November 9, 2010

கல்லறையை தோண்டும் மந்திரவாதி மீடியாக்கள் !!!தீபாவளி நல்லபடியா முடிஞ்சதா?...தீபாவளி முதல் நாள் நான் பார்த்த அடைமழை&பேய் மழை இரவில் ,  ஓலைக்குடிசை மறைவில் சோகமாய் மாவு வித்துகிட்டு  இருந்த பாட்டிக்கும்,புதுசெருப்பை மழை தண்ணியில் தவற விட்டுட்டு , புலம்பிகிட்டே  தேங்கி கிடந்த தண்ணிக்குள் கை விட்டு தேடி கொண்டு இருந்த நடுத்தர ஏழை மனிதருக்கும்,ஒரே ஒரு பழைய தையல் மெஷினை ரோட்டு ஓரமாய் போட்டு ஏக பிசி யாய் தச்சிட்டு இருந்த வயசான டைலர் தாத்தாவுக்கும் கூட நல்லபடியா தீபாவளி முடிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்...

அது போகட்டும்...

உண்மையை மறைக்கிறதும்,பொய் சொல்றதும் ரெண்டும் ஒண்ணா??

(... Hypothetical
கொஸ்டின்..:(ஹீ...ஹீ)))    )

ம்ம்...ரெண்டும் வேற வேற பிரிக்க முடியும் அதன் சூழ்நிலையை   பொறுத்து இல்லையா??
 
(ஆமாம்...நம்மூரு அரசியல் வாதி சரியா இந்த ரெண்டையும் யூஸ் பண்ணமுடியும்...:))   )
இப்போ ஒரு பத்து நாளைக்கு முன்னாடி கோவையில் நடந்த குழந்தைகள் கடத்தல் கொலை நம்ம எல்லாருக்கும் தெரியும்...நிச்சயம் எல்லாருக்கும் ஏக வருத்தம் தான்...ஊடகம் தான் தகவலை ஒன்னு விடாமல் சொன்னது...அதெல்லாம் சரிதான்...ஆனால் .......

ம்...சில நேரங்களில் சில உண்மைகள் மறைக்கறது தப்பு இல்லைன்னு நினைக்கிறேன்...நல்லா கவனிக்கணும்..மறைக்க்கலாம்
னு தான் சொன்னேன்..பொய் சொல்லலாம்னு சொல்லலை...


இன்வெஸ்டிகேசன் பண்ண பண்ண ஒரு மனித மிருகம் அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் பண்ணி கொலைபண்ணி இருக்குனு ஊடகம் வெளியிட்டது...ம்ம்...அதை படிச்சபிறகு நமக்கு அந்த மனித மிருகங்கள் மேலே ஆத்திரம் வருவது ஒரு புறம் இருக்கட்டும்...ஆனால் அந்த குழந்தையின் பெற்றோர் க்கு...ம்ம்...இது ரொம்ப உணர்வுபூர்வமான மெல்லிய விஷயம் இல்லையா...தன்குழந்தை இப்படி தான் கொலை செய்யப்பட்டு இருக்காங்கிற அதீத வேதனை உலகம் பூராவும் இந்த விஷயம் பறைசாற்ற படுறதும் கூடுதல் வேதனை தான்  தந்திருக்குங்க்றது என் தனிப்பட்ட கருத்து...

(ம்ம்...எரியிற கொள்ளியில் இன்னும் எண்ணெய் விடுற மாதிரி தான்...)

NEWS- Anything NEW, that is NEWS  

இப்படி தான் ஊடகம் தன் சோலி பார்க்குது..மதுரையில் ஒரு ஆறு மாசம் முன்னாடி ஒரு பெண் கொலை செய்யபட்டாங்க...கணவர் வெளிநாட்டில் வேலை பார்கிறாங்க...இந்த பெண் கொலை செய்யப்பட்டவுடன் ஏகப்பட்ட விஷம கணிப்பு ஊடகத்திற்கு...தனியா இருந்த பெண் இறந்ததால் இஷ்டத்துக்கு அந்த பெண்ணை பத்திய தவறான கருத்துக்கள் சூடான செய்திகளாக  தினம் தோறும் பத்திரிகையில் வெளியிட்டது ...உண்மை ,பொய் அது எதுன்னு பிரச்சனை இல்லை...ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் ஊரை விட்டே போய்ட்டாங்க ..காரணம் மீடியா பண்ண அசிங்கமான கணிப்புகள் தான்..

(சர்க்குலேசன்...)


இதேமாதிரி சென்னையில் எங்கள் குடும்ப நண்பரின் நண்பருக்கும் இந்த கசப்பான அனுபவம் நடந்துருக்கு...நகைக்காக அவர் மனைவி கொல்லப்பட,வழக்கம்போலே அசிங்கமான கணிப்புகள்...இப்போ அவர் தன் வயதுக்கு வந்த மகள்,மகனுடன் வெளி மாநிலம் போயிட்டதா குடும்ப நண்பர் வருத்தமாய் சொன்னார்...

அதனாலே உண்மைகள் பொய்களா திரிக்கபடனும் சொல்ல வரல ...ஆனால் சில உண்மைகள் மறைக்கபடனும் இல்லாட்டி அதை மேற்கொண்டு பப்ளிசிட்டி க்காக திரிச்சு சம்பந்த பட்ட குடும்பங்களின் மனசை நொறுக்கிற மாதிரி இல்லாமல் இருந்தாலே நல்லது தான்...


(நயன்தாரா விஷயம் பரபரப்பா வந்துசுனால் அந்த நடிகைக்கு மார்கெட் வால்யு கூடும்..ஆனால் சராசரி மனிதர்கள் ன்னால்  வாழ்க்கையின் நடைமுறையே  கேள்வி குறியாக்கவும் செய்யுது)

 
இன்னைக்கு  நான் முதலில் சொன்ன மனித மிருகத்தில் ஒன்னு என்கவுண்டரில் கொல்லப்பட்டு இருக்கு...ரொம்ப நல்லவிஷயம்தான்  ...ஆனால் இங்கே நிச்சயம் உண்மை மறைக்கப்பட்டு இருக்கும்...என்கவுன்ட்டர்ங்க்றது உட்டாலக்கடி நாடகம்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்...ஆனால் ஊடகம் மறந்தும் இதுபத்தி கதை திரிக்காது....
(..சரி..சரி ரிலாக்ஸ்...)

  

26 comments:

LK said...

ஆனந்தி , சரியா சொல்லி இருக்கீங்க. சில சமயங்களில் உண்மை வெளி வர வேண்டாம்

ஆனந்தி.. said...

@LK

thanks LK

ஆயிரத்தில் ஒருவன் said...

ஊடகங்களின் தவறான கணிப்புகள் நிறைய பிரச்சனைககளை உண்டாக்குகிறது உதாரணமாக மதுரை எஸ். எஸ் காலனியில் மகளுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்த வழக்கில் கூட பத்திரிக்கைகள் அந்த பெண்ணை பற்றி தவறான செய்தி வெளியிட்டு களங்கப்படுத்தியது பிறகு அப்பெண்ணின் காதலன் வெளி நாட்டில் இருந்து வந்து தெளிவுபடுத்திய பிறகே அந்த பெண் மீது தவறு இல்லை என்று தெரிந்தது என்று தான் இந்த ஊடகங்கள் திருந்துமோ....?

Chitra said...

செய்திகளை வெளியிடலாம். திரித்து - பூச்சூட்டிய பின் அல்ல.

kavisiva said...

ஊடகங்கள் சர்குலேஷனுக்கும் டிஆர்பி ஏறவும் என்ன வேண்டுமானாலும் செய்யும்.

என்கவுண்டர் என்ற உட்டாலக்கடி நடந்தாலும் தவறில்லையோன்னு நம் நாட்டு சூழல் சிந்திக்க வைக்குது ஆனந்தி! வீடியோ சகிதம் குற்றம் நிரூபிக்கப் பட்ட கசாப் இன்னும் அரசாங்கச் செலவில் இருக்கும் போது விரக்திதான் வருது. அந்த இடத்துலயே இவனுங்களை போட்டுத் தள்ளிட்டு போய்கிட்டே இருக்கணும். மனித உரிமை மண்ணாங்கட்டி உரிமை எல்லாம் இப்போதைக்கு உதவாது :(.

komu said...

ஆனந்தி கரெக்ட்பா.சிலசமயங்களில் உண்மை வெளி வரவேண்டாம்தான்.

சிவா said...

சில விஷயங்களை சொல்லி ரணப்படுவதை விட சொல்லாமல் சுகப் படுவதே மேல!

Avargal Unmaigal said...

Never lie to your close one....
Truth may hurt a while but a lie
will spoil the essence of
closeness for the lifetime.

ஆனந்தி.. said...

@ஆயிரத்தில் ஒருவன்
ஆமாம் ஆயிரத்தில் ஒருவன்...இந்த கொலை பத்தி ரத்த ருசியில் மதுரை மச்சான்ஸ் இல் கூட குறிப்பிட்டு இருந்தேன்...அந்த டைம் பேப்பர் இல் அந்த பொண்ணை நாரடிச்சுருந்தாங்க...நீங்க சொன்னமாதிரி அதுக்கப்புறம் உண்மை ரொம்ப வலிச்சது...பாவம் அந்த பெண் கல்லறைக்கு போனபிறகும் எவ்வளவு அவப்பெயர்...நான் இதை நினைச்சு இருந்தேன்...ஆனால் இந்த பதிவில் சேர்க்க விட்டு போச்சு...நன்றி ஆ.ஓ.!!

ஆனந்தி.. said...

@Chitra
உண்மை சித்ரா!!திரிச்சு வெளியிடுறது தான் மீடியா க்கு அல்வா சாப்பிடுவது மாதிரி ல...!!

ஆனந்தி.. said...

@kavisiva
ம்ம்...காவல்த்துறை பண்ற உருப்படியான புண்ணியம் இந்த என்கவுன்டர் மட்டும் தான் நினைக்கிறேன்...ஆனால் புலனாய்வு த்துறை பண்ற எதுவும் மீடியா வால் சரியா கணிக்க முடியாது...அதானாலே பெருசா எழுத முடியாது...ஆனால் ஒரு மாரியாம்மாலோ,தேவியோ செத்துபோயட்டால் அவங்க இஷ்டம் தான் கதை,திரைகதை எல்லாம்....அதான் கவி எரிச்சல் வருது...ஆயிரத்தில் ஒருவன் சொன்னது ரொம்ப உண்மை..மதுரையில் அந்த டைம் அந்த பொண்ணை பத்தி தப்பா பேசாதவங்க இருக்கவே முடியாது...அவ்வளவு மீடியா எஸ்டாபிளிஷ்மென்ட் !!

ஆனந்தி.. said...

@சிவா
ஒரே வார்த்தையில் தெளிவா சொல்லிட்டிங்க சிவா...!!நன்றி!!

ஆனந்தி.. said...

@Avargal Unmaigal
im..sometimes truth gets pain also..!!

ஆமினா said...

இப்படி மீடியா நடக்குறதுனால தான் உண்மையை சொல்ல பலரும் முன்வருவதில்லை. எதாவது சொன்னா தான் நம்மையும் தொடர்பு படுத்தி எழுத ஆரம்பிச்சுடுறாங்களே!

நல்லா சொன்னீங்க ஆனந்தி!

ஆனந்தி.. said...

@ஆமினா
மீடியா ட்ட நாம எங்க சொல்றது..அவங்களே பரபரப்புக்கு கதை எழுதுறது தானே பிரச்சனையே...நாம சொன்னால் கூட அதிலும் கொஞ்சம் பரபரப்பை சேர்த்துப்பாங்க...விபத்து எங்காவது நடந்தால் சாவு எண்ணிக்கையில் கூட நிறைய பத்திரிகையில் வித்யாசம் இருக்கும்...கவனிச்சுருக்கிங்கள ஆமினா...கூட எண்ணிக்கையில் கவர் ஸ்டோரி இருந்தால் உடனே மக்கள் படிப்பாங்கள...அதுக்காய் அதிலும் கூட உடான்ஸ் விடும் ஊடகமும் நம்மை சுத்தி இருக்கு...

சௌந்தர் said...

இந்த விசயத்தில் பல் உண்மைகள் மறைந்து இருக்கு (இருக்கலாம்)

இராமநாதன் said...

இங்கே கொதிப்புற்ற அனைவருக்கும் வணக்கங்கள்..
மீடியாக்கள் கதைகளை கட்டுவது..???
அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், சம்பந்தபட்ட போலிஸ்காரர் மற்றும் இன்னும் பலர் தரும் கருத்துக்களையே மீடியாக்கள் பிரதிபலிக்கின்றன..
அவர்களின் போதாத காலம் அது உண்மையற்றதாக அமைந்தால் சொன்னவர்கள் பின்வாங்கி கொள்கிறார்கள்..
ஆமாம் அந்த எண்கவுண்டரில் மறைக்கப்பட்ட உண்மைகள் நிறைய இருக்கும்..
எதற்காக அதை வெளியிடவேண்டும்.??? மனிதமிருகத்தை அழித்ததில் மகிழ்ச்சி தானே.. வதம் பண்ணியதை வெளியில் விட்டால் மனித உரிமை கமிஷன் பையை தூக்கிட்டு வந்திடுவாங்க.. அரக்கனை அழித்ததற்கு தண்டனையா.??? இதற்கு நாம் துணை போகலாமா... கோவையில் நடந்த அந்த சம்பவத்தின் உண்மையை எழுதியதில் வருத்தம் தெரிவித்திருந்தீர்கள்...உண்மைகள் பலரின் மனதை நெருட கூடும்.. இருப்பினும் அது உண்மைதானே.!!! பச்சிலம் குழந்தையை கூட காமத்திற்கு கட்டுக்கொள்ளும் காம வெறியன்கள் இருக்க தான் செய்கிறார்கள்.. அந்த உண்மையை மீடியாக்கள் பிரதிபலிக்காமல் விட்டிருந்தால் இவ்வளவு பெரிய கோபம் உருவாகியிருக்காது.. நடுரோட்டில் அனைவரும் மத்தியில் தூக்கில் போட வேண்டும் என்று அனைவரும் கூறி இருக்கமாட்டார்கள்.. அந்த கொடூரனும் ஓராண்டு, ஈராண்டு சிறைபெற்று வெளியில் வந்திருப்பான்.. உண்மையில் இதற்கு தூக்கில் போட சட்டத்தில் அனுமதி இல்லை.. அதனால் என்கவுண்டர் என்னும் சிறந்த செய்கையை செய்வதுக்கு மீடியாக்கள் வெளியிட்ட அந்த செய்தியே காரணம்.. அந்த செய்தியால் அச்சிறுமியின் பெற்றோர் மனுளச்சலுக்கு ஆளானதைவிட நம் குழந்தைக்கு நடந்த அநீதியை தட்டி கேக்க எத்தனை பேர் வருகிறார்கள், இனி யாருக்கும் இது நடந்திடகூடாது என்ற எண்ணமே இருந்தது.. இது நான் கேட்டறிந்த உண்மை.. உண்மைகள் பிரதிபலிக்கும் மீடியாக்களை கொஞ்சம் உண்மையை சொல்லவிடுங்கள்..

ஆனந்தி.. said...

@இராமநாதன்
ராமநாதன் முதலில் என் நன்றியை பிடிச்சுக்கோங்க...நல்லா கவனிங்க நான் கோவை விஷயத்தில் என்கவுன்ட்டர் க்கு வருத்தபடலை...அதை விட நல்ல தண்டனை அந்த மிருகத்துக்கு கொடுக்க முடியாது....நான் சொல்ல வந்தது என்கவுன்ட்டர் விஷயத்தில் மீடியா பெருசா மூக்கை நுழைக்க முடியாது...ஆனால் சாதாரண பொது மனுஷி/மனுஷன் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிகமா கட்டுக்கதை கட்டும் ஊடகமும் நம்மை சுற்றி இருக்குனு உணர்த்த விரும்பினேன்...
ஊடகம் நல்ல விஷயங்களுக்கும் கட்டாயம் துணை இருக்கு...அதில் எந்த சந்தேகமும் இல்லை...ஆனால் சில,பல கட்டுக்கதைகளில்,மீடியா எக்ஸ்போஷர் ரில் சிக்கி மனசிதைவு ஆனவங்களும் இருக்காங்க ராமநாதன்....that i meant.....

ஆனந்தி.. said...

@இராமநாதன்
மீடியா தாரளாமாய் உண்மைய சொல்லட்டும்..பட் கோவை குழந்தை விஷயத்தில் அந்த குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்ததுங்கிரதை புலனாய்வு த்துறை மீடியா க்கு வெளியிட்டு இருக்க வேணாங்கிறது என் தனிப்பட்ட கருத்து...நான் ஒரு பெற்றோர் மனநிலையில் இருந்து மட்டுமே யோசிச்சு சொல்றேன்....குழந்தைகள் கடத்தி கொல்லப்பட்டதை ஊடகம் தெரிவிச்சபோதே பொதுமக்கள் மத்தியில் அதிக கொந்தளிப்பு உருவாயிருச்சு இல்லையா ராமநாதன்? சில மென்மையான உண்மைகள் எல்லாத்தையும் இழந்த பெற்றோருக்கு இன்னும் தர்மசங்கடத்தை கொடுக்கும் அப்படிங்கிறது மட்டுமே என் தாழ்மையான கருத்து...மீண்டும் நன்றிகள் ராமநாதன்...!!!

பிரபு . எம் said...

விளையாட்டா சுழற்றியடித்துக் கொண்டுபோய்... அழுத்தத்தையும், கோபத்தையும், ஆற்றாமையையும் மாற்றமுடியாத நடைமுறையையும் கேஷுவலா சொல்லிட்டுப் போயிட்டீங்களே..

உங்க ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனந்தி :)

அன்புடன்

பிரபு எம்

ஆனந்தி.. said...

@பிரபு . எம்
நன்றி பிரபு :)))

ஆனந்தி.. said...

@சௌந்தர்
கண்டு பிடிசுட்டிங்க போலே தம்பி சவுந்தர் I.P.S அவர்களே..))))

BACQRUDEEN said...

சம்பந்தப்பட்ட பென்னின் மரணம் குறித்து மீடியாக்கள் வெளியிடும் செய்தி பெற்றோர்களுக்கு எரியிற கொள்ளியில்...”
இதற்கு ஆமா போடலாம்தான் அதில் எவ்வித எவ்வித ஐயமும் இல்லை, இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் ஒரு தவறு,
ஒரு தண்டனை, தவறு என்ன, தண்டனை என்ன? இரண்டுமே அறியப்படுதல் சற்றே அவசியமான ஒன்றே ஆகும்,
கொலை செய்தவன் மீது அணைவரும் கோவத்தை கொப்பளிப்பது, மிருகம் என்று அவனை உருவகப்படுத்தி சொல்வது(மிருகங்கள்
கூட இவ்வளவு கொடியனவாக இருக்க முடியாது), அவன் மீதான என்கவுண்டர் நியாயமானதே என்று தோன்றூவதும்,
இவ்வாறாக சில விஷயங்கள் இங்கே தீர்க்கமாக சொல்லப்பட்டது இதெல்லாமே அவன் செய்த தவறுகள் வெளிப்பட்டதால்தான் இல்லையா?
மேலும் அவனுக்கு இந்த தண்டனை போதாது என நினைக்க தோன்றுவதும் அவன் செய்த தவறு அறிவிக்கப்பட்டதால்தான் இல்லையா?
இந்த கொடுமை அந்த பென்னுக்கு நடந்தது என்று பார்க்கப்படும்போது வேதனை, அனுதாபம், இந்த கொடுமையை அந்த மிருகம் செய்தது என்று பார்க்கப்படும்போது
கோவம், கொந்தளிப்பு, ஒருத்தனுக்கு தண்டனை வழங்கப்பட்டது மட்டுமே வெளியிடப்பட்டிருந்தால்
அதை பத்தி இங்கே விவாதம் நடந்தே இருக்காது, அந்த பென்னின் நிலை செய்தியாகி வந்ததாலே இந்த விவாதம்.
நடந்தது என்ன? என்று விவரிக்கப்படும்போதும் நிஜம் புரியும்போதும் மக்களிடையே அவ்விஷயம் குறித்த நியாயம் அநியாயம்
குறித்த பார்வைகளும் ஒரு விழிப்புணர்வும் வர வாய்ப்பிருக்கிறது என்று நினைத்து மீடியாக்கள் வெளியிட்டதோ என்னவோ ...
என்றாலும் ஒரு பென் மீடியாக்களாலும் கொலைசெய்யப்படும் போது அந்த பென்னின் நிலை வெந்த புண்ணில் வேல் பாய்வது போன்றதேயாகும்.
-ஆஷிக்

டீச்சர்! டீச்சர்! கொஞ்சம் தவறு திருத்தி வெளியிடுங்களேன் ப்ளீஸ்

ஆனந்தி.. said...

@BACQRUDEEN
யப்பா சாமி...ஏதோ இலக்கியம் படிச்ச மாதிரி இருக்கு உன் கம்மேன்ட்ஸ்))) ஒரு காபி குடிச்சுட்டு ரெண்டு வாட்டி படிச்சு பார்த்தேன்..ஏதோ புரிஞ்சது...நீ என்னமோ சொல்லவர...ஏதோ கொஞ்சம் புரியுது..இரு...திருப்பி படிக்கிறேன்...ஹ ஹா.....

ஆனந்தி.. said...

@BACQRUDEEN
/ன்று விவரிக்கப்படும்போதும் நிஜம் புரியும்போதும் மக்களிடையே அவ்விஷயம் குறித்த நியாயம் அநியாயம்
குறித்த பார்வைகளும் ஒரு விழிப்புணர்வும் வர வாய்ப்பிருக்கிறது என்று நினைத்து மீடியாக்கள் வெளியிட்டதோ என்னவோ .../

ஆஷிக்..உனக்கும் சொன்னதையே திருப்பி சொல்றேன்...நிஜங்கள்,உண்மைகள்,விழிப்புணர்வு எல்லாமே அறிவு படி சரி...சரி..சரி..!!ஆனால் பகுத்தறிவை மீறி மனசின் மென்மையான உணர்வுகளை அந்த குழந்தையின் பெற்றோர் தரப்பில் மட்டுமே யோசிச்சு சொல்றேன்...

Terry said...

ஆனந்தி கரெக்ட்பா.சிலசமயங்களில் உண்மை வெளி வரவேண்டாம்தான்.