February 1, 2011

இளையராஜா- சில சுவாரஸ்யங்கள்..!!!


என்னை பொறுத்தவரை, மொழியே தேவைப்படாத அழகான ரெண்டே விஷயங்கள்....காதலும்,இசையும் தான்..:)))
இந்த மாசம் காதல் மாசம்:) அத்தோடு இசையும் சேர்ந்தால் பொருத்தமாக தான் இருக்கும் இல்லையா?

இளையராஜா எவ்வளவு எனக்கு பிடிக்கும்னு ஏற்கனவே இதில் சொல்லிட்டேன்...:))


இசை ஞானியின் இசையில் நான் ரசித்த சில சின்ன சின்ன சுவாரஸ்யங்கள்.................


1.இசைமேதை பீத்தோவனின்  "fur elise " ட்யூன் கேட்ருக்கீங்களா?? கேட்காட்டி இப்ப கேளுங்க..time 1.13 to 1.27 இல் பியானோ கட்டைகள் வேகம் எடுத்து புகுந்து விளையாடி 1.42 இல் அப்படியே டெம்போ குறைந்து முடியும் ஆர்ப்பரிப்பு இருக்கே....இந்த ட்யூனின் ஹார்மனியில் என் ஓராயிரம் மன அலைகள் அப்படியே அடங்கி விடும் சுகானுபவத்தில் பலமுறை லயிச்சிருக்கேன்...


அப்டியே இளையராஜா இசைக்கு வருவோம்...ஏற்கனவே நான் இளையராஜா சார் இன் இசையில் மந்திரிச்சு விட்ட பொண்ணு :) அதுவும் மௌனராகம் தீம் மியூசிக் எல்லாம்............சான்ஸ் ஏ இல்ல..வயலினின் அதி அற்புத ரீங்காரம் அப்படியே இசையை தெறிச்சு நம் இமை ஓரமாய் வந்து விழும் மேஜிக் தருணம் அது.... கேட்க ஆயிரம் காதுகள் இருந்தாலும் பத்தாது....


பீத்தோவனின் "fur elise " & இளையராஜாவின்  மௌனராகம் "தீம் மியூசிக்" -ஐயும் சேர்த்து fusion போலே பரிமளிக்கும் இந்த இசை கோப்பை கேளுங்க..... யாரு ட்யூன் பெஸ்ட்...?????????? :))







2.இசைஞானியின் அதி தீவிர ரசிகர்களால் (என்னை மாதிரி :) ) இந்த பாட்டு தான் ரொம்பவே அதிகமாய் விரும்பப்பட்டு இருக்கும் னு நினைக்கிறேன்..." தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது ??!! "  (ஆட்டோ ராஜா) ."

இது கன்னடம்,மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி னு பலமொழிகளில் மட்டும் அதே ட்யூன் மாறாமல் வந்தாலும்..கேட்க என்னைக்குமே திகட்டாத அக்மார்க் இசை தேன்...

எந்த மொழியும்,வரிகளும் தேவைப்படாத,ஜஸ்ட் இந்த பாடலின் ட்யூன் மட்டும் இதோ...எனக்கு ரொம்ப ப ப பிடிச்ச flute டில் நிகழும் இசை சுவாரஸ்யத்தை கேளுங்களேன்...முக்கியமாய் அந்த interlude ..ம்ம்...வார்த்தைகளே இல்லை ராஜா சார்...








3.அப்புறம் ராஜா சார் பாடி தமிழ் இல் கேட்டு இருப்போம் நிறைய..வேறு மொழியில் ராஜா சார் இன் குரலில் கேட்கும்போது தன்னிச்சையா ஒரு சுவாரஸ்யம் வந்திருது...

இந்த "கன்னடா" பாட்டில் ராஜாவின் குரலை கேட்டு பலமுறை அசந்திருக்கேன். சமஸ்கிருதத்தில் தெள்ள தெளிவாய் அப்படிங்கிறதை  " ஸ்பஷ்டமாய் " னு சொல்லுவாங்க..ராஜா சார் இன் ஸ்பஷ்டமான கன்னடா சாங் இதோ..அவரின் ட்ரேட் மார்க் "ந..நா.."ஹம்மிங்கோடு ..:))


75 comments:

Chitra said...

இசைஞானியின் இனிய ரசிகையே, background ல இப்போ, நீங்கள் பகிர்ந்து இருக்கும் இசைதான் கேட்டு கிட்டு இருக்கேன். அபாரம்!
நீங்கள் ரசித்தது மட்டும் அல்லாமல், எங்களுடனும் பகிர்ந்து .... அவரின் தேனிசை வெள்ளத்தில் நீந்த வைத்ததற்கு நன்றி, கண்ணம்மா!

ஆனந்தி.. said...

@Chitra

Oh..dear..thanks ammu...:)))

சௌந்தர் said...

எனக்கும் இளையராஜா வை பிடிக்கும் அவர் பாடலை விட தீம் மியூசிக் ரசிகன் நான்... ஜானி படத்தில் வரும் மியூசிக், சிகப்பு ரோஜா படத்தில் வரும் மியூசிக் எல்லாம் இப்போது கூட கேட்டு கொண்டே இருக்கலாம்

பொன் மாலை பொழுது said...

Maestros fan club ல யாருமே சேர காணோமே என்ற கவலையில் இருந்தேன். அம்மாடி ....இனி அந்த கவலையே இல்லை. இன்னும் ஒரு வலையில் கூட ....ஆம்.... மாணவன் கூட சேர்ந்துள்ளார். இனம் இனத்தோடுதான் சேரும் இல்லையா?? :)))

Unknown said...

இளையராஜாவின் தீம், பின்னணி இசைக்கு எப்போதுமே தனியிடம்தான்! மௌனராகம் கேட்கும்போது எனக்கு பழைய ஞாபகங்கள் வரலை! (நான் அப்போ குழந்தையா இருந்தேனாம்!:-) ) எப்போதும் என் தெரிவு!
//தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்அங்கத்தில் யார் தந்தது //
நீங்கள் சொன்னமாதிரியே flute சூப்பர்! எனக்கு எப்போதுமே flute அதிகமாகப் பிடிக்கும்! ஆனால் நான் எதிர்பார்த்த flute இசை மிஸ்ஸிங்! :-( அது பாடல் முடிந்தபின் வரும் என்று நினைக்கிறேன்! இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி (ஜெயா டீ.வி. 2005) இல் பார்த்தேன்!
வேறென்ன சொல்ல? உங்களுக்கு நல்ல ரசனை என்பது தெரிந்ததுதானே! :-)

செங்கோவி said...

//என்னை பொறுத்தவரை, மொழியே தேவைப்படாத அழகான ரெண்டே விஷயங்கள்....காதலும்,இசையும் தான்..:)))// அடேங்கப்பா...ஆரம்பமே அமர்க்களம்..தமிழ்ச்சங்கத்தில் எனக்கும் பிடிக்கும்..

இம்சைஅரசன் பாபு.. said...

WELL DONE JOB ......நல்ல இருக்கு ......

சாந்தி மாரியப்பன் said...

ராஜா என்னிக்குமே ராஜாதான்!!..

கோலா பூரி. said...

ராஜாவின் இசைக்கு மயங்காதவர்களும் உண்டோ. ராஜா கையை வச்சா அது ராங்கா போனதில்லே.

Unknown said...

சகோ நல்லா இருக்கு நா இப்பதான் அந்த flute இசையை கேட்கிறேன்

தமிழ் உதயம் said...

இசைஞானியை பற்றி எழுதுவதென்றால் எழுதி கொண்டே போகலாம். மனிதர்களை சந்தோஷ, அமைதிப்படுத்துவதில் இசைக்கு பெரும்பங்கு உண்டு. அதிலும் இசைஞானியின் இசைக்கு உண்டு என்றால் அது இன்னும் பெருமையாக இருக்கும். அருமையான இசை பதிவு.

karthikkumar said...

ஏற்கனவே சொன்னமாதிரி ஆட்டோராஜா (சங்கத்தில் பாடாத) பாட்டெல்லாம் சான்சே இல்ல செமையா இருக்கும் :)

Anonymous said...

அந்த பாட்ட Flute ல கேக்க ரொம்ப இனிமையா இருந்துச்சு சகோ! செம!
அப்பப்போ ராஜாவின் தேவ கானங்களை பதிவேத்துங்க!

Madurai pandi said...

நீங்க குறிப்பிட்ட எந்த பாடலையும் இன்னும் நான் கேட்டது இல்ல... கேட்குறேன் !!!! கேட்டுட்டு சொல்றேன்..
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

Avargal Unmaigal said...

நீங்க குறிப்பிட்ட எந்த பாடலையும் இன்னும் நான் கேட்டது இல்ல... கேட்க நேரம் கிடைத்தால் கேட்குறேன் !!!! கேட்டுவிட்டு சொல்றேன்.( என் மனைவி தினமும் பாடும் பாடலை கேட்கவே இன்னும் நேரம் போதவில்லை இதுல இதுவேறயா?)

உணவு உலகம் said...

இளையராஜா இசையின் இனிமை போல் இருந்தது தங்கள் பதிவு. வாழ்த்துக்கள்.

வைகை said...

நான் ஏற்க்கனவே கேட்டதுதான்! இருந்தாலும் சலிக்காது! இளையராஜா பாடல்கள் பற்றி நாள் முழுவதும் பேசலாம்! அதுவும் அந்த புன்னகைமன்னன் தீம் ம்யூஸிக்........வாவ்...நன்றி சகோ!!:-))

Unknown said...

//எனக்கு ரொம்ப ப ப பிடிச்ச flute டில் நிகழும் இசை சுவாரஸ்யத்தை கேளுங்களேன்...//

முதல் தடவை (புல்லாங்குழலில்) கேட்கிறேன்.இனிமை.அருமை
அறிமுகத்திற்கு நன்றி.

அமுதா கிருஷ்ணா said...

அருமை.நான் பெற்ற இன்பம் இந்த வையகம் பெறுக..என அறிமுக படுத்தியதிற்கு வாழ்த்துக்கள்

உங்களுள் ஒருவன் said...

இசை என்பது பல பரிணாமங்களில் இருக்கு. .....
கத்துற குழந்த கிட்டேயும் இருக்கு , குத்துற கோலாகரன்கிட்டையும் இருக்கு ,

அந்நியன் 2 said...

இளைய ராஜாவின் இசையில் ஆயிரம் அர்த்தம் இருக்கும் அதைப் புரிந்து கொள்பவன் இசைப் பிரியன்,அதைப் புரியாமல் உடலையும் தலையையும் அசைப்பவன் பஞ்சத்திற்கு பாட்டு கேட்பவன்.

அவரின் பாடல்களை இரவு நேரத்தில் தனிமையில் இருந்து கேட்டால்தான் சுவரஷ்யம் தெரியும்.

ரொம்ப நன்றி தொகுத்தமைக்கு.

Unknown said...

இனி உங்களுக்கு இளைய ஆனந்தின்னு பட்டம் கொடுக்கலாம்னு நினைக்கிறேன், என்ன சொல்றீங்க மேடம்?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நன்றி சகோ! இளையராஜா பத்தி வழக்கமா இல்லாமல், வித்தியாசமாக எழுதி அசத்தீட்டீங்க! அந்த கன்னட பாடலைக் கேட்டேன்! அருமையாக இருக்குது! உங்களுக்கு கன்னடா தெரியுமா? எனக்கு சுத்தம்! மலையாளம் மட்டும் கொஞ்சம் பறையும்!!.


" தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது ??!! " (ஆட்டோ ராஜா) ."


இந்தப் பாட்டு எனக்கும் ரொம்பவே புடிக்கும்! வாழ்த்துக்கள் சகோ!

வந்தியத்தேவன் said...

இசைஞானியின் பாடல்களைக் கேட்பதும் அவரைப் பற்றிய எழுத்துக்களை வாசிப்பதும் காதல், இசை போல் சலிக்காத விடயங்கள்.

சங்கத்தில் பாடத கவிதை புல்லாங்குழல் இசை கலக்கல்.

படங்களுக்கு தீம் மியூசிக் என்ற எண்ணக் கருவைக் கொண்டுவந்தவரே ராஜா தான்.

ராஜாவின் பாடல்கள் காலத்தால் அழியா வரம் பெற்றவை.

சந்தக்கவி.சூசைப்பாண்டி9578367410 said...

முயற்சி அருமை

ஆயிஷா said...

முயற்சி அருமை.வாழ்த்துக்கள்.

ஆதவா said...

கலக்கல் பதிவு. இளையராஜாவைப் பற்றி / இசையைப் பற்றி எத்தனை நேரம்வேண்டுமானாலும் எழ்திக் கொண்டேயிருக்கலாம். என்னைக்கும் அவர்தான் இசைக்கு ராஜா!

R. Gopi said...

ஆனந்தி, கலக்குறீங்க போங்க

Ram said...

ம்ம்..

Anonymous said...

super madam

pichaikaaran said...

கன்னட மொழிக்கென கச்சிதமாக அமைந்த குரல் இளையராஜாவின் குரல் என்பது பலருக்கு தெரியாது

மாணவன் said...

முதலில் பெரிய நன்றிங்க சகோ,

ராகதேவனின் இசையை பகிர்ந்துகொண்டமைக்கு...

மாணவன் said...

// கக்கு - மாணிக்கம் said...
Maestros fan club ல யாருமே சேர காணோமே என்ற கவலையில் இருந்தேன். அம்மாடி ....இனி அந்த கவலையே இல்லை. இன்னும் ஒரு வலையில் கூட ....ஆம்.... மாணவன் கூட சேர்ந்துள்ளார். இனம் இனத்தோடுதான் சேரும் இல்லையா?? :)))///

நாங்கதான் சார் உங்களுக்கு நன்றி சொல்லனும் “மேஸ்ட்ரோஸ் ஃபேன்ஸ் கிளப்” உருவாக்கி கொடுத்தமைக்கு.. :)))

thamizhparavai said...

thumbe va karoke versionukku nandrikaL pala...

Try 🆕 said...

இசைக்கடவுளைப் பற்றி இடுகை இட்டமைக்கு நன்றி

மோகன்ஜி said...

அழகான மேன்மையான ரசனை உங்களுக்கு... வாழ்த்துக்கள் ஆனந்தி

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

Useful Info.

Thanks

hari raj said...

ஆனந்தி

ரசிச்சு எழுதியிருக்கீங்க! இளையராஜா ரசிகனாக எனக்கு பெருமை.

ஹரி ராஜகோபாலன்

goiyala said...

@hari raj
listen to excellent song in hindi, tamil, kannada versions.
http://www.youtube.com/watch?v=RQ_NVVqfmq4 -- Kannada
http://www.youtube.com/watch?v=xX9ZLClies4&feature=related - tamil
http://www.youtube.com/watch?v=RQ_NVVqfmq4 -- hindi

சி.பி.செந்தில்குமார் said...

இளையராஜாவின் இசை ஒரு மைல் கல் என்றால் அவர்து பின்னணி இசை ஒரு சகாப்தம்

தருமி said...

முதல் இசைக்கோவியில் கடைசி 3 நிமிடத்திலிருந்து வரும் இசையில் மொட்டை பீத்தோவனைத் தாண்டியது போல் எனக்குத் தெரிவது சரியா?

பொன் மாலை பொழுது said...

// முதல் இசைக்கோவியில் கடைசி 3 நிமிடத்திலிருந்து வரும் இசையில் மொட்டை பீத்தோவனைத் தாண்டியது போல் எனக்குத் தெரிவது சரியா?//

தருமி said...


நானும் இதுபோலவே உணர்ந்தேன். பல முறை கேட்டு அதனை உறுதிபடுத்திக்கொண்டேன்.ஆனால் நான் இசை விற்பன்னன் அல்லவே. அதனால் மௌனமாய் இருந்துவிட்டேன். இசை அறிந்தவர்கள் இது பற்றி விளக்கினால் நல்லது.

ஆனந்தி.. said...

@கக்கு - மாணிக்கம்

//நானும் இதுபோலவே உணர்ந்தேன். பல முறை கேட்டு அதனை உறுதிபடுத்திக்கொண்டேன்.ஆனால் நான் இசை விற்பன்னன் அல்லவே. அதனால் மௌனமாய் இருந்துவிட்டேன். இசை அறிந்தவர்கள் இது பற்றி விளக்கினால் நல்லது. //

உண்மை தருமி ஐயா..கக்கு சார்...மொசார்ட் இசை கேட்டு இருக்கிங்களா...பலமுறை நினைச்சு இருக்கேன் ராஜா சார் கை விரல்களுக்குன்னே சில scales படைக்கபட்டு இருக்கோணு...

ஆனால் ..பீதோவன் னின் இந்த இசை கோப்பை ரொம்ப கடினம் ...E major இல் துவங்கும் இந்த உற்சாக ஆர்ப்பரிப்பு...இடையில் complex scales லும் அசத்தி இருப்பார்...

ராஜா சார் க்கு உரிய அங்கீகாரம் இன்னும் கிடைக்காவிட்டாலும் நம்மை போல ஆராதிப்பர்வர்களுக்கு என்றும் அவர் ஒரு legend !!!

ஆனந்தி.. said...

@மாத்தி யோசி
நன்றி ராஜிவன்..முன்னர் பெங்களூர் இல் இருந்தபோது கன்னடா சுமாராய் எழுத, படிக்க கற்று கொண்டேன்...ஓரளவு அப்போ புரிஞ்சது மொழி...ஆனால் பேச தெரியாது..:)) இப்போ மதுரைக்கு மீண்டும் கணவரின் பணி மாறுதலில் வந்த பிறகு...சுத்தமா எல்லாமே மறந்து போயிட்டேன்னு நினைக்கிறேன்...ஆனால் ராஜா சார் இன் இசையில் மொழியே தேவை இல்லையே ராஜீவ்...சரிதானே...:))

குறையொன்றுமில்லை. said...

ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா.

நிரூபன் said...

இளையோர் முதல் முதியோர் வரை அனைவரையும் தன் இசையால் கட்டிப் போடும் திறமை, பெருமை இசைஞானிக்கே உரிய தனித்துவம். நாங்கள் ராஜாவை தமிழில் மட்டுமே ரசிக்கிறோம். ஏனைய மொழிகளிலும் நீங்கள் ராஜாவின் இசைக்கு ரசிகை என்பதை தங்களின் இப் பதிவு உணர்த்துகின்றது. ராஜா எப்போதுமே ராஜா தான்.

Pranavam Ravikumar said...

அருமை!!!

Prabu M said...

//என்னை பொறுத்தவரை, மொழியே தேவைப்படாத அழகான ரெண்டே விஷயங்கள்....காதலும்,இசையும் தான்..:)))
//

ஃபர்ஸ்ட் பால் சிக்ஸர் அக்கா...
ஏகப்பட்ட ரீப்ளே போட்டு நிறைய தடவை வாசிச்சிட்டேன்.... ரொம்ப ரொம்ப அழகான ஆரம்பவரிகள்... கிரேட்!

Prabu M said...

பீத்தோவன் ‍ இளையராஜா காணொளி ஏற்கெனவே ஒருதடவை ஒரு விவாதத்துல இருந்தப்போ என் நண்பன் ஒருவன் (தீவிர ராஜா ரசிகன்) கொடுத்தபோது கேட்டிருக்கிறேன்.... இப்ப‌வும் கேட்டேன்.... சூப்ப‌ர்ப்.. நைஸ்.. ..

Prabu M said...

நீங்க‌ எழுதின‌ வித‌த்துல‌ ச‌த்திய‌மா அந்த‌ ட்யூன்ஸ் எல்லாம் ஃப்ளோ ஆகி... என் ரூமெல்லாம் உங்க‌ இளைய‌ராஜா இசையை ஸ்ப்ரே ப‌ண்ணிட்டீங்க‌.... ஒரே இசைம‌ண‌ம்தான்! :)

மொழியே தேவைப்ப‌டாத‌ அழ‌கான‌ விஷ‌ய‌ம் - இசை உண்மைதான் ஆனால் இங்கே இந்த‌ இசையை மொழிபெய‌ர்த்த‌ வித‌த்தில் இசைக்கு மொழியோட‌ தேவையை உண‌ர்த்தும்வித‌மான‌ ஒரு ப‌திவு இது.... இதுபோன்ற எழுத்துப் ப‌திவுக‌ள்தான் உண்மையில் எம் எஸ் விக்கு இளைய‌ராஜாவுக்கு ர‌ஹ்மானுக்கு எல்லாம் ஆஸ்கார் கிராமி எட்ச‌ட்ரா எட்ச‌ட்ரா....

அதாவ‌து ஒரு ர‌சிக‌னின் ஆத்மார்த்த‌மான‌ உள்ள‌க்கிட‌க்கை வெளிப்ப‌டும் ஒரு க‌டித‌ம்னு சொல்ல‌வ‌றேன்....
வாழ்த்துக்க‌ள் ச‌கோ..!!

R.Gopi said...

ஆனந்தி....

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பிறகு இசையில் ஒரு தனி ராஜாங்கமே நடத்தியது இளையராஜா தான்...

இன்றும் இளையராஜாவை போல் பிஜிஎம் (பேக் கிரவுண்ட் மியூசிக்) போடுவதற்கு ஆள் இல்லை...

சூப்பர் ஸ்டார் அவர்கள் நடித்த “தளபதி” படத்தில் இளையராஜா அவர்களின் இசைத்திறமையை கண்டு வியந்திருக்கிறேன்....

geethappriyan said...

இசைஞானி பற்றிய அருமையான பதிவுக்கு நன்றி.இசைஞானியை ஆயுளுக்கும் கொண்டாடும் அளவுக்கு அவர் சாதனைகளை செய்துவிட்டார். அவரின் படைப்புகளுக்கு வெறும் விருதுகளைக் கொண்டு கௌரவிப்பது மடமை. ஏனென்றால் அவர் படைப்புகள் என்றைக்கும் நிரந்தரமானவை.உண்மையான ரசிகர்கள் ஆத்மார்த்தமான அன்பினால் அவருக்கு கௌரவம் செய்கிறோம்,அது தான் மிகப்பெரிய விருது.இது எந்த இசையமைப்பாளருக்கும் கிடைத்துவிடாது. ஒருவர் இந்த இசையை புரிந்துகொள்ளவே மனமுதிர்ச்சி தேவைப்படுகிறது.நாமெல்லாம் மிகவும் கிஃப்டட்.

krishnamoorthy said...

இனிய மதுரைக்காரிக்கு ,
திண்டுகல்லானின்
வணக்கங்கள் .
ஒரு ரசிகை மட்டும் அல்ல .
ரசிகையின் இலக்கணம் நீ .
வாழ்த்துவதோடு ,
உன்னிடம் ஒரு கோரிக்கையும் வைக்கிறேன் .
நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தமாதிரி உன் சேவைகளின்மூலம் எல்லோரையும் சந்தோசப்படுத்து .
உன்னிடம் அந்த வலிமை கொட்டிக்கிடக்கிறது.
நன்றி

Prabu Krishna said...

இளையராஜா இசைக்கு தமிழன் எல்லோரும் ரசிகன். ஒரு நல்ல நினைவூட்டல் !!!

Srini said...

நான் இளையராஜாவோட தீவிர ரசிகன்ங்கிற முறைல.... என்னோட எல்லையில்லாத சந்தொஷத்தோட உங்கள பாராட்டறேன்...

இராஜராஜேஸ்வரி said...

இசையால் இசையும் இதயம்..
கல்லும் கனியாகும்
சித்திரம் பேசும்
ஆன்மாவைத்தொடும் இளையராஜாவின்
இசையை என் இதயத்தில் இசைய
வைத்ததற்கு நன்றி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//என்னை பொறுத்தவரை, மொழியே தேவைப்படாத அழகான ரெண்டே விஷயங்கள்....காதலும்,இசையும் தான்..:)))//
ச்சே... எப்படிங்க இப்படி எல்லாம்? சூப்பர்... ரெம்ப சரி...

இளையராஜாவின் மாஸ்டர் பீஸ் மௌனராகம் பாடல்கள்னு எனக்கு தோணும்... எத்தன வாட்டி கேட்டாலும் சலிச்சதில்ல...


Thanks for sharing lovely links

Anonymous said...

>>> எங்கே செல்லும் இந்த பாதை, நான் தேடும் செவ்வந்தி பூவிது, ஆகியவை எனக்கு பிடித்த இளையராஜா பாடல்கள் !!

சிவகுமாரன் said...

ராஜா ராஜாதான். இப்ப யுவன், ராஜா இடத்தை நோக்கி பயணிக்கிறார் கவனித்திருக்கிறீர்களா ? எட்டுவாரா ?

ஆனந்தி.. said...

@சிவகுமாரன்

ஆமாம் சிவா...ராஜா சார் இன் வாரிசு இல்லையா...:)

ஆனந்தி.. said...

கருத்திட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி..நன்றி...

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...
This comment has been removed by the author.
சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இளையராஜாவின் concert in italy ல் வரும் orchestra (mood kapi)கேட்டிருக்கிறீர்களா ஆனந்தி?

சந்தத்தில் பாடாத கவிதை பாடலின் முதிர்ச்சியும் உருக்கமும் கண்களில் கசிவாய்.

ஹேமா said...

இசைதான் தனிமையைக் கொன்று என்னை வாழவைக்க்கிறது தோழி.அதுவும் இசை ராஜா !

Thanglish Payan said...

Aruamiyana pathivu..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

"மொழியே தேவைப்படாத அழகான ரெண்டே விஷயங்கள் காதலும் இசையும் தான்" உண்மை அக்கா... கலக்குங்கள் அக்கா என்ன நம்ம பக்கம் அக்காவ காணல..?

jayakumar said...

dear ananthi...i was searching a friend like you...you will know the reason if you visit my blog...i want to talk to you...can you kindly send me your contact info?...myself also from madurai...my mail id:kmrjayakumar@gmail.com cell:9865896864

arasan said...

பதிவு இசை அரசரை பற்றியது என்றால் சொல்லவே வேண்டாம் ...

போளூர் தயாநிதி said...

இளையராஜா இசையின் இனிமை போல் இருந்தது தங்கள் பதிவு.

Unknown said...

ராஜாவின் லேட்டஸ்ட் பதிவு பார்க்க.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

ஒரே வார்த்தை....'ரகளை'

நெய்வேலி பாரதிக்குமார் said...

இளையராஜாவின் இசை மழையில் சில துளிகள் கூட போதும் மனித வாழ்வின் அவசியத்தை உணர்த்துவதற்கு .. அற்புதமான கணங்களை தந்தீர்கள் தோழி ... நன்றி

நதிக்கரை said...

.ஆனந்தி உங்களது இந்தப் பதிவை தற்போதுதான் படித்தேன் (கேட்டேன் )
நன்றாக இருந்தது, இதுபோல் இன்னும் எதிர்பார்க்கிறேன.

எனக்குப் பிடித்தது How To Name it ஆல்பத்தில் இடமில்லாம் விடுபட்ட (அப்படித்தான் நினைக்கிறேன்) கமலால் சத்யா படத்தில் சேர்க்கப்பட்ட வளையோசை கலகல பாடலைக்கான இசைக் கோர்வை. அழகான அந்தப்பாடலின் வரிகளைத் தவிர்த்துக் கேட்டாலும் ராஜாவின் இசை புதிய அலைகளை மனதில் ஏற்படுத்தும்.

குறையொன்றுமில்லை. said...

உங்களை வலைச்சரத்தில்
அறிமுகப்படுத்தி இருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது
பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6777.html

பிரபாஷ்கரன் said...

இளையராஜாவை ரசிக்காமல் யார் இருக்க முடியும்