பொதுவா, புதுப்பேனா வாங்கும்போது ஏதாவது கிறுக்கி பார்த்தோ, நம்ம பேரை எழுதிபார்த்தோ செக் பண்ணிப்போம்.. ஆனால், நான் "இளையராஜா "பெயரை எழுதி பார்த்து என் அப்பாகிட்டே தலையில் செம "குட்டு" வாங்கி இருக்கேன்...:((
இளையராஜா பேரை சொல்லும்போதே..உடம்புல வயலின் prelude ஆரம்பிச்சிருச்சு எனக்கு...ரொம்பவே அழகான பாட்டை கேட்கும்போதெல்லாம் சட்டுன்னு சில நேரம் யோசிக்காமல் கூட சொல்வேன்...இது இளையராஜா மியூசிக் னு...உடனே இல்ல..இல்ல...இது வேற னு..பதில் வரும்..உண்மையில் அது "வேற" யா தான் இருக்கும்..:)) ஆனாலும்,திரும்பியும் கேசுவல் ஆ சொல்வேன்..."ஓ!வேறயா..அதானே இளையராஜான்னால் இன்னும் நல்லா இருக்கும்....":))
வயலின்,ப்ளூட்,தபேலா வை அதிகமாய் பயன்படுத்தியது மாஸ்ட்ரோவாய் மட்டுமே இருக்கும்ங்கிறது என் பார்வையில்...அதுவும்...அவர் இசையில் சேர்க்கும் கோரஸ்கள்,தந்தனா தானாக்கள்...ர ரா க்கள்...ரப் ரபாக்கள்...இதுக்கெலாம் நான் வெறிபிடிச்ச ரசிகை...:))
ஒரு சிங்கிள் கார்டு(chord ) இல் கூட சுகந்தமாய் விழும் ராஜாவின் முத்து இசை...சில நேரம் ரெஸ்ட் நோட்(rest note) விட்டு கொடுக்கும் சரணங்களில் மூச்சு விட மறந்திருக்கேன்...(eg :மடை திறந்து பாடும் ..frm நிழல்கள் )
இளையராஜா இசையில் இளையராஜாவே பாடினால்...சான்சே இல்ல......
மேஸ்ட்ரோ இசை ரொம்ப ப ப ப ப ப ப ...எனக்கு இம்ப்ரெஸ் ஆன "மந்திர தருணங்கள் "எப்போன்னு இன்னும் சரியா தெரியல...
ம்ம்..யோசிச்சு தான் பார்க்கிறேன்...
ஒருவேளை...
ஏதோ ஒரு அதிகாலை மார்கழி குளிரில் கோவில் போகும்போது எங்கிருந்தோ வந்து காதில் விழுந்த இந்த வரிகளை கேட்ட நொடியிலா...??
"ப்ரேம ப்ரேமாதி ப்ரேமப் ப்ரியம்
ப்ரேம வஸ்யப் ப்ரேமம் ,
ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம்
ப்ரியம் ப்ரியமாதி ப்ரீதிதம் .............................. .
மங்கள நம ஜீவிதம்...........
ஓம்...சாந்தி...சாந்தி...சாந்தி !"
ராஜாவின் குரலில் இந்த காந்த கீர்த்தனை..உடம்பின் ஒவ்வொரு செல் லிலும் போயி உட்காரும்...
ப்ரேம வஸ்யப் ப்ரேமம் ,
ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம்
ப்ரியம் ப்ரியமாதி ப்ரீதிதம் ..............................
மங்கள நம ஜீவிதம்...........
ஓம்...சாந்தி...சாந்தி...சாந்தி
ராஜாவின் குரலில் இந்த காந்த கீர்த்தனை..உடம்பின் ஒவ்வொரு செல் லிலும் போயி உட்காரும்...
அப்படியே ராஜாவின் இந்த கலக்கல் கீர்த்தனை ஆரம்பிச்சு...மெல்லிய டெம்போவில் சித்ராவின்..
"தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தேவனே !
இன்று என் ஜீவன் தேடுதே
நான் என்ன கேட்பேன் தேவனே !
இன்று என் ஜீவன் தேடுதே
என் மனம் ஏனோ வாடுதே !" (அறுவடை நாள்)
எதுக்கு சொர்க்கம் எல்லாம் தேடி போகணும்...இந்த பாட்டு போதும்னு எல்லாம் எமோசன் ஆ யோசிச்சிருக்கேன்..:)
ஒருவேளை...
மழையில் சொட்ட சொட்ட நனைஞ்ச நான் குளிர் தாங்காமல் ஒதுங்கியபோது இந்த வரிகளை கேட்ட நொடியிலா...??
"எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்!!
எனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் கொதிக்கும் சத்தம்!!
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே"
எனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் கொதிக்கும் சத்தம்!!
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே"
(அலைகள் ஓய்வதில்லை..)
ஒருவேளை..
மனபாரத்தில் நான் இருந்த ஒரு அமைதியான தருணத்தில் இந்த வரிகளை கேட்ட நொடியிலா..??
"முதல் முறை வாழப்பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே... அன்பே...
பறவையே எங்கு இருக்கிறாய்?
பறக்கவே என்னை அழைக்கிறாய்!!
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே..." (தமிழ் MA)
ஒருவேளை..
செம குஷியான மூடில் அழகர் கோவில் பக்கம் ரிலாக்ஸ் டிரைவிங் பண்ணும்போது FM இல் இந்த வரிகளை கேட்ட நொடியிலா...??
"அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா...... "
ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது ?
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில் ....
''''''''
''''''''
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது ??!! " (ஆட்டோ ராஜா)
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா...... "
ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது ?
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில் ....
''''''''
''''''''
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது ??!! " (ஆட்டோ ராஜா)
ஹையோ..செமத்தியான என்ன ரிதம்..!! அதுவும் ராஜாவின் தமிழ் உச்சரிப்பு செம க்ளாஸ்..இந்த ல.ள,ழ எல்லாம் உச்சரிக்கும் அழகில் அந்த பாட்டு வரிகள் இன்னும் அழகாகும் கேட்கும்போது...!
ஒருவேளை..
சாலையை கடக்கும்போது என்னை கடந்து சென்ற ஒரு வெளியூர் பஸ்ஸில் இருந்து தற்செயலாய் இந்த வரிகளை கேட்ட நொடியிலா...??
"பறந்து செல்ல வழி இல்லையோ…
பருவக் குயில் தவிக்கிறதே…
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்?
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது"! (தர்ம பத்தினி)
இதில் எனக்கு அந்த " பறந்து செல்ல வழி இல்லையோ… பருவக் குயில் தவிக்கிறதே…"அந்த வரி கேட்க கேட்க ரொம்ப பிடிக்கும்...உச்சரிப்பு செமத்தியா இருக்கும். இதுல எந்த எந்த இன்ஸ்ட்ருமென்ட் யூஸ் பண்ணிருக்காங்கனு,எண்ணி கூட பார்க்க முயற்சி எல்லாம் பண்ணுவேன்...:))
நான் மயங்கிய பாட்டுகள் லிஸ்ட் ரொம்ப பெருசு..இது சும்மா சாம்பிள் தான்...பிறிதொரு சந்தர்ப்பத்தில் முடியும்போது இன்னும் பகிர்வேன்...:)))
அப்புறம்..கடைசியில் ஒன்னு சொல்லணும் நான்..அதாவது..எனக்கு ...இளையராஜா பிடிக்கும்...அப்புறம் இளையராஜா பிடிக்கும் .....மேலும் இளையராஜா பிடிக்கும் ...மற்றும் இளையராஜா பிடிக்கும்...:))))))))
111 comments:
சூப்பர்! அனுபவிச்சு, ரசிச்சு எழுதியிருக்கீங்க! அப்புறம் அடுத்த பாகம் எப்போ வரும் ? :-)
சில பாடல்களை சினிமாவுக்காக இல்லாமல் , பாடகர்களுக்கு பாடி காட்டி இருப்பார் . அது சினிமாவில் இடம் பெறும் பாடகர்களின் பாடலை விட இனிமையாக இருப்பதுண்டு
@ஜீ...
நன்றி ஜீ...ஒரு பதிவு போடவே நேரம் கிடைக்க மாட்டேங்கு:( முடியும்போது...ராஜாவை பத்தி 1000 பதிவு போடலாம்..:)))
@பார்வையாளன்
வாங்க பார்வையாளன்...நீங்க சொன்னது செம நிஜம்...காற்றில் வரும் கீதமே..பாட்டில் இளையராஜாவும்,வாலியும் கம்போஸ் பண்ற எபிசொட் கேட்டு இருக்கேன்..செம க்ளாஸ்..நன்றிங்க.!!
அந்த ஆட்டோ ராஜா படத்தின் பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்னோட கடைல அந்த பாட்டுதான் வர்றவங்கள வரவேற்கும்.
நானும் இப்போ இப்படி ஒரு பதிவு எழுத தொடங்கி, ஒரு வசனத்தோட நிறுத்திட்டேன்!
@karthikkumar
வாங்க கார்த்திக்!! என்ன மாடுலேஷன் அந்த பாட்டில் இளையராஜா சார் கொடுப்பார்... உங்கள் கடையில் போடுவதற்கு...வெரி குட்...:)
@ஜீ...
ஏன் ஜீ...?? ஒழுங்கா தொடருங்க...நான் இருக்கேன் படிக்க...:)))
பார்க்கலாம் ஹி ஹி! எல்லாம் சோம்பேறித்தனம் தான் காரணம்! :-)
@ஜீ...
:)))
ரொம்ப அருமையாக இருக்கிறது.. ராஜா ஒரு வாடாத ரோஜா...???
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
@ம.தி.சுதா
நன்றி சகோதரா மதி.சுதா!:))
அப்புறம்..கடைசியில் ஒன்னு சொல்லணும் நான்..அதாவது..எனக்கு ...இளையராஜா பிடிக்கும்...அப்புறம் இளையராஜா பிடிக்கும் .....மேலும் இளையராஜா பிடிக்கும் ...மற்றும் இளையராஜா பிடிக்கும்...:))))))))
....பிடிக்காதவர்களும், உங்களுடைய இடுகையை வாசித்தால், பிடிக்கும் சொல்ல ஆரம்பித்து விடுவாங்க.... அப்படி - ரசித்து - மயங்கி - உருகி - எழுதி இருக்கீங்களே. சான்சே இல்லை, கண்ணம்மா!
@Chitra
என் அழகு அண்ணி...நன்றி..நன்றி..:))
// தேவனின் கோவில்
Wonderful song.
ராஜா உலகத்தமிழர்களின் தாலட்டும் தாய். நானும் நீங்களும் மட்டும் விதிவிலக்கா என்ன?
அருமையான பதிவு, ரசனையும் அருமை.
//காற்றில் வரும் கீதமே..பாட்டில் இளையராஜாவும்,வாலியும் கம்போஸ் பண்ற எபிசொட் கேட்டு இருக்கே//
ராஜாவின் கீதாஞ்சலி கேட்டிருக்கிறீர்கள்..
அதை கேட்கும் நேரம் எல்லாம் வாழ்க்கையின் உன்னத நொடிகள்..
நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துப் பாடல்களும் மிகச் சிறந்தப் பாடல்கள்!!!
நல்ல பதிவு!!!
வாழ்க மேஸ்ட்ரோ !!!
ராஜாவை பத்தி 1000 பதிவு போடலாம்..:)))
ராஜாவை பத்தி எத்தனை பதிவு போட்டாலும் அலுக்காம படிக்கலாம்..!
சூப்பர் சகோ..!!
சீரியஸ்லி எனக்கு இந்த தடவை நக்கல் பண்ண தோணல...
நம்ம பிரிய சகோ இவ்ளோ ரசிச்சு உருகி எழுதியிருக்கும்போது என்னால மொக்கை கமெண்ட் எழுதமுடியல.....!!! மதுரைப் பாசம் ஹி ஹி ஹி....
(ஆனா எழுதாம இருக்கவும் முடியல ஹ்ம்ம்ம்!!!!
அடுத்த பதிவுல பாத்துக்குறேன்..!!)
வரிகளைப் படிக்கும்போது பாடல்கள் காதுல கேட்டது சகோ....
ரசிச்சு உணர்ந்து நீங்க எழுத்தில் வடிக்கும்போது ஒரு "முழுமை"யுடன் நிறைகிறது.... எனக்கெல்லாம் இன்னும் அது கனவாகத்தான் இருந்து வருது...:-(
ப்ரேமம் ப்ரேமம் அந்த கீர்த்தனையை வரிவிடாம எழுதியிருக்கீங்களே... உங்க காதுல விழுந்த சங்கீதத்தை எழுத்தாலயே ட்ரான்ஸ்ஃபர் செஞ்சு இருக்கீங்க சிந்தாமல் சிதறாமல்....
உச்சரிப்பை, ஹம்மிங்கை, வரிகளை, அணுக்கங்களை ரசிச்சு ரசிச்சே ரகளை பண்ணியிருக்கீங்க சகோ உங்க இசைத் தமிழில்!!!
ஊர்ல மழைநேரமாமே ஹ்ம்ம்ம் நல்லா ஐஸ் வெச்சுருக்கேன்... குளிர்ல நல்லா ஜல்பு புடிக்கட்டும்!!! :-))))
(ஹேய்.. இது சும்மாக்காச்சு....! எழுதுன ஒவ்வொரு வரியும் உண்மையா உணர்ந்ததுதான் :-) மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ!!)
இன்னும் எத்தனையோ பாடல்கள் உண்டு.
இளையராஜா பற்றிச் சொல்லப்படுவது எல்லாமே கடலில் விழும் ஒரு துளி மழை.நம்மால் முடிந்தது அவ்வளவு மட்டுமே.
நெக்குருகிப் போய் எழுதி இருக்கிறீர்கள்.
சங்கத்தில் பாடாத கவிதை அருமையான பாடல்.
நான் தேடும் செவ்வந்திப் பூவில் முழுப் பல்லவியையும் பெண் பாடமட்டார். இது போல வேறு பாடல்கள் சொல்லுங்களேன்!
ராஜாகையவச்சா அது எப்பவுமே ராங்கா போனதில்லையே. இல்லியா ஆனந்தி?
ஆனந்தி நீங்க சொன்னபாடல்களில் ஒன்னுகூட நான் கேட்டதே இல்லைமா. ஆனா நீங்க ரசிச்சு சொன்னவிதத்தில் கேக்கணும்போல வே இருக்கு.
நம்ம சிவாவும் இளயராஜா ஃபேன் தான் நல்லா பாட்டைரசிக்கவும்செய்ரான் பாடக்கூட முயற்சி செய்ரான். ஜனனி.
ஜனனி ஜகம் நீ இந்தபாட்டு மனசுக்குள்ளயே புகுந்து நம்மை ஒருவழி பண்ணிடும். கேட்டிருக்கியோ.
இளையராஜா ஒரு நல்ல இசையமைப்பாளர் தான். நல்ல எவர்க்ரீன் ஹிட்ஸ்லாம் குடுத்துருக்கார் தான். ஆனா இப்போதெல்லாம் அவர்கிட்ட சரக்கு இல்ல. எல்லாம் காலியா போச்சு. இப்போதெல்லாம் என்னன்னே தெரியல அவர் இசை எடுபட மாட்டேங்குது. இளைய ராஜா பழைய ராஜாவாகிட்டார :))
ராஜா எனக்கும் உங்களைப்போல் பிடித்த ஒருவர் அவரின் ஒவ்வொரு இசையும் விருதுதான் ரசிகர்களுக்கு
இளையராஜாவின் இசைக்கு மயங்காதோர் உண்டோ?
செம ரசனையான தேர்வுகள் ஆனந்தி.. :)
கைகொடுங்க ஆனந்தி! நீங்களும் நம்ம கட்சி! இன்னொரு பாடல் தாய்மூகாம்பிகை படத்தில் வரும் ஜனனி ஜனனி பாடலை பற்றியும் சொல்லியிருக்கலாம்!! இந்த வரிகளை எழுத்து போதே அதன் அதிர்வை என்னால் உணரமுடியுது!!
@Vee
வாங்க vee !!உங்கள் கருத்துக்கு நன்றி...!
@பாரத்... பாரதி...
/ராஜாவின் கீதாஞ்சலி கேட்டிருக்கிறீர்கள்..
அதை கேட்கும் நேரம் எல்லாம் வாழ்க்கையின் உன்னத நொடிகள்..//
ஆமாம்...அற்புதமான நொடிகள்...குழந்தையின் சிரிப்பை பார்க்கும் உணர்வுகள்!!நன்றி பாரத்...பாரதி...!!
@இனியா
வாங்க இனியா...தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..!!
@தமிழ் அமுதன்
//ராஜாவை பத்தி எத்தனை பதிவு போட்டாலும் அலுக்காம படிக்கலாம்..!//
சரியா சொன்னிங்க தமிழ் அமுதன்..:))
@பிரபு . எம்
வா ப்பா..மின்னல்..!! ஹேய் நம்ம ஊரு சகோ..!:)) இப்ப சொல்லிருக்கணும் இளையராஜா டிவிடி வாங்கிட்டு வரவான்னு...சயனைடு மிரட்டலை வாபஸ் வாங்கிருப்பேன்...ம்ம்...உங்களுக்கு கொடுத்து வச்சது அவளவு தான்...ஹ ஹா...சரி அதுபோகட்டும்...என் பதிவை விட உங்க கம்மென்ட் தான் பாட்டை ரசிச்ச...உணர்வு பூர்வமாய் லயிச்சு கொடுத்தமாதிரி இருந்தது..கம்மென்ட் சூப்பர் சகோ...நன்றி எல்லாம் சொல்ல மாட்டேன்..தேங்க்ஸ் தான் ஓகே வா...:))))
@Gopi Ramamoorthy
//இளையராஜா பற்றிச் சொல்லப்படுவது எல்லாமே கடலில் விழும் ஒரு துளி மழை.நம்மால் முடிந்தது அவ்வளவு மட்டுமே.//
சரியா சொன்னிங்க கோபி...
@Gopi Ramamoorthy
//நான் தேடும் செவ்வந்திப் பூவில் முழுப் பல்லவியையும் பெண் பாடமட்டார். இது போல வேறு பாடல்கள் சொல்லுங்களேன்!//
ஜானகி,ராஜா வோட டூயட் சாங்...சரணம் இல் கூட முதல் ரெண்டுவரி ராஜா,அடுத்த வரி ஜானகி னு ஒரு மாதிரி அழகு mixing இல்லையா அந்த பாடல்...வேறு ஒரு டைம் இளையராஜா பத்தி கட்டாயம் இன்னும் எழுதும்போது நீ சொல்றமாதிரி இன்னும் நிறைய பாடல்கள் பகிர்ந்துக்கிறேன்...மிக்க நன்றி கோபி...:))
@Lakshmi
//ராஜாகையவச்சா அது எப்பவுமே ராங்கா போனதில்லையே. இல்லியா ஆனந்தி?//
ஆமாம் ஆன்ட்டி!! செம பன்ச் நீங்க சொன்னது...சூப்பர் ஆன்ட்டி..!!!:)))
@komu
//ஆனா நீங்க ரசிச்சு சொன்னவிதத்தில் கேக்கணும்போல வே இருக்கு.//
கட்டாயம் கேட்டு பாருங்க கோம்ஸ்...:)))
@umaasvini.asvini
//ஜனனி ஜகம் நீ இந்தபாட்டு மனசுக்குள்ளயே புகுந்து நம்மை ஒருவழி பண்ணிடும். கேட்டிருக்கியோ. //
பலமுறை கேட்டு இருக்கேன் உமா...அதெல்லாம் இளையராஜா சார் இன் மாஸ்டர் பீஸ்....உறைஞ்சு போயிருவேன் கேட்கும்போதெல்லாம்...பரிபூரணி ...னு அவர் உச்சரிக்கும் போதே நான் காலி யாயருப்பேன் :)))
@ஆமினா
//ஆனா இப்போதெல்லாம் அவர்கிட்ட சரக்கு இல்ல. எல்லாம் காலியா போச்சு. இப்போதெல்லாம் என்னன்னே //
என் ஆமி யோட கம்மென்ட் இது இல்லவே இல்லை...எந்த எதிரி :))) இதை போடசொன்னதுன்னு நல்லா தெரியும்...வேற எதுவும் வேணாம்...நந்தலாலா பட பாடல்கள் கேளுங்க ஆமினா...அதை கேட்டு வந்து திரும்ப இந்த கம்மென்ட் ஐ நீங்க வாபஸ் வாங்கிப்பிங்க...உன்னதமான எந்த படைப்பாளிக்கும் சரக்கு தீர்ந்து போய்டாது ஆமி...அந்த சரக்கை எப்படி அந்த படைப்பாளிட்ட இருந்து வாங்கனுங்கிறது ஒரு படத்தின் தயாரிப்பாளர்,இயக்குனர்களிடம் இருக்கு...ஏனால் ராஜா சார் இன்னும் இசையை கத்துகிட்டே தான் இருக்கேன்னு சொல்றார்..போனவருடம் ஹிந்தியில் வந்த "paa" இசை கேட்டிங்களா என் செல்ல ஆமி...கேளுங்க..உருகி போயிருவிங்க ராஜா இசையில்...ஒரு தரமான ,இசையை நேசிக்கும் படைப்பாளியின் உருவாக்கம் என்னைக்கும் அழிஞ்சிராது ஆமி..நன்றி என் அருமை சகோதரி!!!
@வந்தியத்தேவன்
வாங்க வந்திய தேவன்...கருத்துக்கு மிக்க நன்றி:))
@Balaji saravana
நன்றி பாலாஜி..!! :)))
@வைகை
//கைகொடுங்க ஆனந்தி! நீங்களும் நம்ம கட்சி! //
ஹ ஹ...நன்றி வைகை...:)
//அப்புறம்..கடைசியில் ஒன்னு சொல்லணும் நான்..அதாவது..எனக்கு ...இளையராஜா பிடிக்கும்...அப்புறம் இளையராஜா பிடிக்கும் .....மேலும் இளையராஜா பிடிக்கும் ...மற்றும் இளையராஜா பிடிக்கும்...:))))))))
//
உங்கள ஒருதடவ சொல்லச்சொன்னா ஏஎன் இத்தன தடவ எழுதுனீங்க? நான் கோர்ட்ல கேஸ் போட போறேன்
@ஆமினா
ha ha...because..that much i like him...i dont know how to express..express.. ,,,,,,,:))))
//வயலின்,ப்ளூட்,தபேலா வை அதிகமாய் பயன்படுத்தியது //
//ஒரு சிங்கிள் கார்டு(chord ) //
//சில நேரம் ரெஸ்ட் நோட்(rest note)//
//என்ன ரிதம்..//
(oh .... டெக்கினிகல் கேர்ள்.... )
பீ...கேர் புல்........
( என்னச் சொன்னேன்)
@வார்த்தை
ok..ok..cool..:)))
நான் வந்துட்டன்.. இந்த முறை எனக்கு ரொம்ப பிடிச்ச டாபிக்.. பிடிச்சதுன்னா அப்படியில்லா எதிர்கிறதுக்கு பிடிச்ச டாபிக்...
இளையராஜா ஒரு மேஸ்ட்ரோவாக இருக்கலாம், இசைஞானியாக இருக்கலாம்.. ஆனால் எதையும் அற்ற தனி ஒரு மனிதனாக பார்க்கும்போது அவர் ஒரு மனிதனினுக்கான அனைத்து உன்னத கோட்பாடுகளிலிருந்து மாறுபட்டே தெரிகிறார்.. தானே உயர வேண்டும் தன்னையே எல்லோரும் புகழ வேண்டும் தனக்கு கீழ் தான் எல்லோரும் என நினைப்பது ஒரு நல்ல கலைஞனுக்கு அழகா..???இதுக்கு எனக்கு பல எதிர்ப்புகள் வரலாம்.. நான் அதை பொருட்படுத்தவில்லை... என்னை பொருத்தமட்டில் இசைஞானி ஒரு ஞானி இசையில் மட்டும்... இன்பம் தெறிக்கும் வாழ்க்கையில் அல்ல.. இயல்பு வாழ்க்கையில் அவர் ஒரு மூடன்(ர்).. இது எனது கருத்துகள் ஆனந்தி தவறாக இருந்தால் மன்னிக்கவும்..
அவரைப் பற்றி பாராட்டி எழுதினாலும் சரி, தவறு என்றுத் தெரிந்தே அவரை விமரிசனம் செய்தாலும்(இப்படியே சிலபேர் தங்கள் பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் அல்லவா?!) அவரின் பெயரைப் பார்த்தாலே, ரசிகர்களாகிய எல்லோரும் உள்ளே நுழைந்தது விடுவோம்....நீங்கள் உருகி உருகி எழுதி இருக்கிறீர்கள், மனம் நெகிழ்கிறது ஆனந்தி! நாம எல்லாம் ஒரேக் கட்சித்தான்! வாழ்த்துக்கள்!
இளையராஜா எப்பவுமே இசைக்கு ராஜாதான்
@ஆனந்தி.. hai anandhi, nice collections of raja sir.. especially song from Aruvadai naal.. my favourite song
காலேஜ் ஹாஸ்டல்ல சாயங்கலம் கொஞ்ச நேரம் பாட்டு போடறது வழக்கம். ரஹ்மான் புகுந்து பட்டைய கிளப்பிக்கிட்டிருந்த டைம். முஸ்தபா பாட்டு போடாத நாளே கிடையாது. அந்த நேரத்துலயும் தேவனின் கோவிலுக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருந்துச்சு. எப்படியாவது ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது இந்த பாட்டை போட வைச்சிருவோம். என்ன ஒரு பாட்டு. ராஜாவோட இசைக்கு ஒரு soul இருக்கு.
உருகி உருகி ரசிச்சிருக்கீங்க, எங்களையும் ரசிக்க வைச்சிருக்கீங்க.
:-)))))))
ஆமி சொன்னதுக்கெல்லாம் மத்தவங்கள திட்டக்கூடாது ஆமா. அப்படினா ஆமிக்கு சொந்த அறிவே கிடையாதுனு சொல்றீங்களா? அது ஒரு ஞானசூனியம்னு சொல்றீங்களா? அது எதையாவது உளறி வைக்கும்னு சொல்றீங்களா? ராஜாவுக்குனு ஒரு ராஜாங்கம் இருந்தே இருக்கிறது, இதை மறுப்பதற்கில்லை.என்றாலும் இதெல்லாம் எல்லாமே லாங்க் லாங்க் எ(க்)கோ வாயிருச்சு.இப்ப எதுக்கு அதுக்கு Eco கொடுக்கிறீங்க மேடம். ராஜா வோட மவுசுல்லாம் போச்சுங்கோ,
அப்டேட் ஆகிகொண்டே இருக்கும் உலகில் இசையும் ரசனையும் மட்டும் விதி விலக்கா என்ன? என்னதான் உருக வச்சாலும் இறுக வச்சாலும் சரக்கு விலை போகலையே ஆனந்தி?
பாத்தீங்களா நம்ம ஆமிக்கே ராஜா வுடைய தாளம் பிடிக்கல.ஆமி ஒரு அரைகுறையா இருந்தாலும் சில நேரங்களில் அது தெளிவா பேசுறதையும் நாம ஒத்துக்கனும். பாவம் சின்ன குழந்தைய போயி ஏன் மிரட்டுறீங்க? சரக்கெல்லாம் தீர்ந்து போயி சக்கையாயிருச்சு. இப்பவும் ராசா ராசானு ஏன் இந்த அட்டூழிய்ழ்ம்? ஆனா “கடவுள்” படத்தில் ”பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்....” பாடல் ரெம்ப நெகிழ்ந்து கேட்டேன். அது ஏன் உங்கள் பதிவில் காணாமல் போனது என்று தெரியவில்லை. நீங்க குறிப்பிட்டுள்ள பாடல்களில் நான் தேடும் செவ்வந்தி பூவிது தவிர வேற எந்த பாட்டும் நான் கேள்விப்பட்டது கூட இல்லை.நீங்க சொன்ன மாதிரியே “பறந்து செல்ல வழியில்லையோ வரி கேட்கும் போது எனக்குமே புல்லரித்துதான் போகும்..அந்த அளவுக்கு ரெம்ப Excited டா இருக்கும்.
இங்கே பேச பொருத்தமில்லாத விஷயமா இருந்தாலுமே அதை சொல்லாமல் விடமுடிய வில்லை. அதாவது அந்த ஆளுக்கு இருக்கிற தலகணம் மணித இலக்கணத்திலே இல்லாதது.கர்வம், ஆணவம், திமிரு இதை பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.வைரமுத்து கூட சண்ட, ரஜினி கூட சன்ட, அட கூட பிறந்த தம்பி கங்கை அமரன் கூடவே மல்லுக்கு நின்னிருக்காருனா பாருங்களேன்.அந்த அண்ணன் தம்பி விவாகாரத்துல பாக்யராஜ் தான் நாட்டாமை பன்னிருக்காரு.2004னு நினைக்கிறேன் சார்ஜாவில் ஒரு கச்சேரிக்காக வந்திருந்தார்.அந்த கச்சேரில பாதி ராஜாவுடைய புராணம்தான். ராஜா ராஜாதி ராஜானிந்த ராஜா நு அக்னி நடசத்திர படத்தில் வர்ர பாடலை அசிங்கமாக்கி இளையராஜாவை புகழ்ந்து அவருடைய வாரிசுகள் பாடுறேன் பேர் வழினு கொலை பன்னிட்டாங்க போங்க.ஆமா ஆனந்தி இப்ப ஏன் யாருமே இளையராஜாவை இசையமைக்கு கூப்பிடமாட்டேன்றாங்க? உடனே நந்தலாலாவை சொல்லக்கூடாது, அது லோ பட்ஜெட் படமா இருப்பதால் கூப்பிட்டிருக்கலாம் :)))
அன்புடன்
ஆஷிக்
:-))))))))))))))))))))))))))))))
நல்ல ரசனை உங்களுக்கு. எனக்கு இசை மிகவும் பிடிக்கும். அது இளையராஜா, தேவா, ரஹ்மான்.... எவராக இருந்தாலும் ரசிப்பேன்.
ராஜா சாருக்கு ஒரு ரோஜா மாலை! நல்ல ரசனை உங்களுக்கு!
//போனவருடம் ஹிந்தியில் வந்த "paa" இசை கேட்டிங்களா என் செல்ல ஆமி..//
ஆனந்தி அதுல ஒரு பாட்டு தமிழில் வந்த பாட்டு தெரியுமா? அதான் சொல்றேன் அவர்கிட்ட சரக்கு இல்ல :)
இத பாருங்க http://www.youtube.com/watch?v=LPeymnTWpeE&feature=related
//.எந்த எதிரி :))) இதை போடசொன்னதுன்னு நல்லா தெரியும்..//
சத்தியமா கடையநல்லூர்காரன் தான் போட சொன்னான்னு ஆஷிக் மேல சத்தியமா சொல்லவே மாட்டேன்
@ஆமினா
ஆமி...பா மட்டும் இல்ல..சீனி கம் படத்தில் கூட அவரோட தமிழ் பாடல்கள் தான்...இது அவர் விரும்பி செய்யல..அந்த படத்தின் இயக்குனர் பால்கி நம்ம தமிழ் ஆளு...என்னை மாதிரி வெறிபிடிச்ச இளையராஜா ரசிகன்..:) அவர் சொன்னதாலே தானே போட்டு கொடுத்தார்...பா படத்தில் கூட ஒரு பாட்டை போட்டு கொடுக்க சொன்னது பால்கி க்காக தான்...:))
ஆஷிக் பையன் உன்னையும்,என்னையும் சண்டைபோட வைக்க சிண்டுமுடிக்கிற மாதிரி ஒரு பெரிய கமெண்ட் போட்ருக்கப்ள..:)) ஆமி நாம சிக்க மாட்டோம்ல..:))
@தம்பி கூர்மதியன்
//நான் வந்துட்டன்.. இந்த முறை எனக்கு ரொம்ப பிடிச்ச டாபிக்.. பிடிச்சதுன்னா அப்படியில்லா எதிர்கிறதுக்கு பிடிச்ச டாபிக்...//
ha ha..வாங்க பாஸ்..இதை தான் எதிர்பார்கிறேன்..ஹ ஹ...:))
@தம்பி கூர்மதியன்
//ளையராஜா ஒரு மேஸ்ட்ரோவாக இருக்கலாம், இசைஞானியாக இருக்கலாம்.. ஆனால் எதையும் அற்ற தனி ஒரு மனிதனாக பார்க்கும்போது அவர் ஒரு மனிதனினுக்கான அனைத்து உன்னத கோட்பாடுகளிலிருந்து மாறுபட்டே தெரிகிறார்.. தானே உயர வேண்டும் தன்னையே எல்லோரும் புகழ வேண்டும் தனக்கு கீழ் தான் எல்லோரும் என நினைப்பது ஒரு நல்ல கலைஞனுக்கு அழகா..???இதுக்கு எனக்கு பல எதிர்ப்புகள் வரலாம்.. நான் அதை பொருட்படுத்தவில்லை... என்னை பொருத்தமட்டில் இசைஞானி ஒரு ஞானி இசையில் மட்டும்... இன்பம் தெறிக்கும் வாழ்க்கையில் அல்ல.. இயல்பு வாழ்க்கையில் அவர் ஒரு மூடன்(ர்)..//
என் அன்பு தோழா..நாம எதுக்கு அவரோட பர்சனல் வாழ்க்கைய பார்க்கணும்...அவர் திமிரா இருப்பதால் நமக்கு என்ன குடிமுழுகி போக போகுது...ஒரு அற்புதமான படைப்பாளன் அவரோட இயல்பிலும் பக்காவா இருக்கணும் அப்டிங்கிறது என்ன கட்டாய விதியா..அவரோட attitude
அவரோட படைப்பை ரசிக்க என்னை இடைஞ்சல் படுத்தவே இல்ல கூர்மதி...எந்த இளையராஜா ரசிகர்களையும் அதை எல்லாம் யோசிக்கவும் வைக்காது...ஒரு படைப்பாளியின் கர்வம் அவரோட சொந்த விஷயம்...நான் அவரின் அழகான படைப்புக்கு மட்டுமே தீவிர விசிறி..அவர் சொந்த வாழ்க்கை பற்றி எனக்குஎந்த யோசனை தேவையும் இல்லை...சரிங்களா அன்பு தோழா...:)))
@தம்பி கூர்மதியன்
//இது எனது கருத்துகள் ஆனந்தி தவறாக இருந்தால் மன்னிக்கவும்.//
மன்னிப்பா...எனக்கு தமிழ் இல் பிடிக்காத ஒரே வார்த்தை இது தான்...ஹ ஹா...cool !:)))
@M.S.E.R.K.
//அவரைப் பற்றி பாராட்டி எழுதினாலும் சரி, தவறு என்றுத் தெரிந்தே அவரை விமரிசனம் செய்தாலும்(இப்படியே சிலபேர் தங்கள் பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் அல்லவா?!) அவரின் பெயரைப் பார்த்தாலே, ரசிகர்களாகிய எல்லோரும் உள்ளே நுழைந்தது விடுவோம்....நீங்கள் உருகி உருகி எழுதி இருக்கிறீர்கள், மனம் நெகிழ்கிறது ஆனந்தி! நாம எல்லாம் ஒரேக் கட்சித்தான்! வாழ்த்துக்கள்! //
//அவரைப் பற்றி பாராட்டி எழுதினாலும் சரி, தவறு என்றுத் தெரிந்தே அவரை விமரிசனம் செய்தாலும்(இப்படியே சிலபேர் தங்கள் பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் அல்லவா?!) அவரின் பெயரைப் பார்த்தாலே, ரசிகர்களாகிய எல்லோரும் உள்ளே நுழைந்தது விடுவோம்....நீங்கள் உருகி உருகி எழுதி இருக்கிறீர்கள், மனம் நெகிழ்கிறது ஆனந்தி! நாம எல்லாம் ஒரேக் கட்சித்தான்! வாழ்த்துக்கள்!//
மாஸ்ட்ரோ எத்தனை விமர்சனங்களில் சிக்கினாலும் அவர் பீனிக்ஸ் பறவை...தூள் கிளப்புவார் எப்பவும் நம்மை மாதிரி விசிறிகள் இருக்கும் வரை..:) நன்றி M.S.E.R.K.
@Gnana Prakash
//இளையராஜா எப்பவுமே இசைக்கு ராஜாதான்//
உண்மை...நன்றி Gnana பிரகாஷ்!!!
@Prabhu
//hai anandhi, nice collections of raja sir.. especially song from Aruvadai naal.. my favourite song//
oh..thanks prabu...that is one of his master piece..:))
@Denzil
//என்ன ஒரு பாட்டு. ராஜாவோட இசைக்கு ஒரு soul இருக்கு.//
s..u r right...right..Denzil..thank you...:)))
@vanathy
நல்ல இசை எங்கே இருந்தாலும் கேட்கவேண்டியது தான்...மிக்க நன்றி வாணி..:))
@மோகன்ஜி
/ராஜா சாருக்கு ஒரு ரோஜா மாலை! !//
அழகா சொன்னிங்க மோகன்ஜி சார்...மிக்க நன்றி...:))
இதையும் கொஞ்சம் படிக்கலாமே
பெண்ணெழுத்து: உடலரசியலும் உலக அரசியலும்!
http://maattru.blogspot.com/2010/12/blog-post_07.html
parattugal
ஒரு மனிதனின் திறமையை மட்டும் வைத்துகொண்டு அவருக்கு ரசிகனாக இருக்க எனக்கு விருப்பமில்லை.. ஒருவர் எனக்கு பிடித்தவராக இருக்கவேண்டுமானால் அவர் அவரது பர்சனல் வாழ்க்கையிலும் யார் மனதையும் புண்படாமல்(தெரிந்து) நடந்துகொண்டிருக்கவேண்டும்.. அவரின் இம்மாதிரியான செய்கைகள் அவரது இசை அற்புதமாக இருந்தாலும் என்னை ரசிக்க விடாமல் தடுத்துவிடுகிறது...
@தம்பி கூர்மதியன்
ஹ ஹ..அப்டியாங்க கூர்மதி...நாம அப்டி எல்லாம் ஒவ்வொருவரின் பர்சனல் லைப் நமக்கு பிடிச்சமாதிரி இருக்கணும்னால் பிரக்டிகலா லைப் லீட் பண்றது ரொம்ப சிரமம் தோழா என் பார்வையில்...நல்லது மட்டும் எடுத்துட்டு..ரசிச்சுட்டு போய்கிட்டே இருக்கணும்...அப்போ தான் நாமும் இயல்பாய் இருக்க முடியும்..நம்மை சுற்றி உள்ளவங்களையும் சந்தோஷமா வச்சுக்க முடியும்...இது ஆனந்தி பார்வையில் மட்டுமே...நீங்க ஒரு வாட்டி சொன்னதையே திருப்பி சொல்றேன்..ஒவ்வொரு மனுஷனுக்கும்...ஒவ்வொரு பீலிங்...தட் ஸ் ஆல் தோழா...!!!:)))))
ஹா ஹா.. தட்ஸ் ஆல்.. அடுத்தது யாருப்பா வாங்க..!!!
@தம்பி கூர்மதியன்
கூர்மதி...நாம எல்லாரையும் திருப்தி படுத்தவும் முடியாது...எல்லாரும் நம்மை திருப்தி படுத்தனும் னு அவசியம் இல்லை...this is the logic of life...பொதுவாழ்க்கையில் இருக்கும் பிரபலமானவங்களும் மனுஷங்க தான் இல்லையா..அவங்களுக்கும் எல்லாவித மனித வெளிப்பாடுகள் இருக்கும்..அழகான விஷயத்தை மட்டும் ரசிச்சுட்டு அப்படியே அப்பீட் ஆய்க்க வேண்டியது தான்...:))))
@தம்பி கூர்மதியன்
//ஹா ஹா.. தட்ஸ் ஆல்.. அடுத்தது யாருப்பா வாங்க..!!!//
ஹ ஹ....:)))
@polurdhayanithi
thank you polurdhayanithi!!
@விடுதலை
அப்டியாங்க விடுதலை...கட்டாயம்ங்க..:))
எல்லோரும் உங்கள் பதிவை பாராட்டி எழுதியிருக்கிறார்கள் ஆனால் இந்த பதிவிற்க்காக நான் உங்களை பாராட்ட போவதில்லை. உங்கள் பாடல் செலக்ஷ்ன் உங்கள் அந்தரங்க உணர்வை பப்ளிக்கா சொல்வது போலிருக்கிறது. இது ஆண்கள் உங்களை தவறாக நினைக்க வழி கொடுத்தது போலிருக்கிறது. நீங்கள் தான் கவுசல்யா பதிவை அனுப்பி வைத்தீர்கள் அதில் வரும் கமெண்ட்ஸை படித்தால் நான் மேலே சொன்னவை உங்களுக்கு புரியவரும்
நீங்கள் எழுதிய பாடல் வரிகளுக்கு உங்கள் பையன் இசை அமைத்தாலும் நன்றாக வந்திருக்கும். நீங்கள் சொன்ன பாடல்களை எழுதிய கவிஞருக்கு 75% பாராட்டுக்கள் போய் சேரும். மீதி 15 % தமிழ் புரிந்த நமக்குமும் 10 % மியூசிக்கும் போய் சேரும்.
இங்கே நான் இட்டது எனது கருத்துக்கள் மட்டுமே அதற்கு நீங்கள் உடன் பட வேண்டும் என்று நான் எதிர் பார்ப்பதில்லை.
எல்லோருடைய வளர்ச்சியை சந்தோஷமாக வரவேற்கும் & பார்க்கும் இணையுலக நண்பன் MTG ( MaduraiTamilGuy)
//ஆஷிக் பையன் உன்னையும்,என்னையும் சண்டைபோட வைக்க சிண்டுமுடிக்கிற மாதிரி ஒரு பெரிய கமெண்ட் போட்ருக்கப்ள..:)) ஆமி நாம சிக்க மாட்டோம்ல..:))//
நீங்க போடுங்க ஆனந்தி!!
நாம்மல்லாம் யாரு? நமக்கு சங்கு ஊதுறவனுக்கே பால் ஊத்துவோம்ல :)
சகோதரி ஆனந்தி இளையராஜா இசை நல்லா இருக்குன்னு சொன்னா அது கரும்பு இனிப்பா இருக்குங்கறத சொல்றது மாதிரி. இளையராஜா இசை உன்னதமானது அப்பிடிங்கறது ஒரு "Universal truth". அவருடைய இசைத்தொகுப்பு ஞானம் உலகத்திலேயே யாருக்கும் கிடையாது அப்பிடின்னு அடிச்சு சொல்லலாம்.உண்மையிலேயே இந்திய சினிமாவில தமிழ் சினிமா அளவுக்கு அதுவும் இளையராஜா உச்சத்திலிருந்த காலகட்டங்களில் வந்த பாடல்கள் அளவுக்கு எந்த மொழியிலயும் பாடல்கள் வரல.இப்போ புனே ல நான் ஆபீஸ்ல தினமும் FM radio கேக்குறேன். எல்லா ஹிந்தி பாட்டுமே ஒரே இரைச்சல் தான். ஓரளவுக்கு இனிமையா இருக்கும் பாடல்களெல்லாம் S.D.பர்மன் காலத்துல வந்த பாடல்கள் தான்.அதெல்லாம் கேக்கும்போது தான் என்னால உணர முடியிது இளையராஜா எவ்வளவு யோசிச்சு இத்தனை பாடல்கள குடுத்திருக்காருன்னு.ஹிந்தி பாடல்கள் தான் அப்பிடின்னு பாத்தா படமாக்கப் பட்டிருக்கிற விதம் ரொம்ப ரொம்ப மோசம். இன்னிக்கு வேணும்னா இளையராஜவ யாரும் கண்டுக்காம இருக்கலாம். ஆனா ஒரு இருபது வருஷங்களுக்கு முன்னாலேயே ஒட்டு மொத்த இந்தியாவையே மிரள வச்ச இசை அவரோடது.இப்போ இருக்குறதெல்லாம் அவரோட நீட்சின்னு சொல்லாம்.இன்னும் எழுதனும்னா எழுதிட்டே போகலாம்.இளையராஜா பத்தி நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன். என்ன ஒரு ஒற்றுமை பாருங்க .நீங்க பயன்படுத்தின அதே படத்தைதான் நானும் போட்டிருக்கேன்.
http://anglethree.blogspot.com/2010/07/blog-post_12.html
எனக்கு வம்பு மூட்டுரதுல இப்போ அவ்வளவு ஆர்வம் இல்ல.ஆனா கொஞ்ச நாள் முன்னாடி சும்மா ஒரு திரிய கிள்ளி போடுவோமேன்னு எழுதின பதிவு அது .
@Avargal Unmaigal
//எல்லோரும் உங்கள் பதிவை பாராட்டி எழுதியிருக்கிறார்கள் ஆனால் இந்த பதிவிற்க்காக நான் உங்களை பாராட்ட போவதில்லை. உங்கள் பாடல் செலக்ஷ்ன் உங்கள் அந்தரங்க உணர்வை பப்ளிக்கா சொல்வது போலிருக்கிறது. இது ஆண்கள் உங்களை தவறாக நினைக்க வழி கொடுத்தது போலிருக்கிறது.//
வாங்க tamilguy...ம்ம்...நீங்க மட்டும் தான் இப்படி யோசிசிருக்கிங்கனு நினைக்கிறேன் சார்...இது வரை வந்த கம்மென்ட் இல் இளையராஜா பத்தி மட்டுமே அவர்கள் மனசில் வந்தது,அது ராஜா சார் ஐ பாராட்டியோ அல்லது குற்றம் சுமட்டியோ மட்டுமே .யாரும் என் அந்தரங்க உணர்வை பத்தி யோசிக்கலை...எனக்கு பிடிச்ச வரிகள் அப்டிங்கிறது நான் வெளிபடுதிக்கட்டதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை :))) அதை எல்லாம் என் ரசனையா மட்டுமே consider பண்ற பதிவர்கள் தான் என்னை சுத்தி இருக்காங்கனு நான் முழுவதும் நம்புகிறேன் சார்..காதலை பற்றி எத்தனையோ பெண் பதிவர்கள் எழுதினால் அப்போ அந்தரங்கத்தை ஷேர் பண்றதா?? எல்லாமே நாம எடுத்துக்கும் முறையில் தான் சார் இருக்கு...என்னை எக்ஸ்போஸ் பண்ணிக்க நான் பதிவு எழுத வரலை...ரசிச்ச வரிகளை விட எனக்கு புடிச்ச இளையராஜா பாடியது மட்டுமே எனக்கு முக்கியமா பட்டுச்சு...சரிங்களா...anyway ...நன்றி தங்கள் அக்கறைக்கு...:)))
@Avargal Unmaigal
//நீங்கள் எழுதிய பாடல் வரிகளுக்கு உங்கள் பையன் இசை அமைத்தாலும் நன்றாக வந்திருக்கும். நீங்கள் சொன்ன பாடல்களை எழுதிய கவிஞருக்கு 75% பாராட்டுக்கள் போய் சேரும். மீதி 15 % தமிழ் புரிந்த நமக்குமும் 10 % மியூசிக்கும் போய் சேரும்.//
மன்னிச்சுக்கணும் சார்..இந்த கருத்தை என்னாலே ஒத்துக்க முடியாது...இசையில் ஏழு ஸ்வரத்தில் உருவாகும் கோர்ப்பை வரிகள் கிடைசுட்டால் யாரும் கம்போஸ் பண்றதா இருந்தால் எத்தனையோ இசை படிச்சவங்க இப்போ கலக்கிட்டு இருப்பாங்க...அதெல்லாம் கடவுளின் வரம் சார்...எல்லாருக்கும் எல்லாமே வந்துராது including my son...:)))
@Rajesh kumar
ஹலோ மை டியர் பிரதர் ராஜேஷ் ..எங்க சத்தமே காணோம்..உங்க போஸ்ட் டும் காணோம்...வாங்க..வாங்க ..welcome ..இப்ப தான் அந்த லிங்க் இல் போயி பார்த்தேன்..சூப்பர் ஓ சூப்பர் ராஜேஷ்..செம analyse .அந்த picture கூட சேம் இல்லையா..same pinch ..ஓகே அதெல்லாம் போகட்டும்...அது என்னவோ தெரிலை ராஜேஷ்...அவரை பத்தி விமர்சனம் சொல்றதில் ஏன் இவ்வளவு deep ஆ நம்ம மக்கள் இருக்காங்கனு தெரில:))..உண்மையான ரசிகனுக்கு இளையராஜா புரிஞ்சால் போதும்...:))) நன்றி சகோதரா...!!!
@ஆமினா
//நாம்மல்லாம் யாரு? நமக்கு சங்கு ஊதுறவனுக்கே பால் ஊத்துவோம்ல :)//
ஹ ஹ..மன்னிச்சு விட்ட்ருவோம்...பாசக்கார பயபுள்ளைய..:)))
@ஆனந்தி..
/ஆனா “கடவுள்” படத்தில் ”பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்....” பாடல் ரெம்ப நெகிழ்ந்து கேட்டேன்.//
லூசு..ஐயோ..சாரி..என் சகோதரா...நான் அதில் குறிப்பிட்ட பாடல்கள் எல்லாமே இளையராஜா பாடியதாக சொல்லி இருந்தேன்...நீங்க சொன்ன பாட்டு மது பாலகிருஷ்ணன் பாடியது(ஆனால் ராஜா சார் இசை தான்)..:)))
@BACQRUDEEN
/நீங்க குறிப்பிட்டுள்ள பாடல்களில் நான் தேடும் செவ்வந்தி பூவிது தவிர வேற எந்த பாட்டும் நான் கேள்விப்பட்டது கூட இல்லை.//
ஹலோ..இப்ப நீங்க தான் அரைகுறை:)))...ஆமி இல்லை..ஆமி ஆல் இன் ஆல் அழகுராணி..:)) முதலில் பாட்டை கேளுங்க பிரதர்..நிறைய பாட்டை கேளுங்க ராஜா சார் இசையில்..அப்புறம் இதெல்லாம் குண்டக்க மண்டக்க தோணவே தோணாது...ரசிச்சுட்டு சொல்லுங்க...:))
@BACQRUDEEN
//ருங்களேன்.அந்த அண்ணன் தம்பி விவாகாரத்துல பாக்யராஜ் தான் நாட்டாமை பன்னிருக்காரு.2004னு நினைக்கிறேன் சார்ஜாவில் ஒரு கச்சேரிக்காக வந்திருந்தார்.அந்த கச்சேரில பாதி ராஜாவுடைய புராணம்தான். ராஜா ராஜாதி ராஜானிந்த ராஜா நு அக்னி நடசத்திர படத்தில் வர்ர பாடலை//
அட அதெல்லாம் விடுங்க பா..நம்ம கூட பொறந்தவங்க கூட நமக்கு சண்டையே வராதா...இதென்ன கொடுமையா இருக்கு...அவர் பாட்டை மட்டும் கேப்பிங்களா...அவர் வீட்டு கதவை திறந்து நாம ஏன் எட்டி பார்க்கணும்..(நன்றி கமல்ஜி..:)) ) நான் என் தோழர் தம்பிகூர்மதியனுக்கு சொன்னதையே உங்களுக்கும் சொல்றேன்..அந்த கம்மென்ட் ஐ போயி படிச்சுக்கோங்க...:)))))))))))))))))))))))))))))))..
இளையராஜாவின் இசையை பிடித்த பலருக்கு அவரின் குரல் பிடிப்பதில்லை. உங்களுக்கு பிடித்து இருப்பதில் ஆச்சர்யம் கலந்த சந்தோஷம். ஏன்ன எனக்கும் பிடிக்கும். முதல் முறையாக உங்கள் ப்ளாக் விசிட் செய்வதில் சந்தோஷம். (நானும் மதுரைகாரன் தாம்ல)
@musictoday
/உங்களுக்கு பிடித்து இருப்பதில் ஆச்சர்யம் கலந்த சந்தோஷம். ஏன்ன எனக்கும் பிடிக்கும்.//
வாங்க நம்ம ஊரு சகோதரனே...உங்களுக்கும் பிடிச்சதில் சந்தோஷம்...
இளையராஜா பற்றிய தங்கள் வர்ணனை மிகவும் அருமை. இளையராஜா இந்தளவுக்கு ஞானியாக மாறியதற்கு காரணம் அவருடைய ஜாதக அமைப்பு. அதாவது அவர் வாங்கி வந்த வரம். காலசர்ப்ப ராஜ யோகம் உடையவர். அவர் நிச்சயம் குண்டலினி சக்தியை விழிப்படைய செய்திருப்பார் என்பதை அவரது ஜாதக கட்டங்கள் காட்டுகின்றன. செவ்வாயானது அசுப பார்வையில் வலுவாக இருப்பதால் ரொம்ப கோபக்காரராக இருப்பார். ஆனால் நல்லவர். எல்லாம் கெரகம்தான் காரணம்
@சி.ஏ. ஏ.எம்.சரவணன்
அப்டிங்களா சார்..தங்கள் கருத்துக்கும்,வருகைக்கும் மிக்க நன்றி சி.ஏ. ஏ.எம்.சரவணன்!!
//அப்புறம் இளையராஜா பிடிக்கும் .....
மேலும் இளையராஜா பிடிக்கும் ...
மற்றும் இளையராஜா பிடிக்கும்//
மேலே அப்படி சொல்லிட்டு கீழே ஏன் இப்படி சொல்றீங்க
//நான் அவரின் அழகான படைப்புக்கு மட்டுமே தீவிர விசிறி//
அப்படினா இளையராஜா
ஏன் இப்படி மேல கீழ பேசுறீங்க?
படைப்பு மட்டுமே புடிக்கும்னா
இளையராஜாவை புடிக்கும்னு
ஏன் ஏலம் போடுறீங்க
படைப்பு புடிக்கும்,
படைப்பு புடிக்கும்னு
கூவ வேண்டியதுதானே??
அப்பறம் இன்னொன்னு அப்ப சொல்ல மறந்து இப்ப சொல்றேன்
ஒரு மாலை நேரம் ஆறு மனி வாக்கில் அல்லது
சூரியன் விடைபெற்றுக்கொண்டு இருக்கும் அந்த
Sun Set வினாடிகளில்
காதுல வாக்மேன் மாட்டிகிட்டு வாக் பன்னாமல்
ஒரு இடத்தில் தனியா இருந்துகொண்டு...
மனசுக்கு புடிச்சவங்கள நினைத்துக்கொண்டு
இந்த வரிய கேட்டால் உருகுதலுக்கு உத்திரவாதம்
“ பல முகத்தை பார்த்தாலும் ஒரு முகத்தை தான் தேடும்....”
இதான் அந்த வரி
பாட்டு: வாணம் பார்த்த கரிசக்காடு பூ பூத்தது
பாடுனது உங்க ராஜாதான் இது ஏன்
உங்க உதாராணங்களில் விட்டுபோனதுனு தெரியல
இதெல்ல்லாம் விட்டுட்டு எல்லாமே டப்பா பாட்டே போட்டிருக்கீங்க
கேட்டா ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனைனு டயலாக் விடுறது
அன்புடன்
ஆஷிக்
@BACQRUDEEN
//படைப்பு மட்டுமே புடிக்கும்னா
இளையராஜாவை புடிக்கும்னு
ஏன் ஏலம் போடுறீங்க
படைப்பு புடிக்கும்,
படைப்பு புடிக்கும்னு
கூவ வேண்டியதுதானே??//
முடியல சாமி...முடியல....எப்போ உன் லேப்டாப் ரிப்பேர் ஆகும்னு ஆவலாய் காத்திருக்கும்,:)
உன் அறுவை பொறுக்க முடியாத,:))
ஆனந்தி...:))
//நம்ம கூட பொறந்தவங்க கூட நமக்கு சண்டையே வராதா...இதென்ன கொடுமையா இருக்கு...//
பொதுவாழ்க்கையில வந்தவங்களோடு சாமானியர்களின் வாழ்க்கையை ஒப்பிடுதல் சரியில்லை.விஷயம் வீட்டுக்குள்ளேயே இருந்தால் யாரும் அதை பேசப்போறதில்லை தெருவுக்கு வந்ததால்தான் விமர்சனம் வருகிறது, அதுவும் அவரே அதை வெளிக்கொண்டுவந்துள்ளார்.
பார்க்க:http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=160
அவரு சரியில்லீங்க, அதனால அவருடைய படைப்புகளை ரசிப்பதிலும் சிரமங்கள் ஏற்படுவதை ஏனோ தவிர்க்கமுடியவில்லை.
உண்மைய சொல்லும்போது கோவப்படக்கூடாது இளையராஜா மாதிரி
அன்புடன்
ஆஷிக்
நன்றி ஆனந்திக்கா.. கொஞ்ச நாளா வேலை கொஞ்சம் அதிகமாயிருச்சு..அதான் பதிவுகளும் எதுவும் எழுத முடியல.. அதுவுமில்லாம ஒரு 14 மணிநேரம் வேல பாத்துட்டு அப்புறம் வீட்டுக்கு வந்து சோத்தப் பொங்கி கொழம்பு வச்சு சாப்பிட்டுப் படுக்கவே ரொம்ப நேரமாயிடுது. அப்புறம் எதுவும் வாசிக்கவும் முடியமாட்டேங்குது. எழுதவும் முடிய மாட்டேங்குது .. முயற்சி பண்ணுறேன்..
@Rajesh kumar
ஓ..அப்டியா..:)) பட் நிறைய டைம் உங்க ப்ளாக் வந்து பார்த்துட்டு போயிருக்கேன்..என்னடா என் சகோ பதிவு எதுவும் போடலேனு யோசிச்சிருக்கேன்...தரமான பதிவுகளில் விரும்பி படிக்கிறதில் என் சகோ ராஜேஷ் பதிவும் ஒன்னு...முடியும்போது நல்ல பதிவா போடுங்க...சரிங்களா என் அன்பு தம்பி...:)))
இசைஞானினா சும்மாவா.. அவர்லாம் சான்சே இல்ல..
உங்களது பதிவு அருமை..
//இசைஞானினா சும்மாவா.. அவர்லாம் சான்சே இல்ல..//
ஆமா..சும்மதான்..
அவருக்கெல்லாம் இனி சான்ஸே இல்ல
:))
ஆஷிக்
முதலில் ராகதேவனின் பாடல்களை தேர்வு செய்து சிறப்பாக பதிவிட்டதற்கு உங்களுக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும்....
அனைத்துப் பாடல்களும் சிறந்த தேர்வு சூப்பர்...
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
@பதிவுலகில் பாபு
நன்றி பாபு..:))
@மாணவன்
நன்றி மாணவன் :)
Superb post..
Mastro is a master of music. :)
உங்கள் பதிவு இனிமை என்றால் பதில்கள் அருமை :-)
வாழ்த்துகள்!
இங்கு சுட்டி இருக்கிறேன்:
http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=2318101#2318101
@Thanglish Payan
thank you Thanglish Payan:))
@app_engine
மிக்க நன்றி அப்பு!! அந்த சுட்டி போயி படிச்சேன்...நல்லா தான் இருக்குல்ல..ஹ ஹா...:)))
சகோதரி ஆன ந்தி அவர்களே..
உங்கள் பதிவு அருமை.
உங்கள் கருத்து உண்மையான இசைஞானி ரசிகர்கள் அடையும் உணர்வுகளே. அது உங்களுக்குள்ளும் இருப்பதில் ஆச்சிரியமில்லைதான். நானும் மதுரைக்காரன் ஜெய்ஹிந்த்புரம் தான் நான் வசிக்கும் இடம். மதுரையில் நம்மை போன்ற ரசிகர்கள் ஏராளம் உண்டு. இப்பொழுது நீங்களும் இருக்கீறீர்கள். இப்பொழுது தமிழ் சினிமா பாடல்கள் வறண்டு போயிருக்கிறது. இனி வரும் காலங்களில் இன்னொரு அன்னக்கிளி போல் ஒரு மாற்றம் வரும், அது இசைஞானியால் மட்டுமே முடியும். அதைதான் நான் எதிர் பார்க்கிறேன்.
நன்றி இளையராஜா...நீங்களும் நம்ம ஊருன்னு தெரிஞ்சுகிட்டதில் ரொம்ப மகிழ்ச்சி நண்பரே...!! இசை தேவன் பற்றிய எந்த விமர்சனங்களும் உண்மையான இளையராஜா ரசிகர்களுக்கு கடிச்சு போட்ட நக துண்டுகளுக்கு சமம் நண்பரே...He always Rocks...Rocks...:)))
எனக்கு இளையராஜாவையும் இப்போது யுவனையும் பிடிக்கும்
//இளையராஜா இசையில் இளையராஜாவே பாடினால்...சான்சே
இல்ல......//
உடன்பாடில்லை,.. எனக்கு இளையராஜாவின் பாடல்களில் அவரே பாடிய பாடல்களில் ௪-௫ தான் எனக்கு பிடிக்கிறது . ஒரு வேளை என் ரசனை சரியில்லையோ என்னவோ,..
//"முதல் முறை வாழப்பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே... அன்பே...
பறவையே எங்கு இருக்கிறாய்?
பறக்கவே என்னை அழைக்கிறாய்!!
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே..." (தமிழ் MA)//
எனக்கும் இந்த பாடலின் வரிகள் மிக பிடிக்கும். அதிலும் ராஜாவின் ஹைபிச்சில் வரும்,.
புழுக்கூட்டம் பறவைக்காவும் போதாதே
109 வது நபராக இளையராஜா ரசிகனாக இந்த இடத்தில் எழுதி வைப்பதில் எனக்கு பெருமையே.
\\அப்புறம்..கடைசியில் ஒன்னு சொல்லணும் நான்..அதாவது..எனக்கு ...இளையராஜா பிடிக்கும்...அப்புறம் இளையராஜா பிடிக்கும் .....மேலும் இளையராஜா பிடிக்கும் ...மற்றும் இளையராஜா பிடிக்கும்...:))))))))\\
மேலும் ஒரு இசை தெய்வத்தின் ரசிகையையின் பதிவை படித்ததில் மகிழ்ச்சி ;)
இளையராஜா... சிறு வயதில் யாருடைய இசை என்றே தெரியாமல் அந்த இசையின் ராகத்திலேயே தனிமையாய் வாழ்ந்தவன். பின்னாற்களில் அது ராஜாவின் இசையென்றறிந்தேன். இன்றும் அவரின் இசை என் மனவழுத்தத்தை குறைத்து உயிர் வாழ வைத்த மருந்தாகிறது.
நன்றி ஆனந்தி. இன்றைய தலைமுறையினருக்கும் ராஜாவின் இசையை புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் வழங்கியுள்ளீர்கள்.
Post a Comment