March 14, 2011

A Short Commercial Break...:))


(முஸ்கி :என்னை தேடும் அன்பு உள்ளங்களுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு...:) தேடாத அன்பு உள்ளங்கள் படிக்க வேண்டாம்...:))

அன்பு மக்காஸ்....:))

ஒரே அன்பு மகன் முழு ஆண்டு தேர்வு ஆயத்தம் ஆவதற்கு ,கூடஇருந்து
உதவி புரிதல் னு:) கடந்த சில நாட்களாய் நானு ஒரே ஒலக பிஸி..:)) இடையில் சிறிது சிறிது இணையம் எட்டி பார்த்தாலும் அதுக்கும் ஆப்பு...நேற்று விருந்தினர்கள் ஆஜர் ...:) ஸோ, அடுப்படி...மற்றும் மகனுடன் நானும் சேர்ந்து படிப்பு( ஹீ...ஹீ...அதானே இந்த கால பெற்றோர் நிலைமை...) ன்னு சுனாமி வேக பிஸி இல் இருக்கிறேன்...(நூலத்தில் அருமையான புத்தங்கள் வாங்கி இன்னும் தொட்டு பார்க்க கூட நேரம் கிடைக்கலை...மாலை நேர மொட்டை மாடி காற்றினை மிஸ் பண்றேன் கொஞ்ச நாளாய் :) ஸோ  ரொம்ப பிடிச்ச விஷயங்களை கொஞ்ச நாளா கோட்டை விடுறேன்..:(( )

அவனுக்கு படிப்பில் உதவி புரிகிறேனோ இல்லையோ..ஆனால் அவன் தேர்வுக்கு படிக்கும்போது நான் கணினியில் கவனத்தை செலுத்த வேணாம்னு பார்க்கிறேன்...:)

so....

மக்காஸ்...என் கடமைகளை:)) சரிவர முடிச்சுட்டு இணையம் பக்கம் விரைவில் வருகிறேன்...

இந்த அறிவிப்பு கூட போடுவதற்கு முன் கண்ணா பின்னான்னு :)) யோசிச்சேன்..ஆனால் போன பதிவுக்கு முன்னாடி பதிவர் ரமணி அண்ணா "ஏன்மா ..புது பதிவு எதுவும் போடலை" னு அன்பாய் கேட்டு இருந்தாங்க..." அட நம்மையும் தேட கூட உடன்பிறப்புகள் இருக்காங்களேன்னு கொஞ்சம் சந்தோஷம்...ஸோ...என்னை தேடும் அன்புள்ளங்களுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு...:))


மக்காஸ்...விரைவில்
சந்திப்போம்...

Takecare and Njoy..:)))


அன்புடன் ..

ஆனந்தி...:)

51 comments:

Sathish Kumar said...

ரொம்ப நல்ல அம்மா நீங்க...! கடமையெல்லாம் முடிச்சுட்டு வாங்க, அப்புறம் உட்கார்ந்து பேசுவோம்...!

இதற்கு பதில் கமென்ட் போட வேண்டியதில்லைங்க ஆனந்தி...! (சொல்லலன்னா மட்டும் போடவா போறீங்க...!)

Sathish Kumar said...

நான் தான் பஷ்ட்டா....!! முதல் தடவையா ஒரு உலக சாதனை..! ;-))

MANO நாஞ்சில் மனோ said...

பொறுமையா வாங்க மக்கா நோ பிராப்ளம்......
நாங்க காத்து இருக்கோம்....

ஆனந்தி.. said...

இது சதிஷ்க்காக...:))

இனி கட்டாயம் நான் எழுதும் பதிவுகளில் கம்மென்ட் க்கு பதில் போடுவேன் சதீஷ்...sure ..சரியா..:)) டேக் கேர்..:))

Ram said...

முதலில் பையன் அப்பரமா தான் கம்ப்யூட்டர்..

//அவனுக்கு படிப்பில் உதவி புரிகிறேனோ இல்லையோ.//

ஹலோ.. ஒழுங்கா உக்காந்து சொல்லிகொடுங்க.. சமைக்கிறது கூட வேணாம்..(ஏட்டு கல்வி ஒப்பித்தல் தானே இக்காலத்து கல்வி.. திறமையை யார் பார்க்கிறார்.. அத மாத்தமுடியாது.. ஒத்துபோகவேண்டியது தான்..)

உங்க பையனுக்கு தானே படிக்கிற தனித்திறமை அதிகமாவே இருக்கலாம் ஆனால் படிக்கும்போது அம்மா அருகில் இருந்தால் எண்ணம் வேறு எங்கும் போகாது..

பதிவும் வேணாம், கமண்ட்ஸ்ம் வேணாம்.. உடனே ட்யூட்டி ஸ்டார்ட் ஆகட்டும்..

எல்லாரும் எப்ப போனாங்க இந்த அம்மா சரியே இல்லப்பா.. பரீட்சைக்கு முந்தன நாள் கிளம்புறாங்க.. சோ பேட்..

(எப்படியோ இதுக்கும் எதிர்கருத்து போட்டாச்சு..)

சீக்கிரமாவே மீட் பண்ணுவோம்..

Anonymous said...

ஓ.கே சகோ, எக்ஸாம் எல்லாம் முடிச்சிட்டு, படிச்ச புத்தகங்களோட விமர்சனத்தோட வாங்க! :)

நிரூபன் said...

வணக்கம் சகோதரி, எப்படி நலமா? ஆறுதலாக வாங்கோ. No problem. முதலாண்டுத் தேர்வு என்றால் என்ன?
உங்கள் மகன் தேர்வில் நல்ல பெறு பேற்றினைப் பெறப் பதிவர்கள் அனைவரும் வாழ்த்துவோமாக.

R. Gopi said...

பரிட்சையை முடிச்சிட்டு வாங்க. நீங்களும் படிங்க. ரிவைஸ் பண்ண மாதிரி இருக்கும்:-)

இம்சைஅரசன் பாபு.. said...

ஒகே ..ஒகே லீவ் sanctioned upto april 14 ....

jothi said...

சுத்த‌ம்,,. என‌க்கு ஏதோ ஒண்ணு ரெண்டு த‌மிழ்ம‌ண‌த்துல‌ ஓட்டு வ‌ரும்,.. அதிலியும் ஒண்ணு போச்சா (அவ‌ன் அவ‌னுக்கு என்ன‌ என்ன‌ க‌வ‌லை பாருங்க‌),..

ஹி ஹி சும்மாதான்

jothi said...

பொழுதுபோக்காக‌ ப‌திவு எழுதும் போதுதான் நிறைய‌ கால‌க‌ட்ட‌த்திற்கு எழுத‌ முடியும். மேலும் இடைவெளி விட்டு எழுதும் போது அதே அவாவுட‌ன் எழுத‌ முடியும். என‌வே ப்ரேக் எடுப்ப‌து ரொம்ப‌ ந‌ல்ல‌து,..

All the best (பைய‌னுக்கும் சொல்லித்த‌ர‌ப்போகும் அன்னைக்கும்,..)

jayakumar said...

definitely we have a lot of love and affection ananthi...appram athu enna books nu solla mudiyuma?

vanathy said...

ஆனந்தி, மகனுக்கு நல்லா பாடம் சொல்லிக் குடுங்கோ. எல்லாம் முடிச்சுட்டு மெதுவா வாங்க.

தமிழ் உதயம் said...

கடமை முக்கியம்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல அன்பான பொறுப்பான அம்மா... மெதுவா பதிவுக்கு வாங்க.... நாங்க வெயிட் பண்றோம்.

எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!

செங்கோவி said...

//என‌க்கு ஏதோ ஒண்ணு ரெண்டு த‌மிழ்ம‌ண‌த்துல‌ ஓட்டு வ‌ரும்,.. அதிலியும் ஒண்ணு போச்சா..// ஜோதி, ஒய் ப்ளட்..சேம் ப்ளட்!!! அக்கா, மருமவனை கலெக்டரு ஆக்கிட்டுத்தான் நீங்க பதிவு பக்கம் வரணும், ஆமா!!!

செங்கோவி said...

ஏன் யாருமே இந்தப் பதிவுக்கு ஓட்டு போடலை?..பாத்தீங்களாக்கா இது தான் உலகம்!..ஆனா நான் தமிழ்மணம், இண்ட்லி ரெண்டுலயும் ஓட்டு போடறேன்..அதுதான் நான் அந்த தாயுள்ளத்துக்கு செலுத்தற மரியாதை!

வசந்தா நடேசன் said...

மகனின் படிப்பு நம் பதிவைவிட முக்கியம் தான், மகன் நல்ல மார்க் வாங்க வாழ்த்துக்கள்..

ஹேமா said...

உங்க மகனுக்கு என் வாழ்த்துகள்.
உதவியா ஏதாச்சும்ம் சொல்லிக் குடுங்க ஆனந்தி.அப்புறம் அதுபத்தின சுவாரஸ்யமான பதிவோட சந்திக்கலாம் !

வைகை said...

எங்கள டார்ச்சர் பண்ணினது பத்தாதுன்னு உங்க மகனையும் பண்ண போறீங்களா? ஹா..ஹா.... :))

வைகை said...

பதிவுலகத்தவிட மகனின் எதிர்காலம் முக்கியம்....
Best wishes to your son...:
Enjoy your studies.. :))

ம.தி.சுதா said...

ஃஃஃஃமக்காஸ்...விரைவில் சந்திப்போம்... ஃஃஃஃ

வாக்க தவறமாட்டிங்களே... ஹ..ஹ..ஹ.

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

Unknown said...

ok sister

Unknown said...

வெற்றியோட திரும்புங்க.. :-) உங்க பையனுக்கு எனது வாழ்த்துக்கள்..

Pranavam Ravikumar said...

Convey regards to your son. Take care.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உங்க மகனுக்கு என் வாழ்த்துகள். பிள்ளையின் படிப்பே முக்கியம் பரீட்சை முடிந்ததும் சந்திப்போம். எம்மை மறக்காமல் இருந்தாலே போதும்.(லொள்ளு)

ஆனந்தி.. said...

ஐயோ..யாருப்பா இது தமிழ்மணம்,இன்டிலி எல்லாம் ஓபன் பண்ணி விட்டது...:))))

Prabu M said...

நேத்துதான் சித்ரா அக்கா பத்து நாள் லீவு கேட்டாங்க... சரின்னு கொடுத்துட்டோம்...
ஈவ்னிங் நீங்களும் ஷார்ட் பிரேக் போட்டு இருக்கீங்க.... ஹ்ம்ம்ம்.. ஓகே சகோ...
நல்ல விஷயம்.... ஆதி ஆன்வல் எக்ஸாமில் கலக்கட்டும்... நீங்க அவர் படிக்கும்போது கூடவே இருந்து நல்லா என்கரேஜ் பண்ணிட்டு மெதுவா திரும்பி வாங்க.... :)

ஆனந்தி.. said...

This comment has been removed by the author.

ஆனந்தி.. said...

@செங்கோவி

/ஏன் யாருமே இந்தப் பதிவுக்கு ஓட்டு போடலை?..பாத்தீங்களாக்கா இது தான் உலகம்!..ஆனா நான் தமிழ்மணம், இண்ட்லி ரெண்டுலயும் ஓட்டு போடறேன்..அதுதான் நான் அந்த தாயுள்ளத்துக்கு செலுத்தற மரியாதை!//

யாரு இன்டிலி ல இணைச்சதுன்னு முழிச்சால் ...ஹலோ பாஸ் நீங்க தானா..?? இது அறிவிப்பு தானே சகோ...இதுக்கு எதுக்கு வோட்டு எல்லாம்...:))

sakthi said...

பையனின் படிப்பு தான் முக்கியம் மா முதல்ல அதை கவனியுங்க ::)))

சி.பி.செந்தில்குமார் said...

>>>
(முஸ்கி :என்னை தேடும் அன்பு உள்ளங்களுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு...:) தேடாத அன்பு உள்ளங்கள் படிக்க வேண்டாம்...:))

நான் தேடாத ஆள் தான். ஆனா படிப்பேன்.. ஹி ஹி

Unknown said...

சீக்கிரம் வேலைஎல்லாம் முடிச்சிட்டு வாங்க மேடம்..

Angel said...

ஆனந்தி ,பிள்ளைகள் படிக்கும்போது நாமும் அவங்களோடு உக்கார்ந்திருந்தா
அவங்களுக்கு encouraging and supportive ஆக
இருக்கும்.well done நல்ல அம்மா .

ஆயிஷா said...

உங்க மகனுக்கு என் வாழ்த்துகள்.

பதிவுலகத்தவிட மகனின் எதிர்காலம் முக்கியம்.

அவன் ஸ்கூல் போன பிறகு
எங்க பக்க வாங்கோ.

செங்கோவி said...

@ஆனந்தி..///யாரு இன்டிலி ல இணைச்சதுன்னு முழிச்சால் ...ஹலோ பாஸ் நீங்க தானா..??// ஹி...ஹி..ஆமா!

Avargal Unmaigal said...

உண்மையை சொல்லுங்க உங்க பையன் பரிட்சைக்கு ஹெல்ப பண்ண போரிங்களா அல்லது உங்க அண்ணன் அழகிரிக்கு உதவ போறிங்களா?

Avargal Unmaigal said...

பையனுக்கு அன்பு வாழ்த்துக்கள்

SEO Tricks 2011 said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

Prabu Krishna said...

பொறுமையா வாங்க. வரும்போது ஒரு நியூஸ்லெட்டர் இல்லாட்டி நம்ம பிளாக் ல எல்லாம் ஒரு ப்ரெசெண்ட் போட்டுருங்க.

மகனுக்கு வாழ்த்துக்கள்.

ஷர்புதீன் said...

:-)

Sivakumar said...

//என்னை தேடும் அன்புள்ளங்களுக்காக மட்டுமே இந்த அறிவிப்பு.//

தேர்தல் நேரத்துக்கு ஏத்த வரிகள். தேர்வில் தங்கள் மகன் வெல்ல வாழ்த்துகள். நீங்க நல்லா படிங்க சகோதரி.

Yaathoramani.blogspot.com said...

உங்கள் பதிவை எதிர்பார்த்து
எத்தனை ரசிகர்கள்இருக்கோம்ன்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா
கடமையை செவ்வனே முடித்து
மீண்டும் புதுப்பொலிவுடன்
பதிவைத் தொடர வாழ்த்துக்கள்

மாணவன் said...

உங்கள் அன்பு மகனுக்கு வாழ்த்துக்கள்....

//மக்காஸ்...என் கடமைகளை:)) சரிவர முடிச்சுட்டு இணையம் பக்கம் விரைவில் வருகிறேன்... //

உங்கள் பணிகளை செவ்வனே சிறப்பாக முடித்துவிட்டு மீண்டும் புத்துணர்ச்சியோடு வாங்க மேம் :)

ஜோதிஜி said...

ஆனந்தி நீங்க ஏன் அரசியல் பதிவுகள் எழுதக்கூடாது? ராஜ நடராஜன் பதிவில் சும்மா பின்னு பின்னுன்னு பின்றீங்க.

ராஜ நடராஜன் said...

ச்கோதரி ஆனந்தி!கருத்துக்களின் அடிப்படையிலேயே நான் பின்னூட்டம் போடுவதால் நான் உங்களுக்கு முன்பு பின்னூட்டம் போட்டேனா என்று நினைவில்லை.

அழகிரி குறித்த உங்கள் பின்னூட்டஙக்ள் பலரின் பார்வைக்கும்,வியப்புக்கும்,மதுரை மண்ணின் பெயருக்கும் பெருமையைச் சேர்த்து தந்திருக்கின்ற்ன.

உங்களைச் சார்ந்த பதிவர்களின் கருத்துக்கள் அடுத்த பின்னூட்டத்தில்....

ராஜ நடராஜன் said...

ஜெரி ஈசானந்தன். said...

வணக்கம் நண்பர்களே,இந்த இடுகையின் சத்தம் உச்சஸ்தாயியில் கேட்பதை பார்த்து,உள்ளபடியே மகிழ்ச்சி தான், கருத்து ச்சுதந்திரதிற்க்கான வெளி தற்போது இணையத்தால் இன்னும் விலாசமாக்கப்பட்டு இருப்பதால் தான் நண்பர்கள் ஜோதிஜி,ஆனந்தி போன்றோரின்,அறிவார்ந்த,அனுபவம் தோய்ந்த,புள்ளி விவரங்கள் பொதுவெளியில் வைக்கப்பட்டு ,கவனத்தை பெறுகிறது.

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி said...

நடாஜி (நன்றி சசர்ஜி)

ஆனந்திக்கு மங்கம்மா என்று பெயர் கொடுக்கலாம் போலிருக்கு. சும்மா பொளந்து கட்டுறாங்க.

ராஜ நடராஜன் said...

Blogger Thekkikattan|தெகா said...

ராஜ நட,

முழு பின்னூட்டங்களையும் வாசிச்சிட்டேன். மகுடம் சூடினது ஜோதிஜி மறு பெயர் வைத்த மங்கம்மாதான் :)...

எப்படிங்க இப்படி. அதுவும் மதுரையில இருந்திட்டே இப்படி? அந்த மண்ணுக்கின்னே ஒரு வீரம் இருக்குமோ.

நிறைய விசயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. பின்னூட்டவாதிகள் அனைவருக்கும் நன்றிங்கோ!!

ஆனந்தி.. said...

@ராஜ நடராஜன்

ஹ ஹ...ஹா:))))

cheena (சீனா) said...

அன்பின் ஆனந்தி - நானும் மதுரைக்காரந்தான் - நானும் பிளாக் வச்சிருக்கேன் ( எழுதறேனா தெரியல ) - எல்லா மதுர மக்களோட கூட்டத்திலே சேக்கறது தானே ! சரி சரி - பிரேக் முடிஞ்சுருக்கணுமே !நல்வாழ்த்துகள் - நட்ப்டுஅன் சீனா