நீங்க ரொம்ப நல்லவங்களா..வல்லவங்களா..தெகிரிய சாலியா இருந்தால்..மேற்கொண்டு அடுத்த பாரா வரிகளை படிச்சுட்டு நகருங்க...இல்ல..அதெல்லாம் முடியாது..என்னை மாதிரி நீங்களும் டம்மி பீஸ் னு ஒத்துகிட்டேங்கனால்..அப்படிக்கா அடுத்த பாரா ஓடி போய்டுங்க..
"இறையாமையின் நிகழ்வுகளில், சில உந்துதலுக்கு கட்டுப்பட்டு உயிர் நோக்கி உறங்கும் உச்ச வேளையில்..பிறக்காத பிறையான ஒரு உச்சி வெம் பொழுதில்..இறவாமல் இறந்தும் யாசிக்கும் என் உடல் தழுவும் நாசி முனை ...."
இதாங்க...இதே தான்..இந்த மாதிரி தமிழில் தான் நான் அட்டு மக்கா இருக்கேன்..இப்ப பாருங்க நானே எழுதிட்டு ..ஒருவாட்டி இப்ப படிச்சு பார்க்கிறேன்..அட மாரியாத்தா..என்னனு எனக்கே புரியல..உங்களுக்கும் புரியாதுன்னு தெரியுமே..
(டிஸ்கி:: இப்ப என்ன செய்விங்க..இப்ப என்ன செய்விங்க..??)
இப்ப எதுக்கு இந்த புலம்பல் னு கேக்குறிங்களா??
இதோ..அந்த கொடுமைய தான் சொல்லபோறேன்..
இப்ப ஒரு பிளாஷ் பாக் போறோம்..
அட இந்த கருமம் வேறயான்னு ஓடி போயடாதிங்க..பொறுமை. பொறுமை..அது எருமைய விட அவசியம் ..
(டிஸ்கி:: பில்டப் பலமா இருக்கே ..கொஞ்சம் ஓவரா இல்ல இதெல்லாம்??...)
அப்போ எனக்கு ஒரு 8 வயசு இருக்கும்..தரையில் எப்பவுமே காலு இருக்காது..(பேய் நடமாட்டம் சாஸ்தி தான் )எப்பவுமே பறந்துட்டே இருக்கனுங்கிற பட்டாம்பூச்சி மனசு(எப்புடி நாங்களும் வருணிப்போம்ல ..) எனக்கு அந்த வயசுல என்னவாகனும்னு கேட்டால் மத்த நல்லபுள்ளைங்க சொல்றமாதிரி டாக்டர் ஆகோணும்..டீச்சர் ஆகோணும்.. னு எல்லாம் சின்னபுள்ள தனமா சொல்லவே மாட்டேனே..மாட்டு வண்டி ஓட்டனும்..லாரி ஓட்டனும்..கோனாரு அப்பத்தா மாதிரி எருவாட்டி தட்டனும்,,ரேஞ்ஜில் தான் நம்ம கனவு,லட்சியம் ன்னு ஒரு உயர்ந்த பாதையில் இருந்தது..
(டிஸ்கி:: ஏன் இந்த எருவாட்டி எல்லாம் ரவுண்டு..ரவுண்டா இருக்கு..பூமி ரவுண்டுக்கும்..இதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா?? )
அப்போ தான் மண்டைக்குள்ளே பல்பு ".மடச்சி..சைக்கிளே இன்னும் ஓட்ட தெரில..நீ எப்புடி மாட்டு வண்டி..லார்ரி எல்லாம்...னு.."
அப்போ தான் அந்த மெடிக்கல் மிராக்கில் நடந்துச்சு....என் அத்தை பையன் சம்மர் லீவுக்கு எங்க வீட்டுக்கு வந்தான்..கோழிய அமுக்கிர மாதிரி அமுக்கி..சைக்கிள் கத்துக்குடுக்க டீலிங் பண்ணியாச்சு ..
குரங்கு பெடல் போடும்போது(ஒரு குரங்கே..குரங்குபெடல்
போட்டதாம்..!!)) அவனும் பின்னாடியே ஓடி வருவான்..அப்போ தெருவில் 4,5 நாய்கள் பின்னாடியே தொரத்தும்..இதை அவன்கிட்டே சொல்ல கொஞ்சம்சோம்பேறியா இருக்கும்..அதுக்குள்ளே நாய்கள் எங்களை ரீச் பண்ணிரும்...நான் டமால் ன்னு சைக்கிள் ஐ போட்டுட்டு ஓடி போயிருவேன்..நாய் கடுப்பாகி அப்பாவி அத்தை பையனை கடிச்சு வச்சுரும் ..இது மாதிரி ரெண்டு தடவை நாய்க்கு நல்ல பிஸ்கட் ஆ இருந்து தான் ஒரு சிறந்த தியாகி னு நிருபிச்சிருக்கான்
அப்புறம்..அப்பத்தா காலுக்கு தேய்க்கும் எண்ணையை(வெளக்கெண்ணை+வேப்பெண்ணை) எடுத்து பிரண்ட்ஸ் க்கு அப்பளம் சுட்டு தந்த (அது மட்டும் தான் அந்த வயசில் தெரியும்)கதை லாம் எதுக்கு உங்களுக்கு..
(டிஸ்கி:: என் அன்பார்ந்த கழக கண்மணிகளே!!அப்பளம் 'கப்பு' தாங்காமல் அன்று ஓடி போன நீங்கள் எங்கே..எங்கே...?/))
இப்படியே போயிட்டு இருந்த என் வசந்த வாழ்வில்..பொறாமை பட்டு என் தாத்தா என்னை கொண்டு போயி விட்ட இடம் நூலகம்!!
(டிஸ்கி:: அய்யோயோ..அப்போ லைபிரரி கதி..ம்..அப்புறம்??)
துவக்கத்தில் ராணி காமிக்ஸ் இல் ஆரம்பிச்ச பழக்கம்,அப்படியே அம்புலிமாமா,பாலமித்ரா,கோகுலம்,ரத்னபாலா னு தொடருச்சு..அப்புறம் பள்ளி,வீடு,நூலகம் னு மட்டுமே கதியானேன்
(டிஸ்கி:: ரொம்ப ஸீன் போடுறமாதிரி இருக்கே...)
(டிஸ்க்கி:: சரி சரி..இப்ப என்ன தான் சொல்ல வர..??)
ஆங்..!!அப்படியே படிக்கும்போது சில புத்தகங்கள் தட்டுப்படும்..
அதுல முதல் 2 வரிய படிச்சவுடனே..
"மூளை குழம்பி,கண்கள் நெக்குருக..நாபிக்கமலம் நடுநடுங்க..""
(டிஸ்கி:: எச்சூச்மீ..என்னாச்சு??..நல்லாதானே போயிட்டு இருந்துச்சு..)
ஹீ..ஹீ..இந்த பதிவில் ரெண்டாவது பாரா வரி மாதிரியே இருக்கும்னு சொல்ல வந்தேன்..
நூலகத்தில் இந்த மாதிரி (எனக்கு)புரியாத புத்தகங்கள் யாரும் படிச்ச மாதிரியோ..வீட்டுக்கு எடுத்துட்டு போற மாதிரியோ தெரிஞ்சதில்லை..அப்பவே யோசிப்பேன்..ஏன் இப்படின்னு..??
சில புத்தகங்களை இப்படி ஏதாவது பக்கா இலக்கிய தமிழில் இருக்குமோனு கூட பயந்து இன்னும் படிக்காமலே இருக்கேன்..அப்படி பயந்தது..பொன்னர் ஷங்கர்..பொன்னியின் செல்வன்..சாண்டில்யன் கதைகள்,பல ,சில சரித்திர கதைகள் ..
பொன்னியின் செல்வன் புத்தகம் எல்லாரும் நல்லா இருக்குனு சொல்றாங்க..நிச்சயம் எனக்கு புரியற மாதிரி தான் இருக்கும்னு நினைக்கிறேன்..படிக்கோணும்..
இப்படி பயந்து ஒரு துணிச்சலாய் "ஏல..தெகிரியமாய் படில"..ன்னு சொல்லி படிச்சு அசந்தது தி.ஜா வின் "மோகமுள்"
அதே மாதிரி சில எழுத்தாளர்களின் படைப்புகள் ஓரம் கட்டப்படும்..உதாரணமாய் ராஜேந்திரகுமார் கதைகள்..அவர் எழுத்துக்களை பொண்ணுங்க படிக்க முடியாதுன்னு என்கிட்டே சொல்லிருக்காங்க..நூலகம் போகும்போதெல்லாம் பார்ப்பேன்..என்ன தான் எழுதிருக்கார்னு படிக்க ஆர்வம் இருந்தாலும்..நடிகர் பாண்டு மாதிரி இருந்த நூலகர்.."பாப்பா!....அதெலாம் நீ படிக்க
படாது"ன்னு பிடுங்கி வைத்த கோர சம்பவங்களும் நடந்து இருக்கு அப்போ..
(டிஸ்கி:: "சர்வர்..ராஜேந்திரகுமார் நாவல்..ஒரு பார்சல்...")
சமீபத்தில் ஒரு வார இதழில் பிரபல பெண் எழுத்தாளர் சொல்லி இருந்தார்..மன அழுத்தம் குறைக்க ராஜேந்திரகுமார் கதைகள் படிச்சு பாருங்க..பெண்களுக்கு ஊக்கமும்,நகைச்சுவையும் கிடைக்கும்னு சொல்லி இருந்தாங்க...அதை படிச்சு மீண்டும் அசந்தேன்...ஓடு..லைபிரரி!! போயி தேடி..யுரேகா..யுரேகா னு கத்தினேன்..ஒரு சிறுகதை தொகுப்பு மாட்டுச்சு..
அப்பவே வந்து படிச்சேன்..சத்தியமா சொல்றேன்..கண்ணுல தண்ணி வர அளவுக்கு சிரிச்சேன்..அந்த அளவுக்கு நகைச்சுவை..ஒரு முற்போக்கு எண்ணம்..பெண்கள் நிலை பத்தி..கதைகள் எல்லாம். அதில் ரொம்பவே நாகரிக எழுத்துக்களை உணர்ந்தேன்...
(டிஸ்கி: : கொட்டாவி வருது..யக்கா..என்ன சொல்லனும்னு சொல்லி தொல!)
இல்ல..இவராலே இப்படியும் எழுத முடியும்னு சொன்னேபூ...
(டிஸ்க்கி: : ஓகே..பைனல் டச் ப்ளீஸ்..)
என் தாய்மொழி தமிழ்..என்னால் நன்றாய் தமிழ் பேச,எழுத முடியும்...ஆனால் என்னாலே என் மொழி படைப்புக்கள் சிலவற்றை புரிஞ்சுக்க முடில..உணர முடில..ரசிக்க முடில...
(டிஸ்கி:: உனக்கு ஞானம் இல்லக்கன்னு!!..)
என்னை பொறுத்தவரை ஒரு நிறைவான படைப்புங்கிறது..அடித்தட்டு மக்கள் வரை சென்று அவன் அதை எளிதாக உணர்ந்து ரசிக்கணும்...
(டிஸ்கி:: அட மக்கு! புரியலையா??இலக்கிய படைப்பு இலக்கியம் தெரிஞ்சவங்களுக்காக..!! உனக்கு குமுதம்,விகடன் தான் சரி!!)
ஆங்..அப்போ..தமிழ் ஐயா தேடனும் போல இலக்கியம் படிக்க...
(டிஸ்கி:: தமிழ் ஐயா!!சிக்காதிங்க..ஓடி போயிருங்க..!! விஷஜந்து வருது....)
34 comments:
nalla anupavangkal . puththakangkal namakku karruth tharum paadam mikavum arumaiyaanathu .avai nammai maarri vitum . thanks for sharing . keep it up.
@மதுரை சரவணன்
நன்றி சரவணா சார்..புத்தங்கள் வாசிப்பு அனுபவங்களை புரிய வைப்பதை விட...ரசிக்க வைக்கும்..that i meant !!
அநேகமாக இத்தனை டிஸ்கி போட்டு வந்த முதல் பதிவு, இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,......
பொன்னியின் செல்வன் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. அனைவருக்கும் புரியம் வண்ணம் இருக்கும் .
அதேபோல் கல்கியின் மற்ற படைப்புகளையும் படியுங்கள். குறிப்பாக தியாக பூமி .
@Chitra
அப்படியா சித்ரா..அப்போ பதிவுலகத்திலே முதல் முறையாகயாகனு டுபாக்கூர் டிவி ல விளம்பரம் பண்ணிரலாமா??ஹ ஹா..நன்றி சித்ரா!!
@LK
நன்றி LK ..அது என்னவோ இணையத்தில் எந்த புத்தகமும் படிக்க பிடிக்க மாட்டேன்கு LK ..கையிலே புத்தகம் வச்சுகிட்டு..அதை சுருட்டி வச்சுக்கிட்டு..படுத்துகிட்டு..சாஞ்சுட்டு..உருன்டுட்டு படிக்கிற சுகம் இணையத்தில் புக் படிக்கும்போது கிடைக்க மாட்டிங்கு..:-))நான் புத்தகம் வாங்கியே படிக்கிறேன் கட்டயமா..கல்கி யின் கதை ஒன்னு கூட படிக்கல..எல்லாம் எனக்கு இருந்த இந்த இலக்கிய போபியா தான் காரணம் ..நீங்க சொன்ன த்யாக பூமி கட்டாயம் படிக்கிறேன்..உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி!!
நீங்க தேவன் எழுதினது எல்லாம் படிங்க. உங்களுக்குப் பிடிக்கும். நான் உத்தரவாதம்.
மாட்டு வண்டி ஓட்டனும்..லாரி ஓட்டனும்..கோனாரு அப்பத்தா மாதிரி எருவாட்டி தட்டனும்,,ரேஞ்ஜில் தான் நம்ம கனவு,//
ஹ ஹ ஹா! ஆனந்தி மேடம் கனவு நிறைவேறுச்சா இல்லியா?
இவ்ளோ டிஸ்கி போட்டு வரலாற்றில் இடம் பிடிச்சிட்டீங்க :-))
@Gopi Ramamoorthy
வாங்க கோபி! தேவன் கதைகளா?? கட்டாயம் கோபி..உத்தரவாதம் எல்லாம் கொடுக்கிறிங்க..நம்பி படிக்கிறேன்..:-))
@ப்ரியமுடன் வசந்த்
வாங்க வசந்த்! அந்த கொடுமைய ஏன் கேக்குறிங்க??எருவாட்டி படம் தான் பேப்பர் இல் வரஞ்சு பார்க்கிறேன்..அதுவும் கூட ரவுண்டு ரவுண்டா வரமாட்டேன்கு!மாட்டுவண்டி,லாரி ஓட்டுற என் கனவு தகர்ந்தது..லட்சியம் முறிந்தது..ஸ்கூட்டி மாதிரி டுபுக்கு வண்டி தான் ஓட்டுறேன்..எல்லாம் வாழ்க்கையில் ஒரு ப்ராப்தம் இருக்கனும்ல..:-))
@அமைதிச்சாரல்
வாங்க சாரல் அக்கா!! வரலாற்று சாதனையா??ஹீ..ஹீ..ரொம்ப புகழாதிங்க..நன்றி சாரல் அக்கா!!
ஆனந்தி உங்கள் நண்பர்கள் சொல்லுவது போல எல்லா புத்தகங்களையும் படித்து இருக்கிற மூளையயும் குழப்பாதிர்கள். உங்களை போல உள்ள ஆட்களுக்காகவே நான் எழுத ஆரம்பித்துள்ளேன். ஆமா சைக்கிள் உங்களுக்கு ஓட்டத் தெரியுமா? எனக்கு இன்னும் சைக்கிள் ஓட்டத் தெரியாது. ஊருக்கு வரும் போது உங்களிடமிருந்து கற்றுக் கொள்கிறேன். உங்கள் அத்தை பையனை கடித்த நாய்களையும் ரெடி பண்ணி வைத்துக் கொள்ளூங்கள். ஒரு சந்தேகம் டிஸ்கினா என்ன அர்த்தம்?
@Avargal Unmaigal
வாங்க பாஸு..எப்பிடி இருக்கீங்க? உங்களை தான் தேடிட்டு இருந்தேன்..சைக்கிள் என்ன கார் ஏ ஓட்டுறேன் பாஸு இப்ப .(நம்புங்க ப்ளீஸ் லைசென்ஸ் கூட வச்சுருக்கேனாக்கும் :-)) ) கத்து தானே தரனும்..பேஷா..எதுக்கு நாய் ய எல்லாம் தொந்தரவு பண்ணிட்டு..5 ,6 பாம்பு வேணும்னால் தெருவில் பிடிச்சு விட்டு சைக்கிள் ஓட்டலாம்..ஓகே வா?(டிஸ்கி னால் என்னை பொறுத்தவரை மனசாட்சி பேசுரமாதிரி..ஓகேவா மதுரை மச்சான்! :-)) ))
பூலோக தேவதை பற்றி..
ushhhhhhhhhhh mudiala...
hm nala erukkunga,romba periya pathiva erukku padika kastma erukunga..
ela bloglium TISKY MUSKYNU PODRANGALEY APDINA ENNA ARTHAM????
அநேகமாக இத்தனை டிஸ்கி போட்டு வந்த முதல் பதிவு,---Akkavo
yen neenga vera usupetherenga????
ஹைக்கூ அதிர்வுகள்---thalaippey Chumma athiruthunga...
valthukkal cholla vayathu kuraivaga erukkalam..
athangala vanakam(adikka aruvalai ellam edukka pidiathu..)
@siva
வாங்க...சிவா..வாங்க..அந்த தேவதை ங்கற வார்த்தை உங்களுக்கு இவ்வளவு டென்ஷன் பன்னிருச்சா...ஹ ஹ...கூல் சிவா..கூல்!!:-)) பெருசா இருக்கா..அடுத்தவாட்டி இத்தூனூண்டு பதிவா போட்ரலாம்..ஓகே வா?? :-))
ஆனந்தி அக்கா.. என்ன இது.. தே(வதை)யும், மொக்கை புலம்பல்களும் அப்படின்னு படிச்சதும்.. யாருப்பா அந்த தேவதைன்னு பாத்தா.. தே(வதை)னு போட்டு நல்லாவே வதைக்கி எடுத்திட்டீங்க போங்க.. நல்ல ஒரு ஆம்பிஷன் உங்களுக்கு. வெரிகுட். இதுல எது நிறைவேறுச்சு.. கடைசியா?. அக்கா தாராளமா கல்கியின் புத்தகங்கள் படிக்கலாம். பொன்னியின் செல்வன் மிக மிக நல்ல கதை. கண்டிப்பாக உங்களுக்கு புரியும். கதை மிகவும் பிடித்துப்போய் பல முறை அந்தக்கதையை படிப்பீர்கள் பாருங்கள். நான் 20முறை படித்த கதை அது. சீக்கிரம் போய் புக் வாங்கி படிங்க. தமிழைக் கண்டு ஏன் இந்த பயம்?.. ஆமாம் அது யாரு டிஸ்கி.. நடுவுல... சூப்பர்...
@radha
அருமை தங்கை ராதா வே..கட்டாயம் படிக்கிறேன் பொ.செ கதையை..தேங்க்ஸ் தங்கமே!!
அப்போ எனக்கு ஒரு 8 வயசு இருக்கும்..தரையில் எப்பவுமே காலு இருக்காது..(பேய் நடமாட்டம் சாஸ்தி தான் )எப்பவுமே பறந்துட்டே இருக்கனுங்கிற பட்டாம்பூச்சி மனசு(எப்புடி நாங்களும் வருணிப்போம்ல ..)/////
சரியா சொல்லுங்க பேய் மாதிரியா இல்லை பட்டாம்பூச்சி மாதிரியா
எத்தனை டிஸ்கி இது என்ன டிஸ்கி பதிவா
(டிஸ்கி:: ரொம்ப ஸீன் போடுறமாதிரி இருக்கே...)////
தெரிஞ்சா சரி
@சௌந்தர்
சிம்பிள் டா தம்பி! பட்டாம்பூச்சி ஆவி போதுமா?:-)
@சௌந்தர்
நாங்க மதுரகாரங்க பா..உண்மைய ஒத்துப்போம்ல..:-))
ஆனந்தி கொஞ்சம் குழம்பி போயிட்டேன் :( அதுவும் இடையில பேய் நடமாட்டம்னு வேற போட்டிருந்தீங்களா அப்படியே ஓடிட்டேன் :)
எல்லாம் சரி புத்தகங்கள் வாசிக்க ஆரம்பிச்சுட்டீங்கலா இல்லையா? ராதா வேற ரெக்கமெண்ட் பண்ணியிருக்காங்க.
பதிவின் கடைசியில் போட்டாதான் அது டிஸ்கி. முதலில் போட்டால் முஸ்கி. நடுவில் போட்டால் மிஸ்கி இதுதான் பதிவுலக டிக்ஷ்னரி அக்காங் :)
உ
மத்ர ஆனந்தி! (என்னை)
மறந்த ஆனந்தி!
தே(வதை) ஆனந்தி!
திருட்டு ஆனந்தி!
புலம்பும் ஆனந்தி!என்னை
புலம்ப வைக்கும் ஆனந்தி!
வாழ்க ஆனந்தி!
வளமுடன் ஆனந்தி!
@kavisiva
தங்கச்சி இப்ப தானே சொல்லிருக்கு..படிக்கணும் கவிபேரரசி கவிசிவா!! முஸ்கி..மிஸ்க்கி னு எதுக்கு ஏழு...நாங்கலாம் மதுர காரங்க ஒரே சொல்லு...ஒரே பேச்சு (ஹி ஹீ..இவளவு வார்த்தை எல்லாம் பதிவுலகில் இருக்கா..எப்புடி சமாளிச்சோம் ல...):-) அது சரி...சிங்கப்பூர் போயிட்டு வந்திங்களா இல்லையா??
@mohana ravi
ha..ha..ha..பயங்கரமா சிரிக்க வச்சுட்டிங்க மாமி..ஜி டாக், பேஸ் புக் தாண்டி இங்கயும் உங்க புலம்பல் கேட்ருச்சு..ஹ ஹா...இப்பவும் கவிதையோட (?) வந்திங்க பாருங்க..உங்க நேர்மையா பாராட்டுறேன் மாமி..ஆமாம் அதென்ன திருட்டு ஆனந்தி..?? எஸ் மாமி...உங்க மனசை திருடிட்டேன் ...ஹ ஹா..ரொம்ப புலம்பாதிங்க அன்பு மாமி..மெயில் பண்ணுறேன்..சரிங்களா..mis u maami..
புத்தகங்கள் வாசிப்பது பற்றிய அழகிய அனுபவங்களை எத்தனை எளிதாக தொடங்கி முடித்து வைத்து இருக்கிறீர்கள். அருமை.
@V.Radhakrishnan
வாங்க ராதா சார்!! ரொம்ப நன்றி சார்!!
நியாயம் கேட்டு போராட்டம்...
மாமிய புலம்ப வைத்த ஆனந்தி
ஒழிக ஒழிக
கைது செய் கைது செய்
மாமிய கவர்ந்த ஆனந்திய
கைது கைது
கைது கைது கைது செய்
எல்லாருடைய இதயத்தையும்
ஆக்ரமித்த ஆனந்திய கைது செய்
கைது செய்
இணைய மக்களை கொள்ளையடித்த
ஆனந்தியின் அராஜாக போக்கு
வாழ்க வாழ்க
(ஆனா நான் எந்த Post ஐயுமே இன்னும் படிக்கல அதான் உனமை ஹா ஹா ஹா )
anbudan
ashiq
@BACQRUDEEN
அட பாவி!..மாமிக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு போராட்டம் ஆரம்பிச்சுட்டியா? சமாதானம்..மாமி!இந்த நெல்லை பிசாசை நம்பாதிங்க..!!போஸ்ட் ஏ படிக்காமல் கம்மென்ட் போட்டு போகுது பாருங்க..!!(அன்பு ஆஷிக் பிசாசே.!!....ஆமாம்..உன்னை எல்லாம் யாரு கூப்ட்டா கம்மென்ட் போட சொல்லி..உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்டி..):-))
@BACQRUDEEN
மாமி ப்ளாக் இல் போயி பார்த்தேன்..class டா மச்சி!! செமையா சிரிச்சுட்டேன்..!
Post a Comment