December 14, 2010

இது போதும் கண்மணி...வேறென்ன நானும் கேட்பேன்..


சின்ன வயசில், நீங்க உங்க வீட்டு மொட்டை மாடி மதில் சுவரில் ஏறி உட்கார்ந்து நிலாவை ரொம்ப நேரம் பார்த்து இருக்கிங்களா?:)) 

மாலை நேர தென்றல் காற்றில்,வானத்தில் கொத்து கொத்தாய் பறக்கும் புறாக்கூட்டங்களை பார்த்து,உங்க ரெண்டு கையவும் விரிச்சு வச்சுட்டு "வெள்ளப்புறாவே...பூ போடு " னு கத்தி இருக்கிங்களா? :))

                                                  

                                                   
நான் பார்த்திருக்கேன் :))

                                                   நான் கத்தியிருக்கேன்.
....:))
 

 

எதுக்கு இதெல்லாம் சொல்றேன்னால்..சில நாட்களாக மகா கவி பாரதி அதிகமாய் என் நினைவில்..( நன்றி :  (என் இனிய நண்பர் "அவர்கள் உண்மைகள்" பதிவாளர்(தேங்க்ஸ் பாஸ்) , என் பிரிய சகோ ,பிரபு.எம்.   ,என் இனிய தோழி "கொஞ்சம் வெட்டி பேச்சு" சித்ரா, என் வழிகாட்டி& நண்பர்(ன்) ராசுகுட்டி@ரமேஷ்)
 

தொடர்கிறேன்....

 

(மதுரை-குமுளி வழி) தேனி,சின்னமனூர்,கம்பம்,சுருளி வழியா போகும்போது ஒவ்வொரு தடவையும் மனசில் ஒரு சின்ன ஏக்கம் தோணி மறையும்...


மிதமான குளிர் கிளைமேட்,வழியெங்கும் திராட்சை தோட்டங்கள்,தோட்டத்தின் நடுவே அங்கங்கே ஆர்ப்பாட்டமில்லாத சில காரைவீடுகள்,சில ஓட்டு வீடுகள்,சில குடிசை வீடுகள்....எப்படியும் தோட்டத்தில் அங்கேயும் இங்கேயுமா சில தென்னை மரங்கள்,வேப்ப மரங்கள்..தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச ஒதுக்குபுறமாய் கேணி,பம்பு செட்....அப்புறம்...வேப்பமரத்தில் தொங்கும் குழந்தையின் தூளி, ஓட்டு வீட்டின் முன் போடப்பட்ட கயித்து கட்டில், சில மண்பானைகள்,மண் குவளைகள்....



ஓ!! அழகோ அழகு!!!



சுருளி போகும்போதெல்லாம் எப்படியாவது முரண்டு பிடிச்சு கொஞ்சநேரமாவது நின்னு பார்த்துடுவேன் நான் மேலே சொன்ன அட்மாஸ்பியர் ஐ ......என் நகர்புற வாழ்க்கையில் கொஞ்சம் கூட கிடைக்காத இந்த கிராமிய மணம் என்னவோ ரொம்பவே இஷ்டம் எனக்கு..என்ன தான் பஞ்சு மெத்தையில்.ஏசி காற்றில் படுத்தாலும்...அந்த தோட்டத்து எளிமையான வீட்டில் நிலா பார்த்துட்டே படுக்கும் சுகம் என்னவோ எனக்கு கற்பனை பண்ணவே  ரொம்ப புடிச்சிருக்கு.:))



என் கற்பனை இந்த அளவுக்கு எனக்கு ருசிக்குதுனால் கட்டாயம் பாரதி யும் காரணம்...பாரதியின் எத்தனயோ பாட்டுக்கள் பிடிக்கும்..ஆனால்...மனசுக்கு ரொம்ப நெருக்கமாய்...ரொம்பவே அழகியல் உணர்ச்சியோடு..என் மனசில் சின்ன வயசிலேயே பச்சக்குன்னு ஒட்டிகிட்டது பாரதியின் இந்த பாட்டின் வரிகள்...கற்பனையை எவ்வளவு தூரம் வேணும்னாலும் பறக்க விட்டு..கண்களை அகல விரிச்சு யோசிச்சு பார்க்க வைக்கும்  அற்புதமான வரிகள்...



பாருங்க...நான் சுருளி வழியில் பார்த்த காட்சிகளுக்கும்...இந்த வரிகளுக்கும் கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கும் ...





காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
  கட்டி தர வேண்டும்-அங்கு
கேணியருகினிலே-தென்னை மரம்
   கீற்று மிள நீரும்.....

......

.....
முத்து சுடர் போலே-நிலா வொளி
   முன்பு வர வேணும்-அங்கு 

கத்துங்குயிலோசை-சற்றே வந்து
  காதில்  படவேணும்....""

இதோட முடியாது...தொடரும் பாரதியின் அற்புதமான அழகியல் வெளிப்பாடு சொல்லும் இந்த வரிகள்..



பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
  பத்தினி பெண் வேணும்-எங்கள்
கூட்டு களியினிலே-கவிதைகள்
   கொண்டு தரவேணும்....



எனக்கு சில தீராத சில கனவுகள் உண்டு...அதில்  ஒண்ணு ,என் வாழ்வின் இறுதி காலங்களை இந்த மாதிரி ரம்மியமான சூழ்நிலையில் கழிக்கணும்னுங்கிறதும் .....
 


என் மகன் இப்ப குட்டி பையன்...அவன் வளர்ந்து,என் கனவுகள் புரியும் வயதில் என் தீராத ஆசைகளை சொல்ல காத்திருக்கிறேன்...அவன் மறுக்கும் முன்,இதையும் கூறுவேன் ...

 


"இது போதும் கண்மணி...வேறன்ன நானும் கேட்பேன்..! "

















85 comments:

Unknown said...

//எனக்கு சில தீராத சில கனவுகள் உண்டு...அதில் ஒண்ணு ,என் வாழ்வின் இறுதி காலங்களை இந்த மாதிரி ரம்மியமான சூழ்நிலையில் கழிக்கணும்னுங்கிறதும் ...//

இன்று பலரின் கனவும் அதுதான்! உங்கள் கனவும் நனவாகட்டும்! :-)

ஆனந்தி.. said...

This comment has been removed by the author.

Unknown said...

//என் கற்பனை இந்த அளவுக்கு எனக்கு ருசிக்குதுனால் கட்டாயம் பாரதி யும் காரணம்...பாரதியின் எத்தனயோ பாட்டுக்கள் பிடிக்கும்//
:-)

கணேஷ் said...

அது புரவை பார்த்து சுத்துவாங்களா..என்ன? நான் கொக்கை பார்த்து சுற்றி இருக்கிறேன்...)))

எப்படியோ அந்த வெள்ளை புள்ளிகள் கொக்கு கொடுப்பதில்லை என்பதை தெரிந்து கொண்ட பிறகு கொஞ்சம் ஏமாற்றம்))

நல்லா இருக்கு அக்கா..

ஆனந்தி.. said...

@ஜீ...

எதுக்கு இந்த சிரிப்பு...:))) நம்பு ஜீ..வேற வழியே இல்ல...:)))

ஆனந்தி.. said...

@ganesh
அது நாரையா..புறாவா..கொக்கான்னு இப்ப டவுட் வருது...நீ அதி புத்திசாலி ஆச்சே....:))

கணேஷ் said...

அது கொக்குதான்...அதுவும் வெள்ளை கொக்கு..சாம்பல் நிற (குருட்டு) கொக்கு இல்லை...

இதுக்கு புத்திசாலி தான் தேவை இல்லை அக்கா..கொஞ்சம் நல்ல கண் பார்வை இருந்தா போதும்..எது கொக்கு? எது புறான்னு? கண்டுபிடிக்க)))))))))

ஆனந்தி.. said...

@ganesh

டிப்ஸ் க்கு தேங்க்ஸ்...இரு மாத்திடுறேன் கொக்கு னு....உனக்கு அறிவியல்,கை வைத்தியம்...கொக்கு வரை எல்லாமே தெரிஞ்சுருக்கே என் அன்பு தம்பியே...:)))

ஆனந்தி.. said...

பட்...கொக்குனு மாத்துறதுக்கு முன்னாடி யோசிச்சேன்..கணேஷ்..நான் வெள்ளப்புறாவே தான் கத்துவேன்..சோ, மாத்த மாட்டேன்...:)))

கணேஷ் said...

ஒன்னும் பிரச்சினை இல்லை..அடுத்த தடவை புறாவை பார்த்து சுத்தி பார்க்குறேன்..என்ன ஆகுதுன்னு பார்ப்போம்))

ஆனந்தி.. said...

எப்பிடி...சென்சார் வச்சா...இல்லை ஜீனோவை அனுப்பிவச்சா?? ஹ ஹா...

கணேஷ் said...

ஆனந்தி.. said...

எப்பிடி...சென்சார் வச்சா...இல்லை ஜீனோவை அனுப்பிவச்சா?? ஹ ஹா...//

இல்லை அடுத்த தடவை ஊருக்கு போகும் போது..))

ஆனந்தி.. said...

@ganesh

ஹ ஹ...இது பேச்சு...குட்..:)))))

karthikkumar said...

கனவு நிறைவேறட்டும்.

Chitra said...

சின்ன சின்ன விஷயங்களையும், நீங்கள் ரசித்து - எங்களையும் ரசிக்க வைக்கும் உங்கள் எழுத்து நடை அபாரம்! உங்கள் ஆசை நிறைவேறனும்......

ஆமினா said...

கொக்கே கொக்கே எனக்கொரு மச்சம் போடு”
அப்படி தான் நாங்களும் கத்துவோம் :))

ம். அந்த பக்கமா நானும் போயிருக்கேன். மலைசாரல் காத்தோட கலந்து வரும். அழகான அனுபவம்..

அது இருக்கட்டும். பாரதி ஏன் இப்படி சொல்றார்?
//பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினி பெண் வேணும்-எங்கள்//
ஏன் பத்தினி தான் வேணுமாம்????

Prabu M said...

ஹாய்ய்ய் சகோ....!

இந்த தடவையும் கலாய்க்க முடியாம பண்ணிட்டீங்களே!!! :)

சுவாசிச்ச காத்து வெளியேற வழியில்லாம கதவெல்லாம் அடைச்சுவெச்சு மூச்சுவிடக் கார்பன்‍‍ டை ஆக்ஸைடு கிடைச்சாலும் பரவாயில்ல கொஞ்சம் குளிர்ச்சியா இருந்தா போதும்னு ஏசி போட்டு அடைச்சு வெச்ச‌ எங்க‌ ஆஃபீஸ் ரூம்ல கூட அஞ்சு நிமிஷம் தேனி மாவட்டத்து தென்றல் காத்தை வீச வெச்ச என்னருமை சகோவுக்கு ஒரு மரக்கன்று! (எத்த‌னை நாள் தான் பூங்கொத்து கொடுக்குற‌து!)

தூக்கத்துல வர்ற கனவுகள் கூட சரௌண்ட் சவுண்ட்ல க்ராஃபிக்ஸ் எல்லாம் வெச்சு ஹைடெக்காதான் வருது... அப்படி ஆகிடிச்சு நம்ம அபார்ட்மெண்ட் லைஃப்ஸ்டைல்.... ஆனா ஒரு யதார்த்தமான கனவுல இயற்கையான சுகத்தை ஆர்ப்பரிக்கிற உங்களோட குழந்தை மனச ரசிக்க முடியுது ஓர் அந்நியனா... சீரியஸ்லி சகோ..... வெயில்ல கிரிக்கெட் ஆடிமுடிச்சு கிடைக்குற கேப்புல வேப்பமரக் நிழலில் ஒதுங்குவோம்.... வேப்பமரக் காத்துக்கும் அரசமரக்காத்துக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரிஞ்ச காலம் போய்..... இப்போ மரத்துக்குக் கீழே நின்னா காக்கா அசிங்கம் பண்ணிடுமோன்னு பயம் வந்திடுது.....

அருமை சகோ!!! ரொம்ப ரசிச்சேன்.... நான் பாரதியாரோட கனவைக் கனவாத்தான் பதிவிடத் துணிஞ்சேன்...
நீங்க உங்க கண்ணுல அவரு கனவை ரொம்ப உரிமையோட பார்த்திருக்கீங்க பகிர்ந்திருக்கீங்க‌.... அப்படிப்பட்ட ஒரு மாமனிதனுடைய பாடல்வரிகளை மேற்கோள்களாத்தான் பயன்படுத்த முடியும்...இப்படி உங்கள் கனவுகளுக்கு இடையே பொருத்திக் காட்டியிருக்கிறது உங்க ரசனையில் உள்ள உண்மையையும் சுத்தமான தன்னம்பிக்கையைக் காட்டுது....

உங்க கான்ஃபிடன்ஸுக்கு ஒரு ராயல் சல்யூட் சகோ...!

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான நிகழ்வுகளை நல்லாவே விவரித்து ரசித்து எழுதியிருக்கீங்க ஆனந்தி. படிக்கும்போது அந்த இடங்களை நேரில் பார்த்தது போன்ற ஒரு உணர்வு.

நல்ல பகிர்வு. வாழ்த்துகள் ஆன‌ந்தி.

நிலாமதி said...

சின்ன விடயமானாலும் மனதை தொட்டது கிராமத்து வாழ்க்கையே பேரின்பம்.

Avargal Unmaigal said...

வானத்தில் பறந்த புறாக் கூட்டத்தை பார்த்து தன் பையனுக்கு கைவிரித்து காட்டிக் கொண்டிருந்த வெள்ளைக்காரன் கையில் ஒரு புறா ஆய்(pupu) போய்விட்டது. புறா தன் கையில் pupu புப்பு போய்விட்டது அதனால் நான் போய்கையை கழுவி வருகிறேன் என்று அந்த வெள்ளைக்காரன் இங்கிலிஷில் சொல்லிவிட்டு போய்விட்டான். அதை கேட்டு கொண்டிருந்த இங்க்லிஷ் தெரியாத தமிழ் காரி தப்பாக புரிந்து கொண்டு புறாவை பார்த்து கைநீட்டி கத்தினால் கையில் அந்த புறா வந்து பூ போடும் என்று கருதி அந்த நாள் முதல் நம்மிவந்தாள். அதை புரிந்து கொள்ளாத தமிழ் கூட்டம் இன்னும் அதை நம்பி வானத்தை பார்த்து கையை நீட்டி கத்திக் கொண்டிருக்கிறது. அதில் நீங்களும் ஒருவர் என்று புரிய வைத்துவிட்டிர்கள்.

எனது பதிவிற்கான லிங்கை உங்கள் பதிவில் போட்டு எனக்கு இலவாமாக விளம்ப்ரம் கொடுத்தற்கு நன்றி! அது போல பாரதியை நினைவு கூர்ந்தற்கும் நன்றிகள் எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்

எண்ணங்கள் 13189034291840215795 said...

நாமும் நனைந்தோம் அந்த ரம்மியத்தில்.. பாரதி கனவில்...

சி.பி.செந்தில்குமார் said...

வேகமான நடை,பயணக்கட்டுரை போல் அளித்த அனுபவ முத்திரை

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டில் ரொம்ப நீளம்.

சி.பி.செந்தில்குமார் said...

நாங்களும் கூடவே வந்தது போல் இருந்தது

ஆனந்தி.. said...

@karthikkumar

நன்றி கார்த்திக்..:))

ஆனந்தி.. said...

@Chitra

நன்றி அம்மு..:))

ஆனந்தி.. said...

@ஆமினா
கொக்கே கொக்கே எனக்கொரு மச்சம் போடு”
அப்படி தான் நாங்களும் கத்துவோம் :))

ஆமி...பரமக்குடி பக்கம் அப்படி சொல்விங்களா?..ஊருக்கு ஊரு பாட்டு வேறுபடும் போலே...:))

ஆனந்தி.. said...

@ஆமினா
//அது இருக்கட்டும். பாரதி ஏன் இப்படி சொல்றார்?
//பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினி பெண் வேணும்-எங்கள்//
ஏன் பத்தினி தான் வேணுமாம்???? //

பத்தினி பெண் தானே ஆண்களின் விருப்பம்...பாரதி ஆண் புலவர்..:)) ) ஹ ஹ..இது அப்படி இல்லை ஆல் இன் ஆல் அழகு ஆமி!

வெறும் பெண் அப்படிங்கிறதை விட இங்க பத்தினி பெண் அப்படின்னு குறிப்பிட்டது தனக்கு சொந்தமான காதல் மனைவியுடன்...அப்படிங்கிறது ஆமி...இங்கே நோ புரட்சி...இது பாரதியின் அழகான வார்த்தை கையாடல்...

ஆனந்தி.. said...

@பிரபு . எம்

என் பிரிய சகோ...ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப .....தேங்க்ஸ்...:)))))))

ஆனந்தி.. said...

@Starjan ( ஸ்டார்ஜன் )

ரொம்ப நன்றி Starjan ( ஸ்டார்ஜன் ) !!

ஆனந்தி.. said...

@நிலாமதி

உண்மை நிலாமதி...எனக்கு கிராமத்து வாசம் ரொம்ப இஷ்டம்..நன்றி நிலா..:)))

ஆனந்தி.. said...

@பயணமும் எண்ணங்களும்

மிக்க நன்றி ஷாந்தி:))

ஆனந்தி.. said...

@சி.பி.செந்தில்குமார்

சிபி..உங்க கருத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி...:)))

//டைட்டில் ரொம்ப நீளம். //
உண்மை தான்...இந்த தலைப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்..இதை கொஞ்சம் short பண்ணினாலும் நல்லா இருக்குமான்னு ஒரே யோசனை..அப்படியே போட்டேன்...இனி கொஞ்சம் சின்ன தலைப்பா யோசிக்கிறேன்...மற்றொரு நண்பர் கூட (திரு.ஆஷிக்) இதை என்கிட்டே சொல்லி இருக்கார்...ரொம்ப நன்றி சிபி..:))))

Prabu M said...

இல்ல‌ ச‌கோ என்னைப் பொறுத்த‌வ‌ரை.....
பதிவைப் போலவே தலைப்பும் ரொம்ப ரொம்ப அழகு...
சில‌பேர் ப‌திவையே நீ....ள‌மா எழுதி தின‌மும் பாக‌ம் பாக‌மா வேற‌ வெளியிடும்போது த‌லைப்பு நீள‌மா இருந்தா த‌ப்பே இல்ல‌!! :)))

THOPPITHOPPI said...

அருமை

ஆனந்தி.. said...

@பிரபு . எம்

ஹ ஹ...mr.கொழுப்பு...நல்லா புரிஞ்சுடுச்சு...இனிமேலே டிவிடி வேணாம்....பாட்டி பதிவு போதும் என்னை பயமுறுத்த ...:))) தலைப்பு புடிச்சதுக்கு மீண்டும்...தேங்க்ஸ்...தேங்க்ஸ்..தேங்க்ஸ்......:))

ஆனந்தி.. said...

@THOPPITHOPPI

ரொம்ப நன்றிங்க நண்பர்.தொப்பி தொப்பி!!..;)))

டிலீப் said...

//காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டி தர வேண்டும்-அங்கு
கேணியருகினிலே-தென்னை மரம்
கீற்று மிள நீரும்.//

அருமையான வரிகள் தோழி
வாழ்த்துக்கள்

ஆனந்தி.. said...

@டிலீப்

ஆமாம் டிலிப்...பாரதியின் அழகான வரிகள்..:))

கோலா பூரி. said...

ஆனந்தி, நீங்க ரசிச்சு எழுதினபடியே படிக்கிரவங்களையும் ரசிக்க வச்சுட்டீங்க.
ஆமா என்னை புது ப்திவு போடும்படி சொல்லிகிட்டே இருப்பீங்க.புது பதிவு
ரென்டு போட்டாச்சு. அந்தபக்கமே வல்லியே. என்னாச்சு?

vanathy said...

உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள். எனக்கு இப்படியே கண்டம் கண்டமாக அலைவதிலேயே நாட்கள் போய் விட்டன. முதுமை பற்றி நினைப்பதே இல்லை. வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொள்வேன்.

சிவகுமாரன் said...

காணி நிலம் நீண்டும் எல்லோருக்கும் உள்ள கனவு. பர்வுக்கு நன்றி.

ஆனந்தி.. said...

@komu

சாரி கோம்ஸ்..எங்க வீட்டு வாலுக்கு எக்ஸாம்.நெட் பக்கம் ரொம்ப வரமுடியல...அதனாலே உங்க போஸ்ட் டையும் மிஸ் பண்ணிருக்கேன்..இதோ இப்ப போயி பார்க்கிறேன்...:)

ஆனந்தி.. said...

@vanathy

//உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள். எனக்கு இப்படியே கண்டம் கண்டமாக அலைவதிலேயே நாட்கள் போய் விட்டன. முதுமை பற்றி நினைப்பதே இல்லை. வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொள்வேன்//
ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங் வாணி...:)))) .

ஆனந்தி.. said...

@சிவகுமாரன்

நன்றி சிவகுமாரன்!!

Ram said...

--சின்ன வயசில், நீங்க உங்க வீட்டு மொட்டை மாடி மதில் சுவரில் ஏறி உட்கார்ந்து நிலாவை ரொம்ப நேரம் பார்த்து இருக்கிங்களா?:))--

இன்னைக்கும் பாத்துகிட்டு தான் இருக்கன்.

--மாலை நேர தென்றல் காற்றில்,வானத்தில் கொத்து கொத்தாய் பறக்கும் புறாக்கூட்டங்களை பார்த்து,உங்க ரெண்டு கையவும் விரிச்சு வச்சுட்டு "வெள்ளப்புறாவே...பூ போடு " னு கத்தி இருக்கிங்களா? :)) --

இன்னைக்கும் சொந்த ஊர் போனா கத்துவதுண்டு.. நம்ம சொந்த ஊர்ல தான் நம்மல பத்தி எல்லோருக்கும் தெரியுமே.!! நான் எதையும் இழக்க விரும்பாதவன்..

--நான் பார்த்திருக்கேன் :))
நான் கத்தியிருக்கேன்.....:))--

  

--சில நாட்களாக மகா கவி பாரதி அதிகமாய் என் நினைவில்.--

என்றுமே அதிகமாய் என் நினைவில்..

--மிதமான குளிர் கிளைமேட்,வழியெங்கும் திராட்சை தோட்டங்கள்,தோட்டத்தின் நடுவே அங்கங்கே ஆர்ப்பாட்டமில்லாத சில காரைவீடுகள்,சில ஓட்டு வீடுகள்,சில குடிசை வீடுகள்....எப்படியும் தோட்டத்தில் அங்கேயும் இங்கேயுமா சில தென்னை மரங்கள்,வேப்ப மரங்கள்..தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச ஒதுக்குபுறமாய் கேணி,பம்பு செட்....அப்புறம்...வேப்பமரத்தில் தொங்கும் குழந்தையின் தூளி, ஓட்டு வீட்டின் முன் போடப்பட்ட கயித்து கட்டில், சில மண்பானைகள்,மண் குவளைகள்....--

பாரதிராஜா படம் பாத்த அனுபவம்... அழிந்துவரும் இடத்தின் இனிமையான நினைவுகள்.. நானும் அனுபவித்திருக்கிறேன்.. இன்றும் ஏதாவது சமயத்தில் அனுபவிப்பேன்.

--சுருளி போகும்போதெல்லாம் எப்படியாவது முரண்டு பிடிச்சு கொஞ்சநேரமாவது நின்னு பார்த்துடுவேன் நான் மேலே சொன்ன அட்மாஸ்பியர் ஐ .....--

நல்ல அனுபவத்தை மறக்காமல், மறுக்காமல் ஏற்பது பிடித்திருக்கிறது..

--என் கற்பனை இந்த அளவுக்கு எனக்கு ருசிக்குதுனால் கட்டாயம் பாரதி யும் காரணம்..--

துன்பம் வலிக்குதுனாலும் பாரதி காரணமாய் இருப்பார்.. இனிப்பு கசத்தாலும் பாரதி காரணமாய் இருப்பார்.. கசப்பு இனித்தாலும் பாரதி காரணமாய் இருப்பார்.. எல்லாவற்றிருக்கும் பாரதியார் என் தலைவர்...

--என் மனசில் சின்ன வயசிலேயே பச்சக்குன்னு ஒட்டிகிட்டது பாரதியின் இந்த பாட்டின் வரிகள்.--

ஓ.. சின்ன வயசுல உங்களுக்கு ஒழுங்கா தமிழ் எழுத வராதா.???
இல்ல சின்ன வயசுல எழுதிபாத்தத இந்த கவிதைய அப்படியே கீழ போட்டுட்டீங்களோ.???

--கத்துங்குயோசை-சற்றே வந்து--

எழுத்து பிழை இருக்கு மேடம்.!!! கவியின் பாடலில் இப்படி எழுத்து பிழை ஏற்படுத்துவது குற்றமல்லவா.??? என்ன தான் நாம எதிர் கருத்து போட கூடாதுன்னு பாத்தாலும் நீங்களே இப்படி மாட்டிகிட்டீங்களே..

--அவன் மறுக்கும் முன்,இதையும் கூறுவேன் ...--

சிறப்பான வரி.. ஒரு வரியில் இக்கால குழந்தைகளின் மனபக்குவம்.. சிறப்பு தோழி.. இப்பதிவிலே அப்பாடலை அடுத்து எனக்கு மிகவும் பிடித்த வரி இது..


பாட்டில் நீங்கள் தேர்ந்தெடுத்த வரிகள் மிகவும் அருமை.. இறுதியில் கவி

‘எந்தன் பாட்டுத் திறத்தாலே இவையனைத்தும் பலித்திட வேண்டும்'

என்று சொல்லியிருப்பார்.. அதையும் சேர்த்திருக்கலாம்..

மொட்டைமாடி நிலா..
பூபோடென்னும் கூச்சல்..
என் பாரதி..
அந்த காட்சி வர்ணனை..
கடைசி வரி..

அனைத்தும் எனக்கும் பிடித்தவை.. மாற்று கருத்துக்கு பதில் மானாவரியாக கருத்து பறந்துவிட்டது...

sakthi said...

அழகு ரசனை :)))

வைகை said...

காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டி தர வேண்டும்-அங்கு
கேணியருகினிலே-தென்னை மரம்
கீற்று மிள நீரும்.....////////


நீங்களாவது ஆசைப்படுகிறீர்கள், ஆனால் அனைத்தையுமே அனுபவித்துவிட்டு இப்பொழுது கையிலிருந்த பொம்மையை தொலைத்த பொம்மை போல் இருக்கிறேன்! நினைவூட்டியதற்கு நன்றி இல்லை கண்டனம்!!!

DREAMER said...

வணக்கம்,
உங்கள் பதிவை வாசித்தது மிகவும் அருமையானதொரு அனுபவம்.

-
DREAMER

ஆனந்தி.. said...

@தம்பி கூர்மதியன்

//கத்துங்குயோசை-சற்றே வந்து--
எழுத்து பிழை இருக்கு மேடம்.!!! கவியின் பாடலில் இப்படி எழுத்து பிழை ஏற்படுத்துவது குற்றமல்லவா.??? என்ன தான் நாம எதிர் கருத்து போட கூடாதுன்னு பாத்தாலும் நீங்களே இப்படி மாட்டிகிட்டீங்களே..//

ஹ ஹா...உண்மை தான்...உடனே பிழையை திருத்திட்டேன் கூர்மதி...((உங்களுக்காக தான் அந்த பிழையை விட்டு வச்சிருந்தேன்னு சமாளிச்சிருக்கலாமோ??...ஹ ஹ...)))

ஆனந்தி.. said...

@தம்பி கூர்மதியன்

/இறுதியில் கவி
‘எந்தன் பாட்டுத் திறத்தாலே இவையனைத்தும் பலித்திட வேண்டும்'//

ம்ம்..எனக்கு இதை ஒட்டி தொடரும் அந்த காட்டுவெளியினிலே அம்மா னு வரும்...அதுக்கு பதிலா எந்தன்காட்டுவெளியினிலே கண்ணம்மா னு நானா வாசிச்சுப்பேன்..இன்னும் அழகான காதல் பாட்டா இது என் பார்வைக்கு தெரியும்...ரொம்ப ரொம்ப புடிச்ச பாட்டு கூர்மதி எனக்கு..என் கனவு பாட்டு இது...:))

ஆனந்தி.. said...

@தம்பி கூர்மதியன்

/துன்பம் வலிக்குதுனாலும் பாரதி காரணமாய் இருப்பார்.. இனிப்பு கசத்தாலும் பாரதி காரணமாய் இருப்பார்.. கசப்பு இனித்தாலும் பாரதி காரணமாய் இருப்பார்.. எல்லாவற்றிருக்கும் பாரதியார் என் தலைவர்...//

நல்லா இருக்கு நீங்க இதை இன்னும் அழகாய் விவரிக்கும்போது...:)

ஆனந்தி.. said...

@தம்பி கூர்மதியன்

/மொட்டைமாடி நிலா..
பூபோடென்னும் கூச்சல்..
என் பாரதி..
அந்த காட்சி வர்ணனை..
கடைசி வரி..///

நல்லா இருக்கு ஹைக்கூ...ஹ ஹ....:)))

ஆனந்தி.. said...

@sakthi

நன்றி சக்தி தேவி...:))

ஆனந்தி.. said...

@வைகை

//இப்பொழுது கையிலிருந்த பொம்மையை தொலைத்த பொம்மை போல் இருக்கிறேன்! நினைவூட்டியதற்கு நன்றி இல்லை கண்டனம்!!! //

ஹ ஹ...ரொம்ப வெறுப்பேத்தி விட்டேனா வைகை?...:))

ஆனந்தி.. said...

@DREAMER
நன்றி ஹரிஷ்..:)

Prabu Krishna said...

பாரதியின் வரிகள் எக்காலத்திற்கும் வாழ வேண்டியவை, வாழக்கூடியவை . நினைவுபடுத்திய தங்களுக்கு மிக்க நன்றி.

சிவகுமாரன் said...

வேப்பமரத்தில் தொங்கும் குழந்தையின் தூளி, ஓட்டு வீட்டின் முன் போடப்பட்ட கயித்து கட்டில், சில மண்பானைகள்,மண் குவளைகள்....
ஓ!! அழகோ அழகு!!!////
கரெக்டுங்க .ரசிச்சு சொல்லியிருக்கீங்க,

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நிலாமதி said... 19

"சின்ன விடயமானாலும் மனதை தொட்டது கிராமத்து வாழ்க்கையே பேரின்பம்.'

நிலாமதி அக்கா கூறியதை வழமொழிகின்றேன்...

Unknown said...

ரசனையான பாரதியின் பாடலை, மிக ரசனையாய் விளக்கி இருக்கிறீர்கள்..

Unknown said...

அகா... உங்களுக்கு பாரதி பிடிக்கிறது, ராஜா பிடிக்கிறது. அப்படி எனில் வாழ்வை ரசிக்கத்தெரிந்தவர் நீங்கள்..

jothi said...

//அகா... உங்களுக்கு பாரதி பிடிக்கிறது, ராஜா பிடிக்கிறது. அப்படி எனில் வாழ்வை ரசிக்கத்தெரிந்தவர் நீங்கள்,..//

ரிப்பீட்டு,.. உங்கள் பதிவுகளை மிஸ் பண்ணிவிட்டேன்,.. படிக்கிறேன் ஆனந்தி

ஆனந்தி.. said...

@jothi

ஜோ..welcome back! :)) ரொம்ப மிஸ் பண்ணிய சகோ வில் நீங்களும் ஒருவர்...உங்கள் பதிவுகளை விரைவில் எதிர்பார்கிறேன்..இப்போ சென்னையா அல்லது கட்டார் ஆ ஜோ?

ஆனந்தி.. said...

@ஆனந்தி..

நன்றி அருமை தங்கை பிரஷா...!

நன்றி பாரத் ..பாரதி...!!

நன்றி பலே பாண்டி..!

நன்றி சிவகுமரன்..!

jothi said...

சென்னைதான்,..இனி கத்தார் கிடையாது எனதான் நினைக்கிறேன்,.. மிக அதிக குடும்ப பொறுப்புகளின் காரணமாக என்னால் பதிவிட முடியவில்லை,.. (மீண்டும் அப்பாவாக பதிவு உயர்வு,.ஹி ஹி) முயற்சி செய்கிறேன் ஆனந்தி ,..

ஆனந்தி.. said...

@jothi

//(மீண்டும் அப்பாவாக பதிவு உயர்வு,.ஹி ஹி) //

ஓகே..ஓகே..:))) ரொம்ப சந்தோஷம் ஜோ...வாழ்த்துக்கள்!!!ப்ரீ ஆன பிறகு சூப்பர் பதிவு போடுங்க...

sury siva said...

தோழி அவர்கள் வலைத்தளம் வழியே இங்கு வந்தேன்.

இன்றைய நகர ( நரக ) வாழ்க்கையிலிருந்து விடுபட,
காணி நிலம் வேண்டும் என்று பாரதியின் கனவை
நீங்களும் காண்கிறீர்கள்.

எழுபது வயதில் எனக்கு நகர வாழ்வில் தோன்றிய அலுப்பு,
இல்லை, வெறுப்பு, என்னில் பாதி கூட இருக்க இயலாத‌
உங்களுக்குத் தோன்றியதில் வியப்பு என்ன இருக்கிறது !!

உங்கள் கனவுகள் பலிக்கட்டும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தோருக்கும், உங்கள் பதிவுக்கு வருகை தரும்
எல்லா நல்லிதயத்தோருக்கும்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

ஆனந்தி.. said...

@sury

மிக்க நன்றி சூரி ஐயா..!! தோழியின் (என் பிரிய தங்கையும் கூட அவள்) வலைத்தளம் மூலம் என் வலைத்தளம் வந்ததுக்கு என் வணக்கங்கள்! நிஜமாய் நகர வாழ்வு நரக வாழ்வு தான் ஐயா..என் குழந்தைக்கு சில சில சின்ன சின்ன சந்தோஷங்களையாவது கொடுக்க விரும்புகிறேன்..வார இறுதி நாட்களில் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் போர்வை விரித்து இரவு உணவுகளை நிலா பார்த்து சாப்டுவோம்...ஏதோ சின்ன சின்ன சந்தோஷங்கள்...நகரத்தில் வாழ்ந்தாலும் அது என்னவோ அந்த காணி நிலம்,நிலா என் கனவும் கூட...என் மனமார்ந்த நன்றிகள்...என் மற்றும்,என் வலைத்தள நண்பர்கள் அனைவரின் சார்பாகவும் தங்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...!!!

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃகாணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டி தர வேண்டும்-அங்கு
கேணியருகினிலே-தென்னை மரம்
கீற்று மிள நீரும்.....ஃஃஃஃ

நல்லதொரு பாடலும் பொருத்தமாய் இருக்கிறதே.. அருமை....

சௌந்தர் said...

சுருளி போகும்போதெல்லாம் எப்படியாவது முரண்டு பிடிச்சு கொஞ்சநேரமாவது நின்னு பார்த்துடுவேன் நான் மேலே சொன்ன அட்மாஸ்பியர் ஐ ......என் நகர்புற வாழ்க்கையில் கொஞ்சம் கூட கிடைக்காத இந்த கிராமிய மணம் என்னவோ ரொம்பவே இஷ்டம் எனக்கு..என்ன தான் பஞ்சு மெத்தையில்.ஏசி காற்றில் படுத்தாலும்...அந்த தோட்டத்து எளிமையான வீட்டில் நிலா பார்த்துட்டே படுக்கும் சுகம் என்னவோ எனக்கு கற்பனை பண்ணவே ரொம்ப புடிச்சிருக்கு.:))///

ம்ம ம்ம்ம் கலக்குங்க...

அணைத்து விஷயத்தையும் கவிதையா ரசிக்குறாங்க

Prabu Krishna said...

இதுவும் சூப்பரில் என் வலைப்பூவினை இணைத்தமைக்கு நன்றி தோழி. இது எனக்கு வலையுலகில் கிடைத்த முதல் அங்கீகாரம்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வாழ்த்துக்கள் சோதரி! தொடர்ந்து எழுதுங்கள்!

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

Jaleela Kamal said...

அருமையான பகிர்வு

Jaleela Kamal said...

நேரம் கிடைத்தால் இங்கும் வாங்க
http://samaiaylattakaasam.blogspot.com

அன்புடன் நான் said...

பகிர்வு மிக அருமை....

என் கிராமத்தில...
நான் சிறுவனா இருந்தப்ப.... நானும் சில சிறுவர்களும் வானத்தில் பறக்கும் கொக்கு கூட்டங்களை பார்த்து. .. இரண்டு கைவிரல்களையும் மடக்கி ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டே...”அருவாமனை திருவாமனை எனக்கோரு பூ போடு” கத்துவோம்.... அப்புறம் நகத்தில் இருக்கும் வெள்ளை புள்ளிகளை காட்டி எனக்கு பூ போட்டுடுச்சின்னு சொல்லுவோம்..... அத இப்பநினைத்தாலும்... ஒரு வித சிலிர்ப்பாதான் இருக்கு.... இதையெல்லாம் நினைவுக்கு கொண்டு வந்த உங்கப்படைப்புக்கு நன்றியும் பாராட்டும்.

Ram said...

எங்க அடுத்தது அடுத்தது.???
கமெண்ட்டுக்கு மட்டும் வந்து எட்டிபாத்துட்டு போயிடுறீங்க.???

ஆனந்தி.. said...

நன்றி மதி.சுதா..:)
நன்றி சௌந்தர் :)
நன்றி பலே பாண்டியா:)
நன்றி ராஜீவன்:)
விருதுக்கு மிக்க நன்றி அப்துல் காதர்:)
நன்றி ஜமீலா:)
வருகிறேன் ஜமீலா:)
நன்றி சகோ கருணாகரசு:))

ஆனந்தி.. said...

@தம்பி கூர்மதியன்
தோழா...வெகு விரைவில்..அடுத்து..:)))

ஆனந்தி.. said...

@வைகறை

நன்றி வைகறை...தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்:)

Meena said...

கிராமம் பத்தி என் மனதில் உள்ளதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்
ஆச்சரியமாக உள்ளது இந்த பொருத்தத்திற்கு

இல்யாஸ்.மு said...

எங்கேயோ எதையோ தேடும்போது உங்கள் வலைப்பூவை வாசிக்க நேர்ந்தது.
கிட்டத்தட்ட எல்லாவற்றையும் படித்துவிட்டேன். சலவையான ஆனால் கலவையான எண்ணங்கள்.
எழுத்துநடை உங்களுக்கு அபாரமாக வருகிறது. படிக்கத்தூண்டும் நடை. வாழ்த்துக்கள். பதிவுலகில் உலவிவரும் வஞ்சனை, கோபம், படவிமர்சனம், போட்டுதாக்கிகொள்வது போன்ற பதிவுகளுக்கு இடையில் படிக்க படிக்க லேசாக புன்முறுவலோடு ரசித்தேன். எதோ கல்லூரிதோழனை நீண்ட காலம் கழித்து நீண்ட நேரம் உரையாடிய எண்ணம் ஏற்பட்டது.

ஆனந்தி.. said...

@இல்யாஸ்.மு

ம்ம்...உங்க பின்னூட்டம் பார்த்துட்டு என்ன சொல்றதுன்னே தெரியாமல் அமைதி ஆய்ட்டேன்...எனக்கும் புகழ் பெற்று எஸ்டாப்ளிஷ் என்னை பண்ணிக்கனும்னு பெரிய ஆசை எல்லாம் இல்லை தோழா...என் ரசனைகளை எனக்கு புடிச்சமாதிரி ஷேர் பண்ணறேன்...இது எத்தனை பேருக்கு பிடிக்குதுன்னு தெரில..அப்படி பிடிச்ச நபர்களில் நீங்களும் ஒருவராய் இருப்பது..ரொம்ப சந்தோஷம்..இது போதும் கண்மணி ..வேறென்ன நானும் கேட்பேன்...:))))) நன்றி தோழா...மிக்க நன்றி..:)))

Sathish Kumar said...

//ஓ!! அழகோ அழகு!!!//

அருமை, ஆனந்தி...!

உங்கள் வார்த்தைகளுக்கு உருவம் கொடுத்து வைத்திருக்கிறேன். நீங்கள் பகிர்ந்த குமுளி, கம்பம் வழி பாதையில் நான் இதுவரை பயணித்ததே இல்லை, மனிதர்களால் அந்த அழகு சூரையாடப்படாமல் இருந்தால், நான் அங்கு செல்ல நேர்ந்தால், அதை கண்டு மகிழ்வேன். பகிர்வுக்கு நன்றி...!!!

மதுரா. வேள்பாரி said...

கனவு மெய்படவேண்டும்