April 18, 2011

சொர்க்கம் போகணுமா?...மதுரைக்கு வாங்க...:))))))))

  
(முஸ்கி : இந்த தலைப்பை படிச்சுட்டு குண்டக்க மண்டக்க யோசிச்சவங்களுக்கு  கம்பெனி பொறுப்பல்ல..:)) )

மதுரைன்னால் ....................மல்லிகைப்பூ !!
மதுரைன்னால் .....................சுவையான இட்லி..உணவுகள்..!!
மதுரைன்னால் .....................மீனாட்சி
யம்மன் !!
மதுரைன்னால் .....................தமிழ்சங்
கம்!!
மதுரைன்னால் .....................சினிமா !!
மதுரைன்னால் .....................நல்ல செண்டிமெண்ட்!!
மதுரைன்னால் .....................வீரம் !!
மதுரைன்னால் .....................வெள்ளந்தி மக்கள்!!
மதுரைன்னால் .....................விருந்தோ
ம்பல்!!
மதுரைன்னால் .....................ஜிகர்தண்டா
மதுரைன்னால் .....................கோவில்நகரம்
மதுரைன்னால் .....................தூங்காநகரம் 
மதுரைன்னால் .....................வைகை
 
அப்புறம் ..ஹீ..ஹீ..
.....................................................................
மதுரைன்னால் .....................ஆனந்தி...
:))
..............................
........................................
..............................
........................................
 
மிக மிக முக்கியமாய் ....

மதுரைன்னால் .....................சித்திரை திருவிழா...!!!


மதுரைக்காரியா இருந்தாலும்...இந்த சித்திரை திருவிழா கூட்டத்தில் மைக்ரோஸ்கோப் வச்சு கூட என்னைத் தேட முடியாது...ஏன் ன்னால், நான் அங்கே இருக்க வாய்ப்பே இல்லை...:))))

அடித்து.நெரித்து  செல்ல/செலுத்தப்படும்  படுபயங்கரமான கூட்டத்தில் மிதமிஞ்சிய வேர்வை குளியலில், மைக்ரோ/மேக்ரோ செகண்டில் எனக்கு காண்பிக்கப்படும் கடவுள் சிலையை,நான் பார்த்தும்/பார்க்காமலும் செல்லும் அந்த நொடிகளுக்காக என்னை நான்  பெரிதாய் நிர்பந்திப்பதில்லை...:))


                                                                        மதுரை சித்திரை திருவிழாவில் மக்கள் வெள்ளம் 


ஏனோ கடவுளை பக்தியாய் நோக்குவதை விட ,தனிமை பொழுதுகளில்,சலசலப்பில்லாத,மௌனமான நேரங்களில் பரவசமாய் பார்ப்பதே என் விருப்பமாகிறது...

 நாகரிகம்,தோற்றம்,பழக்க வழக்கங்கள் மாறினாலும் என் மண்ணில் கிராமத்து வாசனை இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது...

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சியம்மன் திருக்கல்யாண நாளில்,மங்கள கோலங்களால் ஊரையே அழகு படுத்தி,பட்டு சேலை சரசரக்க,கழுத்தில் புதுத்தாலி கயிறுடன்..அன்று எங்கள் ஊர் பெண்களை பார்க்க உங்களுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்...(ஹீ..ஹீ..என்னையும் தான்....:))))))) )
 
என்ன தான் தனிமை பொழுதுகள் எனக்கு இஷ்டம் என்றாலும்...
 
வெகு அதிகாலை எழுந்து...மஞ்சள் பூசி குளித்து...ஈர தலைமுடியில் ஓரமாய் சிறிது பூ வைத்து...ஒன்று சேர்ந்து அமர்க்களமாய் சாமி பார்க்க புறப்படும் வெகு மலர்ச்சியான பக்கத்து வீட்டு அக்காக்களை ..அம்மாக்களை..அத்தைகளை பார்க்கும்போதும்........................

 திருவிழாவில்..வெயில் களைப்பில் இருக்கும் பக்தர்களுக்கு...அன்பர்கள் தரும் மண்பானை ஐஸ் மோர்,சுக்கு...திப்பிலி,வெல்லம் எல்லாம் போட்ட பானாக்கம், அங்கங்கே தள்ளுவண்டியில் ஆசை காட்டும் கீத்து மாங்காய் பத்தைகள்....எல்லாம் பார்க்கும் போதும்................


                                                               திருவிழாவில் தள்ளுவண்டி மாங்காபத்தைகள்



திருவிழா முடிந்து,அங்கங்கே சந்தனம் தடவிய மொட்டை தலை குட்டிப்பாப்பாக்களின் வாயில் இருக்கும் பீபீ க்களும்...கையில் இருக்கும் கலர் கலர் விசிறிகளும்...பலூன்களும்...இதை எல்லாம் பார்க்கும்போதும்.............. ............


 பெரிய பெரிய  ரோல்லர் கோஸ்டரில் எல்லாம் சுத்தி சுத்தி சலிச்சு போனாலும்...அந்த குட்டியூண்டு தரையை தொட்டு விட்டு போகும் சின்ன சின்ன ராட்டினங்களும் ...கலர் கலர் வளையல்கள் குலுங்கும் குட்டி சிறுமிகளை அதில் பார்க்கும்போதும்.............. .........


                                                     குட்டி ராட்டினத்தில் குட்டி ராட்சசிகள் 
  
தூரத்தில் தெரியும் திருவிழா சாமியை காட்ட தோள் மேலே குழந்தைகளை சுமந்து போகும் பாசக்கார உறவுகளை ...பார்க்கும்போதும்....


                                                    தோளில் சுமக்கும் பாசக்கார  மதுரக்காரய்ங்க 


சிறியவர்...பெரியவர் வயது பேதம் இல்லாமல்...சோப்பு தண்ணி டப்பியில் சிறு கம்பி வைத்து ஊதிவிட்டு , மிதக்கும்   சிறு சிறு காற்று முட்டைகளை பார்க்கும்போதும்..............

                                             திருவிழாவில் சோப்பு  முட்டவிடும் மதுர இளந்தாரி 
                                     
ம்ம்....!! சில அழகான விஷயங்களை இழக்கிறேனோ ன்னு...உள்மனசு சொல்லுது...:(((

( எங்கள் மதுரையில் இன்னைக்கு கள்ளழகர் திருவிழா  ) :))

டிஸ்கி: ஹலோ மக்காஸ்..!! இன்று முதல்  வரும்  ஞாயிறு  வரை சரியாய் ஒரு வாரம் வலைச்சரத்தில் எழுதுறேன்..(18/4/2011 to 24/4/2011)..வழக்கம்போலே உங்கள் ஆதரவை அங்கும் எதிர்நோக்குகிறேன்...!! இதை படிச்சுட்டு அப்படியே அங்கிட்டு போங்க...(வராட்டி பிச்சு..பிச்சு..கொன்னு..கொன்னு :)) )

இன்று வலைச்சரத்தில் :-அதகளப்படுத்தும்" அரசியல் அதிரடி  பதிவுகள்/பதிவர்கள் 
Wow..செம....பதிவுகள் ! /Interesting Posts
 பல்சுவை "பதிவர்"களும்..பின்னூட்ட புலிகளும்...
அழகான வலைப்பூக்கள்/Beautiful blogs
வலைச்சரத்தில் இசைக்கான பதிவு...
 புதுமுகம்...அவள் அறிமுகம்...

April 4, 2011

சத்தியமாய் வோட்டு போடுவேன் மக்களே!!ஆனால்...!!


ஹாய் மக்காஸ்!! வோட்டு போட ரெடி ஆகிட்டிங்களா? எனக்கு  இன்னும் பூத் ஸ்லிப் வரல :( ஆனால்,வோட்டர் ஐ.டி கார்டை கண்ணில் படுற மாதிரி எடுத்து வச்சிருக்கேன்.:) என்ன,என் சின்ஸியர் பார்த்து புல்லரிக்குமே??:)) எனக்கு வோட்டு போடுவதில் (ப்லாக் பதிவுகளுக்கும் சேர்த்து தான்:)) ) மிகுந்த ஆர்வம் உண்டு...:)))

சின்னஞ்சிறு சிறுமியாய் , பசை மாதிரி என் தாத்தா கூடவே ஒட்டிக்கொண்டு, கைபிடித்து நான் சென்ற இடங்களில் வாக்கு சாவடியும் ஒன்று. தேர்தல் நாள் அன்று, தாத்தா காலையில் நீராகரம் குடித்து விட்டு, அநேகமாய் முதல் ஆளாய் (பூத் வீட்டிக்கு மிக அருகில்) ஓட்டு போட போகும்போது, கூடவே நானும்,நானும்..:)) எனக்கும் விரலில் மை வைக்கனும்னு அழுது அடம்பிடிச்ச நேரங்களில், தாத்தா எனக்கு இட்டு விடும் bril கருப்பு ink மட்டுமே அந்த நொடி சந்தோஷ நிறைவு...:))))


தாத்தா வீட்டு முன் அறையில், ஓரமாய் ஒரு ஸ்டீல் ஸ்டூலில் ஆச்சி(பாட்டி) கொண்டு வந்து வைத்து விட்டு போகும் இஞ்சி,மிளகாய்,மாங்காய் கலந்த பிரெஷ் வாசனை மோர் வீற்றிருக்க :)) அந்த அறையை சுற்றி, என் தாத்தா மற்றும்,என் தாத்தா வயதை ஒட்டிய இன்னும் நிறைய தாத்தாக்களின் மடியில் குட்டி பாப்பாவாய் உட்கார்ந்து,உட்கார்ந்து, புரியாமல் நான் கேட்ட டாஸ் கேபிடல்,ரஷ்ய புரட்சி,லெனின் மார்க்சிசம்,திராவிட கழங்களின் பாரம்பர்யம் :)) பற்றிய விவாதங்கள் னு எல்லாமே அப்பவும்,இப்பவும்..இந்த நொடியிலும் எனக்கு சிறிதும் புரியாத வெறும் சத்தங்கள் தான் :))) 



ஓட்டு போடும் வயது எனக்கு வந்து,தேர்தலில் வோட்டு போட முதல் ஆளாய் செல்ல எத்தனித்தபோது,செல்ல பேத்தியாய் ,கை தாங்கலாய் வோட்டு சாவடிக்கு நான் அழைத்து கூட்டி  போக, அப்போது என் அருமை தாத்தா உயிருடன் இல்லை...



வாக்கு பதியும் ஆர்வம் மிகுதியாக இருந்தாலும்,எந்த சரியான வேட்பாளருக்கு போட வேண்டும் என்பதில் குழப்பம் தான் எனக்கு ஆரம்ப நாட்களில். குடும்ப உறுப்பினர்கள்  பெரும்பாலும் வித விதமான அரசியல் எண்ணங்களை கொண்டு இருந்தாலும்,இவங்களுக்கு மட்டுமே வாக்கிடு-ன்னு எந்த அறிவுறுத்தலும்,திணிப்புகளும் எனக்கு வழங்கபடாமல்..முழுக்க முழுக்க என் சுய எண்ணங்களுக்கு கொடுத்த சுதந்திரம் இன்னும் குழப்பத்தை கூட்டியது என்பதும் உண்மை...:))))))



பிறிது வந்த நாட்களில், அரசியலை பற்றிய கண்ணோட்டங்களை சிறிது கூர்ந்து கவனிக்க(?!)..எல்லாருமே அயோக்கியர்கள்,எதுக்கு இவங்களுக்கு வோட்டு போடணும் ங்கிற குழப்பம் வேற வந்து  வேற  மாதிரியாய் திசை திரும்பியது...:))



இப்ப ஒரு மாதிரி குழப்பம் போயிருச்சு...நான் தீர்மானிச்சுட்டேன்..யாருக்கு என் வாக்குன்னு...எப்படி ன்னு இந்த உரையாடலை படிச்சால் தெரிஞ்சுப்பீங்க...:)))



(மொட்டை மாடியில் உலா போன மாலை நேரத்தில்,எதிர் வீட்டு மாடி ஆன்ட்டியுடன் சிறிது உரையாடல் ..)


ஆன்ட்டி :  ஆனந்தி! எலெக்சன் ஜுரம் வந்திருச்சா?

நான் : கட்சிக்காரங்க கிட்டே கேக்குற கொஸ்டின என்கிட்டே மாத்தி கேட்டிங்களே ஆன்ட்டி....! :))

ஆன்ட்டி : சரி!சரி! கவர் பணம் டிஸ்ட்ரீபூட் பண்றாங்களா என்ன....எனி தகவல் ???


நான் : என் கைக்கு பணம் வரல...ஸோ, தெரியல....:))

ஆன்ட்டி : அச்சோ...அப்போ கொடுத்தால் வாங்கிப்பியா ?

நான் : எஸ்...:))

ஆன்ட்டி : ஆனந்தி..!! ஆர் யூ எஜுகேடட்? நீயே இப்படி பண்ணலாமா?

நான் : ஹீ..ஹீ...! எஜுகேடட் இல்ல...எச்சிக்கல னு வச்சுக்கோங்க...:))) !! ஆன்ட்டி...அது போகட்டும்! அப்போ பணம் கொடுத்தால் நீங்க வாங்க மாட்டேங்களா ? உங்க வீட்ல ஆறு வோட்டு ஆச்சே......3,000 ரூபா ல...அப்போ வேணாமா....?
 
ஆன்ட்டி (பதறி போய்) : எதுக்கு,எதுக்குங்குறேன்...அவங்

க சொந்த பணத்தையா பிச்ச போடுறாங்க...நம்ம வரிப்பணம் தானே...வாங்கினால் என்ன தப்பு..ம்ம்...வாங்கிக்கணும் ஒருவேளை கொடுத்தால்....!!!

நான் : ஹ...ஹ...ஹா.....

ஆன்ட்டி : யாருக்கு வோட்டு போட போற?

நான்: நான் எலியா இருக்கிறத விட புலியா இருக்க ஆசை ....:))

ஆன்ட்டி(புரியாமல்) : .....?!!!

நான்(நக்கலாய் ): எப்படியும் பிரபல கட்சி வேட்பாளர்களுக்கு லட்சகணக்கில் வோட்டு விழுகும். அதோடு நான் போடும் அந்த ஒரு வோட்டு பெருசாய் தெரியாமல் போய்டும்...ஸோ அப்போ நான் எலியா தானே தெரிவேன்...

ஆன்ட்டி(கடுப்பாகி): ஆமாம்..அதுக்கு என்ன இப்போ....

நான்: ஸோ,பிரபலமில்லாத அப்பிராணி சுயேட்சைகள் வாங்கும் அந்த அரிய(??!!) 40,50 வோட்டுகளில் என் ஒரு வோட்டு பெருசாய் தெரியும் போது நான் புலி தானே...:)))

ஆன்ட்டி : ம்ம்..

நான் : ஸோ, எனது வாக்கு பானை அல்லது குடை அல்லது எவர்சில்வர் குடம் அல்லது ராக்கெட் ..இந்த மாதிரி சின்னங்கள் இருந்தால் தான் ஒரே குத்து...:))))

ஆன்ட்டி(தலையில் அடித்து கொண்டு) : அடி பாவி...பாவி...ஜனநாயக துரோகி...

நான்: இட் ஸ் மீ?? ஓகே...தேங்க்ஸ் ஆன்ட்டி...:)))



(டிஸ்கி : சிறிது நேரம் முன்னர்  எங்கள் ஊரின் பிரபலமான ரவுடி அவர்கள்,  ('அட்டாக்'
என்று முதலில் தொடங்கும் அவர் பெயர்(முழு பேரை சொல்லிட்டு வீட்டுக்கு ஆட்டோ வரவா என்ன ..அஸ்க்கு புஸ்க்கு ..:)) ) சுயேட்சையாக போட்டி இடுவதால்...மீண்டும் யாருக்கு வோட்டு என்ற விஷயத்தில் எனக்கு  குழப்பம் ஏற்பட்டு...குழப்பத்தோடு முடிக்கிறேன்...:))))))