சில பயோக்ராபிஸ் படிக்கும்போது நான் வியந்த, மேலும் சில நிஜங்கள் இதோ...
முதலில் குழந்தைகளை பார்த்துக்கிற கேர் டேக்கர் வேலை பார்த்துட்டு இருந்த புத்திசாலி போலந்து பொண்ணு தான் மரியா ..தன் கூடவே ஆராய்ச்சி செய்ய வச்சு அருமையா ஊக்கபடுத்தியது அவங்க கணவர் தான். மரியா கதிரியக்கங்களை பற்றி ஆராய்ச்சி பண்ணி..நோபல் பரிசு எல்லாம் கூட வாங்கினாங்க..ரெண்டு வாட்டி..! வெறும் மரியா னால் புரியாது உங்களுக்கு. .இப்ப தெரியுதான்னு பாருங்க..
Dr. மேரி க்யுரி ,
w/o Dr. பியரி க்யூரி (வேதியல் நிபுணர்)
பஞ்சாப் ல படிச்ச கல்பனா ங்கிற பொண்ணு எக்கச்சக்க கனவோட விண்வெளி இயல் எல்லாம் படிக்க அமெரிக்கா வந்துச்சு.அந்த பொண்ணை ஊக்கபடுத்தி விமான பயிற்சி சொல்லி கொடுத்தது கூட கல்பனாவின் கணவர் தான்..இந்த பயிற்சி எல்லாம் கல்பனாவுக்கு பின்னாளில் NASA வில் ரொம்ப உபயோகமா இருந்தது...இது யாருன்னு புரிஞ்சிருப்பிங்க...
கல்பனா சாவ்லா,
கல்பனா சாவ்லா,
w/o ஹாரிசன் (விமான பயிற்சியாளர்)
கேட்டது...படிச்சது தானே சொல்ற...கண்ணால ஏதாவது பார்த்திருக்கியானு மாற்று கருத்து:)) கேட்க போறிங்களா?..ம்ம்..இதையும் தொடர்ந்து படிங்க...
வலிப்பு நோயின் காரணமாய் ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மையில் மனத்தால் இறுகிபோய் வீட்டை விட்டே வெளியே வராத ஒரு பெண்ணை அவள் கணவர்,அவள் போடும் அழகு கோலங்களை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி, அவள் திறமையை முதலில் அவளுக்கு உணர்த்தினார். இன்னைக்கு அந்த பெண் எம்பிராய்டரி, ஹன்டி கிராப்ட்ஸ் சொல்லி கொடுக்கும் பிஸி ஆசிரியை...அவங்க,
தேவகி அக்கா,
கேட்டது...படிச்சது தானே சொல்ற...கண்ணால ஏதாவது பார்த்திருக்கியானு மாற்று கருத்து:)) கேட்க போறிங்களா?..ம்ம்..இதையும் தொடர்ந்து படிங்க...
வலிப்பு நோயின் காரணமாய் ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மையில் மனத்தால் இறுகிபோய் வீட்டை விட்டே வெளியே வராத ஒரு பெண்ணை அவள் கணவர்,அவள் போடும் அழகு கோலங்களை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி, அவள் திறமையை முதலில் அவளுக்கு உணர்த்தினார். இன்னைக்கு அந்த பெண் எம்பிராய்டரி, ஹன்டி கிராப்ட்ஸ் சொல்லி கொடுக்கும் பிஸி ஆசிரியை...அவங்க,
தேவகி அக்கா,
w/o செழியன் அண்ணா (பழைய பேப்பர் வியாபாரி)
என் உதாரணங்கள் கூட அங்க இங்கனு கூட்டி கழிச்சு விரல் வச்சே எண்ணி விடுகிற நிலைமை தான் இல்லையா? இந்த எண்ணிக்கைகள் எண்ணவே முடியாத infinitive ஆ போக கூடிய நிலைமைக்கு வரணுங்கிறது தான் என் பிக் பிக்.. வெரி வெறி ஆசை..:))
ஒரு பக்குவபட்ட ஆண் நினைத்தால் அவன் மனைவியை சிற்பமாய் செதுக்க முடியும். மாமூலான விஷயங்கள் தவிர்த்து ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏதோ ஒரு சிறப்பு டேலேன்ட் உறுதியாய் இருக்கும். அதை கொஞ்சம் தூசி தட்டி விட்டாலே போதும்...அவள் பிரகாசிப்பாள்..ஜொலி ஜொலிப்பாள்..ஸோ...
கல்யாணம் ஆன ஆண்களே...தீர்மானிங்க! :))
கல்யாணம் ஆகாத ஆண்களே...யோசிங்க..! :))
டிஸ்கி.."போம்மா..நீ வேற..எங்க வீட்டம்மா கிட்ட தெனமும் கும்மாங்குத்து:)) வாங்கி..வாங்கி இப்ப பேச முடியாம வாய் கூட வீங்கி கெடக்கு " ன்னு புலம்பும் பச்ச புள்ள ஆண்களுக்கான டிப்ஸ் : " ஏன் நீங்க அவங்களை ஊக்க படுத்தி ஒரு கராத்தே மாஸ்டர் ஆகவோ..ஒரு குங்-பூ வீராங்கனையாவோ ஆக்க கூடாது."..:)))ஆண்களே இதையும் கொஞ்சம் யோசிங்க...:))))))
