ஹாய் மக்காஸ்!! வோட்டு போட ரெடி ஆகிட்டிங்களா? எனக்கு இன்னும் பூத் ஸ்லிப் வரல :( ஆனால்,வோட்டர் ஐ.டி கார்டை கண்ணில் படுற மாதிரி எடுத்து வச்சிருக்கேன்.:) என்ன,என் சின்ஸியர் பார்த்து புல்லரிக்குமே??:)) எனக்கு வோட்டு போடுவதில் (ப்லாக் பதிவுகளுக்கும் சேர்த்து தான்:)) ) மிகுந்த ஆர்வம் உண்டு...:)))
சின்னஞ்சிறு சிறுமியாய் , பசை மாதிரி என் தாத்தா கூடவே ஒட்டிக்கொண்டு, கைபிடித்து நான் சென்ற இடங்களில் வாக்கு சாவடியும் ஒன்று. தேர்தல் நாள் அன்று, தாத்தா காலையில் நீராகரம் குடித்து விட்டு, அநேகமாய் முதல் ஆளாய் (பூத் வீட்டிக்கு மிக அருகில்) ஓட்டு போட போகும்போது, கூடவே நானும்,நானும்..:)) எனக்கும் விரலில் மை வைக்கனும்னு அழுது அடம்பிடிச்ச நேரங்களில், தாத்தா எனக்கு இட்டு விடும் bril கருப்பு ink மட்டுமே அந்த நொடி சந்தோஷ நிறைவு...:))))
தாத்தா வீட்டு முன் அறையில், ஓரமாய் ஒரு ஸ்டீல் ஸ்டூலில் ஆச்சி(பாட்டி) கொண்டு வந்து வைத்து விட்டு போகும் இஞ்சி,மிளகாய்,மாங்காய் கலந்த பிரெஷ் வாசனை மோர் வீற்றிருக்க :)) அந்த அறையை சுற்றி, என் தாத்தா மற்றும்,என் தாத்தா வயதை ஒட்டிய இன்னும் நிறைய தாத்தாக்களின் மடியில் குட்டி பாப்பாவாய் உட்கார்ந்து,உட்கார்ந்து, புரியாமல் நான் கேட்ட டாஸ் கேபிடல்,ரஷ்ய புரட்சி,லெனின் மார்க்சிசம்,திராவிட கழங்களின் பாரம்பர்யம் :)) பற்றிய விவாதங்கள் னு எல்லாமே அப்பவும்,இப்பவும்..இந்த நொடியிலும் எனக்கு சிறிதும் புரியாத வெறும் சத்தங்கள் தான் :)))
ஓட்டு போடும் வயது எனக்கு வந்து,தேர்தலில் வோட்டு போட முதல் ஆளாய் செல்ல எத்தனித்தபோது,செல்ல பேத்தியாய் ,கை தாங்கலாய் வோட்டு சாவடிக்கு நான் அழைத்து கூட்டி போக, அப்போது என் அருமை தாத்தா உயிருடன் இல்லை...
வாக்கு பதியும் ஆர்வம் மிகுதியாக இருந்தாலும்,எந்த சரியான வேட்பாளருக்கு போட வேண்டும் என்பதில் குழப்பம் தான் எனக்கு ஆரம்ப நாட்களில். குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலும் வித விதமான அரசியல் எண்ணங்களை கொண்டு இருந்தாலும்,இவங்களுக்கு மட்டுமே வாக்கிடு-ன்னு எந்த அறிவுறுத்தலும்,திணிப்புகளும் எனக்கு வழங்கபடாமல்..முழுக்க முழுக்க என் சுய எண்ணங்களுக்கு கொடுத்த சுதந்திரம் இன்னும் குழப்பத்தை கூட்டியது என்பதும் உண்மை...:))))))
பிறிது வந்த நாட்களில், அரசியலை பற்றிய கண்ணோட்டங்களை சிறிது கூர்ந்து கவனிக்க(?!)..எல்லாருமே அயோக்கியர்கள்,எதுக்கு இவங்களுக்கு வோட்டு போடணும் ங்கிற குழப்பம் வேற வந்து வேற மாதிரியாய் திசை திரும்பியது...:))
இப்ப ஒரு மாதிரி குழப்பம் போயிருச்சு...நான் தீர்மானிச்சுட்டேன்..யாருக்கு என் வாக்குன்னு...எப்படி ன்னு இந்த உரையாடலை படிச்சால் தெரிஞ்சுப்பீங்க...:)))
(மொட்டை மாடியில் உலா போன மாலை நேரத்தில்,எதிர் வீட்டு மாடி ஆன்ட்டியுடன் சிறிது உரையாடல் ..)
ஆன்ட்டி : ஆனந்தி! எலெக்சன் ஜுரம் வந்திருச்சா?
நான் : கட்சிக்காரங்க கிட்டே கேக்குற கொஸ்டின என்கிட்டே மாத்தி கேட்டிங்களே ஆன்ட்டி....! :))
ஆன்ட்டி : சரி!சரி! கவர் பணம் டிஸ்ட்ரீபூட் பண்றாங்களா என்ன....எனி தகவல் ???
நான் : என் கைக்கு பணம் வரல...ஸோ, தெரியல....:))
ஆன்ட்டி : அச்சோ...அப்போ கொடுத்தால் வாங்கிப்பியா ?
நான் : எஸ்...:))
ஆன்ட்டி : ஆனந்தி..!! ஆர் யூ எஜுகேடட்? நீயே இப்படி பண்ணலாமா?
நான் : ஹீ..ஹீ...! எஜுகேடட் இல்ல...எச்சிக்கல னு வச்சுக்கோங்க...:))) !! ஆன்ட்டி...அது போகட்டும்! அப்போ பணம் கொடுத்தால் நீங்க வாங்க மாட்டேங்களா ? உங்க வீட்ல ஆறு வோட்டு ஆச்சே......3,000 ரூபா ல...அப்போ வேணாமா....?
ஆன்ட்டி (பதறி போய்) : எதுக்கு,எதுக்குங்குறேன்...அவங்
நான் : ஹ...ஹ...ஹா.....
ஆன்ட்டி : யாருக்கு வோட்டு போட போற?
நான்: நான் எலியா இருக்கிறத விட புலியா இருக்க ஆசை ....:))
ஆன்ட்டி(புரியாமல்) : .....?!!!
நான்(நக்கலாய் ): எப்படியும் பிரபல கட்சி வேட்பாளர்களுக்கு லட்சகணக்கில் வோட்டு விழுகும். அதோடு நான் போடும் அந்த ஒரு வோட்டு பெருசாய் தெரியாமல் போய்டும்...ஸோ அப்போ நான் எலியா தானே தெரிவேன்...
ஆன்ட்டி(கடுப்பாகி): ஆமாம்..அதுக்கு என்ன இப்போ....
ஆன்ட்டி : ம்ம்..
நான் : ஸோ, எனது வாக்கு பானை அல்லது குடை அல்லது எவர்சில்வர் குடம் அல்லது ராக்கெட் ..இந்த மாதிரி சின்னங்கள் இருந்தால் தான் ஒரே குத்து...:))))
ஆன்ட்டி(தலையில் அடித்து கொண்டு) : அடி பாவி...பாவி...ஜனநாயக துரோகி...
நான்: இட் ஸ் மீ?? ஓகே...தேங்க்ஸ் ஆன்ட்டி...:)))
(டிஸ்கி : சிறிது நேரம் முன்னர் எங்கள் ஊரின் பிரபலமான ரவுடி அவர்கள், ('அட்டாக்' என்று முதலில் தொடங்கும் அவர் பெயர்(முழு பேரை சொல்லிட்டு வீட்டுக்கு ஆட்டோ வரவா என்ன ..அஸ்க்கு புஸ்க்கு ..:)) ) சுயேட்சையாக போட்டி இடுவதால்...மீண்டும் யாருக்கு வோட்டு என்ற விஷயத்தில் எனக்கு குழப்பம் ஏற்பட்டு...குழப்பத்தோடு முடிக்கிறேன்...:))))))
