
கரைபுரண்ட ஆற்று வெள்ளத்தை எல்லாராலும் சந்தோஷமா பார்க்க முடியுமான்னு தெரில..ஆனால்,எங்க ஊரு வைகையில் எப்பவாது நடக்கும் இந்த அதிசயத்தை கொஞ்சம் மிரட்சியுடன்,நிறையவே லயிச்சு பார்க்கத்தான் எனக்கு ஆசை...இப்போ அந்த அதிசயம் தான் நடக்குது இங்கே...
நான் சிறுவயதில் பார்த்த வைகை ஆறே வேறு.....
குட்டி குட்டி நீர் சுனைகள்,கரையோர அரசமர பிள்ளையார்,அதிகாலை ஆற்றங்கரையில் சலவை தொழிலாளர்களின் வேலை சுறுசுறுப்பு,நீர் குடித்து போகும் நாரை கூட்டங்கள்,பொதி சுமக்கும் கழுதைகளின் அணிவகுப்பு,ஆற்று மணலில் சிறுமிகளின் கிச்சு கிச்சு தாம்பாள விளையாட்டு, சிறுவர்களின் உற்சாக கம்மாய் மீன் வேட்டை....இப்படி பல..பல... :-)))
இப்போது ,,,என் அழகு வைகை உருக்குலைந்து...மணல் திருட்டு,சமூக விரோத செயல்களில் சிக்குண்டு ரொம்பவே பரிதாபமாய் வாடி தான் இருக்கு..:-(((
இப்போது ,,,என் அழகு வைகை உருக்குலைந்து...மணல் திருட்டு,சமூக விரோத செயல்களில் சிக்குண்டு ரொம்பவே பரிதாபமாய் வாடி தான் இருக்கு..:-(((
வைகை கரையோரம் அம்மா வீடு..என் சிறுவயது நிகழ்வுகளில் பெரும்பாலும் வைகையும் என்னுடன் கூடவே இருந்தது. சில அனுபவங்களை இப்ப நினைச்சால் கூட ரொம்பவே சிரிப்பு வரும். :-)))
என் ஆறு வயதில் பாட்டியுடன் நானும் தினம் தோறும் விடிகாலையில் வைகை கரையோர பிள்ளையார் கோவில் போறது வழக்கம். பாட்டி ஒரு குடத்தில் ஆற்று நீரை மோந்துட்டு வந்து பிள்ளையாரை குளிப்பாட்டி தீபம் ஏற்றி கும்பிடுவாங்க..பின்னாடியே நானும் ஒரு சின்ன டம்ளரில் ஆற்றில் நீர் எடுத்துட்டு வந்து பிள்ளையார் மேலே மெது மெதுவாய் ஊத்துவேன்...என்னவோ நானே சாமியை குளிப்பாட்டி விடும் சந்தோஷம்...அப்போ வைகையே உன்னை ,பிள்ளையார்,அந்த குளிர் ,அந்த அரசமரம்,என் பாட்டி எல்லாமே ரொம்ப பிடிக்கும்...பிடிக்கும்..பிடி க்கும்...:))))
"பாட்டியின்
குட நீரை விட-என்
பிடி நீர்
தந்ததாம்!!
கொள்ளை அழகு!!
என் பார்வையில்
கரையோரப்
பிள்ளையார்!!! :)))"
"பாட்டியின்
குட நீரை விட-என்
பிடி நீர்
தந்ததாம்!!
கொள்ளை அழகு!!
என் பார்வையில்
கரையோரப்
பிள்ளையார்!!! :)))"
அப்புறம்,என் 8 வயதில் தெருவில் கிடந்த அழுக்கு குட்டி நாயை வீட்டில் எடுத்து வந்து சீராட்டி(?) பாராட்டி(?!#@) வளர்த்த என்னிடம் இருந்து பிரித்து வைகை ஆற்றில் கொண்டு விட்ட என் குட்டி தம்பியையும்,வைகையே உன்னையும் அப்போது ஏனோ பிடிக்க வில்லை...பிடிக்க வில்லை...பிடிக்கவில்லை...:-(((
"ஆற்றின்
சுடுமணலில்
அழுதுகொண்டே
நான்!-என்
நாய்க்குட்டி
தேடி.......!
என் விழிநீர் பட்டு
உன்
சலசலக்கும்
நீரோடை கூட
அமைதியானது!-நீயோ
என் புன்னகை
தேடி..........!"
வைகை மணலில் விளையாட செல்லும்போது நான் மண்ணில் கைகளால் குவித்த மண் கோவில்களும்(?!),வீடுகளும்(@#?!) மறுநாள் வந்து பார்த்தும்,கலையாமல் இருந்த போதும்....
மாலை நேரத்தில், தாத்தாவுடன் கைகோர்த்து வைகை மணலில் காலாற நடக்கும்போது தட்டுப்படும் சிப்பிகளை கைநிறைய சேர்க்கும்போதும்....
வைகையே...உன்னை..ரொம்ப பிடிக்கும்..பிடிக்கும்...பிடிக்கும்....:-))))))
வைகையே..!!இப்போ எல்லாம் உனக்கு என்ன ஆச்சு? முழுக்க நீர் எல்லாம் வற்றி போயி ஏன் உருமாறி திரிகிறாய்..??சித்திரை திருவிழாவுக்கு மட்டுமே பொலிவுருகிறாய்..அப்புறம் மீண்டும் ஓட்டுக்குள் பதுங்கி கொள்கிறாய்...என்னை கொல்கிராய்??!!
"வைகையே!!
அந்தி சாயும்
அழகான தருணத்தில்
என் குழந்தையுடன்
உனைதேடி வருவேன்!!
அவனிடம்
சிறிது காண்பித்து விடு-நீ
பூட்டி வைத்த
என் சின்னஞ்சிறு
காலடித் தடங்களை...!!!!!! "
95 comments:
//கொஞ்சம் மிரட்சியுடன்,நிறையவே லயிச்சு பார்க்கத்தான் எனக்கு ஆசை//
எனக்கும்! :-)
@ஜீ...
என் அன்பு தம்பி ஜீ..எனக்கு தான் தெரியுமே..உன் அழகு ரசனையில் கொஞ்சூண்டு எனக்கு இருக்குனு..))))
நல்ல நினைவுகள்..எனக்கும் இதே மாதிரி உண்டு..என் வீட்டிற்கு அருகில்தான் ஆறு...
நாய்,பூனை எல்லாம் குளிப்பாட்டி பார்த்தாயிற்று...
(நீங்கள் நினைவு படுத்தியதால் அடுத்த கதை அதைப்பற்றித்தான் உண்மையும்கூட)
@ganesh
ஹ ஹ...அப்போ அந்த நாய் தான் நிஷியா...ஜீனோ வா...))))
ஹ ஹ...அப்போ அந்த நாய் தான் நிஷியா...ஜீனோ வா...))))///
இல்லை அதன் பெயர் ராஜு...நல்ல நாய்..நாளைக்கு கதையை படியுங்கள்..
@ganesh
:))))))))
சித்திரை திருவிழாவுக்கு மட்டுமே பொலிவுருகிறாய்..அப்புறம் மீண்டும் ஓட்டுக்குள் பதுங்கி கொள்கிறாய்.
..... அருமையான விதத்தில், விளக்கி இருக்கீங்க. பாராட்டுக்கள்!
அவனிடம்
சிறிது காண்பித்து விடு-நீ
பூட்டி வைத்த
என் சின்னஞ்சிறு
காலடித் தடங்களை...!!!!!! "
.... Thats so sweet!
//அவனிடம்
சிறிது காண்பித்து விடு-நீ
பூட்டி வைத்த
என் சின்னஞ்சிறு
காலடித் தடங்களை...!!!!!! "//
அழகான வெளிப்பாடு.
//அப்புறம் மீண்டும் ஓட்டுக்குள் பதுங்கி கொள்கிறாய்...என்னை கொல்கிறாய்??!! //
அருமை.
நானும் நம்ம வைகையை பத்தி எழுதனும்னு நெனச்சேன் ஆனா இவ்வளவு கவிநயத்துடன் எழுத தெரியாது . உங்க நினைவுகளையும் சேர்த்து அருமை எழுதி இருக்கீங்க நல்லா இருக்குங்க
கவிதை என் பேரை தாங்கியதாலோ என்னவோ கவிதை ரொம்ப அழகு!!!!! ஐயோ!!! சும்மாதாங்க, உண்மையிலேயே நல்லாயிருக்குங்க!!!
Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....
Submit your blog/site all the links here to get more traffic... This is a new tamil bookmark website...
www.ellameytamil.com
அருமையான வரிகள் ஆனந்தி! சிலாகித்து எழுதி உள்ளீர்கள்!
@Chitra
thanks my ammu..bommu chiththu...)))
@பாரத்... பாரதி...
மிக்க நன்றி பாரத்... பாரதி...!!
@நா.மணிவண்ணன்
அப்படியா மணி...நம்ம ஊரு வைகையை எவ்வளவு எழுதினாலும் தகும்..நீங்களும் கட்டாயம் எழுதிரிங்க...)))
@வைகை
அட வைகை!..வைகையை பார்த்து வியக்கிறதா??!!..ஹ ஹா...நன்றி வைகை...ஹேய்..இந்த கம்மென்ட் குடுக்க சுவாரஸ்யமா தான் இருக்கு...வைகையை ரசித்த வைகைக்கு வைகை மண்ணுகாரியின் நன்றிகள்...)))
@மணிபாரதி
அப்டியாங்க மணிபாரதி...நன்றிங்க...)))
@சிவா என்கிற சிவராம்குமார்
நன்றி..சிவா...சிவா...!!:)))
எனக்கு இந்த பதிவில் ரொம்ம பிடித்த்து உங்கள் தலைப்பு...
"அப்புறம்,என் 8 வயதில் தெருவில் கிடந்த அழுக்கு குட்டி நாயை வீட்டில் எடுத்து வந்து சீராட்டி(?) பாராட்டி"" கவலைபடாதிங்க வரும் வருடம் C.N.N உலக ஹீரோவுக்கு உங்க பெயரை நான் இப்போதே ரெகமண்ட் பண்ண வலைப்பதிவாளர்களிடம் ஆலோசனை பண்ணி ஏற்பாடு செய்கிறேன். ஆனா கிடைக்கும் பரிசு தொகையில் எனக்கு பங்கு தர வேண்டும் ஓகே வா.
நான் பார்த்த வைகையாரு அசிங்கமாகதான் இருந்தது ஆனால் உங்கள் பதிவு வழியாக பார்க்கும் போது மிக அழகாக இருக்கிறது. ஊருக்கு வந்து பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு டிக்கெட் எடுத்து அனுப்ப முடியுமா?
நம்ம ஊரு வைகை கரைபுரண்டு ஓடுறத டிவி ல தான் பார்த்தேன்..
மிஸ் பண்ணினேன் ரொம்ப :(
ஆனந்தி, ஆர்ப்பரித்து ஓடும் வைகையை நானும் பார்த்தேன். இயற்கையின் ஆர்ப்பரிப்பில் அது ஒரு தகவல் சொன்னது “மனிதர்களே ஜாக்கிரதை என்னை அழிக்க அழிக்க நான் வீறுகொண்டெழுவேன்”.
@Avargal Unmaigal
/வலைப்பதிவாளர்களிடம் ஆலோசனை பண்ணி ஏற்பாடு செய்கிறேன். ஆனா கிடைக்கும் பரிசு தொகையில் எனக்கு பங்கு தர வேண்டும் ஓகே வா.
நான் பார்த்த வைகையாரு அசிங்கமாகதான் இருந்தது ஆனால் உங்கள் பதிவு வழியாக பார்க்கும் போது மிக அழகாக இருக்கிறது. ஊருக்கு வந்து பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு டிக்கெட் எடுத்து அனுப்ப முடியுமா?//
ஹ ஹ...ஒத்துக்குறேன் நீங்க ஒரிஜினல் மதுரைக்காரன்னு...குசும்பு...நக்கல் எல்லாம் தெரியுதே...)))))
@Balaji saravana
பாலாஜி நீங்களும் நம்ம ஊரா?....)) கேக்கவே சந்தோஷமா இருக்கு...)))
@தவமணி
“//மனிதர்களே ஜாக்கிரதை என்னை அழிக்க அழிக்க நான் வீறுகொண்டெழுவேன்”.// super!!!
தவமணி அண்ணா...மதுரைக்கு வந்து இருந்திங்களா?? எப்படி அட்டகாசமா இருந்ததா வைகை..???))))
@Avargal Unmaigal
//எனக்கு இந்த பதிவில் ரொம்ம பிடித்த்து உங்கள் தலைப்பு...//
தேங்க்ஸ்..தேங்க்ஸ்...:)))
இந்த மதுரைக்காரனிடம் குறும்பு உண்டு ஆனால் குசும்பு கிடையாது.
@Avargal Unmaigal
அட மதுரைகாரரே..!!குறும்பு தான் பேச்சு தமிழில் குசும்பானது...:)))
நானும் எங்க ஊர் வைகைய ரொம்ப மிஸ் பன்றேன் ஆனந்தி! சின்ன வயசுல அடிக்கடி ஆத்துக்கு தண்ணி வரும். மாமாமார்ங்க, அண்ணன்க வீட்டுல குளிக்காம ஆத்துக்கு போயிடுவாங்க. பெண்களுமே அங்குள்ள தொட்டிகளில் வேண்டிய அளவு துணி தொவச்சுட்டு குளிச்சுட்டு வருவாங்க. ஆத்தங்கர ஓரத்துல நாங்க உக்காந்து விளையாடுவோம். இல்லைன்னா குளி தோண்டி உத்துல வர தண்ணிய குடிச்சு விளையாடுவோம். எனக்கு கிடச்ச சந்தோஷம் ஷாம்க்கு கிடைக்கலையேன்னு கூடிடு போனா எல்லாமே தலைகீழ் தான் :( அப்பறம் என்ன அதை பார்க் ஆக்கிவிட்டு சாயங்காலம் காத்துவாங்க போறது... :)) பழைய நினைவுகளை தூசுதட்டி எழுப்பிட்டீங்க
@ஆமினா
//( அப்பறம் என்ன அதை பார்க் ஆக்கிவிட்டு சாயங்காலம் காத்துவாங்க போறது... :)) ??
ஹ..ஹ...நிஜம் ஆமி...வீட்டுக்கு எதிர்தாபில் தானே வைகை...தாத்தா,நானும் தினமும் வாக்கிங் போவோம்...அதை அனுபவிச்சால் தான் தெரியும்...))))
//வைகை மணலில் விளையாட செல்லும்போது நான் மண்ணில் கைகளால் குவித்த மண் கோவில்களும்(?!),வீடுகளும்(@#?!) மறுநாள் வந்து பார்த்தும்,கலையாமல் இருந்த போதும்....
//
எப்போவாவது ஆத்துல தண்ணி வந்தாதான கோபுரம் இடியுறதுக்கு..
அவனவன் வீடுகட்டு வாழ்ந்துட்டு இருக்கான்...!
//மாலை நேரத்தில், தாத்தாவுடன் கைகோர்த்து வைகை மணலில் காலாற நடக்கும்போது தட்டுப்படும் சிப்பிகளை கைநிறைய சேர்க்கும்போதும்....
//
ஆனாலும் ஆத்துக்குள்ள வாக்கிங் போறது வைகையில் மட்டுமே சாத்தியம்.... நானும் போயிருக்கேன்...!
ஓகே மை டெரர் சிஸ்டர்.... நக்கல்ஸ் ஓவர்...
இப்போ சீரியஸ் கமெண்ட் :)
மதுரையில் வெள்ளம் வரும்போது மட்டும்தான் வைகை அழகு...
இங்கே வரிக்குவரி வைகை அழகு :)
ரொம்ப அழகா சின்ன வயது வைகையை மனசில் விரியவைத்து...
இப்போ உள்ள வைகையின் அந்த ஆற்றோர சலவைத்தொழிலாளர், கிச்சுக்கிச்சுத் தாம்பாள சிறுமிகள், சிறுவர்கள் எல்லாருடைய கால்தடம் விழுந்த மணலும்கூட வற்றிப்போன நிலையைப் புரியவைத்த ஆரம்பமே அழகு....
பிள்ளையாருக்குக் கிடைத்த டம்ளர் தண்ணி அபிஷேகம்....
ஆத்துல போன "மூன்றாம் பிறை" சுப்ப்ரமணி!!!
எல்லாமே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று கல்பாலத்தில் ஓர் அதிகாலை சைக்கிள் பயணம் போன உணர்வு... :-)
//"வைகையே!!
அந்தி சாயும்
அழகான தருணத்தில்
என் குழந்தையுடன்
உனைதேடி வருவேன்!!
அவனிடம்
சிறிது காண்பித்து விடு-நீ
பூட்டி வைத்த
என் சின்னஞ்சிறு
காலடித் தடங்களை...!!!!!! //
இது க்ளாஸ்!!!
சூப்பர்ப்...
ஸோ ஸ்வீட்... :)
@பிரபு . எம்
//எப்போவாவது ஆத்துல தண்ணி வந்தாதான கோபுரம் இடியுறதுக்கு..
அவனவன் வீடுகட்டு வாழ்ந்துட்டு இருக்கான்...!//
ஹலோ..கொழுப்பு பிரதர்...இப்படி எல்லாம் நம்ம ஊரு மானத்தை நாமலே வாங்கப்படாது...))))
@பிரபு . எம்
//ஆனாலும் ஆத்துக்குள்ள வாக்கிங் போறது வைகையில் மட்டுமே சாத்தியம்.... நானும் போயிருக்கேன்...!//
same pinch :)))
@பிரபு . எம்
எல்லாமே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று கல்பாலத்தில் ஓர் அதிகாலை சைக்கிள் பயணம் போன உணர்வு... :-)//
நன்றி நன்றி...(ஆமாம்...என்ன சயனைடு ரெடியா..?? டிவிடி எத்தனை கொடுத்தாலும் சயனைடு அல்லது என்கவுன்டர் தான் ...யோசிச்சுக்கோ சகோ..டீல் ஆர் நோ டீல் ??? ) :))))))
அவனிடம்
சிறிது காண்பித்து விடு-நீ
பூட்டி வைத்த
என் சின்னஞ்சிறு
காலடித் தடங்களை...!!!!!! "
//அட அருமை ஆனந்தி..:))
@தேனம்மை லெக்ஷ்மணன்
நன்றி..நன்றி...தங்கள் வருகைக்கு நன்றி..தேனம்மை மேடம்....)
வழக்கமாக உங்கள் பதிவிற்கு மாற்று கருத்து போடும் நான் இன்று பதிவோடு ஒத்துபோகிறேன்...
கரையோரம் நடைபயணம்,
கழுத்து வரை நீர் பயணம்..
ஓடும் தண்ணீரில் தூண்டில் போட்ட புத்திசாலிதனம்..
புதைகொண்ட காலை இழுத்து விளையாடியது..
காத்தாடிகளை காற்றில் மிதக்க விட்டது..
மண் பிள்ளையாரை கரைத்தது..
அதிகாலை குளியல்..
நீர் சுழலில் சிக்கியது..
அம்மாவின் கைகளை பிடிதது ஆற்றங்கரையில் விளையாடியது..
அப்பாவின் தோள்களில் ஒய்யாரமாக..
அனைத்தும் ஞாபகத்தில் தோழி..
கண்ணீர் ததும்புகிறது..
சீக்கிரமே என் பதிவுகளில் ஒரு முழு கவிதையாக..
நான் கண்ட சிறுவயது ஆற்றங்கரை..
நினைவுகள் அழிவற்றது..
அழிந்திருந்தால் பராவாயில்லையோ..???
மனது வலிக்கிறது தோழி..
நல்ல நினைவுகள், ஆனந்தி. கவிதை வரிகள் மனதை தொடுகின்றன.
அழகான சிறுபராய நினைவுகள். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நினைவுகள் சுகமானவை .
@தம்பி கூர்மதியன்
தம்பி கூர்மதி...நான் கூட யோசிச்சேன்..இந்த போஸ்ட் டில் இவர் என்ன எதிர்பதிவு போடுவார்னு...:)) நிஜமாய் உங்கள் ரசனையான வரிகள் படிச்சு ரொம்பவே நெகிழ்ச்சியா இருந்துச்சு..உங்கள் அனுபவ கவிதைகளை விரைவில் உங்கள் ப்ளாகில் படிக்க வருகிறேன்...நன்றி கூர்மதியன்..!!!
@vanathy
மிக்க நன்றி வானதி...
@நிலாமதி
மிக்க நன்றி நிலாமதி...
@தம்பி கூர்மதியன்
//நினைவுகள் அழிவற்றது..
அழிந்திருந்தால் பராவாயில்லையோ..???
மனது வலிக்கிறது தோழி//
தோழா..உங்கள் நினைவுகள் எல்லாமே சுகமா இருக்கு..எதற்கு நினைவுகளை அழிக்கனும்..எண்ணி எண்ணி லயிச்சு பார்த்தால் அதுவும் சுகம் தோழா..அழகு நினைவுகள் நமக்கு பொக்கிஷங்கள்...அழியவே வேணாம் அது...சரிதானே...))
வருங்காலங்களில் உங்கள் குழந்தைகள் வைகையில் காலார நடக்க மணல் இருக்குமா...
@தாராபுரத்தான்
அட நீங்க வேற தாராபுரத்தான் சார்...இப்பவே என் குழந்தை நடக்க அங்கே மண்ணை காணோம்...(((( ஏதாவது திடீர் அதிசயம் நடந்தால் என் வைகை பிழைத்து கொள்ளும்..:)))
Rombha nalla ezhuthi irukeenka Anandi:-)Happy to have found your blog..following you:-) Drop at my blog when you get time..
@Nithu Bala
sure!!thanks nithu!!Having much pleasure to found me..:))
அனுபவத்த அருமையாக எழுதி இருக்கீஙக்.
www.samaaiyalattakaasam.blogspot.com
@Jaleela Kamal
ரொம்ப நன்றி ஜலீலா :)))
//Balaji saravana said...
நம்ம ஊரு வைகை கரைபுரண்டு ஓடுறத டிவி ல தான் பார்த்தேன்..
மிஸ் பண்ணினேன் ரொம்ப :(//
;(..
@நர்சிம்
வாங்க நர்சிம்...அட...நீங்களும் நம்ம ஊரா...???!!!
நான் பக்கத்து ஊரு விருதுநகரு..
@ஹரிஸ்
அப்படி போடுங்க..விருதுநகர் ரில் எங்க சொந்தகாரங்க நிறைய பேரு இருக்காங்க..உங்க ஊரு சேவு இருக்கே...செம...:))
அடுத்த பதிவு எப்பங்க?
அருமையாகவும் ரசிக்கவும் வைக்கிறது.. சகோதரி.. வாழ்த்துக்கள்....
"ஆற்றின்
சுடுமணலில்
அழுதுகொண்டே
நான்!-என்
நாய்க்குட்டி
தேடி.......!
என் விழிநீர் பட்டு
உன்
சலசலக்கும்
நீரோடை கூட
அமைதியானது!-நீயோ
என் புன்னகை
தேடி..../////
என்னமா எழுதுறாங்க கவிதை கவிதை
வைகை மணலில் விளையாட செல்லும்போது நான் மண்ணில் கைகளால் குவித்த மண் கோவில்களும்(?!),வீடுகளும்(@#?!) மறுநாள் வந்து பார்த்தும்,கலையாமல் இருந்த போதும்...//////
இன்னும் கலையாமல் இருக்கா....?
மாலை நேரத்தில், தாத்தாவுடன் கைகோர்த்து வைகை மணலில் காலாற நடக்கும்போது தட்டுப்படும் சிப்பிகளை கைநிறைய சேர்க்கும்போதும்..../////
தடுக்கி விழுந்துடிங்களா....
வைகையே..!!இப்போ எல்லாம் உனக்கு என்ன ஆச்சு? முழுக்க நீர் எல்லாம் வற்றி போயி ஏன் உருமாறி திரிகிறாய்..??சித்திரை திருவிழாவுக்கு மட்டுமே பொலிவுருகிறாய்..அப்புறம் மீண்டும் ஓட்டுக்குள் பதுங்கி கொள்கிறாய்...என்னை கொல்கிராய்??!!/////
அவர் மட்டுமா இறங்குறார் அவர் கூட சேர்ந்து எத்தனை பேர் இறங்குகிறார்கள்....அதான்
@ஹரிஸ்
அப்படி போடுங்க..விருதுநகர் ரில் எங்க சொந்தகாரங்க நிறைய பேரு இருக்காங்க..உங்க ஊரு சேவு இருக்கே...செம...:)/////
அப்படி போட்டா கார சேவு கிழே கொட்டிவிடும் பார்த்து போடுங்க
@பாரத்... பாரதி...
அடுத்த என் பதிவு என்னைக்குன்னு தெரிஞ்சுட்டால் அன்னைக்கு எங்காவது ஓடி போயிரலாம்னு தானே கேட்டேங்க பாரத்..பாரதி..??? :)))
@ம.தி.சுதா
ரொம்ப நன்றிசகோ ம.தி.சுதா...:)))
@சௌந்தர்
//என்னமா எழுதுறாங்க கவிதை கவிதை //
இதுல எதுவும் உள்குத்த்து ....இல்லயே :)))
@சௌந்தர்
//இன்னும் கலையாமல் இருக்கா....?//
லொள்ள பாரு...:)))
//
//தடுக்கி விழுந்துடிங்களா.... //
அக்கா மேலே இருக்கும் பாசம் புரியுது...நன்றி தம்பி...:)))
@சௌந்தர்
//அவர் மட்டுமா இறங்குறார் அவர் கூட சேர்ந்து எத்தனை பேர் இறங்குகிறார்கள்....அதான் //
நீ மதுரை பக்கம் வரும்போது.....ம்ம்..உனக்கு ஸ்பாட் வச்சிர வேண்டியது தான்...:))))
@சௌந்தர்
//அப்படி போட்டா கார சேவு கிழே கொட்டிவிடும் பார்த்து போடுங்க//
சாமி...முடியல...:))))
கவிதைகளுக்கு நாடு நடுவே விளக்கம் அருமை
அசத்தலான நினைவுகள்.. ரொம்ப நல்லாயிருக்கு..
@THOPPITHOPPI
Thank U THOPPITHOPPI:)))!!
@பதிவுலகில் பாபு
Thank You Babu...!! :))
நல்லாயிருக்கு அக்கா
@பிரஷா
தேங்க்ஸ் தங்கச்சி...:)) என் தங்கச்சி தர்ஷினு ஒன்னு சுத்திட்டு இருக்கும்..அதுகிட்டே ரொம்ப கேட்டதா சொல்லு பிரஷா...:)))
நாங்களும் வைகை (டேம்) தண்ணி குடிச்சவங்கதான் (திண்டுக்கல்).
@ஜெயந்தி
அப்படியா...நம்ம ஊரு பக்கமா ஜெயந்தி நீங்க...:)))) ஓகே...ரைட் ட் ட் ட் ட் ட் ட் ..:))
அருமையாக வைகையில் நீராடி நீந்திச்செல்கிறது கவிதை
@dineshkumar
நன்றி தினேஷ்...:))
ரொம்ப நல்லா இருக்கு ஆனந்தி! நான் பார்த்த வைகையில் எப்போதுமே "வை" "கை" அளவில்தான் தன்ணீர் இருக்கும். மிகச் சிறிய வயதில் ஒரே ஒரு தடவை கரைபுரண்டு ஓடுவதைப் பார்த்திருக்கிறேன் :)
@kavisiva
இப்ப மாதிரி கட்டாந்தரையா இல்லாட்டியும் அப்போ எல்லாம் அங்க..எங்கனு கொஞ்சம் தண்ணி தட்டு படும் கவி...எப்ப மதுரை ட்ரிப்?? :)))
கவிதை ரொம்ப அழகு!
உங்களுக்கு பிடிச்ச, மற்றும் பிடிக்காத எல்லாமும்... நல்லா இருக்கு..
"பூட்டி வைத்த என் சின்னச்சிறு காலடித் தடங்கள்....." அருமையான வரி... :-)))
ஏன் பிடிக்காது? ஏன் பிடிக்கும்?
பிடிக்காத போதுமட்டும்தான் பிடிக்குமா? பிடிக்கிறபோதும் பிடிக்குமா? அல்லது பிடிக்கிறபோது பிடிக்காதா? எப்படில்லாம் பிடிக்கும், எப்படியோ உங்க எழுத்து பிடிச்சிருக்கு By The Way அந்த கழுத்துப்பிடிப்பு என்னாச்சு?
அன்புடன்
ஆஷிக்
@sivatharisan
நன்றி சிவதரிஷன்..!!
@Ananthi
உங்கள் முதல் வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி அமெரிக்கா ஆனந்தி..!!
@AshIQ
நன்றி சகோதரர் ஆஷிக்..!! கழுத்துபிடிப்பு பரவா இல்லை...!!!
ஆனந்தி இன்னிக்குதான் உங்கள் ப்ளாக் பக்கம் வந்தேன். //உன்னைப்பிடிக்காதபோதும் பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்// தலைப்பே பிடிச்சு நிருத்திட்டுது உல்லபோனா மதுரை நம்ம வைகை பத்தி ஆஹா, கொஞ்ச நேரம் மலரும் நினைவுகள்தான். என்பையனுக்கு இப்ப வைகையை காட்டலாம்னு போனா என்னம்மா இதுன்னுதான் கேக்கரான்.என்னபதில்????
ஆனந்தி கவிதை சூப்பர்மா. இதுக்குமேல சொல்ல வார்த்தையே இல்லை.ரொம்ப ரசிச்சு படிச்சேன்.
ஆனந்தி, உங்க கவிதை எனக்கும் எங்க தாமிரபரணி ஆற்றை நினைவு படுத்தி விட்டது. எல்லா ஆறுகளின் நிலமையும் இதுதான்போல இருக்கு. அங்க மணல் அள்ளி,அள்ளி, நாசம் பண்ணிட்டா.
நாமவிளையாடிய ஆற்றுப்படுகை அழகை நம்ம குழந்தைகளால பார்க்க முடியலை. இதுதான் உண்மை.
@umaasvini.asvini
வாங்க உமா..ஷிவாகுட்டி அவளவு பேசுறானா...?? சமத்து குட்டி...உண்மை உமா..நம்ம ஊரு வைகை கதி இப்ப இப்படி தான்...:)))
@komu
ஓகே கோம்ஸ்...ரைட் ட்டு...:))) கத்திரிக்காய்க்கு அப்புறம் உங்கள் ப்ளாக் கில் வேற போஸ்ட் காணோம்...சீக்கிரம் போடுங்க..
@Lakshmi
தேங்க்ஸ் ஆன்ட்டி!! :)
அருமை
அழகான கவிதை!
நம்ம ஊரு வைகை கரைபுரண்டு ஓடுறத டிவி ல தான் பார்த்தேன்.. மிஸ் பண்ணினேன் ரொம்ப :(
Post a Comment