அடடா! செம அழகான கண்கள் னு நிறைய பேரை பார்த்து நான் வியந்தாலும் சட்டுன்னு என்னை மயக்கும் ...பரவசமாக்கும்..மெய்சிலிர்க்க வைக்கும்,நெகிழ வைக்கும் கண்களும் உண்டு...
மை இடாத,காண்டாக்ட் லென்ஸ் எதுவும் போடாத,மொத்தத்தில் மேக் அப் இல்லாத கண்கள் தான் என் சாய்ஸ் :)))
இந்த வரிசையில் சுவாமி விவேகானந்தர் கண்களை குறிப்பிட விரும்புறேன்...செம பவர்புல் ஸ்பிரிச்சுவல் கண்கள்..யப்பா..!! எங்க வீட்டின் நுழைவாயிலை அலங்கரிப்பது இவரின் கண்கள் தான்..:))
ஓகே..அடுத்து...
அன்னைக்கு என் வண்டியை எடுக்கும்போது என் பாதத்தை ஏதோ தொட்ட உணர்வு...குனிஞ்சு பார்த்தால் அழகான வெள்ளை கலர் குட்டியூண்டு பூனை குட்டி..குட்டியூண்டுன்னால் அவ்வளவு குட்டி.. குட்டியூண்டு:))))) பயங்கர சந்தோஷமாகி தூக்க முற்படும் போது ,தரையில் படர்ந்த என் துப்பட்டாவின் ஓரமாய் ஒளிஞ்சு அழகாய் அது கண்களை உருட்டி உருட்டி "மியாவ் "சொன்னதில் ..பரவசமானேன்..என்ன அற்புதமான அழகு அதன் கண்கள்!...அனேகமா விலங்குகளிலேயே பூனைக்கு தான் அழகான கண்களா இருக்குமோ?
அப்புறம்..
ஒரு லெதர் பேக் தைக்க நான் சென்றபோது .........
இரவு -8 மணி,
தைத்தவர்-72 வயது தாத்தா,
இடத்தின் சூழ்நிலை-40 வாட்ஸ் குண்டு பல்பின் மங்கிய வெளிச்சம்.
ஆனால் அவர் பார்வை வெகு கச்சிதம்..
பவர் கண்ணாடி எதுவும் அணியவில்லை..
எதுக்கு இந்த கண்கள் புராணம்னு யோசிக்கிறதுக்கு முன்னாடி.....
இந்த தலைமுறை குழந்தைகளின் சின்ன பய(யோ) டேட்டா :-
*******************************************************************
பிடித்த உணவுகள் :- சாக்லேட்,நூடில்ஸ்,பீஸா,பர்கர்,
பிடித்த பொழுது போக்கு:- ஆல் டைம் டிவி பார்த்தல்,வீடியோ கேம்,கம்ப்யூட்டர் கேம்..பிளே ஸ்டேஷன்..
********************************************************************
போன வாரம்,என் பையனை ஸ்கூல் இல் இருந்து கூப்பிட போனபோது,அவன் பள்ளியில் காத்திருந்த தருணங்களில் ... நான் கண்டு வருத்தப்பட்டது தான்...மேற்சொன்ன எல்லா வரிகளின் தொடர்பும்...
பள்ளிவிட்டு வந்த குட்டிஸ்களில் பெரும்பாலும் கண்ணாடி அணிந்தவர்கள். அதிலும் 3 வயது குட்டிஸ் கூட பவர் கிளாஸ் போட்டு இருந்தது பார்க்க ரொம்ப வருத்தமா இருந்துச்சு..:((
போன வாரம்,என் பையனை ஸ்கூல் இல் இருந்து கூப்பிட போனபோது,அவன் பள்ளியில் காத்திருந்த தருணங்களில் ... நான் கண்டு வருத்தப்பட்டது தான்...மேற்சொன்ன எல்லா வரிகளின் தொடர்பும்...
பள்ளிவிட்டு வந்த குட்டிஸ்களில் பெரும்பாலும் கண்ணாடி அணிந்தவர்கள். அதிலும் 3 வயது குட்டிஸ் கூட பவர் கிளாஸ் போட்டு இருந்தது பார்க்க ரொம்ப வருத்தமா இருந்துச்சு..:((
பெற்றோர்களின் மரபு வழி பிரச்சனைகளால் குழந்தைகளுக்கும் அந்த குறைபாடு வந்து கண்ணாடி அணிந்தால் அது தவிர்க்கவே முடியாத விஷயம்..அது ஓகே..
ஆனால்..நான் மேற்சொன்ன அந்த பய டேட்டாவும் இந்த குறைபாடுகளுக்கு ஒரு காரணம், என் பையன் கூட படிக்கும் குட்டிஸ் இல் பாதிக்கும் மேலே லஞ்ச்க்கு கொண்டு வரும் உணவு பெரும்பாலும் அந்த காஞ்சு போன நூடில்ஸ் தான்...
நம்மில் பெரும்பாலும் பாஸ்ட் புட் (fast food) உணவுகளை குழந்தைகளுக்கு பழக்கி,சரிவிகித உணவு(balanced diet) அப்டிங்கிற கான்செப்ட் இல் இருந்து விலகி போறது தான் இந்த குறைபாட்டின் அதிகரிப்பா....ம்ம்...வருமுன் காப்பது நல்லது!!!!!
ஓகே..ஓகே...வருஷ கடைசியில் ஒரு மெசேஜ் சொல்லிபுட்டோம்ல :))))...அப்படியே ரெண்டு விஷயம் மட்டும் சொல்லிட்டு போய்டுறேன் டிஸ்கி யில்..
டிஸ்கி 1 : அந்த குட்டியூண்டு பூனை குட்டி பேரு - "சிட்டி" :)))
டிஸ்கி 2 : இந்த ஆண்டில் ,எனக்கு ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்கள்..என் பாலோவேர்ஸ்,என்னை ஊக்கு வித்த:)) ..சை..ஊக்கப்படுத்திய தோழர்/தோழிகள் மற்றும் திரட்டி நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி!நன்றி! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!
102 comments:
எனக்கும் பூனைக் குட்டிகளின் கண்கள் அளவுக்கு யாருடைய கண்களும் கவரவில்லை!
:-)
புதுவருட 'மெசேஜ்' இற்கு நன்றி!
புதுவருட வாழ்த்துக்கள்!
Thanks Jee!! My heartiest wishes to You:))
advance happy new year sis..
@ganesh
Thanks Brother..:)))
நல்ல மெஸேஜ் .நயமாக சொன்னதற்கு நன்றி
ஹாப்பி நியூ இயர் சகோ
அந்த குழந்தைக்கு இரண்டு வயது தான் இருக்கும் அந்த குழந்தை கண்ணாடி அணிந்து பார்த்திருக்கிறேன் . அதுவும் சோடா புட்டி கண்ணாடி . அதுவும் நம்ம ஊர்லதான் . பி பி குளத்தில் ஒரு பாணி பூரிகடையில் பார்த்தேன் .
//தரையில் படர்ந்த என் துப்பட்டாவின் ஓரமாய் ஒளிஞ்சு அழகாய் அது கண்களை உருட்டி உருட்டி "மியாவ் "//
அழகான ரசனை.. அந்ந்த பூனைய வீட்ட விட்டு அடிச்சு விரட்டிட்டீங்களா.???
//ஆனால் அவர் பார்வை வெகு கச்சிதம்..
பவர் கண்ணாடி எதுவும் அணியவில்லை..//
யாரோ ஒருவரை பார்த்துவிட்டு இப்படி பேசுவது சரியில்லை.. அவர் ஆரோக்கியமாக இருந்ததாலே 72 வயது வரை இருக்கிறார்.. எத்தனை பேரை இப்படி உங்களால் காட்ட முடியும்..??
//சாக்லேட்,நூடில்ஸ்,பீஸா,பர்கர்,
சிப்ஸ்,ஐஸ் கிரீம்,கோக்,பெப்சி..//
இதெல்லாம் நீங்க தொட்டு கூட பாத்ததில்லையா.??
//ஆல் டைம் டிவி பார்த்தல்,வீடியோ கேம்,கம்ப்யூட்டர் கேம்..பிளே ஸ்டேஷன்//
எல்லா காலி இடத்தையும் தான் ப்ளாட்டு போட்டு வித்துடுறீங்களே..!!
//பள்ளிவிட்டு வந்த குட்டிஸ்களில் பெரும்பாலும் கண்ணாடி அணிந்தவர்கள். //
சத்தியமா ஏத்துக்கமாட்டன்.. அந்த காலத்துக்கு இப்போ அதிகம்னு சொன்னீங்கன்னா ஏத்துக்கலாம்.. ஆனா இருக்குற பசங்கள்ல கண்ணாடி போட்டவர் தான் அதிகம்னா.!! கொஞ்சம் காமெடியா இருக்கு.. சும்மா ஜாலியா தான் சொல்றன், பையன முதியோர் கல்வியில சேத்துட்டீங்கன்னு நினைக்கிறன்.. பாத்து நல்ல பள்ளிகூடமா சேருங்க..
//என்னவோ என் ஜெனரேஷனை விட என் பையன் ஜெனரேஷனில் இந்த எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாய் தான் படுது..//
இத ஒத்துகிறன்.. ஆனா பெரும்பாலும்னு சொன்னதை எதிர்கிறேன்..
//வருமுன் காப்பது நல்லது!!!!!//
நீங்க இன்னும் 1980ஸ்லயே இருக்கீங்க.. இதெல்லாம் சொன்னா யாருமே கேக்க மாட்டாங்க..
//ஓகே..ஓகே...வருஷ கடைசியில் ஒரு மெசேஜ் சொல்லிபுட்டோம்ல :)))).//
என்ன ஒரு புத்திசாலிதனம்..!!!
தகவலுக்கு நன்றிங்க....
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.......
@தம்பி கூர்மதியன்
//அழகான ரசனை.. அந்ந்த பூனைய வீட்ட விட்டு அடிச்சு விரட்டிட்டீங்களா.???//
இல்ல...இவ்வளவு அழகை எப்படி விரட்ட முடியும்..:)) எங்க ஸ்ட்ரீட் மக்கள் எல்லாருக்கும் புடிச்சு போச்சு..ஏரியா குட்டீஸ் செம கொஞ்சல்ஸ் ...இப்ப கூட போயி கொஞ்சிட்டு வந்தேனே...:)))
@தம்பி கூர்மதியன்
////என்னவோ என் ஜெனரேஷனை விட என் பையன் ஜெனரேஷனில் இந்த எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாய் தான் படுது..//
இத ஒத்துகிறன்.. ஆனா பெரும்பாலும்னு சொன்னதை எதிர்கிறேன்..//
ஹ ஹ...அழகான வன்முறை...(சிரிச்சுட்டே இதை டைப் பண்றேன்..:)) )
@தம்பி கூர்மதியன்
///சாக்லேட்,நூடில்ஸ்,பீஸா,பர்கர்,
சிப்ஸ்,ஐஸ் கிரீம்,கோக்,பெப்சி..//
இதெல்லாம் நீங்க தொட்டு கூட பாத்ததில்லையா.??//
நீங்க நம்புவிங்களானு தெரியாது...ஆனால் மெய்யாலுமே இந்த items எதுவும் எனக்கு புடிக்காது...நான் தான் சொன்னேனே..கொஞ்சம் கிராமப்புறம்:)) சுண்டல்,கொழுக்கட்டை..வேர்கடலை சாப்டும் அக்மார்க் மதுரகாரி...:))))
வருஷ கடைசியில் ஒரு மெசேஜ் சொல்லிபுட்டோம்ல :)//
இன்னும் ரெண்டு நாள் இருக்கு ...
@தம்பி கூர்மதியன்
//ஆனால் அவர் பார்வை வெகு கச்சிதம்..
பவர் கண்ணாடி எதுவும் அணியவில்லை..//
யாரோ ஒருவரை பார்த்துவிட்டு இப்படி பேசுவது சரியில்லை.. அவர் ஆரோக்கியமாக இருந்ததாலே 72 வயது வரை இருக்கிறார்.. எத்தனை பேரை இப்படி உங்களால் காட்ட முடியும்..??
you are right!! :)) ஆனால்..நான் எல்லா தாத்தாவையும் சொல்லலை...அதான் நான் பர்டிகுலர் தாத்தாவை மட்டும் சொன்னேன்..(எப்புடி எஸ்கேப்..:))) ))
@ஆனந்தி..:
//சுண்டல்,கொழுக்கட்டை..வேர்கடலை சாப்டும் அக்மார்க் மதுரகாரி...:)//
நாங்கயெல்லாம் எல்லாத்தையும் ஒரு புடி புடிப்போம்...
நீங்க சொல்லி நம்பாமயிருப்பேனா.. நம்புறன்(ஏமாந்துடாதடா கூர்மதியா.!!)
@karthikkumar
//வருஷ கடைசியில் ஒரு மெசேஜ் சொல்லிபுட்டோம்ல :)//
இன்னும் ரெண்டு நாள் இருக்கு //.
கார்த்திக்...ஏன் இந்த கொலைவெறி...:))
@ஆனந்தி.. : //ஆனால்..நான் எல்லா தாத்தாவையும் சொல்லலை...அதான் நான் பர்டிகுலர் தாத்தாவை மட்டும் சொன்னேன்.//
நீங்க கம்பேர் பண்ணி எழுதும் போது ஒருவரை குறிப்பிட்டாலும் எல்லோரையும் பற்றி பேசும் சூழ்நிலை ஏற்படும்.. நீங்கள் ஒருவரை காட்டினால் நான் நாறு பேரை காட்டுவேன்... (நோ எஸ்கேப்.!!)
@தம்பி கூர்மதியன்
/நீங்க கம்பேர் பண்ணி எழுதும் போது ஒருவரை குறிப்பிட்டாலும் எல்லோரையும் பற்றி பேசும் சூழ்நிலை ஏற்படும்.. நீங்கள் ஒருவரை காட்டினால் நான் நாறு பேரை காட்டுவேன்... (நோ எஸ்கேப்.!!) //
ரொம்ப நீளமா இருக்கும்னு அதை பதிவிடல கூர்மதி...நான் அந்த tailor தாத்தா கூட பேசும்போது ஒரு விஷயம் சொன்னார்..கொஞ்சம் பொறாமையா கூட இருந்துச்சு...இன்னும் அவர் மனைவி அம்மியில் மசாலா அரைச்சு தான் குழம்பு வைப்பாங்களாம்...கம்மங்கூழ்,கேப்பகூழ் இன்னும் நடைமுறையில் னு சொன்னார்...ம்ம்...என் அப்பாக்கு இப்ப 62 வயசு கூர்மதி...அப்பா கண்ணாடி போடலை...வெள்ளை எழுத்து கூட வரல..அப்பா கலி,கூழ் item அடிக்கடி சாப்டுவங்க..முளை கட்டிய பயிர் கட்டாயம் எங்கள் வீட்டில் வாரம் ரெண்டுமுறை உண்டு...:)) நான் பார்த்த என் உறவுகளில் ஓரளவு பெருசுங்க:)) கண்ணாடி போடமா தான் இருக்காங்க...:)) வேணும்னால் இப்படி திருத்தி படிச்சுக்கோங்க...ஆனந்தி பார்த்த வரையில் னு....:))) (இந்த பதில் போதுமா..இன்னும் கொஞ்சம் வேணுமா? )
//ஆனந்தி பார்த்த வரையில் னு....:))//
பாவம் என் தோழி உலகம் அறியாதவர்.!!
ஆஹா அழகான கருத்து!! :)
உண்மைதான் சகோ.....
பெரும்பாலான நேரம் மானிட்டர் முன்னேயும் டிவி முன்னேயும் செலவழிக்கையில் நாம் மறப்பது கண்ணை சிமிட்டிக்கொள்ள.... அதிலிருந்தே துவங்கிவிடுகின்றனவாம் கண்தொடர்பான பிரச்னைகள்.....
நானும் கவனித்திருக்கிறேன் இப்போதெல்லாம் கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை குறிப்பாக குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது....
பூனைக்குட்டி "சிட்டியை" விட "சனா"வோட கண்கள் அழகு என்று ஒருமுறை சொல்லிக்கொள்கிறேன் ஜொள்ளு வடிய!!! :)
ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க சகோ.....
கண்களை சிலாகிச்சு..... அழகை விவரிச்சு.... கடைசியில் கண்களின் அத்தியாவசியத்தை அறிவுறுத்தி... ரொம்ப அழகா தொகுத்திருக்கீங்க சகோ..... :)
மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
2010 எங்களுக்குக் கொடுத்த ஓர் அற்புதமான பரிசு இந்த அன்பு சகோ!!
வரும் ஆண்டும் இனி வரப்போகும் ஆண்டுகளும் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அற்புதமாய் அமைய அன்புடன் வாழ்த்தும் உங்கள் சயனைடு சகோ பிரபு!! :)
புது பதிவு போட்டாச்சா ? எனக்கும் பூனைகளுக்கும் கொஞ்சம் ஏழாம் பொருத்தம்தான்.நாகர்கோவில்ல எங்க வீட்ட சுத்தி எப்பவும் ஒரு 15 பூனையாவது இருக்கும்.யாருக்குமே பயப்படாதுங்க. ஸ்கூல்ல படிச்ச சமயத்தில அம்மா மீன் வாங்கிட்டு வந்தாங்கன்னா அப்படி பாசமா ஓடி வந்துடும். ஒரு பெரிய குச்சிய வச்சு அதுங்கள பக்கத்துல வரவிடாம பாத்துகறதுதான் என் வேலை.
என் அம்மாவுக்கும் பிடிக்காதுதான் ஆனாலும் சில நாள் பூனைகள பாக்கலேன்னா எங்க போச்சு எல்லாம்? னு தேடுவாங்க..
@பார்வையாளன்
நன்றி பார்வையாளன்:))
@நா.மணிவண்ணன்
//அந்த குழந்தைக்கு இரண்டு வயது தான் இருக்கும் அந்த குழந்தை கண்ணாடி அணிந்து பார்த்திருக்கிறேன் . அதுவும் சோடா புட்டி கண்ணாடி . அதுவும் நம்ம ஊர்லதான் . பி பி குளத்தில் ஒரு பாணி பூரிகடையில் பார்த்தேன் .//
ஓ! என் தோழியின் மூணு வயது பொண்ணுக்கு 0.11 பவர் சகோ!! செம சோடா புட்டி இப்பவே அந்த குட்டி போட்டு இருக்காள்..அந்த குட்டி சாப்பிடும் item வெறும் ப்ளைன் சாதம்...:(( Happy Newyear சகோ!!
@தம்பி கூர்மதியன்
////ஆல் டைம் டிவி பார்த்தல்,வீடியோ கேம்,கம்ப்யூட்டர் கேம்..பிளே ஸ்டேஷன்//
எல்லா காலி இடத்தையும் தான் ப்ளாட்டு போட்டு வித்துடுறீங்களே..!!//
ஹலோ...நான் ரியல் எஸ்டேட் ஓனர் இல்ல :)))
@மாணவன்
நன்றி மாணவன்...உங்களுக்கும் அண்ட் உங்கள் குடும்பத்துக்கும் வரும் ஆண்டு ரொம்ப சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்...!!
அப்புறம் உங்களுக்கும் குடும்பத்திற்கும் இனிய வளமான புத்தாண்டு அமைய வாழ்த்துக்கள் ;-)
//ஹலோ...நான் ரியல் எஸ்டேட் ஓனர் இல்ல :)))//
பொதுவா சொன்னன்.. இல்லனு சொல்லமுடியுமா.???
@தம்பி கூர்மதியன்
100% சரி நீங்க சொன்னது...ஆனால் சதா கணினி விளையாட்டு கண்ணை அவுட் பண்ணுதுங்கிரதையும் ஒத்துக்கணும் பாஸ்..:)))
//ஆனால் சதா கணினி விளையாட்டு கண்ணை அவுட் பண்ணுதுங்கிரதையும் ஒத்துக்கணும் பாஸ்.//
கண்டிப்பா..
@பிரபு எம்
ஹேய்:))))...தங்கமே..சயனைடு குப்பி..எப்படி இருக்கீங்க...இன்னும் நம்ம ஊரு தானா...?? ))))) chirstmas எப்படி போச்சு...பக்கத்துல ஒரு சகோ இருக்காளே...ஒரு புளிப்பு முட்டையாவது கொடுத்திங்களா சகோ நீங்க chirstmas க்கு ...சத்தியமா சயனைடு தான் உங்களுக்கு...what about virudhagiri??? :)))
எனக்கும் அற்புதமான சகோ கிடைச்சிருக்கான் அதுவும் என் ஊரு காரன்...பிரபு ன்னு பேரு...பார்த்தால் கேட்டதா சொல்லுங்க...happy newyear fresh ஆ சொல்றேன் அப்பால ....:)))
@Rajesh kumar
நமக்கு இந்த பூனைக்குட்டி ரொம்ப பிடிக்கும்...நான் குட்டியா இருந்தபோது...பாட்டி வீட்டு மாடியில் பின் பகுதியில் நிறைய மரக்கட்டைகள் அடுக்கி வச்சுருப்பாங்க...ஒரு நாள் அந்த குடோன் அறையில் ஏதோ சத்தம் கேட்டு திறந்தால்..அந்த மரக்கட்டை ஓரத்தில் ஏகப்பட்ட குட்டி பூனைகள் ..அப்போ தான் பிறந்து இருக்கும்போலே...கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துட்டு..பாட்டி வீட்டு வேலையாள் ஒரு சாக்கில் கட்ட ஆரம்பிச்சார் வைகை ஆத்தில் போயி விட (ரொம்ப பக்கம் ஆறு) நான் கத்தி அழுததை எங்க வீட்டில் யாரும் இன்னும் மறந்திருக்க மாட்டாங்க...அப்புறம் போனால் போகுதுன்னு ஒரே ஒரு நாய்க்குட்டியை மட்டும் வளர்க்க அனுமதிச்சாங்க...பேருகூட பாட்டியை ஐஸ் வைக்க முருகன் பேரு வச்சோம் குட்டிஸ் எல்லாம்...சுப்பிரமணி னு...short ஆ சுப்பி..னு கூப்பிடுவோம்...ரொம்ப வருஷம் எங்க கூட இருந்தது சுப்பி ! ராஜேஷ்...அற்புதமான பூனை குட்டி...எனக்கு புடிக்குமே பூனை குட்டி...:)))
என் அருமை தம்பி ராஜேஷ் க்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..என்ன ஊருக்கு போகலையா ராஜேஷ்?? உங்கள் குடும்பத்தாருக்கும் இந்த சகோதரியின் வாழ்த்துக்கள்...:)))
தொடர்ந்த எதிர் கருத்துகளால் சஞ்சலம் கொள்ளவில்லை என நம்புகிறேன்..!!! சரிதானே..???
@தம்பி கூர்மதியன்
//தொடர்ந்த எதிர் கருத்துகளால் சஞ்சலம் கொள்ளவில்லை என நம்புகிறேன்..!!! சரிதானே..??? //
நோ சஞ்சலம்...ஆல்வேஸ் சமாதானம்...:))) அருமையான தோழர் நீங்க....:)) 2010 கொடுத்த பரிசுகளில் உங்களை மாதிரி நல்ல தோழர் கிடைச்சதுக்கும் கடவுளுக்கு நன்றி பாஸ்...:)))
அதுவரைக்கும் நல்லது..!!
@தம்பி கூர்மதியன்
:)))
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஆனந்தி நல்ல மெசேஸ்
@பிரபு எம்
//பூனைக்குட்டி "சிட்டியை" விட "சனா"வோட கண்கள் அழகு என்று ஒருமுறை சொல்லிக்கொள்கிறேன் ஜொள்ளு வடிய!!! :)//
எனக்கும் பிடிக்கும் சனா...சனா..:))
@sakthi
நன்றி சக்தி..:) புத்தாண்டு வாழ்த்துக்கள்..:))
ம்ம்ம் ;-) வாழ்த்துக்களுக்கு நன்றிக்கா.. ஒரு மூணு மாசம் அமெரிக்கால இருந்துட்டு நவம்பர் மாசம்தான் வீட்டுக்கு போனேன். திரும்பவும் 2 மாசம் கழிச்சிதான் நாகர்கோவில் போவேன்.. அதுவரை புனே குளிர என்ஜாய் பண்ண வேண்டியதுதான். அதுவுமில்லாம ஒரு வாரமாவது லீவு கிடைச்சாதான் போக முடியும்.. பார்ப்போம்..
Happy New Year(Advance...:)
இனிய நினைவுகளோடு நல்ல பகிர்வு. நன்றி ஆனந்தி..
கண்ணுக்கு மையழகு ..உங்கள் பதிவிற்கு நீங்கள் எழுதும் நடை மிகவும் அழகு... உங்கள் குடும்பதினர் அனைவருக்கும் Madurai Tamil Guy யின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆனந்தி! குழந்தை வளர்ப்பு என்பது காலத்துக்கு காலம் மாறிக்கொண்டே வருகிறது! இங்கு ஐரோப்பாவில் குழந்தைகள் வளர்க்கப்படும் முறையைப் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்!
நல்ல தகவல்..
உங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
புத்தாண்டு பிறக்கிற நேரத்துல நல்ல மெஸேஜ் சொல்லியிருக்கீங்க!
விவேகானந்தர் கண்களைப் போலவே பாண்டிச்சேரி அன்னை கண்களும் தெய்வீகம். கண்டிப்பாய் உணருவீர்கள் ஆனந்தி!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
டைட்டிலைப்பார்த்ததும் காதல் கவிதை என நினைத்து வந்தேன்,இருந்தாலும் கட்டுரை ஓக்கே ஹேப்பி நியூ இயர் ஆனந்தி
எனக்கு பூனைகுட்டி என்றால் ரொம்ப பிடிக்கும் நாங்க எங்க வீட்டில் 3 பூனைகுட்டி வளர்த்தோம்...3 பூனையும் சூப்பர் அழகு.....
எனக்கும் fast food உணவு தான் பிடித்து இருக்கு என்ன செய்வது....
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@Rajesh kumar
//அதுவரை புனே குளிர என்ஜாய் பண்ண வேண்டியதுதான்.//
ok..ok..enjoy:))என்ன புது போஸ்ட் எதுவும் காணோம்???
@<a
நன்றி அஹமத் இர்ஷாத்..ஹாப்பி நியூ இயர்..
நன்றி ஸ்டார்ஜன் அண்ணா...ஹாப்பி நியூ இயர்..
@Avargal Unmaigal
தேங்க்ஸ் பாஸ்...:))தமிழ் மணம் முதல் கட்ட தேர்வில் உங்களோட பெண்கள் கருக்கலைப்பு பதிவு தேர்வு ஆகிருக்கு..தெரியுமா உங்களுக்கு?? மிக்க மகிழ்ச்சி என் நண்பர் தெரிவு செய்ய பட்டதில்...! உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வரும் ஆண்டு சுபிச்சமாய் அமைய என் வாழ்த்துக்கள்...:)))
@Rajeevan
/இங்கு ஐரோப்பாவில் குழந்தைகள் வளர்க்கப்படும் முறையைப் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்! //
அப்படியா ராஜீவ்...அது பத்தி ஒரு பதிவு போடுங்களேன்...நாங்கலாம் தெரிஞ்சுக்குறோம்...Happy Newyear rajiv...:))))
@வெறும்பய
Thanks சகோ...:) Same to You :))
@Balaji saravana
/விவேகானந்தர் கண்களைப் போலவே பாண்டிச்சேரி அன்னை கண்களும் தெய்வீகம். கண்டிப்பாய் உணருவீர்கள் ஆனந்தி!//
அப்படியா பாலா...நான் அன்னையின் கண்களை நீங்க சொன்ன அளவுக்கு கவனிச்சதில்லை...இனி கவனிச்சு அந்த முழுமையை உணர்கிறேன்...நன்றி பால்ஸ்..Happy Newyear...புது வருஷம் நம்ம ஊர்லயா???
@சி.பி.செந்தில்குமார்
//டைட்டிலைப்பார்த்ததும் காதல் கவிதை என நினைத்து வந்தேன்,//
:)))))
ஹாப்பி நியூ இயர் சிபி...தொடர்ந்து வரும் ஆண்டிலும் கலக்குங்க...:)))
@சௌந்தர்
//எனக்கு பூனைகுட்டி என்றால் ரொம்ப பிடிக்கும்//
same pinch ...அக்காவும் தம்பியும் ஒரே மாதிரி தான் இருக்கோம்...:)))))
புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்கம்!!!!
என் செல்ல குட்டி ஆதிக்கும் சொல்லிடுங்க
@ஆமினா
தேங்க்ஸ்டா கண்ணா!! ஷாம் பாப்பாக்கும் என் செல்ல முத்தங்கள்..:))
கண்கள் பற்றிய உங்கள் கருத்துக்கள் நன்றாய் இருந்தது
கண்கள் இரண்டும் உம்மைக் கண்டு பேசுதே ..
உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
//நன்றி பால்ஸ்..Happy Newyear...புது வருஷம் நம்ம ஊர்லயா??//
இல்ல ஆனந்தி! இங்க மலேசியாவுல தான்! நீங்க நம்ம ஊருல என்ஜாய் பண்ணுங்க :)
@Balaji saravana
அப்டியா பால்ஸ்..ஓகே...ஓகே...உங்களுக்கும் சேர்த்து நாங்க இங்கே என்ஜாய் பண்றோம்...போன வருஷம் ஆகாஷ் பாமிலி கிளப் (பறவை) போயிருந்தோம்...:))
@எம் அப்துல் காதர்
நன்றி சகோ...அன்னைக்கே பார்த்தேன்..ப்ளாக் கில் அப்டேட் பண்ண விட்டு போச்சு...இதோ உங்கள் அற்புதமான விருதை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டேன்...நன்றி அப்துல்...:))
கண்களைப் பற்றி கணகச்சிதமாக எழுதியிருக்கிறீர்கள்.. எழுத்து நடை மேலும் படிக்கத் தூண்டுகிறது.. தொடருங்கள்.. ! நன்றி! வாழ்த்துக்கள்..!
@Meena
//கண்கள் பற்றிய உங்கள் கருத்துக்கள் நன்றாய் இருந்தது
கண்கள் இரண்டும் உம்மைக் கண்டு பேசுதே ..//
வாங்க மீனா...தங்கள் முதல் வருகைக்கு நன்றி:)) உங்கள் கவிதைகள் எல்லாம் அற்புதம்..
@தங்கம்பழனி
ரொம்ப நன்றி சகோ.தங்கம்பழனி.
நானும் ஏதோ/ யாரோ நடிகையின் கண்களைத் தான் சொல்லப் போறீங்கள்ன்னு நினைச்சேன். கண்களுக்கு மேக்கப் நான் போடுவதில்லை. மஸ்காரா, ஐ லைனர்ன்னு நிறைய ஏதேதோ சொல்வார்கள் ஒரு தடவை கூட பாவித்ததில்லை.
சிறுவர்கள் கண்ணாடி போடுவது மிகவும் சாதாரணமாக போய் விட்டது. உணவு முறையே முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன். என் தாத்தா 85 வயதிலும் கண்ணாடி போடவில்லை. இப்ப 3 வயசில் கண்ணாடி போடுகிறார்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நீங்க ரொம்ப சிம்பிள் வானதி...நமக்கும் இந்த மேக் அப் சமாச்சாரம் எல்லாம் ஒத்து வராது..அதுவும் கண்மை கூட ஒத்துவராது நம்ம taste க்கு...அந்த கால உணவு பழக்கம் வேற வாணி..அதான் உடம்பு தாங்குது இந்த வயசிலும் உங்க தாத்தாக்கு...:)) இப்ப பெருமூச்சு தான்...! புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...:)))
@ஆனந்தி..
ம்ம்ம்.. புது போஸ்ட் போட்டிருக்கேனே.. இது கொஞ்சம் சினிமா சம்பந்தப்பட்ட போஸ்ட்தான்..
http://anglethree.blogspot.com/2010/12/blog-post_27.ஹ்த்ம்ல்
நல்ல செய்தி ஆனந்தி.நாகரீக வாழ்வின் எதிரொலிகள் இவையெல்லாம்.
அழகான படங்கள்.ரசித்தேன் !
@Rajesh kumar
படிச்சேன் ராஜேஷ்:)))
@ஹேமா
மிக்க நன்றி ஹேமா...:)
அழகான ரசனை.
புதுவருட வாழ்த்துக்கள்!
புத்தாண்டு வாழ்த்துக்கள் ! புதிய வருடத்தில் இருந்து நானும் உங்கள் வலையில் உறுப்பினராகா சேர்ந்து கொள்கிறேன்.
புது வருட வாழ்த்துக்கள் சகோ!!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
aananthi ungka pakuthila pinnuuttamita 3 naaLaa try panreen. post comment aption illiyee. thamizlayum atikka mutiyalai. ennaassu?
@சே.குமார்
நன்றி சே.குமார்!!
@அந்நியன் 2
நன்றி சகோ.அந்நியன்..:)))
@மதுரை பாண்டி
நன்றி சகோ.மதுரை பாண்டி..புதுவருஷம் எங்க நம்ம ஊரா? பெங்களூர் ஆ ?:))
@THOPPITHOPPI
மிக்க நன்றி தொப்பி தொப்பி :))
@komu
என்ன கோம்ஸ் சொல்றிங்க? மூணு நாளா ட்ரை பண்ணினிங்களா? ஒரு மெயில் எனக்கு தட்டி விட்டு இருக்கலாமே இல்லாட்டி ஆஷிக் னு ஒரு கழுத:))) இருப்பானே அவன்கிட்டே கேட்டு இருக்கலாமே கோம்ஸ்....போஸ்ட் கமெண்ட் அங்கேயே தான் இருக்கு..கலர் ரொம்ப லைட் கலரில் இருக்கு..கொஞ்சம் உத்து பாருங்க..எப்படி டார்க் கலர் மாத்தணும்னு தெரியாமல் முழிக்கிறேன்...ஆமாம் இப்போ போஸ்ட் பண்ணிட்டிங்களே..அப்போ என் சைடு ஓகே தானே கோம்ஸ்..:))) ஹாப்பி நியூ இயர் என் பிரிய கோம்ஸ்..:)))
அழகான அதே நேரம் சூப்பர் மெசேஜ் போஸ்ட்ங்க ஆனந்தி... சரியா சொன்னீங்க. இன்னிக்கி உணவு பழக்கத்தாலையும் வாழ்க்கை முறையாலையும் இது போல நெறய விசியங்கள் நடந்துட்டு இருக்கு... உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டோட உங்க கடைசி பாலோயர் நாந்தான்னு நினைக்கிறேன் ;-), நீங்க சொன்ன கருத்துகள் அத்தனையும் கரக்ட்தான் மேடம்
உங்களுக்கு என்னுடைய இனிய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மேடம்
வாங்க தங்கமணி...ரொம்ப நன்றி...Happy new year..:))
வாங்க புத்திசாலி இரவுவானம்..:)) ரொம்ப நன்றி...Happy newyear..:)))
இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஆனந்தி ஹேப்பி நியூ இயர்.
என் அருமை அக்காவுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...
நன்றி லக்ஷ்மி ஆன்ட்டி..:)
நன்றி ரஸீம்..:))
நன்றி என் கவிதாயினி தங்கச்சி பிரஷா..:)))
ஆனந்தி அக்காவுக்கு
ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புள்ள தோழி ஆனந்தி..
உங்கள் பதிவின் வரிகளில் கலப்படம் இல்லாத யதார்த்தம்.... மேலும் படிக்க தூண்டும் ஒரு ஒரு நல்ல உயிரோட்டம்...
மிகவும் குறுகிய காலத்தில், நல்ல பதிவுகளை கொடுத்து.. தமிழ் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்து விட்டர்கள்.. தங்கள் பயணம் தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்புடன்,
ரமேஷ்
உலக தமிழன்
http://fusions.wordpress.com
@பாரத்... பாரதி...
தேங்க்ஸ் டா கண்ணா...
@Ramesh
ஓய்...ராசுகுட்டி...என்ன நடக்குது இங்க...:))) ரெண்டு வருஷம் கழிச்சு வோர்ட் பிரஸ் ப்ளாக் தூசி தட்டின மாதிரி இருக்கு...கலக்கு பாஸ்..:))
//உங்கள் பதிவின் வரிகளில் கலப்படம் இல்லாத யதார்த்தம்.... மேலும் படிக்க தூண்டும் ஒரு ஒரு நல்ல உயிரோட்டம்...
மிகவும் குறுகிய காலத்தில், நல்ல பதிவுகளை கொடுத்து.. தமிழ் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்து விட்டர்கள்.. தங்கள் பயணம் தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். //
ஏய்..கழுத...இதை டைப் பண்ணும்போது நீ எவளவு சிரிச்சிட்டு டைப் பன்னிருப்பனு எனக்கு தெரியும்....இருந்தாலும் நீ இப்படி கலாய்க்க கூடாது நியூ இயர் அன்னைக்கே...:)))
anyway ...எனக்கு செம surprise உன் கம்மென்ட்...நிச்சயம் இதை உன்னோட நியூ இயர் கிப்ட் ஆ எடுத்துக்கிறேன்...அங்கே எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...தேங்க்ஸ் ras ..:))))
@Ramesh
அன்புடன்,
ரமேஷ்
//உலக தமிழன்//
ஹ..ஹ...உன் லொள்ளுக்கு அளவில்லாமல் போச்சு...:))
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...
@மதுரை பாண்டி
thanks நம்ம ஊரு சகோ...உங்களுக்கும் வாழ்த்துக்கள்..:))
ஆனந்தி..
உன் பதிவிகளை விட விமர்சனங்கள் தான் மிகவும் சுவையாக இருக்கிறது.. நீண்ட நாளாக பதிவுகளை மட்டும் படித்து விட்டு ஒரு முறை கூட நான் விமர்சிக்க தவறியது எனது பிழை தான்.. 2011'ல் அதை திருத்திக்கொண்டேன்..
உன் பதிவு பற்றிய எனது கருத்துக்கள் .. உண்மையே..ஒரு படைப்பாளி தன் புகழை ஏற்காமல் நகைச்சுவை படுத்துவது.. ஒரு வித தன்னடக்கம் தான்.. என்றாலும் உண்மையை மறைக்க முடியாது... இயல்பு வாழ்வில் நாம் முதலில் இழந்து விடுவது.. யதார்த்தத்தை தான்.. அது உனது பதிவுகளில் ஒளிந்திருப்பதை கண்டுபிடிக்க அதிக நேரம் ஆகாது.
உலக தமிழன் என்ற அடைமொழி கொஞ்சம் மிகைப்பட்டு இருந்தாலும் எனக்கு பிடித்து இருக்கிறது..
http://fusions.wordpress.com நீண்ட நாட்களுக்கு பின்னால் உயிரூட்ட ஒரு சிறிய முயற்சி.. சீனா 2011 ஆரூடம் பற்றி ஒரு பதிவு செய்து இருக்கிறேன்... உன் ராசி பலனை படிக்கவும்.
அன்புடன்,
உலக தமிழன்,
ரமேஷ் @ ராசு,
@fusions
prediction படிச்சேன்..:))) நீ இதை அப்டியே விட்றாத..ஒழுங்கா blogging தொடரு..:))
இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.
நல்ல பகிர்வு பொதுநல பார்வை
இந்த வரிசையில் சுவாமி விவேகானந்தர் கண்களை குறிப்பிட விரும்புறேன்...செம பவர்புல் ஸ்பிரிச்சுவல் கண்கள்..யப்பா..!//////
உண்மை தான்...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
ஆனந்தி.. அந்த 6 வயசு பையனுக்கான விடைய கண்டுகிட்டன்.. என் பதிவுல பாக்கவும்..
Post a Comment