அட நெசமாலுமே நாகரிகம் டெவலப் ஆய்ட்டு வருது தான்...தாவணி கலாச்சாரம் எல்லாம் போன தலைமுறை உடை ஆய்டுச்சு.. மசக்கலி,ரசக்கலி..காலத்தில் இருக்கிறோம் )) .ஜீன்ஸ் கூட அநேகமா ஓல்ட் பேஷன் ஆய்ட்டு வருதுன்னு நினைக்கிறேன்...ஓகே..ஓகே..எதுக்
சமீபத்தில்,ஓர் அதிகாலையில் என் சென்னை நோக்கிய பயணத்தில்...மாமண்டூரில் இருந்து ஒரு 30 கி.மீ க்கு முன்னாடி ஓர் அழகான வயல்வெளி.....அப்போ தான் ஒரு சுவாரஸ்யம்...அங்கே காதில் தண்டட்டி போட்ட அப்பத்தாக்கள் அழகான நைட்டி உடையில் வயக்காட்டில் களை பிடிங்கிட்டு இருந்தாங்க...பார்த்துட்டு சட்டுன்னு சிரிச்சுட்டேன்.. )))
"கோடாலி கொண்ட போட்ட..
கண்டாங்கி சேல பாட்டி!!
எவ்வுடை தரித்தாலும்
நீ அழகு சீமாட்டி!!
உனக்கு ரொம்ப
அழகா இருக்கே நைட்டி!!"))
போகும் வழியில் செம மழை..கொஞ்சம் ஒதுங்கி தேநீர் குடித்தோம்..அப்போது ஒரு குட்டிப்பையன் அங்கே நிறுத்தபட்டிருந்த பைக் கின் முன் சக்கரத்து டயர் மேலே ரொம்ப சீரியஸ்ஸாய் சிறுநீர் போய்கிட்டு இருந்தான்..ஏன் டயர் மேலே இருந்தன்னு அவனை கூப்பிட்டு கேட்டேன்..
அவன் சீரியஸ் ஆ இப்படி பதில் சொன்னான் "டயர் மேலே ரொம்ப சகதி..அதை கழுவினேன்க்கா.."
"நான் குடித்த
தேநீர் ருசியை விட
உன்
சிறுநீர்
சீர்திருத்தம்
அருமை!!" )))
தீபாவளி முடிஞ்சபிறகு பட்டாசு வெடித்த வெறும் காகித குவியல்களை பார்த்தால்,மனசில் ஒரு நொடி இதெல்லாம் பணம் தானே ன்னு தோணி மறையும்...
இந்த வாட்டி எங்க பக்கத்து ஏரியா வில் ஆந்திராவில் இருந்து கட்டிட தொழிலாளர்கள் குடும்பத்தோட வந்து டென்ட் போட்டு வேலை செஞ்சுட்டு இருக்காங்க தனியார் காண்ட்ராக்ட் தினக்கூலி ஆட்களாய்!!
ஏக்கமாய் வந்து பார்த்து போகும் அந்த சிறுவர்கள் உடை,இனிப்பு எதையும் விரும்பவில்லை..கொஞ்சம் பட்டாசு கொடுத்தோம். அவ்வளவு சந்தோஷம் அவங்களுக்கு..
அவங்க இருந்த டென்ட் பக்கம் நாங்க கொடுத்த பட்டாசு போட்டுகிட்டு இருந்ததை பார்க்கும்பொழுது...ம்ம்...என்
"வெடித்துச் சிதறிய
ஒவ்வொரு காகிதத்திலும்-உன்
பட்டாசு சிரிப்பு!
அழகே! உன்னைச் சுற்றி நான்!!"
100 comments:
அழகான ரசனை ஆனந்தி. சம்பவங்களும் அதற்கு உங்கள் கவிதைகளும் அருமை
@LK
நன்றி LK !!
பழைய நினைவுகளை அசை போடச் செய்திருக்கிறீர்கள்.
நல்ல ரசனை ஆனந்தி! நைட்டி பாட்டி படித்து சிரித்தேன். சிறுவனின் பட்டாசு மகிழ்ச்சி கண்டு நெகிழ்ந்தேன்.
@kavisiva
நன்றி கவிசிவா...
@நித்திலம்-சிப்பிக்குள் முத்து
நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து
ரொம்பவேஅழகுங்க..
**நைட்டி பாட்டி சுதந்திரம் கிடைக்கும் முன் ஆங்கிலேய பெண்களால் பயங்கரமாக பாதிக்கப்பட்டவர் போல.. நானறிந்தவரையில் நைட்டியை பாட்டிகள் வெறுத்தே வந்தனர்.. இது எனக்கு புதிதே..
**சிறுநீரில் வண்டியின் சக்கரத்தை சிறுவன் கழுவவில்லை மேலும் அசுத்தம் செய்திருக்கிறான்.. அவனை திட்டாமல் ரசித்து வந்திருக்கிறீரே..!
**பட்டாசு கொடுத்ததால் மகிழ்ந்த சில முகங்களை பார்க்காதீர், அதனால் பாதிக்கப்பட்ட பல முகத்தை பாருங்கள்..
http://kirukaninkirukals.blogspot.com/2010/11/blog-post_15.html
நீங்கள் ஏதும் கவிதை தொகுப்பு போட்டு இருக்கிங்களா??? அந்த தொகுப்பு எங்கே கிடைக்கும்))))
நல்லா ரசித்து எழுதி இருக்கின்றிர்கள்...
அழகான கவிதை... அற்புதமான வரிகள்...
@முத்துலெட்சுமி/muthuletchumi
நன்றி முத்துலெட்சுமி...)))
@ganesh
என் அன்பு தம்பி கணேஷ்!! இதில் எதுவும் உள்குத்து இல்லயே...))))...
@சங்கவி
நன்றி சங்கவி!! தமிழ்மணம் டாப்பர் லிஸ்ட் இல் நீங்களும் இருக்கீங்க..வாழ்த்துக்கள்..)))
@தம்பி கூர்மதியன்
வாங்க தம்பி கூர்மதியன்!!
/**சிறுநீரில் வண்டியின் சக்கரத்தை சிறுவன் கழுவவில்லை மேலும் அசுத்தம் செய்திருக்கிறான்.. அவனை திட்டாமல் ரசித்து வந்திருக்கிறீரே..!/
எல்லாமே பார்க்கும் நேரம்.சூழல் பொறுத்து தான் கூர்மதியன்...நாம் இருக்கும் மூட் இல் சீரியஸ் விஷயங்கள் நம் பார்வையில் விளையாட்டான நிகழ்வுகளாய் தோணலாம்...சீரியஸ் மூட் இல் விளையாட்டான விஷயங்களை சீரியஸ் மூட் இல் அணுகுவோம்..சில விஷயங்கள் நம் மனசூழ்நிலை..எண்ண ஓட்டங்களின் பரிமாணங்களை பொறுத்து அமையலாம்..எனக்கு அன்னைக்கு இருந்த மூட் இல் அந்த சிறுவன் செய்தது அருவருப்பாகவோ,அசுத்த விஷயமாகவோ தோணலை...எனக்கு அது ஒரு விளையாட்டான ரசனையான விஷயமாய் மட்டுமே பட்டது...இது ஆனந்தி...அப்போ ஒருவேளை கூர்மதியன் இருந்து இருந்தால் கூப்ட்டு அந்த பையனை திட்டி இருக்கலாம்...வேறு வேறு மனிதர்கள்...வேறு வேறு ரசனைகள்...வேறு வேறு இயல்புகள்...இது தான் இயற்கை...சரியா...)))
அடுத்தவங்களின் சந்தோசத்தின் முன் பணம் பெரிதாகத் தெரியாது தோழி!!! உங்கள் கவிதைகள் அருமை!!!
@தம்பி கூர்மதியன்
/பட்டாசு கொடுத்ததால் மகிழ்ந்த சில முகங்களை பார்க்காதீர், அதனால் பாதிக்கப்பட்ட பல முகத்தை பாருங்கள்../
100 க்கு 200 சதவிகிதம் உங்கள் ஆதங்கத்தை ஒத்துகொள்கிறேன்...கொஞ்சம் லாஜிக் கா யோசிச்சால் பூமியின் ஒரு பக்கம் வெளிச்சமாய் இருக்கும்போது அதே நேரத்தில் இன்னொரு பக்கம் இருட்டில் தான் இருக்கு...காரணம் அதன் அமைப்பு...எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை இருந்தே ஆகும்...தேவதை இருந்தால் சாத்தானும் இருக்காங்க கதையில்...ஒரு குழந்தை படும் வேதனை புரிகிறது...அதற்க்கு என்னாலே போயி சிவகாசியில் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க முடியாது...ஆனால் நான் தொடும் தூரத்தில் இருக்கும் சிறிய ஆசைகளை அந்த குழந்தைகளுக்கு கொடுத்து மகிழ்ந்ததில் எனக்கு நிறைவு தான்...நான் புரட்சியாளி இல்லை நண்பா...சாதாரண,இயல்பான பெண்..அவ்வளவே..)))
என்னை யோசிக்க வைக்கும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...
@சிவா
நன்றி சிவா...)))
சம்பவங்களும் அதனுடைய ஹைக்கூவும் அருமை..
//நைட்டி மேட்டர்//
:))
@Balaji saravana
நன்றி பாலாஜி:))
அழகான ரசனைகள் வாழ்த்துக்கள் ஆனந்தி
@டிலீப்
நன்றி டிலீப்...
நிறைய எழுதுங்க ...
@கே.ஆர்.பி.செந்தில்
நன்றி செந்தில் சார்..
நல்ல ரசனைகள் ஆனந்தி,... "மஸக்கலி" மசக்காளி ஆகிடுச்சா.. அடப்பாவமே :-))))
@அமைதிச்சாரல்
ஹ ஹ...அது மசக்கலி தான்!!...ரசக்கலி தான் தீபாவளி லேட்டஸ்ட் பேஷன் இங்கே அமைதி சாரல் )))
@அமைதிச்சாரல்
அமைதி சாரல் அக்கா...காளியை காலி பண்ணி கலி பண்ணிட்டேன்...)))
எல்லாவற்றையுமே அழகாகப் பார்த்துக் கவிதை பாடும் உங்கள் பார்வை எல்லாவற்றையும் விட ரொம்பவே அழகு...
ரசித்து உணர்ந்து படித்தேன்... :)
@பிரபு . எம்
அட...ரொம்ப தேங்க்ஸ் பிரபு...)))
ஒரு வித்தியாசமான ரசனை உங்களிடம் ஆனந்தி, வாகனங்களின் டயர்களில் நாய்கள் அசுத்தம் செய்தாலே துரத்தும் மனிதர்கள் மத்தியில் சிறுவனின் செயலை ஒரு ரசனையோடு சொல்லியிருக்கும் விதமும் ஒரு அழகுதான்.
தேடித் தேடி
அலைந்து அலைந்து
சோர்வடைந்து
விட்டுவிடும் தருணத்தில்
கிடைத்துவிட்டாய்
நல்ல எழுத்தும் உண்டு
என்பதற்கு சான்றாக....
நீ எழுதுவதைப் படிக்கவும்
இனி உன்னைப் போல்
எழுதக் கற்றுக்கொள்ளவும்
மனம் சொல்லும்
அடிக்கடி....
// தீபாவளி முடிஞ்சபிறகு பட்டாசு வெடித்த வெறும் காகித குவியல்களை பார்த்தால்,மனசில் ஒரு நொடி இதெல்லாம் பணம் தானே ன்னு தோணி மறையும்... //
aananndhi idhudhan unmai....... thiriyai pattha vacha money loss
@தவமணி
வாங்க தவமணி சார்...தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் ரொம்ப நன்றி)))
@sinthanai
/நீ எழுதுவதைப் படிக்கவும்
இனி உன்னைப் போல்
எழுதக் கற்றுக்கொள்ளவும்
மனம் சொல்லும்
அடிக்கடி.../
ஐயோ..அந்த அளவுக்கு எல்லாம் எனக்கு தகுதி இல்லை சார்...பட் சந்தோஷமா இருக்கு இதை படிக்கும்போது...)) மிக்க நன்றி சார்!!
@Ravi kumar Karunanithi
ஆமாம் ரவி...உங்களுக்கு தோணியது தான் எனக்கும் ..))
ஆனந்தி நீங்க சொல்வதுபோல வேறு, வேறு மனிதர்கள், வேறு வேறு ரசனைகள்தான். ஆனாலும் ரசிக்கும்படி
எழுதவும் தெரிஞ்சிருக்கே. அங்க நீங்க
நிக்கரீங்க.
@komu
கோம்ஸ்..ரொம்ப தேங்க்ஸ்...இதெல்லாம் இருக்கட்டும் உங்க ப்ளாக் கில் எங்கே நியூ போஸ்ட்..ஒழுங்கா சீக்கிரம் போடுங்க..டெய்லி போயி ஏமாத்து போய்டுறேன்...:((
அழகான ரசனை.
கவிதைகள் அனைத்தும் அருமை.
வணக்கம் தங்களின் கவிதை தமிழ் ப்ரபஞ்சம் தளத்தில் தங்கள் பெயரிலயே மீள்பதிவு செய்துள்ளோம்
http://alltamilblognews.blogspot.com/2010/11/blog-post_5431.html
@சே.குமார்
நன்றி குமார்!!
@alltamilblognews
நன்றி!!
சின்ன சின்னதாய் செய்திகளும் அதற்கான கவிதை வரிகளும் அருமை
@VELU.G
நன்றி சகோதரர் வேலு.ஜி..
பூங்கொத்து!
@அன்புடன் அருணா
நன்றி அன்புடன் அருணா!! :)))
தவமணி அல்லது தவமணி அண்ணா போதுமே சகோதரி, சார் எதற்க்கு?
@தவமணி
நன்றி தவமணி அண்ணா!! :)
முதல் இரண்டு கவிதைகளைப் படிச்சு ரசிச்சு சிரிச்சேன்.. ரொம்ப நல்லாயிருந்தது..
கடைசி பாராவையும்.. கவிதையும் படிச்சப்போ மனசு கொஞ்சம் கஷ்டமாயிடுச்சு.. உண்மைதான்.. அந்தமாதிரி பட்டாசு வெடிக்க முடியாம எவ்வளவும் குழந்தைகள் ஏங்கிப் போகும்..
நல்ல ரசனை உங்களுக்கு.. வாழ்த்துக்கள்..
@பதிவுலகில் பாபு
நன்றி பாபு..!!
ஹா ஹா.. அந்த பாட்டி ரொம்ப சுட்டி..சுவையான பகிர்வுகள்..
பட்டாசு சிரிப்பு!அழகான சொல்லாடல்.பார்த்ததைக் கவிதையாய் வடிக்கும் பாங்கு அருமை.கண்வழி புகும் நிகழ்ச்சிகள்தரும் உணர்வுகளின் வெளிப்பாடுதானே இலக்கியம்?
வாழ்த்துகள்
@Prasanna
நன்றி பிரசன்னா...:))
@சென்னை பித்தன்
நன்றி திரு.சென்னை பித்தன்...!!
வித்யாசமான ரச்னைதான் ஆனந்தி...:)
@பயணமும் எண்ணங்களும்
நன்றி சாந்தி..:))
வித்யாசமான ரசனை உங்களுக்கு.
அதை எல்லாரும் ரசிக்கும்படியும் எழுதவும் வருகிரது. வாழ்த்துக்கள்.
புது பதிவு போட்டுவிட்டு ஆவலுடன்
உன்னை எதிர்பார்க்கும் என்னை ஏமாற்றலாமா?
@Lakshmi
நன்றி லக்ஷ்மி மேடம்...!!
@komu
கோம்ஸ்..வந்துட்டே இருக்கேன்...கொஞ்சம் பிஸி வீட்டில்..அதான்...)))
எப்புடிங்க? :))
'வெடித்துச் சிதறிய
ஒவ்வொரு காகிதத்திலும்-உன்
பட்டாசு சிரிப்பு!'
நான் கொஞ்சம் இத மாத்தினேன்!
'வெடித்துச் சிதறிய
பட்டாசுக் காகிதமெங்கும்
உன் சிரிப்பு!'
சும்மா! தப்பா எடுத்துக்காதிங்க! :)
@ஜீ...
ஜி..இதுவும் சூப்பெரா இருக்கு...:))
அந்த நிகழ்ச்சிகளை விளக்கி கவிதை போட்டதால் கவிதையை முழுமையாக உங்கள் பார்வையிலேயே புரிந்துகொள்ள முடிந்தது. ரொம்ப நல்லாயிருக்கு.
@ஜெயந்தி
Thank You Jeyanthi!!:))
லாஸ்ட் நாலு அஞ்சு போஸ்ட் எல்லாம் ஒரு டூர் மயம் இவங்க டுரா போறாங்க அடுத்து எந்த டூர் சொலுங்க
ஆனந்தி உங்க ப்ளாக் சூப்பரா இருக்குங்க இப்பதான் பாத்தேன். நான்
ப்ளாக் எதுவும் எழுதரதில்லை. அதுக்கு நேரமும் இல்லை. கமெண்ட் போட முடியுமா தெரியலை.ஆனாகூட வ்ந்திடேன்
உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். கீழே உள்ள லிங்கில் பார்க்க
http://kuttisuvarkkam.blogspot.com/2010/11/blog-post_23.html
@சௌந்தர்
அடபாவி.....ஊட்டி..கொடை போகலை...போன ஏரியா எல்லாம் செம வெயிலு ஏரியா...பக்தி பழமா கோவிலை சுத்தி பார்த்துட்டு வந்தோம்...கடுபடிக்காத நீ வேற...))))
@umaasvini.asvini
உமா..வாங்க..வாங்க...முடியும்போது நீங்களும் ஒரு ப்ளாக் ஸ்டார்ட் பண்ண பாருங்க உமா...எவளவோ விஷயங்கள் நீங்கள் சொல்ல இருக்குனு எனக்கு தோணுது...நானும் படிச்சு தெரிஞ்சுக்கிரேனே...சிவா பாப்பாக்கு என் அன்பு முத்தங்கள்...)))))
@ஆமினா
டியர் ஆமி!!ஹீ..ஹீ...மெயில் அனுப்பிருக்கேன்...என் புலம்பலை பார்க்கவும்...))))
இதையும் கொஞ்சம் படிக்கவும்
நான் ஒரு பெண்
http://maattru.blogspot.com/2010/11/blog-post_23.html
Hi Madam!
உங்களுக்காக மூக்குப் பேணியின் படம். நம்ம பக்கம் வாங்க!
நன்றி
ஜீ..
//ரொம்ப சீரியஸ்ஸாய் சிறுநீர் போய்கிட்டு இருந்தான்//
அப்ப கமெடிக்குனு யாராவது சிறுநீர் கழிப்பாங்களா என்ன?
”அப்பத்தாக்கள் அழகான நைட்டி உடையில் வயக்காட்டில்
களை பிடிங்கிட்டு இருந்தாங்க”
அது நைட்டி கலாச்சாரத்தை எதிர்த்து நூதன போராட்டாம இருக்கும் போல
எங்க ஆபீஸ்ல கூட ஒருதடவை வட மாநிலத்த சேர்ந்த Sales Dept ல
பணிபுரியும் பென் ஒருவர் என்னை கடந்து போகும்போது
யதார்த்தமா பின்னாடி பார்த்தேன் (எல்லாரும் மாதிரி)
அப்படியே ஷாக் ஆயிட்டேன்
பின்னாடி முதுகு சினிமாஸ்கோப் மாதிரி, மிரண்டுட்டேன்
ஜாக்கெட் போடலையோனு ஒரு அதிர்ச்சி அப்பறம் பாத்தா
பின்னாடி மட்டும்தான் அந்த விளையாட்டு, மத்த படி எல்லாம்
Fully Covered..அன்னைக்கு என்னுடைய Job Delay ஆயிருச்சு
கவிதைனா அது ஆனந்திதானா? Hi-Ku அதிர்வுகளுக்கு பொருத்தமான
எழுத்துக்கள்.
அன்புடன்
ஆஷிக்
தீபாவளிக்கு வெடிக்கலாமா? கூடாதா? அல்லது உங்க கிட்ட வெடிவாங்கிதான் வெடிக்கனுமா.
ஆனா உங்க பாசம் எனக்கு புடிச்சிருக்கு
-ஆஷிக்
@ஜீ...
அன்பு தம்பி ஜீ...அந்த மூக்கு பேணி பார்த்துட்டேன் உங்க ப்ளாக்கில்...சூப்பர்...))))
@விடுதலை
நன்றி விடுதலை....படிச்சு பார்க்கிறேன்
"கோடாலி கொண்ட போட்ட..
கண்டாங்கி சேல பாட்டி!!
எவ்வுடை தரித்தாலும்
நீ அழகு சீமாட்டி!!
உனக்கு ரொம்ப
அழகா இருக்கே நைட்டி!!"))
.... Very pretty. :-)
தலைப்பே அருமை!
@AshIQ
/பின்னாடி முதுகு சினிமாஸ்கோப் மாதிரி, மிரண்டுட்டேன்
ஜாக்கெட் போடலையோனு ஒரு அதிர்ச்சி அப்பறம் பாத்தா
பின்னாடி மட்டும்தான் அந்த விளையாட்டு, மத்த படி எல்லாம்/
ஹ ஹ...ஓகே..ஓகே... உன் ஆபிஸ் இல் நீ வேலை செய்ற அழகை நல்லா புரிஞ்சுட்டேன்..rock you ))))
@AshIQ
//அன்னைக்கு என்னுடைய Job Delay ஆயிருச்சு//
is it?? ok...ok...cool baby..)))))))
@AshIQ
//கவிதைனா அது ஆனந்திதானா? Hi-Ku அதிர்வுகளுக்கு பொருத்தமான
எழுத்துக்கள்.//
மனச தொட்டு சொல்லு...இந்த கம்மென்ட் டைப் பண்ணிட்டு ஆசிட் ஊத்தி உன் கையை கழுவி இருப்பியே....))))))))
@AshIQ
//தீபாவளிக்கு வெடிக்கலாமா? கூடாதா? அல்லது உங்க கிட்ட வெடிவாங்கிதான் வெடிக்கனுமா.//
வெடிக்கலாம்...வெடிக்காமலும் இருக்கலாம்...வெடிக்கிற மாதிரி வெடிக்கலாம்...வெடிக்காதமாதிரியும் வெடிக்கலாம்...வெடித்து கொண்டே வெடிக்காத மாதிரி வெடிவாங்கி வெடிக்கலாம்....ஆமாம்...நீ என்ன கேட்ட...))))))
@Chitra
very pretty...yeah...It'z like you)))))
@THOPPITHOPPI
நன்றி தொப்பி தொப்பி...)))
அழகான ரசனை
அற்புதம் ஆனந்தி.
நல்ல ரசனை...
:)
நல்ல ரசனை. நைட்டி பாட்டி – சோ நாட்டி!! தில்லியில் பெரும்பாலான பாட்டிகள் – சுடிதார் மற்றும் நைட்டி தான்…..
@Ravi kumar Karunanithi
ரொம்ப நன்றி ரவி...:))
@பித்தனின் வாக்கு
ரொம்ப நன்றி பித்தனின் வாக்கு...:)))
@அன்பரசன்
ரொம்ப நன்றி அன்பரசன் ...:)))
@வெங்கட் நாகராஜ்
அப்படியா..:)) தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி வெங்கட் நாகராஜ்...:)))
// "டயர் மேலே ரொம்ப சகதி..அதை கழுவினேன்க்கா.."//
super!
//"வெடித்துச் சிதறிய
ஒவ்வொரு காகிதத்திலும்-உன்
பட்டாசு சிரிப்பு!
அழகே! உன்னைச் சுற்றி நான்!!"//
அற்புதமான வரிகள்...
//மனச தொட்டு சொல்லு...இந்த கம்மென்ட் டைப் பண்ணிட்டு ஆசிட் ஊத்தி உன் கையை கழுவி இருப்பியே....)))))))) //
அட பாதகத்தி!
கை கழுவுறதுக்கு ஒரு டெட்டாலோ அல்லது பினாய்லோ ரெகமெண்ட் பன்னக்கூடாதா? ஆசிட்டதான் சொல்லனுமா? ஆசிட் ஊத்துனா நாம கைய கழுவ வேண்டாம் அதுவே நம்மள கழுவி விட்டிரும். என்ன கொலைவெறி. ஆனந்தியின் எழுத்துக்களை பாத்து பொறாமையில் பாராட்ட மனசு வரல. ச்சே :-(
//அடுத்தவங்களின் சந்தோசத்தின் முன் பணம் பெரிதாகத் தெரியாது தோழி!!! உங்கள் கவிதைகள் அருமை//
முன் பணம்னா Advance தானே,, அடுத்தவங்க சந்தோஷத்துக்கு ஆனந்தி அட்வான்ஸ் கொடுக்கல. அடுத்தவங்க சந்தோஷத்துக்கு வெடி வச்சிருக்கு ஹா ஹா ஹா
(யாருமே சிரிக்கல அதுனால நானே சிரிசுகிட்டேன்)
-ஆஷிக்
//வெடிக்கலாம்...வெடிக்காமலும் இருக்கலாம்...வெடிக்கிற மாதிரி வெடிக்கலாம்...வெடிக்காதமாதிரியும் வெடிக்கலாம்...வெடித்து கொண்டே வெடிக்காத மாதிரி வெடிவாங்கி வெடிக்கலாம்....ஆமாம்...நீ என்ன கேட்ட//
இது என்ன சரவெடியா இருக்கே?
//பட்டாசு கொடுத்ததால் மகிழ்ந்த சில முகங்களை பார்க்காதீர், அதனால் பாதிக்கப்பட்ட பல முகத்தை பாருங்கள்//
இது பட்டாச பற்றிய விஷயம் இல்லை, ஒரு அன்பு பகிர்தல் நடந்தேறிய சம்பவமாதான் பார்க்க முடிகிறது.அந்த குழந்தைக்கு பட்டாசு பற்றிய விழிப்புணர்வோ சமூக நல யோசனைகளோ தெரியாது. சந்தோஷங்களுக்காக ஏங்கவே தெரிந்திருக்கும். நீங்கள் அதை சொல்லவேண்டிய இடம் சிவகாசி :) மதுரை இல்ல. நீங்கள் சீரியஸாகும் அளவுக்கு இங்கே ஆயுத சப்ளை நடந்துவிடவில்லை :) என்றாலும் உங்கள் சமூக பார்வைக்கு ஜே போடாமால் இருக்கமுடியவில்லை
-ஆஷிக்
@vanathy
நன்றி வானதி...)))
@பாரத்... பாரதி...
நன்றி பாரத்...பாரதி...:)))
@AshIQ
//ஆனந்தியின் எழுத்துக்களை பாத்து பொறாமையில் பாராட்ட மனசு வரல. ச்சே :-(//
ஹ ஹ...அதே தான்...ஒத்துகிட்டதுக்கு மிக்க நன்றி...:))))
Post a Comment