(முஸ்கி : இந்த தலைப்பை படிச்சுட்டு குண்டக்க மண்டக்க யோசிச்சவங்களுக்கு கம்பெனி பொறுப்பல்ல..:)) )
மதுரைன்னால் ....................மல்லிகைப்பூ !!
மதுரைன்னால் .....................சுவையான இட்லி..உணவுகள்..!!
மதுரைன்னால் .....................மீனாட்சி யம்மன் !!
மதுரைன்னால் .....................தமிழ்சங் கம்!!
மதுரைன்னால் .....................சினிமா !!
மதுரைன்னால் .....................நல்ல செண்டிமெண்ட்!!
மதுரைன்னால் .....................வீரம் !!
மதுரைன்னால் .....................வெள்ளந்தி மக்கள்!!
மதுரைன்னால் .....................விருந்தோ ம்பல்!!
மதுரைன்னால் .....................ஜிகர்தண்டா
மதுரைன்னால் .....................கோவில்நகரம்
மதுரைன்னால் .....................தூங்காநகரம்
மதுரைன்னால் .....................வைகை
மதுரைன்னால் .....................மீனாட்சி
மதுரைன்னால் .....................தமிழ்சங்
மதுரைன்னால் .....................சினிமா !!
மதுரைன்னால் .....................நல்ல செண்டிமெண்ட்!!
மதுரைன்னால் .....................வீரம் !!
மதுரைன்னால் .....................வெள்ளந்தி மக்கள்!!
மதுரைன்னால் .....................விருந்தோ
மதுரைன்னால் .....................ஜிகர்தண்டா
மதுரைன்னால் .....................கோவில்நகரம்
மதுரைன்னால் .....................தூங்காநகரம்
மதுரைன்னால் .....................வைகை
அப்புறம் ..ஹீ..ஹீ..
.....................................................................
மதுரைன்னால் .....................ஆனந்தி... :))
.............................. .............................. ..........
.............................. .............................. ..........
மதுரைன்னால் .....................ஆனந்தி...
..............................
..............................
மிக மிக முக்கியமாய் ....
மதுரைன்னால் .....................சித்திரை திருவிழா...!!!
மதுரைன்னால் .....................சித்திரை திருவிழா...!!!
மதுரைக்காரியா இருந்தாலும்...இந்த சித்திரை திருவிழா கூட்டத்தில் மைக்ரோஸ்கோப் வச்சு கூட என்னைத் தேட முடியாது...ஏன் ன்னால், நான் அங்கே இருக்க வாய்ப்பே இல்லை...:))))
மதுரை சித்திரை திருவிழாவில் மக்கள் வெள்ளம்
ஏனோ கடவுளை பக்தியாய் நோக்குவதை விட ,தனிமை பொழுதுகளில்,சலசலப்பில்லாத,மௌனமான நேரங்களில் பரவசமாய் பார்ப்பதே என் விருப்பமாகிறது...
நாகரிகம்,தோற்றம்,பழக்க வழக்கங்கள் மாறினாலும் என் மண்ணில் கிராமத்து வாசனை இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது...
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சியம்மன் திருக்கல்யாண நாளில்,மங்கள கோலங்களால் ஊரையே அழகு படுத்தி,பட்டு சேலை சரசரக்க,கழுத்தில் புதுத்தாலி கயிறுடன்..அன்று எங்கள் ஊர் பெண்களை பார்க்க உங்களுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்...(ஹீ..ஹீ..என்னையும் தான்....:))))))) )
என்ன தான் தனிமை பொழுதுகள் எனக்கு இஷ்டம் என்றாலும்...
வெகு அதிகாலை எழுந்து...மஞ்சள் பூசி குளித்து...ஈர தலைமுடியில் ஓரமாய் சிறிது பூ வைத்து...ஒன்று சேர்ந்து அமர்க்களமாய் சாமி பார்க்க புறப்படும் வெகு மலர்ச்சியான பக்கத்து வீட்டு அக்காக்களை ..அம்மாக்களை..அத்தைகளை பார்க்கும்போதும்.............. ..........
திருவிழாவில்..வெயில் களைப்பில் இருக்கும் பக்தர்களுக்கு...அன்பர்கள் தரும் மண்பானை ஐஸ் மோர்,சுக்கு...திப்பிலி,வெல்லம் எல்லாம் போட்ட பானாக்கம், அங்கங்கே தள்ளுவண்டியில் ஆசை காட்டும் கீத்து மாங்காய் பத்தைகள்....எல்லாம் பார்க்கும் போதும்................
திருவிழாவில் தள்ளுவண்டி மாங்காபத்தைகள்திருவிழா முடிந்து,அங்கங்கே சந்தனம் தடவிய மொட்டை தலை குட்டிப்பாப்பாக்களின் வாயில் இருக்கும் பீபீ க்களும்...கையில் இருக்கும் கலர் கலர் விசிறிகளும்...பலூன்களும்...இதை எல்லாம் பார்க்கும்போதும்..............
பெரிய பெரிய ரோல்லர் கோஸ்டரில் எல்லாம் சுத்தி சுத்தி சலிச்சு போனாலும்...அந்த குட்டியூண்டு தரையை தொட்டு விட்டு போகும் சின்ன சின்ன ராட்டினங்களும் ...கலர் கலர் வளையல்கள் குலுங்கும் குட்டி சிறுமிகளை அதில் பார்க்கும்போதும்.............. .........
குட்டி ராட்டினத்தில் குட்டி ராட்சசிகள்
தூரத்தில் தெரியும் திருவிழா சாமியை காட்ட தோள் மேலே குழந்தைகளை சுமந்து போகும் பாசக்கார உறவுகளை ...பார்க்கும்போதும்....
தோளில் சுமக்கும் பாசக்கார மதுரக்காரய்ங்க
சிறியவர்...பெரியவர் வயது பேதம் இல்லாமல்...சோப்பு தண்ணி டப்பியில் சிறு கம்பி வைத்து ஊதிவிட்டு , மிதக்கும் சிறு சிறு காற்று முட்டைகளை பார்க்கும்போதும்..............
திருவிழாவில் சோப்பு முட்டவிடும் மதுர இளந்தாரி
ம்ம்....!! சில அழகான விஷயங்களை இழக்கிறேனோ ன்னு...உள்மனசு சொல்லுது...:(((
( எங்கள் மதுரையில் இன்னைக்கு கள்ளழகர் திருவிழா ) :))
( எங்கள் மதுரையில் இன்னைக்கு கள்ளழகர் திருவிழா ) :))
இன்று வலைச்சரத்தில் :-அதகளப்படுத்தும்" அரசியல் அதிரடி பதிவுகள்/பதிவர்கள்
Wow..செம....பதிவுகள் ! /Interesting Posts
பல்சுவை "பதிவர்"களும்..பின்னூட்ட புலிகளும்...
அழகான வலைப்பூக்கள்/Beautiful blogs
வலைச்சரத்தில் இசைக்கான பதிவு...
புதுமுகம்...அவள் அறிமுகம்...