March 7, 2011

(சில) ஆண்களே! (சீக்கிரம்) திருந்துங்கப்பா!! :))சில நேரம்....சில எரிச்சல்...சில பெண்கள்... இந்த பதிவிலேயே , சில ஆண்களின் மேலயும்  கடும் எரிச்சல் இருக்குனு குறிப்பிட்டு இருந்தேன். ஓகே..அதுக்கான சுபமுஹூர்த்தநாள் டுடே ஒன்லி..:-)


ஆண் உரிமை பாதுகாப்பு (?):) காவலர்கள் யாராவது இருந்தால்...:) நோ...நோ...அருவாளை கீழே போடுங்க...கூல்..கூல்...!! :))


சிறப்பு குணாதிசியங்களை கொண்ட கடுப்படிக்கும் (சில)ஆண்கள் பற்றிய புல்லரிக்கும்:) சம்பவங்களே இந்த பதிவு...:))


கடுப்பு :1
(இந்த வகை ஆண்கள், தன் துணை மேல் அதீத பிரியம்/அவ நம்பிக்கையில் எல்லா வேலைகளையும் தன் தலையில் ஏற்றி கொள்ளும் பக்கா  perfectionist :)) )


என் திருமணத்திற்கு முன் நடந்த சம்பவம் இது..
எங்கம்மா வீட்டருகில் இருந்த ஒரு மாமியை விடிகாலையில் கோலம் போடும்போது மட்டுமே பார்க்க முடியும். அதுக்குபிறகு அவங்க வீட்டுக்குள்ளே போயிட்டால், வெளியே வரவே மாட்டாங்க..அவங்க கணவர் அந்த மாமா கிட்டே கேட்டால்.."மாமி அசடு, ஒண்ணுமே தெரியாதுன்னு " சொல்வார். காய்கறி வாங்குவது முதல் இஸ்திரி போட்டு வாங்கிட்டு வருவது வரை எல்லாமே "ஆல் இன் ஆல் அழகு ராஜா " நம்ம மாம்ஸ் தான்...வங்கி பணியாளரான மாமாக்கு திடீர் என்று ப்ரோமோஷன் கிடைக்க திருவனந்தபுரத்திற்கு  மாற்றலாகி  கிளம்பி விட, அவர்கள் குழந்தைகளின் கல்வி சிக்கல்களுக்காக மாமி மட்டும் மதுரையில்.


அதற்கு பிறகு தான் ட்விஸ்ட். வாசல்படி தாண்டி பழகாத மாமிக்கு காய்கறி வாங்குவது முதல் வங்கி கணக்குகள், வெளி இடங்களுக்கு சென்று சில அவசிய விஷயங்களை செய்தல்,EB யில் பில் கட்டி வருதல்...இப்படி அன்றாட அத்யாவாசிய விஷயங்கள் எதுவும் செய்ய அவ்வளவு சிரமப்பட்டு மூச்சு திணறித்தான் போனாங்க..காரணம் மாமா,மாமியை  அப்பாவியாகவே ஒரு ஓரத்தில் உட்கார வச்சது தான்..


இப்படிப்பட்ட க்வாலிடி உடைய ஆண்கள், ஏதோ ஒரு கட்டத்தில் பயங்கரமாய் அவங்க துணை கஷ்டபடுவாங்கனு யோசிக்க மறந்துடுறாங்க....(எனக்கு இன்னும் அந்த மாம்ஸ் மேலே எரிச்சல் இருக்கு...)


கடுப்பு-2
(இந்த வகை ஆண்கள், ஆளை விட்டால் போதும் சாமி என எந்த வீட்டு பொறுப்புகளையும் தட்டி கழிக்கும் எந்த சிறு  வேலையையும்,சிறிதும் தன் தலையில் ஏத்திக்காத செம அசால்ட் ஜாலி பேர்வழிகள் :) )


ஒருமுறை, என் பையனுக்கு கடுமையான ஜலதோஷம். மருத்துவர் ரத்த,மல பரிசோதனை செய்ய சொன்னவுடன், பரிசோதனைக்கு கொடுத்து விட்டு ,நாங்கள் லேப் பில் வெயிட்டிங் .அப்போ ஒரு பொண்ணு ரெண்டு சின்ன குழந்தைகளை கூட்டிகிட்டு தன் கணவரோட வந்தாங்க. அதுக்கு பிறகு அவங்களுக்குள் நடந்த உரையாடல் பின்வருமாறு..


பெண்ணின் கணவர்: "கிளம்புறேண்டி. நீ டெஸ்ட் பார்த்து முடிச்சுட்டு போன் பண்ணு. பிக் அப் பண்ண வரேன்.."


 பெண் : "கொஞ்சநேரம் தான் இருங்களேன். பெரியவன் பாடா படுத்துவாங்க "


பெ.கணவர்: "அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது...அது உன் வேல ...எனக்கு ஏகப்பட்ட வேல இருக்கு நான் கெளம்புறேன்..."


பெண் : "ம்ம்...சரிங்க...வீட்டுக்கு போயி எதுவும் தூங்கிராதிங்க...அப்புறம் போன் பண்ணினால் முழிக்க மாட்டிங்க "


பெ.கணவர்: "இல்ல..இல்ல...! போயி டிவி தான் பார்க்க போறேன்..."


அப்புறம் கிளம்பிட்டார் அந்த தியாக வள்ளல்..அதுக்கு பிறகு அந்த குட்டீஸை சமாளிக்க முடியாமல் அந்த பொண்ணு பட்ட பாடு இருக்கே...அவங்களோட பெரிய வாண்டு @ இன்டர்நேஷனல் வாலு , இரத்த பரிசோதனை எடுத்த நர்ஸ் கையை கோவத்தில் நல்லா கடிச்சு வைக்க :) அந்த பொண்ணு கையில் வச்சிருக்கும் குட்டி பாப்பாவும் பசிக்கு அழுக ...ஐயோ..பரிதாபமாய் இருந்தது...அந்த இடமே ரணகளமாய் இருந்தது கொஞ்சநேரம்...அவங்க பையனை யாராலும் சமாளிக்க முடியலை.


அவங்க கணவர் கூட இருந்து உதவி செஞ்சு இருந்தால் எவ்வளவு நல்லா இருந்து இருக்கும் அந்த பெண்ணுக்கு...அந்த பெண்ணின் கணவரை நினைச்சாலே செம எரிச்சலா இருந்தது அப்போ ...
கடுப்பு-3
(இந்த வகை ஆண்கள், தன் துணையிடம் நல்லது/கெட்டது எதையுமே பகிர்ந்து கொள்வதோ, உரையாடுவதோ பெரிய பாவம்னு யோசிக்கும் ஈகோ மக்காஸ்...)


இதை எரிச்சல் னு சொல்வதா,வருத்தம்னு சொல்லவான்னு தெரியலை...


தற்போது, என் தந்தை ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்.அவர் பணியில் இருந்தபோது நடந்த ஒரு வருத்தமான விஷயம் இது..


அப்பாவுடன் வேலை பார்த்த ஒரு ஆசிரியர்,  இலட்சக்கணக்கில் பட்டுவாடா செய்யும் "ஏலச்சீட்டு " தொழிலையும் சைடு பிசினெஸாக செய்து வந்தார்.புல்லட் வண்டியில் சட சட்னு வரும் துறு துறு ஆசிரியர், ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைய...அதற்கு பிறகு தான் பெரிய பிரச்சனைகள்.


அவர் தன் தொழில் சார்ந்த எந்த விஷயங்களையும், தன் மனைவியிடம் சின்ன அளவில் கூட சொன்னதில்லை போலே. பாவம்! அந்த அம்மாவிடம் ,சீட்டு போட்ட மக்கள் டிமாண்ட் பண்ண, அடுத்து யாரு, யாருக்கு பண பட்டுவாடா பண்ணனும், வாங்கணும் னு எதுவும் தெரியாமல் அந்த அம்மா நிலை குழைஞ்சு போக...


அப்புறம் அப்பாவோடு,  சில ஆசிரியைகள், சில ஆசிரியர்கள்  சேர்ந்து,காப்பீடு பத்திரங்கள் எல்லாம் வீட்டில் தேடி(அதுவும் அந்தம்மாக்கு தெரியலை ) பணம் பெற்று தந்து சுமாராய் பிரச்சனைகளை முடிச்சாங்க....


ஒரு பக்கம் அந்த ஆசிரியர் மறைவு பெரிய வருத்தம் என்றாலும்...அவர் இப்படி அவர் மனைவியை பற்றி யோசிக்காமல் இருந்த (ஆசிரியராய் இருந்தும் கூட) க்வாலிட்டி கொஞ்சம் வருத்தத்தை மீறி எரிச்சலும் எட்டி பார்த்தது எனக்கு என்பது உண்மை...


அந்த அனுபவம் எங்கள் அனைவருக்கும் பெரிய பாடமாவே தான் நினைச்சுகிட்டோம்...சாவு என்னைக்கு வந்து நமக்கு கை காட்டும்னு தெரியாது...ஆனால் நம் இறுதி பயணத்திற்கு  பின்பு நம்மை மட்டுமே நம்பி இருந்த உறவுகளை திக்கு தெரியாமல் அலைய விடுவது துயரத்திலும் துயரம்...கஷ்டமோ/நஷ்டமோ, துக்கமோ/மகிழ்ச்சியோ துணையிடம் ஷேர் பண்ணினால் என்ன குறைஞ்சுட போகுது???


என் அப்பா, என் அம்மாவிடம் அவர் காலத்திற்கு பின்பு அம்மாவுக்கு கிடைக்கும் பாதுகாப்பு தகவல்களை (பென்ஷன் விவரம் உள்பட) மிகவும் ப்ராக்டிக்களாய் விளக்கியும்,அறிவிருத்தியும் இருக்கிறார்( பிள்ளைகள் நாங்கள் இருந்தும் கூட) கொஞ்சம் நாங்கள் சென்டிமென்டலாய் பீல் பண்ணினாலும், எங்கள் தந்தை சொன்னது..."இதெல்லாம் சுடும் நிஜங்கள் தான்" !!


ஓகே...மக்காஸ்...நீங்க யாராவ்து இருக்கிங்களா அந்த கடுப்படிக்கும் க்வாலிட்டியில் ??:)))

117 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்...

சி.பி.செந்தில்குமார் said...

>>>
ஓகே...மக்காஸ்...நீங்க யாராவ்து இருக்கிங்களா அந்த கடுப்படிக்கும் க்வாலிட்டியில் ??:)))

ஆமா.. அடிக்கடி மொக்கைப்பதிவு போடுவேன்... அதைத்தவிர வேற எந்தத்தப்பும் பண்ணலை

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க சொன்னதெல்லாம் உண்மைதான். ஆனா எங்க ஆண் இனத்தை குற்றம் சாட்டுவதால், அதற்கு வக்காலத்து வாங்கவும் என்னிடம் வார்த்தைகள் இல்லாததால் வெளிநடப்பு செய்கிறேன்.. ஹி ஹி

ஆனந்தி.. said...

@சி.பி.செந்தில்குமார்

ஹ ஹ...நான் குறிப்பிட்ட முந்தைய பதிவில் கூட எங்கள் இன பெண்களை கூட குறை சாடினேன்...எங்கள் பெண்கள் அதை ஏத்துக்கிட்டாங்க சி.பி.சார்...

வைகை said...

இதில் எந்த வகைளையும் என்னை வகைப்படுதிக்கொள்ள முடியாது.. ஆனால் என்னை மீண்டும் ஒருமுறை சுய பரிசோதனை செய்துகொள்ள உதவும் இந்த பதிவு! நன்றி!

நா.மணிவண்ணன் said...

நோ கமெண்ட்ஸ்

Chitra said...

."இதெல்லாம் சுடும் நிஜங்கள் தான்" !!
.... உங்கள் அப்பா சரியாக சொல்லி இருக்கிறார். எதிர்பாராத சம்பவங்களை சந்திக்க தயார் ஆக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் சொல்லி இருப்பது அழகு.

Ramani said...

முதலில் பில்டப்தான் என்னவோ போல இருந்தது
மிகவும் அவசியமான பொறுப்பான பதிவு
நிஜமாகவே எல்லா ஆண்களும்
இதற்குள் அடங்கி விடுவோம்
கொஞ்சம் மாறத்தான் வேண்டும்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Avargal Unmaigal said...

நல்ல பதிவு இது...இந்த பதிவை படிச்சதும் எனக்கு நல்லா புரிஞ்சிடுச்சு...ஹீ...ஹீ... ஆமாம் எங்களை (நான், உங்கள் வீட்டுகாரர்) மாதிரி உள்ள நல்ல மக்காஸ் பற்றி எப்போ நல்ல பதிவுகள் போடப்போறீங்க?

இம்சைஅரசன் பாபு.. said...

:);)

Balaji saravana said...

நல்ல பதிவு சகோ! சில சுடும் நிஜங்களையும் சொன்னதற்கு நன்றியும்.

வைகை சொன்னது போல சுய பரிசோதனை செய்யவும் இதை நான் உபயோகப் படுத்திக்கிறேன்.

//Avargal Unmaigal said
ஆமாம் எங்களை (நான், உங்கள் வீட்டுகாரர்) மாதிரி உள்ள நல்ல மக்காஸ் பற்றி எப்போ நல்ல பதிவுகள் போடப்போறீங்க? //

வெயிட்டிங் சகோ! :)

இரவு வானம் said...

நன்றாக சொல்லி உள்ளீர்கள், இது ஒரு விழிப்புணர்வு பதிவும் கூட...

ஆனந்தி.. said...

அவர்கள் உண்மைகள் மற்றும் என் பிரிய சகோ பால்ஸ்...:))
நல்ல பசங்களுக்குன்னு ஒரு நல்ல பதிவு? (அப்போ இந்த பதிவு கெட்ட பதிவா ?? :)) ) ஏற்கனவே போட்டுவிட்டேன்...ஆண்களே !இது உங்களுக்கான பதிவு ...http://ananthi5.blogspot.com/2011/01/blog-post.html

middleclassmadhavi said...

சூப்பர்!
என் அப்பா தான் இறந்த பின் யாருக்கெல்லாம் தகவல் அளிக்க வேண்டும் என்பது வரை எழுதி வைத்திருந்தார்!

தமிழ்வாசி - Prakash said...

அப்பவே நினச்சேன்... இப்படி ஒரு சிக்கல் ஆண்களுக்கு ஆனந்தியக்கா மூலமா வரும்னு.....

எனது வலைபூவில் இன்று:
இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ

கே. ஆர்.விஜயன் said...

என் அப்பா தான் இறந்த பின் யாருக்கெல்லாம் தகவல் அளிக்க வேண்டும் என்பது வரை எழுதி வைத்திருந்தார்! //
ரொம்ப முன் யோசனையோட இருந்திருக்க்காரே.

தமிழ் உதயம் said...

எத்தனை வகை ஆண்கள் உலகத்திலே.

பயணமும் எண்ணங்களும் said...

:)

நிஜம்தான் ஆனந்தி.. மனைதர்களில் பல வகை.. என் பெரியப்பா முதல் ரகம்.. பெரியம்மாவுக்கு எல்லாம் செய்வார்.. அவர் பாண்டிச்சேரியில் ஹார்ட்-அட்டாக்கில் மரணித்தபோது என் அக்கா திருச்சியில் இருந்து செல்லும் வரை ஒரு அறையின் சாவியை எங்கே வைத்திருந்தார் என தெரியாதாம்.. அதை கேட்டாலும் தெரியாது என்பதே பதில்...பாவமாயும் கோபமாயும் இருந்தாதாம்..

சமுத்ரா said...

(இந்த வகை ஆண்கள், தன் துணையிடம் நல்லது/கெட்டது எதையுமே பகிர்ந்து கொள்வதோ, உரையாடுவதோ பெரிய பாவம்னு யோசிக்கும் ஈகோ மக்காஸ்...)
உண்மை தான்:)

அமைதிச்சாரல் said...

//"இதெல்லாம் சுடும் நிஜங்கள் தான்"//

நிச்சயமா.. நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துடாது, முன்னெச்சரிக்கையா இருக்கறது நல்லதுதானே..

எல் கே said...

இந்த மாதிரி ஆண்கள் மாற வேண்டும் (யப்பா இந்த லிஸ்ட்ல நான் இல்லை )

வசந்தா நடேசன் said...

நல்ல பதிவு, நானும் ஒரு சுய அலசல் (சுயசொறிதல்??) செய்ய வேண்டும் என்று தோன்றியது.. பகிர்ந்தமைக்கு நன்றி..

பிரபு எம் said...

உண்மையிலேயே சுடும் நிஜங்கள் அக்கா....
வாழ்க்கையைத் திட்டமிட்டு வாழ்வதைவிட ரொம்ப முக்கியம் திடீர் இழப்புகளுக்கு முன்கூட்டியே தயாரா இருக்க முயற்சி பண்ணுறது... ரொம்ப ஆழமான விஷயம்க்கா ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க....:)
இப்பொழுது உள்ள காலகட்டத்தில் இந்த அவேர்னெஸ் பெரும்பாலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்குதுன்னு நினைக்கிறேன் ஆனாலும் இந்த காரெக்டர்ஸ் எல்லாருமே அன்றாடம் நாம் பார்க்கும் மனிதர்கள் தான்... அருமையான பதிவு அக்கா....

கக்கு - மாணிக்கம் said...

இது ஓரளவு உண்மைதான்

// ஓகே...மக்காஸ்...நீங்க யாராவ்து இருக்கிங்களா அந்த கடுப்படிக்கும் க்வாலிட்டியில் ??:)))//

சத்தியமா நான் இல்லை.
ஆனா இதை யாரும் புருஞ்சிக்கமாட்டேங்கிறாங்களே!

பார்வையாளன் said...

சொல்ல நினைத்தது !

என்னங்க ... வீட்டு வேலை செஞ்சாலும் தப்பு (என் வீட்டுகாரர் என்னை நம்பி எந்த வேலையும் தரவே மாட்டார் ), செய்யலைனாலும் தப்பு,( எல்லா வேலையையும் தட்டி கழிப்பார் ) - பொறுப்புகளை பகிர்த்ந்துகிட்டாலும் தப்பு ( எந்த வேல்யையும் சுயமா செய்ய துப்பு இல்லை ), இல்லைனாலும் தப்பு (எதைய்ஜ்மே சேர் செய்ய மாட்டார் ) - மனைவியின் தோழிகளிடம் பேசினாலும் தப்பு ( அவ கிட்ட என்ன வழியிறீங்க ) , பேசலை னாலும் தப்பு ( கொஞ்சம் கூட மரியாதை தெரியாதா..அவங்க வர்றாங்க ,.,நீங்க பாட்டுக்கு டி வி பார்க்குறீங்க )

நாங்க என்னதான் செய்றது... எங்க மேல கொஞ்சம் கூட பரிதாம் இல்லையா

நினைவுக்கு வந்தது !


இப்படி பின்னூட்டம் போட்டா அதையும் திட்டி பதிவு போடுவாங்க... சொந்த செலவுல சூன்ன்யம் வச்சுக்காதே,,, மவனே,, உஷார்


என் அதிகார பூர்வ பின்னூட்டம் !


நல்ல பதிவு சகோ! சில சுடும் நிஜங்களையும் சொன்னதற்கு நன்றியும்.
எங்கள் தவறுகளை உணர்ந்து விட்டோம்
சுய பரிசோதனை செய்ய இதை நான் உபயோகப் படுத்திக்கிறோம்

மாணவன் said...

என்ன செய்வது இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இன்னிக்கு எல்லோருக்கும் அண்ணன் டெம்பிளேட் கமெண்டும் ஓட்டுக்களும் போடுவேனாம்! நீங்கள் கோபிக்க கூடாதாம்!!

Ignaci Muthu said...

thankal karuthu nalathan eruku.anna ella manetharum oramatheriya eruntha santhosam erukathu.valthukal s . muthu

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_06.html இளைஞர்கள் முக்கியம் - புத்ததேவ். ஆட்சியை தக்கவைப்போம் - காரத்

தஞ்சாவூரான் said...

நான் அவனில்லை :))

முதல் வகை கணவர்களின் மனைவிகள் ரொம்பவே பாவம்!!

MANO நாஞ்சில் மனோ said...

//பெ.கணவர்: "இல்ல..இல்ல...! போயி டிவி தான் பார்க்க போறேன்..."//

அடங்கொன்னியா பயலே....!!!!

MANO நாஞ்சில் மனோ said...

//ஒரு பக்கம் அந்த ஆசிரியர் மறைவு பெரிய வருத்தம் என்றாலும்...அவர் இப்படி அவர் மனைவியை பற்றி யோசிக்காமல் இருந்த (ஆசிரியராய் இருந்தும் கூட) க்வாலிட்டி கொஞ்சம் வருத்தத்தை மீறி எரிச்சலும் எட்டி பார்த்தது எனக்கு என்பது உண்மை...//

இது வெரி டேஞ்சர்...

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்...//

எலேய் இங்கேயுமாலேய் நமீதா படம் வச்சிருக்காங்க....

Sathish Kumar said...

@கடுப்பு-1
அது எப்படிங்க...! இந்த வேலை எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் கத்துக்கணும்னு எந்த டுட்டோரியல் காலேஜிலங்க சொல்லி கொடுக்கிறாங்க...! பெத்தவங்க எல்லாம் பாத்துப்பாங்கன்னு வீட்ல அப்படியே சீரியல் பாத்துகினே குந்திகுனு, ப்யுச்சர்ல எவானாவது ஒரு இளிச்ச வாயன் அடிமையா சிக்குவான், அவன் எல்லாத்தையும் பாத்துக்குவான்னு காலத்த ஓட்டிகிட்டு ....அப்பால ஆம்பள தான் அல்லாத்துக்கும் ரீஜன்னு சொல்லவேண்டியது?? இதுல எங்காளு மேல உங்களுக்கு எரிச்சல் வேற...!!

நற..நற...!
செல்லாது..செல்லாது...! நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லுங்க...!!

@கடுப்பு-2
அதை எல்லாம் எங்க லிஸ்ட்ல சேர்த்து எங்களை எல்லாம் அசிங்கப் படித்திட்டேங்க நாட்டாம...! அவுரு அப்படி போய் டி.வி. பாப்பேன்னு சொன்னதும், அந்த பொண்ணு என்ன பண்ணி இருக்கணும், பளார்'னு ஒரு அப்பு அப்பிருக்குனுமா இல்லியா..? அத எல்லாம் விட்டுட்டு, ஒன்னுமே தெரியாத இந்த பாவப்பட்ட ஜீவன்கள் மேலயே பாயறது..! க்க்க்க்கும்...!

@கடுப்பு-3
மிகச் சரியான தீர்ப்பு...! வாழ்க நாட்டாம...!!

எப்பூடீ......!!!!

செங்கோவி said...

ச்சே..இந்த ஆம்பிளைங்களே இப்படித் தான்க்கா!

FOOD said...

//பெண் : "ம்ம்...சரிங்க...வீட்டுக்கு போயி எதுவும் தூங்கிராதிங்க...அப்புறம் போன் பண்ணினால் முழிக்க மாட்டிங்க "
பெ.கணவர்: "இல்ல..இல்ல...! போயி டிவி தான் பார்க்க போறேன்..."//

ரொம்ப முக்கியமான வேலை.

தவறுகளை திருத்தி கொள்ள சுட்டிகாட்டுதல் அவசியம். அதைத்தான் செய்திருகிறீர்கள், சகோ.
அருமை, அருமை, ஆனந்தி!

சௌந்தர் said...

"(சில) ஆண்களே! (சீக்கிரம்) திருந்துங்கப்பா!! :))"////

திருந்துங்கப்பா....திருந்துங்க....

sweet said...

உங்க வீட்டுக்காரர் எப்படி என்று ஒரு இடத்துல கூட சொல்ல காணோம்?

நியாயப்படி பார்த்த அவர் பெயர் முதல் வகையில் வந்து இருக்கணுமே?

அப்படி அவர் இப்படி இருக்கிறதால தானே உங்களால இப்படி ப்ளாக் எழுத முடியுது...

இதுவும் சுடும் நிஜம் தான்... கூல் ஹி ஹி

sweet said...

விருப்பம் இல்லா விட்டால் நான் கூறிய கமெண்ட்-ஐ போட வேண்டாம்

ஆனந்தி.. said...

@வைகை

நீங்க சொன்ன பதில் ரொம்ப பிடிச்சது வைகை...ரொம்ப ஹானேஸ்ட் பதில்...

ஆனந்தி.. said...

@நா.மணிவண்ணன்

no comments???!! ha ha..ok..cool ..my dear brother..:)))

ஹேமா said...

ஆனந்தி....இதில் ஆண் பெண் எனப் பிரித்துப்பார்க்க முடியவில்லை எனக்கு.சிலரது குணங்கள் அவ்வளவுதான்.தாங்களே செய்தால்தான் திருப்தியடையும் மனங்கள்.

நான் ஆண் என்பவர் தன் வருமானம் பற்றியோ செலவு,சேமிப்பு பற்றியோ சொல்லமாட்டார்.நான் பெண் என்பவள் அது அவருக்குத் தெரியாது என்று சில அலுவல்களைத் தானே பொறுப்பெடுத்துக்கொள்கிறாள்.
இதுவே தொடர்கதையாகிவிடுகிறது !

ஆனந்தி.. said...

@Chitra

:)))

ஆனந்தி.. said...

@Ramani

ரொம்ப நன்றி ரமணி அண்ணா...

ஆனந்தி.. said...

@Avargal Unmaigal

உங்களுக்கு பதில் முன்னாடியே சொல்லிட்டேன்..:))

ஆனந்தி.. said...

@இம்சைஅரசன் பாபு..

:))

ஆனந்தி.. said...

@இரவு வானம்

thanks :))

ஆனந்தி.. said...

@middleclassmadhavi

அப்படியா மாதவி...தங்கள் அப்பாவை நினைச்சால் ரொம்ப பெருமையாகவும்...இழப்புக்கு வருத்தமாகவும் இருக்கிறது...

ஆனந்தி.. said...

@தமிழ்வாசி - Prakash

ha ha...:))

ஆனந்தி.. said...

@கே. ஆர்.விஜயன்

ஆமாம் விஜயன் அண்ணா...மாதவி தந்தை நினைச்சு எனக்கும் மலைப்பு...

ஹேமா said...

ஆனந்தி...என் உப்புமடச் சந்திப்பக்கம் வரணும் நீங்க !

http://santhyilnaam.blogspot.com/

ஆனந்தி.. said...

@தமிழ் உதயம்

அதை எண்ணி முடிக்கவே முடியாது..இது பெண்களுக்கும் பொருந்தும்...:)))

ஆனந்தி.. said...

@பயணமும் எண்ணங்களும்

ஹாய் ஷாந்தி அக்கா...welcome :)
ஓ...உங்க குடும்பத்திலும் இப்படி கதாப்பாத்திரங்கள் இருந்தாங்களா...??? ம்ம்...நம்மை சுத்தி..ஏன் நம்மளில் கூட இந்த கதாபாத்திரங்கள் தவிர்க்கவே முடியாது இல்லையா அக்கா..??:))

ஆனந்தி.. said...

@சமுத்ரா

welcome samudraa:)

ஆனந்தி.. said...

@அமைதிச்சாரல்

ஆமாம் சாந்திக்கா..

ஆனந்தி.. said...

@எல் கே

Ha ha...really karthik??:))))

ஆனந்தி.. said...

@வசந்தா நடேசன்

நன்றி வசந்தாநடேசன்

ஆனந்தி.. said...

@பிரபு எம்

:))))))))))

ஆனந்தி.. said...

@கக்கு - மாணிக்கம்

ஹ ஹா...மாணிக்கம் அண்ணா !உங்கள் தங்கை நான் நம்புறேன்..நீங்க ரொம்ப ப ப நல்லவங்க...:))))))

ஆனந்தி.. said...

@பார்வையாளன்

சூப்பர் பார்வையாளன்...செம இண்டரஸ்டிங் கம்மென்ட்...ரொம்ப ரசிச்சேன் இந்த கம்மேன்ட்டை..:))))

ஆனந்தி.. said...

@மாணவன்

mm simbu...:)))

ஆனந்தி.. said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

:))))

ஆனந்தி.. said...

@Ignaci Muthu

நீங்கள் கூறுவதும் உண்மை தான்...நன்றி முத்து சார்..

ஆனந்தி.. said...

@தஞ்சாவூரான்

:)))

ஆனந்தி.. said...

@MANO நாஞ்சில் மனோ

ha ha ha...:))))

ஆயிஷா said...

இப்படியும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...

நல்ல அலசல் ஆனந்தி

ஆனந்தி.. said...

@Sathish Kumar

ஹாய் பேட்டை ராப் சதீஷ்...ஹ ஹ...வாங்க..வாங்க...:)) இன்னும் நயன்தாரா நினைப்புலையே இருக்கீங்க போலே...கனவு தெளிஞ்சுட்டு வாங்க சகோ...ஹ ஹ....

உங்க கம்மேன்ட்ஸ் படிச்சு நல்லா சிரிச்சேன் சதீஷ்....சூப்பர்...(இன்னாமா தொர பின்னுச்சு ...பிச்சு ஒதரிட்ட நைனா...:)) )

ஆனந்தி.. said...

@செங்கோவி

ha ha..cool:)))

ஆனந்தி.. said...

@FOOD

மிக்க நன்றி அண்ணா...

ஆனந்தி.. said...

@சௌந்தர்

pisasu...:))))

ஆனந்தி.. said...

@sweet

Hai sweet...:)) welcome..:)

ஆனந்தி.. said...

@sweet

:)))

ஆனந்தி.. said...

@ஹேமா

ஹாய் ஹேம்ஸ்...நம் சமுதாயத்தை அப்படி எல்லாம் ஒரே மாதிரி வரிசை படுத்த முடியும்னு தோணுதா ?? ம் ஹூம்...என்ன சொன்னாலும்...நம் சமூதாய அமைப்பு பெண்களுக்கு கொடுத்த இடம், ஆண்களை விட ஒரு படி கீழே இருக்கிற மாதிரி தானே ஹேம்ஸ்...இன்னும் பார்லிமென்ட்டில் கூட 33 % சதவிகிதத்திற்கு மூக்கால் அழுகும் நிலை தான் தொடருது...இது சராசரியாய் பல இந்தியகுடும்பங்களில் நடக்கும் சாதாரண காட்சிகள் ஹேம்ஸ்...:))))

ஆனந்தி.. said...

@ஹேமா

கட்டாயம் வரேன் ஹேம்ஸ்..:))

ஆனந்தி.. said...

@ஆயிஷா

மிக்க நன்றி ஆயிஷா...

sakthi said...

ஆனந்தி நிஜமாகவே உங்க பதிவு அருமை உண்மையை அப்படியே புட்டு புட்டு வைச்சுட்டீங்க ::)))

தம்பி கூர்மதியன் said...

வேஙையெல்லாம் முடிச்சுட்டு வர்றதுக்குள்ள இத்தனை பேரா.??? ஆனந்தி பயங்கர பேமஸாகிட்டீங்க போல..!!! சரி பதிவுக்கு வருவோம்.. என்ன்ன்ன்னாது அது.???

//(சில) ஆண்களே!//

தப்புச்சுட்டீங்க.!!!

//"மாமி அசடு, ஒண்ணுமே தெரியாதுன்னு " சொல்வார்.//

உண்மையிலே அப்படி இருக்குமோ.!!


//காரணம் மாமா,மாமியை அப்பாவியாகவே ஒரு ஓரத்தில் உட்கார வச்சது தான்..//

என்னாத்த சொல்லி கொடுத்தாலும் புரிஞ்சிக்காம.. திரும்ப திரும்ப கேளட்ட கேள்வியே கேட்டிட்டிருந்திருப்பாங்க.. மனுசன் டென்ஷனாகி அப்படி சொல்லியிருப்பார்..

//அவங்க துணை கஷ்டபடுவாங்கனு யோசிக்க மறந்துடுறாங்க....//

அது அப்படி இல்லீங்க.. இதுக்கெல்லாம் எத்தனை தடவ சொன்னாலும் புரியாதுங்கற சலிப்புல விடுறது..

தம்பி கூர்மதியன் said...

//இல்ல..இல்ல...! போயி டிவி தான் பார்க்க போறேன்....//

அவருக்கு பின்னால புடுங்கியிருக்கலாம்.. ஹாஸ்பிடல்ல அடிக்கடி போய் வந்தா அசிங்கமாயிடும்.. அதுவே அவரு பொண்டாட்டிகிட்ட வெளிபடையா சொன்னா உங்கள போல ஆளுக கேட்டுட்டா அவரு மானம் என்ன ஆகுறது.???


//அவங்க கணவர் கூட இருந்து உதவி செஞ்சு இருந்தால் எவ்வளவு நல்லா இருந்து இருக்கும் அந்த பெண்ணுக்கு...//

அப்படி நான் சொன்ன மாதரி அவருக்கு ஆத்திரம், அவசரமா இருந்திருந்தா நினச்சிபாருங்க.. அந்த ரெண்டு பசங்களையும் சேத்து இவரையும் வச்சிகிட்டு அந்தம்மா எவ்வளவு கஷ்டபட்டிருக்கணும்.. நாறியிருக்கும்..

ஆனந்தி.. said...

@sakthi

நன்றி sakthi!

ஆனந்தி.. said...

@தம்பி கூர்மதியன்

கூர்மதி உங்க கம்மென்ட் படிச்சுட்டு சிரிச்சிட்டு இருக்கேன் இன்னும்...(அதுவும் அந்த டிவி பார்க்க போனவருக்கு பின்னாடி பிடிங்கிருக்கும் சொன்ன கம்மென்ட் படிச்சு ....:))))))))))))))))))))))))))))) )

தம்பி கூர்மதியன் said...

//இந்த வகை ஆண்கள், தன் துணையிடம் நல்லது/கெட்டது எதையுமே பகிர்ந்து கொள்வதோ, உரையாடுவதோ பெரிய பாவம்னு யோசிக்கும் ஈகோ மக்காஸ்..//

அக்சப்டட்.. அதாவது ஒத்துகிடுறன்..


//கஷ்டமோ/நஷ்டமோ, துக்கமோ/மகிழ்ச்சியோ துணையிடம் ஷேர் பண்ணினால் என்ன குறைஞ்சுட போகுது???//

ஏங்க ஒருவேலை அவரோட மனைவி ஓட்ட வாயா இருந்து அவங்க புருசன் சொன்ன பர்சனல் விசயம் எல்லாத்தையும் பக்கத்து வூடு எதிர் வூடுன்னு உளறிட்டா.???
('சில' பெண்களுக்கு அதானே பொழுதுபோக்கு.!!)

ஆனந்தி உங்கள பத்தி எனக்கு தெரியும் எதையும் முழுசா தெரியாம சொல்லமாட்டீங்க.. ஒரு விசயத்த நாம சொல்லும்போது அந்த விசயம் நடக்கும்போது சம்பந்தபட்டவரின் மனநிலமை எப்படி இருந்திருக்கும் என்பதெல்லாம் பாக்காம சொல்லியிருக்கமாட்டீங்க.. இருந்தாலும் இதெல்லாம் கவனிப்பது நம் கடமையல்லவா.!!

சரி சரி.. வந்த வேலை முடிஞ்சுது.. வர்றேன்..

Jana said...

ஓகே...மக்காஸ்...நீங்க யாராவ்து இருக்கிங்களா அந்த கடுப்படிக்கும் க்வாலிட்டியில் ??:)))

என் மனைவியிடம் கேட்டு சொல்கின்றேன். :)

Anonymous said...

இதை மகளிர் தின சிறப்பு பதிவா எடுத்துக்கலாம்.அந்த அளவுக்கு விஷயங்கள் உள்ளது.

தம்பி கூர்மதியன் said...

//ஓகே...மக்காஸ்...நீங்க யாராவ்து இருக்கிங்களா அந்த கடுப்படிக்கும் க்வாலிட்டியில் ??:)))

என் மனைவியிடம் கேட்டு சொல்கின்றேன். //

@ஜனா:செல்ஃப் அனாலிஸிஸ் தெரியாதுங்களா.??? நான் அப்படி கிடையாது உறுதியா சொல்றன்..(டே கைர் முதல்ல போய் கல்யாணத்த பண்ணு அப்பரம் பேசலாம்..)

//அதுவும் அந்த டிவி பார்க்க போனவருக்கு பின்னாடி பிடிங்கிருக்கும் சொன்ன கம்மென்ட் படிச்சு ....:))))))))))))))))))))))))))))) )//

@ஆனந்தி:ஒருமனுசனோட ஆத்திர அவசரம் உங்களுக்கு சிரிப்பா இருக்கா.??? சோ வருத்தம் வருத்தம்..

jothi said...

வ‌ழ‌க்க‌ம் போல் அச‌த்த‌ல்,..

இத‌விட‌ மிக‌ கொடுமையான‌ க‌ண‌வ‌ன்க‌ள் உண‌டு, ந‌ல்ல‌ வேளை அவ‌ர்க‌ளை பற்றி எழுதாதற்கு ந‌ன்றி

ஆனந்தி.. said...

@தம்பி கூர்மதியன்

//@ஆனந்தி:ஒருமனுசனோட ஆத்திர அவசரம் உங்களுக்கு சிரிப்பா இருக்கா.??? சோ வருத்தம் வருத்தம்.. //

ha ha ha..ha ha...:))))

Gopi Ramamoorthy said...

நான் இல்லை

கே.ரவிஷங்கர் said...

பதிவு நல்லா இருக்கு.


இளைய ராஜா லேட்டஸ்ட் போஸ்ட் பாத்தீங்களா?

vanathy said...

இப்படியும் ஆண்கள் இருக்கிறார்கள். இதுங்க திருந்தவே திருந்தாதுங்க.

கணேஷ் said...

அக்கா இது விழிப்புணர்வு பதிவா என்ன? ஒரு டவுட்டு..)))

angelin said...

கடுப்பு 2 ... இந்த மாதிரி ஆட்களுக்கு நல்லா பனிஷ்மென்ட் தரணும்.
கடுப்பு 1 .....நான் இந்த மாதிரி நிறைய பேரை பார்த்திருக்கேன்
அப்புறம் ஆனந்தி
மாணிக்கங்கள் THE GREAT மறதி மாணிக்கங்கள் பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள்.

jayakumar said...

vaasthavam thaan...ada... athukkulla imbootu makkas kilambittangale pinootam kodukka...

Avargal Unmaigal said...

நீங்கள் போட்ட பதிவுகளிலேயே இந்த பதிவுதான் மிகச் சிறந்தாக நான் கருதுகிறேன். இது உங்களுடைய 5 ஸ்டார் பதிவு ஆகும். வாழ்த்துகள். யம்மோ மதுரைகார யம்மோ.....கலக்குங்க?

நிரூபன் said...

வணக்கம் சகோதரி, சமூகத்தில் உள்ள வெவ்வேறு மனிதர்களைப் பல்வேறு கோணங்களில் அலசியுள்ளீர்கள். இப் பதிவில் தவறுகள் யாவும் ஆண்கள் மீது உள்ளது போல சுட்டியுள்ளீர்கள். நிற்க.
பெண்கள் ஆரம்ப காலத்திலிருந்து கணவனின் சொல்லிற்கு கட்டுப்பட்டு நடப்பதால் தானே/ கணவனுக்கு கீழ்ப் பணிந்து நடப்பாதல் தானே பெண்களிற்கு இத்தகைய நிலை வருகிறது.

நீங்கள் முதலாவதாக கூறும் சம்பாஷனையில் வரும் அந்த அம்மா, ஏனுங்க என்னை வீட்டிற்குள்ளை போயிருக்க சொல்லுறிங்க, எனக்கு ஒன்னும் தெரியாதுங்க என்று ஏன் நீங்கள் என்னை தாழ்த்துறீங்க என்று ஆரம்பத்திலே ஒரு அதிரடியான கேள்வியைக் கேட்டிருந்தால் அந்த ஆண் மகன் தொடர்ந்தும் அந்தப் பெண்ணை கோலம் போட்ட பின்னர் வீட்டிற்குள் போயிருக்கச் சொல்லியிருப்பானா?

ஆக பெண்கள் ஆண்களின் சொல்லுக்கு வளைந்து கொடுக்கிறீர்கள். ஆண்கள் வளைக்கப் பழகி விட்டார்கள்.

அடுத்த விடயம், ஆண் வீட்டை போகப் போவதாக சொன்னதும் அந்தப் பெண் பிடிவாதமாக நின்றிருந்தால் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு போயிருக்கலாம் தானே?
ஆகவே பெண்கள் ஆண்களின் வார்த்தைகளுக்கு அடங்கப் பழகி விட்டார்கள். ஆண்கள் பெண்களை நன்றாக அடக்கக் கற்றுக் கொண்டு விட்டார்கள். இதில் தவறு ஆண்களிடம் இருக்கிறது எனக் கூறுவதை கண்டிக்கிறேன்.

தவறு இரு சாராரிடமும் இருக்கிறது என்பதே எனது கருத்து.
பதிவிற்கு எதிர்க் கருத்து, பதிவின் கருத்திற்கு மாற்றுக் கருத்து வைக்க வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் தான் இப் பின்னூட்டத்தை போடுகிறேன். மற்றும் படி உங்கள் மீது எந்தக் கோபமுமில்லை.
அன்புடன் நிரூபன்!

ஆனந்தி.. said...

@நிரூபன்

ஹாய் என் அன்பு சகோதரன் நிருபன்...அட உங்க கருத்துகளை நீங்க சொல்றிங்க..என் கருத்துகளை நான் சொல்றேன்...ஒவ்வொருத்தர் அனுபவங்களும்...பார்க்கும் கண்ணோட்டங்களும் நிச்சயம் வித்யாசம் தானே என் அன்பு தம்பி...நான் சொல்வது பொத்தாம் பொதுவாய் தமிழகத்தில் நடக்கும் பெண்களின் சராசரி நிலை....எல்லாரும் எல்லா நேரத்திலும் நீங்க சொல்ற மாதிரி நடந்துக்க முடியுமான்னு தெரியலை நிருபன்...அது அவங்களுக்கு அமஞ்ச/அமையும் துணையின் புரிதலை பொறுத்து மட்டுமே இது சாத்தியமாகும்....
சில வீடுகளில் நான் குறிப்பிட்ட குணாதிசிய ஆண்கள் ரொம்பவே defalut ஆ பார்க்கலாம் அன்பு தம்பி...(என் சூழலில் நான் அப்படி நிறைய பார்த்து இருக்கிறேன்...என் தோழி வெளி நகரத்தில் பெரிய சம்பளத்தில் அதிகாரியாய் பணி புரிகிறாள்...ஆனால் ...அவள் பாப்பாவை பள்ளிக்கு கிளப்புவது முதல்...எல்லா அன்றாட வேலைகளையும் பார்த்துட்டு தான் அவசரமாய் சாப்ட கூட நேரம் இல்லாமல் கிளம்புவாள்..அவள் கணவர் நிதானமா 9 மணிக்கு எந்திரிச்சு அலுவலகம் கிளம்புவார்...என் தோழி தட்டி கேட்டு சண்டை போட்டு...எதுவும் ஆகுற கதை இல்லன்னு தெரிஞ்சு போச்சு..இதனால் அவள் பெற்றோர் பட்ட வேதனை தான் அதிகம்...இப்போது எதையும் வெளிகாமிக்காமல்....இதையும்ம் அனுசரிக்க பழகிட்டாள்..இது தான் நிருபன் சாஸ்வதம்...புரட்சி என்பது பெண்ணுக்கு பண்ண தெரியாதா என்ன...ஆனால் அதனால் கிடைக்கும் இம்பாக்ட் எந்த அளவுக்கு பாசிடிவ் ஆ இருக்கும்னு கூட கணிக்க முடியாது...எத்தனையோ பெண்கள் ...வேற வழியில்லாமல் சமூதாயத்துக்காய் கூட்டுக்குள் அடைஞ்சு போய்டுறாங்க...இல்லை கூட்டுக்குள் அடைக்க படுறாங்க சமூகம்..குடும்பம்...சூழலை சொல்லி சொல்லி...அல்லது சொல்லி காமிச்சு....:))

எத்தனையோ பெண்கள் ...குடும்பம்..குழந்தைகள்...சமூகம் பொருட்டு தன் நிஜமான ஆசைகள்...ஏக்கங்கள்...கோவங்கள் எல்லாத்தையும் ஓரமா வச்சுட்டு வாழ்வை ஓட்டிக்கிட்டு இருக்காங்க என் அன்பு தம்பி நிருபன்...

உங்கள் மாற்று கருத்துகளை நான் தப்பாவே நினைக்கலை...உங்கள் views பகிர்வதில் எந்த பிழையும் இல்லை...:)

ஆனந்தி.. said...

நன்றி ஜனா..
நன்றி என் பிரிய சகோ ஜோ...:))
நன்றி கோபி...

ஆனந்தி.. said...

@கே.ரவிஷங்கர்

நன்றி ரவி அண்ணா...இன்னும் பார்க்கலை ரவி அண்ணா..இடையில் ஊருக்கு போயிட்டேன்...பதிவு பார்த்துட்டு சொல்றேன் அண்ணா..

ஆனந்தி.. said...

தேங்க்ஸ் வாணி...:)
தேங்க்ஸ் சகோ ஜெயா...:))

ஆனந்தி.. said...

@கணேஷ்

என் அன்பு தம்பி கணேஷ்...என்ன மாதிரி பதிவுன்னு நீயே கண்டு பிடிச்சு சொல்லு...நீ தான் பெரிய ஆராய்ச்சியாளன் ஆச்சே...:)) பட் இது காதல் சிறுகதை அல்லது அறிவியல் சிறுகதை அல்ல.. அல்ல...ஹ ஹஹா....

ஆனந்தி.. said...

@angelin

ஹாய் angel ...கவலைபடாதிங்க அது பற்றியும் ஒரு போஸ்ட் போட்ருவோம்...:)))

ஆனந்தி.. said...

@Avargal Unmaigal

யாருங்கோ சாமியோவ் ...எங்க ஊரு அவர்கள் உண்மைகள் பதிவாளராங்கோ:)) ?? தொர என்னன்னவோ எல்லாம் சொல்றாரு...ஹீ...ஹீ...படிக்க நல்லா தான் இருக்கு...மிக்க நன்றி (கட்டாயம் நீங்க நம்ம ஊருக்கு வரும்போது 5 ஸ்டார் முட்டாயி வாங்கி தருவேனாக்கும்...:)) )

R.Gopi said...

ஆனந்தி....

ஆரம்பிச்சாச்சா... போட்டு இந்த சாத்து சாத்திட்டீங்களே...அதுவும் இந்த ஒரு வார்த்தை (ஈகோ மக்காஸ்)...யப்பா..

தங்களுக்கும் மற்றும் அனைத்து வலையுலக தோழிகளுக்கும் என் மனம் கனிந்த இனிய ”பெண்கள் தின” நல்வாழ்த்துக்கள்...

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

மிகச் சிறந்த பதிவு!வாழ்த்துக்கள்.

Happy Women's day!

komu said...

ஆனந்தி, சூப்பர் பதிவு.உங்க வீட்ல எப்படி?

இராஜராஜேஸ்வரி said...

அவசியமான பொறுப்பான பதிவு

பாரத்... பாரதி... said...

வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

ஜெரி ஈசானந்தன். said...

மகளிர் தின வாழ்த்துகள் ஆனந்தி,"பதிவு சும்மா தீப்பிடிக்குது."சத்தியமா இந்த லிஸ்ட்ல நான் இல்லைங்கோ

ஜெரி ஈசானந்தன். said...

கடுப்ஸ்களின் பட்டியல் நீண்டால் மாட்டிக்கிருவோம்னு தோணுது..பா..

asiya omar said...

ஆனந்தி அந்த மூன்றாவது கொஞ்சம் யோசிக்க வைத்தது,குடும்பத்தில் என்ன வரவு செலவு ஒண்ணும் தெரியாம செல்லப்பிள்ளையாய் இருக்கேன்,இனி கேட்டு தெரிசிக்கறேன்.ரொம்ப பயமாத்தான் இருக்கு.பகிர்வுக்கு நன்றி.

தாராபுரத்தான் said...

அவசியமான பதிவு.

அஞ்சா சிங்கம் said...

:))))))))))))))))))))))))))))))))))))

வழக்கமா நீங்க இப்படிதான் போடுவீங்க அதான் ரிப்பீட்டு .....................

அஞ்சா சிங்கம் said...

அந்த சில ஆண்கள் என்று சொல்வதை விட பல என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் .....

பஸ் ஸ்டான்ட் ரெயில்வே ஸ்டேசன் என்று எங்கு வேண்டுமானாலும் இந்த மாதிரி ஆண்களை பார்க்கலாம் .
இடுப்பில் பிள்ளையுடன் லகேஜ் தூக்கிக்கொண்டு கஷ்டப்பட்டு நடந்து வருவாங்க அவங்களுக்கு முன்னாள் வெறும் கையை வீசிக்கிட்டு சிகரெட் பத்தவசிக்கிட்டு கை வீசி நடக்கும் ஆண்களை பார்க்கும் போது ஓங்கி ஒரு அப்பு அப்பலாம்ன்னு தோணும் .....................

திருப்பி அடிச்சிட்டா? அதனால் என் கோவத்தை கட்டுபடுதிக்கிறேன் ........................

Part Time Jobs said...

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

பார்வையாளன் said...

சில பதிவர்களிடம் நான் எதிர்பார்க்கும் இடுகைகள்- நேயர் விருப்பம் – பாகம் 1

பலே பிரபு said...

எப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்று சொல்லி உள்ளீர்கள். கண்டிப்பாக இதுபோல இருக்க மாட்டேன்.

சிவகுமாரன் said...

என் அப்பா 1 & 3 இரண்டு வகையிலையும் இருந்தார் .
நல்ல வேளை நான் இதில வரலை

Sweety said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in