Showing posts with label எரிச்சல். Show all posts
Showing posts with label எரிச்சல். Show all posts

March 7, 2011

(சில) ஆண்களே! (சீக்கிரம்) திருந்துங்கப்பா!! :))



சில நேரம்....சில எரிச்சல்...சில பெண்கள்... இந்த பதிவிலேயே , சில ஆண்களின் மேலயும்  கடும் எரிச்சல் இருக்குனு குறிப்பிட்டு இருந்தேன். ஓகே..அதுக்கான சுபமுஹூர்த்தநாள் டுடே ஒன்லி..:-)


ஆண் உரிமை பாதுகாப்பு (?):) காவலர்கள் யாராவது இருந்தால்...:) நோ...நோ...அருவாளை கீழே போடுங்க...கூல்..கூல்...!! :))


சிறப்பு குணாதிசியங்களை கொண்ட கடுப்படிக்கும் (சில)ஆண்கள் பற்றிய புல்லரிக்கும்:) சம்பவங்களே இந்த பதிவு...:))


கடுப்பு :1
(இந்த வகை ஆண்கள், தன் துணை மேல் அதீத பிரியம்/அவ நம்பிக்கையில் எல்லா வேலைகளையும் தன் தலையில் ஏற்றி கொள்ளும் பக்கா  perfectionist :)) )


என் திருமணத்திற்கு முன் நடந்த சம்பவம் இது..
எங்கம்மா வீட்டருகில் இருந்த ஒரு மாமியை விடிகாலையில் கோலம் போடும்போது மட்டுமே பார்க்க முடியும். அதுக்குபிறகு அவங்க வீட்டுக்குள்ளே போயிட்டால், வெளியே வரவே மாட்டாங்க..அவங்க கணவர் அந்த மாமா கிட்டே கேட்டால்.."மாமி அசடு, ஒண்ணுமே தெரியாதுன்னு " சொல்வார். காய்கறி வாங்குவது முதல் இஸ்திரி போட்டு வாங்கிட்டு வருவது வரை எல்லாமே "ஆல் இன் ஆல் அழகு ராஜா " நம்ம மாம்ஸ் தான்...வங்கி பணியாளரான மாமாக்கு திடீர் என்று ப்ரோமோஷன் கிடைக்க திருவனந்தபுரத்திற்கு  மாற்றலாகி  கிளம்பி விட, அவர்கள் குழந்தைகளின் கல்வி சிக்கல்களுக்காக மாமி மட்டும் மதுரையில்.


அதற்கு பிறகு தான் ட்விஸ்ட். வாசல்படி தாண்டி பழகாத மாமிக்கு காய்கறி வாங்குவது முதல் வங்கி கணக்குகள், வெளி இடங்களுக்கு சென்று சில அவசிய விஷயங்களை செய்தல்,EB யில் பில் கட்டி வருதல்...இப்படி அன்றாட அத்யாவாசிய விஷயங்கள் எதுவும் செய்ய அவ்வளவு சிரமப்பட்டு மூச்சு திணறித்தான் போனாங்க..காரணம் மாமா,மாமியை  அப்பாவியாகவே ஒரு ஓரத்தில் உட்கார வச்சது தான்..


இப்படிப்பட்ட க்வாலிடி உடைய ஆண்கள், ஏதோ ஒரு கட்டத்தில் பயங்கரமாய் அவங்க துணை கஷ்டபடுவாங்கனு யோசிக்க மறந்துடுறாங்க....(எனக்கு இன்னும் அந்த மாம்ஸ் மேலே எரிச்சல் இருக்கு...)


கடுப்பு-2
(இந்த வகை ஆண்கள், ஆளை விட்டால் போதும் சாமி என எந்த வீட்டு பொறுப்புகளையும் தட்டி கழிக்கும் எந்த சிறு  வேலையையும்,சிறிதும் தன் தலையில் ஏத்திக்காத செம அசால்ட் ஜாலி பேர்வழிகள் :) )


ஒருமுறை, என் பையனுக்கு கடுமையான ஜலதோஷம். மருத்துவர் ரத்த,மல பரிசோதனை செய்ய சொன்னவுடன், பரிசோதனைக்கு கொடுத்து விட்டு ,நாங்கள் லேப் பில் வெயிட்டிங் .அப்போ ஒரு பொண்ணு ரெண்டு சின்ன குழந்தைகளை கூட்டிகிட்டு தன் கணவரோட வந்தாங்க. அதுக்கு பிறகு அவங்களுக்குள் நடந்த உரையாடல் பின்வருமாறு..


பெண்ணின் கணவர்: "கிளம்புறேண்டி. நீ டெஸ்ட் பார்த்து முடிச்சுட்டு போன் பண்ணு. பிக் அப் பண்ண வரேன்.."


 பெண் : "கொஞ்சநேரம் தான் இருங்களேன். பெரியவன் பாடா படுத்துவாங்க "


பெ.கணவர்: "அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது...அது உன் வேல ...எனக்கு ஏகப்பட்ட வேல இருக்கு நான் கெளம்புறேன்..."


பெண் : "ம்ம்...சரிங்க...வீட்டுக்கு போயி எதுவும் தூங்கிராதிங்க...அப்புறம் போன் பண்ணினால் முழிக்க மாட்டிங்க "


பெ.கணவர்: "இல்ல..இல்ல...! போயி டிவி தான் பார்க்க போறேன்..."


அப்புறம் கிளம்பிட்டார் அந்த தியாக வள்ளல்..அதுக்கு பிறகு அந்த குட்டீஸை சமாளிக்க முடியாமல் அந்த பொண்ணு பட்ட பாடு இருக்கே...அவங்களோட பெரிய வாண்டு @ இன்டர்நேஷனல் வாலு , இரத்த பரிசோதனை எடுத்த நர்ஸ் கையை கோவத்தில் நல்லா கடிச்சு வைக்க :) அந்த பொண்ணு கையில் வச்சிருக்கும் குட்டி பாப்பாவும் பசிக்கு அழுக ...ஐயோ..பரிதாபமாய் இருந்தது...அந்த இடமே ரணகளமாய் இருந்தது கொஞ்சநேரம்...அவங்க பையனை யாராலும் சமாளிக்க முடியலை.


அவங்க கணவர் கூட இருந்து உதவி செஞ்சு இருந்தால் எவ்வளவு நல்லா இருந்து இருக்கும் அந்த பெண்ணுக்கு...அந்த பெண்ணின் கணவரை நினைச்சாலே செம எரிச்சலா இருந்தது அப்போ ...




கடுப்பு-3
(இந்த வகை ஆண்கள், தன் துணையிடம் நல்லது/கெட்டது எதையுமே பகிர்ந்து கொள்வதோ, உரையாடுவதோ பெரிய பாவம்னு யோசிக்கும் ஈகோ மக்காஸ்...)


இதை எரிச்சல் னு சொல்வதா,வருத்தம்னு சொல்லவான்னு தெரியலை...


தற்போது, என் தந்தை ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்.அவர் பணியில் இருந்தபோது நடந்த ஒரு வருத்தமான விஷயம் இது..


அப்பாவுடன் வேலை பார்த்த ஒரு ஆசிரியர்,  இலட்சக்கணக்கில் பட்டுவாடா செய்யும் "ஏலச்சீட்டு " தொழிலையும் சைடு பிசினெஸாக செய்து வந்தார்.புல்லட் வண்டியில் சட சட்னு வரும் துறு துறு ஆசிரியர், ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைய...அதற்கு பிறகு தான் பெரிய பிரச்சனைகள்.


அவர் தன் தொழில் சார்ந்த எந்த விஷயங்களையும், தன் மனைவியிடம் சின்ன அளவில் கூட சொன்னதில்லை போலே. பாவம்! அந்த அம்மாவிடம் ,சீட்டு போட்ட மக்கள் டிமாண்ட் பண்ண, அடுத்து யாரு, யாருக்கு பண பட்டுவாடா பண்ணனும், வாங்கணும் னு எதுவும் தெரியாமல் அந்த அம்மா நிலை குழைஞ்சு போக...


அப்புறம் அப்பாவோடு,  சில ஆசிரியைகள், சில ஆசிரியர்கள்  சேர்ந்து,காப்பீடு பத்திரங்கள் எல்லாம் வீட்டில் தேடி(அதுவும் அந்தம்மாக்கு தெரியலை ) பணம் பெற்று தந்து சுமாராய் பிரச்சனைகளை முடிச்சாங்க....


ஒரு பக்கம் அந்த ஆசிரியர் மறைவு பெரிய வருத்தம் என்றாலும்...அவர் இப்படி அவர் மனைவியை பற்றி யோசிக்காமல் இருந்த (ஆசிரியராய் இருந்தும் கூட) க்வாலிட்டி கொஞ்சம் வருத்தத்தை மீறி எரிச்சலும் எட்டி பார்த்தது எனக்கு என்பது உண்மை...


அந்த அனுபவம் எங்கள் அனைவருக்கும் பெரிய பாடமாவே தான் நினைச்சுகிட்டோம்...சாவு என்னைக்கு வந்து நமக்கு கை காட்டும்னு தெரியாது...ஆனால் நம் இறுதி பயணத்திற்கு  பின்பு நம்மை மட்டுமே நம்பி இருந்த உறவுகளை திக்கு தெரியாமல் அலைய விடுவது துயரத்திலும் துயரம்...கஷ்டமோ/நஷ்டமோ, துக்கமோ/மகிழ்ச்சியோ துணையிடம் ஷேர் பண்ணினால் என்ன குறைஞ்சுட போகுது???


என் அப்பா, என் அம்மாவிடம் அவர் காலத்திற்கு பின்பு அம்மாவுக்கு கிடைக்கும் பாதுகாப்பு தகவல்களை (பென்ஷன் விவரம் உள்பட) மிகவும் ப்ராக்டிக்களாய் விளக்கியும்,அறிவிருத்தியும் இருக்கிறார்( பிள்ளைகள் நாங்கள் இருந்தும் கூட) கொஞ்சம் நாங்கள் சென்டிமென்டலாய் பீல் பண்ணினாலும், எங்கள் தந்தை சொன்னது..."இதெல்லாம் சுடும் நிஜங்கள் தான்" !!


ஓகே...மக்காஸ்...நீங்க யாராவ்து இருக்கிங்களா அந்த கடுப்படிக்கும் க்வாலிட்டியில் ??:)))

February 22, 2011

இவனையெல்லாம் என்கவுண்டரில் போடுறத விட்டுட்டு...??!!!


அவ்வை ஷண்முகி படத்தில் மார்க்கெட் காட்சியில் மணிவண்ணன் டீம் டெல்லி கணேஷ் ஐ "தெளிய வச்சு தெளிய வச்சு "அடிப்பாங்க...அது காமடி க்கு தான் என்றாலும்...காட்சியமைப்பில் சொல்ல வருவது சம்பந்தப்பட்ட ஆளு அந்த "வலியை" தெளிவா உணரனும்னு...


நேத்து எனக்கு வந்த ஒரு நியூஸ் எஸ்.எம்.எஸ்..."kasab smiled as court upheld death sentence"

உண்மைய சொல்ல போனால் இந்த பதிவு போடுவதே இந்த எஸ் எம் எஸ் படிச்சு கடுப்பானத்தில் தான்...



கசாப்...
  அஜ்மல்
கசாப்...

இவன் பேரை சொன்னாலே....ஒவ்வொரு ஈவு இரக்கமுள்ள இந்தியனுக்கும் நெஞ்சு கொதிக்கும்,பதறும்..

 

நாட்டையே உலுக்கின ஒரு ஈவு இரக்கமற்ற ஒரு பயங்கரவாதி...கொஞ்சம் கூட மனுஷதனமே இல்லாமல் மும்பையில் நடந்த திடீர் தாக்குதலில் தாஜ் ஹோட்டல்...ரயில்வே ஸ்டேஷன் உள்பட பல இடங்களில் கும்பலுடன் பொதுமக்கள்,போலீசார் உள்பட 160 பேரை போட்டு தள்ளிய கும்பலில் இருந்த ஒரு கொலைகார குரூபி..



இவன் கும்பலில்,மற்றவர்கள் பரலோகம் போக..இவன் மட்டும் மாட்டினான்....மும்பை சம்பவம் முடிஞ்சு (26 /11 /2008 ) ...இன்னும் ....வருஷங்கள் ஓடிட்டு இருக்கு...




வாய்தா...மேல்முறையீடு...ன்னு வழக்கு ஒரு நீண்ட பயணம் போலே ஓடிட்டு தான் இருக்கு...நவம்பர் 2008 இல் பிடிபட்ட அவன்..இப்போ மார்ச் 2011 ....இப்ப வரை சிரிச்சுட்டே...பாதுகாப்போடு...
வாரம் ஒரு முறை சிக்கன் பிரியாணி சாப்டுட்டு வாழும்...சக மனிதனாய்(கைதியாய்(??), நடமாட விடும் அவலம் நம் நாட்டில் மட்டும் தான் நடக்குமோ...


கண்காணிப்பு காமெரா மூலம் சட்டத்திற்கு தேவையான அத்தனை ஆதாரம் சிக்கிய  பிறகும்...நம் இந்திய சட்டத்தில் உடனே தண்டனை வழங்க அப்படி என்ன விதிமுறைகள்..லொட்டு லொசுக்ஸ்..????????????!!!!!



என்கவுன்ட்டர் இல் போடுறவனை இன்னும் பொத்தி பொத்தி வச்சிட்டு இருக்கும் ஒரு எரிச்சல் தனமான விஷயம் சத்தியமா நம்ம நாட்டில் தான் நடக்கும்....


பின்ன...அரபு நாடுகளில் கொடுங்கோல் தண்டனை செய்பவர்களுக்கு எல்லாம் அவர்கள் கொடுக்கும் தண்டனை பார்த்து என்னடா இவனுங்க இப்படி பண்றாங்கன்னு கொஞ்சம் மிரண்டுருக்கேன் ...ஆனால் நேற்று என் முடிவை மாத்திகிட்டேன்...நம்ம நாட்டிலும் ஏன் இந்த தண்டனை நடைமுறை படுத்தகூடாது...???

ஒரு கொடூரமான கொலையாளி,விவரிக்கவே முடியாத ஒரு மகாபாவிக்கு.. இன்னும் பாதுகாப்பு கொடுத்து கிட்டத்தட்ட 16 கோடி ரூபா (அவன் பாதுக்காப்புக்காம்) ம்ம வரிப்பணத்தில் இருந்து செலவழிச்சு...(நேத்து கூட வீடியோ கான்பிரன்சிங் இல் தான் அவனுக்கு விசாரணை.).காரணம் பாதுகாப்பு...


இவனுக்காய் ஒரு இந்திய வக்கீலும் அவனுக்கு ஆதரவா ஆஜராகி...(வக்கீல் சங்கத்தில் சும்மா விட்டாங்களா அந்த வக்கீலை ???!!! )...நேத்து ஹை கோர்ட் மரண தண்டணைய ஊர்ஜிதம் பண்ணுச்சாம்...ஆனால் இன்னும் கூட அவனுக்கு சான்ஸ் கொடுத்திருக்காம்...நீ மேல் முறையீடு செஞ்சாலும் செய்யலாம் பா கண்ணு ...னு....(அடுத்து ஜனாதிபதி கருணை மனு னு ஒரு பிட் ட்டு இருக்கு...)


அதான் சொல்றேன்..லூசு தனமான சட்டங்கள் நம்ம நாட்டில் இன்னும் ஏன் வச்சிட்டு இருக்காங்க...அரபு நாட்டில் இப்படி ஒருவன் செஞ்சால் இவ்வளவு நாள் அவனை ஓவியமா வச்சிட்டு இருப்பாங்களா என்ன???


பக்கத்து நாடுகளின் தாக்குதல் தொடர்ந்து நம்ம நாட்டுக்கு அச்சுறுத்தல் வந்துட்டே இருந்தாலும்...எல்லா விஷயத்திலும் "சத்திய மேவ ஜெயதே" னு கடை பிடிச்சால் ...இது மாதிரி இளிச்ச வாயனுங்களா ஆகி  ..நமக்கு  ஓராயிரம் பாதிப்பு வருவது நிச்சயம்..உறுதி...



கசாபை  எல்லாம் நடுரோட்டில் வச்சு, பாதிக்கப்பட்ட குடும்பங்களை விட்டு கல் எரிஞ்சே கொல்ல பட வேண்டிய ஆள்..இவனுக்கு என்கவுன்ட்டர் இல் கூட  சீக்கிரமா அந்த மரணம் முடிய கூடாது....


நான் முதலில் சொன்னது போலே..தெளிய வச்சு..தெளிய வச்சு மரணம் உணர பட வேண்டும்...அப்போ சிரிக்க மாட்டான் கசாப்...எத்தனை குடும்பங்கள் இவனால் நாசமாய் போயிருக்கும்...


தீர்ப்பு ஹை கோர்ட் இல் வாசிச்சு முடிச்சதும்..கசாபால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் மனைவி கதறி அழுதுட்டே சொல்லிருக்காங்க.."சீக்கிரம் இவனை இந்த வாட்டியாவது தூக்கில் போட்ருங்கன்னு"


போட்ருவாங்காலா ...??? ம்ம்...அதையும் பார்க்க தானே போறோம்....