இந்த மெயில் நம்மில் நிறைய பேருக்கு வந்துருக்கலாம்..நிறைய பதிவர்கள் கூட இதை தங்கள் ப்ளாக் இல் வெளியிட்டு இருக்காங்க....உங்களில் நிறைய பேர் வோட்டும் போட்டு இருக்கலாம்...
ஆனால் என் பதிவில் நிச்சயம் ஒரு சிறப்பு இருக்கு..ஏன் என்றால் இந்த நாராயண் கிருஷ்ணன் எங்க ஊருகாரர்..அதைவிட இன்னும் சிறப்பாய் சொன்னால் எங்க ஏரியா காரர்...அடிக்கடி நான் இவரை பார்த்து இருக்கேன்...
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத ஒரு வீடு தான் அக்ஷயா தொண்டு நிறுவன கட்டிடம். அது ஒரு பெரிய வீடு..எந்நேரமும் யாராவது சமைக்கும் நடமாட்டம் தெரியும்...ஆம்னி ஒன்னு எப்பவும் வெளியே நிக்கும்...அதில் சாப்பாடு பார்சல் மூட்டை மூட்டையா எடுத்து கொள்ளப்பட்டு, அந்த தொண்டு நிறுவன ஊழியர்கள் கிளம்புவாங்க...கோவில்,சர்ச் வெளியே நிறைய மனநிலை பாதிக்க பட்டவங்க இருப்பாங்க..அவங்களை சுத்தபடுத்தி சாப்பிட வைப்பாங்க...அப்புறம் ரொம்ப வயசான பிளாட்பார வாசிகளுக்கு உணவு பொட்டலம் கொடுப்பாங்க...அடிபட்ட தெருவோர நாய்க்குட்டிகளுக்கு கூட சாப்பாடு வைப்பாங்க...கோவிலுக்கு வெளியே புத்தகம் விக்கும் சிறுமி/சிறுவர்களை நாம அவ்வளவாக கவனிக்க மாட்டோம்...இவங்க அவங்களுக்கு சாப்பாடு பார்சல் கொடுப்பதை நிறைய வாட்டி பார்த்து இருக்கேன்..ரிக்ஸா ஓட்டி களைத்த ஊழியனுக்கும் சாப்பாடு உண்டு..
மக்கள் தொடர்பு படிப்பு சம்மந்தமாய் மதுரை காமராஜ் பல்கலை கழகத்தில் நான் ஒரு வோர்ஷாப் இல் கலந்து கொண்டபோது இவரின் தொண்டு நிறுவன க்ளிப்பிங்க்ஸ் உம் பெரிதாய் காமிச்சாங்க எங்களிடையே ..அப்போ கூட பெருசா நான் நினைக்கலை...(ஒரு ஆறு வருடங்களுக்கு முன்பு)
இதுல என்ன ஒருவிஷயம்னால் இந்த ஏரியா வில் நாங்க பல வருஷமா இருந்தும் எந்த ஆர்ப்பாட்டமும் ,எந்த பப்ளிசிட்டி யும் அந்த நிறுவனத்தில் நான் பார்த்ததே இல்லை..எங்க கிட்டே எல்லாம் ஒரு அஞ்சு பைசா கூட நன்கொடைன்னு அவங்க வாங்கினதும் இல்லை..
நேற்று கூட அந்த பக்கம் போயி பார்த்தேன்...எனக்கு வோட்டு போடுங்கன்னு எந்த பிளாக்ஸ்,banner ரும் அந்த பக்கம் மருந்துக்கு கூட இல்லை..உண்மைய சொன்னால் எனக்கே ஈமெயில் பார்த்து தான் cnn அளவுக்கு பிரபலம்னு தெரிஞ்சுட்டேன்..நிச்சயமா இது தான் ஈடில்லாத தொண்டுனு சொல்ல முடியும்...அதுவும் எங்க ஊரில் விளம்பரம்,போஸ்டர்,கட் அவுட் களுக்கிடையில் வாழும் எனக்கு இந்த செய்தி மதுரை யில் கூட எந்த அளவுக்கு ரீச்ஆய்ருக்குனு தெரில...லோகல் செய்தி தாள் எதிலுமே இது பத்தி வரவே இல்லை..மீனாட்சி அம்மன் கோவில் உலக அதிசயங்களில் வரணும்னு முன்னுரிமை கொடுத்தவங்க இந்த மாதிரி விஷயங்களுக்கு எல்லாம் ஏன் தள்ளி வைக்கிறாங்கன்னு தெரில...
வோட்டு நவம்பர் 18 வரை போடலாம்..முதன்முதலாய் ஒரு நல்லவிஷயத்துக்காக ,மனசார போடலாம்...கூமூட்டை அரசியல் வியாதிகளுக்கெல்லாம்..சை..அரசி
தயவு செஞ்சு..மடி ஏந்தி..இப்படி எல்லாம் வார்த்தை உபயோக படுத்த நான் விரும்பல..ஒரு தொண்டுமனிதனுக்கு நாம் போடும் வோட்டு அவன் சேவையில் இன்னும் பல படி உயர்த்தும்னு நம்புறேன்..எதுக்கு பிச்சை எடுக்கும் தொனியில் கேக்க வேண்டும் ...
நீங்க இதை அங்கீகரிக்க ஆசைபட்டால் உங்களோட எத்தனை வோட்டுகளையும் அவருக்கு கொடுத்துட்டு போங்க ஒரு அன்பு பரிசாக!!that z all!
அன்புடன்,
ஆனந்தி...
anyway ...ஈமெயில் விஷயத்தை அப்படியே கீழே கொடுத்து இருக்கேன்...மறக்காமல் வோட்டு போட்டு போங்க..
நீங்களும் நானும் செய்யத் தயங்கும் சமூகப் பணியை விருப்பத்தோடு கடந்த எட்டு ஆண்டுகளாக தடையின்றி செய்து வருகிறார் மதுரையை சேர்ந்த திரு.நாராயணன் கிருஷ்ணன் அவர்கள்.
இவரின் இந்த தொண்டை அங்கீகரித்து CNN நிறுவனம் உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களில் ஒருவர் முதலாவதாக வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார். இந்த சாதனைத் தமிழன், இந்தியன் வெற்றி பெற நாம் நம் நேரத்தில் கொஞ்சத்தை செலவிட்டு அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்பாக கேட்டுக் கொள்கிறேன்.
ஓட்டளிக்க செல்லவேண்டிய பக்கம்
http://heroes.cnn.com/vote.
ஒருவர் எத்தனை ஓட்டு வேண்டும் என்றாலும் செய்யலாம். கட்டணம் எதுவும் இல்லை. நம் நேரம் மட்டுமே தேவை. தயவு செய்து ஓட்டு அளிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அப்படி என்ன சாதனை செய்துட்டார்னு பார்க்கறீங்களா? ரோட்டில் மனநலம் குன்றியவர்களைப் பார்த்தால் நாம் என்ன செய்வோம். பரிதாபப் படுவோம் அல்லது ஒதுங்கி செல்வோம். ஆனால் இவர் கடந்து எட்டு ஆண்டுகளாக இது போன்ற 400பேரை தினந்தோறும் தேடிச்சென்று மூன்று வேளையும் உணவளித்து ஊட்டி விடுகிறார். ஒரு சமையல் கலை நிபுணரான இவர் தனக்கு வெளிநாட்டில் கிடைத்த வேலையை உதறி விட்டு இப்பணியைச் செய்கிறார். வெளிநாட்டுக்கு கிளம்புவதற்கு முன் ஒரு முதியவர் பசியால் தன் மலத்தையே உண்ட காட்சி இவரை பாதித்து விட்டது. வேலையை தூக்கி எறிந்து விட்டு அன்றிலிருந்து இப்பணியை செய்து வருகிறார். தினந்தோறும் 100சதுர கிலோமீட்டர் பரப்பலவில் உள்ள மனநலம் குன்றியவர்களுக்கு வீதி வீதியாக தேடிச் சென்று மூன்று நேரமும் உணவளிக்கிறார். இதுவரைஒரு கோடியே இருபது லட்சம் உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளார்.
இந்த மாமனிதரை வெற்றிபெறச் செய்வது இந்தியராகிய நம் ஒவ்வொருவரின் கடமை.
தயவு செய்து ஒட்டு போடுங்கள். மீண்டும் அந்த பக்க முகவரியை கொடுக்கிறேன்
http://heroes.cnn.com/vote.
(feedback: நேத்து (27.10.10) இந்த போஸ்ட் டில் டில் லோக்கல் செய்தி தாளில் இந்த மனிதர் பத்தி எதுவும் வரலைன்னு சொல்லி இருந்தேன்..இன்னைக்கு காலையில் வந்து இருந்தது இவரை பத்தி...ஆனால் cnn il முதல் பத்துக்குள் வந்ததை பத்தி மட்டுமே சொல்லி இருந்தது ,அந்த 10 க்குள் நடக்கும் இந்த ஈமெயில் வோட்டு பற்றி எதுவும் காணோம்...ம்ம்..இது தான் அரைகுறை ஊடக வேலை ங்கறது..ஒருவேளை நாமலே classifieds இல் காசு கொடுத்து இதுக்கும் விளம்பரம் பண்ணனும் போலே...(( ) )
20 comments:
ஓட்டு போட்டு விட்டேன் வாழ்த்துக்கள்...
@சௌந்தர்
ஓகே டா தம்பி!
ithupontra manitharkal natpu irunthal....
naamum manitharkal aavom
எல்லோருக்கும் முன் மாதிரியாக இருக்கும் அவருக்கு வாழ்த்துக்கள்!
நானும் ஒட்டு போட்டுவிட்டேன். தினசரி நிறைய ஒட்டு போடுவேன், மற்றவர்களை ஒட்டு போடுமாறு கேட்டு கொள்வேன். முடிந்தால் அவர் முகவரி போட்டால் மனது உள்ளவர்கள் டொனேஷன் கொடுக்க வழி தெரியும். உங்களது சேவையும் பாராட்டதக்கது. இல்லையென்றால் எங்க்களை போல உள்ளவர்களூகு தெரியவாராது. நன்றீ வாழ்க வளமுடன்
என்ன தோழி...உங்க ஊர்காரர்...உங்க ஏரியாகாரர் என்று சொல்றீங்க...நீங்கள் தானே இவரை பற்றி முதல் பதிவை போட்டு இருக்கணும்.....!? :))
அந்த நல்ல மனிதரை நேரில் பார்த்திருகிறீர்கள்....மகிழ்கிறேன்...! உங்கள் பதிவிற்கு நன்றி ஆனந்தி. வோட் தினம் கணக்கில்லாமல் போட்டு கொண்டிருக்கிறேன்பா....! இன்னும் போடுவேன்....!
@Kousalya
உண்மை தான் கௌசல்யா..போஸ்ட் போட இப்ப தான் முடிந்தது...நன்றி கௌஸ்!
வோட்டு போடும்..போடப்போகும் அனைவருக்கும் நன்றிகள்!!
நானும் இதை பதிவிட்டுள்ளேன் ஆனால் எனக்கு தெரியாத சில விஷயங்கள் உங்கள் பதிவில் உள்ளது. உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது தான்.
@சசிகுமார்
நன்றி சசி..நான் உங்களின் வந்தேமாதர ப்ளாக் இன் தீவிர விசிறி..)))
நா.. ஓட்டு போட்டேன்..
@தோழி
சரிங்க தங்கச்சி :-))
.. ஓட்டு போட்டுட்டேன் தாயீ...a>
@தாராபுரத்தான்
நன்றி பொன்.பழனிச்சாமி சார்!!
நானும் ஓட்டு போட்டேனே.. கள்ள ஓட்டு போடா ஏதும் வழி இருக்கா?
நிச்சயம் பிரமிக்க வைக்கும் மனிதர்தான். இவரைப் பற்றி நமது வலைப்பக்கங்களில் பல நாட்கள் முன்னரே செய்தி வந்தது.
இவர் போன்ற மனிதர்களைப் பார்க்கும்போது "தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்ற அவ்வையின் வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன.
@Dharshi
நல்ல மனிதருக்கு நல்ல வோட்டே போடலாம்..இங்கே கள்ள வோட்டுக்கே வேலையே கிடையாதே அன்பு தங்கை தர்ஷி!! :)))
@V.Radhakrishnan
ஆமாம் ராதா சார்...இவரை பற்றி ஈமெயில் ப்ளாக் கில் நிறைய செய்திகள் வருது...எனக்கே ஈமெயில் இல் வந்து தான் தெரிஞ்சுட்டேன்...
@Rajesh kumar
நன்றி ராஜேஷ்..நீங்க சொன்ன வரிகள் நல்லா இருந்தது...
Post a Comment