Showing posts with label பாரதி. Show all posts
Showing posts with label பாரதி. Show all posts

December 14, 2010

இது போதும் கண்மணி...வேறென்ன நானும் கேட்பேன்..


சின்ன வயசில், நீங்க உங்க வீட்டு மொட்டை மாடி மதில் சுவரில் ஏறி உட்கார்ந்து நிலாவை ரொம்ப நேரம் பார்த்து இருக்கிங்களா?:)) 

மாலை நேர தென்றல் காற்றில்,வானத்தில் கொத்து கொத்தாய் பறக்கும் புறாக்கூட்டங்களை பார்த்து,உங்க ரெண்டு கையவும் விரிச்சு வச்சுட்டு "வெள்ளப்புறாவே...பூ போடு " னு கத்தி இருக்கிங்களா? :))

                                                  

                                                   
நான் பார்த்திருக்கேன் :))

                                                   நான் கத்தியிருக்கேன்.
....:))
 

 

எதுக்கு இதெல்லாம் சொல்றேன்னால்..சில நாட்களாக மகா கவி பாரதி அதிகமாய் என் நினைவில்..( நன்றி :  (என் இனிய நண்பர் "அவர்கள் உண்மைகள்" பதிவாளர்(தேங்க்ஸ் பாஸ்) , என் பிரிய சகோ ,பிரபு.எம்.   ,என் இனிய தோழி "கொஞ்சம் வெட்டி பேச்சு" சித்ரா, என் வழிகாட்டி& நண்பர்(ன்) ராசுகுட்டி@ரமேஷ்)
 

தொடர்கிறேன்....

 

(மதுரை-குமுளி வழி) தேனி,சின்னமனூர்,கம்பம்,சுருளி வழியா போகும்போது ஒவ்வொரு தடவையும் மனசில் ஒரு சின்ன ஏக்கம் தோணி மறையும்...


மிதமான குளிர் கிளைமேட்,வழியெங்கும் திராட்சை தோட்டங்கள்,தோட்டத்தின் நடுவே அங்கங்கே ஆர்ப்பாட்டமில்லாத சில காரைவீடுகள்,சில ஓட்டு வீடுகள்,சில குடிசை வீடுகள்....எப்படியும் தோட்டத்தில் அங்கேயும் இங்கேயுமா சில தென்னை மரங்கள்,வேப்ப மரங்கள்..தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச ஒதுக்குபுறமாய் கேணி,பம்பு செட்....அப்புறம்...வேப்பமரத்தில் தொங்கும் குழந்தையின் தூளி, ஓட்டு வீட்டின் முன் போடப்பட்ட கயித்து கட்டில், சில மண்பானைகள்,மண் குவளைகள்....



ஓ!! அழகோ அழகு!!!



சுருளி போகும்போதெல்லாம் எப்படியாவது முரண்டு பிடிச்சு கொஞ்சநேரமாவது நின்னு பார்த்துடுவேன் நான் மேலே சொன்ன அட்மாஸ்பியர் ஐ ......என் நகர்புற வாழ்க்கையில் கொஞ்சம் கூட கிடைக்காத இந்த கிராமிய மணம் என்னவோ ரொம்பவே இஷ்டம் எனக்கு..என்ன தான் பஞ்சு மெத்தையில்.ஏசி காற்றில் படுத்தாலும்...அந்த தோட்டத்து எளிமையான வீட்டில் நிலா பார்த்துட்டே படுக்கும் சுகம் என்னவோ எனக்கு கற்பனை பண்ணவே  ரொம்ப புடிச்சிருக்கு.:))



என் கற்பனை இந்த அளவுக்கு எனக்கு ருசிக்குதுனால் கட்டாயம் பாரதி யும் காரணம்...பாரதியின் எத்தனயோ பாட்டுக்கள் பிடிக்கும்..ஆனால்...மனசுக்கு ரொம்ப நெருக்கமாய்...ரொம்பவே அழகியல் உணர்ச்சியோடு..என் மனசில் சின்ன வயசிலேயே பச்சக்குன்னு ஒட்டிகிட்டது பாரதியின் இந்த பாட்டின் வரிகள்...கற்பனையை எவ்வளவு தூரம் வேணும்னாலும் பறக்க விட்டு..கண்களை அகல விரிச்சு யோசிச்சு பார்க்க வைக்கும்  அற்புதமான வரிகள்...



பாருங்க...நான் சுருளி வழியில் பார்த்த காட்சிகளுக்கும்...இந்த வரிகளுக்கும் கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கும் ...





காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
  கட்டி தர வேண்டும்-அங்கு
கேணியருகினிலே-தென்னை மரம்
   கீற்று மிள நீரும்.....

......

.....
முத்து சுடர் போலே-நிலா வொளி
   முன்பு வர வேணும்-அங்கு 

கத்துங்குயிலோசை-சற்றே வந்து
  காதில்  படவேணும்....""

இதோட முடியாது...தொடரும் பாரதியின் அற்புதமான அழகியல் வெளிப்பாடு சொல்லும் இந்த வரிகள்..



பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
  பத்தினி பெண் வேணும்-எங்கள்
கூட்டு களியினிலே-கவிதைகள்
   கொண்டு தரவேணும்....



எனக்கு சில தீராத சில கனவுகள் உண்டு...அதில்  ஒண்ணு ,என் வாழ்வின் இறுதி காலங்களை இந்த மாதிரி ரம்மியமான சூழ்நிலையில் கழிக்கணும்னுங்கிறதும் .....
 


என் மகன் இப்ப குட்டி பையன்...அவன் வளர்ந்து,என் கனவுகள் புரியும் வயதில் என் தீராத ஆசைகளை சொல்ல காத்திருக்கிறேன்...அவன் மறுக்கும் முன்,இதையும் கூறுவேன் ...

 


"இது போதும் கண்மணி...வேறன்ன நானும் கேட்பேன்..! "