(முஸ்கி : இந்த தலைப்பை படிச்சுட்டு குண்டக்க மண்டக்க யோசிச்சவங்களுக்கு கம்பெனி பொறுப்பல்ல..:)) )
மதுரைன்னால் ....................மல்லிகைப்பூ !!
மதுரைன்னால் .....................சுவையான இட்லி..உணவுகள்..!!
மதுரைன்னால் .....................மீனாட்சி யம்மன் !!
மதுரைன்னால் .....................தமிழ்சங் கம்!!
மதுரைன்னால் .....................சினிமா !!
மதுரைன்னால் .....................நல்ல செண்டிமெண்ட்!!
மதுரைன்னால் .....................வீரம் !!
மதுரைன்னால் .....................வெள்ளந்தி மக்கள்!!
மதுரைன்னால் .....................விருந்தோ ம்பல்!!
மதுரைன்னால் .....................ஜிகர்தண்டா
மதுரைன்னால் .....................கோவில்நகரம்
மதுரைன்னால் .....................தூங்காநகரம்
மதுரைன்னால் .....................வைகை
மதுரைன்னால் .....................மீனாட்சி
மதுரைன்னால் .....................தமிழ்சங்
மதுரைன்னால் .....................சினிமா !!
மதுரைன்னால் .....................நல்ல செண்டிமெண்ட்!!
மதுரைன்னால் .....................வீரம் !!
மதுரைன்னால் .....................வெள்ளந்தி மக்கள்!!
மதுரைன்னால் .....................விருந்தோ
மதுரைன்னால் .....................ஜிகர்தண்டா
மதுரைன்னால் .....................கோவில்நகரம்
மதுரைன்னால் .....................தூங்காநகரம்
மதுரைன்னால் .....................வைகை
அப்புறம் ..ஹீ..ஹீ..
.....................................................................
மதுரைன்னால் .....................ஆனந்தி... :))
.............................. .............................. ..........
.............................. .............................. ..........
மதுரைன்னால் .....................ஆனந்தி...
..............................
..............................
மிக மிக முக்கியமாய் ....
மதுரைன்னால் .....................சித்திரை திருவிழா...!!!
மதுரைன்னால் .....................சித்திரை திருவிழா...!!!
மதுரைக்காரியா இருந்தாலும்...இந்த சித்திரை திருவிழா கூட்டத்தில் மைக்ரோஸ்கோப் வச்சு கூட என்னைத் தேட முடியாது...ஏன் ன்னால், நான் அங்கே இருக்க வாய்ப்பே இல்லை...:))))
மதுரை சித்திரை திருவிழாவில் மக்கள் வெள்ளம்
ஏனோ கடவுளை பக்தியாய் நோக்குவதை விட ,தனிமை பொழுதுகளில்,சலசலப்பில்லாத,மௌனமான நேரங்களில் பரவசமாய் பார்ப்பதே என் விருப்பமாகிறது...
நாகரிகம்,தோற்றம்,பழக்க வழக்கங்கள் மாறினாலும் என் மண்ணில் கிராமத்து வாசனை இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது...
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சியம்மன் திருக்கல்யாண நாளில்,மங்கள கோலங்களால் ஊரையே அழகு படுத்தி,பட்டு சேலை சரசரக்க,கழுத்தில் புதுத்தாலி கயிறுடன்..அன்று எங்கள் ஊர் பெண்களை பார்க்க உங்களுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்...(ஹீ..ஹீ..என்னையும் தான்....:))))))) )
என்ன தான் தனிமை பொழுதுகள் எனக்கு இஷ்டம் என்றாலும்...
வெகு அதிகாலை எழுந்து...மஞ்சள் பூசி குளித்து...ஈர தலைமுடியில் ஓரமாய் சிறிது பூ வைத்து...ஒன்று சேர்ந்து அமர்க்களமாய் சாமி பார்க்க புறப்படும் வெகு மலர்ச்சியான பக்கத்து வீட்டு அக்காக்களை ..அம்மாக்களை..அத்தைகளை பார்க்கும்போதும்.............. ..........
திருவிழாவில்..வெயில் களைப்பில் இருக்கும் பக்தர்களுக்கு...அன்பர்கள் தரும் மண்பானை ஐஸ் மோர்,சுக்கு...திப்பிலி,வெல்லம் எல்லாம் போட்ட பானாக்கம், அங்கங்கே தள்ளுவண்டியில் ஆசை காட்டும் கீத்து மாங்காய் பத்தைகள்....எல்லாம் பார்க்கும் போதும்................
திருவிழாவில் தள்ளுவண்டி மாங்காபத்தைகள்திருவிழா முடிந்து,அங்கங்கே சந்தனம் தடவிய மொட்டை தலை குட்டிப்பாப்பாக்களின் வாயில் இருக்கும் பீபீ க்களும்...கையில் இருக்கும் கலர் கலர் விசிறிகளும்...பலூன்களும்...இதை எல்லாம் பார்க்கும்போதும்..............
பெரிய பெரிய ரோல்லர் கோஸ்டரில் எல்லாம் சுத்தி சுத்தி சலிச்சு போனாலும்...அந்த குட்டியூண்டு தரையை தொட்டு விட்டு போகும் சின்ன சின்ன ராட்டினங்களும் ...கலர் கலர் வளையல்கள் குலுங்கும் குட்டி சிறுமிகளை அதில் பார்க்கும்போதும்.............. .........
குட்டி ராட்டினத்தில் குட்டி ராட்சசிகள்
தூரத்தில் தெரியும் திருவிழா சாமியை காட்ட தோள் மேலே குழந்தைகளை சுமந்து போகும் பாசக்கார உறவுகளை ...பார்க்கும்போதும்....
தோளில் சுமக்கும் பாசக்கார மதுரக்காரய்ங்க
சிறியவர்...பெரியவர் வயது பேதம் இல்லாமல்...சோப்பு தண்ணி டப்பியில் சிறு கம்பி வைத்து ஊதிவிட்டு , மிதக்கும் சிறு சிறு காற்று முட்டைகளை பார்க்கும்போதும்..............
திருவிழாவில் சோப்பு முட்டவிடும் மதுர இளந்தாரி
ம்ம்....!! சில அழகான விஷயங்களை இழக்கிறேனோ ன்னு...உள்மனசு சொல்லுது...:(((
( எங்கள் மதுரையில் இன்னைக்கு கள்ளழகர் திருவிழா ) :))
( எங்கள் மதுரையில் இன்னைக்கு கள்ளழகர் திருவிழா ) :))
இன்று வலைச்சரத்தில் :-அதகளப்படுத்தும்" அரசியல் அதிரடி பதிவுகள்/பதிவர்கள்
Wow..செம....பதிவுகள் ! /Interesting Posts
பல்சுவை "பதிவர்"களும்..பின்னூட்ட புலிகளும்...
அழகான வலைப்பூக்கள்/Beautiful blogs
வலைச்சரத்தில் இசைக்கான பதிவு...
புதுமுகம்...அவள் அறிமுகம்...
150 comments:
சொர்க்கம் போகணுமா?...மதுரைக்கு வாங்க...:))))))))
....தலைப்பை பார்த்து மிரண்டுட்டேன்.... எங்கே, "போட்டு" தள்ளப் போறாங்களோ என்று.... அப்பாடி..... தப்பிச்சிட்டோம்!
Welcome back.... Hope you had a great break! :-)
மதுரைன்னால் .......... பேச்சு..!!
மதுரைன்னால் .......... அருவா வீச்சு..!!
//ஏனோ கடவுளை பக்தியாய் நோக்குவதை விட ,தனிமை பொழுதுகளில்,சலசலப்பில்லாத,மௌனமான நேரங்களில் பரவசமாய் பார்ப்பதே என் விருப்பமாகிறது...// (இதை ஆமோதிக்கிறேன்)
என் குழந்தைப் பருவ அனுவம் உங்கள் எழுத்துக்களில்..
மிகவும் அருமை தொடரட்டும்..
மதுரப் பேரப் பார்த்திட்டுத்தான் வந்தேனாக்கும்:)அப்புறம் பார்த்தா நீங்க!
பதிவின் சாரம் இளமைக் காலங்களையும்,திருவிழாக் கோலங்களையும் ஒரு முறை மனதுக்குள் அசை போட வைத்தது.
பகிர்வுக்கு நன்றி.
மதுரைக்கு பெருமை சேர்த்த ஆனந்தி வாழ்க.
அப்புறம் ..ஹீ..ஹீ..
.....................................................................
மதுரைன்னால் .....................ஆனந்தி...:))///
இதான் வெயிட் ....
//திப்பிலி,வெல்லம் எல்லாம் போட்ட பானாக்கம்,//
இது என்ன பானாக்கம்?நான் இதுவரை கேள்விப்பட்டதில்லையே!
செர்கத்துக்கு வழி சொன்ன ஆனந்தி அவர்கள் வாழ்க வாழ்க...
Chitra said...
சொர்க்கம் போகணுமா?...மதுரைக்கு வாங்க...:))))))))
....தலைப்பை பார்த்து மிரண்டுட்டேன்.... எங்கே, "போட்டு" தள்ளப் போறாங்களோ என்று.... அப்பாடி..... தப்பிச்சிட்டோம்!///
பயந்து தான் போஸ்ட் படிச்சு இருக்கீங்க.....ஆனந்தி இருக்கும் போது என்ன பயம் ....(அவங்க இருக்குறது தான் பயம் சொல்றீங்களா)
நம்ம ஊர் சித்திரைத் திருவிழாவை ரொம்பவே மிஸ் பண்றேன் சகோ!
அட்டகாசமான போட்டோக்களைப் போட்டு மனச அப்படியே மதுரைக்கு கடத்திட்டுப் போயிட்டீங்க! :)
அழகர் திருவிழா முடிஞ்சு "வலைசர" திருவிழா ஆரம்பிச்சிடுச்சு! :)
மறுபடியும் நினைவுகள்... பின்னோக்கி திரும்புகிறது....
மதுரையின் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா .....உங்க. ப்ளாக்ல Live Streaming...ஆ..ஒளிபரப்புரீங்க போல....
மதுரைன்னால்..லிஸ்ட் ரொம்ப கம்மியா இருக்கே...
உங்களை இத்தனை நாளாய் எப்படிப் பார்க்காமல் இருந்தேன்...நானும் மதுரைக்காரிதாங்க....மிக்க மகிழ்ச்சி..
உங்கூருக்கு ரெண்டொரு தடவை போயிருந்தாலும் அந்த புகழ்பெற்ற ஜிகிர்தண்டாவை ருசிக்கும் வாய்ப்பு இன்னும் கெடைக்கலை..
// மதுரைன்னால் .....................ஆனந்தி...:))//
ஸ்ஸ். ப்பா..முடியல....டேய் தம்பி....இங்க வாடா.. போயி..அண்ணனுக்கு சூடா ஒரு டீ சொல்லு.
மதுரையின் சிறப்புகளை தெரிந்துக்கொண்டேன்...
சுற்றுலாவுக்காக மூன்று முறை வந்திருக்கிறேன்...
//திப்பிலி,வெல்லம் எல்லாம் போட்ட பானாக்கம்,//
அது பானக்கரம்னு சொல்வாங்கன்னு நினைக்கிறேன்
இதையும் படிங்க..
http://kavithaiveedhi.blogspot.com/2011/04/blog-post_18.html
மதுரைய சுற்றி பார்த்தாச்சு , என் தோழி சித்ரா அங்கு தான் இருக்கா
மதுரைன்னதும் அருவாளோடதான் வந்தேன் ஹி ஹி ஹி ஹி ஹி...
அருமையான தொகுப்பு....
நல்ல திருவிழா பதிவு.
வாழ்த்துக்கள்.
//மதுரைன்னால் .....................ஆனந்தி...:))//
பார்ரா!
இது சூப்பரா இருக்கு! :-)
சொர்க்கம் போகணுமா?...மதுரைக்கு வாங்க..//
இதோ, வந்திட்டமில்ல.....
மதுரைன்னால் .....................ஆனந்தி...:))//
ஐயோ......ஐயோ...
இந்த காமெடியை தாங்க முடியலையே...
ஹி...ஹி..
மதுர மதுர தான் என்று சொல்ல வாறீங்க,
மதுரைக்காரியா இருந்தாலும்...இந்த சித்திரை திருவிழா கூட்டத்தில் மைக்ரோஸ்கோப் வச்சு கூட என்னைத் தேட முடியாது...ஏன் ன்னால், நான் அங்கே இருக்க வாய்ப்பே இல்லை...://
ஆகாயத்திலை ஹெலிகாப்டரிலை இருந்து சாமி தரிசனம்
பண்ண்றீங்களா;-))
நாகரிகம்,தோற்றம்,பழக்க வழக்கங்கள் மாறினாலும் என் மண்ணில் கிராமத்து வாசனை இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது...//
எங்க ஊருக்கும் இந்த வசனம் பொருந்தும் சகோ..
ஹி..ஹி... சேம் சேம் பப்பி சேம்.
திருக்கல்யாண நாளில்,மங்கள கோலங்களால் ஊரையே அழகு படுத்தி,பட்டு சேலை சரசரக்க,கழுத்தில் புதுத்தாலி கயிறுடன்..அன்று எங்கள் ஊர் பெண்களை பார்க்க உங்களுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்..//
கொஞ்ச நாளா பிஸ்னஸ் ரொம்பவே டல்லா இருக்கு, சிலோனிலை போலிஸ் பிக் பாக்கட் அடிச்சா, கழுத்திலை இருக்கிற செயினை அறுத்தா அவசர கால சட்டத்தில் கைது செய்து உள்ள போடுறாங்க...
இனி ஒரேயடியா மதுரைக்கு இறங்கிட வேண்டியது தான்.. திருவிழாவிலை கைவரிசையைக் காட்டினாலே ரொம்ப பெரிய கோடீஸ்வரன் ஆகிடலாம் என்று நினைக்கிறேன். நீங்க என்ன சொல்லுறீங்க;-)))
நகை எல்லாம் போட்டு, கலக்காலா கலர் காட்டப் போறீங்க...
மதுரையின் மாநகரில் வீதியுலா போனது போன்ற ஒரு உணர்வு உங்கள் பதிவினைப் படித்து முடிக்கையில் ஏற்படுகிறது. அருமையாகத் தொகுத்து, வர்ணணைப் பதிவாகத் தந்திருக்கிறீர்கள்.
நானும் மதுரையில இருக்கேன்... திருவிழா சூப்பரா கொண்டடிக்கிட்டு இருக்கேன்...
இது என்ன பானாக்கம்?நான் இதுவரை கேள்விப்பட்டதில்லையே"
It functions like a herbal drink. It cools down body temperature and prevents heat attack.
In our side, it is called Paanakam. Not paanaakkam.
Good presentation. Congrats.
Madurai is generally misrepresented in mass media. Your efforts will turn the tables in Madurai favor.
Well done.
@jo.amalan
thanks ஜோ.அமலன்..நீங்க நம்பமாட்டிங்க..ரெண்டுநாளு உங்களை யோசிச்சுட்டு இருந்தேன்..ஏன்னு வலைச்சரத்தில் சீக்கிரம் சொல்றேன் ஜோ..மிக்க நன்றி தங்கள் வருகைக்கு..
@jo.amalan
எனக்கு இன்னும் குழப்பம் இருக்கு மணி அண்ட் ஜோ அமலன்...என் கணவர் வீட்டு சைடு பானாக்கம் னு தான் சொல்றாங்க...என் தாத்தா வீட்டு சைடு பானக்கரம் னு சொல்றாங்க...சரியா எப்படி சொல்லனும்னு எனக்கும் தெரியலை..:((( ஆனால் அதன் சுவை செமையா இருக்கும்...
--
மதுரைன்னாலே - வைகை !!!!
இதை விட்டீங்களே?
ஏனோ கடவுளை பக்தியாய் நோக்குவதை விட ,தனிமை பொழுதுகளில்,சலசலப்பில்லாத,மௌனமான நேரங்களில் பரவசமாய் பார்ப்பதே என் விருப்பமாகிறது...//
எனக்கு விருப்பமானதும் இதுவே.. இதனாலே என் வீட்டில் சண்டை வரும்!
அந்த மொத போட்டோ கூட்டத்துல உண்மையாவே உங்கள கண்டுபுடிக்க முடியல :-(
@வைகை
அட ஆமாம் வைகை...காலையில் டைப் பண்ணினபிறகு ஆஹா...நம்ம செல்ல வைகை விட்டுட்டோமேன்னு சட்டுன்னு யோசிச்சேன்..பட் மீண்டும் சேர்க்க மறந்துட்டேன்...நினைவூட்டிய என் சகோ வைகைக்கு ரொம்ப தேங்க்ஸ்....:))))))
//மதுரைன்னால் .....................சித்திரை திருவிழா...!!!//
யோசிச்சன்.. மதுரையில ஏதாச்சும் பிரபலமா நடந்தா இங்கிட்டு ஒரு பதிவு விழணுமேன்னு நினச்சன்.. விழுந்திடுச்சு.. பாப்போம்..
//அந்த நொடிகளுக்காக என்னை நான் பெரிதாய் நிர்பந்திப்பதில்லை...:))//
யாராச்சும் அந்த தமிழ்வாசி ப்ரகாஷை இந்த பக்கம் அடிச்சு இழுத்துட்டு வாங்கப்பா..
//தனிமை பொழுதுகளில்,சலசலப்பில்லாத,மௌனமான நேரங்களில் பரவசமாய் பார்ப்பதே என் விருப்பமாகிறது...//
ஓ.. உங்களுக்குள் இருக்கும் கடவுளா.? பேஷ் பேஷ்..
//என் மண்ணில் கிராமத்து வாசனை இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது...//
ஓ.. நம்ம மண்ணுலயா.?
//(ஹீ..ஹீ..என்னையும் தான்....:))))))) )//
இந்த முறை எதையும் கொடுத்து வைக்கல.. அடுத்த முறை ஏதாவதுகொடுக்க முடியுதான்னு பாப்போம்.. ஹி ஹி..
//வெகு அதிகாலை எழுந்து...மஞ்சள் பூசி குளித்து...ஈர தலைமுடியில் ஓரமாய் சிறிது பூ வைத்து..//
இன்னும் இவங்களெல்லாம் இருக்காங்களா.?
//..அன்பர்கள் தரும் மண்பானை ஐஸ் மோர்,சுக்கு...திப்பிலி,வெல்லம் எல்லாம் போட்ட பானாக்கம், அங்கங்கே தள்ளுவண்டியில் ஆசை காட்டும் கீத்து மாங்காய் பத்தைகள்....//
கடுப்பேத்தாதீங்க ஆனந்தி..
//மொட்டை தலை குட்டிப்பாப்பாக்களின் வாயில் இருக்கும் பீபீ க்களும்...கையில் இருக்கும் கலர் கலர் விசிறிகளும்...பலூன்களும்...//
சூப்பரு.. எனக்கு பிடிச்ச மேட்டரா சொல்றீங்களே
//.கலர் கலர் வளையல்கள் குலுங்கும் குட்டி சிறுமிகளை அதில் //
என்னைய ஏத்திக்கிங்கடான்னு சொன்னா அந்த குட்டி ராட்டினத்துர யாரும் என்னை ஏத்திக்கமாட்டேங்குறாங்க.!! ஏன் ஆனந்தி.?
//தோள் மேலே குழந்தைகளை சுமந்து போகும் பாசக்கார உறவுகளை//
பல முறை எங்க மாமா பையன் என் தோள் மேல நின்னு இருக்கான்.. அவன் வளந்துட்டான்.. இப்ப மாமாவோட ரெண்டாவது பையன்..
//.சோப்பு தண்ணி டப்பியில் சிறு கம்பி வைத்து ஊதிவிட்டு , மிதக்கும் சிறு சிறு காற்று முட்டைகளை //
இதை பத்தி ஒரு பதிவே போடபோறேன்.. வந்து பாருங்க..
//சில அழகான விஷயங்களை இழக்கிறேனோ ன்னு...உள்மனசு சொல்லுது...:((( //
நீங்களே அப்படி சொன்னா நானெல்லாம் என்ன செய்யிறது.. ஊர் வாழ்க்கைக்கு ஏங்குது மனசு.. ஆனா.!!
//( எங்கள் மதுரையில் இன்னைக்கு கள்ளழகர் திருவிழா ) :))//
தெரியும் தெரியும்.. போங்க என்சாய் பண்ணுங்க
//இதை படிச்சுட்டு அப்படியே அங்கிட்டு போங்க..//
அங்க படிச்சுட்டு தான் வந்தேன்..
மதுரை எனக்கு மறக்க முடியாத ஊருங்க,அதுவும் ஆத்துல கள்ளழகர் இறங்குற விழாதான் நான் சிறு வயதில் பாத்த அதிக மக்கள் கூட்டம் மிகுந்த திருவிழா.கண்காட்சியும் முதன் முதலில் மதுரையிலதான் பார்த்தேன்,தமுக்கம் மைதானத்தில்னு நினைக்கிறேன்.
இவற்றையும் மதுரை அடையாளங்களில், இணைக்கலாமே!
போஸ்டர்கள், பேனர்கள், சிடி கடைகள் - தமிழகத்தில், எங்கும் கிடைக்கப் பெறா, தலைப்புகளில் காணக் கிடைக்கும்! மதுரை வரும்போதெல்லாம், பை நிறைய அள்ளி வருவேன்!
மதுரைக்கு பெருமை சேர்திட்டிங்க
@Chitra
//Welcome back.... Hope you had a great break! :-)//
s..s..s...மெட்ராஸ் eye break..:((((((((
@ஜெகதீஸ்வரன்.இரா
என் குழந்தைப் பருவ அனுவம் உங்கள் எழுத்துக்களில்..
மிகவும் அருமை தொடரட்டும்.. //
நன்றி ஜெகதீஷ்...அனேகமா நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் இருந்து இருக்கும்...
@ராஜ நடராஜன்
//மதுரப் பேரப் பார்த்திட்டுத்தான் வந்தேனாக்கும்:)அப்புறம் பார்த்தா நீங்க!//
ஹேய்..ஹேய்...இப்படி சொல்லி ஏமாத்தாதிங்க...மதுரைன்னா நானு ன்னு தலைப்பே பார்த்தவுடனேயே தோணி இருக்கும்...:)))))
///திப்பிலி,வெல்லம் எல்லாம் போட்ட பானாக்கம்,//
இது என்ன பானாக்கம்?நான் இதுவரை கேள்விப்பட்டதில்லையே! //
புளி,எலுமிச்சை..வெல்லம்,சுக்கு,திப்பிலி..இதெல்லாம் மிக்ஸ் பண்ணி...ஒரு மண் சட்டியில் ..இல்லாட்டி அகலமான பாத்திரத்தில் கலந்து வச்சு ஒரு வெள்ளை துணி போட்டு மூடிருவாங்க ராஜா...அது நல்ல ஊறின பிறகு சூப்பர் ஆ ஒரு வாசம் அடிக்கும்...இதை பெரும்பாலும் எங்க ஊரு பக்கம் திருவிழா காலங்களில் கொடுப்பாங்க...விரதம் இருப்பவங்களும் இதை குடிச்சுப்பாங்க..உடம்புக்கு நல்ல குளிர்ச்சி...சித்திரை மாசம் பெரும்பாலும் உக்கிர வெயில் காலம் வேற...திருவிழா கூட்டத்தில் களைப்பும் அதிகம் ஆய்டும்...ஸோ இது ஒரு மாதிரி எனெர்ஜி பானம் ராஜா..இதன் சுவை ஒரு மாதிரி இனிப்பு..புளிப்பு ..காரம் இப்படி எல்லாம் மிக்ஸ் ஆன ஒரு வித்யாசமான டேஸ்ட் இல் இருக்கும்...:)) .
@தமிழ் உதயம்
நன்றி தமிழ் உதயம் ரமேஷ் அண்ணா
@சௌந்தர்
//பயந்து தான் போஸ்ட் படிச்சு இருக்கீங்க.....ஆனந்தி இருக்கும் போது என்ன பயம் ....(அவங்க இருக்குறது தான் பயம் சொல்றீங்களா)//
சௌ..!! சித்ரா புரிஞ்சுட்ட அளவுக்கு கூட நீ புரிஞ்சுக்கலையே...:)))
@Balaji saravana
நன்றி பால்ஸ்...:))
@!* வேடந்தாங்கல் - கருன் *!
நன்றி கருண்...
@ஜெரி ஈசானந்தன்.
//// மதுரைன்னால் .....................ஆனந்தி...:))//
ஸ்ஸ். ப்பா..முடியல....டேய் தம்பி....இங்க வாடா.. போயி..அண்ணனுக்கு சூடா ஒரு டீ சொல்லு. //
போனவாரம் போட்டு வச்ச கெட்டு போன டீ இருக்கு...:)))) தம்பி..இங்க வாடா...:)))
நன்றி ஜெர்ரி...:)))
@பாச மலர் / Paasa Malar
வாங்க பாசமலர்...இப்போ தான் பார்த்துடோம்ல:))))
@நா.மணிவண்ணன்
மணி நன்றி..பானக்கரம்..பானாக்கம் இன்னும் குழப்பம் எனக்கு...:((
@அமைதிச்சாரல்
நன்றி அமைதிசாரல்...அடுத்த வாட்டி மதுரைவாங்க...நான் வாங்கி தரேன்...(ஆனால் எனக்கு ஜிகர்தண்டா பிடிக்காது...:(( )
@Jaleela Kamal
நன்றி ஜலீலா அக்கா...உங்க தோழி எங்க ஊரா...ரொம்ப மகிழ்ச்சி...
@MANO நாஞ்சில் மனோ
//மதுரைன்னதும் அருவாளோடதான் வந்தேன் ஹி ஹி ஹி ஹி ஹி... //
ஹலோ மனோ ...மாத்தி பிடிசிருக்கிங்க அருவாளை ..ஒழுங்கா நேர பிடிங்க...குத்தபோகுது உங்க வயித்தை:)))
@Rathnavel
நன்றி ரத்னவேல் ஐயா..
@ஜீ...
ஜீ...நீயுமா...:)))
@நிரூபன்
//மதுரைக்காரியா இருந்தாலும்...இந்த சித்திரை திருவிழா கூட்டத்தில் மைக்ரோஸ்கோப் வச்சு கூட என்னைத் தேட முடியாது...ஏன் ன்னால், நான் அங்கே இருக்க வாய்ப்பே இல்லை...://
ஆகாயத்திலை ஹெலிகாப்டரிலை இருந்து சாமி தரிசனம்
பண்ண்றீங்களா;-))//
நிருபன்..இது சூப்பர் ஆ இருக்கே...வெரி குட் ஐடியா...ஆனால் எங்க வீட்டில் 30 ரூபாய்க்கு வாங்கின பொம்மை ஹெலிகாப்டர் தான் இருக்கு...அதுல என் சுண்டு விரல் கூட போகலை...நான் இப்ப என்ன பண்ண...:))))
மிக்க நன்றி என் சகோதரம்...(ஹேய்..உங்களை மாதிரியே சொல்லி பார்த்தேன்...நல்லா தான் இருக்கு இதுவும்...:))) )
@தமிழ்வாசி - Prakash
மிக்கநன்றி பிரகாஷ்..
@இரவு வானம்
:))))
மதுரைன்னா முனியாண்டி விலாஸ்
மதுரையின்னா மு.க அழகிரி
மதுரையின்னா திருமலை நாயக்கர் மஹால்
இன்னும் எத்த்னையோ
ஆனால் அத்தனையிலும் டாப்
மதுரையின்னா ஹைக்கூ ஆனந்தி..
வலைச்சரத்தில் பிச்சு உதற வாழ்த்துக்கள்.
//ஏனோ கடவுளை பக்தியாய் நோக்குவதை விட ,தனிமை பொழுதுகளில்,சலசலப்பில்லாத,மௌனமான நேரங்களில் பரவசமாய் பார்ப்பதே என் விருப்பமாகிறது...// அருமையாச் சொன்னீங்கக்கா..எனக்கும் அப்படியே..
அது சரி..அழகர் ஆத்தில இறங்கிட்டாரா?
உங்கள் பதிவைப் படித்து மலைத்தேவிட்டேன், ஆனந்தி!! மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்! கள்ளழகர் வைகையில் இறங்கும் காட்சி அப்படியே மனக்கண்முன் வந்து போனது! பதிவு முழுக்க காமெடி நிறைந்து இருப்பது படிப்பதற்கு மேலும் சுவாரசியமாக இருக்கிறது!! வாழ்த்துக்கள்!
அருமையான பகிர்வு
மதுரக்காரங்க பாசக்கார புள்ளைக!!!!!!!
நானுந்தேன்!!!! .
"ஆசை காட்டும் கீத்து மாங்காய் பத்தைகள்..."
ஸ் ஸ் ஆ ஆ
மதுரையில் பிறந்து மற்றெல்லா இடங்களிலும் வளர்ந்த எனக்கு சித்திரைத் திருவிழாவிலும் திருக்கல்யாணத்தில் பங்கெடுத்துக்கொண்ட வாய்ப்பு இரண்டு தடவை வாய்த்திருக்கிறது.
நீங்கள் எழுதியது படித்த பின் அடுத்த வருஷத் திருக்கல்யாணத்திற்கு என் மனைவி குழந்தைகளுடன் மதுரை வந்து செல்லும் ஆர்வத்தை உண்டுபண்ணிவிட்டது ஆனந்தி.
வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய உங்கள் மேன்மைக்கும் என் தனி நன்றி.
அதன் பெயர் பானகம் ஆனந்தி.
நல்ல ஸ்ட்ராங் ஃபில்டர் காஃபியில் சர்க்கரை கூடிப்போனால் என் பாட்டி சொல்லுவாள்-இது காஃபியா இல்ல பானகமா?
உங்க அழகர் கோவில் திருவிழா அன்னிக்கி தான் நானும் ஊர்ல இருந்து வந்தேன், மதுரை ஊர்ல இருந்த கூட்டம் bus stand உள்ள இல்ல...... நான் வந்த பஸ் சு... உங்க ஊற கிராஸ் பண்ணுறது குள்ள போதும் போதும் ன்னு ஆச்சுங்க.....
@ரம்மி
//இவற்றையும் மதுரை அடையாளங்களில், இணைக்கலாமே!
போஸ்டர்கள், பேனர்கள், சிடி கடைகள் - தமிழகத்தில், எங்கும் கிடைக்கப் பெறா, தலைப்புகளில் காணக் கிடைக்கும்! மதுரை வரும்போதெல்லாம், பை நிறைய அள்ளி வருவேன்! //
ரம்மி....ஹ ஹ...நீங்க சொன்னதும் ரொம்பவே உண்மை...எங்க ஊரு பயபுள்ளைங்க ரொம்ப க்ரியடிவிடி ஆளுங்க...ஹ ஹ....
மீதி பின்னூட்டத்துக்கு அப்பால வந்து பதில் தரேன் மக்காஸ்...
மதுரைன்னா இரவிலும் கொத்துப்ரோட்டா போடும் தாளம்
மதுரைன்னா பெண்களை கண்களால் கற்பளிக்கும் ஆண்கள்
மதுரைன்னா சித்திரை திருவிழாவுக்கு வரும் இடிமன்னர்கள்
இதையெல்லாம் மறந்துவிட்டு சொர்க்கத்துக்கு வாங்க என்கிறிர்களா?
///மதுரைக்காரியா இருந்தாலும்...இந்த சித்திரை திருவிழா கூட்டத்தில் மைக்ரோஸ்கோப் வச்சு கூட என்னைத் தேட முடியாது///
மேடம் நீங்க அந்த கூட்டத்தில் இருந்தால் நான் உங்களை எளிதாக கண்டுபிடித்துவிடுவேன். எப்படி என்றால் நீங்க இருக்கும் இடம் சும்மா அதிரும்ல.... ஹீ....ஹீ
ஹிஹிஹிஹி... ஜிகிர்தண்டா.. அட..அட..அட... நாக்கு ஊறுதே..
ஆனந்தி.....
பெரிய அருவாள தீட்டி வச்சுட்டு தான் வெயிட் பண்றீங்களோன்னு நெனச்சேன், அம்புட்டு பகீர் தலைப்பு...
அப்புறம் பார்த்தா வெள்ளந்தியான பல விஷயங்கள் இருக்கு...
//திப்பிலி,வெல்லம் எல்லாம் போட்ட பானாக்கம்//
இது என்ன பானாக்கம்? ஒரு வேளை பானகமோ?
வலைச்சரமா... இதோ வர்றேன்...
//பட்டு சேலை சரசரக்க,கழுத்தில் புதுத்தாலி கயிறுடன்..அன்று எங்கள் ஊர் பெண்களை பார்க்க உங்களுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்...(ஹீ..ஹீ..என்னையும் தான்....:))))))) )//
வழக்கம் போல் நான் லேட்டா...!
ஆமா...இந்த வயசான பெருசுங்கள பாக்கறதுக்கா அம்புட்டு தொலைவு வராங்க...! சுடிதார், சல்வார், மிடி இப்படி எதுனா நம்ம சமாச்சாரம் இருந்தா சொல்லுங்கோ...! கட்டாயம் " உள்ளேன் ஐயா" தான்...!ஹி...ஹி....ஹி...!
என்னடா..ஆனந்தி...இப்பவே சொர்க்கத்துக்கு போகச் சொல்றாங்களேன்னு ஒரு டவுட்டு...! மதுரை சொர்க்கம் தான் போல...! அப்படியே திருவிழாவ ஒரு ரவுண்டு வந்த மாதிரி இருந்தது...! படிக்கவே ரொம்ப ஜாலியா இருந்துச்சுங்க...! எங்க ஊரு ஆணித் திருமஞ்சனம் தான் ஞாபகம் வருது...!
சொர்க்கத்துக்கு அப்புறம் போய்க்கிறேன்...! மதுரைக்கு அடுத்த தபா வரச் சொல்ல ஒரு விசிட் அடிக்க ட்ரை பண்றேன்...! ஆமா ஜிகர்தண்டா, பானாக்கம் இதெல்லாம் என்னதுங்க...! கேக்கவே பயமா இருக்கு...!
madura pathivu...attakasam...ana...aana...ihallam entha kaalam?
வீச்சரிவாள்கள் விரவிக் கிடகக்கும் மதுரை மண்ணின் மணத்தை அப்படியே வலைப் பதிவுக்குள் கொண்டு வந்து விட்டீர்கள். என்னதான் மதுரைக்காரியாக இருந்தாலும் திருச்சி மாவட்டத்துக்காரர் போலவே நல்ல சொல்லாட்சி ! ( சேச்சே, எனக்கு தற்புகழ்ச்சியெல்லாம் பிடிக்காதுப்பா ).
`மதுரைன்னால்' லிஸ்ட்டில் விட்டுப் போன இன்னும் சில:
மதுரைன்னால் - படா படா சைஸ் ஸ்பீக்கர் பெட்டிகள் ( குறிப்பாக எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டு )
மதுரைன்னால் - `காயாத கானகத்தே' மணக்கும் `வள்ளி திருமண ' நாடகங்கள்
( மிட் நைட் ரெண்டு மணிக்குதான் முருகர் என்ட்ரி கொடுப்பார்)
மதுரைன்னால் - பெண்குலத்தின் உயர்வுக்கு ஏராளமான சுய உதவிக் குழுக்கள்
மதுரைன்னால் - கந்தரும் சிக்கந்தரும் ஒருங்கே குடியிருக்கும் திருப்பரங்குன்றம்
மதுரைன்னால் - கொட்டாம்பழம், நரி எலந்தப் பழம் , கொடுக்காப் புளி என தெருவெங்கும் கிடைக்கும் கிராமத்திய திண் பண்டங்கள்
மதுரைன்னால் - `என்னா சேதி' என்று எப்போதுமே கேள்வியுடன் முறைக்கும் முகங்கள் ( பழகி விட்டாலோ, பாசக் கிளிகள்!)
எல்லாவற்றுக்கும் மேலாக, மதுரைன்னால் - ஆனந்திதான், யெஸ்.. அந்த தன்னம்பிக்கை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு !
பார்க்கும் போதும்..பார்க்கும்போதும் எனச்சொல்லியே
மிக அழகான பதிவை படங்களுடன் கொடுத்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
எனக்கென்னவோ
மதுரை என்று சொன்னாலே
ஆனந்தியக்கா என்று சொல்லுகிற காலம்
வெகு தொலைவில் இல்லை என்பதுபோல்படுகிறது
தொடர வாழ்த்துக்கள்
@தம்பி கூர்மதியன்
//யோசிச்சன்.. மதுரையில ஏதாச்சும் பிரபலமா நடந்தா இங்கிட்டு ஒரு பதிவு விழணுமேன்னு நினச்சன்.. விழுந்திடுச்சு.. பாப்போம்.//
அட :))
//ஓ.. உங்களுக்குள் இருக்கும் கடவுளா.? பேஷ் பேஷ்.. //
ம்ம்..ம்ம்...கடவுள்ன்னு நினைப்பதை விட தேவதைன்னு நினைச்சுப்பேன்...ஹ ஹ....
//.. நம்ம மண்ணுலயா.? //
கூர்...முன்னாடி இந்த வார்த்தை எனக்கு புரிஞ்சிருக்காது...இப்போ புரியுது...கட்டாயம் நம்ம மண்ணில்..:))
//இந்த முறை எதையும் கொடுத்து வைக்கல.. அடுத்த முறை ஏதாவதுகொடுக்க முடியுதான்னு பாப்போம்.. ஹி ஹி.. //
ஹ ஹ...ஹா...
//இன்னும் இவங்களெல்லாம் இருக்காங்களா.? //
இருக்காங்க கூர்..டிபிக்கல் கலாச்சார பெண்கள் இங்கே அதிகம்..
//கடுப்பேத்தாதீங்க ஆனந்தி.. //
ஹ ஹ...இப்போ கூட சீரகம்,மிளகாய் போட்ட ஐஸ் மோர் குடிக்கிறேன்...ஹீ..ஹீ...
//சூப்பரு.. எனக்கு பிடிச்ச மேட்டரா சொல்றீங்களே//
இஜ் இட்?? :))
//என்னைய ஏத்திக்கிங்கடான்னு சொன்னா அந்த குட்டி ராட்டினத்துர யாரும் என்னை ஏத்திக்கமாட்டேங்குறாங்க.!! ஏன் ஆனந்தி.? //
என்னையும் தான் கூர்..:((
//பல முறை எங்க மாமா பையன் என் தோள் மேல நின்னு இருக்கான்.. அவன் வளந்துட்டான்.. இப்ப மாமாவோட ரெண்டாவது பையன்.. //
:))
//இதை பத்தி ஒரு பதிவே போடபோறேன்.. வந்து பாருங்க.. //
பார்த்துட்டேன்..:))
//நீங்களே அப்படி சொன்னா நானெல்லாம் என்ன செய்யிறது.. ஊர் வாழ்க்கைக்கு ஏங்குது மனசு.. ஆனா.!!//
ம்ம்..
@Sathish Kumar
//சுடிதார், சல்வார், மிடி இப்படி எதுனா நம்ம சமாச்சாரம் இருந்தா சொல்லுங்கோ...! கட்டாயம் " உள்ளேன் ஐயா" தான்...!ஹி...ஹி....ஹி...!//
சதீஷ்....எங்க ஊரு வைகை ஆற்றில் தண்ணி இல்லன்னு கவலை பட்டோம்..உங்க ஜொள்ளு அங்கே நிரம்பி போயி வெள்ளம் வந்துருச்சு...ஹ ஹ...
//ஆமா ஜிகர்தண்டா, பானாக்கம் இதெல்லாம் என்னதுங்க...! கேக்கவே பயமா இருக்கு...! //
என் டார்லிங் பிலிப்பி அப்புக்குட்டி பையன் கிட்டே பழகுனாலே சதீஷ் நீங்க இப்படி தான்...ஹ ஹ...இதெல்லாம் நம்ம ஊரு energy drink ..
உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!
:)
மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!
கல்யாணம் முடிஞ்சு இரண்டு நாள் கழிச்சுத் தான் பொண்ணு மாப்பிள்ளையை ( அட நம்ம மீனாட்சியும் சொக்கரும் தான்) பாக்க போனேன் . அழகரை இனிமேல் தான் போய் பாக்கணும். இவ்வளவு கூட்டத்தில போய் பாத்தா நம்மளை கவனிக்க நேரம் இருக்காதுல்ல...
மதுரைன்னு பேர பாத்த உடன வந்திட்டேன்... மதுரைன்னா அருவாவ பத்திதான் எல்லாரும் யோசிக்கிறாங்க... மற்ற பெருமைகளையும் சொன்ன சகோதரிக்கு நன்றி... மதுர சொர்கம்தான்.. வாழ்ந்தவுங்களுக்கு தான் புரியும்...
ஊர்ல இருந்த வரைக்கும்.. ஒவ்வொரு வருசமும் நோன்புக்கு புதுத்துணி எடுக்க மதுரைக்குத்தான் வருவேன்.. :-)..
மதுரை.............. செம ஹாட்.. :-)..
வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க ஆனந்தி..
மதுரையின் அழகை உங்க பதிவின் மூலமாக பார்க்க ரொம்ப நல்லாஇருக்கு.
எழுத்துக்கு உங்களுக்கும், படங்களுக்கு நித்தியனுக்கும் வாழ்த்துகள். (படங்களுக்கு ரெண்டு மூணு மார்க் கூட போட்டிருக்கேன்!)
ஆனந்தி என்றால் மதுரை தான் என் நினைனுக்கு இப்பவெல்லாம் தெரியுது.
சரி எனக்கு இது என்ன என்று புரியல்லை. நிங்க என்னோட வலைபதிவில் போடிருந்திங்க. இதை போய் பார்த்தேன் என்னோட வலை பதிவு ஒன்றும் அதில் இல்லை, வேற எதாவது என்றால் சொல்ல முடியுமா? ப்ளிஸ்
வலைச்சரத்தில் தங்களின் உபயோகமான பதிவை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/to-z-tips-pedia.html
I don't understand what is this?
மதுரை மல்லியாய் மணக்கிறது பதிவு.
பிந்திய வருகைக்கு மன்னிக்கணும் அக்கா...
ஃஃஃஃமதுரைன்னால் .....................ஆனந்தி...:))ஃஃஃஃ
அப்படியா மதுரைக்கு போகதடி ஆனந்தியக்கா விருந்து வைப்பா அப்புறம்... வேணாம்..
சித்திரைத்திருவிழா குறித்த தங்கள் பதிவு அருமையாக இருந்தது. மதுரையை சொர்க்கம் என்றது மிகவும் பொருத்தமானது.நன்றி.
வேலைப் பழுவின் காரணமாக ஒரு வாரம் இனைய தலத்திர்க்கு வர இயலவில்லை இன்ஷாஅல்லாஹ் பதினாரு தேதி அன்று ஊருக்கு போறேன் சந்திப்போம்...
உண்மையில் நான் உங்கள் பதிவின் ரசிகன்
ஏன் இவ்வளவு நாட்களாக பதிவேதும் காணோம்?
தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து....
@Ramani
ரமணி அண்ணா...கோடை விடுமுறை என்பதால் பதிவு பார்க்கவோ..எழுதவோ நேரம் கிடைப்பதில்லை ...பள்ளி விடுமுறை முடிஞ்சபிறகு பதிவுலகம் வர முயற்சி செய்கிறேன் அண்ணா...உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி..அண்ணா...உங்கள் மெயில் ஐ டி எனக்கு கொடுங்க...
கொஞ்சம் தாமதமாக வந்து விட்டேன்??
(நல்ல வேலை அடுத்த திருவிழா வரவில்லை)
என்னாச்சு.... திருவிழாவில காணாமல் போயிட்டீங்களா ?
உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 40/100 மார்க். நன்றி!
//இந்த தலைப்பை படிச்சுட்டு குண்டக்க மண்டக்க யோசிச்சவங்களுக்கு கம்பெனி பொறுப்பல்ல//
ha ha ha... thelivu thaan...:))
உங்கள் பதிவைப் பார்க்கும் போதும் படங்களைப் பார்க்கும் போதும் மதுரை ஆனந்தப் பூங்காற்றாய் இனிமை தவழ்கிறது.பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_8051.html
https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US&pli=1
today, i have made some important modifications in adding a label feed in google reader ....see it....d...
ஆனந்தி அருமை ....நல்ல அனுபவம் ..நன்றி
எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.
அடுத்த பதிவை போடுங்க... ஒரு மாசம் ஆயிடுச்சு.
நரகம் போகனுமா...? அப்படினு ஒரு டெர்ரொர் பதிவை போட்டுடாதீங்க.
சொர்க்கம் போகணுமா?...மதுரைக்கு வாங்க...:))))))))
mathurai maharani....aanthi vaalga:)
மதுரைன்னால் .....................ஆனந்தி...:))///
இதான் வெயிட் ....
EVLO waight..around...
enna oru 65KG..:)
தம்பி....இங்க வாடா.. போயி..அண்ணனுக்கு சூடா ஒரு டீ சொல்லு.
//
Anney enthanga Coffe Parcel...
நல்ல இருக்கு
மதுரகார அக்காவ்
என்னத்த சொல்ல அதான் எல்லாரும் சொல்லிடன்கள..
wow........
nalla pathivu..
valththukkal...
sempakam.blogspot.com
இன்றைய வலைச் சரத்தில் தங்களை
அறிமுகப் படுத்தக் கிடைத்த
வாய்ப்புக்கு பெரிதும் மகிழ்கிறேன்
அன்புள்ள ஆனந்திக்கு
உங்களுக்கு இன்னொரு கோரிக்கையும்..
தங்களைப்போலவே
மிக நல்ல பதிவுகளாகத் தந்து வந்த
சகோதரி.ஆயிஷா அபுல் அவர்களும்
உங்களைப்போலவே மௌனம்
கலைத்து பதிவுலகுள் வந்து
பதிவுகள் தந்தால் மிகவும்
மகிழ்ச்சி கொள்வேன்
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :-) many more happy returns of day ...!!
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
மதுரைன்னாலே ஆனந்தியா...ஆஹா கிளம்பிட்டாங்கய்யா
நாங்களும் திருவிழாக்கு வரலாமா?
அக்கா..... நீங்க மதுரையா? இம்புட்டு நாளா உங்கள தெரியாம போச்சே???? கரெட்டா சொன்னீங்க, சொர்கம் தாங்க மதுரை !
உங்க கலக்கல் கல கல பதிவுகளுடன் சீக்கிரம் வாங்க ஆனந்தி
மதுரையில இவ்வளவி விசயம் இருக்கா
இன்று என் வலையில்
ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்
மதுரையில இவ்வளவு விசயம் இருக்கா
Ana....???......!!!......???
என்ன அக்கா ரொம்ப நாள் ஓய்வு எடுத்திட்டிங்கள் போல...
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
பகிர்வுக்கு ........
அருமையான படைப்பு.
என் இனிய
அன்பின் தோழிக்கு.
இனிய தீபாவளி நல்
வாழ்த்துக்கள் .
அன்பின் .
"யானைக்குட்டி "
ஞானேந்திரன்
இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்
மதுரைக்கு naan oru time vandhe Romba HOT CITY
90 ரூபாய் பூஸ்டர் பேக் போடுங்க 30 நாட்களுக்கு நான் ஸ்டாப் ஆ பேசுங்க மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க 365 Days Free Unlimited Calls Click Here
என்னாச்சு பதிவுகள் ஓன்றும் காணவில்லை? புத்தாண்டு நல்வாழ்துக்கள் உங்களும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்க வளமுடன்.
புத்தாண்டில் உங்கள் பதிவுகளை படிக்க காத்திருக்கும் நண்பன் . தொடர்ந்து எழுதுங்கள்
your blog is very different and nice
சரியாய் ஒரு வருடமாச்சு.
என்னாச்சு சகோதரி?
வார்த்தைகளுக்கு நன்றி ஆனந்தி...
உங்கள் பெயர் கொண்ட எனது அபிமான ஆசிரியையை பல ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். எங்கிருக்கிறீர்கள் ஆனந்த லக்ஷ்மி மேடம் ?
I as well as my friends happened to be checking out the good tactics found on your web site and all of the sudden I got a horrible feeling I had not thanked the blog owner for those strategies. My ladies are already happy to read all of them and have now seriously been taking pleasure in those things. Appreciation for getting well considerate and also for utilizing certain terrific useful guides most people are really desperate to understand about. My sincere apologies for not expressing gratitude to earlier.
[url=http://mako.caafrica.com/]payday loans uk[/url]
payday loans uk
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்
வலைச்சர தள இணைப்பு : செவ்வாயின் செவாலியர்கள்
வணக்கம்
இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்...சென்று பார்வையிடஇதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/04/blog-post_15.html?showComment=1397524988384&m=1#c6269993936082955026
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வலைச்சரம் மூலமாக தங்களது பதிவினைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
Pretty! This was an extremely wonderful article. Thanks for supplying this info.
My page - google.ca ()
Post a Comment