August 21, 2010

கூவி விற்கும் கல்விச் சந்தை..


ஒரு வாரமாய் பொது நுழைவு தேர்வு செய்தியை உன்னிப்பாய் கவனித்து வருகிறேன்..இப்போ oflate news..
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளி்ல் சேர அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் என்று தெரிகிறது.
இதை பத்தி எனக்கு ரெண்டு விதமான கருத்துக்கள் இருக்கு..
1.நுழைவு தேர்வு வேணும்..
2.நுழைவு தேர்வு வேணாம்
...
என்ன படிக்கும்போது கடுப்பாகுதா..??

தேர்வு வேணும் சொல்றதுக்கு காரணம்..அரசு தயார் படுத்திய புத்தகங்கள் மட்டும் அந்த மாணவனின் ஒரிஜினல் திறமையை வெளிபடுத்தும் என்பதை என்னாலே எப்பவுமே ஏற்றுக்கொள்ள முடியாது..புத்தக அச்சினை அப்படியே வெள்ளை தாளில் வாமிட் பண்ணும் பாங்கு தான் அந்த மாணவனின் உண்மை திறமை என்றால் என்னை பொறுத்தவரை கட்டாயம் நுழைவு தேர்வு நடைமுறை வேண்டும்..

மாணவன் பொது அறிவு..உலக நடப்பு..அறிவியல் புலன் இப்படி சகலமும் அவன் அப்டேட் ஆ இருக்கும் பட்சத்தில் அவன் தொழிற் படிப்பிற்கு மிகவும் தகுதி ஆனவனாக இருக்க வாய்ப்பு இருக்கு..
இதை நம் அரசு..கிராம புற மாணவர்கள்..இட ஒதுக்கிடு ..லொட்டு லொசுக்கு னு...இதை ரத்து பண்ண துடிக்குது..
நுழைவு தேர்வு வேணாம் சொல்றதுக்கு..காரணம்...சில உண்மையிலே கஷ்டப்படும் ஏழை மாணவர்களுக்காக..
ஆனால்..அதையும் மத்திய அரசு..இட ஒதுக்கிட்டில் சமாளிப்போம் னு சொன்னாலும் செம முரண்டு பிடிப்பது..கட்டாயம் தேர்தலையும்,ஓட்டு எண்ணிக்கையை மனசில் வைத்தும் தானே..தவிர..வேற என்ன பொது அக்கறை இருக்க முடியும்..

நம்ம அரசு என்ன சொல்லுதுன்னு பாருங்க.."மாநிலங்கள் சுயாட்சி கேட்கும் குரல் ஓங்கி ஒலிக்கின்ற இந்த கால கட்டத்தில் அரசியல் சட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் "

இதுல என்ன மாநில உரிமை..தனியார் தொழிற் கல்லூரிகளில் துட்டு பிடுங்கும் உரிமை னு நாம புரிஞ்சுக்கணும்...

4 comments:

mohana ravi said...



இன்னாமொ சொல்லறேள்!

ஒன்னுமே புரியாலை!

ஓடிதான் போவேனெ!

மதுரைக்கும் நான் வர்ரேனே!

வேர் ஈஸ் தி பார்ட்டி!அட

எங்க ஊர்ல பார்ட்டி!

cheena (சீனா) said...

அன்பின் ஆனந்தி
ம்ம்ம்ம்ம்ம் - சரி சரி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Anonymous said...

கரெக்டா சொன்னீங்க..துட்டுக்காகத்தான் எல்லாம் நடக்குது

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஒ இதுதான் ஒங்க மொதல் பதிவா? முதல்பதிவே அட்டகாசமாக இருக்கு! வாழ்த்துக்கள் சோதரி!!