September 21, 2010

இப்படியும் ஒரு ஏமாற்றுவழி..!!

சமீபத்தில் செய்தி தாளில் ஒரு செய்தி படித்து அதிர்ச்சியானேன்..கொஞ்சம் வேடிக்கையான,ஆனால் வருத்தமான விஷயமும் கூட அது.


 வெளிநாடு சென்ற கணவனை,அவன் மனைவி போனில் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் கடந்த 6 வருடமாக ஒரு வினோத முறையில் அவன்,அவளை ஏமாற்றி இருக்கிறான்..






எப்புடியாம்??




அந்த அண்ணாச்சி பேரு,ராஜீவ்காந்தி,அவரு கொத்தனார் ஜாப் பார்த்துட்டு இருந்தார் பரமக்குடியில். ஆனா,நம்ம அண்ணாத்தைக்கு கொள்ளநாலா பாரின் போயி செட்டிலாகனும்னு ஆசை..சோ,ரூம் போட்டு தலைவரு யோசிசுருக்காறு...ஐடியா கிடைச்சுருக்கு,கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டாரு..அப்போ பார்த்து ஒரு இளிச்சவாய் குடும்பம் சிக்கிருக்கு,அவங்ககிட்டே நம்ம "கோலு..மாலு" பார்ட்டி நகை வேணாம்,பணமா கொடுங்கன்னு கேட்ருக்காரு..அதுங்களும் பாவம்..பொண்ணுக்கு கல்யாணம் நடந்தா சரிதான்னு,பணமா கொடுத்திருக்காங்க..நம்ம அண்ணாத்த துட்டு வாங்கிட்டு தாலி கட்டிட்டார்.எண்ணி 10 நாள் தான்..மலேஷியா போறேன்னு கிளம்பிட்டார்..இது நடந்தது 2004 இல்..






போன ஆளு போன ஆளுதான்..!!






ஆளையும் காணோம்..பேரயும் காணோம்...போனையும் காணோம்!!! நம்ம தங்கம் மனைவியை எந்த வழியிலும் தொடர்பு கொள்ளல...!






பாவம்,அந்த ஆளு பொஞ்சாதி..புருஷனுக்கு போன் போட்டுகிட்டே இருந்துருக்கு 6 வருஷமா...ஒவ்வொரு தபாவும் "இந்த எண் உபயோகத்தில் இல்லை" ன்னு யாரு,யாரோ சொல்லிருக்காங்க..!இது நொந்து போயி போனை வச்சுட்டு போயிருக்கு ..






பொண்ணு வீட்ல அப்புறம் தான் முழிச்சுருக்காங்க..உடனே மலேஷியாவில் சொந்தக்கார ஆள விட்டு தேடி,நம்ம ஹீரோ என்ன பண்றாருன்னு கவனிக்க சொல்லிருக்காங்க..






அங்க தான் தமாஷ்! பொண்டாட்டி சம்பந்தபட்டவங்க கிட்டே இருந்து, போன் வரும் போதெல்லாம் நம்ம பரமக்குடி மச்சான் பலவித வாய்ஸ் மாடுலேசன் இல் பின்னி இருக்கார். ஒரே வார்த்தை ..ஓகோனு அசத்திருக்கார் நம்ம பாஸ்,,"இந்த எண் உபயோகத்தில் இல்லை" ன்னு பலர் மாதிரி மிமிக்கிரி பண்ணி ஆறு வருஷமா எஸ்கேப் ஆய்ருக்காரு துரை.






அப்புறம் அந்த ஆளை பிடிச்சு(அடிச்சு,துவைச்சு..தொங்கபோட்டு)கேட்டால்..பணத்துக்காக தான் கட்டிகிட்டேன்,ஆனா அந்த புள்ளைய பிடிக்கல..மலேஷியா விட்டு வரமாட்டேன்னு ஒப்பாரி வச்சுருக்கான்..




இப்ப பரமக்குடியில் அவரு பொஞ்சாதி 16 வயதினிலே மயிலு மாதிரி போலீஸ் இல் புகார் கொடுத்துட்டு புருஷன் வரதுக்காக காத்துகிட்டு இருக்காம்!கண்ணீரும்,கம்பலையுமாய்..!பாவம்!!






ம்ம்..ஏமாத்துறது எப்புடின்னு..??நம்ம பயலுக ரூம் போட்டு யோசிப்பானுங்களோ???

(தனிப்பட்ட என் கருத்து...

எனக்கு என்னவோ தோணுது..இது .. முழுக்க முழுக்க அந்த ஆளோட சுயநலம்ன்னு .அவன் பணத்தேவைக்கு ஒரு பெண் பலிகாடு.எனக்கு என்ன உறுத்தல் என்றால்..அந்த பொண்ணு வீட்டில் இவ்வளவு
மாங்கா மடயனுங்கலாவா
இருப்பாங்க.??.ஆறு வருஷம் அவனை விட்டது எவ்வளவு அறியாமை..ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றி கொண்டு தான்  இருப்பாங்க..இது மொழி,இனம்,ஊரு எல்லாம் தாண்டி பொதுவான ஒரு விஷயம்...பெண்களோ,ஆண்களோ எல்லாத்துக்கும் உஷாரா இருப்பது தான் பெஸ்ட்..))




17 comments:

Chitra said...

அந்த பெண்ணின் நிலைமையை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. தன்னம்பிக்கையுடன் அவள் வாழ்வில் முன்னேறி காட்ட வேண்டும்.

VELU.G said...

வருத்தமாக உள்ளது. அந்த பெண்ணிற்கு நல்ல வாழ்க்கை சீக்கிரம் அமைய வேண்டும்

Unknown said...

பாவம் அந்தப்பெண்.. நம்ம ஊர்க்காரங்க, வெட்டு குத்து மட்டுமில்ல.. இந்த மாதிரி பிராடு பண்ணுறதுக்கும் ரொம்ப திறமையான ஆளுக்க தான் போல.. நீங்க சொன்ன மாதிரி ரூம் போட்டு யோசிப்பானுங்களோ....பாவம் அந்த பொண்ணு. இப்படி அப்பாவியா இருந்திருக்கே... கடவுளுக்கு தான் வெளிச்சம்..

சௌந்தர் said...

அவர்களின் நிலைமை வருத்தமாக இருக்கிறது

jothi said...

மிக்க வருத்தம்,.. கதை மட்டும் போதுமே,.. போட்டோ தேவையில்லையே,..

ஆனந்தி.. said...

@jothi
ஜோதி நீங்க சொன்ன மாதிரி அந்த பெண்ணின் போடோ எடுத்துட்டேன்..ஓகே வா??

ஆனந்தி.. said...

@சித்ரா,@சௌந்தர்,@வேலு..
ரொம்பவே பாவம் தான்..பிரார்த்தனை பண்ணிக்குவோம்...தங்கள் வருகைக்கு நன்றி பா..

ஆனந்தி.. said...

@radha
உண்மை ராதா...உங்க ஆதங்கம் புரியுது..

Ganesan said...

மதுரகார ஆனந்தியின் எழுத்தே மகுடம் சூட்டுது.

வாழ்த்துக்கள்.

ஆனந்தி.. said...

@காவேரி கணேஷ்
நன்றி காவேரி கணேஷ்...தங்கள் வருகைக்கு நன்றி..

Anonymous said...

இப்படியுமா அப்பாவியாக பெண்ணும் அவள் உறவினர்களும் இருப்பார்கள். இவள் கணவன் போன்ற கிரிமினல்களை இழுத்து வந்து லாடம் கட்ட வேண்டும்.

Kousalya Raj said...

//நீங்க சொன்ன மாதிரி அந்த பெண்ணின் போடோ எடுத்துட்டேன்..ஓகே வா?//

இதற்கு ஒரு ராயல் சல்யூட்...

சுற்றி இருப்பவர்களும் அந்த பெண்ணிற்கு தைரியம் கொடுத்து வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்ல ஆலோசனை சொல்ல வேண்டும்.

வாழ்ந்தாக வேண்டுமே.....

jothi said...

//ஜோதி நீங்க சொன்ன மாதிரி அந்த பெண்ணின் போடோ எடுத்துட்டேன்..ஓகே வா??//

ரொம்ப நன்றி ஆனந்தி,..

பவித்ரா said...

ஆனந்தி!
அந்த பெண்ணின் நிலை கொடுமையிலும் கொடுமை! திருமணத்துக்கு முன்பு பையனை பற்றியும் குடும்பத்தையும் ஆயிரம் தடவை விசாரிக்கறது சரிதான்! இந்த காலத்தில் இப்படி யோசிக்காமலா பெண்ணை கட்டி கொடுப்பது?

Avargal Unmaigal said...

இப்படியும் ஒரு அப்பாவி பொண்ணு இந்த காலத்தில்? நான் காதலிக்கும் போது எங்கே இருந்தாள் அவள்?
இப்படிக்கு,
அப்பாவி மதுரை தமிழ் பையன்

ஆனந்தி.. said...

@பவி
உண்மைதான் பவித்ரா..சில படிச்சவங்களே கூட ஏமாந்துறாங்க..அதுவும் கூட நடக்குது இந்த காலத்தில்!

ஆனந்தி.. said...

@Avargal Unmaigal
பாஸ்..இது தான் அக்மார்க் மதுர குசும்பு..!!