January 8, 2011

மக்கு,டுபுக்கு ஆடிட்டர்கள் அரசுக்கு உடனடி தேவை..:))



நம்ம மத்திய அமைச்சர் கபில் சிபல் ஜீ இன்னைக்கு டக்கரு விஷயத்தை சொல்லிருக்கார்...


"2G ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் 1.25 லட்சம் கோடி அரசுக்கு இழப்பே இல்லை..அது முழுக்க முழுக்க வருமான அறிக்கை கணக்கீட்டாளர்களின் கவன குறைவே காரணம் "

 

இதை கேட்ட நம்ம பொது ஜனத்துக்கு செம டவுட்டு...ஸோ, சில கேள்விகள் சிபல்ஜி யிடம் ...



அப்பாவி பொதுஜனம்: சிபல் ஜீ ! அப்போ என்ன தான் சொல்ல வரிங்க?



சிபல் ஜீ:  ஜனம் ஜீ! ஸ்பெக்ட்ரம் கணக்கு ஆடிட் பண்ணிய
பசங்க ஜீ யை டோடல் ஆ செக் பண்ணிட்டோம் ஜீ! அவங்க  எட்டாப்பு பெயில் ஜீ, ஒண்ணா நம்பர் பிராடு ஜீ! அவங்க போலி சர்டிபிகேட்ஸ் விவகாரம் சி பி ஐ கிட்டே கொடுத்துருக்கோம் ஜீ...


அ.பொ: அப்போ நீரா?



சிபல் ஜீ: மீரா ஜீ?? அழகான நடிகை ஜீ! கருணாநிதி ஜீ படத்துல வருவாங்க ஜீ...



அ.பொ : ஐயோ..நீரா ராடியா? அந்த கேசட் ??



சிபல் ஜீ: ஓ! நீரா ஜீ பாவம் ஜீ! ஆக்சுவலா ஜீ..நீரா ஜீ ஒரு சிங்கர் ஜீ..."பெண் சிங்கம்" பாட்டுகளை பாடி பார்த்துட்டு இருந்ததை ஒருத்தன் கேசெட் போட்டு வெளிய விட்டுட்டான் ஜீ...நீங்க அதை தானே கேட்கிறிங்க ஜீ??



அ.பொ: இல்ல..உளவு துறையின் டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரம்????



சிபல் ஜீ: ஓ! அதையேன் கேட்கிறிங்க ஜீ...உளவு துறையிலும் சம் பீப்பில் பிராடு ஜீ...சம் மிமிக்க்ரி ஆர்டிஸ்ட் போலி சான்றிதல் கொடுத்துட்டு அங்கயும் வேலைக்கு வந்துட்டாங்க ஜீ...வீ  வில் இன்பார்ம் டு சி பி ஐ...



அ.பொ : அப்போ ராஜா?



சிபல் ஜீ: இருங்க...கருணாநிதி ஜீ சொல்லுவார்...



கருணாநிதி: கழக கண்மணிகளே! அன்பின் உடன் பிறப்புகளே...! விடிவெள்ளி மீண்டும் பூத்தது...களங்கம் தீர்ந்தது...நிதி குடும்பத்தின் நீதி உலகுக்கு தெரிந்தது
...வரும் தேர்தலில் எள்ளியவர்களை ஓரம் கட்டி...உதய சூரியன் சின்னத்தில் .....


அ.பொ: (இடை மறித்து) மொதல்வர் ஐயா! ஸ்பெக்ட்ரம் ராஜா??



கருணாநிதி: குற்றமற்ற என் கழக கண்மணி என் செல்லம் ராஜாவை ஆறுதல் படுத்த கனிமொழி தலைமையில்
கழக மகளிர் அணி குழு விரைகிறது...:))


அ.பொ: சுடுகாட்டு கூரை ஊழலில் உங்க கட்சியில் சேர்ந்த மாஜி மந்திரி விடுதலையாமே?



கருணாநிதி: ஆமாங்க கண்மணி! அவருக்கு எதிராய் கேசில் வாதாடிய வக்கீல் போலி வக்கீல் என்றும்,ரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்து போலி சான்றிதல் பெற்று........................
......
(கண்மணி எங்க ஓடுறிங்க....????? )


பொதுஜனம் தெறித்து வெளியே ஓடி வந்து கீழ்பாக்கம் வண்டியை பிடிக்கிறார்...:)))

78 comments:

தமிழ் உதயம் said...

ஹைக்கூ ஆனந்தி தலை தெறித்து வெளியே ஓடி வந்து கீழ்பாக்கம் வண்டியை பிடிக்கிறார்...///

சரியா ஆனந்தி.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

தங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html

ஆனந்தி.. said...

@தமிழ் உதயம்

ha ha..ha ha....

ஆனந்தி.. said...

@தோழி பிரஷா

அப்டிங்களா மேடம்...நன்றிங்கோ...:))))

சௌந்தர் said...

அ.பொ: அப்போ நீரா?


சிபல் ஜீ: மீரா ஜீ?? அழகான நடிகை ஜீ! கருணாநிதி ஜீ படத்துல வருவாங்க ஜீ.../////

ROFL

ஆனந்தி.. said...

@சௌந்தர்

ROFL ??????

சௌந்தர் said...

ஆனந்தி.. said...
@சௌந்தர்

ROFL ??????////

நல்லா சிரிச்சேன் அர்த்தம்

ஆனந்தி.. said...

@சௌந்தர்

oh...

THOPPITHOPPI said...

சிபல் ஜீ: மீரா ஜீ?? அழகான நடிகை ஜீ! கருணாநிதி ஜீ படத்துல வருவாங்க ஜீ...

ஹஹாஹா......................

karthikkumar said...

சௌந்தர் said...
ஆனந்தி.. said...
@சௌந்தர்

ROFL ??????////

நல்லா சிரிச்சேன் அர்த்தம்///

இத நீ மொதல்லையே சொல்லிருக்கணும்....

karthikkumar said...

சிபல் ஜீ: மீரா ஜீ?? அழகான நடிகை ஜீ! கருணாநிதி ஜீ படத்துல வருவாங்க ஜீ.///
கருணாநிதி ஜோடியாவா... சொல்லுங்க...

karthikkumar said...

/// தமிழ் உதயம் said...
ஹைக்கூ ஆனந்தி தலை தெறித்து வெளியே ஓடி வந்து கீழ்பாக்கம் வண்டியை பிடிக்கிறார்...///


சரியா ஆனந்தி//

ஆனந்தி.. said...
@தமிழ் உதயம்

ha ha..ha ha....///

பரவாயில்ல உண்மைய ஒத்துக்கறீங்க.... :)

எல் கே said...

செம செம

Unknown said...

சகோ செம காமெடி . இந்த வட்டம் உங்களுக்கு கண்டிப்பா ஓட்டுக்கு காசு கிடைக்காது

Unknown said...

மன்மோகன் ஜீ, சோனியா ஜீ ய ஏன் விட்டுடீங்க ஆனந்திஜீ மேடம் ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கட்சி மாறி...

சே..சே.. ப்ளாக் மாறி வந்துட்டேனா?..

:-)

test said...

//கழக கண்மணிகளே! அன்பின் உடன் பிறப்புகளே...! விடிவெள்ளி மீண்டும் பூத்தது...களங்கம் தீர்ந்தது...நிதி குடும்பத்தின் நீதி உலகுக்கு தெரிந்தது.//
செம கலக்கல்ஜீ, ஆனந்திஜீ அக்காஜீ!
:-)

ஆமா எத்தனை ஜீ...?

Anonymous said...

எல்லாரும் சேர்ந்து மக்கள் தலையில மொளகா அரைக்கிராணுக..
// ஜனம் ஜீ! // :))

சௌந்தர் said...

karthikkumar said... 10
சௌந்தர் said...
ஆனந்தி.. said...
@சௌந்தர்

ROFL ??????////

நல்லா சிரிச்சேன் அர்த்தம்///

இத நீ மொதல்லையே சொல்லிருக்கணும்....///

சாரி மச்சி தெரியாம சொல்லிட்டேன்

ராஜகோபால் said...

கருணாநிதி காதில் பூ வைக்க பார்க்கும் அசால்ட்டு ஆனந்திக்கு அருவாள் ஆட்டோ அனுப்பப்படும். கூட டாக்டர் விஜய் பட சீடி வரும்.

Prabu Krishna said...

ஜி சூப்பர் ஜி.

விட்டா ஜி இவிங்க ஜி காங்கிரஸ் ஜி ஆட்சியில ஜி ஸ்பெக்ட்ரம் ஜி நடக்கவே ஜி இல்லனு ஜி சொல்லுவாங்க ஜி .

கருணாநிதி:

உடன்பிறப்புகளே வரும் இந்த தேர்தலிலும் உங்களிடம் கொள்ளை அடித்த பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டு , வாக்குகளை நீங்கள் எங்களுக்கு குத்துங்கள் அடுத்த முறை இதை விட பெரிய ஊழல்கள் செய்கிறோம். அப்புறம் இன்னும் நிறைய சினிமா தயாரிப்பு நிறுவனம் கொண்டுவரப்படும்.

ஆனந்தி.. said...

@ராஜகோபால்

மதுரகாரிக்கு அருவாள் மேட்டர் இல்ல...:)அந்த விஜய் சிடி தான் கொஞ்சம் பயமா இருக்கு...:)))

மாணவன் said...

//ஆனந்தி.. said... 22
@ராஜகோபால்

மதுரகாரிக்கு அருவாள் மேட்டர் இல்ல...:)அந்த விஜய் சிடி தான் கொஞ்சம் பயமா இருக்கு...:)))///

ஏங்க விஜய்பட சிடிய பார்த்து அவ்வளவு பயமா??? இருங்க காவலன் ஆஸ்கார் வாங்கும் அப்ப வெற்றிவிழாவுல சந்திப்போம்.....ஹிஹிஹி

மாணவன் said...

பதிவுபத்தி கமெண்ட் போடலியோ???

மாணவன் said...

///பட்டாபட்டி.... said... 16
கட்சி மாறி...

சே..சே.. ப்ளாக் மாறி வந்துட்டேனா?..

:-)//

ஓ எங்க தலைவரு பட்டா சார் வந்துருக்காரா.. அப்ப பதிவு நல்லாருக்கும் செம்மயா இருந்துச்சு பதிவு சூப்பர்....ஹிஹி

சி.பி.செந்தில்குமார் said...

u entered in a new version, comedy.. good

Ram said...

அதிகமா 'ஜி'னு வர்றது படிக்கிறதுக்கு கடுப்பா இருக்கு.. அதனால சொல்ல வர்ற காமெடியான விசயம் ட்ராஜெடியா மாறிடுது.. ஏன் கபில் சிபில் சொல்ற கோணத்துலையும் யோசிச்சு பாத்தா என்ன.???

ஆனந்தி.. said...

@தம்பி கூர்மதியன்

//அதிகமா 'ஜி'னு வர்றது படிக்கிறதுக்கு கடுப்பா இருக்கு.. அதனால சொல்ல வர்ற காமெடியான விசயம் ட்ராஜெடியா மாறிடுது.. ஏன் கபில் சிபில் சொல்ற கோணத்துலையும் யோசிச்சு பாத்தா என்ன.???//

கூர்மதி ஜி...வாங்க ஜீ..:)) நீங்க சொன்ன மாதிரி கூட ஜீ இல்லாமல் யோசிச்சும் பார்த்தேன் ஜீ பதிவு பப்ளிஷ் பண்றதுக்கு முன்னாடியே......கொஞ்சம் blunt ஆ கன்டென்ட் இருக்குறமாதிரி தோணிச்சு ஜீ..அதான் ஜீ இத்தனை ஜீ...:)) moreover ...கபில் சிபல் சொல்றமாதிரி இருந்தால் ஹிந்தியில் சொல்றதாகதான் ஜீ இருக்கும்:))...அப்டியே சாதரணமா சொன்னதை சொன்னாலும்..there is nothing special..that is y i put these ஜீ's ....:)) ஓகே வாங்க ஜீ...(இத படிச்சு கூடகொஞ்சம் கடுப்பா இருக்கா ஜீ...:)) ) உங்கள் ஆலோசனைக்கு நன்றி ஜீ..:)))

Ram said...

யப்பா.!!! தெரியாம கேட்டுட்டன்.. சின்ன புள்ள தனமால இருக்கு.. அப்படி என்ன கேட்டுட்டான் என் கட்சிகாரன்.. அப்படி என்னதான் கேட்டுடான்.. ஏதோ 'ஜி' ஏன் போட்டுட்டீங்கன்னு கேட்டுட்டான்.. அதுக்கு அவசியமா தான் போட்டன்னு சொல்லிட்டு போகவேண்டியது தானே.. மரண கொடுமையா அவன் காதுல போயி 'ஜி' 'ஜி'னு கத்தியிருக்கீங்க.. எப்படியெல்லாம் உங்க கால்ல விழுந்து கதறினான்.. இரக்கமில்லையா உங்களுக்கு.??? அடிதடி, அராஜக பதிவு எங்களுக்கும் போட தெரியும்.. ஆனா நாங்க வெளியிட மாட்டோம், வெளியிட தெரியாது..

ஆனந்தி.. said...

@தம்பி கூர்மதியன்

cool ஜீ :))))

வைகை said...

நீங்க என் பதிவுக்கெல்லாம்(?!!) வோட்டு போடும் போதே மைல்டா டவுட்டு வந்துச்சு! நீங்க கவிதை மட்டும் எழுதிற ஆள் இல்லைன்னு! இப்ப கன்பார்ம் ஆயிருச்சு!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கடும் காய்ச்சல் காரணமாக இன்று வலைப்பக்கமே வரமுடியவில்லை! பதிவைப் படித்து சிரிப்பலைகள்!! ஆமா உங்களுக்கு காமெடியும் வருமா? ஐயோ தெரியாமல் கேட்டுப்புட்டேன்.. நீங்கதான் மதுரைக்காரர் ஆச்சே காமெடி வராமலா போகும்?

Prabu M said...

@ஆனந்தி..

ROFL - Rolling On Floor Laughing!

உருண்டு உருண்டு சிரிச்சாராம்...
ஹி ஹி... நானும்தாஜி!!

Prabu M said...

அரே மேரா சகோஜீ....
என்ன இப்படி அரசியல் பதிவு போட்டு வெளுத்து வாங்கிட்டீங்க?!
நானும் படிச்சேன் கபில் சிபலின் விளக்கத்தை.... அதுவே பெரிய காமெடி ஆனா அவரு சிரிக்காம வாசிச்சு முடிச்சிருக்காரு..... நீங்க பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க....

மீராஜி கலைஞர்ஜி காமெடி... சூப்பர்ஜி!!

சூப்பர் சகோ!!

ஆமினா said...

செம காமெடி போங்க

//.நிதி குடும்பத்தின் நீதி உலகுக்கு தெரிந்தது.//
பேருலையே இதுக்கு தான் நிதி வச்சுருக்காங்களோஒ...

நானும் என் பேரை கோடீஸ்வரின்னு மாத்த போறேன் ;)

நாளைக்கே எதுவும் நடக்கலன்னு சொல்ல தான் போறானுங்க!!! ;))

உங்களுள் ஒருவன் said...

கவலை பட வேண்டாம்..... இந்த முறை ஒரு வோட்டுக்கு 40 ௦௦௦௦௦௦,000 கேட்கலாம்..........
ref:
http://wheretheworldisgoing.blogspot.com/2010/11/blog-post_613.html

Prabu M said...

//அதிகமா 'ஜி'னு வர்றது படிக்கிறதுக்கு கடுப்பா இருக்கு.. //

எல்லா செய்திகளிலும், பேச்சுகளிலும், எங்கும் எதிலும் 2ஜி 2ஜி 2ஜி
அந்த "ஜி" யையே பொறுத்துக்குறோம்.... இதென்ன பாஸ்!! :-)

Rajesh kumar said...

\\கருணாநிதி: குற்றமற்ற என் கழக கண்மணி என் செல்லம் ராஜாவை ஆறுதல் படுத்த கனிமொழி தலைமையில் கழக மகளிர் அணி குழு விரைகிறது...:))\\

ஹா ஹா ஹா .. அப்படியே பாவமன்னிப்பு கேட்க ஜெகத் கஸ்பார் தலைமைல ஒரு கூட்டம் போட்டுட வேண்டியதுதானே ..?

விடுங்கக்கா..இதேல்லாம் யோசிச்சா ரத்தக் கொதிப்புதான் அதிகமாகும்..
ஸ்பெக்ட்ரம் ஊழல்ல
ரொம்ப ரொம்ப அசிங்கப்பட்டு போனோம்ல ?

நமக்கும் என்னைக்கும் புத்தி வராது., நம்மள ஆட்சி செய்றவங்களும் திருந்த மாட்டாங்க..

vanathy said...

என்னத்தை சொல்ல?? எனக்கு அரசியல் என்றாலே " ஙே " தான்.

ஆனந்தி.. said...

நன்றி தொப்பி தொப்பி :)

நன்றி கார்த்திக்...:)) கருணாநிதிக்கு இருக்கிற ஜோடியவே என்ன முடில..இது வேறயா கார்த்தி...:))
ஆமாம்..கார்த்தி..உண்மைய ஒத்துக்குவோம்...நாங்க என்ன அரசியல்வாதியா என்ன? :)))

நன்றி LK

சகோ மணி!!..வோட்டுக்கு காசு கிடைக்காதா?...அப்போ இந்த பதிவு போட்டது யாரோ ஒரு போலி ஆனந்தி னு கதைய கட்டிட வேண்டியது தான்...எவ்வளவோ பார்த்துட்டோம்..இத பார்க்க மாட்டோமா...?:))))

இரவு வானம்!...சோனியா ஜீ...சிங்கு ஜீ பத்தி சொன்னால் பதிவு பக்கம் 100 150 தாண்டுமே..:)) அதான் மக்கா...:)))

அன்பு சகோ பட்டா பட்டி!..இந்த முறையும் புரியலே நீங்க சொன்னது...நம்ம ஊரு கூட்டணி கட்சி குழப்பம் மாதிரியே இருக்கு உங்கள் கம்மென்ட்...:)))

@ஜீ!! ஹ ஹ...தேங்க்ஸ் ஜீ...என் தம்பி ஜீ...

ஆமாம் பால்ஸ்...செமத்தியா அரைகிரானுங்க..வழக்கம்போலே லூசாகிட்டோம்...தமிழனுக்கு இதெல்லாம் புதுசு இல்லயே பாலாஜி..:))

ஆனந்தி.. said...

சௌந்தர்...மச்சி மன்னிசுட்டாராம்..:))

வாங்க ராஜகோபால்..தங்கள் முதல் வருகைக்கு நன்றி...:))

ஆமாம் பலே பிரபுஜீ ...ரொம்ப சரியா சொன்னிங்க ஜீ...:)

ஸோ மாணவன் ஜீ...நீங்க கடைசி வரை பதிவை படிக்காமலே எஸ்கேப் ஆய்ட்டிங்க..ரொம்ப சந்தோஷமுங்க ஜீ...:))இதை தான் நானும் எதிர்பார்த்தேன்...:)))

நன்றி சிபி ஜீ...

நன்றி கூர்மதி..:))) என் பிரிய சகோ பிரபு ஏதோ சொல்லிட்டு போயிருக்கார்...அதை படிச்சிங்களா?...(எங்களுக்கும் தளபதி இருக்குலப்பூ...:))) )(ஓகே..கோர்த்து விட்டாச்சு...பிரபு இனி உன் பாடு..கூர்மதி பாடு..:)) )

ஆனந்தி.. said...

@வைகை

//நீங்க என் பதிவுக்கெல்லாம்(?!!) வோட்டு போடும் போதே மைல்டா டவுட்டு வந்துச்சு! நீங்க கவிதை மட்டும் எழுதிற ஆள் இல்லைன்னு! இப்ப கன்பார்ம் ஆயிருச்சு!! //

என்ன கன்பார்ம் ஆச்சு சகோ...?? ஹ ஹ...புதிர் போட்டு போயிட்டிங்களே...:)))

ஆனந்தி.. said...

@Rajeevan

ராஜீவ்..இப்போ எப்படி இருக்கீங்க? உடம்பு சரியாய்ட்டா?? நமிதா பதிவு போட்ருக்கிங்க போலே:))...அப்போ சரியாய்ட்டு னு தான் நினைக்கிறேன்...:)))))))))

ஆனந்தி.. said...

@பிரபு எம்

வாப்பா தொர...:)) )))))

தேங்க்ஸ் சகோ..:)))

ஆனந்தி.. said...

ஹ ஹ...நன்றி ஆம்ஸ்...

நல்லது வானதி...தெரியாமல் இருக்கிறதே ரொம்ப உத்தமம்..:))

ஆனந்தி.. said...

@Rajesh kumar

///விடுங்கக்கா..இதேல்லாம் யோசிச்சா ரத்தக் கொதிப்புதான் அதிகமாகும்..
ஸ்பெக்ட்ரம் ஊழல்ல
ரொம்ப ரொம்ப அசிங்கப்பட்டு போனோம்ல ?

நமக்கும் என்னைக்கும் புத்தி வராது., நம்மள ஆட்சி செய்றவங்களும் திருந்த மாட்டாங்க.//

நோ ரத்த கொதிப்பு ராஜேஷ்...நாம காமடி பீஸ் ஆனபிறகு...எல்லாமே காமடியா பார்த்துட்டே போக வேண்டியது தான்...வேற வழி..:)))

Madurai pandi said...

பார்ரா !!! ஆனந்திக்கு காமெடி கூட நல்லா வருது!!! இந்த விசயத்துல அஞ்சா நெஞ்சன் சப்போர்ட் உங்களுக்கு தான்..
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

Asiya Omar said...

இத இங்கு எதிர்பார்க்கலை.நல்லா தான் இருக்கு.

Anonymous said...

தங்களின் வருகைக்கும், ஒருமித்த கருத்திட்டமைக்கும் நன்றி!

அவன் சரியில்லை!, இவன் சரியில்லை! யாரும் சரியில்லை?

சரி நாம் என்ன செய்தோம்?.., யாராவது நல்லவன்(அவதார புருஷன்) வரமாட்டானா? நமக்கும் மக்களுக்கும் நல்லது பண்ண.., ஏன்?

யாராவது வந்து நல்லது பண்ணனும்..,!

ஆனா அது நான் இல்ல??? என் புள்ள இல்ல!,

ஏன் இந்த சுயநலம்??? வக்கிர புத்தி???

நம்மை போலவே எல்லாரும் சிந்திப்பதால்,

நாட்டில் நல்லவன் எவனும் அரசியலுக்கும் வரதில்லை,

நல்லதும் பண்றதில்லை!

விளைவு?????????????????????????.

நடந்தது நடந்ததாக இருக்கட்டும்!


இனி நம் அடுத்த தலைமுறையின் நலன் காக்க..,

சிறு துளி பெருவெள்ளம்!

எதையும் நம்மிலிருந்து துவக்குவோம்!

வாருங்கள்! கரம் சேருங்கள்!

நல்ல எண்ணங்களால், எழுத்தால், சிந்தனையால், சீரிய செயலால்..,

தூய்மையாக்கப் பட வேண்டியது நிறைய உள்ளது..,

வலைத்தளம் முதல்... வடகோடி இமயம் வரை!!!

வாய்ப்புகள் நம்மை தேடி வராது., நாம் தான் அதை அமைத்துக்கொள்ளவேண்டும்!

இனிதே துவங்கியுள்ள இந்த சீரமைப்பு பயணம் சிறப்பாய் தொடர ..,

தங்களின் நல் ஆதரவும், முயற்சியும், சிந்தனையும், செயலும் வலு சேர்க்கட்டும்..,!!!

நன்றியுடன், உங்கள் அன்பு சகோதரன்

சாய் கோகுலகிருஷ்ணா!

Unknown said...

ரொம்ப அருமையாக் காமெடி பண்ணியிருக்கீங்க.. :-)

Unknown said...

இந்த பதிவு உங்களின் அரசியல் அசத்தல்.. நல்ல கலாய்ப்பு...

Unknown said...

அரே மேரா சகோஜீ....
அரே மேரா சகோஜீ....
அரே மேரா சகோஜீ....
அரே மேரா சகோஜீ....
அரே மேரா சகோஜீ....
அரே மேரா சகோஜீ....
ஜீ...ஜீ..ஜீ..ஜீ..ஜீ..ஜீ..

Ram said...

@ஆனந்தி:படிச்சிட்டன்.. தோ வருது பதில்..

@பிரபு எம்: பாஸ்.. கொஞ்சமாவது லாஜிக் இருக்குற மாதிரி பேசுங்க பாஸ்.. 2ஜி 2ஜினு பேசினாலும் அந்த 2ஜி ஆர்டிக்கல்ல கூட இத்தன ஜி வராது பாஸ்.. ஒரே குட்டையில ஆயிரம் பன்னி இருக்கிறதுக்கும், ஆயிரம் குட்டையில ஆயிரம் பன்னி இருக்கிறதுக்கும் வித்யாசம் இருக்கு பாஸ்..(நான் பன்னினு சொன்னது எந்த சோனியா, மன், ராகுல் போன்ற 'ஜி'க்களை கிடையாது என்பதை தெளிவுபடுத்துகிறேன்..)

Ram said...

@Sai Gokula Krishna: சார் நீங்க சொல்ற கருத்தெல்லாம் ரொம்ப ஓல்டு.. புதுசா ஏதாச்சும் யோசிக்கலாம்னு நினைக்கிறேன்.. அரசியல்ல இறங்கி தான் நம்ம நாட செழுமை படைக்கணும்கிற அவசியம் இல்ல.. பேசியே ஆட்சிய கவுத்திருக்கான், ஆட்சிய வாங்கியிருக்கான்.. பேச்சுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கோ அந்தளவுக்கு எழுத்துக்கும் மதிப்பிருக்கு.. இங்கு இருக்கும் பலர் சமூக அக்கரையோடு பல விழிப்புணர்வு கட்டூரைகளை நகைச்சுவையாக எழுதுபவர்கள்.. அதனால் இதுபோன்ற கருத்துகளை இங்கே முன்வைப்பதை தவிர்க்கலாம் என நினைக்கிறேன்.. படிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்றே பேசிகொண்டிருப்பவர்களும், பேசிகொண்டேயிருப்பதால் என்ன பயன் செயலில் இறங்குங்கள் என்று சொல்பவர்களும் இன்னும் மோகன் பட காலத்திலே இருக்காங்கன்னு நினைக்கிறேன்.. கொஞ்சம் நிகழ்காலத்துக்கு வாங்க பாஸ்.. படிக்கிறவங்க ரேட் அதிகமாகுது.. செயல்ல இறங்குறவங்களும் அதிகமாயிட்டாங்க.. எழுதி எழுதி தானே ராசாவையே கீழ இறக்கியிருக்கோம்.. இறக்குவோம்.. பொருமையா இருங்க எல்லாரையும் இறக்குவோம்..

ஆனந்தி.. said...

@தம்பி கூர்மதியன்

கூர்மதிஜீ....என்ன தத்துவம்..என்ன தத்துவம்...:)))

ஆனந்தி.. said...

@தம்பி கூர்மதியன்

என் தளபதி அதற்க்கு விடை கொடுப்பார் கூர்மதி ஜீ...அப்போ நீங்க ஜீ னு சொன்னது..கருணாநிதி ஜீ..ராஜா ஜீ...கனிமொழி ஜீ ய வா?? பன்னி னு யாரை ஜீ சொன்னிங்க..# டவுட் ...கூர்மதி ஜீ..கூர்மதி ஜீ..ரொம்ப ரொம்ப கடுப்பில் என்னை திட்டுறது மாதிரியே தோணுதே ஜீ....:)))))

சே...இந்த ஜீ னாலே சிலருக்கு குஷ்டமப்பா...சை..ஒரே கஷ்டமப்பா...:)))))

Prabu M said...

@தம்பி கூர்மதியன்

ஹஹஹா.....

நாடே 2ஜி 2ஜின்னு அல்லகோலப் பட்டுக்கிட்டு இருக்கும்போது நம்ம ரெண்டு பேர் மட்டும் இந்தக் கட்டுரையில் எத்தன "ஜீ"ன்னு சண்டை போடணுமா!! :-))) நல்லா கோர்த்துவிட்டுட்டு சிரிக்குறத பாருங்க‌!!! :)))

உங்களுக்கு "ஜி" என்ன ஹிந்தியில பிடிக்காத ஒரே வார்த்தையா?? இல்ல இங்கிலீஷ்ல பிடிக்காத ஒரே எழுத்தா??!! அல்லது கொஞ்ச நாளுக்கு முன்னாடி மிஸ்டர் அஜித்குமார் நடிச்ச "ஜி" படத்துக்கு ஓபனிங் ஷோ எதுவும் போயிட்டீங்களா!!!

விடுங்க பாஸ்..... அதையும் தாண்டி ஜி போடுறத நிறுத்தணுமா.. அவனுங்கள நிறுத்த சொல்லுங்க (அதான் கூட்டணிக்கு வைக்க ஊருக்கு வர்ர டெல்லி பார்டிங்க!) நான் நம்ம சகோவை நிறுத்த சொல்லுறேன்!!! :-)))

இன்னும் எதுவும் இருக்காஜி?? :)

ஆனந்தி.. said...

@தம்பிகூர்மதி ஜீ..

என் தானை தளபதிஜீ பதில் அளித்து விட்டார் ஜீ..கூர்மதி ஜீ...:)))

Ram said...

@://கருணாநிதி ஜீ..ராஜா ஜீ...கனிமொழி ஜீ ய வா?//

சொன்னா தப்பில்ல.. இருந்தாலும் நான் சொல்லி தான் தெரியனுமா.??

//சே...இந்த ஜீ னாலே சிலருக்கு குஷ்டமப்பா...சை..ஒரே கஷ்டமப்பா...:)))))//

யாருப்பா அது..???

@ பிரபு எம்://எத்தன "ஜீ"ன்னு சண்டை போடணுமா!! :-//

ஓ.. நம்ப சண்ட போடுறோமா.??? பாஸ் நீங்க சரி காமெடி..

//உங்களுக்கு "ஜி" என்ன ஹிந்தியில பிடிக்காத ஒரே வார்த்தையா?? இல்ல இங்கிலீஷ்ல பிடிக்காத ஒரே எழுத்தா??!! அல்லது கொஞ்ச நாளுக்கு முன்னாடி மிஸ்டர் அஜித்குமார் நடிச்ச "ஜி" படத்துக்கு ஓபனிங் ஷோ எதுவும் போயிட்டீங்களா!!! //

ஓபனிங் ஷோ போனது உண்மைதான்.. இருந்தாலும் நீங்க திரும்ப திரும்ப தப்பு பண்றீங்க.. நான் 'ஜி'ங்கற வார்த்தைய எடுக்க சொல்லல.. அதோட எண்ணிக்கைய குறைக்க சொல்றன்..

//விடுங்க பாஸ்..... அதையும் தாண்டி ஜி போடுறத நிறுத்தணுமா.. அவனுங்கள நிறுத்த சொல்லுங்க (அதான் கூட்டணிக்கு வைக்க ஊருக்கு வர்ர டெல்லி பார்டிங்க!) நான் நம்ம சகோவை நிறுத்த சொல்லுறேன்!!! :-)))//

ஆமாம்..அப்ப தோழி அவங்களோட ரசிகையா.. அவங்க வழியதான் பின்பற்றுவாங்களா.? கொஞ்சி கொஞ்சி குழைந்து நம்மை நாசமாக்குவது ஆங்கிலேய காலத்திலிருந்தே தான் நடக்குதே இதிலென்ன இருக்கு.. அவன் 'ஜி'ன்னு சொல்றான், நீங்களும் சொல்றீங்க.. அவன் நாட்ட கொள்ளை அடிக்கிறான்.. நீங்களும் அடிப்பீங்களா..(ஒருவேல அடிக்கிறாங்களோ.?) அவங்க கொள்ளை அடிக்கிறத விட்டாதான் நீங்களும் விடுவீங்களோ.?

AshIQ said...

ராஜானா என்ன? மக்கள் வரிப்பணத்தை வாங்கி நிர்வாகம் செய்வதுதானே? அது குடும்ப நிர்வாகமா நாட்டு நிர்வாகமானுல்லாம் கேட்க கூடாது. வேனும்னா கூட்டு நிர்வாகம்னு வச்சுக்கோங்களேன். இருக்கிறது..இதுக்கு ஏன் இவ்வளவு குத்தாட்டம் போடுறீங்க. ஷேர் கிடைக்கலேங்குறதுக்காக Chair ர டச் பன்னக்கூடாது. வாசகர் கண்ணாடி அணிந்து நோக்கும் போது உங்க எழுத்து சூப்பர். கவிதை தெரியாமல் கவிதையை கிண்டல் பண்ணமுடியாது. அதான் உங்களுக்கு வண்டி வண்டியா வருமே. அப்பறம் கேட்கவா வேனும். அரட்டையாய் அரசியல் சொல்லித்தந்த ஆனந்திக்கே எங்கள் ஓட்டு. எங்கள் ஓட்டு அருவாள் சின்னதிதிற்கே :))
அன்புடன்
ஆஷீக்

AshIQ said...

ச்சீய்...யாருப்பா அது ஜீ..ஜீனு கத்திகிட்டு..ச்சீ நிறுத்துங்கப்பா
அன்புடன்
ஆஷிக் ஜீ

AshIQ said...

//அப்டிங்களா மேடம்...நன்றிங்கோ...:)))) //
அதுக்கு ஏன் கலாய்க்கிறீங்க?
அது எவ்வளவு பெருந்தண்மையா
எல்லாருக்கும் மெடல் குத்திகிட்டு வருது அதை போய் கிண்டல் பன்றீங்களே மேடம்...அகம்பாவத்தின் உச்சகட்டத்துக்கே போய்கிட்டு இருக்க! ஆமா சொல்லிட்டேன்
:)))
என்றும் அன்புடன்
ஆஷீக்

ஆனந்தி.. said...

@AshIQ

//அகம்பாவத்தின் உச்சகட்டத்துக்கே போய்கிட்டு இருக்க! ஆமா சொல்லிட்டேன்//
:)))

ஹ ஹ...ஆனாலும் நீ ரொம்ப புகழ்ற..:))))

ஆனந்தி.. said...

சரி கூர்மதி ஜீ...அதெல்லாம் விடுங்க...இதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு இந்த உரையை இத்தோடு முடித்து கொள்ளலாம்...
a,b,c,d,e,f,..,h எனக்கு f க்கு அப்புறம் வர லெட்டர் எப்படி சொல்லனும்னு மறந்து போச்சு நீங்க உணர்ச்சி வசப்பட்டதில்..:))) அதனால் அதை மட்டும் சொல்லிருங்க..:))) கூர்மதி...ஹாப்பி பொங்கல்...:))
கூர்மதி..பிரபு என் அருமை இணைய சகோ...http://vasagarthevai.blogspot.com/ முடிஞ்சால் அவரின் பாட்டிகதை எபிசொட் படிச்சு பாருங்க..

@பிரபு...சும்மா ஜாலிக்கு தான் கோர்த்து விட்டேன் பிரபு...சும்மா சொல்ல கூடாது ரெண்டு பேருமே நல்லா கலாய்ச்சிங்க...கூர்மதி நல்லா கவிதை எழுதுவார் பிரபு...http://kirukaninkirukals.blogspot.com/
கூர்மதி விகடன் பத்திரிகை நிருபர்...:)
ரெண்டு சகோ க்களும் என் நன்றிகள்...:)))

அன்புடன் மலிக்கா said...

ஹைக்கூ ஆனந்தி அதிரடி ஆனந்தி
ஆகிட்டாங்களாம்..

நல்ல கல[ந]க்கல்.

Madurai pandi said...

பொங்கல் வாழ்த்துக்கள் சகோ!!

Chitra said...

பொதுஜனம் தெறித்து வெளியே ஓடி வந்து கீழ்பாக்கம் வண்டியை பிடிக்கிறார்...:)))


......மக்களை பைத்தியக்காரர்களாக ஆக்குவதே அவர்களுக்கு வேலையை போச்சு....


வர வர ... உங்கள் பதிவுகள் எல்லாம், செம களை கட்டி வருது.... பட்டையை கிளப்புறீங்க....

ஆனந்தி.. said...

@மதுரை பாண்டி

நன்றி எங்க ஊரு சகோ மதுரை பாண்டி...உங்களுக்கும் என் இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்..பொங்கல் எங்க நம்ம ஊர்லயா மதுரை பாண்டி...?? பாலமேடு,அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்துப்பிங்களா?? உங்கள் லோகோ படம் கூட அப்டி தான் இருக்கு..:)))

ஆனந்தி.. said...

@நன்றி ஆசியா ஓமர்..
@நன்றி சாய்...
@நன்றி பாபு...
@நன்றி பாரத் பாரதி...தங்கச்சிக்கு அக்காவின் பொங்கல் தின வாழ்த்துக்கள்..:))
@தேங்க்ஸ் ஆஷிக்...:)))
@தேங்க்ஸ் அம்மு@சித்ரா...:))

ஆனந்தி.. said...

@அன்புடன் மலிக்கா
ரொம்ப நன்றி மலிக்கா..:))

Madurai pandi said...

இல்ல சகோ!!! இந்த முறை பெங்களூர் தான்... இங்க ஜல்லிக்கட்டு எதுவும் நடக்குற மாதிரி தெரியல.. அதுனால நோ ஜல்லிக்கட்டு this டைம். (எப்டிலாம் சமாளிக்க வேண்டியது இருக்கு!!! )

ஆனந்தி.. said...

@மதுரை பாண்டி

//இந்த முறை பெங்களூர் தான்... இங்க ஜல்லிக்கட்டு எதுவும் நடக்குற மாதிரி தெரியல.. அதுனால நோ ஜல்லிக்கட்டு this டைம்.//

ஹ ஹ...இதெல்லாம் ரொம்ப ஓவர் பாண்டி..:))) ஆனாலும் நம்ம ஊரு சகோ வை விட்டு கொடுக்க கூடாது...பெங்களூர் டிராபிக் ஐ டெய்லி டேக்கிள் பண்றதே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான் பாண்டி...:)))

AshIQ said...

ஆனந்தி அக்கா ஆனந்தி அக்கா இந்த பயலுக லஞ்சம் வாங்குறாங்கள்ளா அதை பத்தி எழுதேன்..
-ஆஷீக்

Anonymous said...

கபில் சிபல் நாட்டாமை ரேஞ்சுக்கு எல்லாரையும் ஓவரா மிரட்டுறாரே..ஆனந்தி. உண்மை வெளிய வருமா..இல்ல மூடி மறைப்பாரா இந்த ஆளு..

Unknown said...

தேச பக்தி என்பது அந்நியர்கள் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதைக் குறிப்பதோடு, நம்மவர்கள் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுதலையும் குறிப்பதாகும்.
- விவேகானந்தர்.
இன்று 12-1-11. தேசிய இளைஞர் தினம்.
விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..

FARHAN said...

அ.பொ: அப்போ நீரா?


சிபல் ஜீ: மீரா ஜீ?? அழகான நடிகை ஜீ! கருணாநிதி ஜீ படத்துல வருவாங்க ஜீ...



சூப்பர் காமடி ஜி

அன்புடன் நான் said...

மிக ரசித்தேன் பாராட்டுக்கல்.//உங்களுக்கு என் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

ஹேமா said...

ஆனந்தி...கலக்குறீங்க அரசியலையும் !